12-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! பாபாவின் கட்டளையாவது, தேகி-அபிமானி (ஆத்ம அபிமானி) ஆகுங்கள். பவித்திரமாகி அனைவரையும் பவித்திரமாக்குங்கள். நிச்சயபுத்தி உள்ளவராகி பாபாவிடம் இருந்து முழு ஆஸ்தியை அடையுங்கள்.

கேள்வி:
கடைசியில் சரீரம் விடும் போது ஐயோ-ஐயோ என்று யார் கதற வேண்டியிருக்கும்?

பதில்:
யார் உயிரோடு இருந்து கொண்டே இறந்தவராகி முழுமையாக முயற்சி செயவில்லையோ, முழு ஆஸ்தி பெறவில்லையோ, அவர்கள் தான் கடைசியில் ஐயோ-ஐயோ என்று கூக்குரலிட வேண்டியிருக்கும்.

கேள்வி:
இச்சமயம் அநேக விதமான சண்டை-சச்சரவு மற்றும் பிரிவினைகள் முதலியன ஏன்?

பதில்:
ஏனென்றால் அனைவரும் தங்களின் உண்மையான தந்தையை மறந்து அநாதைகளாக, ஆதர வற்றவர் களாக ஆகி விட்டுள்ளனர். எந்த தாய்-தந்தையரிடம் இருந்து அளவற்ற சுகம் கிடைத்ததோ, அவரை மறந்து சர்வவியாபி என்று சொல்லி விட்டனர். அதனால் தங்களுக்குள் சண்டை-சச்சரவு செய்து கொண்டே இருக்கின்றனர்.

பாடல்:
ஓம் நமசிவாய...

ஓம் சாந்தி.
இதை யார் கூறியது? ஓம் சாந்தி, ஆத்மா இந்த சரீரத்தின் கர்மேந்திரியங்கள் மூலமாகச் கூறியது. ஆத்மா அழிவற்றது. சரீரம் அழியக்கூடியது. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுக்கிறது. ஆத்மா அதிக பட்சம் 84 பிறவிகளை எடுக்கிறது. இது 84 பிறவிகளின் சக்கரம் எனச் சொல்லப்படுகின்றது. அனைவருமே 84 பிறவிகளை எடுக்கின்றனர் என்பது கிடையாது. மனிதர்களோ இந்த விஷயங்களை அறிந்திருக்கவில்லை. பாடலிலும் கேட்டீர்கள், சிவாய நமஹ. உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் சிவபரமாத்மா. அவர் நிராகாரி உலகத்தில் வசிப்பவர். அங்கே தான் ஆத்மாக்கள் அனைவரும் வசிக்கின்றனர். அதற்குக் கீழே சூட்சும வதனவாசிகள் உள்ளனர். உயர்ந்தவரிலும் உயர்ந்தவரான பகவானுடைய மகிமையைக் கேட்டீர்கள், சிவாய நமஹ. நீங்கள் தாயும் தந்தையுமாக, பந்து (உறவினர்) சகாவாக (நண்பனாக) இருக்கிறீர்கள் - இது அவருடைய மகிமை. பிறகு சொல்வார்கள் - பிரம்மா தேவதாய நமஹ அவர் படைப்பவர், இவர் படைப்பு. பிறகு இந்த மனித சிருஷ்டி. இந்த மனித சிருஷ்டியில் தான் பாவனமாகவும் பதீதமாகவும் ஆகின்றனர். சத்யுகத்தில் தூய்மையானவர்கள், கலியுகத்தில் தூய்மையற்றவர்கள் உள்ளனர். பாரதத்தில் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன் தேவி-தேவதாக்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் மனிதர்களாக தான் இருந்தார்கள். ஆனால் அனைத்து குணங்களிலும் நிரம்பியவர்களாக, 16 கலைகளில் முழுமையானவர்களாக இருந்தனர். இது தான் அவர்களினுடைய மகிமை ஆகும். அங்கே சண்டை சச்சரவுகள் இருப்பதில்லை. விகாரத் தில் செல்வதில்லை. அவர்களை தான் சம்பூர்ண நிர்விகாரி என்று சொல்கின்றனர். விகாரி மனிதர்கள் அவர்களுக்கு மகிமை பாடுகின்றனர். தாங்கள் சர்வகுண சம்பன்னம், நாங்கள் தாழ்ந்தவர்கள். பரமாத்மாவை நினைவு செய்கின்றனர். ஆனால் அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. அதனால் அநாதைகள் ஆகின்றனர். பாடவும் செய்கின்றனர் - நீங்கள் தான் தாயும் தந்தையும் அவரிடமிருந்து அளவற்ற சுகம் கிடைக்கிறது. பிறகு இராவண ராஜ்யம் ஆரம்பமாகும் போது, மனிதர்கள் பாபாவை மறந்து பதீத்தமாக, அநாதைகளாக, ஆதரவற்றவர்களாக ஆகி விடுகின்றனர். தங்களுக்குள் சண்டை-சச்சரவு செய்து கொண்டே இருக்கின்றனர். எல்லா இடங்களிலும் பாருங்கள் சண்டை மேல் சண்டை தான். எவ்வளவு பிரிவினைகள்! சொர்க்கத்திலோ ஒரே ஒரு லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. பாரதவாசிகள் முழு உலகத்தின் எஜமானர்களாக இருந்தனர். இப்போதோ துண்டுதுண்டாக உள்ளன. இந்த சமுத்திரம் உன்னுடையது, இது எங்களுடையது, இந்த பூமி எங்களுடையது, இது உன்னுடையது பஞ்சாப், உ.பி., இராஜஸ்தான் முதலியவை தனித்தனியாக ஆகி விட்டுள்ளன. மொழிக்காகவும் எத்தனை சண்டைகள் நடைபெறுகின்றன! ஏனென்றால் பரலௌகீக தாய்-தந்தையைப் பற்றி அறியவில்லை. பாரதம் சொர்க்கமாக இருந்த போது இந்த விசயங்கள் எதுவும் இல்லை. இப்போது மீண்டும் சொர்க்கம் வரப் போகிறது. பாபா அமர்ந்து புரிய வைக்கிறார் - இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்று. எல்லையற்ற தந்தை குழந்தைகளுக்கு சொல்கிறார், நீங்கள் எவ்வளவு புத்தியற்றவர்களாக ஆகி விட்டீர்கள்! ஹே! பரமாத்மா என அழைக்கவும் செய்கிறீர்கள். பிறகு அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியும் அறியாமல் இருக்கிறீர்கள். தந்தை பதீத-பாவனராகவும், சத்கதி அளிக்கும் வள்ளலாகவும் இருக்கிறார். நீங்கள் அறிவீர்கள், அவர்களோ, ஈஸ்வரன் சர்வவியாபி என சொல்லி விடுகின்றனர். சர்வவியாபி என சொல்வதால் பிறகு எப்படி ஆஸ்தி கிடைக்கும்? நிச்சயமாகத் தந்தை ஆஸ்தி கொடுப்பவர் வேண்டும் அல்லவா? லௌகீக தந்தை குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார். பிறகு அவர்களிடம் - உங்கள் தந்தை எங்கே உள்ளார் எனக் கேட்டால் அவர் சர்வவியாபி என சொல்வார்களா? அட, எல்லையற்ற தந்தையோ படைப்பவர் இல்லையா? அவரைத் தான் பக்தர்கள் அனைவரும் அழைக்கின்றனர் - ஹே பதீத-பாவனா, சிவபாபா வந்து எங்களைப் பதீதத்திலிருந்து பாவனமாக ஆக்குங்கள். எப்படி சொர்க்கத்தில் பாவனமாக இருந்தோமோ, அது போல் மீண்டும் எங்களை வந்து பாவனமாக்குங்கள். நாங்கள் மிகவும் துக்கத்தில் இருக்கிறோம். எப்போது இராவண ராஜ்யம் ஆரம்பமாயிற்றோ, அப்போதிருந்து மனிதர்கள் அனைவரும் தூய்மை இழக்கத் தொடங்கி விட்டனர். வாசல் தோறும் அடி வாங்கிக் கொண்டே இருக்கின்றனர். அனைவருக்குள்ளும் பரமாத்மா இருக்கிறார் என நினைக்கின்றனர். மூர்த்திகள் (சிலைகள்) கல்-மண்ணால் ஆக்கப் பட்டுள்ளன இல்லையா? ஆகவே இதில் கூட பகவான் இருக் கின்றார் எனப் புரிந்து கொள்கின்றனர். அட! கல்லுக்குள் பகவான் எங்கிருந்து வந்தார்? இவரோ பரந்தாமத்தில் வசிக்கிறார், எவ்வளவு ஏராளமான சித்திரங்களை உருவாக்குகின்றனர்! பிறகு பழையதாகி விட்டால் தூர வீசியெறிந்து விடுகின்றனர். இது பொம்மைகளின் பூஜை. ஹே! பாபா, எங்களுக்கு சத்கதி கொடு என அழைக்கின்றனர். அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் ஒரே ஒரு பதீத-பாவனர் சிவபாபா ஆவார். அவரை மனிதர்கள் அனைவரும் மறந்து விட்டுள்ளனர். அவரை அனை வரும் நினைவு செய்கின்றனர். அனைவருக்கும், கணவனுக்கெல்லாம் கணவன் மற்றும் தந்தைக்கெல்லாம் தந்தை அவர் தான். பாபா சொல்கிறார், குழந்தைகளே! இப்போது பாவனமாகுங்கள். ஆத்மாக்கள் நீங்கள் இப்போது தூய்மை இழந்துவிட்டீர்கள், கறை படிந்துள்ளது. உண்மையான தங்கத்துடன் கலப்பட உலோகத்தை சேர்ப்பதன் மூலம் அதாவது அலாய் கலப்பதன் மூலம் மதிப்பு குறைந்து விடுகிறது. ஆக, இது தமோபிரதானமான உலகம் ஆகும். முதலில் தங்க யுகத்தில் இருந்தீர் கள். அப்போது சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தீர்கள். பிறகு வெள்ளியின் கறை படிந்தது, பிறகு செம்பு, இரும்பில் வருகின்றது. ஆத்மா தூய்மை இழந்து கொண்டே செல்கிறது. இப்போதோ முற்றிலும் இரும்பு யுகத்தைச் சேர்ந்ததாக ஆகி விட்டுள்ளது. அதே பாரதம் சதோபிர தானமாக இருந்தது. இப்போது தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளது. யார் முதல்-முதலில் இருந்தனரோ, நிச்சயமாக அவர்களே 84 பிறவிகள் எடுக்க வேண்டி வரும். கிறிஸ்தவர்கள் வருவதே பின்னால் தான். அவர்கள் 84 பிறவிகளோ எடுக்க முடியாது. அவர்கள் 35-40 பிறவிகள் வரை எடுத்திருப்பார்கள். சிருஷ்டியின் ஆயுளும் இப்போது முடிவுக்கு வருகிறது. பிறகு புதியதாகும். புதிய உலகத்தில் இருப்பது சுகம், பழைய உலகத்தில் இருப்பது துக்கம். பழைய கட்டடம் இடிக்கப்படுகிறது இல்லையா? பழைய உலகத்திலோ அனைவரும் துக்கத்தில் உள்ளனர். பிறகு இவர்கள் அனைவரையும் சுகமானவர்களாக ஆக்குபவர் தந்தை மட்டுமே. சத்யுகத்தில் இருந்த ஆத்மாக்கள் அனைவரும் சுகமாகவே இருந்தனர். மற்ற அனைத்து ஆத்மாக்களும் சாந்திதாமத்தில் இருப்பர். அதையே சைலன்ஸ் வேர்ல்டு (அமைதியான உலகம்) என சொல்லப்படுகிறது. அமைதியான உலகம், பிறகு சூட்சும உலகம். அங்கே சரீரமே இல்லை எனும் போது ஆத்மா எப்படி சப்தம் எழுப்பும்? ஆக, இப்போது ஆத்மாக்கள் அனைவரும் தமோபிரதானமாக உள்ளனர். அதனால் இது இரும்பு யுகம் என சொல்லப்படுகிறது. முதலில் பொன்யுகத்தில் இருந்தனர். இப்போது மீண்டும் பாபா வந்து பொன்யுகத்திற்கு அழைத்துச் செல்கிறார். மனிதர்களை தேவதை ஆக்குகிறார். சத்யுகத்தில் ஆண்-பெண் இருவரும் பவித்திரமாக இருப்பார்கள். அது இராம ராஜ்யம் எனச் சொல்லப் படுகின்றது. இப்போது இருப்பதோ இராவண ராஜ்யம். ஒருவர் மற்றவர் மீது காமக் கோடாரியை செலுத்தி துக்கம் நிறைந்தவர்களாக ஆக்கிக் கொண்டே இருக்கின்றனர். பகவான் சொல்கிறார், குழந்தைகளே, காமம் மகாசத்ரு. இது தான் உங்களை துக்கம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளது. குழந்தைகள் நீங்கள் கீழே இறங்கியே வந்திருக்கிறீர்கள். இப்போதோ எந்த ஒரு கலையும் மிஞ்சவில்லை. மீண்டும் 16 கலைகளில் சம்பூர்ணமாக ஆக்குவதற்கு பாபா வந்துள்ளார். இதில் சந்நியாசிகளைப் போல் வீடு-வாசலையோ விட வேண்டியதில்லை. பாவன உலகத்திற்குச் செல்வதற்காக இந்தக் கடைசிப் பிறவியில் நீங்கள் அவசியம் பவித்திரமாக ஆக வேண்டும். யார் பாபா மூலமாகப் பவித்திரமாகிறார்களோ. அவர்கள் தான் பவித்திர உலகத்தின் எஜமானர் ஆவார்கள். இங்கே குழந்தைகள் நீங்கள் வந்திருக்கிறீர்கள், தந்தையிடம். இது தலைமை அலுவலகம் - இங்கே அனைவரும் வருவார்கள். பரலௌகிகத் தந்தை ஆத்மாக் களுக்குச் சொல்கிறார், குழந்தைகளே, இப்போது தேகி அபிமானி ஆகுங்கள். ஆத்மாக்களும் சொல்கின்றனர், ஆம் பாபா, நாங்கள் உங்கள் கட்டளையை கண்டிப்பாக ஏற்று நடப்போம். பவித்திரமாகுவோம். இது ஸ்ரீமத் இல்லையா? ஸ்ரீமத் மூலம் தான் சிரேஷ்டமாக ஆக வேண்டும். இராவணனின் வழிப் படி நடந்ததால் நீங்கள் கீழானவர்களாக ஆகி விட்டீர்கள். ஆக, இந்த சரீரத்தின் மூலம் ஆத்மா சொல்கிறது, ஹே! பாபா, நாங்கள் உங்களுடையவர்களாக ஆகியிருக்கிறோம். பாபா சொல்கிறார், நான் வந்திருப்பதே அனை வருக்கும் சத்கதி அளிப்பதற்காக. பாவாத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மா ஆக்குவதற்காக. ஆக, அவசியம் பவித்திரமாக ஆக வேண்டும். முதலில் எப்போது பவித்திரமாகி பிரம்மாகுமார் குமாரி ஆகிறீர்களோ, அப்போது தான் சிவபாபாவிடம் இருந்து சொர்க்கத்தின் சுகத்திற்கான ஆஸ்தி பெற முடியும். நீங்கள் மீண்டும் வந்திருக்கிறீர்கள், பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்காக. தேவி-தேவதா தர்மத்தை சேர்ந்த நீங்களே 84 பிறவிகளை எடுத்திருக்கிறீர்கள். இப்போது அந்த தேவி-தேவதைகள் இல்லை. தூய்மை இழந்து விட்ட அந்த தேவி- தேவதைகளே வந்து பாவனமாவார்கள். யார் பின்னால் வந்திருக்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது. எந்த தேவி-தேவதா தர்மத்தினருக்கு 84 பிறவிகள் முடிவடைந்துள்ளதோ, அவர்கள் தான் மீண்டும் வந்து தேவதை ஆக வேண்டும். பாபா சொல்கிறார், நான் வந்து தான் பிரம்மா மூலமாக தேவி-தேவதையாக ஆக்குகிறேன். பவித்திரமாகாமல் நீங்கள் தேவி-தேவதை ஆக முடியாது. யார் வந்து பிரம்மாகுமார், குமாரி ஆகிறார்களோ, அவர்கள் தான் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும். பிரஜாபிதா பாடப் படுகிறார் இல்லையா? மனித சிருஷ்டியின் ஜெகத்பிதா மற்றும் ஜெகத் அம்பா. அவர்களுக்கு இவ்வளவு குழந்தைகள் எப்படி இருப்பார்கள்? இப்போது உள்ளது பிரம்மா வாய்வழி வம்சாவளிகள். அனைவரும் மம்மா, பாபா என சொல்கின்றனர். எப்படிக் குழந்தைகளாக ஆனார்கள்? சிவபாபா பிரம்மா மூலமாக உங்களைத் தன்னுடையவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் சிவ பாபாவை நினைவு செய்கிறீர்கள், அவரிடமிருந்து சொர்கத்தின் ஆஸ்தி பெறுவதற்காக. ஆக, பிரம்மாகுமார், குமாரிகள் அனைவரும் சகோதர-சகோதரிகள் ஆகிறார்கள். இது யுக்தியாகும். நீங்கள் இல்லற விவகாரங்களில் வேண்டுமானால் இருங்கள். ஆனால் தாமரை மலருக்கு சமமாகப் பவித்திரமாக இருங்கள். இதை செய்து காட்டுங்கள். வீடு-வாசலை விடுவதற்கான விஷயம் கிடையாது. தன்னுடைய படைப்புகளைப் பராமரிக்கவும் செய்யுங்கள், பவித்திரமாக மட்டும் இருங்கள் அப்போது இந்த தேவதைகளை போல் ஆகி விடுவீர்கள். தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நிச்சயமாக நடைபெறும். பாபா குழந்தைகளுக்கு முன் அமர்ந்து புரிய வைக்கிறார்.

இந்த மதுபன் தலைமையகமாகும். எவ்வளவு சென்டர்கள் திறந்து கொண்டே இருக்கின்றன! யார் கல்பத்திற்கு முன் பிரம்மாகுமார், குமாரிகளாக ஆனார்களோ, அவர்கள் தான் மீண்டும் பிராமணரிலிருந்து தேவதை, பிறகு சத்திரிய, வைசிய, சூத்திரர் ஆகியே வந்துள்ளனர். இப்போது மீண்டும் பிராமணர் ஆக வேண்டும். குடுமி பிராமணர்களுக்கு உள்ளது இல்லையா? இந்த வர்ணங்களைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. பாபா சொல்கிறார், நீங்கள் தான் தேவி-தேவதை களாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் மீண்டும் சூத்திரரில் இருந்து பிராமணன் ஆகியிருக்கிறீர்கள், மீண்டும் தேவதை ஆவதற்காக. நீங்கள் பவித்திரமாகிறீர்கள். குமாரி என்றால் 21 தலைமுறைக்கு விமோசனம் அளிப்பவர் என்று பாடலும் உள்ளது. நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார் குமாரிகள். குமார் மற்றும் குமாரிகள் இருவருமே வேண்டும் இல்லையா? நீங்கள் ஒவ்வொருவருக்கும் 21 பிறவிகளுக்காக சதா சுகத்திற்கான வழி சொல்கிறீர்கள். தங்களின் சுகதாமத்திற்கு வாருங்கள், இது துக்கதாமம். இப்போது தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாபா சொல்கிறார், பவித்திரமாகுங்கள் மற்றும் என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். பாபா தான் அமர்ந்து குழந்தைகளுக்கு அளவற்ற சுகத்தைத் தருகிறார். இப்போது எவ்வளவு துக்கம்! துக்கத்தில் தான் பகவான் நினைவு செய்யப் படுகிறார். பாபா சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். பிறகு அங்கே ஏன் நினைவு செய்ய வேண்டும்? அழைக்கின்றனர், ஹே பிரபு, பார்வையற்றவர்களுக்கு ஊன்றுகோலாக இருப்பவரே! ஆனால் எதையுமே அறிந்து கொள்ளவில்லை. இலட்சுமி-நாராயணருக்கு முன்னாலும் போய்ச் சொல்வார்கள் - நீங்கள் தான் தாயும் தந்தையும் ஆவீர்கள் இப்போது அவர்களோ சொர்க்கத்தின் எஜமானர்கள் அவர்கள் அனைவருக்கும் தாய்-தந்தை ஆக முடியாது. கிருஷ்ணர் ஒரு இராஜதானியை சேர்ந்தவர். இராதை இன்னொரு இராஜதானியை சேர்ந்தவர். பிறகு அவர்களுக்குத் திருமணம் ஆகிறது.

சுயம்வரத்திற்குப் பிறகு பெயர் மாறி விடுகிறது. விஷ்ணுவின் இரண்டு ரூபங்களான லட்சுமி-நாராயணர் ஆகிறார்கள். தீபாவளி அன்று மகாலட்சுமியை அழைக்கின்றனர் இல்லையா? அவர்கள் தம்பதியர்கள். இப்போது நீங்கள் காம சிதையில் இருந்து இறங்கி ஞான சிதையில் அமர்கிறீர்கள். நீங்கள் உண்மையான பிராமணர்கள். நீங்கள் பவித்திரதாவின் உறுதிமொழி செய்விக்கிறீர்கள். எல்லையற்ற தந்தை சொல்கிறார், பவித்திரமாவீர்களானால் பவித்திர உலகின் எஜமானர் ஆவீர்கள். வீட்டில் அமர்ந்தவாறே கூட நினைவு செய்ய முடியும். பாபா சொல்கிறார், நீங்கள் அனைவரும் என்னிடம் வந்தாக வேண்டும். அனைவருமே இறந்தாக வேண்டும். இது அதே மகாபாரத யுத்தமாகும். இங்கே நடப்பது யவனர்களின் (ஐரோப்பியர்) யுத்தம். சத்யுகத்தில் யுத்தம் முதலிய எதுவும் நடை பெறாது. பாபா சொல்கிறார், நீங்கள் இந்த இராவணன் மீது வெற்றி கொள்ளுங்கள். மற்றப்படி சண்டை முதலியவற்றின் விசயம் கிடையாது. இந்த மகாபாரத யுத்தமும் நடைபெறுகின்றது. மீதி கொஞ்சம் பேர் மிஞ்சுவார்கள். பாரதம் அழியாத கண்டம். மற்ற கண்டமெல்லாம் அழிந்து போகும். பாபா அனை வருக்கும் சத்கதி அளிக்கிறார். ஆத்மாக்களைத் திரும்ப அழைத்துச் செல்கிறார். இப்போது நீங்கள் பாபாவிடம் இருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். சந்நியாசிகளோ கொடுக்க முடியாது. அவர்கள் ஒன்றும் சொர்க்கத்தைப் படைப்பவர்கள் அல்ல. இப்போது சொர்க்கத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்ற நரகத்தின் மனிதர்கள் அனைவரும் அழிந்து போவார்கள். இறந்து தான் ஆக வேண்டும். பிறகு ஏன் உயிரோடு இருக்கும் போதே ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளக் கூடாது? இல்லையென்றால் ஐயோ-ஐயோ எனக் கதற நேரிடும். கும்பகர்ணனின் அசுர உறக்கத் திலிருந்து கடைசியில் விழித்துக் கொள்வார்கள். இப்போது முழுச் சக்கரத்தின் ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் தான் பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள், பிறகு பூஜாரி ஆனீர்கள். மீண்டும் பூஜைக்குரியவர்களாக ஆகிறீர்கள். பாவன இராஜாக்களும் இருந்தனர். தூய்மையற்ற இராஜாக்களும் இருந்தனர். இப்போது இராஜா என்று யாரும் கிடையாது. பிரஜைகள் மீது பிரஜைகளின் ராஜ்யம் நடைபெறுகிறது. பிறகு சிருஷ்டி சுற்றி வந்தாக வேண்டும். சத்யுகத்தில் வர வேண்டும். சிவபாபா இவர் (பிரம்மா) வாயின் மூலம் சொல்கிறார் - நீங்கள் என்னுடைய குழந்தைகள். நீங்களும் சொல்கிறீர்கள், பாபா, நாங்கள் உங்களுடைய குழந்தைகள். இது வாய்வழி வம்சாவளி ஆகும். நீங்கள் ஈஸ்வரனின் பரிவாரம் (குடும்பம்) பகவான் சொல்கிறார், ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்கள் நாம் இப்போது இனிமையான வீட்டுக்கு செல்கிறோம். அங்கே தான் பாபா இருக்கிறார். பிறகு பாபா இனிமையான சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். அங்கேயும் சாந்தி மற்றும் சுகம் உள்ளது. நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள், தூய்மை சுகம், சாந்தியின் ஆஸ்தியைப் பெறுவதற்காக. 21 பிறவிகளுக் கானது இந்தப் படிப்பு. நீங்கள் இந்த உலகத்திற்காக இதைப் படிக்கவில்லை. இதுவே மரண உலகம். நீங்கள் அமர்நாத்திடம் இருந்து அமரக்கதை கேட்டு அமரர் ஆகிறீர்கள். யார் பாபாவிடம் வந்து புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் தான் தூய்மையின் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் தான் பிறகு வந்து ஆஸ்தி பெறுவார்கள். பிரம்மாகுமார் குமாரிகளோ ஏராளமானவர்கள் ஆகிக் கொண்டே செல்வார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபாவிடம் இருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுவதற்காக இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே, படைப்புகளைப் பராமரித்துக் கொண்டே தாமரை மலருக்குச் சமமாகப் பவித்திர மாக ஆக வேண்டும்

2. ஒவ்வொருவரையும் 21 பிறவிகளுக்கு சுகமானவராக ஆக்குவதற்கான வழி சொல்ல வேண்டும். ஞான சிதையில் அமர்ந்து சூத்திரனில் இருந்து பிராமணன், அதன் பிறகு தேவதை யாக ஆக வேண்டும்.

வரதானம்:
மாஸ்டர் அன்புக் கடல் ஆகி வெறுப்புணர்வை அழிக்கக் கூடிய ஞானம் நிறைந்தவர் ஆகுக.

ஞானம் நிறைந்தவர் என்றால் ஞானமுள்ள ஆத்மா, குழந்தை ஒவ்வொருவருக்காகவும் மாஸ்டர் அன்புக் கடலாக இருப்பார். அவரிடத்தில் அன்பைத் தவிர வேறு எதுவும் இருக்காது. இன்றைய நாட்களில் செல்வத்தைக் காட்டிலும் அன்பு அவசியமானதாக இருக்கிறது. எனவே மாஸ்டர் அன்புக் கடலாக ஆகி அபகாரம் செய்பவர்கள் மீதும் உபகாரம் செய்யுங்கள். தந்தை அனைத்து குழந்தைகளின் மீதும் கருணை மற்றும் நன்மைக்கான பாவனை வைப்பது போன்று பாப்சமான் மன்னிப்புக் கடல் மற்றும் கருணை உள்ளம் உடையக் குழந்தைகளிடத்திலும் யார் மீதும் வெறுப்புணர்வு இருக்க முடியாது.

சுலோகன்:
எல்லைக்குட்பட்டதை அழித்து விட்டு எல்லையற்ற பார்வை மற்றும் உள்ளுணர்வை தாரணை செய்வது தான் ஒற்றுமைக்கு ஆதாரமாகும்.