12.09.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நாம் ஸ்ரீமத் படி நமது சத்யுக சாம்ராஜ்யத்தை (பேரரசு) ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பது சதா இதே நினைவு இருக்கட்டும் அப்போது அளவற்ற குஷி இருக்கும்.

 

கேள்வி :

இந்த ஞானம் என்ற உணவு எந்தக் குழந்தைகளுக்கு ஜீரணமாவதில்லை?

 

பதில்:

யார் தவறுகள் செய்து விட்டு, தூய்மையை இழந்துப் பிறகு வகுப்புக்கு வந்து அமர்ந்து கொள்கிறார் களோ, அவர்களுக்கு ஞானம் ஜீரணமாகாது. காமம் மகாசத்ரு என பகவான் சொல்லியுள்ளார் என்று அவர்கள் வாயினால் ஒருபோதும் மற்றவர்களுக்குச் சொல்ல முடியாது. அவர்களுக்கு மனம் உள்ளுக்குள் அரித்துக் கொண்டே இருக்கும். அவர்கள் அசுர வம்சத்தினர் (சம்ப்ரதாயம்) ஆகிவிடுகிறார்கள்.

 

ஓம் சாந்தி.

தந்தை வந்து ஆன்மிகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். அவர் எத்தகைய தந்தை? அந்தத் தந்தையின் மகிமையை குழந்தைகளாகிய நீங்கள் செய்ய வேண்டும். பாடவும் படுகின்றது - சத்தியமான சிவபாபா, சத்தியமான சிவபாபா ஆசிரியர், சத்தியமான சிவபாபா குரு. சத்தியமானவரோ அவர் தான் இல்லையா? குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நமக்கு சத்தியமான சிவபாபா கிடைத்துள்ளார். குழந்தைகள் நாம் இப்போது ஸ்ரீமத் படி ஒரே கொள்கை (குறிக்கோள்) உடையவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். ஆகவே ஸ்ரீமத் படி நடக்க வேண்டும் இல்லையா? பாபா சொல்கிறார், ஒன்று - ஆத்ம அபிமானி ஆகுங்கள், மற்றது - பாபாவை நினைவு செய்யுங்கள். எவ்வளவு நினைவு செய்வீர்களோ, அவ்வளவு தனக்கு நன்மை செய்து கொள்வீர்கள். நீங்கள் மீண்டும் தங்களின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கு முன்பும் கூட நமது இராஜதானி இருந்தது. தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்த நாம் தான் 84 பிறவி எடுத்து கடைசிப் பிறவியில் இப்போது சங்கமயுகத்தில் இருக்கிறோம். இந்தப் புருஷோத்தம சங்கமயுகம் பற்றி குழந்தைகள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. பாபா எவ்வளவு பாயின்ட்டுகள் தருகிறார்! - குழந்தைகளே, நல்லபடியாக நினைவில் இருப்பீர்களானால் மிகுந்த குஷியில் இருப்பீர்கள். ஆனால் பாபாவை நினைவு செய்வதற்கு பதிலாக மற்ற உலகாயத விசயங்களில் போய் விடுகிறீர்கள். இது நினைவிருக்க வேண்டும் - நாம் ஸ்ரீமத் படி நமது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். பாடவும் படுகிறது - உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான், அவருடையது தான் உயர்ந்ததிலும் உயர்ந்த ஸ்ரீமத். ஸ்ரீமத் எதைக் கற்றுத் தருகிறது? சகஜ இராஜ யோகம். இராஜ்யத்திற்காகப் படிப்பைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். தங்களின் தந்தை மூலம் சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி அறிந்து கொண்டு பிறகு தெய்விக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். ஒரு போதும் தந்தையை மீறி எதிரான செயல்களில் ஈடுபடக் கூடாது. அநேகக் குழந்தைகள் தங்களை சேவாதாரி எனப் புரிந்து கொண்டு அகங்காரத்தில் வந்து விடுகின்றனர். இதுபோல் அநேகர் உள்ளனர். பிறகு அவ்வப்பொழுது தோல்வி அடைகின்றனர். அதனால் நஷாவே போய்விடுகின்றது. மாதாக்களாகிய நீங்கள் படிக்காதவர்கள். படித்தவர்கள் என்றால் அற்புதம் செய்து காட்டுவார்கள். ஆண்களில் கூட எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். குமாரிகளாகிய நீங்கள் பெயரை எவ்வளவு புகழ் பெறச் செய்ய வேண்டும்! நீங்கள் ஸ்ரீமத் படி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்திருந்தீர்கள். நாரியிலிருந்து லட்சுமி ஆகியிருந்தீர்கள் எனும்போது எவ்வளவு நஷா இருக்க வேண்டும்! இங்கோ பாருங்கள், ஒன்றுக்கும் உதவாத படிப்புக்காக உயிரையே பலி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது, நீங்கள் வெள்ளையாக (தூய்மையாக) ஆகிறீர்கள். பிறகு கருமை நிற தமோபிரதான உலகின் மீது ஏன் மனதைச் செலுத்துகிறீர்கள்? இந்த சுடுகாட்டின் மீது மனதை ஈடுபடுத்த வேண்டாம். நாமோ பாபாவிடமிருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம். பழைய உலகின் மீது மனதை ஈடுபடுத்துவது என்றால் நரகத்திற்குச் செல்வதாகும். பாபா வந்து நரகத்தில் இருந்து காப்பாற்றுகிறார். பிறகும் கூட நரகத்தின் பக்கம் ஏன் முகத்தை வைக்கிறீர்கள்? உங்களுடைய இந்தப் படிப்பு எவ்வளவு சுலபமானது! எந்த ஒரு ரிஷி-முனிக்கும் தெரியாது. எந்த ஓர் உலகாயத ஆசிரியரோ, ரிஷி, முனியோ இதைப் புரிய வைக்க முடியாது. இவரோ, தந்தை-ஆசிரியர்-குருவாகவும் இருக்கிறார். அந்த குருமார் சாஸ்திரங்களைச் சொல்கின்றனர். அவர்களை ஆசிரியர் எனச் சொல்ல மாட்டார்கள். அவர்களில் யாரும், நாங்கள் உலகின் சரித்திர-பூகோளத்தைக் கற்பிக்கிறோம் என்று கூற மாட்டார்கள். அவர்களோ, சாஸ்திரங்களின் விசயங்களைத் தான் சொல்வார்கள். பாபா உங்களுக்கு சாஸ்திரங் களின் சாரத்தைப் புரிய வைக்கிறார். மேலும் பிறகு உலகத்தின் சரித்திர-பூகோளத்தையும் சொல்கிறார். இப்போது இவர் நல்ல ஆசிரியரா, அவர் நல்ல ஆசிரியரா? அந்த ஆசிரியரிடம் நீங்கள் எவ்வளவு தான் படித்தாலும், என்ன சம்பாதிப்பீர்கள்? அதுவும் அதிர்ஷ்டத்தில் இருந்தால் தான். படிக்கும் போதே ஏதேனும் விபத்து நடந்து, இறந்து போனால் படிப்பு முடிந்தது. இங்கே நீங்கள் எவ்வளவு தான் படித்தாலும் அது வீணாகிப் போகாது. ஆம், ஸ்ரீமத் படி நடந்து பிறகு கொஞ்சம் தலைகீழாக நடந்து விடுகின்றனர். அல்லது சாக்கடையில் போய் விழுந்து விடுகின்றனர் என்றாலும் எவ்வளவு படித்தார்களோ, அது ஒன்றும் வீணாகிப் போய் விடுகிறது. இந்தப் படிப்போ 21 பிறவி களுக்கானது. ஆனால் கீழே விழுவதால் கல்ப-கல்பாந்தரத்துக்கும் மிகமிக நஷ்டம் ஏற்பட்டு விடும். பாபா சொல்கிறார் - குழந்தைகளே, முகத்தைக் கருப்பாக்கிக் (தூய்மையற்றவர்) கொள்ளாதீர்கள். அதுபோல் அநேகர் முகத்தைக் கறுப்பாக்கி, அசுத்தமானவராக ஆகிப் பிறகு வந்து அமர்ந்து கொள்கின்றனர். அவர்களுக்கு ஒரு போதும் இந்த ஞானம் ஜீரணமாகாது. அஜீரணம் ஆகி விடும். என்ன கேட்கிறார்களோ, அது அஜீரணமாகி விடும். பிறகு, காமம் மகாசத்ரு, அதன் மீது வெற்றி பெற வேண்டும் என பகவான் சொல்கிறார், என்று வாயினால் யாருக்கும் சொல்ல முடியாது. தானே வெற்றி பெறவில்லை என்றால் மற்றவர்களுக்கு எப்படிச் சொல்வார்கள்? உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருக்கும் இல்லையா? அவர்கள் அசுர சம்பிரதாயத்தினர் எனச் சொல்லப் படுகிறார்கள். அமிர்தத்தை அருந்தி-அருந்தியே பிறகு விஷத்தைச் சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் 100 மடங்கு கருப்பாகி விடுகின்றனர். எலும்புகளெல்லாம் உடைந்து போகின்றன.

 

மாதாக்களாகிய உங்களுடைய குழுவோ மிக நல்லதாக இருக்க வேண்டும். நோக்கம்-குறிக்கோளோ, கண் முன் உள்ளது. நீங்கள் அறிவீர்கள், இந்த லட்சுமி-நாராயணரின் இராஜ்யத்தில் ஒரு தேவி-தேவதா தர்மம் இருந்தது. ஒரு இராஜ்யம், ஒரு பாஷை, 100 சதவிகிதம் தூய்மை, சுகம், சாந்தி, செல்வச் செழிப்பு இருந்தது. அந்த ஒரு இராஜ்யத்தின் ஸ்தாபனையைத் தான் தந்தை இப்போது செய்து கொண்டிருக்கிறார். இது நோக்கம்- குறிக்கோளாகும். 100 சதவிகிதம் தூய்மை, சுகம், சாந்தி, செல்வத்தினுடைய ஸ்தாபனை இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விநாசத்திற்குப் பிறகு ஸ்ரீகிருஷ்ணர் வந்து கொண்டிருக்கிறார். தெளிவாக எழுதிவிட வேண்டும். சத்யுகத்தின் ஒரே ஒரு தேவி-தேவதைகளின் இராஜ்யம், ஒரே பாஷை, தூய்மை, சுகம், சாந்தி மீண்டும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.. அரசாங்கம் விரும்புகிறது இல்லையா? சொர்க்கம் இருப்பது சத்யுக-திரேதா யுகத்தில். ஆனால் மனிதர்கள் தங்களை நரகவாசி என உணர்ந்து கொள்வதில்லை. இப்போது நீங்கள் சங்கமயுகத்தினர். இதற்கு முன் நீங்களும் கலியுக நரகவாசியாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் சொர்க்கவாசியாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாரதத்தை ஸ்ரீமத் படி சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த தைரியம், அதற்கென ஒரு குழு வேண்டும். சக்கரத்தைப் பற்றிச் சொல்லப் போகிறீர்கள் என்றால் இந்த லட்சுமி- நாராயணரின் சித்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். நல்லது. இதில் எழுதி வையுங்கள் - ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம், சுகம்-சாந்தியின் இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது - திரிமூர்த்தி சிவபாபாவின் ஸ்ரீமத் படி. இதே போல் பெரிய-பெரிய எழுத்துகளில் பெரிய-பெரிய சித்திரங்கள் இருக்க வேண்டும். சின்னக் குழந்தைகள் சின்னச் சித்திரங்களை விரும்புவார்கள். சித்திரம் எவ்வளவு பெரியதாக இருக்குமோ, அவ்வளவு நல்லது. இந்த லட்சுமி-நாராயணரின் சித்திரம் மிக நன்றாக உள்ளது. இதில், ஒரே ஒரு சத்தியமான திரிமூர்த்தி சிவபாபா, சத்தியமான திரிமூர்த்தி சிவபாபா ஆசிரியர், சத்தியமான திரிமூர்த்தி சிவபாபா குரு என்று மட்டும் எழுதி வையுங்கள். திரிமூர்த்தி என்ற சொல்லை எழுதவில்லை என்றால் பரமாத்மாவோ நிராகார், அவர் ஆசிரியராக எப்படி ஆக முடியும் என நினைப்பார்கள். அவர்களுக்கு ஞானமோ இல்லை தானே? லட்சுமி- நாராயணரின் சித்திரத்தைத் தகரத் தகட்டில் உருவாக்கி ஒவ்வோரிடத்திலும் வைக்க வேண்டும். இந்த ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தந்தை வந்திருக்கிறார், பிரம்மா மூலம் ஒரு தர்மத்தின் ஸ்தாபனை, மற்ற அநேக தர்மங்களை விநாசம் செய்வித்து விடுவார். இந்த நஷா குழந்தைகளுக்கு சதா இருக்க வேண்டும். சின்ன விஷயங்களில் ஒரே வழிமுறை கிடைக்கவில்லை என்றால் உடனே சண்டைக்கு வந்து விடுகின்றனர். இதுவோ நடக்கத் தான் செய்கிறது. சிலர் ஒரு பக்கம், இன்னும் சிலர் வேறு பக்கம். பிறகு பெரும்பான்மை உள்ளவர்களை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதில் துயரமடைவதற்கான விஷயம் கிடையாது. குழந்தைகள் கோபித்துக் கொள்கின்றனர். நமது பேச்சு ஏற்றுக் கொள்ளப் படவில்லை. அட, இதில் கோபித்துக் கொள்வதற்கான விஷயம் என்ன இருக்கிறது? தந்தையோ அனைவரையும் மகிழ்விப்பவர். மாயா அனைவரையும் கோபித்துக் கொள்ளுமாறு செய்கிறது. அனைவரும் தந்தையிடம் கோபித்துக் கொண்டுள்ளனர். கோபித்துக் கொள்வதென்ன, தந்தையை அறிந்து கொள்ளவே இல்லை. எந்தத் தந்தை சொர்க்கத்தின் இராஜபதவியைக் கொடுத்தாரோ, அவரைப் பற்றி அறிந்து கொள்ளவே இல்லை. தந்தை சொல்கிறார், நான் உங்களுக்கு உபகாரம் செய்கிறேன். நீங்கள் பிறகு எனக்கு உபகாரம் செய்கிறீர்கள். பாரதத்தின் நிலையைப் பாருங்கள் என்னவாக ஆகியுள்ளது! உங்களிலும் மிகச் சிலருக்குத் தான் நஷா உள்ளது. இது நாராயணி நஷா. நாமோ ராம்-சீதா ஆவோம் என்று சொல்லக் கூடாது. உங்களுடைய நோக்கம்-குறிக்கோளே நரனில் இருந்து நாராயணனாக ஆவது. நீங்கள் பிறகு ராம்-சீதா ஆவதிலேயே குஷியாகி விடுகிறீர்கள், தைரியத்தைக் காண்பிக்க வேண்டும் இல்லையா? பழைய உலகத்தின் மீது முற்றிலும் மனதை ஈடுபடுத்தவே கூடாது. யார் மீதாவது மனதை ஈடுபடுத்தினால் அப்போதே இறந்து விட்டனர் என்றாகி விடும். ஜென்ம-ஜென்மாந்தரத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டு விடும். பாபாவிடம் இருந்தது தான் சொர்க்கத்தின் சுகம் கிடைக்கின்றது. பிறகு நாம் ஏன் நரகத்தில் இருக்கிறோம்? பாபா சொல்கிறார், நீங்கள் சொர்க்கத்தில் இருந்த போது வேறு எந்த ஒரு தர்மமும் இல்லாதிருந்தது. இப்போது டிராமாவின் அனுசாரம் உங்களுடைய தர்மம் இல்லை. யாருமே தன்னை தேவதா தர்மத்தைச் சேர்ந்தவராக உணர்ந்து கொள்ளவே இல்லை. மனிதர்களாக இருந்து கொண்டு தங்களின் தர்மத்தைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை என்றால் என்ன சொல்வது! இந்து என்பது தர்மம் கிடையாது. யார் ஸ்தாபனை செய்தார் என்பதையும் அறிந்து கொள்ளவில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு புரிய வைக்கப்படுகின்றது! பாபா சொல்கிறார், நான் காலனுக்கெல்லாம் மேலான காலன் இப்போது வந்துள்ளேன் - அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக. மற்றப்படி யார் நல்லபடியாகப் படிக்கின்றனரோ, அவர்கள் உலகத்தின் எஜமானர் ஆவார்கள். இப்போது வீட்டுக்குப் புறப்படுங்கள். இங்கே வசிப்பதற்கான தகுதி இல்லை. அசுர வழிப்படி நடந்து அதிகக் குப்பையாக ஆக்கியுள்ளனர்.

 

உலகத்தின் எஜமானர்களாக இருந்த பாரதவாசிகளாகிய நீங்கள் இப்போது எவ்வளவு அடி வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்! இப்படித் தான் பாபா சொல்வார் இல்லையா? வெட்கம் வரவில்லையா? உங்களிலும் கூட சிலர் தான் நல்லபடியாகப் புரிந்து கொண்டுள்ளனர். நம்பர்வாரோ இருக்கத் தானே செய்கின்றனர்! அநேகக் குழந்தைகளோ உறக்கத்தில் உள்ளனர். அந்தக் குஷி அதிகரிப்பதில்லை. பாபா நமக்கு மீண்டும் இராஜதானியைத் தருகிறார். பாபா சொல்கிறார் - இந்த சாதுக்கள் முதலானவர்களையும் நான் உயர்த்துகிறேன். அவர்கள் தங்களுக்குத் தாங்களே அல்லது மற்றவர்களுக்கு முக்தி-ஜீவன்முக்தி அளிக்க முடியாது. உண்மையான குருவோ ஒரே ஒரு சத்குரு தான். அவர் சங்கமயுகத்தில் வந்து அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். பாபா சொல்கிறார், கல்பத்தின் ஒவ்வொரு சங்கமயுகத்திலும் நான் வருகிறேன். அப்போது தான் நான் முழு உலகையும் தூய்மையாக்க வேண்டும். தந்தை சர்வசக்திவான், அவரால் என்ன தான் செய்ய முடியாது என்று மனிதர்கள் நினைக்கின்றனர். அட, என்னை நீங்கள் அழைப்பதே தூய்மையற்றவர்களைப் தூய்மையானவர்களாக மாற்றுங்கள் என்று தான். அதனால் நான் வந்து தூய்மையாக்குகிறேன். மற்றப்படி வேறென்ன செய்வேன்? மற்றப்படி செப்படி வித்தை செய்பவர்கள் அநேகர் உள்ளனர். என்னுடைய வேலையே நரகத்தை சொர்க்கமாக ஆக்குவது. அதுவோ ஒவ்வொரு 5000 ஆண்டுக்குப் பிறகும் அவ்வாறு ஆகின்றது. இதை நீங்கள் தான் அறிவீர்கள். தேவி-தேவதா தர்மம் என்பது ஆதி சநாதன தர்மம் (அனைத்திலும் பழைமையானது). மற்ற அனைத்துமோ ஒன்றின் பின் ஒன்றாக வந்துள்ளன. அரவிந்த கோஷ் இப்போது வந்தவர் என்றாலும் பாருங்கள், எத்தனை ஆசிரமங்கள் அவருக்கு உருவாகியுள்ளன! அங்கே யாரும் நிர்விகாரி ஆவதற்கான விஷயமே கிடையாது. அவர்களோ, இல்லறத்தில் இருந்து கொண்டு பவித்திரமாக யாரும் இருக்க முடியாது என நினைக்கின்றனர். பாபா சொல்கிறார், இல்லறத்தில் இருந்து கொண்டு ஒரு ஜென்மம் மட்டும் பவித்திரமாக இருங்கள். நீங்கள் ஜென்ம- ஜென்மாந்த ரமாகவே அபவித்திரமாகவே இருந்திருக்கிறீர்கள். இப்போது நான் வந்துள்ளேன், உங்களை தூய்மையாக்கு வதற்காக. இந்தக் கடைசிப் பிறவியில் பாவனமாகுங்கள். சத்யுக-திரேதாவிலோ விகாரம் எதுவும் இருப்பதில்லை.

 

இந்த லட்சுமி-நாராயணனின் சித்திரம் மற்றும் ஏணிப்படியின் சித்திரம் மிக நன்றாக உள்ளன. இவற்றில் எழுதப் பட்டுள்ளது - சத்யுகத்தில் ஒரே தர்மம், ஒரே இராஜ்யம் இருந்தது என்று. இதைப் புரிய வைப்பதற்கு மிகவும் யுக்தி வேண்டும். வயதான மாதாக்களுக்கும் கற்றுக் கொடுத்து தயார் செய்ய வேண்டும். அப்போது கண்காட்சிகளில் அவர்களால் கொஞ்சம் புரிய வைக்க முடியும். யாருக்காவது இந்தச் சித்திரங்களைக் காட்டிச் சொல்லுங்கள், இவர்களுடைய இராஜ்யம் இருந்தது இல்லையா? இப்போதோ இல்லை. பாபா சொல்கிறார் - இப்போது நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள். அப்போது நீங்கள் தூய்மையாகி தூய்மையான உலகத்திற்குச் சென்று விடுவீர்கள். இப்போது தூய்மையான உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு சுலபம்! வயதான தாய்மார்கள் அமர்ந்து கண்காட்சிகளில் புரிய வைக்கும் போது பெயர் விளங்கும். கிருஷ்ணரின் சித்திரத்தில் எழுதப் பட்டிருப்பது மிக நன்றாக உள்ளது. இதில் எழுதியிருப்பதை அவசியம் படியுங்கள் எனச் சொல்ல வேண்டும். இவற்றைப் படிப்பதன் மூலம் தான் உங்களுக்கு நாராயணி நஷா அல்லது உலகத்தின் எஜமானத் தன்மையின் நஷா அதிகரிக்கும்.

 

பாபா சொல்கிறார், நான் உங்களை அந்த மாதிரி லட்சுமி-நாராயணனாக ஆக்குகிறேன் என்றால் நீங்களும் கூட மற்றவர்கள் மீது இரக்க மனம் உள்ளவர்களாக ஆக வேண்டும். எப்போது மற்றவர்களுக்கு நன்மை செய்வார்களோ, அப்போது தான் தனக்கும் கூட நன்மை செய்பவர் ஆவார்கள். வயதான மாதாக்களுக்கு இதுபோல் கற்றுக் கொடுத்து சாமர்த்தியசாலி ஆக்குங்கள். அதனால் கண்காட்சிகள் பற்றி பாபா சொல்லியுள்ளார்- வயது முதிர்ந்த 8-10 மாதாக்களை அனுப்புவீர்களானால் உடனே வந்து விடுவார்கள். யார் செய்வார்களோ, அவர்கள் அடைவார்கள். முன்னால் நோக்கம்-குறிக்கோளைப் பார்த்ததுமே குஷி ஏற்படுகிறது. நான் இந்த சரீரத்தை விட்டுப் போய் உலகத்தின் எஜமானர் ஆவேன். எவ்வளவு நினைவில் இருக்கிறார்களோ, அவ்வளவு பாவங்கள் நீங்கும். பாருங்கள், உறையின் மீது அச்சிடப் பட்டுள்ளது - ஒரு தர்மம், ஒரு தெய்விக இராஜ்யம், ஒரு மொழி... இது விரைவிலேயே ஸ்தாபனை ஆகும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) ஒருபோதும் தங்களுக்குளோ அல்லது பாபாவிடமோ கோபித்துக் கொள்ளக் கூடாது. பாபா நம்மை மகிழ்விப்பதற்காக வந்துள்ளார். அதனால் ஒரு போதும் மனம் சோர்வடையக் கூடாது. பாபாவை எதிர்க்கக் கூடாது.

 

2) பழைய உலகத்தின் மீது, பழைய தேகத்தின் மீது மனதை ஈடுபடுத்தக் கூடாது. சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்தியமான குருவிடம் உண்மையிலும் உண்மையானவர்களாக இருக்க வேண்டும். சதா ஒருவரின் ஸ்ரீ மத் (வழிமுறையின்) படி நடந்து ஆத்ம அபிமானி ஆக வேண்டும்.

 

வரதானம்:

ஆதி இரத்தினம் என்ற நினைவினால் தன்னுடைய வாழ்க்கையினுடைய மதிப்பினை தெரிந்துக் கொள்ளக்கூடிய சதா சக்திசாலி ஆகுக.

 

எவ்வாறு பிரம்மா ஆதி தேவனாக இருக்கின்றாரோ, அவ்வாறு பிரம்மா குமார், குமாரிகளும் கூட ஆதி இரத்தினங்கள் ஆவீர்கள். ஆதி தேவனுடைய குழந்தைகள் மாஸ்டர் ஆதி தேவன் ஆவீர்கள். ஆதி இரத்தினம் என்று புரிந்து கொள்வதனால் தான் தன்னுடைய வாழ்க்கையினுடைய மதிப்பை தெரிந்துக் கொள்ள முடியும். ஏனெனில், ஆதி இரத்தினம் என்றால் பிரபுவினுடைய இரத்தினம், ஈஸ்வரிய இரத்தினம் என்பதாகும். எனவே, எவ்வளவு மதிப்பானவர்கள் ஆகிவிட்டீர்கள்! எனவே, சதா தன்னை ஆதி தேவனுடைய குழந்தை மாஸ்டர் ஆதி தேவன், ஆதி இரத்தினம் என்று புரிந்துகொண்டு ஒவ்வொரு காரியம் செய்யுங்கள், அப்பொழுது சக்திசாலியாக ஆகுங்கள் என்ற வரதானம் கிடைத்துவிடும். எதுவும் வீணானதாக ஆக முடியாது.

 

சுலோகன்:-

யார் ஏமாற்றம் அடைவதற்கு முன்பே அதைக் கண்டறிந்து தன்னை பாதுகாத்துக் கொள்கின்றார்களோ, அவர்களே ஞானம் நிறைந்த ஆத்மா ஆவார்கள்.

 

ஓம்சாந்தி