13.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ உள்முகமாக இருப்பதற்கான முயற்சி (புருஷார்த்தம்) செய்யுங்கள், வெளி முகத்தில் (விஷயங்களில்) வராதீர்கள் அப்பொழுது தான் பாவங்கள் நீங்கும்.

 

கேள்வி:

தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பிக்கும் முன்னேறும் கலைக்கான புருஷார்த்தம் (முயற்சி) என்ன?

 

பதில்:

(1) குழந்தைகளே முன்னேறும் கலையில் வர வேண்டும் என்றால் புத்தியோகத்தை ஒரு தந்தையிடம் ஈடுபடுத்துங்கள். இவர் இப்படி இருக்கிறார், இவர் இப்படி செய்கிறார், இவரிடம் இந்த அவகுணம் உள்ளது - இந்த விஷயங்களில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவகுணங்களை பார்ப்பதிலிருந்து முகத்தை திருப்பிக் கொள்ளுங்கள். (2) ஒருபொழுதும் படிப்பின் மீது கோபித்துக் கொள்ளாதீர்கள். முரளியில் வரும் நல்ல நல்ல குறிப்புக்களை தாரணை செய்து கொண்டே இருங்கள். அப்பொழுது தான் முன்னேறும் கலை ஏற்பட முடியும்.

 

ஓம் சாந்தி.

இப்பொழுது இது ஞானத்தின் வகுப்பு மற்றும் அதிகாலையில் நடப்பது யோகத்தின் வகுப்பு. எந்த யோகம்? இதை மிகவும் நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். ஏனெனில் நிறைய மனிதர்கள் ஹடயோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஹடயோகத்தை மனிதர்கள் கற்பிக்கிறார்கள். இது இராஜயோகம் ஆகும். இதை பரமாத்மா கற்பிக்கிறார். ஏனெனில் இராஜயோகத்தை கற்பிப்பதற்கு இராஜாவோ யாரும் இல்லை. இந்த லட்சுமி நாராயணர் பகவதி பகவான் ஆவார்கள். அவர்கள் இராஜயோகம் கற்றார்கள். அதனால் தான் பின் வருங்காலத்தில் பகவதி பகவான் ஆனார்கள். இது தான் புருஷோத்தம சங்கம யுகத்தின் விளக்கவுரை ஆகும். இதற்கு புருஷோத்தம யுகம் என்று கூறப்படுகிறது. பழைய உலகம் மற்றும் புது உலகத்திற்கு இடையே உள்ள யுகம். பழைய மனிதர்கள் மற்றும் புதிய தேவதைகள். இச்சமயத்தில் எல்லா மனிதர்களும் பழையவர்கள் ஆவார்கள். புதிய உலகத்தில் புது ஆத்மாக்கள், தேவதைகள் இருப்பார்கள். அங்கு மனிதர்கள் என்று கூற மாட்டார்கள். மனிதர்கள் தான் ஆனால் தெய்வீக குணங்கள் உடையவர்களாக இருப்பார்கள். எனவே தேவி தேவதை என்று கூறப்படுகிறது. தூய்மையாகவும் இருப்பார்கள். காமம் மகா எதிரி ஆகும் என்பதை தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இது இராவணனினுடைய எல்லாவற்றையும் விட முதல் பூதம் ஆகும். ஒரு சிலர் மிகவும் கோபிக்கிறார்கள் என்றால் ஏன் குரைக்கிறீர்கள் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு விகாரங்கள் பெரிய எதிரிகள் ஆகும். பேராசை, மோகத்திற்கு "குரைப்பது" என்று கூற மாட்டார்கள். மனிதர்களுக்குள் விஞ்ஞானத்தின் அகம்பாவத்தின் காரணமாக எவ்வளவு கோபம் இருக்கிறது. இதுவும் மிகவும் நஷ்டம் ஏற்படுத்த கூடியது ஆகும். காமத்தின் பூதம் முதல், இடை, கடை துக்கம் கொடுக்கக் கூடியது ஆகும். ஒருவர் மற்றவர் மீது காம வாள் செலுத்துகிறார்கள். இந்த எல்லா விஷயங்களையும் புரிந்துக் கொண்டு பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். உங்களைத் தவிர தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான உண்மையான வழியோ யாருமே கூற முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் தான் கூற முடியும். எல்லையில்லாத தந்தையிடமிருந்து இவ்வளவு பெரிய ஆஸ்தி எப்படி கிடைக்கிறது! யாருக்காவது புரிய வைக்க முடியவில்லை என்றால் அவசியம் படிப்பின் மீது கவனம் இல்லை என்பதாகும். புத்தி யோகம் எங்கோ அலைகிறது. யுத்த பூமி ஆகும் அல்லவா? யாருமே சுலபமான விஷயம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. மனதில் புயல்கள் அல்லது விகல்பங்கள் (தீய எண்ணங்கள்) ஏராளமாக விரும்பாவிடினும் கூட வரத் தான் செய்யும். இதில் குழப்பமடையக் கூடாது. யோக பலத்தினால் மாயை விலகி விடும். இதில் (புருஷார்த்தம்) முயற்சி நிறைய தேவை உள்ளது. தொழில் ஆகியவற்றில் எவ்வளவு களைத்துவிடுகிறார்கள். ஏனெனில் தேக அபிமானத்தில் இருக்கிறார்கள். தேக அபிமானத்தின் காரணமாக நிறைய பேச வேண்டி வருகிறது. ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஆத்ம அபிமானி ஆகும் பொழுது தந்தை என்ன புரிய வைக்கிறாரோ அதையே மற்றவர்களுக்கும் புரிய வைப்பார்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். குழந்தைகளே வெளிமுகமாக இருக்கக் கூடாது என்று தந்தை தான் அறிவுரை அளிப்பார். உள்முகமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் வெளிமுகமாக ஆக வேண்டி வந்தாலும் கூட பிறகும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் முயற்சி செய்து உள்முகமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் பாவங்கள் அழியும். இல்லையென்றால் பாவங்களும் அழியாது. உயர்ந்த பதவியும் அடைய மாட்டார்கள். பல பிறவிகளின் பாவங்கள் தலை மீது உள்ளது. எல்லாவற்றையும் விட அதிகமான பாவம் பிராமணர்களினுடையது ஆகும். அதில் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். யார் மிகவும் உயர்ந்தவர்கள் ஆகிறார்களோ அவர்களே முற்றிலுமே கீழானவர்கள் கூட ஆகிறார்கள். யார் இளவரசர் ஆகிறார்களோ அவர்களே பிறகு ஏழையாக கூட ஆக வேண்டியுள்ளது. நாடகத்தை நல்ல முறையில் புரிந்துக் கொள்ள வேண்டும். யார் முதலில் வந்தார்களோ அவர்கள் பின்னால் வருவார்கள். யார் முதலில் தூய்மையானவர்களாகிறார்களோ அவர்களே முதலில் தூய்மை யில்லாதவர்களாகிறார்கள். நான் கூட இவருடைய அநேக பிறவிகளின் கடைசியில், அது கூட வானப் பிரஸ்த நிலை ஆகும் பொழுது வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். இச்சமயம் சிறியவர் பெரியவர் அனைவருக்கும் வானப் பிரஸ்த நிலை ஆகும். அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் என்று தந்தைக்காக பாடல் கூட உள்ளது. அது புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் ஆகிறது. இந்த புருஷோத்தம சங்கம யுகம் கூட நினைவில் கொள்ள வேண்டும். எப்படி மனிதர்களுக்கு கலியுகம் நினைவிருக்கிறது. சங்கம யுகம் உங்களுக்கு மட்டுமே நினைவில் உள்ளது. உங்களிடையேயும் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். அநேகருக்கோ அவர்களுடைய தொழில் தான் நினைவில் இருக்கும். வெளியிலிருந்து முகம் (எண்ணம்) அகற்றப்பட்டு இருந்தால் தாரணையும் ஆகி விடும். "கடைசியில் மனைவி நினைவிற்கு வந்தால்.. .. .." என்ற பழமொழியும் இருக்கிறது. எந்த பாடல்கள் அல்லது நல்ல நல்ல சுலோகங்கள் நமது ஞானத்திற்கு சம்மந்தப்பட்டதாக உள்ளதோ அவற்றை வைத்திருக்க வேண்டும். எப்படி "சீ சீ உலகத்திலிருந்து போகத்தான் வேண்டும்". இரண்டாவது "கண்ணில்லாதவருக்கு வழி காண்பியுங்கள்".... இது போன்ற பாடல்கள் நம்மிடம் வைத்திருக்க வேண்டும். பாடல்கள் அமைத்ததோ மனிதர்கள் ஆவார்கள். அவர்களுக்கு இந்த சங்கமம் பற்றி தெரியவே தெரியாது. இச்சமயத்தில் எல்லோரும் ஞானக் கண் இல்லாத குருடர்கள் ஆவார்கள். பரமாத்மா வரும் பொழுது தான் வந்து வழி காண்பிக்கிறார். தனியாக ஒருவருக்கு மட்டும் வழி காண்பிக்கமாட்டார். இது அவருடைய சிவசக்தி சேனை ஆகும்.இந்த சக்தி சேனை என்ன செய்கிறது. ஸ்ரீமத் படி புதிய உலகத்தின் ஸ்தாபனை. நீங்களும் இராஜயோகம் கற்கிறீர்கள். இதை பகவானைத் தவிர வேறு யாரும் கற்பிக்க முடியாது. பகவானோ நிராகாரமானவர் ஆவார். அவருக்கோ தனக்கென்று சரீரம் இல்லை. மற்றவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் சரீரதாரி ஆவார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவரோ ஒரே ஒரு தந்தை ஆவார். அவர் உங்களுக்கு கற்பிக்கிறார். இதை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். உங்களிடையேயும் கூட வரிசைக்கிரமமாக உள்ளீர்கள். எனவே நீங்கள் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். பெரிய பெரிய பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டும். மனிதர்கள் கற்பிக்கும் யோகம் ஹடயோகம் ஆகும். இராஜயோகத்தை ஒரு பரமபிதா பரமாத்மா தந்தை தான் கற்பிக்கிறார். இதன் மூலம் முக்தி ஜீவன் முக்தி கிடைக்கிறது. ஹடயோகத்தினால் இரண்டுமே கிடைப்பதில்லை. அந்த ஹடயோகம் பரம்பரையாக நடந்து வருகிறது. பழையது ஆகும். இந்த இராஜயோகத்தை சங்கம யுகத்தில் மட்டுமே தந்தை கற்பிக்கிறார்.

 

எப்பொழுது சொற்பொழிவு நிகழ்த்துகிறீர்களோ முதலில் தலைப்புக்கள் (டாபிக்ஸ்) தயார் செய்திருக்க வேண்டும் என்று பாபா புரிய வைத்துள்ளார். ஆனால் இது போல செய்வதில்லை. ஸ்ரீமத்படி நடப்பவர்கள் மிகவும் குறைவாக உள்ளார்கள். முதலில் சொற்பொழிவுக்கான கருத்துக்களை எழுதுங்கள். பிறகு சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். அப்பொழுது தான் நினைவிற்கு வரும். நீங்கள் வாய்மொழியாக சொற்பொழிவாற்ற வேண்டும். நீங்கள் படித்தோ கூறக் கூடாது. யார் தங்களை ஆத்மா என்று உணர்ந்து பேசுகிறார்களோ அவர்களிடம் சிந்தனை கடலைக் கடைந்து சொற்பொழிவாற்றக் கூடிய பலம் இருக்கும். நாம் சகோதரர்களுக்கு கூறுகிறோம். இவ்வாறு உணர்ந்திருக்கும் பொழுது பலம் இருக்கும். இது மிகவும் உயர்ந்த குறிக்கோள் ஆகும் அல்லவா? சவால் ஏற்றுக் கொள்வது சுலபமானது அல்ல (சித்தி வீட்டிற்கு செல்வது போல). எந்த அளவு நீங்கள் ருஸ்தம் (பலம் வாய்ந்த வீரர்) ஆகிறீர்களோ அந்த அளவு மாயையின் தாக்குதல் ஆகும். அங்கதன் அல்லது மகாவீரர் கூட பலவானாக இருந்தார். அதனால் தான் இராவணன் கூட என்னை அசைத்து காண்பிக்கட்டுமே என்றார். இது ஸ்தூல விஷயங்கள் அல்ல.சாஸ்திரங்களில் இந்த கட்டு கதைகள் உள்ளன. பரமாத்மா தந்தையின் பொன்னான ஞானத்தை கேட்ட காதுகள் கட்டு கதைகளைக் கேட்டு கேட்டு முற்றிலும் கல்லாக ஆகி விட்டுள்ளன. பக்தி மார்க்கத்தில் தலையும் வழுக்கையாகி விட்டது. பின் பைசாவும் இழந்தீர்கள். படி கீழேயே இறங்கி வந்தீர்கள். இப்பொழுது தந்தை மேலே ஏறுவதற்கு கற்பிக்கிறார். இப்பொழுது உங்களுடையது முன்னேறும் கலை ஆகும். புத்தியோகம் தந்தையிடம் ஈடுபடுத்தவில்லை என்றால் அவசியம் கீழே தான் விழுவீர்கள். தந்தையை நினைவு செய்யும் பொழுது மேலே ஏறுகிறீர்கள். நிறைய உழைப்பு உள்ளது. ஆனால் கவனக்குறைவாக இருக்கிறார்கள். தொழிலில் தந்தை மற்றும் ஞானத்தை மறந்து விடுகிறார்கள். மாயை புயலில் கொண்டு வருகிறது - இன்னார் இப்படி. இது செய்கிறார். இந்த பிராமணி இவ்வாறு இருக்கிறார். இவரிடம் இந்த அவகுணம் உள்ளது. அடே இதில் உங்களுக்கென்ன ஆகிறது. சர்வகுண சம்பன்னராகவோ யாருமே ஆகவில்லை. யாருடைய அவ குணத்தையும் பார்க்காமல் குணத்தை கிரகிக்க வேண்டும். அவ குணத்தை பார்த்தீர்கள் என்றால் முகத்தை திருப்பிக் கொள்ளுங்கள். முரளியோ கிடைக்கிறது. அதை கேட்டு தாரணை செய்து கொண்டே இருங்கள். பாபா கூறும் இந்த விஷயம் முற்றிலுமே சரியானது ஆகும் என்று புத்தி மூலம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த விஷயம் சரி என்று படவில்லையோ அதை விட்டுவிட வேண்டும். படிப்பு மீது ஒரு பொழுதும் கோபித்துக் கொள்ளக் கூடாது. பிராமணியிடம் அல்லது படிப்பு மீது கோபித்து கொள்வது என்றால் தந்தையிடம் கோபித்து கொள்வது ஆகும். அது போல நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் பிறகு சென்டருக்கு வருவதில்லை. யார் எப்படி இருந்தாலும் சரி உங்கள் வேலை முரளி சம்மந்தப்பட்டது முரளியில் என்ன கூறப்படுகிறதோ அதிலிருந்து நல்ல நல்ல குறிப்புக்கள் (பாயிண்ட்ஸ்) எடுத்து தாரணை செய்ய வேண்டும். யாரிடமும் பேசுவதில் மகிழ்ச்சி ஏற்படுவதில்லை என்றால் அமைதியாக முரளி கேட்டு விட்டு போய்விட வேண்டும். நான் இங்கு வரமாட்டேன் என்று கோபித்துக் கெள்ளக் கூடாது. வரிசைக் கிரமமாகவோ இருக்கிறார்கள். காலை எழுந்து நீங்கள் நினைவில் அமருவது கூட நல்லது. பாபா வந்து "ஸர்ச் லைட்" (ஒளி மற்றும் சக்தி) கொடுக்கிறார். யோகத்தில் அமர்ந்திருக்கும் பொழுது நெருங்கிய குழந்தைகள் முதலில் நினைவிற்கு வருகிறார்கள் என்று பாபா அனுபவம் கூறுகிறார். வெளி நாட்டில் இருந்தாலும் சரி, கல்கத்தாவில் இருந்தாலும் சரி முதலில் நெருங்கிய குழந்தைகளை நினைவு செய்து ஸர்ச் லைட் கொடுக்கிறார். குழந்தைகளோ இங்கும் தான் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் பாபா சேவை செய்யும் குழந்தைகளை நினைவு செய்கிறார். எப்படி நல்ல குழந்தைகள் சரீரத்தை விட்டு செல்கிறார்கள் என்றால் அவர்களுடைய ஆத்மாவையும் நினைவு செய்கிறார். நிறையசேவை செய்து சென்றுள்ளார்கள். எனவே அவசியம் இங்கேயே தான் அருகில் ஏதாவது வீட்டில் இருப்பார்கள். எனவே அவர்களையும் பாபா நினைவு செய்து ஒளி மற்றும் வழி கொடுக்கிறார். எல்லோருமே பாபாவின் குழந்தைகள் தான். ஆனால் யார் யார் நன்றாக சேவை செய்கிறார்கள் என்பதையோ எல்லோரும் அறிந்துள்ளார்கள். இங்கு ஸர்ச் லைட் (சக்தி) கொடுங்கள் என்று பாபா கூறும் பொழுது அங்கும் கொடுக்கிறார். இரண்டு என்ஜின் உள்ளது அல்லவா? இவரும் இவ்வளவு உயர்ந்த பதவியை அடைகிறார் என்றால் அவசியம் சக்தி இருக்கக் கூடும். சிவபாபா தான் படிப்பிக்கிறார் என்று எப்பொழுதும் நினையுங்கள் என்று பாபா தான் கூறுகிறார். எனவே அவருடைய நினைவு இருக்க வேண்டும். மற்றபடி இங்கு இரண்டு விளக்குகள் உள்ளன என்பதையோ புரிந்துள்ளீர்கள். மற்ற வேறு யாருக்குள்ளும் இரண்டு விளக்குகள் இல்லை. எனவே இங்கு இரண்டு விளக்குகளுக்கு முன்னால் வரும் பொழுது நல்ல முறையில் (ரிஃப்ரெஷ்) புத்துணர்வு பெறுகிறார்கள். அதிகாலை நேரம் கூட நன்றாக உள்ளது. குளித்து விட்டு மொட்டை மாடியில் தனியாக ஏகாந்தத்தில் சென்று விட வேண்டும். பாபா இதற்காகத் தான் பெரிய பெரிய மொட்டை மாடிகளை அமைத்துள்ளார். பாதிரிமார்கள் கூட முற்றிலுமாக அமைதியில் செல்கிறார்கள். அவசியம் கிறிஸ்துவை நினைவு செய்து கொண்டிருக்க கூடும். இறைவனை அறியாமல் உள்ளார்கள். இறைவனை நினைவு செய்து கொண்டிருப்பதாக இருந்தால் சிவலிங்கம் தான் புத்தியில் வந்து கொண்டிருக்க கூடும். தங்களுடைய போதையிலேயே செல்கிறார்கள். எனவே அவர்களிடமிருந்து குணத்தை எடுக்க வேண்டும். தத்தாதிரேயருக்கு கூட அவர் எல்லாரிடமிருந்தும் குணத்தை கிரகித்து கொண்டிருந்தார் என்று கூறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்களும் வரிசைக்கிரமமான தத்தாத்ரேயர் ஆவீர்கள். இங்கு ஏகாந்தம் மிகவும் நன்றாக உள்ளது. எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சம்பாத்தியம் செய்து கொள்ள முடியும். வெளியிலோ சிக்கலான வேலைகள் நினைவிற்கு வரும். 4 மணியின் நேரம் கூட மிகவும் நல்லது ஆகும். வெளியில் எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் அமர்ந்துள்ளீர்கள். காவல் கூட இருக்கிறது. யக்ஞத்தில் காவல் கூட வைக்க வேண்டி உள்ளது. யக்ஞத்தின் ஒவ்வொரு பொருளையும் பாதுகாக்க வேண்டி உள்ளது. ஏனெனில் யக்ஞத்தின் ஒவ்வொரு பொருளும் கூட மிக மிக மதிப்புடையது ஆகும். எனவே பாதுகாப்பிற்கு முதலிடம் (ஸேஃப்டி ஃபர்ஸ்ட்) இங்கு யாரும் வரமாட்டார்கள். இங்கு நகை ஆகியவையோ ஒன்றும் இல்லை என்று புரிந்துள்ளார்கள். இது கோவில் கூட இல்லை. தற்காலத்தில் எல்லா இடங்களிலும் திருட்டு நடக்கிறது. வெளிநாடுகளில் கூட பழைய பொருட்களை திருடிக் கொண்டு எடுத்து செல்கிறார்கள். காமம் மிகவும் அசுத்தமானது. காமம் மகா எதிரி ஆகும். அது எல்லாவற்றையும் மறக்க வைத்து விடுகிறது. எனவே உங்களுடையது காலையில் ஒரு வகுப்பு நடக்கிறது. அது என்றும் ஆரோக்கியமானதாக (எவர் ஹெல்தி) ஆக்கக் கூடியது. மேலும் பிறகு இது (எவர் வெல்தி) என்றும் செல்வந்தராக ஆக்கக் கூடியது. தந்தையை நினைவும் செய்ய வேண்டும். பிறகு சிந்தனைக் கடலை கடையவும் வேண்டும். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் ஆஸ்தியும் நினைவிற்கு வரும். இந்த யுக்தி மிகவுமே சுலபமானது ஆகும். எப்படி தந்தை விதை ரூபமாக இருக்கிறார். விருட்சத்தின் முதல், இடை, கடையை அறிந்துள்ளார். உங்களுடைய தொழிலும் இதுவே ஆகும். விதையை நினைவு செய்வதால் தூய்மையாக ஆவீர்கள். சக்கரத்தை நினைவு செய்தீர்கள் என்றால் சக்கரவர்த்தி ராஜா ஆகி விடுவீர்கள். அதாவது செல்வம் கிடைக்கும். விக்கிரம ராஜா மற்றும் விகர்மாஜீத் ராஜா இருவரின் நூற்றாண்டையும் கலப்படம் செய்துவிட்டுள்ளார்கள். இராவணன் வந்த உடன் விக்கிரம நூற்றாண்டு ஆரம்பமாகிவிட்டது. தேதி மாறி விட்டது. அது (விகர்மாஜீத்) ஒன்றிலிருந்து 2500 வருடங்கள் வரை நடக்கிறது. பிறகு 2500லிருந்து 5000 வருடங்கள் வரை நடக்கிறது. இந்துக்களுக்கோ தங்கள் தர்மம் பற்றி தெரியாது. இந்த ஒரு தர்மத்தினர் தான் உண்மையான தங்கள் தர்மத்தை மறந்து அதர்மத்தினராக ஆகி இருக்கிறார்கள். தர்ம ஸ்தாபகர்கள் கூட மறந்துள்ளார்கள். ஆரிய சமாஜம் எப்பொழுது ஆரம்பமாகியது என்பதை நீங்கள் புரிய வைக்க முடியும். ஆரியர்கள் (திருந்தியவர்களாக) சத்யுகத்தில் இருந்தார்கள். (அன்-ஆரியர்கள்) திருந்தாதவர்கள் இப்பொழுது இருக்கிறார்கள். இப்பொழுது தந்தை வந்து உங்களை திருத்துகிறார். உங்கள் புத்தியில் முழு சக்கரம் உள்ளது. யார் நல்ல முயற்சி செய்தவர்களோ அவர்கள் சுயம் தாங்களும் அறிந்துள்ளார்கள் மற்றும் மற்றவர்களையும் முயற்சி செய்விக்கிறார்கள். தந்தை ஏழைப்பங்காளன் ஆவார். கிராம மக்களுக்கு செய்தி கொடுக்க வேண்டும். 6 படங்கள் போதுமானது. 84ன் சக்கரத்தின் படம் மிகவும் நன்றாக உள்ளது. அது பற்றி நல்ல முறையில் புரிய வையுங்கள். ஆனால் மாயை எவ்வளவு பிரபலமானது என்றால் அனைத்தையும் மறக்க வைத்துவிடுகிறது. இங்கோ இரண்டு ஒளிகள்(லைட்) சேர்ந்துள்ளன. ஒன்று தந்தையினுடையது, மற்றொன்று இவருடையது-இரண்டுமே வலிமையானது ஆகும். ஆனால் இவர் நீங்கள் ஒரே ஒரு வலிமையான ஒளியை பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். எல்லா குழந்தைகளும் இங்கு ஓடி வருகிறார்கள். டபுள் லைட் இருக்கிறார்கள் என்று புரிந்துள்ளார்கள். தந்தை நேரிடையாகக் கூறுகிறார். உன்னிடமே கேட்பேன் உன்னிடமே பேசுவேன்... என்ற பாடல் உள்ளது. ஆனால் இங்கேயே (சென்டர்) அமர்ந்துவிட வேண்டும் என்பதல்ல. 8 நாட்கள் போதுமானது. இங்கேயே அமர்த்தி விட்டோம் என்றால் ஏராளமானோர் ஆகிவிடுவார்கள்.

 

நாடகப்படி எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உங்களுக்கு மிகவுமே உள்ளூர குஷி இருக்க வேண்டும். யார் தனக்குச் சமானமாக ஆக்குகிறார்களோ அவர்களுக்கு அந்த குஷி இருக்கும். பிரஜைகளை உருவாக்கினால் தானே இராஜா ஆக முடியும். பாஸ்போர்ட் கூட வேண்டும். பாபாவிடம் யாராவது கேட்டார்கள் என்றால் "என்னிடம் என்ன அவகுணம் உள்ளது என்று உங்களையே பாருங்கள்" என்று பாபா சட்டென்று கூறி விடுவார். நிந்தனை, புகழ் எல்லாமே சகித்துக் கொள்ள வேண்டி வருகிறது. யக்ஞத்திலிருந்து என்ன கிடைத்தாலும் அதில் குஷியாக இருக்க வேண்டும். யக்ஞத்தின் போஜனத்தின் மீதோ மிகுந்த அன்பு வேண்டும். சந்நியாசிகள் தட்டை கழுவிக் குடிக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு உணவின் மகத்துவம் உள்ளது. தானியங்கள் கூட கிடைக்காமல் போய் விடும். அப்பேர்ப்பட்ட நேரம் வரப்போகிறது. எனவே அனைத்தையும் சகித்து கொள்ள வேண்டி வருகிறது. அப்பொழுது தான் பாஸ் ஆக முடியும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1 . யாரிடமாவது ஏதேனும் அவகுணம் தென்பட்டது என்றால் நமது முகத்தைத் திருப்பிக் கொண்டு விட வேண்டும். படிப்பின் மீது ஒரு பொழுதும் கோபித்துக் கொள்ளக் கூடாது. தத்தாத்திரேயரைப் போல எல்லோரிடமிருந்தும் குணத்தை கிரகிக்க வேண்டும்.

 

2. வெளி விஷயங்களிலிருந்து புத்தியை நீக்கி உள்முகமாக இருப்பதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும். தொழில் ஆகியவைகளில் இருந்தாலும் ஆத்ம அபிமானியாக இருக்க வேண்டும். அதிகமான உரையாடலில் (விவாதம்) வரக் கூடாது.

 

வரதானம்:

சுகத்தின் அனுபவ சொரூபமானவர் ஆகி ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சுகத்தை தரக்கூடிய மாஸ்டர் சுகம் அளிக்கும் வள்ளல் ஆகுக.

 

எந்த குழந்தை சதா யதார்த்தமான காரியம் செய்கிறார்களோ, அவர்கள் அந்த காரியத்தில் வெளிப்படையான பலன் குஷி மற்றும் சக்தி கிடைக்கிறது. அவர்களுடைய மனம் சதா குஷியாக இருக்கிறது. அவர்களுடைய எண்ணத்தில் கூட துக்கத்தின் அலை வர முடியாது. சங்கமயுக பிராமணர்கள் என்றாலே துக்கத்தின் பெயர் அடையாளம் கூட இருக்காது. ஏனெனில் சுகத்தை தரக்கூடிய வள்ளலின் குழந்தைகளாக இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட சுகத்தை தரக்கூடிய வள்ளலின் குழந்தைகள் தானும் கூட மாஸ்டர் சுகத்தை தரக்கூடிய வள்ளல் ஆவார்கள். அவர்கள் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சதா சுகத்தை தருவார்கள். அவர்கள் ஒருபொழுதும் துக்கத்தையும் தரவும் மாட்டார்கள், பெறவும் மாட்டார்கள்.

 

சுலோகன்:

மாஸ்டர் வள்ளலாகி சகயோகி, அன்பு மற்றும் இரக்கம் கொள்வது இது தான் கருணை மனமுடைய ஆத்மாவின் அடையாளம்.

 

ஓம்சாந்தி