ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், பாபாவும் குழந்தைகளே
எனச் சொல்லி அழைக்கிறார், மேலும் இந்தப் பாப்தாதா இருவருமே
இணைந்திருக்கிறார்கள் என்பது குழந்தை களுக்குத் தெரியும்.
முதலில் பாப்தாதா, பின்னர்க் குழந்தைகள், இது புதிய படைப்பாக
உள்ள தல்லவா! மேலும் தந்தை இராஜயோகமும் கற்றுக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார். 5 ஆயிரம் வருடங்ளுக்கு முன்பு போலவே மீண்டும்
நமக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டி ருக்கிறார். பக்தி
மார்க்கத்தில் பின்னர் அதனைப் புத்தகமாக ஆக்கி அதனைக் கீதை எனச்
சொல்லி விட்டனர். ஆனால் இந்தச் சமயத்தில் கீதையின் எந்த
விஷயமும் கிடையாது. பிற்காலத்தில் சாஸ்திரத்தை உருவாக்கி அதனை
ஸ்ரீமத் பகவத் கீதை, சகஜ இராஜயோகத்தின் புத்தகம் எனச் சொல்லி
விட்டனர், பக்தி மார்க்கத்தில் புத்தகம் படிப்பதன் மூலம் எந்த
இலாபமும் ஏற்படுவதில்லை. அப்படியே சிவனை மட்டும் நினைவு
செய்வதன் மூலம் எந்த ஆஸ்தியும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆஸ்தி
இப்போது சங்கமயுகத்தில் மட்டுமே கிடைக்கும். தந்தை
எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியைக் கொடுப்பவர், ஆஸ்தியும்
சங்கமத்தில் தான் கொடுப்பார். தந்தை இராஜயோகம் கற்றுத்
தருகிறார். மற்ற சந்நியாசிகள் முதலானவர்கள் கற்றுக் கொடுப்
பதற்கும் இதற்கும் இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது.
அவர்களுடைய புத்தியில் கீதை இருக்கும், அவர்கள் கீதையைக்
கிருஷ்ணர் சொன்னார், வியாசர் எழுதினார் எனப் புரிந்து
கொள்கின்றனர். ஆனால் கீதையைக் கிருஷ்ணர் சொல்லவில்லை, அந்தச்
சமயத்தில் அவர் இருக்கவும் இல்லை. கிருஷ்ணரின் ரூபம் இருக்கவும்
முடியாது. தந்தை அனைத்து விஷயங் களையும் தெளிவாக்கி புரிய
வைக்கிறார், பிறகு சொல்கிறார் - இப்போது தீர்மானியுங்கள்.
அவருடைய பெயரும் புகழ் வாய்ந்தது. சத்தியத்தை உரைப்பவர் தான்
நரனிலிருந்து நாராயணனாக ஆக்க முடியும். நாம் நரனிலிருந்து
நாராயணன் ஆவதற்காக இந்தப் பாடசாலை அல்லது ருத்ர ஞான யக்ஞத்தில்
அமர்ந்திருக்கிறோம் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர் கள்.
சிவபாபா எனும் வார்த்தை நன்றாக இருக்கிறது. தந்தை மற்றும் தாதா
கண்டிப்பாக இருக் கின்றனர். இந்த நிச்சயத்தில் நீங்கள்
வந்திருக்கிறீர்கள். தந்தை பிரம்மாவின் மூலம் அனைத்து வேத
சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறார், மேலும் நான்
உங்களைத் திரிகால தரிசியாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன் எனப்
புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் திரிலோக நாதர்களாக
ஆகிறீர்கள் என்பதல்ல. அல்ல, நீங்கள் ஒரு சிவபுரிக்கு மட்டுமே
நாதர்களாக (தலைவர்களாக) ஆகிறீர்கள். அதற்கு லோகம் (உலகம்) எனச்
சொல்வ தில்லை. உலகம் என்று மனித சிருஷ்டிக்குத் தான்
சொல்லப்படும். உலகம் சைத்தன்யமானது, மற்றது நிராகார உலகம்.
உங்களுக்கு மூன்று லோகங்களின் ஞானத்தை மட்டுமே சொல்கிறேன்.
மூன்று உலகத்திற்கும் தலைவர்களாக்கவில்லை. மூன்று உலகம் பற்றிய
ஞானம் கிடைக்கிறது. எனவே திரிகாலதரிசி எனக் கூறப்படுகிறது.
இலட்சுமி, நாராயணரைக் கூட மூன்று உலகத்திற்கும் தலைவர்கள் என்று
சொல்லப்படுவதில்லை. விஷ்ணுவைக் கூடத் திரிலோக நாதன் எனச் சொல்ல
மாட்டோம். அவருக்கு முன்று உலகங்களின் ஞானமே கிடையாது. இலட்சுமி-
நாராயணர் குழந்தைப் பருவத்தில் இராதா-கிருஷ்ணராக இருக் கின்றனர்,
அவர்களுக்கு மூன்று லோகங்களின் ஞானம் கிடையாது. நீங்கள்
திரிகாலதரிசிகளாக ஆக வேண்டும். ஞானத்தை எடுக்க (கற்க) வேண்டும்.
மற்றபடி கிருஷ்ணரை திரிலோக நாதர் எனச் சொல்கின்றனர் ஆனால்
அப்படிக் கிடையாது. யார் இராஜ்யம் செய்கின்றனரோ அவர்கள் தான்
மூன்று உலகத்திற்கும் நாதன் (தலைவன்/எஜமான்) எனச்
சொல்லப்படுவார்கள். அவர் (கிருஷ்ணர்) வெறும் வைகுண்ட நாதன்
ஆகிறார், சத்யுகம் வைகுண்டம் எனப்படுகிறது. திரேதாவை வைகுண்டம்
எனச் சொல்ல மாட்டோம். இந்த லோகத்தின் நாதனாக நாம் ஆக முடியாது.
பாபாவும் கூட வெறும் பிரம்ம தத்துவத்தின் நாதர். பிரம்மாண்டம்,
அதில் ஆத்மாக்களாகிய நாம் அண்டம் (முட்டை வடிவம்) போல
இருக்கிறோம், அதற்குத்தான் எஜமானர். பிரம்மா, விஷ்ணு, சங்கரன்
சூட்சும வதனத்தில் இருப்பவர்கள் எனும்போது அவர்களை அதனுடைய
நாதன் எனச் சொல்வோம். நீங்கள் வைகுண்ட நாதனாக ஆகிறீர்கள். அது
சூட்சும வதனத்தின் (நிராகார உலகம்) விஷயம், அது மூல வதனத்தின்
விஷயம். நீங்கள் மட்டுமே திரிகாலதரிசிகளாக ஆக முடியும்.
உங்களுடைய மூன்றாம் கண் திறந்திருக்கிறது. புருவ மத்தியில்
மூன்றாம் கண் உள்ளது எனக் காட்டவும் செய்கின்றனர், ஆகையால்
திரிநேத்ரி (முக்கண்ணர்) எனச சொல் கின்றனர். ஆனால் இந்த
அடையாளத் தைத் தேவதைகளுக்குக் கொடுக்கின்றனர், ஏனென்றால்
உங்களுடைய கர்மாதீத் (கர்மங்களை வென்ற முழுமை) நிலை
ஏற்படும்போது திரிநேத்ரி ஆகிறீர்கள், அது இந்தச் சமயத்தின்
விஷயம் ஆகும். ஆனால் அவர்கள் ஞானத்தின் சங்கை ஒலிப்பதில்லை.
அவர்கள் பிறகு அந்த ஸ்தூல சங்கு என எழுதி விட்டனர். இது வாயின்
(சம்மந்த) விஷயமாகும். இதன் மூலம் நீங்கள் ஞானத்தின் சங்கை
ஒலிக்கிறீர்கள். ஞானத்தைப் படித்துக் (கற்றுக்)
கொண்டிருக்கிறீர்கள். பெரிய பல்கலைக் கழகத்தில் ஞானத்தைப்
படிப்பது போல, இதுவும் கூடப் பதீத பாவன இறை தந்தையின்
பல்கலைக்கழகம் ஆகும். எவ்வளவு பெரிய பல்கலைக்கழகத்தின்
மாணவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள்!. கூடவே நீங்கள் இதையும்
புரிந்து கொள்கிறீர்கள் - நம்முடைய பாபா தந்தையாக, ஆசிரியராக,
சத்குருவாக இருக்கிறார். அனைத்துமாக இருக்கிறார். இந்தத் தாய்,
தந்தை அனைத்து சூழ்நிலை களிலும் சுகத்தைக் கொடுப்பவர்கள்,
ஆகையால் நீயே தாயும் தந்தையும் எனச சொல்கின்றனர். இவர் சாக்ரீன்
போன்றவர், மிகவும் இனிமையானவர். தேவதைகளைப் போல இனிமையானவர்கள்
ஒருபோதும் வேறு யாரும் இருக்க முடியாது. பாரதம் மிகவும் சுகம்
மிக்கதாக, எப்போதும் ஆரோக்கியம், எப்போதும் செல்வம் நிறைந்ததாக
இருந்தது, முற்றிலும் தூய்மையாய் இருந்தது. நிர்விகார பாரதம்
என்றுதான் சொல்லப்படுகிறது. இப்போது அப்படிச் சொல்ல மாட்டோம்.
இப்போது விஷம் நிறைந்த, தூய்மையற்ற பாரதம் எனச் சொல்வோம். தந்தை
எவ்வளவு சகஜமாக்கி புரிய வைக்கிறார்! தந்தை மற்றும் ஆஸ்தியை
அறிந்து கொள்கிறோம். பாபா எவ்வளவு இனிமையாக மாற்றுகிறார்! நாம்
ஸ்ரீமத்படி படித்து மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும் என
நீங்களும் உணர்கிறீர்கள். இதுவே தொழிலாகும். மற்றபடி பிறவி
பிறவிகளின் கர்மபோகம் (பாவச் சுமை) நிறைய இருக்கிறதல்லவா?
யாருக் காவது நோய் ஏற்படுகிறது, மாரடைப்பு ஏற்படுகிறது என
வைத்துக் கொள்ளுங்கள், நாடகத்தில் விதிக்கப்பட்டது எனப்
புரிந்து கொள்ளப்படுகிறது. அவர்கள் ஒரு வேளை வேறு ஒரு பாகத்தை
நடிக்க வேண்டி யிருக்கலாம், ஆகையால் இது துக்கத்தின் விஷயமாக
இருக்காது. நாடகம் மாற்ற முடியாதது. அவர்கள் வேறு ஒரு பாகத்தை
நடிக்க வேண்டும், இதில் கவலையின் விஷயம் என்ன உள்ளது? இன்னும்
கூடப் பாரதத்திற்கு நல்ல சேவை செய்வார்கள், ஏனென்றால் யாருக்கோ
நன்மை செய்வதற்காக அப்படிப்பட்ட சம்ஸ்காரத்தை எடுத்துச்
செல்கின்றனர். ஆக, குஷியாக இருக்க வேண்டும் அல்லவா? அம்மா
இறந்தாலும் அல்வா உண்ண வேண்டும். . . எனப் புரிய வைத்தபடி
இருக்கிறார். இதில் புரிதல் இருக்க வேண்டும். நாம் நடிகர்கள்
என நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொருவரும் அவரவருடைய நடிப்பை நடிக்க
வேண்டும். நாடகத்தில் பதிவாகியுள்ளது. ஒரு சரீரத்தை விடுத்து
மற்றொரு நடிப்பை நடிக்க வேண்டும். இங்கிருந்து எந்தச்
சம்ஸ்காரத்துடன் செல்வார்களோ, அங்கே சென்று குப்தமாகவே சேவைதான்
செய்வார் கள். ஆத்மாவில் சம்ஸ்காரங்கள் இருக்கின்றன அல்லவா?
எந்தக் குழந்தைகள் முக்கியமான சேவை செய்யத்தக்கவர்களோ,
மதிப்பும் அவர்களுக்கு இருக்கும். சேவை செய்யக் கூடியவர்கள்,
பாரதத்திற்கு நன்மை செய்பவர்கள் குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே
ஆவீர்கள். மற்ற அனைவருமே கெடுதல்தான் செய்கின்றனர்.
தூய்மையற்றவர்களாக ஆக்கு கின்றனர். யாராவது முதல் தரமான
சந்நியாசி இறந்து போகிறார் என வைத்துக் கொள்ளுங்கள், அவர், தனது
சரீரத்தை விட்டு விட்டுப் பிரம்மத்தில் சென்று ஐக்கியமாகி
விடுவோம் எனப் புரிந்து கொண்டு அமர்ந்து விடுவார். அவர் சென்று
யாருக்கும் நன்மை செய்ய முடியாது, ஏனென்றால் அவர் நன்மை
செய்யும் தந்தையின் குழந்தை அல்ல. நீங்கள் நன்மை செய்பவரின்
குழந்தைகள். நீங்கள் யாருக்கும் தீமை செய்ய முடியாது. நீங்கள்
நன்மை செய்வதற்காகச் செல்வீர்கள். இது அசுத்தமான உலகமாகும்.
இப்போது இந்தப் போகப் பலத்தின் (விகாரத்தின்) படைப்பு
தேவையில்லை எனத் தந்தை கட்டளை பிறப்பித்துள்ளார். இது தமோபிர
தானமான தாகும். அரைக் கல்ப காலமாக நீங்கள் ஒருவருக்கொருவர்
காமக் கோடரியின் மூலம் துக்கத்தைக் கொடுத்தபடி வந்தீர்கள்.
இந்த இராவணனின் 5 பூதங்கள் உங்களுக்குத் துக்கத்தைக் கொடுக்
கின்றன. இவை உங்களின் பெரிய எதிரியாகும். மற்றபடி தங்கமான
இலங்கை முதலானவை எதுவும் இருக்கவில்லை. இந்த அனைத்து
விஷயங்களையும் அமர்ந்து உருவாக்கியிருக் கின்றனர். இது
எல்லைக்கப்பாற்பட்ட விஷயமாகும் எனத் தந்தை சொல்கிறார். முழு
மனித சிருஷ்டியும் இந்தச் சமயத்தில் இராவணனின் சங்கிலியில்
கட்டப்பட்டிருக்கிறது. பத்திரிக்கை களிலும் நல்ல படங்கள் வெளி
வந்துள்ளன - அனைவரும் இராவணனின் சிறையில் அடைபட்டு
இருக்கின்றனர், அனைவரும் சோகவனத்தில் இருக்கின்றனர். அசோக வனம்
அல்ல. அசோகா ஓட்டல் அல்ல. இவை அனைத்துமே சோகத்தின் ஓட்டல்கள்
ஆகும், மிகவும் அழுக்காக்குகின்றனர். சுத்தமானவர்கள் யார்,
அழுக்கானவர்கள் யார் என்பதைக் குழந்தை களாகிய நீங்கள்
அறிவீர்கள்.
ஆத்மாவின் ரிகார்டில் (பதிவில்) எவ்வளவு பெரிய நடிப்பு
பதிவாகியுள்ளது எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். இவை மிகவும் அதிசயமான விஷயங்கள் ஆகும். இந்தச்
சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளின் அழிவற்ற நடிப்பு
நிரம்பியிருக்கிறது. நாங்கள் தூய்மையற்றவர்களாகத் தமோபிரதானமாக
உள்ளோம் எனச் சொல்லவும் செய்கின்றனர். இப்போது முடிவு காலமாக
உள்ளது. இரத்த ஆறு பாயும் விளையாட்டு அல்லவா? ஒரு அணுகுண்டில்
எத்தனை பேர் இறந்து விடுகின்றனர்! இப்போது பழைய உலகம் இருக்கப்
போவதில்லை. இது பழைய சரீரம், பழைய உலகமாகும். நமக்குப் புதிய
உலகத்தில் புதிய சரீரம் கிடைக்கவுள்ளது, ஆகையால் ஸ்ரீமத்படி
முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த அனைத்து குழந்தைகளும்
கண்டிப்பாக அவருடைய உதவியாளர்கள் ஆவர். ஸ்ரீஸ்ரீயின் ஸ்ரீமத்படி
நாம் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீநாராயணராக ஆகிறோம். உப ஜனாதிபதியை
ஜனாதிபதி எனச் சொல்ல மாட்டோம். அது நடக்கவே முடியாது. கல்லிலும்
முள்ளிலும் பகவான் எப்படி அவதரிப்பார்? யதா யதாஹி. . . என
அவரைப் பற்றிப் பாடுகின்றனர். எப்போதெல்லாம் முற்றிலும் தூய்மை
யற்றவர்களாக ஆகி விடுகின்றனரோ, கலியுகத்தின் இறுதி சமீபத்தில்
வருகின்றதோ அப்போ தெல்லாம் நான் வரவேண்டியுள்ளது. இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள். பாபாவின்
நினைவு இருக்கிறதா எனப் பாபா கேட்கிறார். பாபா அடிக்கடி மறந்து
விடுகிறோம் எனச் சொல்கின்றனர். ஏன்? லௌகிக தந்தையை ஒருபோதும்
மறப்பதில்லை. இது முற்றிலும் புதிய விஷயம் ஆகும். தந்தை
நிராகாரமான ஒரு புள்ளியாக இருப்பவர். இந்தப் பழக்கம் இல்லை.
நாங்கள் இப்படிக் கேட்டதும் இல்லை, அவரை இப்படி நினைவு
செய்ததும் இல்லை எனச் சொல்கின்றனர் அல்லவா? தேவதைகளுக்கும் கூட
இந்த ஞானம் இருக்காது. இந்த ஞானம் மறைந்து போய் விடுகிறது.
அவர்களைச் சுயதரிசன சக்கரதாரி எனவும் சொல்ல மாட்டோம்.
விஷ்ணுவின் இரண்டு ரூபமாக இலட்சுமி நாராயணர் ஆகின்றனர் எனச்
சொல்கின்றனர். இல்லற மார்க்கத்திற்காக இரண்டு ரூபங்களைக்
காட்டுகின்றனர். பிரம்மா சரஸ்வதி, சங்கரன் பார்வதி, இலட்சுமி
நாராயணர் எனச் சொல்கின்றனர். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் ஒருவர்
ஆவார், பிறகு தான் இரண்டாவது, மூன்றாவது. . . . குழந்தைகளே
இப்போது தேகத்துடன் சேர்த்து தேகத்தின் தர்மங்களை மறந்து
விடுங்கள், தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள் எனத் தந்தை
கூறுகிறார். ஆத்மாவாகிய நான் தந்தையின் குழந்தை ஆவேன். நான்
சந்நியாசி அல்ல. தந்தையை நினைவு செய்யுங்கள், இந்தத் தேகத்தின்
தர்மங்களை மறந்து விடுங்கள். மிகவும் சகஜமானதாகும். இப்போது
தந்தையுடன் அமர்ந்திருக்கிறீர்கள். பாபா பிரம்மாவின் மூலம்
அமர்ந்து புரிய வைக்கிறார். பாப்தாதா இருவரும் இணைந்து இருக்
கின்றனர். இரட்டைக் குழந்தைகள் ஒன்றாகப் பிறக்கின்றன அல்லவா?
அது போல இந்த இருவரின் நடிப்பும் ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது.
கடைசி நிலைக்கேற்ற கதி ஏற்படும் எனக் குழந்தைகளுக்குப் புரிய
வைத்திருக்கிறார். சரீரத்தை விடும் போது புத்தி எங்காவது
அலைந்தது என்றால் அங்கே சென்று பிறவி எடுக்க நேரிடும். கடைசிக்
காலத்தில் கணவரின் முகத்தைப் பார்த்தால் புத்தி அங்கே சென்று
விடும். இறுதிக் காலத்தில் நினைவு எப்படி இருக்குமோ அந்தச்
சமயத்தின் தாக்கம்தான் அதிகமாக இருக்கும். அந்தச் சமயத்தில்
கிருஷ்ணரைப் போலக் குழந்தை யாகப் பிறக்கப் போகிறேன் என்ற நினைவு
இருந்தது என்றால் கேட்கவே வேண்டாம். மிகவும் அழகான குழந்தையாகப்
பிறவி எடுப்பார்கள். இப்போது இறுதி நிலை ஒரே ஈடுபாட்டில்
இருக்க வேண்டும் அல்லவா? இந்தச் சமயம் நீங்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள்? நாம் சிவபாபாவை நினைவு செய்கிறோம் எனத்
தெரிந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் காட்சி தெரியவே செய்கிறது.
கிருஷ்ணரும் கிரீடதாரியே, இராதையும் கிரீடதாரியே. இளவரசன் -
இளவரசியாக ஆவார்கள், ஆனால் எப்போது? சத்யுகத்திலா? அல்லது
திரேதாவிலா? அது முயற்சியில் உள்ளது. எவ்வளவு முயற்சி
செய்வீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவியை அடைவீர்கள். நாங்கள் 21
பிறவிகளுக்கு இராஜ்யத்தை அடைவோம் என நீங்கள் சொல்கிறீர் கள்.
மம்மா பாபா அடைகின்றனர் எனும்போது நாம் ஏன் பின்பற்றக் கூடாது?
ஞானத்தைத் தாரணை செய்து பிறகு செய்விக்க வேண்டும். அந்த அளவு
சேவை செய்ய வேண்டும், அப்போது 21 பிறவிகளுக்குப் பலன்
கிடைக்கும். பள்ளியில் நல்ல விதமாக முயற்சி செய்யா விட்டால்
மதிப் பெண்கள் குறைவாக எடுப்பார்கள். நீங்கள் இப்போது 5
விகாரங்கள் எனும் மாயையாகிய இராவணன் மீது வெற்றியடைகிறீர்கள்.
உங்களுடையது அஹிம்சா யுத்தமாகும். இராமனுக்கு அடையாளத்தை (வில்
அம்பு) கொடுக்காவிட்டால் சூரிய வம்சமா, சந்திர வம்சமா என
எப்படிச் சொல்வது? ஆக, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்வீர்களோ
அவ்வளவு இறுதி நிலைக்கேற்ற கதி கிடைக்கும். தேகத்தைப் பற்றிய
சிந்தனையும் இருக்கக் கூடாது, அனைத்தையும் மறக்க வேண்டும்.
நீங்கள் அசரீரியாக வந்தீர்கள், அசரீரியாகி திரும்பிச் செல்ல
வேண்டும் எனத் தந்தை சொல்கிறார். இவ்வளவு சிறிய புள்ளியாகிய
நீங்கள் இந்தக் காதுகளால் கேட்கிறீர்கள், வாய் மூலம்
சொல்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் ஒரு சரீரத்தை விடுத்து
மற்றொன்றில் செல்கிறோம். இப்போது ஆத்மாக்களாகிய நாம்
வீட்டுக்குப் போய்க் கொண்டிரு கிறோம். பாபா மிக நன்றாக
அலங்கரிக்கிறார், அதன் மூலம் மனிதரிலிருந்து தேவதையாகி
விடுகிறீர்கள். சிவபாபாவை நினைவு செய்து நாம் இப்படி ஆகிறோம்
என நீங்கள் அறிவீர்கள். என்னை நினைவு செய்யுங்கள், ஆஸ்தியை
நினைவு செய்யுங்கள், அப்போது நீங்கள் சொர்க்கத்தின் எஜமான்
ஆவீர்கள் எனக் கீதையிலும் இருக்கிறது. முற்றிலும் சகஜமானதாகும்.
புரிந்து கொள்ளவும் செய்கிறீர்கள் - நாங்கள் ஒவ்வொரு
கல்பத்திலும் உங்களிடமிருந்து பிரம்மாவின் மூலம் ஆஸ்தியை
அடைகிறோம். பாடவும் செய்கின்றனர் அல்லவா - பிரம்மாவின் மூலம்
தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடக்கிறது என்று.
தேர்ச்சியடையாத காரணத்தால் பின்னர் திரேதாவின் க்ஷத்திரிய
தர்மத்திற்குச் சென்று விடுகின்றனர். பிரம்மாவின் மூலம் பிராமண,
தேவதா, க்ஷத்திரிய என்ற மூன்று தர்மங்களின் ஸ்தாபனை நடக்கிறது.
சத்யுகத்தில் வேறு தர்மங்கள் இருப்பதில்லை, மற்றவை அனைத்தும்
பின்னர் வருகின்றன. அவைகளுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
நாம் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தவர்கள் என்பதைப் பாரதவாசிகள்
மறந்து விட்டனர். இந்த நடிப்பும் கூட இப்படி நாடகத்தில்
உருவாகியுள்ளது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட
செல்லக் குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஸ்ரீமத்படி படித்து, மற்றவர்களையும் படிக்க
வைக்கும் தொழிலைச் செய்ய வேண்டும். நாடகத்தின் விதியில்
உறுதியாக இருக்க வேண்டும். எந்த விஷயத்தைக் குறித்தும் கவலை
கொள்ளக் கூடாது.
2. இறுதிக் காலத்தில் ஒரு தந்தையைத் தவிர வேறு எந்த நினைவும்
வரக் கூடாது, ஆகையால் இந்தத் தேகத்தையும் மறக்கக் கூடிய
பயிற்சியைச் செய்ய வேண்டும். அசரீரி ஆக வேண்டும்.