13.05.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே ! அமிர்தவேளையில் தன்னுடைய அனைத்து சங்கல்பங்களையும் பூட்டி வைத்து விட்டு ஒரு தந்தையை அன்போடு நினையுங்கள். தந்தையுடன் இனிமையிலும் இனிமையாக உரையாடுங்கள்.

 

கேள்வி :

குழந்தைகளாகிய உங்களின் ஒவ்வொரு விஷயத்திலும் பொருள் அடங்கியிருக்கிறது. யார் பொருள் நிறைந்த வார்த்தைகளைப் பேச முடியும்?

 

பதில் :

யார் ஆத்ம உணர்வில் இருக்கிறார்களோ அவர்களே ஒவ்வொரு வார்த்தையையும் பொருளுடன் பேச முடியும். பாபா சங்கமத்தில் உங்களுக்கு என்னென்ன கற்பிக்கின்றாரோ அது அனைத்திலும் பொருள் நிறைந்திருக்கிறது. தேக உணர்வில் வந்து மனிதர்கள் என்னென்ன பேசுகிறார்களோ அது அர்த்தமற்றதாக அனர்த்தமாக இருக்கிறது. அதனால் எந்தப் பலனும் இல்லை. நன்மையும் இல்லை.

 

பாட்டு :

கண்ணில்லாதவர்களுக்கு வழிகாட்டு பிரபுவே......

 

ஓம் சாந்தி.

இது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் பாடலாகும். உங்களுக்கு பாடல்களின் அவசியமில்லை. எந்தத் துன்பத்தின் விஷயமும் இல்லை. பக்திமார்க்கத்தில் நிறைய துன்பங்கள் இருக்கிறது. பிராமணர்களுக்கு உணவளித்தல், இதை செய்தல், தீர்த்த யாத்திரைகளுக்கு செல்லுதல் என எத்தனை பழக்க வழக்கங்கள் உள்ளன! இங்கே அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார். இதில் எதுவும் செய்ய வேண்டியதில்லை. வாயில் சிவ சிவ என்றும் கூறவேண்டியதில்லை. இப்படிப்பட்ட சட்டம் எதுவும் கிடையாது. இதனால் எந்தப் பலனும் கிடையாது. உள்ளுக்குள் நான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும் என பாபா கூறுகின்றார். என்னை மட்டும் நினையுங்கள், உள்நோக்கு முகமுடையவராகி தந்தையை நினையுங்கள் என பாபா கூறுகிறார். அவ்வாறு நினைத்தால் உங்களுடைய பாவங்கள் எரிந்து போகும் என பாபா உறுதியளிக்கிறார். இதுவே யோக அக்னியாகும். இதன் மூலம் உங்களுடைய விகர்மங்கள் அழிந்துபோகும். பிறகு நீங்கள் வீட்டிற்குத் திரும்பப் போவீர்கள். வரலாறு திரும்ப நடக்கும். இது அனைத்தும் தனக்குத்தானே பேசிக்கொள்வதற்கான வழியாகும். தனக்குத்தானே பேசிக்கொண்டே இருங்கள். நான் கல்ப கல்பமாக உங்களுக்கு இந்த வழிமுறைகளைக் கூறுகின்றேன் என பாபா கூறுகின்றார். இந்த மரம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடையும் என அறிகிறீர்கள். இச்சமயத்தில் தான் மாயாவின் புயலும் வீசுகிறது. அப்பொழுது நான் வந்து குழந்தைகளாகிய உங்களை மாயாவின் பந்தனத்தில் இருந்து விடுவிக்கிறேன். சத்யுகத்தில் எந்த பந்தனமும் இல்லை. இந்த புருஷோத்தம யுகம் கூட உங்களுடைய புத்தியில் பொருளுடன் இருக்கிறது. இங்கே ஒவ்வொரு விஷயத்திலும் பொருள் இருக்கிறது. தேக உணர்வில் இருந்து யார் பேசுகிறார்களோ அது அனர்த்தமாகும். ஆத்ம உணர்வில் இருந்து பேசு பவர்களே பொருளுடன் பேசுகிறார்கள். அதிலிருந்து பலன் கிடைக்கும். இப்போது பக்தி மார்க்கத்தில் எவ்வளவு துன்பங்கள் இருக்கின்றன. தீர்த்த யாத்திரை செல்கிறீர்கள், இதைச்செய்தல், இது அனைத்தும் பகவானை அடைவதற்கான வழி என நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட திரும்பிப் போக முடியாது என குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். முதல் நம்பரில் உலகத்திற்கே அதிபதியாக இலட்சுமி நாராயணன் இருந்தனர். அவர்களே தான் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என தெரிவிக்கிறார். பிறகு மற்றவர்கள் எப்படி விடுபட்டுப் போக முடியும். அனைவரும் சக்கரத்தில் வருகிறார்கள் என்றால் கிருஷ்ணர் மட்டும் எப்படி எப்பொழுதும் நிலையாக இருக்கிறார் என்று கூறமுடியும். ஆம். கிருஷ்ணரின் பெயர், ரூபம் போய்விட்டது. மற்றபடி ஆத்மா ஏதாவது ஒரு ரூபத்தில் இருக்கிறது. இந்த விஷயங்கள் அனைத்தையும் பாபா குழந்தைகளுக்குப் புரிய வைத்திருக்கிறார். இது படிப்பாகும். மாணவ வாழ்க்கையில் கவனம் வைக்க வேண்டும். தினந்தோறும் தன்னுடைய சார்ட்டை வைக்க நேரத்தை ஒதுக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நிறைய பந்தனம் இருக்கிறது. வேலைக்கு செல்பவருக்கு அவ்வளவு பந்தனம் இல்லை. அவர்கள் தனது வேலையை முடித்ததும் முடிந்தது. வியாபாரிகளிடம் எப்போது வாடிக்கையாளர்கள் வந்தாலும் எடுத்துக் கொடுக்க வேண்டும். புத்தியோகம் வெளியே செல்கிறது. எனவே முயற்சி செய்து நேரத்தை ஒதுக்க வேண்டும். அமிர்தவேளை நல்ல நேரம் ஆகும். அச்சமயம் வெளி எண்ணங்களைப் பூட்டி வைத்துவிட வேண்டும். வேறு எந்த எண்ணமும் வரக்கூடாது. தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். பாபா ஞானக்கடல், பதீத பாவனர் என பாபாவின் மகிமைகளை எழுத வேண்டும். பாபா நம்மை உலகத்திற்கே அதிபதியாக்குகின்றார். அவருடைய ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். அனைத்தையும் விட உயர்ந்த வழி மன்மனாபவ ஆகும். வேறு யாரும் சொல்ல முடியாது. தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆவதற்காக கல்ப கல்பமாக இந்த வழி கிடைக்கிறது. என்னை மட்டும் நினையுங்கள் என்று மட்டுமே பாபா கூறுகின்றார். இதற்கு வசீகரமந்திரம் என்று கூறப்படுகிறது. பொருளுடன் நினைக்கும் பொழுது தான் மகிழ்ச்சி ஏற்படும்.

 

தூய்மையான நினைவு இருக்க வேண்டும் என பாபா கூறுகின்றார். பக்தியில் கூட ஒரு சிவனின் பூஜை தூய்மையானது. பிறகு தூய்மையற்றதாகி பலரின் பக்தி செய்கிறார்கள். முதலில் அத்வைத பக்தி இருந்தது. ஒருவரை மட்டும் பக்தி செய்தனர். அவர் ஒருவருடைய ஞானத்தை மட்டுமே கேட்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் யாருடைய பக்தி செய்தீர்களோ அவரே வந்து இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்பொழுது நான் வந்திருக்கிறேன், இந்த பக்தியின் பாகம் நிறைவடைகிறது என உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டு இருக்கிறார். நீங்கள் தான் ஒரு சிவ தந்தையின் கோயிலை கட்டினீர்கள். அச்சமயம் நீங்கள் தூய்மையான பக்தராக இருந்தீர்கள். ஆகவே மிகவும் சுகமாக இருந்தீர்கள். பிறகு தூய்மையற்ற பக்தராக ஆகியதால் துவைதத்தில் வந்து விட்டீர்கள். அப்போது சிறிது துக்கம் ஏற்படுகிறது. ஒரு தந்தை அனைவருக்கும் சுகம் கொடுப்பவர் அல்லவா? நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு மந்திரம் அளிக்கிறேன் என பாபா கூறுகின்றார். ஒருவர் கூறக்கூடிய மந்திரத்தை கேளுங்கள். இங்கே யாரும் தேகதாரி கிடையாது. இங்கே நீங்கள் பாப்தாதாவிடம் வந்துள்ளீர்கள். சிவபாபாவை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. அனைவரும் அவரைத்தான் நினைக்கிறார்கள். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. இலட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. அவர்களை இவ்வாறு யார் மாற்றியது. நீங்கள் அவர்களை பூஜித்துக் கொண்டு இருக்கிறீர்கள். மகாலட்சுமி யார் என யாருக்கும் தெரியவில்லை. மகாலட்சுமி முற்பிறவியில் யாராக இருந்தார். அவரே ஜகத்தம்பா என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் அனைவரும் தாய்மார்கள், வந்தே மாதரம். முழு உலகத்தின் மீது நீங்கள் உங்களது யுக்தியைக் கை யாளுகின்றீர்கள். பாரத மாதா என்பது ஒருவரின் பெயர் மட்டும் அல்ல. நீங்கள் அனைவரும் சிவனிடமிருந்து யோக பலத்தால் சக்தி அடைகிறீர்கள். சக்தி அடைவதில் தான் மாயா இடையூறு செய்கிறது. யுத்தத்தில் யாராவது இடையூறு செய்தால் சக்திசாலியாகி போரிட வேண்டும். யாராவது இடையூறு செய்தால் நீங்கள் மாட்டிக் கொள்ளக்கூடாது. இதுவே மாயாவின் யுத்தம் ஆகும். மற்றபடி கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் யுத்தம் நடைபெறவில்லை. அவர்களுடையது தங்களுக்குள்ளேயே யுத்தமாகும். மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது ஒரு அடி இரண்டு அடி நிலத்திற்காக கழுத்தை வெட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு நாடகம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என பாபா புரிய வைக்கிறார். இராம இராஜ்யம், இராவண இராஜ்யம், இப்பொழுது நாம் இராம இராஜ்யத்திற்குப் போகிறோம் அங்கே அளவற்ற சுகம் இருக்கிறது என்ற ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது. பெயரே சுகதாமம் ஆகும். அங்கே துக்கத்தின் பெயர் அடையாளம் இருக்காது. இப்போது பாபா வந்து இப்படிப் பட்ட இராஜ்யம் தருகிறார் என்றால் குழந்தைகள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்! குழந்தைகளே களைப்படையாதீர்கள் என அடிக்கடி கூறுகிறேன். சிவபாபாவை நினைத்துக் கொண்டே இருங்கள். அவர் பிந்துவாக இருக்கிறார். ஆத்மாக்களாகிய நாமும் பிந்துவாக (புள்ளியாக) இருக்கின்றோம். இங்கே நடிப்பதற்காக வந்திருக்கிறோம். இப்போது நடிப்பு முடியப்போகிறது. என்னை நினைத்தால் விகர்மங்கள் அழியும் என பாபா கூறுகின்றார். விகர்மங்கள் ஆத்மாவில் தான் பதிகிறதல்லவா? சரீரம் இங்கே அழிந்து போகும். நிறைய மனிதர்கள் ஏதாவது பாவகர்மம் செய்தால் தனது உடலை அழித்துக் கொள்கிறார்கள். ஆனால் இதனால் எந்தப் பாவமும் அழிவதில்லை. பாவ ஆத்மா என்று கூறப்படுகிறது. சாது சந்நியாசி போன்றோர் ஆத்மாவில் எதுவும் ஒட்டாது, ஆத்மாவே பரமாத்மா என்று கூறி விடுகிறார்கள். இவ்வாறு பல வழிகள் இருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு ஒரே ஒரு ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது. பாபா உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண்ணைக் கொடுத்துள்ளார். முன்பு ஈஸ்வரனைப் பற்றி எதையும் அறியவில்லை. சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது, ஆத்மா எவ்வளவு சிறியதாக இருக்கிறது, முதன் முதலில் ஆத்மாவைப் பற்றி புரிய வைக்கிறார். ஆத்மா மிகவும் சூட்சுமமாக இருக்கிறது. அதனுடைய சாட்சாத்காரம் ஏற்படுகிறது. அது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயம் ஆகும். ஞானத்தின் விஷயங்களை பாபா தான் புரிய வைக்கின்றார். அவரும் புருவ மத்தியில் அருகில் வந்து அமர்கின்றார். இவரும் உடனே புரிந்து கொள்கிறார். இது அனைத்தும் புதிய விஷயங்கள். பாபா தான் புரிய வைக்கின்றார். இதை உறுதியாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மறக்கக்கூடாது. பாபாவை எவ்வளவு நினைவு செய்கிறீர்களோ அவ்வளவு விகர்மம் அழியும். விகர்மங்கள் அழியும் ஆதாரத்தில் தான் உங்கள் எதிர்காலம் இருக்கிறது. குழந்தைகளாகிய உங்களின் கூடவே பாரத கண்டமும் அனைத்தையும் விட சௌபாக்கியசாயாகும். இதைப்போன்று சௌபாக்கியசாலி வேறு எந்த கண்டமும் கிடையாது. இங்கே பாபா வருகிறார். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. அதற்கு அல்லாவின் தோட்டம் என்று பெயர். பாபா மீண்டும் பாரதத்தை மலர்களின் தோட்டமாக மாற்றிக் கொண்டு இருக்கிறார், நாம் அங்கே செல்வதற்காகத் தான் படித்துக் கொண்டு இருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். சாட்சாத்காரமும் கிடைக்கிறது. இது அதே மகாபாரதப் போர்தான், பிறகு இது போன்ற சண்டைகள் நடக்காது என அறிகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்காக நிச்சயம் புது உலகம் வேண்டும். புது உலகம் இருந்தது அல்லவா?. பாரதம் சொர்க்கமாக இருந்தது. 5000 வருடம் ஆயிற்று, இலட்சக்கணக்கான வருடம் கிடையாது. இலட்சக்கணக்கான வருடம் ஆகியிருந்தால் மனிதர்களை எண்ண முடியாமல் போயிருக்கும்! அவ்வளவு மக்கள் தொகை இல்லை எனும்பொழுது இத்தனை வருடங்கள் எப்படி ஆகமுடியும் என்பது கூட யாருடைய புத்தியிலும் இல்லை.

 

இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு நாம் உலகம் முழுவதும் ஆட்சி செய்தோம், வேறு கண்டம் இல்லை. பிறகு தான் அவைகள் தோன்றுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இந்த விஷயங்கள் அனைத்தும் இருக்கிறது. வேறு யாருடைய புத்தியிலும் முற்றிலும் இல்லை. சிறிதளவு சைகை காண்பித்தாலும் புரிந்து கொள்ளலாம். விஷயங்கள் சரியாக இருக்கிறது. நமக்கு முன்பு நிச்சயம் ஏதோ தர்மம் இருந்தது. ஒரே ஒரு ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் தான் இருந்தது. அது இப்பொழுது மறைந்துவிட்டது என நீங்கள் புரிய வைக்கலாம். யாரும் தன்னை தேவதா தர்மம் என கூறிக் கொள்ள முடியாது. நாம் ஆதிசநாதன தேவி தேவதா தர்மத்தினராக இருந்தோம். பிறகு அந்த தர்மம் எங்கே சென்றது என புரிந்து கொள்ளவில்லை. இந்து தர்மம் எங்கிருந்து வந்தது? யாருக்கும் இந்த வியங்களைப் பற்றி கவலை இல்லை. பாபா ஞானத்தின் கடல், ஞானத்தின் அத்தாரிட்டி. எனவே குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்கலாம். நிச்சயமாக அவர் வந்து ஞானம் சொல்லியிருப்பார். ஞானத்தினால் தான் சத்கதி கிடைக்கிறது. இதில் பிரேரனைக்கான விஷயம் எதுவும் இல்லை. எப்படி இப்போது வந்திருக்கிறேனோ அவ்வாறே கல்ப கல்பமாக வருகிறேன் என பாபா கூறுகின்றார். கல்பத்திற்குப் பிறகு கூட வந்து மீண்டும் அனைத்து குழந்தை களையும் சந்திப்பார். நீங்களும் இவ்வாறே சக்கரத்தில் சுழல்கிறீர்கள். இராஜ்யத்தை அடைகிறீர்கள். பிறகு இழக்கிறீர்கள். இது எல்லையற்ற நாடகம் ஆகும். நீங்கள் அனைவரும் நடிகர்கள். ஆத்மா நடிகராக இருந்து படைக்கக்கூடியவர், டைரக்டர், முக்கிய நடிகரை அறியவில்லை என்றால் எதற்கு பயன்? ஆத்மா எப்படி சரீரத்தை எடுக்கிறது, மேலும் அதன் பாகத்தை நடிக்கிறது என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். இப்போது மீண்டும் திரும்பிப் போக வேண்டும். இப்பொழுது இந்த பழைய உலகம் முடியப் போகின்றது. எவ்வளவு எளிதான விஷயம்!. பாபா எவ்வளவு குப்தமாக அமர்ந்திருக்கிறார் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். கோணிப்பைக்குள் இறைவனைப் பார்த்தார், இப்போது பார்த்தார் என்று சொன்னாலும், அறிந்து கொண்டார் என்று சொன்னாலும் விஷயம் ஒன்றுதான். ஆத்மாவைப் பார்க்க முடியும். ஆனால் அதிலும் எந்த நன்மையும் இல்லை, யாரும் புரிந்து கொள்ள முடியாது. தீவிரமான பக்தியில் நிறைய காட்சிகள் கிடைக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்குக் கூட முன்பு எவ்வளவு காட்சிகள் கிடைத்தது: நிறைய நிகழ்ச்சிகள் வந்தது. பிறகு கடைசியில் இந்த விளையாட்டைப் பார்ப்பீர்கள். படித்து புத்திசாலியாகி விடுங்கள் என பாபா கூறுகின்றார். ஒருவேளை படிக்கவில்லை என்றால் ரிசல்ட் வரும் போது முகத்தை தொங்கப்போட வேண்டியிருக்கும். நாம் எவ்வளவு நேரத்தை வீணாக்கி விட்டோம் எனப் புரிந்து கொள்வீர்கள். எவ்வளவு பாபாவின் நினைவில் இருப்பீர்களோ அவ்வளவு பாவங்கள் விலகும். எவ்வளவு பாபாவின் நினைவில் இருப்பீர்களோ அவ்வளவு மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்கும்.

 

பகவானை ஏன் நினைக்க வேண்டும் என்று மனிதர்களுக்குத் தெரியவில்லை. தாயும் தந்தையும் நீயே.... எனக் கூறுகிறார்கள் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. சிவனின் படங்களை வைத்து இவர் ஞானக்கடல், பதீதபாவனர் எனப் புரிய வைக்கலாம். அதே தந்தை சுகத்தின் வழியைக் காண்பிக்க வந்திருக்கிறார் என அறிகிறீர்கள். இது படிப்பாகும். யார் எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கும். இங்கே யாரும் சாது சந்நியாசிகள் இல்லை. அவர்களின் சிம்மாசனமும் இல்லை. இதுவோ சிவபாபாவின் சிம்மாசனம் ஆகும். இவர் சென்று விட்டால் வேறு யாராவது சிம்மாசனத்தில் உட்காருவார்கள் என்பது கிடையாது. பாபா அனைவரையும் உடன் அழைத்துச் செல்வார். பல குழந்தைகள் வீண் எண்ணங்களில் தனது நேரத்தை வீணாக்குகிறார்கள். நிறைய பணத்தை சேர்த்து வைக்க வேண்டும், பிள்ளை, பேர பிள்ளைகள் சாப்பிடுவர், கடைசியில் பயன்படும், வங்கி லாக்கரில் சேமித்து வைக்கலாம், குழந்தை குட்டிகள் சாப்பிடுவர் என்று யோசிக்கிறார்கள். ஆனால் யாருடையதையும் அரசாங்கம் விடுவதில்லை. ஆகவே அதைப்பற்றி அதிகம் சிந்திக்காமல் எதிர்கால வருமானத்தில் ஈடுபடுத்துங்கள். இப்பொழுது குழந்தைகள் முயற்சி செய்ய வேண்டும். டிராமாவில் இருந்தால் நடக்கும் என்பது கிடையாது. முயற்சி இல்லாமல் உணவு கூட கிடைக்காது. ஆனால் சிலருடைய அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகின்றது. அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் ஈஸ்வரிய முயற்சி கூட என்ன செய்வார்கள்? யாருடைய அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ அவர்கள் நன்கு தாரணை செய்து செய்விப்பார்கள். தந்தை உங்களுடைய ஆசிரியராகவும், குருவாகவும் இருக்கிறார். அவரை நினைக்க வேண்டும். அனைவரையும் விட பிரியமானவர் அப்பா, டீச்சர், குரு ஆவர். அவர்களை நினைக்க வேண்டும். பாபா நிறைய வழிமுறைகளைத் தெரிவிக்கின்றார். நீங்கள் சாது சந்நியாசி போன்றவர்களுக்குக் கூட அழைப்பு கொடுக்கலாம். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. முயற்சி செய்து தன்னுடைய எதிர்கால வருமானத்தில் ஈடுபடவேண்டும். நாடகத்தில் இருந்தால் செய்யலாம் என கூறிக் கொண்டு முயற்சி செய்யாது இருக்கக்கூடாது.

 

2. முழுநாளில் ஏதாவது பாவம் நடந்தாலும் அல்லது யாருக்காவது துக்கம் கொடுத்தாலும் அதை குறித்துக் கொள்ள வேண்டும். உண்மையாக பாபாவிற்குக் கூற வேண்டும். உண்மையான மனமுடையவராகி ஒரு தந்தையின் நினைவினால் அனைத்து கணக்குகளையும் முடிக்க வேண்டும்.

 

வரதானம் :

ஒவ்வொரு சங்கல்பம் மற்றும் கர்மத்தை சிரேஷ்டமானதாகவும், வெற்றிகரமானதாகவும் ஆக்கக் கூடிய ஞான சொரூபம், புத்திசாலி ஆகுக.

 

யார் ஞான சொரூபம், புத்திசாலி ஆகி, எந்த ஒரு சங்கல்பம் மற்றும் கர்மம் செய்கிறார்களோ, அவர்கள் வெற்றி மூர்த்தி ஆகிறார்கள். இதன் ஞாபகார்த்தமாக பக்தி மார்க்கத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் போது ஸ்வஸ்திகா வரைகின்றனர் அல்லது கணேசரை வணங்குகின்றனர். இந்த ஸ்வஸ்திகா, சுய ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான மற்றும் கணேஷ் ஞானம் நிறைந்த ஸ்திதிக்கான அடையாளமாகும். குழந்தைகள் நீங்கள் எப்போது ஞானம் நிறைந்தவர் ஆகி, ஒவ்வொரு சங்கல்பம் மற்றும் கர்மம் செய்கிறீர்களோ, அப்போது சகஜ வெற்றியின் அனுபவம் ஆகும்.

 

சுலோகன் :

பிராமண வாழ்க்கையின் விசேஷத்தன்மை குஷியாகும். எனவே குஷியை தானம் செய்து கொண்டே செல்லுங்கள்.

 

ஓம்சாந்தி