13.01.2021    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்களது வாயில் எப்பொழுதும் ஞான இரத்தினங்கள் வெளிப்பட வேண்டும், உங்களது முகம் சதா புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.

 

கேள்வி:

எந்த குழந்தைகள் பிராமண வாழ்க்கையில் ஞான தாரணை செய்திருக்கிறார்களோ அவர்களது அடையாளம் என்ன?

 

பதில்:

1) அவர்களது நடத்தை தேவதைகளைப் போன்று இருக்கும், அவர்களிடத்தில் தெய்வீக குணங்களின் தாரணை இருக்கும். 2) அவர்களுக்கு ஞான சிந்தனை செய்யும் பயிற்சி இருக்கும், அவர்கள் ஒருபொழுதும் அசுர விசயங்கள் அதாவது அசுத்தங்களை சிந்திக்க மாட்டார்கள். 3) துஷ்பிரயோகம் செய்வது, அவதூறு செய்வது அவர்களது வாழ்க்கையில் முடிவடைந்து விடும். 4) அவர்களது முகம் எப்பொழுதும் புன்முறுவலுடன் இருக்கும்.

 

ஓம்சாந்தி.

தந்தை வந்து ஞானம் மற்றும் பக்தி பற்றி புரிய வைக்கின்றார். பக்தியின் மூலம் சத்கதி கிடைக்காது என்பதை குழந்தைகள் புரிந்து கொண்டீர்கள். மேலும் சத்யுகத்தில் பக்தி இருக்காது. ஞானமும் சத்யுகத்தில் அடையமாட்டீர்கள். கிருஷ்ணர் பக்தியும் செய்வது கிடையாது, ஞான முரளி வாசிப்பதும் கிடையாது. முரளி (புல்லாங்குழல்) என்றால் ஞானம் கொடுப்பதாகும். முரளியில் மாயாஜாலம் இருக்கிறது என்ற மகிமையும் இருக்கிறது அல்லவா! ஆக அவசியம் ஏதாவது மாயாஜாலம் இருக்கும் அல்லவா! சாமானியர்கள் கூட புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முரளியில் (புல்லாங்குழலில்) ஞானம் என்ற மாயாஜாலம் இருக்கிறது. அஞ்ஞானத்தை மாயாஜாலம் என்று கூறுவது கிடையாது அல்லவா! முரளி தான் மாயாஜாலம் என்று கூறுகிறோம். ஞானத்தின் மூலம் மனிதரிலிருந்து தேவதைகளாக ஆகிறீர்கள். சத்யுகம் என்பது ஞானத்தின் ஆஸ்தி ஆகும். அங்கு பக்தி கிடையாது. பக்தி துவாபர யுகத்தில் ஆரம்பமாகிறது, அந்த கால கட்டத்தில் தான் தேவதைகள் மனிதர்களாக ஆகிவிடுகின்றனர். மனிதர்கள் விகாரிகள் என்றும், தேவதைகள் விகாரமற்றவர்கள் என்றும் கூறப்படுகின்றனர். தேவதைகளின் உலகம் தூய்மையான உலகம் என்று கூறப்படுகிறது. இப்பொழுது நீங்கள் தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஞானம் என்று எது கூறப்படுகிறது? ஒன்று தனது மற்றும் தந்தையின் அறிமுகம், பிறகு சிருஷ்டியின் முதல், இடை, கடையின் விசயம் தான் ஞானம் என்று கூறப்படுகிறது. ஞானத்தின் மூலம் சத்கதி ஏற்படுகிறது. பிறகு பக்தி ஆரம்பமாகி விடும் பொழுது அது கீழே இறங்கும் கலை என்று கூறப்படுகிறது. ஏனெனில் பக்தி என்றால் இரவு, ஞானம் என்றால் பகல் என்று கூறப்படுகிறது. இது யாருடைய புத்தியில் வேண்டுமென்றாலும் அமர்ந்து விடும், ஆனால் தெய்வீக குணங்கள் தாரணை செய்வது கிடையாது. தெய்வீக குணங்கள் இருக்கிறது எனில், ஞான தாரணை உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஞான தாரணை உள்ளவர்களின் நடத்தை தேவதைகளைப் போன்று இருக்கும். குறைவாக தாரணை செய்பவர்களின் நடத்தையில் கலப்படம் இருக்கும். தாரணை இல்லையெனில் அவர்கள் குழந்தைகளே அல்ல. மனிதர்கள் தந்தையை எவ்வளவு நிந்தனை செய்கின்றனர்! பிராமண குலத்திற்கு வருகிறீர்கள் எனில் திட்டுவது, நிந்தனை செய்வது நின்று விடுகிறது. நீங்கள் ஞானம் அடைகிறீர்கள், அதை சிந்தனை செய்வதன் மூலம் அமிர்தம் கிடைக்கும். ஞான சிந்தனையே செய்யவில்லையெனில் வேறு என்ன சிந்தனை செய்வீர்கள்? அசுர சிந்தனை. அதன் மூலம் அசுத்தம் தான் வெளிப்படும். இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய மாணவர்களாக இருக்கிறீர்கள். மனிதனிலிருந்து தேவதை ஆகக் கூடிய கல்வியை கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்கள். தேவதைகள் இந்த கல்வியை கற்பிக்கமாட்டார்கள். தேவதைகள் ஒருபொழுதும் ஞானக் கடலானவர்கள் என்று கூறப்படுவது கிடையாது. ஞானக் கடல் என்று ஒரே ஒருவர் தான் கூறப்படுகின்றார். ஞானத்தின் மூலம் தான் தெய்வீக குணங்களும் தாரணை ஆகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு கிடைக்கும் ஞானம் சத்யுகத்தில் இருக்காது. இந்த தேவதைகளிடத்தில் தெய்வீக குணங்கள் இருக்கிறது. சர்வ குணங்கள் நிறைந்தவர்கள் ... என்று நீங்கள் மகிமையும் செய்கிறீர்கள். ஆக இப்பொழுது நீங்கள் இவ்வாறு ஆக வேண்டும். எனக்குள் அனைத்து தெய்வீக குணங்களும் உள்ளதா? அல்லது ஏதாவது அசுர அவகுணங்கள் உள்ளனவா? என்று தனக்குள் கேளுங்கள். ஒருவேளை அசுர அவகுணங்கள் இருந்தால், அவைகளை நீக்கி விட வேண்டும். அப்பொழுது தான் தேவதை என்று கூற முடியும். இல்லையெனில் குறைந்த பதவி தான்அடைவீர்கள்.

 

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீக குணங்களை தாணை செய்கிறீர்கள். மிகவும் நல்ல நல்ல விசயங்களை கூறுகிறீர்கள். இது தான் புருஷோத்தம சங்கமயுகம் என்று கூறப்படுகிறது, இந்த நேரத்தில் தான் நீங்கள் புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக சூழ்நிலையும் மிக நன்றாக இருக்க வேண்டும். வாயில் எந்த சீ சீ விசயங்களும் வெளிப்படக் கூடாது. இல்லையெனில் இவர்கள் குறைந்த பதவியடையக் கூடியவர்கள் என்று கூறப்படுவர். பேச்சுகள் மற்றும் சூழ்நிலையின் மூலம் உடனேயே தெரிந்து விடுகிறது. உங்களது முகம் சதா புன்முறுவலுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் ஞானம் இல்லை என்று தான் கூறப்படும். வாயில் சதா ரத்தினங்கள் வெளிப்பட வேண்டும். இந்த லெட்சுமி நாராயணனைப் பாருங்கள் எவ்வளவு புன்முறுவலுடன் இருக்கிறார்கள்! இவர்களது ஆத்மா ஞான ரத்தினங்களை தாரணை செய்திருந்தனர். வாயில் எப்பொழுதும் ஞான ரத்தினங்கள் வெளிப்பட்டன. இரத்தினங்களை மட்டுமே கேட்டு, கூறி எவ்வளவு குஷியுடன் இருக்கின்றனர்! நீங்கள் இப்பொழுது அடையக் கூடிய ஞான இரத்தினங்கள் அனைத்தும் பிறகு வைர, நகைகளாக ஆகிவிடும். 9 ரத்தினங்களின் மாலையானது வைர நகைகளின் மாலை கிடையாது. இது ஞான இரத்தினங்களின் மாலையாகும். மனிதர்கள் அந்த ரத்தினம் என்று நினைத்துக் கொண்டு மோதிரம் போன்றவைகளை அணிந்து கொள்கின்றனர். இந்த ஞான ரத்தினங்களின் மாலை புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் உருவாகிறது. இந்த ரத்தினங்கள் தான் உங்களை எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கு செல்வந்தர்களாக ஆக்குகிறது. இதை யாரும் கொள்ளையடிக்க முடியாது. இங்கு நீங்கள் வைர நகைகளை அணிந்து கொண்டால் உடனேயே கொள்ளையர்கள் கொள்ளையடித்து விடுவர். ஆக தன்னை மிக மிக புத்திசாலிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அசுர அவகுணங்களை நீக்க வேண்டும். அசுர அவகுணங்களின் மூலம் முகமும் அவ்வாறே ஆகி விடுகிறது. கோபப்படும் பொழுது தாமிரம் போன்று முகம் சிகப்பாக ஆகிவிடுகிறது. காம விகாரமுடையவர்கள் கருப்பாக ஆகிவிடுகின்றனர். ஆக குழந்தைகள் ஒவ்வொரு விசயத்தையும் சிந்தனை செய்ய வேண்டும். இந்த கல்வி அதிக செல்வத்தை கொடுக்கக் கூடியதாகும். அந்த படிப்பில் எந்த ரத்தினமும் கிடையாது. ஆம், நன்றாகப் படித்து பெரிய பதவி அடைந்து விடுகின்றனர். ஆக கல்வி காரியத்திற்குப் பயன்பட்டு விடுகிறதேயன்றி செல்வத்திற்கு அல்ல. அது எல்லைக்குட்பட்ட செல்வம், இது எல்லையற்ற செல்வம். இரண்டுமே படிப்பு தான். தந்தை நமக்கு கற்பித்து உலகிற்கு எஜமானர்களாக ஆக்கி விடுகின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அது அல்ப கால, ஒரு பிறவிக்கான துளியளவிற்கான படிப்பாகும். அடுத்த பிறவியில் மீண்டும் புதிதாக படிக்க வேண்டியிருக்கும். அங்கு செல்வத்திற்காக படிக்க வேண்டிய அவசியமிருக்காது. அங்கு இப்போதைய முயற்சியின் படி அளவற்ற செல்வம் கிடைத்து விடுகிறது. செல்வம் அழிவற்றதாக ஆகிவிடுகிறது. தேவதைகளிடத்தில் செல்வம் அதிகமாக இருந்தது. பிறகு எப்பொழுது பக்தி மார்க்கம் அதாவது இராவண ராஜ்யத்தில் வந்த பொழுது எத்தனை பேர் இருந்தனர்? எவ்வளவு கோயில்கள் கட்டினர்! பிறகு முஸ்லீம்கள் வந்து செல்வத்தை கொள்ளையடித்தனர். எவ்வளவு செல்வம் இருந்தது! இன்றைய படிப்பின் மூலம் யாரும் இந்த அளவிற்கு செல்வந்தர்களாக ஆக முடியாது. நாம் அந்த அளவிற்கு உயர்ந்த படிப்பு படிக்கிறோம், இதன் மூலம் இவ்வாறு (தேவி தேவதைகளாக) ஆகின்றோம் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஆக படிப்பின் மூலம் மனிதர்கள் எப்படி ஆகிவிடுகின்றனர் என்பதைப் பாருங்கள்! ஏழையிலிருந்து செல்வந்தர். இப்பொழுது பாரதமும் எவ்வளவு ஏழையாக இருக்கிறது! செல்வந்தர்களுக்கு நேரமே கிடையாது. நான் இன்னாராக இருக்கிறேன் என்ற அகங்காரம் இருக்கிறது. இங்கு அகங்காரம் போன்ற அனைத்தும் நீக்கி விட வேண்டும். நான் ஆத்மா, ஆத்மாவிடத்தில் செல்வம், வைர நகைகள் போன்ற எதுவும் கிடையாது. தேக சகிதமாக அனைத்தையும் விட்டு விடுங்கள் என்று தந்தையும் கூறுகின்றார். ஆத்மா சரீரம் விடுகின்ற பொழுது செல்வந்தர் போன்ற அனைத்தும் அழிந்து போய்விடுகிறது. மீண்டும் புதிதாகப் படித்து சம்பாதிக்கின்றனர் அல்லது தானம், புண்ணியம் நன்றாக செய்கின்றனர் எனில் செல்வந்த வீட்டில் பிறப்பு எடுப்பர். கடந்த கால செயல்களின் பலன் என்று கூறுகின்றனர் அல்லவா! கல்வியை தானம் செய்திருப்பர் அல்லது கல்லூரி, தர்மசாலை போன்றவைகளை உருவாக்கி இருப்பர் எனில் அதற்கான பலன் கிடைக்கிறது. ஆனால் அல்ப காலத்திற்கு. தானம், புண்ணிமும் இங்கு தான் செய்யப்படுகிறது. சத்யுகத்தில் செய்யப்படுவது கிடையாது. சத்யுகத்தில் நல்ல செயல்கள் மட்டுமே செய்வர், ஏனெனில் இப்போதைய ஆஸ்தி அடைந்திருக்கின்றனர். அங்கு எந்த விகர்மமும் ஏற்படுவது கிடையாது. ஏனெனில் இராவணனே கிடையாது. ஏழைகளும் பாவ காரியம் செய்யமாட்டார்கள். இங்கு செல்வந்தர்களும் பாவ காரியம் செய்கின்றனர். அதனால் தான் இந்த வியாதிகள் போன்றவைகளினால் துக்கம் ஏற்படுகிறது. அங்கு விகாரத்தில் செல்வதே கிடையாது எனும் பொழுது விகர்மம் எப்படி எற்படும்? அனைத்திற்கும் ஆதாரம் செயல்களில் தான் இருக்கிறது. இது மாயையின் இராவண ராஜ்யமாகும், இதன் மூலம் மனிதர்கள் விகாரிகளாக ஆகிவிடுகின்றனர். விகாரமற்றவர்களாக ஆக்குவதற்காக தந்தை வந்து கற்பிக்கின்றார். தந்தை விகாரமற்றவர்களாக ஆக்க வந்திருக்கின்றார், பிறகு மாயை விகாரிகளாக ஆக்கி விடுகிறது. இராம வம்சத்திற்கும் ராவண வம்சத்திற்கும் யுத்தம் நடைபெறுகிறது. நீங்கள் தந்தையின் குழந்தைகள், அவர்கள் இராவணனின் குழந்தைகள். எவ்வளவு நல்ல நல்ல குழந்தைகளும் மாயையிடம் தோல்வியடைந்து விடுகின்றனர்! மாயை மிகவும் திறமை வாய்ந்தது. இருப்பினும் நம்பிக்கை வைக்கின்றார். முற்றிலும் பதீதமாக இருப்பவர்களையும் முன்னேற்ற வேண்டியிருக்கிறது அல்லவா! தந்தை முழு உலகையும் முன்னேற்ற வேண்டியிருக்கிறது. பலர் வீழ்ச்சி அடைகின்றனர். வழுக்கி விடும் பொழுது ஒரேயடியாக பதீதமாக ஆகிவிடுகின்றனர். இப்படிப் பட்டவர்களையும் தந்தை முன்னேற்றுகின்றார். இராவண ராஜ்யத்தில் அனைவரும் முழு பதீதமாக இருக்கின்றனர், ஆனால் தந்தை காப்பாற்றுகின்றார். இருப்பினும் கீழே விழுந்து விடுகின்றனர் எனில் மிகவும் பதீதமாக ஆகிவிடுகின்றனர். பிறகு அவர்களால் அந்த அளவிற்கு முன்னேற முடியாது. அந்த பதீத நிலை உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருக்கும். கடைசி காலத்தில் யார் ... என்று நீங்கள் கூறுவது போன்று அவர்களது புத்தியில் அந்த பதீத நிலை வந்து கொண்டே இருக்கும். ஆக தந்தை வந்து குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார், கல்ப கல்பத்திற்கும் நீங்கள் தான் தேவதைகளாக ஆகிறீர்கள். மிருகங்கள் ஆகுமா என்ன? மனிதர்கள் தான் ஆகின்றனர் மற்றும் புரிந்து கொள்கின்றனர். இந்த லெட்சுமி நாராயணனுக்கும் வாய், காது இருக்கிறது, மனிதர்கள் அல்லவா! ஆனால் தெய்வீக குணங்களுடையவர்கள், அதனால் தான் இவர்கள் தேவதைகள் என்று கூறப்படுகின்றனர். இவர்கள் இந்த அளவிற்கு அழகான தேவதைகளாக எப்படி ஆனார்கள்? பிறகு எப்படி வீழ்ச்சி அடைந்தார்கள்? இந்த சக்கரம் பற்றி நீங்கள் அறிந்து கொண்டீர்கள். யார் ஞானச் சிந்தனை செய்கிறார்களோ அவர்களுக்கு தாரணையும் நன்றாக ஏற்படும். ஞானச் சிந்தனை செய்யவில்லையெனில் முட்டாள்களாக ஆகிவிடுவர், முரளி நடத்துபவர்களுக்கு ஞானச் சிந்தனை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த தலைப்பில் இதைப் புரிய வைக்க வேண்டும். தானாகவே ஞானச் சிந்தனை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னார் வரயிருக்கின்றார்கள், அவர்களுக்கும் ஆர்வத்துடன் புரிய வைப்பார்கள். சிறிதாவது புரிந்து கொள்வர். பாக்கியத்தின் மீது இருக்கிறது. சிலருக்கு உடனேயே நிச்சயம் ஏற்பட்டு விடுகிறது, சிலருக்கு ஏற்படாது. நம்பிக்கை வைக்க வேண்டும். இப்பொழுது இல்லையெனில் அவசியம் நாளடைவில் புரிந்து கொள்வர். நம்பிக்கை வைக்க வேண்டும் அல்லவா! நம்பிக்கை வைப்பது என்றால் சேவையில் ஆர்வத்துடன் இருப்பதாகும். களைப்படையக் கூடாது. யாராவது படித்து, பிறகு பதீதமாக ஆகிவிடுகின்றனர், பிறகு அவசியம் வருவார்கள், அவர்களை வரவேற்பு அறையில் அமரச் செய்வீர்களா? அல்லது சென்று விடுங்கள் என்று கூறுவீர்களா? ஏன் இவ்வளவு நாட்கள் வரவில்லை? என்று அவசியம் கேட்பீர்கள். மாயையிடம் தோல்வி அடைந்து விட்டேன் என்று கூறுவர். இவ்வாறு பலர் வருகின்றனர். ஞானம் மிகவும் நன்றாக இருந்தது, ஆனால் மாயை தோல்வியடையச் செய்து விட்டது. நினைவு இருக்கும் அல்லவா! பக்தியில் தோல்வி மற்றும் வெற்றிக்கான விசயமே கிடையாது. இது தாரணை செய்ய வேண்டிய ஞானமாகும். இப்பொழுது நீங்கள் தந்தையின் மூலம் உண்மையான கீதை கேட்கிறீர்கள், இதன் மூலம் தேவதைகளாக ஆகிவிடுகிறீர்கள். பிராமணன் ஆகாமல் தேவதைகளாக ஆக முடியாது. கிறிஸ்தவர்கள், பாரசீகர்கள், முஸ்லீம்களில் பிராமணர்கள் இருப்பது கிடையாது. இந்த அனைத்து விசயங்களையும் இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.

 

அல்லாவை நினைவு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அல்லாவை நினைவு செய்தால் தான் இராஜ்யம் கிடைக்கும். நீங்கள் யாரை சந்தித்தாலும் அல்லாவை நினைவு செய்யுங்கள் என்று கூறுங்கள். அல்லா தான் உயர்ந்தவர் என்று கூறப்படுகின்றார். கை விரல்களினால் அல்லாவை சைகை காட்டுகின்றனர் அல்லவா! அல்லா என்று ஒரே ஒருவர் தான் கூறப்படுகின்றார். பகவான் ஒரே ஒருவர் தான். மற்ற அனைவரும் குழந்தைகள் ஆவர். தந்தை எப்பொழுதும் உயர்ந்தவராகவே இருக்கின்றார். அவர் ஒருபொழுதும் இராஜ்யம் செய்வது கிடையாது. ஞானமும் கொடுக்கின்றார், தனது குழந்தைகளாகவும் ஆக்குகின்றார் எனில் குழந்தைகள் எவ்வளவு குஷியுடன் இருக்க வேண்டும்! பாபா நமக்கு எவ்வளவு சேவை செய்கின்றார்! நம்மை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். பிறகு அவர் சுயம் அந்த தூய்மையான உலகிற்கு வருவதே கிடையாது. பாவன உலகில் யாரும் அவரை அழைப்பதே கிடையாது. பதீதமானவர்கள் தான் அழைக்கின்றனர். பாவன உலகிற்கு வந்து என்ன செய்வார்? அவரது பெயரே பதீத பாவனன், ஆக பழைய உலகைப் புதிதாக ஆக்குவது தான் அவரது கடமையாகும். தந்தையின் பெயர் சிவன், குழந்தைகள் சாலிகிராம் என்று கூறப்படுகின்றனர். அதற்கும் பூஜை நடைபெறுகிறது. சிவபாபா என்று கூறி அனைவரும் நினைவு செய்கின்றனர். மற்றொன்று, பிரம்மாவையும் பாபா என்று கூறுகின்றனர். பிரஜாபிதா பிரம்மா என்று பலர் கூறுகின்றனர். ஆனால் அவரை யதார்த்த முறையில் யாரும் அறியவில்லை. பிரம்மா யாருடைய குழந்தை? பரம்பிதா பரமாத்மா சிவன் அவரை தத்தெடுத்திருக்கின்றார் என்று நீங்கள் கூறுவீர்கள். இவர் சரீரதாரி அல்லவா! அனைத்து ஆத்மாக்களும் ஈஸ்வரனின் குழந்தைகள் ஆவர். அனைத்து ஆத்மாக்களுக்கும் அவரவர்களுக்கென்று சரீரம் இருக்கிறது. அவரவர்களுக்கான பாகம் கிடைத்திருக்கிறது, அதை நடித்தே ஆக வேண்டும். இது பரம்பரையாக நடைபெற்று வருகிறது. அநாதி என்றால் அதற்கு முதல், இடை, கடை கிடையாது. மனிதர்கள் கேட்கின்றனர், பிறகு குழப்பமடையவும் செய்கின்றனர், பிறகு எப்படி உருவாகும்? இது அநாதி என்று தந்தை புரிய வைக்கின்றார். எப்பொழுது ஆனார்கள்? என்று கேட்க வேண்டிய அவசியமும் கிடையாது. பிரளயம் ஏற்படவே ஏற்படாது. இவ்வாறும் கட்டுக் கதை எழுதி விட்டனர். மனிதர்கள் குறைந்துவிடுகின்றனர், அதனால் தான் பிரளயம் ஆகிவிட்டதாகக் கூறுகின்றனர். பாபாவிடத்தில் என்ன ஞானம் இருக்கிறதோ அது இப்பொழுது தான் வெளிப்படுகிறது. முழு கடலையும் மையாக ... அப்பொழுதும் முடிவடையாது என்று இவருக்குத் தான் கூறப்படுகிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தனது புன்முறுவலான முகத்தின் மூலம் தந்தையின் பெயரை வெளிப்படுத்த வேண்டும். ஞான ரத்தினங்களை மட்டுமே கேட்க வேண்டும் மற்றும் கூற வேண்டும். கழுத்தில் ஞான ரத்தினங்களின் மாலை அணிந்து இருக்க வேண்டும். அசுர அவ குணங்களை விலக்க வேண்டும்.

 

2) சேவையில் ஒருபொழுதும் களைப்படையக் கூடாது. நம்பிக்கை வைத்து ஆர்வத்துடன் சேவை செய்ய வேண்டும். ஞானச் சிந்தனை செய்த பரவசத்துடன் (ஊற்சாகம்)0ஆர்வத்துடன் இருக்க வேண்டும்.

 

வரதானம்:

அன்பின் பிரதிபலனாக சமநிலையின் அனுபவம் செய்யக்கூடிய சர்வ சக்திகள் நிறைந்தவர் ஆகுக.

 

எந்தக் குழந்தைகள் தந்தையின் அன்பில் சதா மூழ்கியிருக்கிறார்களோ, அவர்களுக்கு அன்பின் பலனாக, பாபாவுக்கு சமமாக ஆவதற்கான வரதானம் கிடைத்து விடுகின்றது. யார் சதா அன்புடன் மற்றும் யோக நிலையுடன் இருக்கிறார்களோ, அவர்கள் சர்வ சக்திகளால் நிரம்பியவராக இயல்பாகவே ஆகி விடுகிறார்கள். அனைத்து சக்திகள் சதா உடனிருக்கின்றன என்றால் வெற்றி கிடைத்தே விட்டது. சர்வசக்திவான் தந்தை நம்மோடு கூடவே இருக்கிறார் என்ற நினைவு யாருக்கு உள்ளதோ, அவர்கள் ஒரு போதும் எந்த ஒரு விசயத்திலும் சஞ்சலமடைய மாட்டார்கள்.

 

ஸ்லோகன்

புருஷார்த்தி வாழ்க்கையில் யார் சதா திருப்தியாக மற்றும் குஷியாக இருக்கிறாரோ, அவர் தாம் அதிர்ஷ்டசாலி.

 

ஓம்சாந்தி