13-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

எந்தவொரு ஊட்ட சத்து குழந்தைகளாகிய உங்களை பாபாவிற்குச் சமமாக புத்திசாலி களாக்கி விடுகிறது?

பதில்:

இந்த படிப்பு தான் குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியின் சத்துணவு ஆகும். யார் தினமும் படிக்கிறார்களோ அதாவது இந்த ஊட்டசத்து (அ) சத்துணவு எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுடைய புத்தி தங்கமாகி விடுகிறது. புத்திவான்களின் புத்தியான பாரஸ்நாத் (கல்லையும் தங்கமாக்கும்) பாபா உங்களை தனக்குச் சமமாக தங்கபுத்தியுடையவர்களாக ஆக்குகின்றார்.

பாடல்:

அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன்.......................

ஓம் சாந்தி. பாட்டின் வரிகளைக் கேட்டதும் இனிமையிலும் இனிமையான குழந்தைகள் மெய் சிலிர்த்துப் போக வேண்டும். பொதுவான பாடல் தான் ஆனாலும் இதனுடைய சாரத்தை வேறு யாரும் தெரிந்திருக்கவில்லை. பாபா தான் வந்து பாட்டு, சாஸ்திரம் போன்றவற்றின் அர்த்தத்தைப் புரிய வைக்கின்றார். கலியுகத்தில் அனைவருடைய அதிர்ஷ்டமும் உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். சத்யுகத்தில் அனைவருடைய அதிர்ஷ்டமும் விழித்திருக்கிறது. உறங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்பவர் மற்றும் ஸ்ரீமத் கொடுக்கக் கூடியவர் அல்லது அதிர்ஷ்டத்தை உருவாக்குபவர் ஒரேயொரு பாபாவே ஆவார். அவர் தான் குழந்தைகளின் அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்கிறார். குழந்தை பிறந்தவுடன் அதிர்ஷ்டம் விழித்துக் கொள்கிறது. குழந்தை பிறந்தவுடன் நாம் வாரிசு என்பது தெரிந்து விடுகிறது. அப்படியே இது எல்லையற்ற விசயமாக இருக்கிறது. ஒவ்வொரு கல்பத்திலும் நம்முடைய அதிர்ஷ்டம் விழித்துக் கொள்கிறது பிறகு உறங்கிவிடுகிறது. தூய்மையாகிறார்கள் என்றால் அதிர்ஷ்டம் விழித்துக் கொள்கிறது. தூய்மையான குடும்ப ஆசிரமம் என்று சொல்லப்படுகிறது. ஆசிரமம் என்ற வார்த்தை தூய்மையானதாக இருக்கிறது. தூய்மையான குடும்ப ஆசிரமம் என்பதற்கு நேரெதிராக தூய்மையற்ற அபவித்திர குடும்ப தர்மமாகும். ஆசிரமம் என்று சொல்ல முடியாது. அனைவருடையதும் குடும்ப தர்மமேயாகும். விலங்குகளிடத்திலும் இருக்கிறது. அனைத்துமே குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றன. விலங்குகளுக்கும் குடும்ப தர்மம் என்றே சொல்லலாம். நாம் சொர்க்கத்தில் தூய்மையான குடும்ப ஆசிரமத்தில் இருந்தோம், தேவி-தேவதைகளாக இருந்தோம், என்பதை குழந்தைகள் இப்போது தெரிந்துள்ளார்கள். சர்வகுணங்களும் நிறைந்தவர்கள், 16 கலை சம்பூரணமானவர்கள்.......... என்று அவர்களின் மகிமை பாடுகிறார்கள். நீங்களும் பாடினீர்கள். நாம் மீண்டும் மனிதனிலிருந்து தேவதையாகிக் கொண்டிருக்கிறோம் என்று இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மனிதனிலிருந்து தேவதை யாக்கினீர்கள்.......... என்றும் பாடப்பட்டுள்ளது. பிரம்மா-விஷ்ணு-சங்கரை கூட தேவதைகள் என்று சொல்கிறார்கள். பிரம்மா தேவதாய நமஹ என்று சொல்கிறார்கள் பிறகு சிவ பரமாத்மாய நமஹ என்று சொல்கிறார்கள். அதனுடைய அர்த்தத்தையும் இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அவர்கள் வெறுமனே கண்மூடித்தனமாக சொல்லி விட்டார்கள். சங்கர் தேவதாய நமஹ என்று சொல்வார்கள். சிவனை சிவபரமாத்மாய நமஹ என்று சொன்னால் வித்தியாசம் இருக்கிறது அல்லவா. அவர் தேவதையாகி விட்டார், இவர் பரமாத்மாவாகிவிட்டார். சிவன் மற்றும் சங்கரை ஒன்று என்று சொல்ல முடியாது. உண்மையில் நாம் கல் புத்தியாக இருந்தோம், இப்போது தங்க புத்தியுடையவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தேவதை களை கல் புத்தி உடையவர்கள் என்று சொல்ல முடியாது. பிறகு நாடகத்தின்படி இராவண இராஜ்யத்தில் ஏணிப்படியில் இறங்க வேண்டியிருக்கிறது. தங்கபுத்தி யிலிருந்து கல் புத்தியாக ஆக வேண்டும். அனைவரிலும் புத்திவான் ஒரு பாபாவே ஆவார். இப்போது உங்களுடைய புத்தியில் சக்தி இல்லை. பாபா அவர்களை தங்கபுத்தி உடையவர்களாக மாற்றுகின்றார். நீங்கள் இங்கே தங்க புத்தியுடையவர்களாக ஆவதற்காக வந்துள்ளீர்கள். பாரஸ்நாத் கோயில் கூட இருக்கிறது. அங்கே திருவிழா நடக்கிறது. ஆனால் பாரஸ்நாத் யார் என்பது யாருக்கும் தெரியாது. உண்மையில் தங்கமாக ஆக்கக் கூடியவர் பாபாவே ஆவார். அவர்கள் புத்திவான் களுக்கெல்லாம் புத்தியாவார். இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களுடைய புத்திக்கு ஒரு டானிக் ஆகும், இதன்மூலம் புத்தி மாற்றம் அடைகிறது. இந்த உலகம் முட்கள் நிறைந்த காடாகும். ஒருவர் மற்றவருக்கு எவ்வளவு துக்கம் கொடுக்கிறார்கள். இப்போது இருப்பதே தமோபிரதானமான மோசமான நரகமாகும். கருட புராணத்தில் மிகவும் சுவையான விசயங்களை எழுதி விட்டார்கள்.

இப்போது குழந்தைகளாகிய உங்களுடைய புத்திக்கு டானிக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எல்லையற்ற தந்தை டானிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது படிப்பாகும். இதனை ஞான அமிர்தம் என்றும் சொல்லி விடுகிறார்கள். இது ஒன்றும் நீர் போன்றது அல்ல. இன்றைக்கு எல்லா பொருட்களையும் அமிர்தம் என்று சொல்லி விடுகிறார்கள். கங்கை நீரைக் கூட அமிர்தம் என்று சொல்லி விடுகிறார்கள். தேவதைகளின் கால்களை கழுவி வைக்கிறார்கள், அதை அமிர்தம் என்று சொல்லி விடுகிறார்கள். இப்போது இதுவும் புத்தியின் மூலம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா. இந்த ஞானம் அமிர்தமா? அல்லது பதீத-பாவனி கங்கை நீர் அமிர்தமா? யார் அந்த நீரை கொடுக்கிறார்களோ அவர்கள் இது தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவது என்று சொல்வ தில்லை, கங்கை நீரை தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவது என்று சொல்கிறார்கள். மனிதர்கள் இறக்கிறார்கள் என்றால் கங்கை நீர் வாயில் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அர்ஜூனன் அம்பு எய்தி கங்கை நீரை குடிக்க வைத்தார் என்று காட்டுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அம்பு எதுவும் எய்தவில்லை. ஒரு கிராமத்தில் (வில்) அம்புகளினால் சண்டையிடுகிறார்கள். அங்கேயுள்ள ராஜாவை ஈஸ்வரனின் அவதாரம் என்று சொல்கிறார்கள். இப்போது ஈஸ்வரனுடைய அவதாரமாக யாரும் இருக்க முடியாது. உண்மையில், உண்மையிலும் உண்மையான சத்குரு ஒருவர் மட்டுமே இருக்கிறார், அவர் அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் ஆவார். அவர் அனைத்து ஆத்மாக்களையும் தன்னோடு அழைத்துச் செல்கிறார். பாபாவைத் தவிர வேறு யாரும் அழைத்துச் செல்ல முடியாது. பிரம்மத்தில் ஐக்கியமாகும் விசயமும் இல்லை. இந்த நாடகம் உருவாக்கப் பட்டுள்ளது. சிருஷ்டி சக்கரம் ஆதி, அந்தமின்றி சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது. உலகத்தின் வரலாறு- புவியியல் எப்படி திரும்பவும் நடக்கிறது, என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள் வேறு யாரும் தெரிந்திருக்கவில்லை. மனிதர்கள் அதாவது ஆத்மாக்கள் தன்னுடைய தந்தை படைப் பவரையும் கூட தெரிந்திருக்க வில்லை, அவரை ஓ! இறை தந்தையே! என்றும் நினைவு செய்கிறார்கள். எல்லைக்குட்பட்ட தந்தையை ஒருபோதும் இறை தந்தை என்று சொல்ல முடியாது. இறை தந்தை என்ற வார்த்தையை மிகவும் மரியாதையோடு செல்கிறார்கள். அவரைத் தான் தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குபவர், துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவர் என்று பாடுகிறார்கள். ஒருபக்கம் அவர் துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவர் என்று சொல்கிறார்கள் மற்றும் இன்னொருபுறம் ஏதாவது துக்கம் ஏற்படுகிறது அல்லது குழந்தை இறந்து விடுகிறது என்றால் ஈஸ்வரன் தான் சுக-துக்கத்தைக் கொடுக்கிறார் என்று சொல்லி விடுகிறார்கள். ஈஸ்வரன் என்னுடைய குழந்தையை எடுத்துக் கொண்டார் என்று சொல்கிறார்கள். என்ன செய்து விட்டார்? மகிமை பாடும்போது ஒன்று பாடுகிறார்கள், பிறகு ஏதாவது நடக்கிறது என்றால் ஈஸ்வரனை திட்டுகிறார்கள். ஈஸ்வரன் குழந்தை கொடுத்தார் என்று சொல்கிறார்கள், பிறகு அவர் திரும்ப பெற்றுக் கொண்டால் ஏன் அழுகிறீர்கள்? ஈஸ்வரனிடம் தான் சென்றுள்ளார். சத்யுகத்தில் யாரும் ஒருபோதும் அழுவதில்லை. அழுவதற்கான அவசியம் எதுவும் இல்லை என்று பாபா புரிய வைக்கின்றார். ஆத்மா தன்னுடைய கணக்கு-வழக்குகளின்படி சென்று நடிப்பை நடிக்க வேண்டும். ஞானம் இல்லாத காரணத்தினால் மனிதர்கள் எவ்வளவு அழுகிறார்கள், பைத்தியம் போல் ஆகி விடுகிறார்கள். இங்கே பாபா, அம்மா இறந்தாலும் அல்வா சாப்பிட வேண்டும் (முரளி கேட்க வேண்டும்)...... என்று கூறுகின்றார். பற்றற்றவர்களாக ஆக வேண்டும். நம்முடையவர் ஒரு எல்லையற்ற தந்தை, வேறு யாரும் இல்லை. குழந்தைகளுடைய நிலை அப்படிபட்டதாக இருக்க வேண்டும். மோகத்தைவென்ற இராஜாவின் கதையையும் கேட்டுள்ளீர்கள் அல்லவா. இவையனைத்தும் கட்டுக் கதைகளாகும். சத்யுகத்தில் ஒருபோதும் துக்கத்தின் விசயம் நடப்பதில்லை. அகால மரணமும் நிகழ்வதில்லை. நாம் காலனின் மீது வெற்றி அடைகிறோம் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள், பாபாவை மகாகாலன் என்றும் சொல்கிறார்கள். காலனுக்கெல்லாம் காலன் உங்களை காலன் மீது வெற்றி அடையவைக்கின்றார் அதாவது ஒருபோதும் உங்களை காலன் கொண்டு போவதில்லை. காலன் ஆத்மாவை கொண்டுபோவதில்லை. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு விட்டு வேறொன்றை எடுக்கிறது, அதைத் தான் காலன் கொண்டுபோய் விட்டான் என்று சொல்லப்படுகிறது. மற்றபடி காலன் என்று யாரும் இல்லை. மனிதர்கள் மகிமை பாடிக்கொண்டே இருக்கிறார்கள், எதையும் புரிந்து கொள்வதில்லை. அச்சுதம் கேசவம்.............. என்று பாடுகிறார்கள், அர்த்தம் எதையும் புரிந்து கொள்வதில்லை. மனிதர்கள் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லாதவர்களாகி விட்டார்கள். இந்த 5 விகாரங்கள் உங்களுடைய புத்தியை அநேகர் கெடுத்து விட்டது என்று பாபா புரிய வைக்கின்றார். மனிதர்கள் பத்ரிநாத் போன்றவற்றிற்கு எவ்வளவு செல்கிறார்கள். இன்றைக்கு இரண்டு லட்சம் செல்கிறார்கள், 4 லட்சம் செல்கிறார் கள்................. பெரிய-பெரிய அலுவலர்கள் கூட தீர்த்த யாத்திரை செல்கிறார்கள். நீங்கள் செல்ல வில்லை என்றால் இந்த பி.கு. நாஸ்திகர்கள், ஏனென்றால் இவர்கள் பக்தி செய்வதில்லை என்று சொல்வார்கள். யார் பகவானை தெரிந்திருக்கவில்லையோ, அவர்கள் நாஸ்திகர்கள் என்று நீங்கள் சொல்வீர்கள். யாருமே பாபாவை தெரிந்திருக்கவில்லை எனவே இது அனாதை உலகம் என்று சொல்லப்படுகிறது. தங்களுக்குள் எவ்வளவு சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இந்த முழு உலகமும் பாபாவின் வீடு அல்லவா. பாபா முழு உலகத்தின் குழந்தைகளையும் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்க வருகின்றார். அரைக்கல்பம் தூய்மையான உலகமாக இருந்தது. இராமர் ராஜா, இராம ராஜ்ய பிரஜை, இராம ராஜ்யத்தின் செல்வந்தர்................ என்றும் பாடுகிறார்கள். பிறகு அங்கே அதர்மத்தின் விசயம் எப்படி இருக்க முடியும். அங்கே சிங்கமும் ஆடும் ஒன்றாக நீர் அருந்துவதாக சொல்கிறார்கள் பிறகு அங்கே இராவணன் போன்றவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? புரிந்துக் கொள்வதே இல்லை. வெளியில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட விசயங்களைப் கேட்டு சிரிக்கிறார்கள்.

இப்போது ஞானக்கடலான தந்தை வந்து நமக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார், என்பதை குழந்தை களாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இது தூய்மையற்ற உலகம் அல்லவா. தூண்டுதலின் மூலம் தூய்மையற்றவர்களை தூய்மையாக்க முடியுமா என்ன? ஹே தூய்மையற்றவர்களை தூய்மை யாக்குபவரே வாருங்கள், வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று அழைக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக பாரதத்தில் தான் வந்தார் அல்லவா. ஞானக்கடலான நான் வந்திருக்கின்றேன் என்று தான் இப்போதும் கூறுகின்றார். சிவபாபாவினிடம் தான் முழு ஞானமும் இருக்கிறது என்பதை குழந்தை களாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள், அந்த தந்தை தான் வந்து குழந்தைகளுக்கு இந்த விசயங்கள் அனைத்தையும் புரிய வைக்கின்றார். சாஸ்திரங்களில் அனைத்தும் கட்டுக் கதைகளாகும். வியாச பகவான் சாஸ்திரங்களை உருவாக்கினார் என்று பெயர் வைத்து விட்டார்கள். அந்த வியாசர் பக்தி மார்க்கத்தவராவார். இவர் வியாச தேவன் ஆவார், நீங்கள் அவருடைய குழந்தைகள் சுக தேவர் களாவீர்கள். நீங்கள் சுகத்தின் தேவதைகளாக ஆகின்றீர்கள். சுகத்தின் ஆஸ்தியை வியாசரிடமிருந்து, சிவாச்சாரியரிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தான் வியாசரின் குழந்தைகளா வீர்கள். ஆனால் மனிதர்கள் குழம்பிவிடக் கூடாது என்பதற்காக சிவனின் குழந்தைகள் என்று சொல்லப்படுகிறது. அவருடைய உண்மையான பெயர் சிவன் என்பதே ஆகும். எனவே இப்போது பாபா கூறுகின்றார் - சிவபாபா முன்னால் அமர்ந்திருக்கும்போது எந்த தேகதாரியையும் பார்க்காதீர்கள். ஆத்மாவை தெரிந்து கொள்ளப்படுகிறது, அதுபோல் பரமாத்மாவையும் தெரிந்து கொள்ளப்படுகிறது. அவர் பரமபிதா பரமாத்மா சிவன் ஆவார். அவர்தான் வந்து தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை யாவதற்கான வழியை கூறுகின்றார். நான் ஆத்மாக்களாகிய உங்களுடைய தந்தை என்று கூறு கின்றார். ஆத்மாவை உணரப் படுகிறது, பார்க்கப்படுவதில்லை. இப்போது நீங்கள் உங்களுடைய ஆத்மாவை உணர்ந்துள்ளீர்களா என்று பாபா கேட்கின்றார்? இவ்வளவு சிறிய ஆத்மாவில் அழிவற்ற நடிப்பு ஒரு ரிக்கார்டைப் போல் பதிவாகியுள்ளது.

ஆத்மாவாகிய நாம் தான் சரீரத்தை எடுக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். முதலில் நீங்கள் தேக-அபிமானிகளாக இருந்தீர்கள், இப்போது ஆத்ம-அபிமானிகளாக இருக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் 84 பிறவிகளை எடுக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஆத்மா ஒருபோதும் அழிவ தில்லை. இந்த நாடகம் எப்போது ஆரம்பமானது, என்று சிலர் கேட்கிறார்கள்? ஆனால் இது அனாதியானதாகும், (துவக்கம் முடிவு) ஒருபோதும் அழிவதில்லை. இதனை உருவான-உருவாக்கப்பட்ட அழிவற்ற உலக நாடகம் என்று சொல்லப்படுகிறது. எனவே தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். எப்படி படிக்காத குழந்தைகளுக்குப் படிப்பிக்கப்படுகிறதோ அதுபோலாகும். ஆத்மா தான் சரீரத்தில் இருக்கிறது. இது கல் புத்திக்காரர் களுக்கு உணவாகும், புத்திக்கு ஞானம் கிடைக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்காக பாபா சித்திரங்களை உருவாக்கியுள்ளார். மிகவும் சகஜமானதாகும். இவர்கள் திருமூர்த்தி பிரம்மா- விஷ்ணு- சங்கர் ஆவர். பிரம்மாவையும் ஏன் திருமூர்த்தி என்று சொல்கிறார்கள்? தேவ்-தேவ் மகாதேவ். ஒருவரை-மற்றவரை விட மேலே வைக்கிறார்கள், அர்த்தம் எதையும் தெரிந்திருக்கவில்லை. பிரம்மா எப்படி தேவதை ஆவார். பிரஜாபிதா பிரம்மா இங்கே இருக்க வேண்டும் அல்லவா. இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. நான் இந்த சரீரத்தில் பிரவேசித்து இவர் மூலமாக உங்களுக்குப் புரிய வைக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். இவரை என்னுடையவராக ஆக்குகின்றேன். இவருடைய நிறைய பிறவிகளின் கடைசியில் வருகின்றேன். இவர் கூட 5 விகாரங்களை சன்னியாசம் செய் கின்றார். சன்னியாசம் செய்பவர்களை யோகி, ரிஷி என்று சொல்லப்படுகிறது. நீங்கள் இப்போது ராஜரிஷியாகியுள்ளீர்கள். நீங்கள் 5 விகாரங்களை சன்னியாசம் செய்துள்ளீர்கள் எனும்போது பெயர் மாறுகிறது. நீங்கள் ராஜயோகியாக ஆகின்றீர்கள். நீங்கள் சத்தியம் செய்கிறீர்கள். அந்த சன்னியாசி கள் வீடு-வாசலை விட்டு-விட்டு சென்று விடுகிறார்கள். இங்கே ஆண்-பெண் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள், நாங்கள் ஒருபோதும் விகாரத்தில் செல்ல மாட்டோம் என்று சத்தியம் செய்கிறார்கள். முக்கியமான விசயம் விகாரமாகும்.

சிவபாபா படைப்பவர், அவர் புதிய படைப்பை படைக்கின்றார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அவர் விதைரூபமாக, சத்-சித் ஆனந்தக் கடலாக, ஞானக்கடலாக இருக்கின்றார். ஸ்தாபனை, வினாசம், பாலனை எப்படி செய்கின்றார் - என்பதை பாபா தெரிந்திருக்கின்றார், மனிதர்கள் தெரிந்திருக்க வில்லை. பிரம்மாகுமார- குமாரிகளாகிய நீங்கள் உலகத்தை அழித்து விடுவீர்கள் என்று உடனே சொல்லி விடுகிறார்கள். உங்களுடைய வாய் இனிமையாகட்டும். இவர்கள் வினாசத்திற்கு பொருப்பாகியுள்ளார்கள் என்று சொல்கிறார்கள். இவர்கள் சாஸ்திரங்களையோ, பக்தியையோ, குருமார்களையோ ஏற்பதில்லை, அவர்களுடைய தாதாவைத் தான் ஏற்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் பாபா அவரே கூறுகின்றார், இது தூய்மையற்ற சரீரம், நான் இவருக்குள் பிரவேசித்திருக்கின்றேன். தூய்மையற்ற உலகத்தில் யாரும் தூய்மையானவர்கள் இல்லை. மனிதர் கள் என்ன கேட்கிறார்களோ அதை சொல்கிறார்கள். இப்படி கேள்விப்பட்ட விசயங்களினால் தான் பாரதம் துர்கதி அடைந்திருக் கிறது, அப்போது தான் பாபா வந்து உண்மையை சொல்லி அனை வரையும் சத்கதி அடைய வைக்கின்றார். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) பாபாவிடமிருந்து சுகத்தின் ஆஸ்தியை அடைந்து சுகத்தின் தேவதையாக ஆக வேண்டும். அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். ராஜரிஷியாக ஆவதற்கு அனைத்து விகாரங்களையும் சன்னியாசம் செய்ய வேண்டும்.

2) படிப்பு தான் உண்மையான டானிக் ஆகும். சத்கதி அடைவதற்கு கேள்விப்பட்ட விசயங்களை விட்டு விட்டு ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். ஒரு பாபாவிடம் மட்டுமே கேட்க வேண்டும். மோகத்தை வென்றவர்களாக ஆக வேண்டும்.

வரதானம்:

எப்பொழுதும் சுய மரியாதையில் நிலைத்திருந்து பணிவுத் தன்மை மூலம் அனைவருக்கும் மரியாதை தரக் கூடிய மதிப்பிற்குரிய, பூஜைக்குரியவர்களாக ஆகுக !

தந்தைக்குள்ள மகிமைகள் என்னவோ அவைகளே உங்களுடைய சுய மரியாதையாகும், சுய மரியாதையில் நிலையாக இருந்தால் பணிவானவர்களாகி விடுவீர்கள், பிறகு அனைவரிடமிருந்தும் மரியாதை கிடைத்துக் கொண்டே இருக்கும். மரியாதை கேட்பதனால் கிடைப்பதில்லை மாறாக (பிறருக்கு) மரியாதை அளிப்பதனால், சுயமரியாதையில் நிலைத்திருப்பதால் மரியாதையை தியாகம் செய்வதால் அனைவருடைய மதிப்புக்கும் பூஜைக்குரிய தகுதியை பாக்கியமாக அடைய முடிகிறது. ஏனெனில் மரியாதை கொடுப்பது என்றால் கொடுப்பதல்ல மரியாதை பெறுவதாகும்.

சுலோகன்:

அனைத்தும் அறிந்தவர் (சிவபாபா) உடன் சேர்ந்து காரியங்கள் கூடியவராகி சக்தியற்ற (பலவீன) ஆத்மாக்களுக்கு அனுபவத்தின் பிரசாதத்தை பகிர்ந்தளித்துக் கொண்டேயிருங்கள்.