13-05-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தை ருத்ர ஞான யக்ஞத்தை படைத்திருக்கின்றார், பிராமணர்களாகிய நீங்கள் இந்த யக்ஞத்தை பாதுகாக்கக் கூடியவர்கள், ஆகையால் நீங்கள் அவசியம் தூய்மையாக இருக்க வேண்டும்.

கேள்வி:
கடைசி நேரத்தில் தந்தை எந்த குழந்தைகளுக்கு உதவி செய்வார்?

பதில்:
யார் நல்ல முறையில் சேவை செய்கிறார்களோ அவர்களுக்கு ஆபத்துகள் அதிகம் வரக் கூடிய கடைசி நேரத்தில் உதவி கிடைக்கும். யார் தந்தைக்கு உதவியாளர்களாக ஆகிறார் களோ அவர்களுக்கு அவசியம் தந்தை உதவி செய்வார்.

கேள்வி:
அதிசயமான முகம் யாருடையது? அதன் நினைவுச் சின்னம் எந்த ரூபத்தில் இருக்கிறது?

பதில்:
தனக்கென்று முகம் இல்லாத சிவபாபா எப்போது இந்த முகத்தை ஆதாரமாக எடுக்கிறாரோ அப்போது இவர் அதிசயமான முகமுடையவராக ஆகிவிடுகிறார். ஆகையால் குழந்தைகளாகிய நீங்கள் நேராக அந்த முகத்தைப் பார்ப்பதற்காக வருகிறீர்கள். இதன் நினைவுச் சின்னமாக ருண்ட மாலையில் (மண்டை ஒடு மாலை) முகத்தை காண்பிக்கின்றனர்.

பாடல்:
மிக இனிமையானவர், மிக அன்பானவர்....

ஓம் சாந்தி.
நான் ஒரே ஒரு முறை 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு குழந்தைகளின் முகத்தைப் பார்கிறேன் என்று எல்லையற்ற தந்தை கூறுகின்றார். தந்தைக்கு தனக்கென்று முகம் கிடை யாது. சிவபாபாவும் பழைய சரீரத்தை கடனாக எடுக்கின்றார். ஆக நீங்கள் பாப்தாதா இருவரின் முகத்தை பார்க்கிறீர்கள். அதனால் தான் பாப்தாதாவின் அன்பு நினைவு களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். ருண்ட மாலையை குழந்தைகள் பார்த்திருக் கிறீர்கள், அதில் முகத்தை காண்பிக்கின்றனர். ருண்ட மாலை உருவாக்குகின்றனர் எனில் சிவபாபாவும் கூட இவ்வாறு முகத்தை பார்ப்பார். சிவபாபா கூட இந்த சரீரத்தை கடனாக எடுக்கின்றார் என்பது யாருக்கும் தெரியாது. சிவபாபா இந்த பிரம்மாவின் வாயின் மூலம் பேசுகின்றார். ஆக இது அவரது வாய் ஆகிவிட்டது அல்லவா! இந்த நேரத்தில் ஒரே ஒரு முறை தந்தை வந்து குழந்தை களின் முகத்தைப் பார்க்கின்றார். சிவபாபா இந்த முகத்தை கடனாக, வாடகைக்கு எடுத்திருக் கின்றார் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இப்படிப்பட்ட தந்தைக்கு தனது கட்டடத்தை வாடகைக்கு கொடுக்கும் போது எவ்வளவு இலாபம் ஏற்படுகிறது!

முதன் முதலில் இவரது காது கேட்கிறது. உடனேயே நீங்கள் கேட்கலாம், இருப்பினும் அனைவரையும் விட மிக அருகாமையில் இவரது காது இருக்கிறது. உங்களது ஆத்மா தூரத்தில் அமர்ந்திருக்கிறது அல்லவா! ஆத்மா காதுகளின் மூலம் கேட்கின்ற பொழுது சிறிது வித்தியாசம் ஏற்படுகிறது. இங்கு நேரடியாக முகத்தைப் பார்ப்பதற்காக குழந்தைகளாகிய நீங்கள் வருகிறீர்கள். இது அதிசயமான முகமாகும். சிவராத்திரி கொண்டாடுகின்றனர் எனில் நிராகார சிவபாபா அவசியம் இங்கு வந்து பிரவேசம் செய்கின்றார், ஆக அவரது தேசமும் பாரதம் ஆகிவிடுகிறது. பாரதம் அழிவற்ற பரம்பிதா பரமாத்மாவின் பிறப்பிடமாகும். ஆனால் அவரது பிறப்பு பிற மனிதர்களைப் போன்று கிடையாது. நான் வந்து இவர் சரீரத்தில் பிரவேசிக் கிறேன், பிறகு குழந்தைகளுக்கு ஞானம் கூறுகிறேன் என்று சுயம் கூறுகின்றார். மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் அவரவர்களுக்கென்று சரீரம் இருக்கிறது. எனக்கு எந்த சரீரமும் கிடையாது. சிவனுக்கு எப்போதும் லிங்க ரூபத்தை காண்பிப்பர். ருத்ர யக்ஞத்தை படைக்கும் போது மண் உருண்டையினால் லிங்கம் உருவாக்குகின்றனர். சாலிகிராமத்தை சிறியதாக உருவாக்குவர், சிவலிங்கத்தை பெரியதாக உருவாக்குவர். உண்மையில் சிறியது பெரியது என்பது கிடையாது. இவர் தந்தை, இவர் குழந்தை என்பதை காண்பிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர். பூஜையும் இருவருக்கும் தனித்தனியாக செய்வர். அவர் சிவன், இவை சாலிக்கிராம் என்பதை புரிந்திருக்கின்றனர். அனைத்தும் சிவன் தான் என்று கூறுவது கிடையாது. சிவலிங்கத்தை பெரியதாக உருவாக்குகின்றனர், சாலிகிராமத்தை சிறியதாக உருவாக்கு கின்றனர். இவர்கள் அனைவரும் குழந்தைகள் அவருடன் இருக்கின்றனர். சாலி கிராமத்திற்கு ஏன் பூஜை செய்கின்றனர்? என்பதை பாபா புரிய வைத்திருக்கின்றார். ஏனெனில் நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் அல்லவா! நீங்கள் இந்த சரீரத்தில் இருந்து பாரதத்தை சிரேஷ்டமானதாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். சிவபாபாவின் ஸ்ரீமத்தை சாலிகிராம் பெற்றுக் கொண்டிருக்கிறது. ருத்ரனாகிய சிவபாபாவும் ஞான யக்ஞத்தை படைத்திருக்கின்றார். சிவபாபாவும் பேசுகின்றார், சாலிகிராமமும் பேசுகிறது. இது அமரக் கதையாகும், சத்திய நாராயணன் கதையாகும். மனிதனை நரனிலிருந்து நாராயணனாக ஆக்குகிறது. மிக உயர்ந்த பூஜை அவருக்கு ஏற்படுகிறது அல்லவா! ஆத்மா மிகப் பெரியதாக கிடையாது. மிகச்சரியாக புள்ளி வடிவத்தில் இருக்கிறது. அதில் எவ்வளவு ஞானம் இருக்கிறது! எவ்வளவு பாகம் நிறைந்திருக்கிறது! நான் சரீரத்தில் பிரவேசம் செய்து நடிப்பு நடிக்கிறேன் என்று இவ்வளவு சிறிய ஆத்மா கூறுகிறது. சரீரம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது! ஆத்மா சரீரத்தில் பிரவேசம் ஆவதன் மூலம் சிறிய குழந்தையிலிருந்தே நடிப்பு நடிக்க ஆரம்பித்து விடுகிறது. அழிவற்ற பாகம் கிடைத்திருக்கிறது. சரீரம் ஜடமானது. இதில் எப்போது சைத்தன்ய ஆத்மா பிரவேசிக்கிறதோ அதன் பிறகு கர்பத்தில் தண்டனை அடைகிறது. தண்டனையும் எப்படி அடைகிறது! வித விதமான சரீரத்தை தாரணை செய்து, யார் யாருக்கு எந்த ரூபத்தில் துக்கம் கொடுத்ததோ அதை சாட்சாத்காரம் செய்து கொண்டே அடையும். தண்டனை அடைந்துக் கொண்டே இருக்கும். ஐயோ ஐயோ என்று கதறும், அதனால் தான் கர்ப சிறை என்று கூறுகின்றார். நாடகம் எவ்வளவு நன்றாக உருவாக்கப்பட்டிருக்கிறது! எவ்வளவு நடிப்பு நடிக்கிறது! நான் ஒருபோதும் எந்த பாவமும் செய்யமாட்டேன் என்று ஆத்மா உறுதிமொழி எடுக்கிறது. இவ்வளவு சிறிய ஆத்மாவிற்கு அழிவற்ற பாகம் எவ்வளவு கிடைத்திருக்கிறது! 84 பிறவிகளின் நடிப்பை நடித்து விட்டு பிறகு திரும்பவும் நடிக்கிறது. ஆச்சரியம் அல்லவா! இதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். இது உண்மையான விசயம் என்று குழந்தைகளும் புரிந்து கொள்கிறீர்கள். இவ்வளவு சிறிய புள்ளியில் எவ்வளவு பாகம் (நடிப்பு) இருக்கிறது! ஆத்மாவின் சாட்சாத்காரம் பலருக்கு ஏற்படுகிறது. ஆத்மா நட்சத்திரம் போன்று இருக்கிறது, அது இந்த நெற்றியின் நடுவில் இருக்கிறது என்றும் கூறுகின்றனர். எவ்வளவு நடிப்பு நடிக்கிறது! அதனால் தான் இது இயற்கை என்று கூறப்படுகிறது. ஆத்மாக்களாகிய நாம் ஒரு சரீரம் விடுத்து மற்றொரு சரீரம் எடுப்போம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வளவு நடிப்புகளை நடிக்கிறது! நமக்கு பாபா வந்து புரிய வைக்கின்றார். எவ்வளவு உயர்ந்த ஞானம்! உலகில் யாரிடத்திலும் இந்த ஞானம் கிடையாது. இவரும் (பிரம்மா) மனிதர் அல்லவா! இவரிடத்தில் இப்போது தந்தை பிரவேசமாகியிருக்கின்றார். குருவின் சீடர் என்று கிடையாது. அவரிடமிருந்து மாயாஜாலத்தை கற்கின்றனர். குருவின் வரதானம் அதாவது குருவின் சக்தி கிடைத்திருப்பதாக சிலர் நினைக் கின்றனர். இங்கிருக்கும் விசயமே தனிப்பட்டது. நேரடியாகக் கேட்கும் போது உங்களுக்கு மிகுந்த போதை ஏற்படுகிறது. நமக்கு பாபா எதிரில் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை அறிவீர்கள். பாபாவும் நமது ஆத்மாவைப் போன்று மிகச் சிறிய புள்ளியாக இருக்கின்றார். அவர் பரம்பிதா பரமாத்மா என்று கூறப்படுகின்றார், பரம் என்றால் உயர்ந்தவர். உயர்ந்ததிலும் உயர்ந்த பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவர். உயர்ந்ததிலும் உயர்ந்த இடத்தில் குழந்தைகளும் இருக்கிறீர்கள். தந்தை எவ்வளவு ஆழமான நுணுக்கமான விசயங்களைக் கூறுகின்றார்! ஆரம்பதில் இந்த அளவிற்கு புரிய வைக்கவில்லை. நாளுக்கு நாள் குழந்தை களாகிய உங்களுக்கு எவ்வளவு ஆழமான ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது! கொடுப்பது யார்? உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான். அவர் வந்து கூறுகின்றார் - குழந்தைகளே...... ஆத்மா எப்படி கர்மேந்திரியங்களின் மூலம் பேசுகிறது! நெற்றியின் நடுவில் ஜொ-த்துக் கொண்டிருப் பதாக அவர்கள் கூறவும் செய்கின்றனர். ஆனால் பெயரளவிற்குக் கூறுகின்றனர், யாருடைய புத்தியிலும் வருவது கிடையாது. புரிய வைக்குமளவிற்கு யாரிடத்திலும் இந்த ஞானம் கிடையாது. உங்களிலும் இந்த விசயங்களை மிகக் குறைவாகவே புரிந்து கொள்கிறீர் கள். யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் நல்ல முறையில் தாரணை செய்கின்றனர், பிறகு மற்றவர் களுக்கும் தாரணை செய்விக்கின்றனர், அதாவது வர்ணனை செய்கின்றனர். பரம்பிதா பரமாத்மா என்று கூறுகிறீர்கள் எனில் தந்தையிடமிருந்து அவசியம் ஆஸ்தி கிடைக்க வேண்டும் அல்லவா! சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக வேண்டும். அவர்களுக்கு (லட்சுமி, நாராயணனுக்கு) அவசியம் தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைத்திருக்க வேண்டும். எங்கு ஆஸ்தி கொடுத்தார்? சத்யுகத்தில் கொடுத்தாரா என்ன? அவசியம் கடந்த கால கர்மா ஆகும். இப்போது நீங்கள் கர்மத்தின் இரகசியங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். இப்போது பாபா உங்களுக்கு அந்த மாதிரியான காரியங்களை செய்ய கற்றுக் கொடுக்கின்றார், இதன் மூலம் நீங்கள் அவ்வாறு ஆகிவிடுகிறீர்கள். எப்போது நீங்கள் பிரம்மாவின் வாய்வம்சத்தினர் களாக ஆகிறீர்களோ அப்போது சிவபாபா பிரம்மாவின் வாயின் மூலம் உங்களுக்கு இந்த ஞானத்தை கூறுகின்றார். எவ்வளவு இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது! எவ்வளவு காரிருளாக ஆகி விட்டது! யாரிடமிருந்து கிடைக்குமோ அந்த தந்தையை யாரும் அறிய வில்லை. நாம் நடிகர்கள், இந்த கர்மத்திரத்தில் நடிப்பு நடித்து வருகிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் நாம் யார்? நம்முடைய பாபா யார்? என்று எதுவும் தெரியாது. நாடகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்று எதுவும் தெரியாது. அகிலிகைகள், கூனிகள் போன்றோர், விபசாரிகள் போன்றவர்களுக்கும் வந்து கற்பிக்கிறேன். கண்காட்சிகளில் பெரிய பெரிய மனிதர்களும் வருகின்றனர். ஆனால் அவர்களது அதிர்ஷ்டத்தில் கிடையவே கிடையாது. தந்தை தான் ஏழைப்பங்காளன். 100 - ல் ஒரு செல்வந்தர் வெளிப்படுவது கடினமாகும். அதிலும் உயர்ந்த பதவியடைவதற்கான முயற்சி மிகச் சிலர் மட்டுமே செய்கின்றனர். நீங்கள் ஏழைகள். தாய்மார் களிடத்தில் மிக அதிக செல்வம் இருப்பது கிடையாது. கன்னிகைகளுக்கு எங்கிருந்து கிடைக்கும்? இருப்பினும் அவர்கள் (தாய்மார்கள்) ஹாப் பார்ட்னர்களாக இருக்கின்றனர். கன்னிகைகளுக்கு எதுவும் கிடைப்பது கிடையாது. அவர் அங்கு (புகுந்த வீடு) சென்று விட்டால் ஹாப் பார்ட்னராக ஆகிவிடுகின்றார், ஆஸ்தி அடைய முடியாது. ஆண் குழந்தை முற்றிலும் எஜமானராக இருப்பர். ஆக இப்படிப்பட்ட கன்னிகைகளை முதன் முதலில் தந்தை தன்னுடையவராக ஆக்குகின்றார். ஒன்று பிரம்மச்சரிய வாழ்க்கையில் படிப்பு, ஏழையாக இருக் கின்றனர், தூய்மையாக இருக்கின்றனர், இப்படிப்பட்டவர்களுக்குத் தான் பூஜை நடைபெறுகிறது. அனைத்தும் இந்த நேரத்திற்கான விசயமாகும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் காரியங்களினால் பிறகு பூஜிக்கப்படுகிறீர்கள். சிவஜெயந்தி இல்லாமல் கிருஷ்ண ஜெயந்தி நடக்காது. சிவஜெயந்திக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி, பிறகு இராம ஜெயந்தி என்பதை நீங்கள் அறிவீர்கள். சிவஜெயந்தியின் மூலம் ஜெகதம்பா, ஜெகத்பிதாவின் பிறப்பு ஏற்படுகிறது. ஆக அவசியம் உலக (ஜெகத்) ஆஸ்தி கிடைக்கும். முழு உலகிற்கும் நீங்கள் எஜமானர்களாக ஆகிறீர்கள். ஜெகத்மாதா என்றால் உலகிற்கு எஜமானர். ஜெகதம்பாவிற்கு அதிக திருவிழா நடைபெறுகிறது. பிரம்மாவிற்கு அந்த அளவிற்கு பூஜை நடைபெறுவது கிடையாது. ஆக தந்தை தாய்மார்களை முன்நிறுத்துகிறார். சிவசக்தி தாய்மார்களை அனைவரும் குறிப்பாக கணவன்மார்கள் ஏமாற்றுகின்றனர். இவர் பதிகளுக்கெல்லாம் பதி ஆவார். கன்னிகை களுக்கு புரிய வைக்கின்றார், இவர் ஜெகதம்பாவின் குழந்தை எனில் மாஸ்டர் ஜெகதம்பா ஆகிவிடுகிறார் அல்லவா! இந்த குழந்தைகளும் (கன்னிகைகளும்) தாயைப் போன்று காரியங்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

மம்மாவைப் போன்று நீங்களும் திரிகாலதர்சி ஆவீர்கள். ஆண், பெண் இருவரும் இருக்கிறீர்கள். இல்லற மார்க்கம் அல்லவா! மெஜாரிட்டி தாய்மார்கள் இருக்கின்றனர். இவர்களது பெயர் தான் பிரபலமாக இருக்கிறது. பிரம்மாவின் பெயர் அந்த அளவிற்கு பிரபலம் கிடையாது. சாரசித்தி பிராமணர்கள் தான் பிரம்மாவை பூஜிக்கின்றனர். இரண்டு வகையான பிராமணர்கள் இருக்கின்றனர் - சாரசித்தி மற்றும் புஷ்கர்னி. சாஸ்திரங்களை கூறக் கூடியவர்கள் தனி. இந்த அனைத்து விசயங்களையும் தந்தை வந்து புரிய வைக்கின்றார். எவ்வாறு இந்த சக்கரம் சுழல்கிறது? நான் எப்படி வருகிறேன்? நான் மீண்டும் 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு ஞானம் கூறுவேன் என்று உறுதிமொழி இருக்கிறது அல்லவா! பாட்டிலும் இருக்கிறது அல்லவா! எது கடந்து முடிந்து விடுகிறதோ அது மீண்டும் பக்தி மார்க்கத்தில் பாடப்படுகிறது. இது அழிவற்ற நாடகமாகும். இதற்கு முதல், இடை, கடை என்பது கிடையாது. சுற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த சக்கரம் எப்படி சுழல்கிறது? என்பதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். 84 பிறவிகளை நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும். நீங்கள் தான் பிராமணர்கள், தேவதைகள், சத்ரியர்கள் போன்ற வர்ணங்களில் வருகிறீர்கள். சிவபாபா மற்றும் பிரம்மா இருவரையும் மறைத்து விட்டனர். பிரம்மாவின் மூலம் நீங்கள் பிராமணர்களாக ஆகிறீர்கள். பிராமணர்கள் தான் யக்ஞத்தை பாதுகாக்கின்றனர். தூய்மை இல்லாதவர்கள் யக்ஞத்தை பாதுகாக்க முடியாது. யக்ஞத்தை படைத்ததும் விகாரத்தில் செல்லமாட்டார்கள். யாத்திரை செல்கின்ற போதும் விகாரத்தில் செல்லமாட்டார்கள். நீங்கள் ஆன்மீக யாத்திரையில் இருக்கிறீர்கள், ஆக விகாரத் தில் எப்படி செல்ல முடியும்? இல்லையெனில் தடைகள் எற்படும். உங்களுடையது ஆன்மீக யாத்திரை ஆகும். குழந்தைகளாகிய உங்களை அழைத்துச் செல்ல நான் வந்திருக்கிறேன் என்று பாபா கூறுகின்றார். கொசுக் கூட்டம் போன்று அழைத்துச் செல்வேன். அங்கு ஆத்மாக்களாகிய நாம் இருப்போம். அது பரந்தாமம் ஆகும், அங்கு ஆத்மாககள் வசிக்கின்றன. பிறகு நாம் வந்து தேவதை, சத்ரியா, வைஷ்யர், சூத்ரர்களாக ஆகிறோம். இப்போது மீண்டும் பிராமணர் களாக ஆகியிருக்கிறோம். யார் பிராமணர்களாக ஆகிறார்களோ அவர்கள் தான் சொர்க்கத்திற்கு செல்வார்கள். அங்கும் ஊஞ்சலில் ஆடுவார்கள் அல்லவா! அங்கு நீங்கள் இரத்தினம் பதித்த ஊஞ்சல்களில் ஆடுவீர்கள். ஸ்ரீகிருஷ்ணரின் ஊஞ்சலை எவ்வளவு நன்றாக அலங்கரிக் கின்றனர்! அவர் மீது அனைவரும் அன்பு செலுத்துகின்றனர். இராதை கோவிந்த் என்று பஜனை செய்தால் பிருந்தாவனம் சென்று விடலாம் ....... என்று பாடுகின்றனர் அல்லவா! இப்போது நீங்கள் நடைமுறையில் அங்கு செல்வதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறீர்கள். நமது மன ஆசைகள் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். இப்போது நீங்கள் ஈஸ்வரியபுரிக்கு (பரந்தாமம்) செல்கிறீர்கள். பாபா அனைவரையும் எவ்வாறு அழைத்துச் செல்கிறார் என்பதை அறிவீர்கள். வெண்ணெயி-ருந்து முடி எடுப்பது போல தந்தை உங்களுக்கு எந்த கஷ்டமும் கொடுப்பது கிடையாது. இராஜ்யத்தை எவ்வளவு எளிதாக கொடுக்கின்றார்! எங்கு செல்ல வேண்டுமோ அந்த கிருஷ்ணபுரியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். முதன் முதலில் பாபா உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வார். பிறகு அங்கிருந்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்து விடுவார். இப்போது நீங்கள் சாந்திதாமம் வழியாக ஸ்ரீகிருஷ்ணபுரிக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள். எவ்வாறு டெல்லி வழியாக செல்ல வேண்டியிருக்கிறது! இப்போது திரும்பிச் செல்கிறோம், பிறகு கிருஷ்ணபுரிக்கு வருவோம் என்பதை புரிந்திருக்கிறீர்கள். நாம் ஸ்ரீமத் படி நடந்து கொண்டிருக்கிறோம், எனவே தந்தையை நினைவு செய்ய வேண்டும், தூய்மையாக ஆக வேண்டும். யாத்திரையின் பொழுது எப்போதும் தூய்மையாக இருப்பர். படிப்பும் பிரம்மச்சரிய நேரத்தில் படிப்பர். தூய்மை அவசியம் தேவை. இருப்பினும் தந்தை குழந்தைகளுக்கு முயற்சி செய்விக்கின்றார். இந்த நேரத்தின் முயற்சியானது உங்களுக்கு கல்ப கல்பத்திற்கானதாக ஆகிவிடும். முயற்சி செய்ய வேண்டும் அல்லவா! இது மிக உயர்ந்த பள்ளியாகும், ஆகவே அவசியம் படிக்க வேண்டும். சுயம் பகவான் கற்பிக்கின்றார். ஒருநாள் கூட தவற விடக் கூடாது. மிக மதிப்புள்ள படிப்பாகும். இந்த பாபா ஒருபோதும் தவற விடமாட்டார். இங்கு குழந்தைகளாகிய நீங்கள் எதிரில் பொக்கிங்களினால் பையை நிறைத்துக் கொள்ள முடியும். எந்த அளவிற்கு படிப்பீர்களோ அந்த அளவிற்கு போதை அதிகரிக்கும். பந்தனம் இல்லையெனில் பிறகு நிலைத்து விடலாம். ஆனால் மாயை அப்படிப்பட்டது, பந்தனத்தில் கட்டி விடுகிறது. பலருக்கு விடுப்பும் கிடைக்கிறது. முழுமையாக புத்துணர்வு அடைந்து செல்லுங்கள் என்ற பாபா கூறுகின்றார். வெளியில் சென்ற பின்பு அந்த போதை இருப்பது கிடையாது. பலருக்கு முரளி படித்தாலே போதை அதிகரித்து விடுகிறது. பெரிய ஆபத்துக்கள் வரயிருக்கின்றன. யார் உதவியாளர்களாக ஆவார்களோ, நன்றாக சேவை செய்வார்களோ அவர்களுக்குத் தான் உதவியும் கிடைக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு தான் கடைசியிலும் உதவி கிடைக்கும் அல்லவா! நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) படிப்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது. சுயம் பகவான் கற்பிக்கின்றார், ஆகையால் ஒரு நாள் கூட தவற விடக் கூடாது. ஞான பொக்கிங்களினால் தினமும் பையை நிறைத்துக் கொள்ள வேண்டும்.

2) இது படிப்பிற்கான நேரமாகும், யாத்திரையில் சென்று கொண்டிருக்கிறோம். ருத்ர ஞான யக்ஞத்தைப் பாதுகாக்க வேண்டும். ஆகையால் அவசியம் தூய்மையாக இருக்க வேண்டும். எந்த ஒரு விகாரத்திற்கும் வசமாகி தடைகளை உருவாக்கக் கூடாது.

வரதானம்:
பாக்கிய விதாதா பாபாவின் மூலம் அடைந்த பாக்கியத்தை பகிரக் கூடிய மற்றும் அதிகப்படுத்தக் கூடிய அதிஷ்டசாலி ஆகுக.

அனைத்தையும் விட மிகப் பெரிய அதிஷ்டம் பாக்கிய விதாதா பாபாவை தன்னுடையவராக ஆக்கிக் கொள்வதாகும். பகவானின் ஒரு விநாடி தரிசனத்திற்காக உலகத் தினர் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நீங்கள் சதா கண்களில் கலந்திருக்கிறீர்கள். இது தான் அதிஷ்டம் என்று கூறப்படுகிறது. பாக்கியம் உங்களது ஆஸ்தியாகும். முழு கல்பத்திலும் இப்படிப்பட்ட பாக்கியம் இப்பொழுது தான் கிடைக்கிறது. எனவே பாக்கியத்தை அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். அதிகப்படுத்துவதற்கான சாதனம் பகிர்ந்து கொடுப் பதாகும். எந்த அளவிற்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பீர்களோ அதாவது பாக்கியவான் களாக ஆக்குவீர்களோ, அந்த அளவிற்கு பாக்கியம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

சுலோகன்:
தடையற்ற மற்றும் ஏக்ரஸ் ஸ்திதியின் அனுபவம் செய்ய வேண்டுமெனில் ஒருநிலைப்படுத்தும் (ஏகாக்ரதா) பயிற்சியை அதிகப்படுத்துங்கள்.