12.11.23 காலை முரளி
ஓம் சாந்தி 22.03.96 பாப்தாதா,
மதுபன்
பிராமண வாழ்க்கையின் தனித்தன்மை - அனைத்து கேள்விகளையும் கடந்து
சதா மகிழ்ச்சியாக இருப்பது
இன்று அனைத்து பிராப்திகளின் வள்ளல் பாப்தாதா தனது அனைத்து
பிராப்தி சொரூப குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
பாப்தாதாவின் மூலம் அதிக பிராப்திகள் ஏற்பட்டி ருக்கிறது. அதை
வர்ணித்தால் மிக அதிகமாக இருக்கும். ஆனால் நீண்ட பட்டியல்
கூறுவதற்குப் பதிலாக இந்த பிராமண வாழ்க்கையில் எந்த குறையும்
இல்லை என்று வர்ணிக்கிறீர்கள். ஆக பாப்தாதா பார்த்துக்
கொண்டிருக்கின்றார் - பிராப்திகள் அதிகமாக இருக்கின்றன, நீண்ட
பட்டியல் இருக்கிறது அல்லவா! யாரிடம் அனைத்து பிராப்திகள்
இருக்கின்றனவோ அவர்களது அடையாளம் நடைமுறை வாழ்க்கையில் என்ன
தென்படும் என்பதை அறிவீர்கள் அல்லவா? அனைத்து பிராப்திகளின்
அடையாளம் - சதா அவர்களது முகம் மற்றும் நடத்தையில் மகிழ்ச்சி
என்ற தனித் தன்மை தென்படும். தனித்தன்மை தான் ஒருவரை
ஈர்க்கின்றது. ஆக அனைத்து பிராப்திகளின் அடையாளம் - மகிழ்ச்சி
என்ற தனித்தன்மையாகும், அதை திருப்தி என்றும் கூறுகின்றோம்.
ஆனால் இன்றைய நாட்களில் முகத்தில் எந்த மகிழ்ச்சி சதா தென்பட
வேண்டுமோ அது தென்படுவது இல்லை. சில நேரம் மகிழ்ச்சி, சில நேரம்
கேள்வி. இரண்டு வகைகள் இருக்கிறது - ஒன்று சிறிய பிரச்சனை வந்து
விட்டால் ஏன், எதற்கு, எப்படி, எப்பொழுது? என்ற கேள்வி எழுந்து
விடுகிறது. பிராப்தி சொரூபமானவர்கள் சதா மகிழ்ச்சியாக
இருப்பார்கள். அவர்களுக்கு ஒருபோதும் எந்த விசயத்திலும் கேள்வி
எழாது. ஏனெனில் அனைத்து பிராப்திகளிலும் நிறைந்தவர்களாக
இருக்கின்றனர். எனவே ஏன், எதற்கு என்ற குழப்பம் இருக்கும்,
மேலும் யார் நிறைந்திருக்கிறார்களோ அவர்களிடம் குழப்பம்
இருக்காது. யார் காலியாக இருக்கிறார்களோ அவர்களிடம் குழப்பம்
இருக்கும். எனவே நான் சதா மகிழ்ச்சியாக இருக்கிறேனா? என்று
தனக்குள் கேளுங்கள். அவ்வபோது கிடையாது, சதா இருக்கிறேனா? 10
ஆண்டுகளாக இருப்பவர்கள் சதா இருப்பார்களா? இல்லையா? ஆம் என்று
கூறவில்லை, யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒருவேளை மகிழ்ச்சி
குறைகிறது என்றால் அதற்குக் காரணம் பிராப்திகளில் குறை
இருக்கிறது. பிராப்திகளில் குறையிருப்பதற்குக் காரணம் ஏதாவது
ஆசை இருக்கிறது. ஆசைக்கு அஸ்திவாரம் பொறாமை மற்றும்
அப்பிராப்தியாகும். மிக சூட்சும ஆசைகள் அப்பிராப்தியின் பக்கம்
ஈர்த்து விடுகிறது. பிறகு ராயல் ரூபத்தில் எனக்கு ஆசை கிடையாது,
ஆனால் அவ்வாறு நடந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகிறீர்கள்.
ஆனால் எங்கு அல்பகால ஆசை இருக்கிறதோ, அங்கு நல்லது என்பது
இருக்கவே முடியாது. எனவே ஞான வாழ்க்கையில் ஞானத்தின் ராயல் ரூப
ஆசைகள், அது வெளிப்படையான ஆசைகளாக இருக்கலாம், என்று
சோதியுங்கள். மேலோட்டமான ஆசைகள் அழிந்து விட்டது, ஆனால் ராயல்
ரூப ஆசைகள் சூட்சும ரூபத்தில் இருக்கிறது. அதை சோதியுங்கள்.
ஏனெனில் இப்போது பாப்தாதா அனைத்து குழந்தைகளையும் பாப்சமான்
சம்பன்னம், சம்பூர்ணம் ஆக்குவதற்கு விரும்புகின்றார். யார் மீது
அன்பு இருக்கிறதோ, அவர்களுக்கு சம்பன்னம் ஆவது ஒன்றும் கடின
விசயம் கிடையாது.
ஆக பாப்தாதாவின் மீது அனைவருக்கும் மிகுந்த அன்பு இருக்கிறதா?
அல்லது அன்பு இருக்கிறதா? (மிகுந்த அன்பு இருக்கிறது)
உறுதியாகவா? அன்பானவர்களுக்காக தியாகம் செய்வது அல்லது மாற்றிக்
கொள்வது என்ன பெரிய விசயம்? (கிடையாது). எனவே முழு தியாகம்
செய்திருக் கிறீர்களா? தந்தை என்ன கூறுகின்றாரோ, தந்தை என்ன
விரும்புகின்றாரோ அதை செய்தீர்களா? சதா செய்தீர்களா?
அவ்வப்பொழுது செய்வது என்று இருந்தால் உதவாது. சதா
காலத்திற்கும் இராஜ்ய பாக்கியம் அடைய வேண்டுமா? அல்லது
அவ்வபொழுதா? சதா காலத்திற்கும் விரும்பு கிறீர்களா தானே? எனவே
சதா மகிழ்ச்சி. வேறு எந்த உணர்வும் முகம் மற்றும் நடத்தையில்
தென்படக்கூடாது. இன்று சகோதரி அல்லது சகோதரரின் மூட் வேறு
விதமாக இருக்கிறது என்று அவ்வபோது கூறுகிறீர்கள் அல்லவா! இன்று
என்னுடைய மூட் சரியில்லை என்று நீங்களும் கூறுகிறீர்கள். இதை
என்னவென்று கூறுவது? சதா மகிழ்ச்சி என்று கூற முடியுமா? சில
குழந்தைகள் மகிமையின் ஆதாரத்தில் மகிழ்ச்சி அனுபவம்
செய்கின்றனர். ஆனால் அந்த மகிழ்ச்சி அல்பகாலத்திற்கானது. இன்று
இருக்கும், சிறிது நேரத்திற்குப் பிறகு அழிந்து விடும். எனவே
எனது மகிழ்ச்சி மகிமையின் ஆதாரத்தில் இல்லை தானே? என்பதையும்
சோதியுங்கள். இன்றைய நாட்களில் கட்டிடம் கட்டும் பொழுது
சிமென்ட்டின் கூட மணல் அதிகமாக சேர்த்து விடுவர், கலப்படம்
செய்வர். இங்கும் அஸ்திவாரத்தில் கலப்படம் செய்கிறீர்கள்,
யதார்த்தம் கிடையாது. சிறிது பிரச்சனை வந்தால் அல்லது ஏதாவது
குழப்பம் ஏற்பட்டால் அது மகிழ்ச்சியை அழித்து விடுகிறது.
இப்படிப்பட்ட அஸ்திவாரம் கிடையாது தானே?
பாப்தாதா முன்பே கூறியிருக்கின்றார், இப்பொழுது மீண்டும்
கோடிட்டு காண்பிக்கின்றார் - ராயல் ரூப ஆசையின் சொரூபம் மரியாதை
மற்றும் கௌரவம். சேவையை ஆதாரம் ஆக்கிக் கொள்கிறீர்கள், சேவையில்
மரியாதை வேண்டும். ஆனால் யார் மரியாதை வேண்டும் என்பதற்காக சேவை
செய்கிறார்களோ, அவர்களுக்கு இவர் நல்ல சேவாதாரி, மிக நன்றாக
ஈர்க்கக் கூடியவர் என்ற மரியாதை அல்பகாலத்திற்கு கிடைத்து
விடுகிறது. ஆனால் மரியாதை கிடைக்கும் என்பதற்காக சேவை
செய்பவர்கள் உயர்ந்த பதவி அடைபவர்களின் பெயர் பட்டியலில்
கடைசிக்குச் சென்று விடும். ஏனெனில் பழுக்காத பழத்தை சாப்பிட்டு
விடுகின்றனர். இப்பொழுது சேவை செய்கிறீர்கள், இப்பொழுதே மரியாதை
அடைகிறீர்கள் எனில் இது தான் பழுக்காத பழமாகும். நான் அதிக சேவை
செய்தேன், அனைவரையும் விட அதிக சேவைக்கு நான் நிமித்தமாக
இருக்கிறேன் என்று ஆசையும் மரியாதையின் ஆதாரத்தில் சேவை
ஆகிவிடுகிறது. பழுக்காத பழம் சாப்பிடக் கூடியவர்கள் இவர்கள்
என்று தான் கூறலாம். பழுக்காத பழத்தில் சக்தி இருக்குமா என்ன?
அல்லது சேவை செய்தீர்கள், சேவையில் ரிசல்ட்டில் எனக்கு மரியாதை
கிடைக்க வேண்டும். இது மரியாதை கிடையாது, அபிமானம் ஆகும். எங்கு
அபிமானம் இருக்கிறதோ, அங்கு மகிழ்ச்சி இருக்க முடியாது. மிக
உயர்ந்த கௌரவம் பாப்தாதாவின் உள்ளத்தின் கௌரவம், அதை
பிராப்தியாக அடையுங்கள். ஆத்மாக்களின் உள்ளத்தில் கௌரவம்
கிடைத்தாலும் கூட ஆத்மா சுயம் அடையக் கூடியது, மாஸ்டர் வள்ளல்
ஆகும், வள்ளல் அல்ல. எனவே கௌரவம் வேண்டும் என்றால் சதா
பாப்தாதாவின் உள்ளத்தில் தனது கௌரவத்தை பிராப்தியாக அடையுங்கள்.
இது போன்ற ராயல் இச்சைகள் பிராப்தி சொரூபம் ஆக விடாது. அதனால்
தான் மகிழ்ச்சி என்ற தனித்துவம் சதா முகம் மற்றும் நடத்தையில்
தென்படுவது கிடையாது. ஏதாவது பிரச்சனையின் பொழுது மகிழ்ச்சியின்
மூட் மாறுகிறது எனில் சதா கால மகிழ்ச்சி என்று கூற முடியாது.
பிராமண வாழ்க்கையின் மூட் சதா மகிழ்ச்சி (சியர்புல்) மற்றும்
கவனம் (கேயர்புல்). மூட் மாறக் கூடாது. பிறகு ராயல் ரூபத்தில்
இன்று எனக்கு அதிக ஏகாந்தம் தேவை என்று கூறுகிறீர்கள். ஏன் தேவை?
ஏனெனில் சேவையில் அல்லது குடும்பத்திலிருந்து விலகி இருக்க
விரும்புகிறீர்கள், பிறகு அமைதி வேண்டும், ஏகாந்தம் வேண்டும்
என்று கூறுகிறீர்கள். இன்று என்னுடைய மூட் இவ்வாறு இருக்கிறது.
எனவே மூட் மாற்றிக் கொள்ளா தீர்கள். காரணம் எது
வேண்டுமென்றாலும் இருக்கட்டும், ஆனால் நீங்கள் காரணத்தை
நிவாரணம் செய்யக் கூடியவர்களா? அல்லது காரணத்தில்
வரக்கூடியவர்களா? நிவாரணம் செய்யக் கூடியவர் கள். என்ன
ஒப்பந்தம் எடுத்திருக் கிறீர்கள்? ஒப்பந்தக்காரர்கள் அல்லவா?
ஆக என்ன ஒப்பந்தம் எடுத்திருக்கிறீர்கள்? இயற்கையின் நிலையையும்
மாற்றுவோம். இயற்கையையும் மாற்ற வேண்டும் அல்லவா? ஆக இயற்கையை
மாற்றக் கூடியவர்கள் தன்னுடைய மன நிலையை மாற்ற முடியாதா? மனநிலை
மாறுகிறதா இல்லையா? அவ்வபோது மாறுகிறதா? பிறகு கடற் கரைக்குச்
சென்று அமர வேண்டும் என்று கூறுகிறீர்கள், ஞானக் கடலிடம் அல்ல,
ஸ்தூல கடற்கரைக்கு. அயல்நாட்டினர் இவ்வாறு செய்கின்றனர் அல்லவா?
அல்லது இன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை தனிமையாக
தோன்றுகிறது என்று கூறுவீர்களா? தந்தையின் இணைந்த ரூபம் எங்கு
சென்றது? ஒதுக்கி விட்டீர்களா? இணைந்த நிலையிலிருந்து பிரிந்து
விடுகிறீர்கள் எனில் இதை அன்பு என்று கூற முடியுமா? எனவே எந்த
விதமான மனநிலை - மூட் ஆப் ஆவது என்பது மிகப் பெரிய விசயம்.
ஆனால் மூட் மாறுவதும் கூட சரியல்ல. மூட் ஆப் ஆகக் கூடியவர்கள்
விதவிதமான விளையாட்டு காண்பிக்கின்றனர். பாப்தாதா
பார்க்கின்றார், பெரியவர்களுக்கு அதிக விளையாட்டு
காண்பிக்கின்றனர், தன் கூட இருப்பவர்களுக்கும் மிக அதிக
விளையாட்டு காண்பிக்கின்றனர். இப்படிப்பட்ட விளையாட்டு
விளையாடாதீர்கள். ஏனெனில் அனைத்து குழந்தைகளின் மீதும்
பாப்தாதாவிற்கு அன்பு இருக்கிறது. நிமித்தமாக இருக்கும் விசேஷ
ஆத்மாக்கள் பாப்சமான் ஆக வேண்டும், மற்றவர்கள் ஆனாலும் சரி, ஆகா
விட்டாலும் சரி என்று பாப்தாதா விரும்பவில்லை. அனைவரும்
சம்பன்னம் ஆகியே தீர வேண்டும். இதுவே பாப்தாதாவின் அன்பாகும்.
அன்பிற்கு கைமாறு செய்ய வருகிறதா? அல்லது குறும்பின் மூலம்
கைமாறு செய்கிறீர்களா? சில நேரம் குறும்பு காண்பிக்கிறீர்கள்,
சில நேரம் சமம் ஆகி காண்பிக்கிறீர்கள். இப்பொழுது அந்த நேரம்
சமாப்தி ஆகிவிட்டது.
இப்பொழுது டைமண்ட் ஜுப்ளி கொண்டாடுகிறீர்கள் அல்லவா? 60
ஆண்டுகளுக்குப் பிறகு வானபிரஸ்தம் ஆரம்பமாகி விடுகிறது. எனவே
இப்பொழுது சிறு குழந்தை கிடையாது. இப்பொழுது வானபிரஸ்தம் அதாவது
அனைத்தையும் அறிந்தவர்கள், அனுபவி ஆத்மாக்கள், ஞானம்
நிறைந்தவர்கள், சக்திசாலியாக, வெற்றியாளர்களாக இருக்க வேண்டும்.
எவ்வாறு சதா ஞானம் நிறைந்தவர்களாக இருக்கிறீர்களோ, அதே போன்று
சக்திசாலியாக மற்றும் வெற்றி யாளர்களாகவும் இருக்கிறீர்கள் தானே?
அவ்வபொழுது வெற்றி கிடைப்பதற்கான காரணம் என்ன? வெற்றி என்பது
உங்கள் அனைவரின் பிறப்புரிமையாகும். இவ்வாறு கூறுகிறீர்கள் தானே?
வெறுமனே கூறுகிறீர்களா? அல்லது ஏற்றுக் கொள்கிறீர்களா? பிறகு
ஏன் வெற்றி கிடைப்பது கிடையாது, காரணம் என்ன? தனது பிறப்புரிமை
எனில் அனுபவி ஆவதில் ஏன் குறை ஏற்படுகிறது? காரணம் என்ன?
பாப்தாதா பார்க்கின்றார் - மெஜாரிட்டி ஆத்மாக்கள் தனது பலவீன
எண்ணங்களை முன் கூட்டியே வெளிப்படுத்துகின்றனர், கிடைக்குமா,
கிடைக்காதா என்று தெரியவில்லை. தனது இந்த பலவீன எண்ணங்கள்
மகிழ்ச்சியானவர்களாக அல்ல, கேள்வியாளர்களாக ஆக்கி விடுகிறது.
நடக்குமா? நடக்காதா? என்ன நடக்கும்? தெரியவில்லை இந்த எண்ணங்கள்
சுவராக ஆகிவிடுகிறது. வெற்றி அந்த சுவருக்குள் மறைந்து
விடுகிறது. நிச்சயபுத்தி வெற்றி என்பது உங்களது சுலோகன் அல்லவா!
இந்த சுலோகன் இப்போதைக்கானது, எதிர்காலத்திற்கானது அல்ல எனில்
சதா மகிழ்ச்சியாளராக இருக்க வேண்டுமா அல்லது கேள்வியாளர்களாக
இருக்க வேண்டுமா? ஆக மாயை தனது பலவீன எண்ணங்கள் என்ற வலை
விரித்து விடுகிறது. மேலும் தனது வலை யிலேயே மாட்டிக்
கொள்கிறீர்கள். நான் வெற்றியாளன் தான் - இதன் மூலம் பலவீன வலை
சமாப்தி செய்யுங்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள், சமாப்தி
செய்யுங்கள். சமாப்தி செய்வதற்கான சக்தி இருக்கிறதா? மெது
மெதுவாக செய்யாதீர்கள், உடனடியாக விநாடியில் இந்த வலையை
அதிகப்படுத்தி விடாதீர்கள். ஒருமுறை இந்த வலையில் மாட்டிக்
கொண்டால் பிறகு வெளியேறுவது மிகவும் கடினமாகி விடும். வெற்றி
என்னுடைய பிறப்புரிமை. இந்த பிறப்புரிமை, பரமாத்ம பிறப்புரிமையை
யாரும் அபகரிக்க முடியாது. அந்த அளவிற்கு நிச்சயபுத்தி
யுடையவர்கள் எளிதாக மற்றும் இயற்கையாகவே சதா
மகிழ்ச்சியாளர்களாக இருப்பார்கள். உழைப்பு செய்ய வேண்டிய
அவசியமிருக்காது.
தோல்விக்கு மற்றொரு காரணம் என்ன? நேரம், சங்கல்பம், செல்வம்
அனைத்தையும் வெற்றி ஆக்குங்கள் என்று நீங்கள் மற்றவர்களுக்கும்
கூறுகிறீர்கள் ஆக வெற்றியாக்குவது என்றால் வெற்றி அடைவதாகும்.
வெற்றியாக்குவது தான் வெற்றி ஆதாரமாகும். வெற்றி கிடைக்கவில்லை
எனில் கண்டிப்பாக ஏதாவது ஒரு பொக்கிஷம் வெற்றி ஆக்கவில்லை,
அதனால் தான் வெற்றி கிடைக்கவில்லை. பொக்கிஷங்களின் பட்டியலை
அறிவீர்கள் அல்லவா! எனவே எந்த பொக்கிஷம் வெற்றி ஆகவில்லை, வீண்
ஆக்கினேன்? என்று சோதியுங்கள். பிறகு வெற்றி தானாகவே கிடைத்து
விடும். இது ஆஸ்தியாகவும் இருக்கிறது, வரதானமாகவும் இருக்கிறது
- வெற்றி ஆக்குங்கள் மற்றும் வெற்றி அடையுங்கள். வெற்றி
ஆக்குவதற்கு வருகிறதா இல்லையா? வெற்றி அடை கிறீர்களா? வெற்றி
ஆக்குவது விதையாகும், வெற்றி அடைவது பழமாகும். விதை நன்றாக
இருந்து பழம் கிடைக்கவில்லை என்று கூறவே முடியாது. வெற்றி
ஆக்குவது என்ற விதையில் சிறிது குறை இருப்பதால் வெற்றி என்ற
பழம் கிடைக்கவில்லை. ஆக என்ன செய்ய வேண்டும்? சதா மகிழ்ச்சி
என்ற தனித்துவத்தில் இருங்கள். மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம்
மிக நல்ல அனுபவம் செய்வீர்கள். மகிழ்ச்சியாக இருப்பவர்களைப்
பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கிறது! அவர்களது தொடர்பில்
இருப்பது, அவர்களுடன் உரையாடல் செய்வது, அமர்வது எவ்வளவு
நன்றாக இருக்கிறது. மேலும் ஒருவர் கேள்வி கேட்பவர் வந்து
விட்டால் துன்பத்தில் வந்து விடுகிறீர்கள். எனவே என்ன ஆக
வேண்டும்? என்ற இலட்சியம் வையுங்கள். கேள்வியாளர் அல்ல,
மகிழ்ச்சியாளர்.
இன்று சீசனின் கடைசி நாளாகும். கடைசியில் என்ன செய்வார்கள்?
ஏதாவது யக்ஞம் படைக் கிறார்கள் எனில் கடைசியில் என்ன
செய்வார்கள்? சுவாஹா செய்வார்கள். ஆக நீங்கள் என்ன செய்வீர்கள்?
கேள்விகளை சுவாஹா செய்யுங்கள். இது ஏன் நடந்தது? இது ஏன்
நடக்கிறது? கிடையாது. ஞானம் நிறைந்தவர்கள் எனில் ஏன், எதற்கு
என்பது இருக்கக் கூடாது. ஆக இன்று இந்த வீண் கேள்விகள் சுவாஹா.
உங்களது நேரமும் சேமிப்பாகி விடும், மற்றவர்களது நேரமும்
சேமிப்பாகி விடும். தாதிகளின் நேரமும் இதில் வீண்ணாகிறது - இது
ஏன், இது எதற்காக, இது எப்படி? எனவே தனது மற்றும் பிறரது
நேரத்தை மிச்சப்படுத்துங்கள். சேமிப்பு கணக்கை
அதிகப்படுத்துங்கள். பிறகு 21 பிறவிகளுக்கு ஓய்வாக
சாப்பிடுங்கள், குடியுங்கள், மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அங்கு
சேமிக்க வேண்டிய அவசியமிருக்காது. ஆக சுவாஹா செய்வீர்களா?
அல்லது யோசிப் பீர்களா? யோசிக்க வேண்டுமா, யோசித்துக்
கொள்ளுங்கள். இது எப்படி சாத்திய மாகும், இது செய்ய முடியுமா,
முடியாதா? என்று தனக்குள் கேட்டுக் கொள்ளுங்கள். இவ்வாறு ஒரு
விநாடியில் யோசித்துக் கொள்ளுங்கள், உறுதியான காரியம் செய்து
விடுங்கள். தனக்குள் எவ்வளவு கேள்விகள் கேட்க முடியுமோ, அதை ஒரு
விநாடி யில் கேட்டுக் கொள்ளுங்கள். கேட்டு கொண்டீர்களா?
சுவாஹாவும் செய்து விட்டீர்களா? அல்லது கேள்வி மட்டும் கேட்டுக்
கொண்டீர்களா? எதிர்காலத்திற்காக கேள்விகள் சமாப்தி. (ஒரு விநாடி
அமைதிக்குப் பிறகு) அழித்து விட்டீர்களா? (ஆம்) ஆம் என்று
சாதாரணமாக கூறி விடக் கூடாது. கேள்வி கேட்பது என்றால்
குழப்பமடைவது மற்றும் குழப்புவது என்ற அனுபவம் இருக்கிறது.
நன்றாக அனுபவம் இருக்கிறது தானே? எனவே தனது நிச்சயம் மற்றும்
பிறப்புரிமையின் கௌரவத்தில் இருந்தால் குழப்பம் ஏற்படாது. இந்த
கௌரவத்திலிருந்து தூர விலகும் போது தான் குழப்பம் அடைகிறீர்கள்.
புரிந்ததா! நல்ல முறையில் புரிந்து கொண்டீர்களா? இங்கு ஆம்
என்று கூறிவிட்டு அயல்நாடு சென்ற பின் கடினம் என்று கூறுவீர்களா?
இவ்வாறு இருக்கக் கூடாது. நல்லது.
ஒரு விநாடியில் அசரீரி ஆக வேண்டும் - இந்த பாடம் உறுதியாக
இருக்கிறதா? விஸ்தாரத்தில் சென்றாலும் சாரத்தில் நிலைத்து
விடுங்கள். (பாப்தாதா டிரில் செய்வித்தார்) நல்லது. இந்த
பயிற்சியை சதா செய்து கொண்டே இருங்கள்.
நாலாபுறங்களிலும் அனைத்து கேள்விகளையும் பரிவர்த்தன் செய்யக்
கூடிய, சதா மகிழ்ச்சி என்ற தனித்துவத்தும் உடைய சிரேஷ்ட
ஆத்மாக்களுக்கு, சதா தனது வெற்றி மற்றும் பிறப்புரிமையின்
நினைவில் இருக்கக் கூடிய, நினைவு சொரூப விசேஷ ஆத்மாக்களுக்கு,
சதா வெற்றியாக்கி எளிதாக வெற்றியை அனுபவம் செய்யக்
கூடியவர்களுக்கு, தந்தையின் நெருங்கிய ஆத்மாக் களுக்கு
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே. 10 ஆண்டுகள்
குழந்தையாக இருக்கும் இரட்டை அயல்நாட்டினர்களுக்கு விசேஷமான
வாழ்த்துக்கள் மற்றும் அன்பு நினைவுகள்.
தாதிகளிடம்:
பரிவாரத்தின் கிரீடமாகவும், நிமித்தமாகவும் இருக்கும்
ஆத்மாவிற்கு பாப்தாதா சதா வாழ்ந்து கொண்டே இருங்கள், பறந்து
கொண்டே இருங்கள் மற்றும் பறக்க வைத்துக் கொண்டே இருங்கள் என்ற
சங்கல்பம் சதா இருக்கிறது. தனது யோக தபஸ்யா சக்தியின் மூலம்
சரீரத்தை நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்களை விட
பாப்தாதாவிற்கு அதிக அக்கரை இருக்கிறது. ஆகையால் நேரத்தின்
அனுசாரம் வேகமாக செல்லாமல் ஓய்வாக சென்று வாருங் கள். ஏனெனில்
உலக சூழ்நிலையும் வேகமாக மாறிக் கொண்டி ருக்கிறது. ஆகையால் சேவை
செய்ய வேண்டாம் என்று பாப்தாதா கூறவில்லை. ஆனால் சமநிலையுடன்
இருங்கள். அனைவரின் உயிரும் உங்களது சரீரத்தில் இருக்கிறது.
சரீரம் நன்றாக இருந்தால் தான் சேவையும் நன்றாக நடைபெறும்.
ஆகையால் நன்றாக சேவை செய்யுங்கள், ஆனால் அதிகம் இழுத்துச்
செல்ல வேண்டாம், குறைவாக இழுத்துச் செல்லுங்கள். அதிகம்
இழுத்தால் என்ன வாகும்? பேட்டரி சுலோ ஆகிவிடும். ஆகையால்
இப்பொழுதிலிருந்தே சமநிலையுடன் இருப்பது அவசியமாகும். இன்று
ஆண்டு செய்து விடலாம், அடுத்த ஆண்டு என்னவாகும் தெரியவில்லை
என்று யோசிக்காதீர்கள். வாழ வேண்டும் மற்றும் பறக்க வைக்க
வேண்டும். இப்பொழுது உங்களது பாகம் இருக்கிறது தானே? எனவே தனது
பாகத்தை புரிந்து கொண்டு இழுத்துச் செல்லுங்கள், ஆனால்
சமநிலையுடன் இழுத்துச் செல்லுங்கள். வேகத்தை
அதிகப்படுத்தாதீர்கள், இரண்டு நாட்கள் இங்கு இருங்கள்.
மூன்றாவது நாள் இங்கு என்று இருக்காதீர்கள். இப்பொழுது
அப்படிப்பட்ட நேரம் கிடையாது. அப்படிப்பட்ட நேரம் வரும் பொழுது
ஒரே நாளில் நான்கு - நான்கு இடங்களுக்கும் செல்ல
வேண்டியிருக்கும், ஆனால் இப்பொழுது கிடையாது. நல்லது.
வரதானம்:
தெய்வீக குணங்களை வரவேற்பதன் மூலம் அனைத்து அவகுணங்களையும்
அர்ப்பணிக்கக் கூடிய திருப்தி ஆத்மா ஆகுக.
தீபாவளியன்று விசேஷமாக சுத்தம் மற்றும் வருமானத்தில் கவனம்
செலுத்துவர். அதே போன்று நீங்களும் அனைத்து விதத்திலும் சுத்தம்
மற்றும் வருமானத்திற்கான இலட்சியம் வைத்து திருப்தி ஆத்மா
ஆகுங்கள். திருப்தியின் மூலம் தான் அனைத்து தெய்வீக
குணங்களையும் வரவேற்க முடியும். பிறகு அவகுணங்கள் தானாகவே
அர்ப்பணமாகி விடும். உள்ளுக்குள் இருக்கும் பலவீனங் கள்,
குறைகள், பலமற்ற நிலை, மிருதுவான நிலை சமாப்தி செய்து இப்பொழுது
புது கணக்கை ஆரம்பியுங்கள். புது சன்ஸ்காரங்களின் புது ஆடை
அணிந்து உண்மையான தீபாவளி கொண்டாடுங்கள்.
சுலோகன்:
தந்தையின் கட்டளைப்படி நடப்பவர்களாக இருந்தீர்கள் எனில் குப்த
ஆசிர்வாதங்கள் தகுந்த நேரத்தில் உதவி செய்து கொண்டே இருக்கும்.