13.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே! அமைதி வேண்டும் என்றால் அசரீரி ஆகுங்கள், இந்த தேக உணர்வில் வருவதனால்தான் அமைதியின்மை ஏற்படுகிறது, ஆகையால் தனது சுயதர்மத்தில் நிலைத்திருங்கள்.

 

கேள்வி:

சரியான நினைவு என்பது எது? நினைவு செய்யும் சமயத்தில் எந்த விஷயத்தில் விசேஷ கவனம் தேவை?

 

பதில்:

தன்னை இந்த சரீரத்திலிருந்து தனிப்பட்ட ஆத்மா எனப் புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்வது - இதுதான் சரியான உண்மையான நினைவு ஆகும். எந்த தேகமும் நினைவுக்கு வரக்கூடாது, இந்த கவனம் வைப்பது மிக அவசியம் ஆகும். நினைவில் இருப்பதற்காக ஞானத்தின் போதை ஏறி இருக்க வேண்டும், பாபா நம்மை முழு உலகிற்கும் எஜமானன் ஆக ஆக்குகிறார், நாம் முழு சமுத்திரம், முழு பூமிக்கு எஜமான் ஆகிறோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும்.

 

பாட்டு :

உங்களை அடைந்ததினால் இவ்வுலகையே அடைந்துவிட்டோம்.

 

ஓம் சாந்தி.

ஓம் என்பதன் அர்த்தமே அஹம் - நான் ஆத்மா. மனிதர்கள் பிறகு ஓம் என்றால் பகவான் எனப் புரிந்து கொள்கின்றனர், ஆனால் அப்படி அல்ல. ஓம் என்றால் நான் ஆத்மா, இது என்னுடைய சரீரம். ஓம் சாந்தி என்று சொல்கின்றோம் அல்லவா! அஹம் - அதாவது ஆத்மாவின் சுயதர்மம் அமைதி. ஆத்மா தனது அறிமுகத்தைக் கொடுக்கிறது. மனிதர்கள் ஓம் சாந்தி என்று சொல்கின்றனர், ஆனால் ஓம் என்பதினுடைய அர்த்தத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை. ஓம் சாந்தி என்ற வார்த்தை நன்றாக உள்ளது. நான் ஆத்மா, எனது சுயதர்மம் அமைதி. ஆத்மாக்களாகிய நாம் சாந்தி தாமத்தில் வசிப்பவர்கள். எவ்வளவு எளிமையான அர்த்தம்! நீட்டி முழக்கி சொல்லும் கட்டுக் கதை அல்ல. இந்த சமயத்தில் உள்ள மனிதர்களுக்கு இப்போது புதிய உலகமாக உள்ளதா அல்லது பழைய உலகமாக உள்ளதா என்பது தெரியாது. புதிய உலகம் பிறகு எப்போது உண்டாகிறது, பழையதிலிருந்து பிறகு புதிய உலகம் எப்போது ஏற்படுகிறது என்பதை யாரும் அறியவில்லை. உலகம் எப்போது புதியதாக இருக்கும், மேலும் பிறகு பழையதாக எப்படி ஆகிறது? என்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பார்க்கலாம். ஆனால் யாரும் சொல்ல முடியாது. இப்போது கலியுகம் பழைய உலகமாக உள்ளது. சத்யுகம் புதிய உலகம் என சொல்லப்படுகிறது. நல்லது, புதிய உலகம் பிறகு பழைய உலகமாக ஆவதற்கு எவ்வளவு வருடங்கள் பிடிக்கும்? இதுவும் யாருக்கும் தெரியாது. மனிதர்களாக இருந்தும், இதை அறிவதில்லை என்றால் விலங்குகளை விடவும் மோசமானவர்கள் என சொல்லப் படுகிறது. விலங்குகள் தம்மைப் பற்றி எதுவும் சொல்வதில்லை, மனிதர்கள் நாங்கள் பதீதமானவர்கள் (தூய்மையற்றவர்கள்), பதீத பாவனா வாருங்கள் என்று சொல்கின்றனர். ஆனால் அவரைப் பற்றி கொஞ்சமும் தெரியாது. பாவனம் என்ற வார்த்தை எவ்வளவு நன்றாக உள்ளது! பாவனமான உலகம் சொர்க்கம் புதிய உலகமாகத்தான் இருக்கும். தேவதைகளின் சித்திரங்களும் உள்ளன, ஆனால் இந்த இலட்சுமி நாராயணர் புதிய உலகின் எஜமானர்கள் என்பது யாருக்கும் புரிவதில்லை. இந்த அனைத்து விசயங்களும் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். சொர்க்கம் புதிய உலகம் என சொல்லப்படுகிறது. தேவதைகள் சொர்க்கவாசிகள் எனப்படுகின்றனர். இப்போது பழைய உலகம் நரகமாக உள்ளது. இங்கே மனிதர்கள் நரகவாசிகளாக இருக்கின்றனர். யாராவது இறந்தாலும், சொர்க்கவாசியாகி விட்டார் என சொல்கின்றனர், அப்படியானால் இங்கே நரகவாசியாக இருக்கிறார் அல்லவா? கணக்குப் போட்டு சொல்லியும் விடுகின்றனர். இது நரகம் என்பது மிகச் சரியே ஆகும், ஆனால் நீங்கள் நரகவாசிகள் என்றால் கோபித்துக் கொள்வார்கள். பார்ப்பதற்கு மனிதர்களாக இருக்கின்றனர், மனிதர்களின் முகம்தான் இருக்கிறது, ஆனால் இலட்சணம் குரங்கு போல இருக்கிறது என்று தந்தை புரிய வைக்கிறார். இதுவும் கூட பாடப் பட்டுள்ளதல்லவா? தாங்களே கோவில்களில் சென்று தேவதைகளின் முன்பாக பாடுகின்றனர் - நீங்கள் அனைத்து குணங்களும் நிரம்பியவர். . . தன்னைக் குறித்து என்ன சொல்வார்கள்? நாங்கள் பாவிகள், கீழானவர்கள். ஆனால் நீங்கள் விகாரி என்று நேரடியாக சொன்னீர்கள் என்றால் கோபித்துக் கொள்வார்கள், ஆகையால் தந்தை குழந்தைகளிடம் மட்டுமே பேசுகிறார், புரிய வைக்கிறார். வெளியாட்களிடம் பேசுவதில்லை, ஏனெனில் கலியுக மனிதர்கள் நரகவாசிகளாக உள்ளனர். இப்போது நீங்கள் சங்கம யுகவாசிகள். நீங்கள் தூய்மையடைந்து கொண்டிருக்கிறீர்கள். பிராமணர்களாகிய நமக்கு சிவபாபா படிப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவீர்கள். அவர் பதீத பாவனர். ஆத்மாக்களாகிய நம் அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்துள்ளார். எவ்வளவு எளிதான விஷயங்கள்! குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் சாந்தி தாமத்திலிருந்து நடிப்பை நடிப்பதற்காக வருகிறீர்கள் என்று தந்தை கூறுகிறார். இந்த துக்க தாமத்தில் அனைவரும் துக்கம் நிறைந்தவர்கள், ஆகையால் மனதிற்கு எப்படி அமைதி கிடைக்கும் என்று கேட்கிறார்கள். ஆத்மாவுக்கு அமைதி எப்படி ஏற்படும்? என்று கேட்பதில்லை. அட, நீங்கள் ஓம் சாந்தி என்று சொல்கிறீர்கள் அல்லவா! என்னுடைய சுயதர்மம் அமைதி. பிறகு அமைதியை ஏன் கேட்கிறீர்கள்? தன்னை ஆத்மா என்பதை மறந்து தேக அபிமானத்தில் வந்து விடுகிறீர்கள். ஆத்மாக்கள் சாந்தி தாமத்தில் வசிப்பவர்கள். இங்கே பிறகு அமைதி எங்கிருந்து கிடைக்கும்? அசரீரி ஆவதன் மூலமே அமைதி ஏற்படும். சரீரத்துடன் ஆத்மா இருக்கிறது எனும்போது அவர் கண்டிப்பாக பேசவும், நடக்கவும் வேண்டியுள்ளது. ஆத்மாக்களாகிய நாம் சாந்தி தாமத்திலிருந்து இங்கே நடிப்பை நடிப்பதற்காக வந்துள்ளோம். இராவணன்தான் நமது எதிரி என்பது கூட யாருக்கும் தெரியாது. எப்போதிலிருந்து இந்த இராவணன் எதிரி ஆவது? இதுவும் யாருக்கும் தெரியாது. அவருடைய உருவத்தை உருவாக்கி எரிக்கிறோம், இந்த இராவணன் யார் என்பது பெரிய பெரிய வித்வான், பண்டிதர்களுக்கும் கூட ஒருவருக்கும் தெரியாது. பிறவி பிறவிகளாக எரித்துக் கொண்டு வந்திருக்கின்றனர், கொஞ்சமும் தெரியாது. இராவணன் யார்? என்று யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். இவையனைத்தும் கற்பனை என்று சொல்லிவிடுவார்கள். தெரிவதே இல்லை எனும்போது வேறு என்ன பதில் கொடுப்பார்கள்? சாஸ்திரங்களில் கூட உள்ளது ஹே இராம்ஜி! உலகம் உருவாகவே இல்லை என்று. இப்படி பலர் சொல்கின்றனர். இப்போது கற்பனை என்பதன் அர்த்தம் என்ன? இது சங்கல்பங்களின் உலகம் என்று சொல்கின்றனர். யார் எப்படிப்பட்ட சங்கல்பங்களைச் செய்கிறார்களோ அப்படி ஆகிவிடுகின்றனர், இதன் அர்த்தமும் புரிந்து கொள்வதில்லை. தந்தை குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறார். சிலர் நல்ல விதமாகப் புரிந்து கொண்டு விடுகின்றனர். சிலர் புரிந்து கொள்வதே இல்லை. நல்ல விதமாகப் புரிந்து கொள்பவர்கள் சொந்தத் தாயின் குழந்தைகள் என்று சொல்லப்படுகின்றனர், மேலும் புரிந்து கொள்ளாதவர்கள் மாற்றாந்தாய் குழந்தைகள் என்று சொல்லப்படுகின்றனர். இப்போது மாற்றாந்தாய் குழந்தைகள் வாரிசுகளாக ஆக மாட்டார்கள். பாபாவிடம் சொந்தத் தாய் குழந்தைளும் இருக்கின்றனர், மாற்றாந்தாய் குழந்தைகளும் இருக்கின்றனர். சொந்தத் தாய் குழந்தைகள் தந்தையின் சிரேஷ்ட வழிப்படி முழுமையாக நடக்கின்றனர். மாற்றாந்தாய் குழந்தைகள் நடப்பதில்லை. இவர்கள் என் வழிப்படி நடப்பதில்லை, இராவணனின் வழிப்படி நடக்கின்றனர் என்று தந்தை சொல்லிவிடுகிறார். இராமன் மற்றும் இராவணன் என இரண்டு வார்த்தைகள் உள்ளன. இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம். இப்போது உள்ளது சங்கம யுகம். தந்தை புரிய வைக்கிறார் - இந்த பிரம்மா குமார் - பிரம்மா குமாரிகள் அனைவரும் சிவ பாபாவிடம் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கின்றனர், நீங்கள் எடுப்பீர்களா? ஸ்ரீமத் (பகவான் வழி) படி நடப்பீர்களா? அப்போது கேட்கிறார்கள் - என்ன வழி? தந்தை உயர்ந்த வழியைக் கொடுக்கிறார் - தூய்மை அடையுங்கள். நாங்கள் தூய்மையாய் இருக்கிறோம், பிறகு கணவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் நான் யார் பேச்சைக் கேட்பது? எனக் கேட்கின்றனர். அவர் எனக்கு பதி பரமேஸ்வரன் என்கின்றனர். ஏனெனில் பாரதத்தில் பதியை (கணவரை) உனது குரு, ஈஸ்வரன் என்று அனைத்தும் அவரே என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் புரிந்து கொள்வதில்லை. அந்த சமயத்தில் ஆம் என்று சொல்லி விடுகின்றனர், கொஞ்சமும் ஏற்றுக் கொள்வதில்லை. என்றாலும் கூட குருமார்களிடம் கோவில் முதலானவற்றிற்குச் சென்றபடி இருக்கின்றனர். நீ எங்கும் வெளியில் செல்லாதே, நான் இராமனின் மூர்த்தியை வீட்டில் வைத்துத் தருகிறேன், பிறகு நீ அயோத்தி முதலான இடங்களுக்கு ஏன் அலைந்து கொண்டிருக்கிறாய் என்று கணவர் கூறுகிறார். அதை ஏற்பதில்லை. இவை பக்தி மார்க்கத்தின் ஏமாற்றங்களாகும். அவைகளை அனுபவிப்பார்கள், ஒருபோதும் ஏற்பதில்லை. அது அவர்களின் (தேவதைகளின்) கோவில் என்று புரிந்து கொள்கின்றனர். அட, உனக்கு இராமனை நினைவு செய்ய வேண்டுமா அல்லது அவரது கோவிலையா? ஆனால் புரிந்து கொள்வதில்லை. ஆக, தந்தை புரிய வைக்கிறார் - பக்தி மார்க்கத்தில் பகவானே வந்து எங்களுக்கு சத்கதி வழங்குங்கள் என்று சொல்லவும் செய்கிறீர்கள். ஏனென்றால் அவர் ஒருவர்தான் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல். நல்லது, அவர் எப்போது வருகிறார்? அதுவும் கூட யாருக்கும் தெரியாது.

 

இராவணன்தான் உங்களுடைய எதிரி என்று தந்தை புரிய வைக்கிறார். இராவணனுடையது அதிசயமாக உள்ளது, அதை எரித்துக் கொண்டே இருக்கின்றனர், ஆனால் இறப்பதே இல்லை. இராவணன் என்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது. நமக்கு எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிவ ஜெயந்தியையும் கொண்டாடுகின்றனர், ஆனால் சிவனை யாருக்கும் தெரியாது. அரசாங்கத்திற்கும் கூட நீங்கள் புரிய வைக்கிறீர்கள். சிவன்தான் பகவான் ஆவார், அவர்தான் ஒவ்வொரு கல்பமும் வந்து பாரதத்தை நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாகவும், பிச்சைக்காரரிலிருந்து இளவரசனாகவும் ஆக்குகிறார். தூய்மையற்றவரை தூய்மையாக்குகிறார். அவரே அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல். இந்த சமயம் அனைத்து மனிதர்களும் இங்கே இருக்கின்றனர். கிறிஸ்துவின் ஆத்மா கூட ஏதோ ஒரு பிறவி எடுத்து இங்கேதான் இருக்கிறது. யாரும் திரும்பிச் செல்ல இயலாது. இவர்கள் அனைவருக்கும் சத்கதி வழங்குபவர் ஒரே ஒரு பெரிய (உயர்வான) தந்தை ஆவார். அவர் வருவதும் பாரதத்தில்தான். உண்மையில் சத்கதியை வழங்குபவரைத் தான் பக்தி செய்ய வேண்டும். அந்த நிராகார தந்தை இங்கே இல்லை. அவரை எப்போதும் மேலே இருப்பதாகப் புரிந்து கொண்டு நினைவு செய்கின்றனர். கிருஷ்ணரை மேலே இருப்பதாகப் புரிந்து கொள்வதில்லை. மற்ற அனைவரையும் இங்கே கீழே நினைவு செய்கின்றனர். கிருஷ்ணரையும் இங்கே நினைவு செய்வார்கள். குழந்தை களாகிய உங்களுடையது சரியான நினைவு ஆகும். நீங்கள் தன்னை இந்த தேகத்திலிருந்து தனிப்பட்ட ஆத்மா எனப் புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்கிறீர்கள். உங்களுக்கு எந்த தேகத்தின் நினைவும் வரக்கூடாது. இதில் கண்டிப்பாக கவனம் தேவை. நீங்கள் தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள். பாபா நம்மை முழு உலகிற்கும் எஜமானராக ஆக்குகிறார். முழு கடல், முழு உலகம், முழு ஆகாயம் என அனைத்திற்கும் எஜமானராக ஆக்குகிறார். இப்போது எவ்வளவு துண்டு துண்டுகளாக இருக்கின்றன! ஒருவர் மற்றவரின் எல்லைக்குள் வர விடுவதில்லை. அங்கே (சத்யுகத்தில்) இந்த விசயங்கள் இருப்பதில்லை. பகவான் என்பவர் ஒரே ஒரு தந்தைதான் ஆவார். அனைவரும் தந்தையே தந்தை என்பது அல்ல. இந்து-சீனர் சகோதர சகோதரர், இந்து-முஸ்லீம் சகோதர-சகோதரர் என்று சொல்லவும் செய்கின்றனர், ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. இந்து-முஸ்லீம் சகோதர-சகோதரி என்று ஒருபோதும் சொல்வதில்லை. அல்ல. ஆத்மாக்கள் ஒருவருக்கொருவர் அனைவரும் சகோதர-சகோதரர்கள் ஆவார்கள். ஆனால் இந்த விசயத்தை அறிவதில்லை. சாஸ்திரங்கள் முதலானவைகளை கேட்டு கேட்டு சத்தியம், சத்தியம் என சொல்லியபடி இருக்கின்றனர், அர்த்தம் எதுவும் இருப்பதில்லை. உண்மையில் அசத்தியம், பொய்யாகும். சத்தியமான கண்டத்தில் உண்மையே உண்மை பேசுவார்கள். இங்கே பொய்யே பொய்யாக உள்ளது. நீங்கள் சொல்வது பொய் என்று யாரிடமாவது சொன்னீர்கள் என்றால் கோபித்துக் கொள்வார்கள். நீங்கள் உண்மை சொன்னீர்கள் என்றால் சிலர் நிந்தனை செய்யத் தொடங்கி விடுவார்கள். இப்போது தந்தையை பிராமணர்களாகிய நீங்கள்தான் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்கிறீர்கள். இப்போது 5 தத்துவங்களும் கூட தமோபிரதானமாக உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்றைய நாட்களில் மனிதர்கள் பூதங்களுக்குக் கூட பூஜை செய்கின்றனர். பூதங்களின் நினைவுதான் இருக்கிறது. தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என தந்தை கூறுகிறார். பூதங்களை நினைவு செய்யாதீர்கள். இல்லற விஷயங்களில் இருந்தபடி புத்தியின் தொடர்பை தந்தையுடன் வையுங்கள். இப்போது ஆத்ம அபிமானி ஆக வேண்டும். எந்த அளவு தந்தையை நினைவு செய்கிறீர்களோ அந்த அளவு பாவ கர்மங்கள் அழியும். ஞானத்தின் மூன்றாம் கண் உங்களுக்கு கிடைக்கிறது.

 

இப்போது நீங்கள் விகர்மாஜீத் (பாவ கர்மங்களை வென்றவர்) ஆக வேண்டும். அது விகர்மாஜீத் காலம். இது விகர்ம காலம். நீங்கள் யோக பலத்தின் மூலம் விகர்மங்களின் மீது வெற்றி அடைகிறீர்கள். பாரதத்தின் யோகம் புகழ் வாய்ந்தது. மனிதர்களுக்குத் தெரியாது. சன்னியாசிகள் வெளி நாடுகளில் சென்று நாங்கள் பாரதத்தின் யோகம் கற்றுத் தர வந்துள்ளோம் என கூறுகின்றனர். அவர்களுக்குத் தெரியாது இவர்கள் ஹடயோகிகள் என்று. இவர்கள் இராஜயோகம் கற்றுத் தர முடியாது. நீங்கள் இராஜரிஷிகள் ஆவீர்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட சன்னியாசிகள், நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட சன்னியாசிகள். இரவு-பகலுக்கான வித்தியாசம் உள்ளது. பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரும் இராஜயோகம் கற்றுத் தர முடியாது. இவை புதிய விசயங்கள் ஆகும். புதியவர்கள் யாரும் புரிந்து கொள்ள முடியாது. ஆகையால் புதியவர்கள் யாரும் அனுமதிக்கப் படுவதில்லை. இது இந்திர சபையல்லவா? இந்த சமயம் அனைவரும் கல்புத்தி உள்ளவராக இருக்கின்றனர். சத்யுகத்தில் தங்க புத்தியுள்ளவர்களாக நீங்கள் ஆகிறீர்கள். இப்போது உள்ளது சங்கம யுகம். கல்லிலிருந்து தங்கமாக ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் ஆக்க முடியாது. தங்க புத்தியுள்ளவராக ஆவதற்காக நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். பாரதம் தங்கப் பறவையாக இருந்தது அல்லவா? இந்த இலட்சுமி நாராயணர் உலகின் எஜமானர்களாக இருந்தனர் அல்லவா? இவர்கள் எப்போது இராஜ்யம் செய்தனர் என்பதும் யாருக்கும் தெரியாது. இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இவர்களின் இராஜ்யம் இருந்தது. இவர்கள் பின் எங்கே சென்றார்கள்? 84 பிறவிகளை அனுபவித்தனர் என்று நீங்கள் சொல்ல முடியும். இப்போது தமோபிரதானமாக உள்ளனர், பிறகு தந்தையின் மூலம் சதோபிரதானமாக ஆகிக் கொண்டிருக்கின்றனர், ததத்வம் (நீயே அது, அதுவே நீ). இந்த ஞானத்தை தந்தையைத் தவிர சாது சன்னியாசிகள் முதலான யாரும் தர முடியாது. அது பக்தி மார்க்கம், இது ஞான மார்க்கம். குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கும் நல்ல நல்ல பாடல்களைக் கேட்டீர்கள் என்றால் மயிர்க்கூச்சம் ஏற்படும். குஷியின் அளவு ஒரேயடியாக ஏறிவிடும். பிறகு அந்த போதை நிலையாகவும் இருக்க வேண்டும். இது ஞான அமிர்தமாகும். அந்த சாராயத்தைக் குடித்தால் போதை ஏறிவிடுகிறது. இங்கே இதுவோ ஞான அமிர்தமாகும். உங்களுடைய போதை இறங்கக் கூடாது, எப்போதும் ஏறி இருக்க வேண்டும். நீங்கள் இந்த இலட்சுமி நாராயணரைப் பார்த்து எவ்வளவு குஷியடைகிறீர்கள்! நாம் ஸ்ரீமத்படி மீண்டும் சிரேஷ்டாச்சாரிகளாக (உயர்ந்தவர்களாக) ஆகிக் கொண்டிருக்கிறோம். இங்கே பார்த்துக் கொண்டிருந்தாலும் புத்தியின் தொடர்பு தந்தை மற்றும் ஆஸ்தியின் மீது ஈடுபட்டிருக்க வேண்டும். நல்லது

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. விகர்மங்களை வென்றவர் ஆவதற்காக யோகபலத்தின் மூலம் பாவ கர்மங்களின் மீது வெற்றியை அடைய வேண்டும். இங்கே பார்த்தபடி இருந்தாலும் புத்தியின் தொடர்பு தந்தை மற்றும் ஆஸ்தியின் மீது ஈடுபட்டிருக்க வேண்டும்.

 

2. தந்தையின் ஆஸ்தியின் மீது முழுமையான அதிகாரத்தை அடைவதற்காக சொந்தத் தாயின் குழந்தைகள் ஆக வேண்டும். ஒரு தந்தையின் ஸ்ரீமத் படிதான் நடக்க வேண்டும். தந்தை புரிய வைப்பதை தானும் புரிந்து கொண்டு பிறருக்கும் புரிய வைக்க வேண்டும்.

 

வரதானம்:

சம்பூர்ண தன்மையின் வெளிச்சத்தின் மூலம் அஞ்ஞானத்தின் திரையை நீக்கக் கூடிய வழி காட்டும் ஒளி விளக்கு ஆகுக.

 

இப்போது வெளிப்பாடு ஏற்படக்கூடிய (தந்தையை வெளிப்படுத்தக் கூடிய) நேரம் அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது, ஆகையால் அந்தர்முகி (உள் நோக்கு முகமுள்ளவர்) ஆகி ஆழமான அனுபவங்களின் இரத்தினங்களால் தன்னை நிறைந்தவராக ஆக்குங்கள், உங்களுடைய சம்பூரண தன்மையின் வெளிச்சத்தின் மூலம் அஞ்ஞானத்தின் திரை நீங்கி விடும்படியாக வழி காட்டும் ஒளி விளக்காக ஆகி விடுங்கள். ஏனென்றால் தரணியின் (பூமியின்) மீதிருக்கும் நட்சத்திரங்களாகிய நீங்கள் இந்த உலகத்தை குழப்பங்களிலிருந்து விடுவித்து சுகமயமான உலகமாக, தங்க மயமான உலகமாக உருவாக்கக் கூடியவர்கள். உத்தம புருஷர்களான ஆத்மாக்களாகிய நீங்கள் உலகத்திற்கு அமைதி - சுகத்தின் சுவாசத்தை கொடுப்பதற்கு நிமித்தமானவர்கள்.

 

சுலோகன்:

மாயை மற்றும் இயற்கையின் கவர்ச்சியிலிருந்து விலகியிருந்தீர்கள் என்றால் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ஓம்சாந்தி