12.09.21    காலை முரளி            ஓம் சாந்தி   19.03.88      பாப்தாதா,   மதுபன்


நினைவில் சதா ரமணீகரம் கொண்டு வருவதற்கான யுக்திகள்

 
இன்று விதாதா, வரதாதா பாப்தாதா தனது மாஸ்டர் விதாதா, வரதாதா குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு குழந்தையும் விதாதாவாகவும் ஆகியிருக்கிறீர்கள், வரதாதா வாகவும் ஆகியிருக்கிறீர்கள். கூடவே குழந்தைகளின் பதவியும் எவ்வளவு மகான் ஆக இருக்கிறது என்பதையும் பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார். இந்த சங்கமயுகத்தின் பிராமண வாழ்க்கை எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது! விதாதா, வரதாதாவின் கூடவே விதிகளை உருவாக்கக் கூடிய விதி-விதாதாவாகவும் பிராமணர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். உங்களது ஒவ்வொரு விதியும் சத்யுகத்தில் எவ்வாறு மாறி விடுகிறது என்பதை முன்பே கூறியிருக்கின்றேன். இந்த நேரத்திற்கான ஒவ்வொரு காரியத்திற்கான விதி எதிர்காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. துவாபார யுகத்திற்குப் பிறகும் பக்தி மார்க்கத்தில் இந்த நேரத்திற்கான சிரேஷ்ட காரியத்தின் விதி பக்திமார்கத்தின் விதியாக ஆகிவிடுகிறது. ஆக பூஜ்ய ரூபத்திலும் இந்த நேரத்தின் விதிமுறை வாழ்க்கையின் சிரேஷ்ட கல்வியின் ரூபத்தில் நடைபெறுகிறது. மேலும் பூஜாரி மார்க்கம் அதாவது பக்திமார்க்கத்திலும் உங்களது ஒவ்வொரு விதி நியமப்படி நடைபெற்று வருகிறது. ஆக விதாதா, வரதாதா மற்றும் விதிகளை உருவாக்கும் விதி-விதாதாவாக இருக்கிறீர் கள்.

உங்களது மூல சித்தாந்தம் (கோட்பாடு) வெற்றி பெறுவதற்கான சாதனமாக ஆகிவிடு கிறது. மூல சித்தாந்தம் - தந்தை ஒருவரே என்பதாகும். தர்ம ஆத்மாக்கள், மகான் ஆத்மாக்கள் பலர் இருக் கின்றனர். ஆனால் பரம் ஆத்மா ஒருவர். இந்த மூல சித்தாந்தத்தின் மூலம் அரை கல்பம் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு தந்தையின் மூலம் பிராப்தியாக அடைந்த ஆஸ்தியை வெற்றியின் ரூபத்தில் அடைகிறீர்கள். பிராப்திகளை அடைகிறீர்கள் என்றால் வெற்றி சொரூபமாக ஆகின்றீர் கள். ஏனெனில் தந்தை ஒருவர் தான், மற்றவர்கள் மகான் ஆத்மாக்கள் அல்லது தர்ம ஆத்மாக்கள் ஆவர், தந்தை அல்ல, சகோதர-சகோதரர் கள் ஆவர். ஆஸ்தி தந்தையிடமிருந்து அடைகின்றீர்கள், சகோதரரிடமிருந்து அல்ல. ஆக இந்த மூல சித்தாந்தத்தின் மூலம் அரை கல்பம் உங்களுக்கு வெற்றி பிராப்தியாக கிடைக்கிறது. மேலும் பக்தியிலும் கூட கடவுள் ஒருவர் - என்ற இதே சித்தாந்தம் வெற்றியை பலனாக அடைவதற்கு ஆதாரம் ஆகின்றது. பக்தியின் ஆதிக்கு ஆதாரமும் ஒரு தந்தையின் சிவலிங்க ரூபத்தில் ஆரம்பமாகிறது. அது தான் கலப்படமற்ற பக்தி என்று கூறப்படுகிறது. ஆக பக்தி மார்கத்திலும் கடவுள் ஒருவர் என்ற இந்த ஒரு சித்தாந்தத்தின் மூலம் தான் வெற்றி பலனாக கிடைக்கிறது. இதே போன்று எதுவெல்லாம் உங்களது மூல சித்தாங்களாக இருக்கிறதோ, அந்த ஒவ்வொரு சித்தாந்தத்தின் மூலம் வெற்றி பிராப்தியாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வாழ்க்கையின் மூல சித்தாந்தம் தூய்மையாகும். இந்த தூய்மை என்ற சித்தாந்தத்தின் பலனாக எதிர்காலத்தில் ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஒளிக்கிரீடம் சதா பிராப்தியாக கிடைக்கிறது. இதன் நினைவுச் சின்னமாக இரண்டு கிரீடம் காண்பிக் கின்றனர். மேலும் பக்தியிலும் யதார்த்தமாக மற்றும் உள்ளப்பூர்வமாக பக்தி செய்யும் போது தூய்மை என்ற சித்தாந்தத்தைத் தான் மூல ஆதாரமாக நினைக்கின்றனர். தூய்மை யின்றி பக்தியின் பலனை அடைய முடியாது என்று நினைக்கின்றனர். அது அல்பகாலத் திற்கானதாக இருந்தாலும் கூட எவ்வளவு காலத்திற்கு பக்தி செய்கின்றார்களோ, அவ்வளவு காலத்திற்கு மட்டுமே தூய்மையை கடைபிடிக்கின்றனர். ஆனால் தூய்மை தான் வெற்றிக்கான சாதனம் என்ற சித்தாந்தத்தை அவசியம் கடைபிடிக்கின்றனர். இதே போன்று ஞானத்தின் ஒவ்வொரு சித்தாந்தம் அல்லது தாரணையின் மூல சித்தாந்தத்தை புத்தியில் நினைத்துப் பாருங்கள் - ஒவ்வொரு சித்தாந்தமும் வெற்றிக்கான சாதனமாக எவ்வாறு ஆகின்றது? சிந்தனை செய்வதற்கான காரியத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். எவ்வாறு உதாரணத்தை கூறினேனோ, இதே போன்று சிந்தியுங்கள்.

ஆக நீங்கள் விதியை உருவாக்கும் விதி-விதாதாவாக ஆகின்றீர்கள், வெற்றி கொடுக்கும் வள்ளலாகவும் ஆகின்றீர்கள். அதனால் தான் இன்றைய நாள் வரை எந்த பக்தர்கள் என்ன வெற்றி அடைய விரும்புகிறார்களோ, அதை வித விதமான தேவதைகளின் மூலம் வித விதமான வெற்றியை பலனாக அடைவதற்க்காக அந்த தேவதைகளுக்கு பூஜை செய்கின்றனர். ஆக வெற்றி கொடுக்கும் வள்ளல் தந்தையின் மூலம் நீங்களும் வெற்றி கொடுக்கும் வள்ளலாக ஆகின்றீர்கள். இவ்வாறு தன்னை உணர்கிறீர்களா? யாருக்கு சுயம் அனைத்து வெற்றிகளும் பிராப்தியாக கிடைத் திருக்கிறதோ, அவர்களே மற்றவர்களுக்கும் வெற்றியை பிராப்தியாக அடையச் செய்ய நிமித்தமாக ஆக முடியும். வெற்றி என்பது தீய விசயம் அல்ல. ஏனெனில் உங்களுடையது மாயா ஜாலம் கிடையாது. மாயா ஜாலம் செய்பவர்கள் அல்ப காலத்திற்கு பிரபாவத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் உங்களுடையது யதார்த்த விதியின் மூலம் வெற்றி ஆகும். ஈஸ்வரிய விதியின் மூலம் எந்த வெற்றியை பலனாக அடைகின்றீர்களோ, அந்த வெற்றியும் ஈஸ்வரிய வெற்றி ஆகும். எவ்வாறு ஈஸ்வரன் அழிவற்றவராக இருக்கின்றாரோ, ஈஸ்வரிய விதி மற்றும் வெற்றியும் அழிவற்றதாகும். மாயா ஜாலம் காண்பிக்கக் கூடியவர்கள் சுயம் அல்பகால ஆத்மாக்கள், அவர்களது வெற்றியும் அல்ப காலத்திற்கானது ஆகும். ஆனால் உங்களது வெற்றி, சித்தாந்தத்தின் விதியின் மூலம் வெற்றியாகும். ஆகையால் அரைகல்பம் சுயம் வெற்றி சொரூபமாக ஆகின்றீர்கள். மேலும் அரைகல்பம் உங்களது சித்தாந்தத்தின் மூலம் பக்த ஆத்மாக்கள் சக்திக்குத் தகுந்தாற் போன்று பலனை பிராப்தியாக அல்லது வெற்றியை பிராப்தியாக அடைந்து வருகின்றனர். ஏனெனில் பக்தியின் சக்தியும் நேரத்தின் படி குறைந்து கொண்டே வருகிறது. சதோ பிரதான பக்தியின் சக்தி, பக்த ஆத்மாக்களுக்கு வெற்றியின் அனுபவத்தை இன்றைய கால பக்தர்களை விட அதிகமாக செய்ய வைக்கின்றது. இந்த நேரத்தின் பக்தியானது தமோ பிரதான மாக இருக்கின்ற காரணத்தினால் யதார்த்த சித்தாந்தம் இல்லாமல் இருக்கிறது, பலனும் கிடைக்காமல் இருக்கிறது.

ஆக நான் எப்படிப்பட்டவன் என்ற போதை அந்த அளவிற்கு இருக்கிறதா?சதா இந்த சிரேஷ்ட சுவமானத்தின் ஸ்திதி என்ற இருக்கையில் செட் ஆகியிருக்கிறீர்களா? எவ்வளவு உயர்ந்த இருக்கையாகும்! இந்த உயர்ந்த ஸ்திதி என்ற இருக்கையில் நிலைத் திருக்கும் போது அடிக்கடி அப்செட் ஆகமாட்டீர்கள். இது பதவி அல்லவா! எவ்வளவு உயர்ந்த பதவியாக இருக்கிறது - விதிகளை உருவாக்குபவர், வெற்றியின் வள்ளல்! இந்த பதவியில் நிலைத்திருக்கும் போது மாயை எதிர்க்காது. சதா பாதுகாப்பாக இருப்பீர்கள். அப்செட் ஆவதற்கான காரணமே தனது உயர்ந்த ஸ்திதி என்ற இருக்கையி-ருந்து சாதாரண இருக்கைக்கு வந்து விடுகிறீர்கள். நினைவு செய்வது அல்லது சேவை செய்வது என்பது ஒரு சாதாரண தினசரி நடவடிக்கையாக ஆகிவிடுகிறது. ஆனால் நினைவில் அமரும் போதும் தனது ஏதாவது ஒரு சிரேஷ்ட சுவமானத்தின் இருக்கையில் அமருங்கள். படுக்கை யிலிருந்து எழுந்து நினைவு செய்யும் இடத்தில், அது தியான அறையில் அல்லது பாபாவின் அறையில் அமர்ந்து விடுகிறீர்கள், அல்லது முழு நாளும் சென்று அமர்ந்து விடுகிறீர்கள். ஆக எவ்வாறு சரீரத்திற்கு தகுந்த இடத்தை கொடுக்கிறீர்களோ, அதே போன்று முதலில் புத்திக்கு ஸ்திதி என்ற இடத்தைக் கொடுங்கள். புத்திக்கு சரியாக இடத்தை கொடுத் திருக்கின்றேனா? என்பதை முதலில் சோதனை செய்யுங்கள். ஆக இருக்கையின் மூலம் ஈஸ்வரிய போதை தானாகவே வரும். இன்றைய நாட்களிலும் நாற்கா-யின் போதை என்று கூறுகின்றனர் அல்லவா! உங்களுடையது சிரேஷ்ட ஸ்திதி என்ற இருக்கையாகும். சில நேரம் மாஸ்டர் விதை ரூபம் என்ற ஸ்திதியின் இருக்கையில் செட் ஆகுங்கள். சில நேரம் அவ்யக்த பரிஸ்தா என்ற இருக்கையில் செட் ஆகுங்கள். சில நேரம் விஷ்வ கல்யாணகாரி என்ற ஸ்திதியில் செட் ஆகுங்கள் - இவ்வாறு தினமும் வித விதமான ஸ்திதி என்ற ஆசனத்தில் அல்லது இருக்கையில் செட் ஆகி அமருங்கள்.

ஒருவேளை யாருக்காவது இருக்கை செட் ஆகவில்லையெனில் இப்படி, அப்படி என்று ஆடிக் கொண்டே இருப்பார் அல்லவா! ஆக இந்த புத்தியும் ஆசனத்தில் செட் ஆகவில்லை எனில் அசைய ஆரம்பித்து விடுகிறது. நான் இப்படிப்பட்டவன், இப்படிப் பட்டவன் என்பதை அனைவரும் அறிவீர்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? என்ற இப்போது கேட்டால், மிக நீண்ட பட்டியல் தயாராகி விடும். ஆனால் ஒவ்வொரு நேரத்திலும் எதை அறிந்திருக்கிறீர்களோ, அதை தன்னுடையதாக ஏற்றுக் கொள்ளுங்கள். அறிந்திருப் பதுடன் இருந்து விடாமல், ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் இப்படிப்பட்டவன் என்று அறிந்து கொள்வதன் மூலம் சூட்சுமத்தில் குஷி இருக்கும். ஆனால் ஏற்றுக் கொள்வதன் மூலம் சக்தி கிடைக்கிறது. ஏற்றுக் கொண்டு நடப்பதன் மூலம் போதை ஏற்படுகிறது. எவ்வாறு எந்த ஒரு பதவியிலும் இருப்பவர்கள் இருக்கையில் நிலைத்திருக் கின்றார் எனில் குஷி ஏற்படும், ஆனால் சக்தி இருக்காது. ஆக நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், ஆனால் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும், மேலும் இருக்கையில் நிலைத்திருக் கின்றேனா? அல்லது சாதாரண ஸ்திதியில் கீழே வந்து விட்டேனா? என்று அடிக்கடி தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும், சோதனை செய்ய வேண்டும். யார் மற்றவர்களுக்கு வெற்றி கொடுக்கக் கூடியவர்களோ, அவர் சுயம் ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு காரியத்திலும் அவசியம் வெற்றி சொரூபமாக இருப்பார்கள், வள்ளலாக இருப்பார்கள். நான் அதிக முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கின்றேன், ஆனால் அந்த அளவிற்கு வெற்றி தென்படவில்லை அல்லது எந்த அளவிற்கு நினைவிற்கான பயிற்சி செய் கின்றோனோ அந்த அளவிற்கு வெற்றியின் அனுபவம் ஏற்படவில்லை என்று வெற்றியின் வள்ளலாக இருப்பவர்கள் ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். இதன் மூலம் இருக்கையில் நிலைத்திருப்பதற்கான விதி யதார்த்தமாக இல்லை என்பது நிரூபனம் ஆகின்றது.

ஞானம் ரமணீகரமானது. இரமணீகர அனுபவம் தானாகவே சோம்பலை விரட்டி விடும். தூக்கம் எனக்கு வராது, ஆனால் யோகாவில் அவசியம் தூக்கம் வருகிறது என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு ஏன் ஏற்படுகிறது? களைப்பு இருக்கிறது என்பது கிடையாது. ரமணீக முறையில் மற்றும் இயற்கையான ரூபத்தில் புத்தியை இருக்கையில் நிலைத்திருக்கச் செய்வது கிடையாது. ஆக ஒரு ரூபத்தில் மட்டுமின்றி வித விதமான ரூபத்தில் இருக்கையை செட் செய்யுங்கள். ஒரே பொருளை வித விதமான ரூபத்தில் மாற்றி பயன்படுத்தும் பொழுது மனம் குஷியடைகிறது. விலை உயர்ந்த உணவாக இருந்தாலும் ஒரே உணவை அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருந்தால் என்ன ஆகும்? அதே போன்று விதை ரூபமாக ஆகுங்கள், ஆனால் சில நேரம் லைட் ஹவுஸ் ரூபத்தில், சில நேரம் மைட் ஹவுஸ் ரூபத்தில், சில நேரம் மரத்தின் மேல் விதை ரூபத்தல், சில நேரம் சிருஷ்டிச் சக்கரத்தின் மேல் உயர்ந்த இடத்தில் நின்று கொண்டு அனைவருக்கும் சக்தி கொடுங்கள். வித விதமான பட்டங்களை தினமும் அடைகிறீர்கள். அந்த வித விதமான பட்டங்களை தினமும் அனுபவம் செய்யுங்கள். சில நேரங்களில் கண்ணின் மணியாக ஆகி தந்தையின் கண்களில் கலந்திருக்கின்றேன் - இந்த சொரூபத்தின் அனுபவம் செய்யுங்கள். சில நேரங்களில் நெற்றி மணியாக ஆகி, சில நேரங்களில் இதய சிம்மாசனதாரியாகி வித விதமான சொரூபங்களை அனுபவம் செய்யுங்கள். வெரைட்டியாக செய்யும் போது ரமணீ கரம் வந்து விடும். பாப்தாதா தினமும் முரளியில் வித விதமான பட்டங்களைக் கொடுக் கின்றார். ஏன் கொடுக்கின்றார்? அந்த இருக்கையில் செட் ஆகிவிடுங்கள், மேலும் இடை யிடையில் சோதனை செய்யுங்கள். ஆனால் இதை மறந்து விடுகிறீர்கள் என்பதை முன்பே கூறியிருக் கின்றேன். 6 மணி நேரம், 8 மணி நேரம் கடந்து விடுகிறது, பிறகு தான் யோசிக் கிறீர்கள். அதனால் தான் பாதி நாள் சென்று விட்டதே என்று உதாசீனம் ஆகிவிடுகிறீர்கள். இயற்கையான பயிற்சி ஏற்பட்டு விட வேண்டும், அப்போது தான் விதியை உருவாக்குபவர் அல்லது வெற்றியின் வள்ளலாக ஆகி உலக ஆத்மாக்களுக்கு நன்மை செய்ய முடியும். புரிந்ததா! நல்லது.

இன்று மதுவனத்தில் இருப்பவர்களுக்கான நாளாகும். இரட்டை அயல்நாட்டினர் தங்களது நேரத்தின் வாய்ப்பை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் மதுவனத்தில் இருப்பவர் களைப் பார்த்து குஷியடைகின்றனர். மகிமை செய்யாதீர்கள், அதிக மகிமைகளை கேட்டு விட்டோம் என்று மதுவனத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். மகிமைகளைக் கேட்டதும் மகான் களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஏனெனில் இந்த மகிமையே கேடய மாக ஆகிவிடுகிறது. எவ்வாறு யுத்தத்தில் பாதுகாப்பின் சாதனம் கேடயமாக இருக்கிறது அல்லவா! ஆக இந்த மகிமை யும் நான் எவ்வளவு உயர்ந்த மகான் என்பதை நினைவுப் படுத்துகின்றது. மதுவனம், வெறும் மதுவனம் மட்டும் அல்ல, ஆனால் மதுவனம் என்றால் உலக மேடையாகும். மதுவனத்தில் இருப்பது என்றால் உலக மேடையில் இருப்பதாகும். ஆக யார் மேடையில் இருக்கிறார்களோ, அவர்கள் எவ்வளவு கவனமாக இருப்பார்கள்! சாதாரண முறையில் யார் எந்த இடத்தில் வேண்டுமேன்றாலும் இருப்பார்கள், அந்த அளவிற்கு கவனமாகவும் இருக்கமாட்டார்கள். ஆனால் எப்போது மேடைக்கு வருகின்றார் களோ, அப்போது ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு காரியத்தின் மீது மிகுந்த கவனம் இருக்கும். எனவே மதுவனம் உலக மேடையாகும். நாலாப்புறங்களிலிருந்தும் பார்வை மதுவனத்தின் மீது இருக்கிறது. அனைவரின் கவனமும் மேடையின் மீது செல்லும் அல்லவா! ஆக மதுவனத்தில் இருப்பவர்கள் என்றால் சதா உலக மேடையில் இருப்பவர்கள்.

கூடவே மதுவனம் ஒரு விசித்திரமான மாடம் (எதிர் ஒ-க்கும் சுவர்) எவ்வாறு இன்றைய நாட்களில் பழைய உலகில் அந்த மாதிரியான இடங்கள் அடையாளமாக இருக்கிறது, அதாவது ஒரு சுவரில் கைகளை வைத்தால் அல்லது ஓசை எழுப்பினால் பத்து சுவர்களில் அந்த ஓசை வருவது போன்று கேட்கும், யாரோ ஒருவர் இந்த சுவரை அசைப்பதாக அல்லது ஓசை எழுப்பிக் கொண்டிருப்பதாக தோன்றும். ஆக மதுவனம் அப்படிப்பட்ட மதுவனத்தின் ஓசை மதுவனம் மட்டுமின்றி நாலாபுறமும் பரவி விடுகிறது. மதுவனத்தில் இருப்பவர்களுக்குக் கூட தெரியாத அளவிற்கு பரவி விடுகிறது. ஆனாலும் இது விசித்திரமாக இருக்கிறது அல்லவா! வெளியில் சென்றடைந்து விடுகிறத. ஆகையால் இதைப் பார்த்தேன், இவ்வாறு பேசினேன் என்று இருக்கக் கூடாது. ஆனால் உலகம் முழுவதும் ஓசை காற்றின் வேகத்தைப் போன்று சென்றடைந்து விடு கிறது. ஏனெனில் அனைவரின் பார்வையில், புத்தியில் சதா மதுவனம் மற்றும் மதுவனத்தின் பாப்தாதா மட்டுமே இருக்கின்றார். மதுவனத்தின் தந்தை இருக்கின்றார் எனில் மதுவனமும் வந்து விடும் அல்லவா! மதுவனத்தின் பாபா என்றால் மதுவனமும் வந்து விடும், மதுவனத்தில் பாபா மட்டுமே கிடையாது, குழந்தைகளும் இருக்கின்றீர்கள். ஆக மதுவனத்தில் வசிப்பவர் தானாகவே அனைவரின் பார்வையில் வந்து விடுகிறீர்கள். எந்த ஒரு பிராமணனிடத்திலும் கேளுங்கள், வெகு தொலைவில் இருந்தாலும் எதை நினைவில் வைத்திருக்கின்றனர்? மதுவனம் மற்றும் மதுவனத் தின் பாபா. ஆக அந்த அளவிற்கு மகத்தும் மதுவனத்தில் வசிப்பவர்களிடம் இருக்கிறது. புரிந்ததா! நல்லது.

நாலாபுறங்களிலும் அனைத்து சேவைகளிலும் ஆர்வம்-உற்சாகத்துடன் இருக்கக் கூடிய, சதா ஒரு தந்தையின் அன்பில் மூழ்கியிருக்கக் கூடிய, சதா ஒவ்வொரு காரியமும் சிரேஷ்ட விதியின் மூலம் வெற்றியை அனுபவம் செய்யக் கூடியவர்களுக்கு, சதா தன்னை விஸ்வ கல்யாணகாரி அனுபவம் செய்து ஒவ்வொரு சங்கல்பம், வார்த்தையின் மூலம் சிரேஷ்ட நன்மைக்கான பாவணை மற்றும் சிரேஷ்ட விருப்பத்தின் மூலம் சேவையில் பிசியாக இருக்கக் கூடியவர்களுக்கு, அவ்வாறு பாப்சமான் சதா களைப்பற்ற சேவாதாரி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தனிப்பட்ட சந்திப்பு:

1. தன்னை கர்மயோகி சிரேஷ்ட ஆத்மா என்று அனுபவம் செய்கிறீர்களா? கர்மயோகி ஆத்மா சதா கர்மத்தின் உடனடிப்பலன் தானாகவே அனுபவம் செய்வர். உடனடிப்பலன் - குஷி மற்றும் சக்தி ஆகும். ஆக கர்மயோகி ஆத்மா என்றால் உடனடிப்பலன் குஷி மற்றும் சக்தி அனுபவம் செய்யக் கூடியவர்கள். தந்தை சதா குழந்தைகளை உடனடிப்பலன் செய்விக்கக் கூடியவர் ஆவார். இப்போது காரியம் செய்கிறீர்கள், காரியம் செய்ததும் குஷி மற்றும் சக்தியின் அனுபவம் செய்கிறீர்கள். அப்படிப்பட்ட கர்மயோகி ஆத்மாவாக இருக் கின்றேன் என்ற நினைவின் மூலம் சதா முன்னேறிக் கொண்டே இருங்கள்.

2) எல்லையற்ற சேவை செய்வதன் மூலம் எல்லையற்ற குஷியின் அனுபவம் தானாகவே ஏற்படுகிறது அல்லவா! எல்லையற்ற தந்தை எல்லையற்ற அதிகாரிகளாக ஆக்குகின்றார். எல்லையற்ற சேவையின் பலன் எல்லையற்ற இராஜ்ய பாக்கியத்தை தானாகவே பிராப்தி யாகின்றது. எப்போது எல்லையற்ற ஸ்திதியில் நிலைத்திருந்து சேவை செய்கிறீர்களோ, எந்த ஆத்மாக்களுக்கு நிமித்தமாக ஆகிறீர்களோ, அவர்களது ஆசிர்வாதங் கள் தானாகவே ஆத்மா விற்குள் சக்தி மற்றும் குஷியின் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டே எல்லையற்ற சேவையின் பலனை அடைந்து கொண்டிருக்கின்றேன் என்ற இந்த எல்லையற்ற போதையின் மூலம் எல்லையற்ற கணக்கை சேமித்து முன்னேறிக் கொண்டே செல்லுங்கள்.

வரதானம்:
விநாடியில் தேகம் என்ற ஆடையிலிருந்து விடுபட்டு கர்ம கணக்கின் மீது வெற்றி அடையக் கூடிய சர்வசக்தி நிறைந்தவர் ஆகுக.

கர்ம கணக்கு வேகமாக இருக்கும் போது, கர்மேந்திரியங்கள் கர்ம கணக்கிற்கு வசமாகி தன் பக்கம் ஈர்க்கும் போது அதாவது எந்த நேரத்தில் அதிக வலி ஏற்படுகிறதோ, அந்த நேரத்தில் கர்மக் கணக்கை கர்மயோகமாக மாற்றி விட்டு, சாட்சியாக இருந்து கர்மேந்திரி யங்களின் மூலம் அனுப விக்கக் கூடியவர்கள் தான் சர்வசக்தி நிறைந்த அஷ்ட இரத்தின வெற்றியாளர் என்று கூறப்படு கின்றார். இதற்கு நீண்ட காலம் தேகம் என்ற ஆடையிலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய பயிற்சி இருக்க வேண்டும். அந்த ஆடை உலகின் அல்லது மாயாவின் கவர்ச்சியில் இறுக்கமாக அதாவது ஈர்க்கக் கூடியதாக இருக்கக் கூடாது, அப்போது தான் நீக்க முடியும்.

சுலோகன்:
அனைவரிடமிருந்தும் மரியாதை பிராப்தியாக அடைவதற்கு பணிவானவராக ஆகுங்கள். பணிவு தான் மகான் நிலையின் அடையாளமாகும்.