13-09-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தத்துவங்களையும் சேர்த்து அனைத்து மனிதர்களையும் (சதோபிரதானமாக) மாற்றக் கூடிய பல்கலைக்கழகம் இது ஒன்றுதான் ஆகும், இங்கிருந்துதான் அனைவருக்கும் சத்கதி கிடைக்கின்றது.

கேள்வி:

தந்தையின் மீது நிச்சயம் இருந்தாலும் எந்த ஒரு வழியை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும்?

பதில்:

1. தந்தை வந்துள்ளார் என்ற நிச்சயம் ஏற்பட்டுள்ளது என்றால் தந்தையின் முதலாவது அறிவுரை இந்தக் கண்களால் பார்க்கும் அனைத்தையும் மறந்து விடுங்கள் என்பதாகும். என்னுடைய வழிப்படி மட்டும் நடந்து செல்லுங்கள். இந்த அறிவுரையை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும். 2. நீங்கள் எல்லைக்கப் பாற்பட்ட தந்தை யுடையவராக ஆகியுள்ளீர்கள் எனும்போது தூய்மையற்றவர்களுடன் உங்களுடைய கொடுக்கல் வாங்கல் இருக்கக் கூடாது. நிச்சய புத்தியுள்ள குழந்தைகளுக்கு ஒருபோதும் எந்த விஷயத்திலும் சந்தேகம் வர முடியாது.

ஓம் சாந்தி.
இது வீட்டுக்கு வீடாகவும் இருக்கிறது, மேலும் பல்கலைக்கழகமாகவும் உள்ளது. இதுவே இறைத் தந்தையின் உலகப் பல்கலைக்கழகம் எனப்படுகிறது. ஏனென்றால் முழு உலகத்தின் மனிதர்களுக்கு சத்கதி ஏற்படுகிறது. இது உண்மையான பல்கலைக்கழகமாகும். வீட்டுக்கு வீடாகவும் உள்ளது. தாய் தந்தையரின் முன்பாக அமர்ந்திருக்கின்றனர், பிறகு இது பல்கலைக்கழகமாகவும் உள்ளது. ஆன்மீகத் தந்தை அமர்ந்திருக்கிறார். இது ஆன்மீக ஞானம் ஆகும், இது ஆன்மீகத் தந்தையின் மூலம் கிடைக்கிறது. ஆன்மீக ஞானத்தை ஆன்மீகத் தந்தையைத் தவிர வேறு எந்த மனிதரும் கொடுக்க முடியாது. அவர்தான் ஞானக்கடல் என சொல்லப்படுகிறார், மேலும் ஞானத்தின் மூலம்தான் சத்கதி ஏற்படுகிறது, ஆகையால் அவர் ஞானக் கடல், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு தந்தைதான் ஆவார். தந்தையின் மூலம் முழு உலகின் மனிதர்கள் மட்டுமென்ன, 5 தத்துவங்களாலான அனைத்து பொருட்களுமே சதோபிரதானமாகி விடு கின்றன. அனைவருக்கும் சத்கதி ஏற்படுகிறது. இந்த விஷயங்கள் மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டியவை ஆகும். இப்போது அனைவருக்கும் சத்கதி ஏற்பட வேண்டி யுள்ளது. பழைய உலகம் மற்றும் உலகில் இருக்கும் அனைவருமே மாறி விடுவார்கள். இங்கே பார்க்கக் கூடிய அனைத்துமே மாறி புதியதாக ஆகவுள்ளது. பாடவும் படுகிறது - இங்கே பொய்யான மாயை, பொய்யான உடல் . . . இது பொய்யான கண்டமாக ஆகி விடுகிறது. பாரதம் உண்மையான கண்டமாக இருந்தது, இப்போது பொய்யான கண்டமாக உள்ளது. படைப்பவர் மற்றும் படைப்பைக் குறித்து மனிதர்கள் சொல்லும் அனைத்தும் பொய்யாகும். இப்போது நீங்கள் தந்தையின் மூலம் தெரிந்துக் கொள்கிறீர்கள் - பகவானுடைய மகா வாக்கியம். பகவான் ஒரு தந்தை அல்லவா. அவர் நிராகாரமாக இருப்பவர், உண்மையில் அனைத்து ஆத்மாக்களுமே நிராகாரிகள், பிறகு இங்கே வந்து சாகார ரூபத்தை எடுக் கின்றனர். அங்கே ஆகார உடல் இருக்காது. ஆத்மாக்கள் மூலவதனம் அல்லது பிரம்ம மகாதத்துவத்தில் வசிக்கின்றன. அது ஆத்மாக்களாகிய நம்முடைய வீடு, பிரம்ம மகாதத் துவம். இந்த ஆகாயம் ஒரு தத்துவம் ஆகும், இங்கே சாகாரமான நடிப்பு நடக்கிறது. உலகின் வரலாறு புவியியல் மீண்டும் மீண்டும் நடக்கிறது. மீண்டும் நடக்கிறது என சொல்கின்றனர், ஆனால் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதும் இல்லை. தங்க யுகம், வெள்ளி யுகம், . . பிறகு என்ன? மீண்டும் தங்கயுகம் கண்டிப்பாக வரும். சங்கமயுகம் ஒன்று தான். சத்யுகம், திரேதா அல்லது திரேதா மற்றும் துவாபரத்தின் சங்கமம் என சொல்லப்படுவதில்லை, அது தவறாகி விடும். தந்தை சொல்கிறார் - நான் கல்பம் தோறும் கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். தூய்மையற்றவராகும் போதுதான் என்னை அழைக்கவும் செய்கின்றனர். நீங்கள் எங்களை தூய்மையாக்குவதற்காக வாருங்கள் என சொல்கின்றனர். தூய்மையானவர்கள் சத்யுகத்தில்தான் இருப்பார்கள். இப்போது இருப்பது சங்கமயுகம், இது கல்யாணகாரி (நன்மை நிறைந்த) சங்கமயுகம் எனப்படுகிறது. ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சந்திப்பின் சங்கமம், இது கும்பம் (மேளா / விழா) என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் பிறகு நதிகளின் சங்கமத்தைக் காட்டுகின்றனர். இரண்டு நதிகள் உள்ளன, பிறகு மூன்றாவதாக குப்த நதி என்றும் சொல்கின்றனர். இதுவும் கூட பொய்யாகும். குப்தமான நதி என்று இருக்க முடியுமா என்ன? அறிவியல் வல்லுனர்கள் கூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அம்பு எய்தினார் கங்கை வந்தது, இவை யனைத்தும் பொய் ஞானம், பக்தி, வைராக்கியம் என பாடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர், ஆனால் அர்த்தம் எதுவும் தெரியாது. முதன் முதலாக உள்ளது ஞானம் - பகல், சுகம், பிறகு பக்தி - இரவு, துக்கம். பிரம்மாவின் பகல், பிரம்மா வின் இரவு. இப்போது ஒருவர் மட்டும் இருக்க முடியாது, பலர் இருப்பார்கள் அல்லவா. அரைக் கல்ப காலம் பகலாக இருக்கும், பிறகு இரவும் கூட அரைக் கல்பம் இருக்கும். பிறகு முழு பழைய உலகின் மீது வைராக்கியம் உண்டாகிறது.

தந்தை சொல்கிறார் - தேகத்துடன் கூடவே நீங்கள் இந்த கண்களால் பார்க்கும் அனைத்தையும் ஞானத்தின் மூலம் மறக்க வேண்டும். வேலை, தொழில் முதலான வைகளைச் செய்ய வேண்டும். குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். ஆனால் புத்தியின் தொடர்பை ஒருவருடன் இணைக்க வேண்டும். அரைக் கல்பம் நீங்கள் இராவணனின் வழியில் நடக்கிறீர்கள். இப்போது தந்தை யுடையவராய் ஆகி இருக்கிறீர்கள் என்றால் எது செய்தாலும் தந்தையின் (அறிவுரை) வழிப்படி செய்யுங்கள். உங்களுடைய கொடுக்கல் வாங்கல் இதுவரை தூய்மையற்றவர்களுடன் நடந்து வந்தது, அதன் விளைவு என்ன ஆனது? நாளுக்கு நாள் தூய்மையற்றவர் களாகத்தான் ஆகி வந்தீர்கள், ஏனென்றால் பக்தி மார்க்கமே இறங்கும் கலையின் மார்க்கமாகும். சதோபிரதானம், சதோ, ரஜோ, தமோவில் வர வேண்டியுள்ளது. கண்டிப்பாக இறங்கவே வேண்டும். இதிலிருந்து யாரும் விடுபட முடியாது. லட்சுமி நாராயணரின் 84 பிறவிகள் குறித்தும் சொல்லியிருக்கிறேன் அல்லவா. ஆங்கில வார்த்தைகள் மிக நன்றாக உள்ளன. கோல்டன் ஏஜ் (தங்கயுகம்). . . துரு படிகிறது, பிறகு இந்த சமயம் வந்து (அயர்ன் ஏஜ்) இரும்பு யுகத்தவராக ஆகியுள்ளீர்கள். தங்க யுகத்தில் புதிய உலகம் இருந்தது, புதிய பாரதம் இருந்தது. இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. நேற்றைய விசயமாகும். சாஸ்திரங்களில் இலட்சக்கணக்கான வருடங்கள் என எழுதப் பட்டுள்ளது. இப்போது தந்தை கேட்கிறார் - உங்களின் சாஸ்திரங்கள் சரியானவையா அல்லது நான் சரியா? உலகின் ஆல்மைட்டி அத்தாரிட்டி (சர்வசக்திவான்) என தந்தை சொல்லப்படுகிறார். வேத சாஸ்திரங்கள் அதிகமாக படிப்பவர் கள் அத்தாரிட்டி எனப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் அத்தாரிட்டி கள். ஞானத்தைக் குறித்து என்னை பாடுகின்றனர் - நீங்கள் ஞானக்கடல், நாங்கள் அல்ல. மனிதர்கள் அனைவரும் பக்திக் கடலில் மூழ்கியுள்ளனர். சத்யுகத்தில் யாரும் விகாரத்தில் செல்வதில்லை. கலியுகத்தில் மனிதர்கள் முதல்-இடை-கடைசி துக்கம் நிறைந்தவர்களாக ஆகியபடி இருக்கின்றனர். தந்தை கல்பத்திற்கு முன்பும் கூட இப்படி புரியவைத்திருந்தார், இப்போது மீண்டும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். கல்பத்திற்கு முன்பும் கூட எல்லைக் கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்திருந்தோம், இப்போது மீண்டும் படித்து அடைந்து கொண்டிருக்கிறோம் என குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர். சமயம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த உலகம் வினாசமாகி விடும், ஆகையால் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை யிடமிருந்து முழுமையான ஆஸ்தியை எடுக்க வேண்டும். அவர் தந்தை, ஆசிரியர், குருவாகவும் உள்ளார். பரம தந்தை, பரம ஆசிரியரும் கூட. உலகின் வரலாறு புவியியல் எப்படி திரும்பத் திரும்ப நடக்கிறது என்ற முழுமையான ஞானத்தைக் கொடுக்கிறார். இதை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு போல இவர் அதே கீதையின் பகவான் ஆவார், கிருஷ்ணர் அல்ல என குழந்தைகள் இப்போது புரிந்து கொள் கின்றனர். மனிதர்கள் பகவான் என சொல்லப்பட முடியாது. பகவான் மறுபிறவிகள் எடுக்காதவர். இதை தெய்வீக பிறவி என சொல்கிறார். இல்லாவிட்டால் நிராகாரமாக (தேகமற்றவராக) இருக்கும் நான் எப்படி பேசுவேன்? நான் கண்டிப்பாக வந்து தூய்மை யானவர்களாக ஆக்க வேண்டியுள்ளது எனும்போது யுக்தியை கூறவேண்டியுள்ளது. ஆத்மாக்களாகிய நாம் அமரர்கள் என நீங்கள் அறிவீர்கள். இராவண இராஜ்யத்தில் நீங்கள் அனைவரும் தேக அபிமானம் உள்ளவர்களாக ஆகிவிட்டீர்கள். சத்யுகத்தில் ஆத்ம அபிமானிகளாகி இருப்பார்கள். மற்றபடி படைப்பவராகிய பரமாத்மா மற்றும் அவருடைய படைப்பைப் பற்றி அங்கும் கூட யாருக்கும் தெரியாது. அங்கும் கூட நாம் மீண்டும் இப்படி விழ வேண்டியிருக்கும் என தெரிந்து விட்டால் இராஜ்யத்தின் குஷியே இருக்காது, ஆகையால் இந்த ஞானம் அங்கே மறைந்து போய் விடும் என தந்தை சொல்கிறார், உங்களுடைய சத்கதி ஏற்பட்டுவிடும் போது ஞானத்திற்கான அவசியம் இருக்காது. ஞானத் திற்கான அவசியமே துர்க்கதியின் போதுதான் தேவைப்படுகிறது.. இந்த சமயம் அனைவருமே துர்க்கதியில் இருக்கின்றனர், அனைவரும் காமச் சிதையில் அமர்ந்து எரிந்து இறந்து போய் விட்டனர். தந்தை சொல்கிறார் - என் குழந்தைகளே, சரீரத்தின் மூலம் நடிப்பை நடிக்கும் ஆத்மாக்கள் காமச் சிதையில் அமர்ந்து தமோபிரதானமாகிக் கிடக்கின்றனர். நாங்கள் பதிதமாக (தூய்மை யற்றவர் களாக) ஆகி விட்டோம் என அழைக்கவும் செய் கின்றனர். பதிதமாக ஆவதும் காமச் சிதையின் மூலமேயாகும். கோபத்தினாலோ அல்லது பேராசையாலோ பதிதமாக ஆவது கிடையாது. சாது சன்னியாசிகள் தூய்மையாக இருக்கின்றனர், தேவதைகள் தூய்மையாக இருக்கின்றனர், ஆகையால் தூய்மையற்ற மனிதர்கள் சென்று தலை வணங்குகின்றனர். நீங்கள் விகாரமற்றவர், நாங்கள் விகாரிகள் என பாடவும் செய்கின்றனர். நிர்விகாரி (விகாரமற்ற) உலகம், விகாரி உலகம் என பாடப்படு கிறது. பாரதம்தான் நிர்விகாரி உலகமாக இருந்தது. இப்போது விஷம் நிறைந்ததாக உள்ளது. பாரதத்துடன் முழு உலகமுமே விஷம் நிறைந்ததாக உள்ளது. நிர்விகாரமான உலகத் தில் இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரே தர்மம்தான் இருந்தது, தூய்மையாய் இருந்தபோது அமைதி, செல்வ வளம் என மூன்றும் இருந்தன. தூய்மை முதன்மையானது. இப்போது தூய்மை இல்லை, ஆகவே அமைதி, செல்வ வளமும் கூட இல்லை.

ஞானக் கடல், சுகக் கடல், அன்புக்கடல் ஒரு தந்தையே ஆவார். உங்களைக்கூட இப்படி அன்பானவர்களாக ஆக்குகிறார். இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யத்தில் அனைவரும் அன்பான வர்கள் ஆவர். மனிதர்கள், விலங்குகள் என அனைத்துமே அன்பானவை. புலி, ஆடு இரண்டும் ஒற்றுமையாய் நீர் குடிக்கும். இது ஒரு உதாரணமாகும். அங்கே அழுக்காக்கக் கூடிய பொருள் இருப்பதில்லை. இங்கே நோய்கள், கொசுக்கள் முதலானவை நிறைய உள்ளன. அங்கே இப்படிப் பட்ட எதுவும் இருக்காது. பணக்கார மனிதர்களிடம் ஃபர்னிச்சர்கள் (இருக்கைகள் முதலியன) கூட முதல் தரமானதாக இருக்கும். ஏழைகளின் ஃபர்னிச்சர்கள் சாதாரணமாக இருக்கும். பாரதம் இப்போது ஏழையாக உள்ளது, எவ்வளவு குப்பையாக ஆகி விட்டுள்ளது. சத்யுகத்தில் எவ்வளவு சுத்தமாக இருக்கும். தங்கத்தாலான மாளிகைகள் முதலானவை எவ்வளவு முதல் தரமாக இருக்கும். கிருஷ்ண ரோடு எத்தனை அழகிய பசுக்களைக் காட்டியுள்ளனர். கிருஷ்ணபுரியில் பசுக்கள் கூட இருக்குமல்லவா! அங்குள்ள பொருட்கள் எவ்வளவு முதல் தரமாக இருக்கின்றன. சொர்க்கம் என்றால் பின் என்ன என நினைக்கிறீர்கள்! இந்த பழைய சீச்சீ உலகத்தில் மிகவும் குப்பை யாக உள்ளது. இவை அனைத்தும் இந்த ஞான யக்ஞத்தில் அர்ப்பணமாகி விடும். எப்படி எப்படியெல்லாம் அணுகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அணுகுண்டை வீசினால் உடனே நெருப்பு வெளிப்படும். இன்றைய நாட்களில் அளவற்ற அழிவடைந்து விடுமாறு நுண்ணிய வியாதி உண்டாக்கும் கிருமிகளைப் போட்டு வினாசம் செய்கின்றனர். மருத்துவம் பார்ப்பதற் காக மருத்துவ மனை முதலானவை இருக்காது. தந்தை சொல்கிறார் - குழந்தைகளுக்கு எந்த கஷ்டமும் ஏற்படக்கூடாது, ஆகையால் இயற்கையின் சீற்றங்கள், அடை மழை என பாடப் பட்டுள்ளது. குழந்தைகள் வினாசத்தின் காட்சிகளைக்கூட பார்த்திருக்கின்றனர். வினாசம் கண்டிப்பாக ஆக வேண்டியுள்ளது என புத்தியும் சொல்கிறது. வினாசத்தின் நேரிடை காட்சி தெரியட்டும், பிறகு பார்க்கலாம் என சிலர் சொல்கின்றனர், நல்லது, நம்பிக்கை இல்லையா, அது உங்கள் விருப்பம் என சொல்லுங்கள். நாங்கள் ஆத்மாவின் காட்சியைப் பார்த்தால் நம்புவோம் என சிலர் சொல்வார்கள். நல்லது, ஆத்மா புள்ளியாக உள்ளது. பார்த்து விட்டால் மட்டும் என்ன ஆகப்போகிறது? இதன் மூலம் சத்கதி ஏற்படுமா என்ன? பரமாத்மா அகண்ட ஜோதி சொரூபமாக இருப்பவர், ஆயிரம் சூரியனை விடவும் பிரகாசமானவர் என சொல்கின்றனர். ஆனால் அப்படி இல்லை. நிறுத்துங் கள், என்னால் தாங்க முடியவில்லை என அர்ஜுனன் சொன்னதாக கீதையில் எழுதி யுள்ளது. இப்படிப்பட்ட விசயங்கள் எதுவும் இல்லை. தந்தையை யாராவது பார்த்து என்னால் (பிரகாசமான ஒளியை) காண சகித்துக் கொள்ள முடியவில்லை என சொல்வார்களா என்ன, அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஆத்மா எப்படி உள்ளதோ பரமபிதா பரமாத்மா தந்தையும் அப்படித்தான் இருப்பார். அவர் மட்டும் ஞானக்கடலாக இருக்கிறார். உங்களுக் குள்ளும் ஞானம் இருக்கிறது. தந்தைதான் வந்து படிப்பிக்கிறார், வேறு எந்த விசயமும் இல்லை. யார் யார் எந்த பாவனையில் நினைக்கின்றனரோ அந்த பாவனையை நிறைவேற்றி வைக்கிறேன். அதுவும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. மற்றபடி பகவான் யாருக்கும் கிடைப்பதில்லை. மீரா காட்சியைப் பார்த்ததில் எவ்வளவு குஷி அடைந்திருந்தார். அடுத்த பிறவியில் கூட பக்தையாக ஆகியிருக்கக் கூடும். வைகுண்டத்திற் கென்னவோ செல்ல முடியாது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் வைகுண்டம் செல்வதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நாம் வைகுண்டத்திற்கு, கிருஷ்ணபுரிக்கு எஜமானாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என அறிவீர்கள். இங்கோ, அனைவருமே நரகத்தின் எஜமானாக உள்ளனர். வரலாறு-புவியியல் திரும்பவும் நடக்கும் அல்லவா. நாம் நம்முடைய இராஜ்ய பாக்கியத்தை மீண்டும் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என குழந்தைகளுக்குத் தெரியும். இது இராஜயோக பலமாகும். தோள் பலத்தின் சண்டை பலமுறை, பல பிறவிகள் நடந்தன. யோக பலத்தின் மூலம் உங்களுடைய ஏறும் கலை ஏற்படுகிறது. சொர்க்கத்தின் இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என அறிவீர்கள். யார் கல்பத்திற்கு முன்பாக எப்படி முயற்சி செய்திருப்பார்களோ, அப்படியே செய்வார்கள். நீங்கள் மனமுடைந்து போய்விடக் கூடாது. யார் உறுதியான நிச்சயபுத்தியுள்ளவர்களோ, அவர்களுக்கு ஒருபோதும் சந்தேகம் வர வாய்ப்பில்லை. சந்தேக புத்தி உள்ளவர்களாகவும் கண்டிப்பாக இருக்கின்றனர். ஆச்சர்யப்படும் படியாக கேட்டு, பிறருக்கும் சொல்லி, பின் (பாபாவை விட்டு) ஓடிப் போனவர்களாக ஆகி விடுகின்றனர் என பாபா சொல்லியிருக்கிறார். ஆஹா மாயா, நீ இவர்களை வெற்றி கொண்டு விடுகிறாய். மாயை மிகவும் பலசாலியாக உள்ளது. நல்ல நல்ல முதல்தரமான சேவை செய்யக் கூடிய, செண்டரை நடத்தக் கூடியவர்களைக் கூட மாயை அடித்துப் போட்டு விடுகிறது. பாபா திருமணம் செய்து கொண்டு முகத்தைக் கருப்பாக்கி விட்டேன், காமக் கோடரியால் நான் தோல்வி அடைந்து விட்டேன் என எழுதுகின்றனர். பாபா இப்போது உங்கள் முன்னால் வரத் தகுதி யற்றவனாய் ஆகி விட்டேன். பிறகு, பாபா நேரில் வரட்டுமா என கேட்டு எழுதுகின்றனர். முகத்தைக் கருப்பாக்கிக் கொண்டாயிற்று, இப்போது நீ இங்கே வரமுடியாது என பாபா எழுதுகிறார். இங்கே வந்து என்ன செய்வாய். ஆனாலும் கூட அங்கேயே இருந்து முயற்சி செய். ஒரு முறை விழுந்தது விழுந்ததுதான். இராஜ்ய பதவி அடைய முடியும் என்பதல்ல. ஏறினால் ஒரேயடி யாக வைகுண்ட ரசம், விழுந்தால் ஒரேயடியாக சண்டாளர். . . எலும்புகள் எல்லாம் உடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது அல்லவா. 5 ஆவது மாடியில் இருந்து விழு கின்றனர், பின்னர் ஒரு சிலர் உண்மையை எழுதுகின்றனர். ஒரு சிலரோ சொல்வதே இல்லை. இந்திரபிரஸ்தத்தின் தேவதைகளின் உதாரணம் உள்ளதல்லவா. இது முற்றிலும் ஞானத்தின் விஷயமாகும். இந்த சபையில் தூய்மையற்ற யாரும் அமருவதற்கு அனுமதி கிடையாது. ஆனால் சில சூழ்நிலையில் அமர வைக்க வேண்டியுள்ளது. தூய்மையற்ற வர்கள் தான் வருவார்கள். அல்லவா. இப்போது பாருங்கள் எவ்வளவு திரௌபதிகள் கூப்பிடுகின்றனர், பாபா எங்களை துகிலுரிவதிலிருந்து காப்பாற்றுங்கள் என கதறுகின்றனர். பந்தனத்திலிருப்பவர்களின் நடிப்பும் நடக்கிறது. காமேசு (காமம் நிறைந்தவர்), குரோதேசு (குரோதம் நிறைந்தவர்) கூட இருக்கின்றனர் அல்லவா. பெரிய பிரச்சினைகள் உண்டா கின்றன. பாபாவிடம் செய்திகள் வருகின்றன. குழந்தைகளே இதன் மீது வெற்றி கொள்ளுங்கள் என எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொல்கிறார். இப்போது தூய்மையாய் இருந்து, என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உலகின் எஜமான் ஆவீர்கள் என்பது உறுதி. யாரோ தூண்டுதல் கொடுத்து எங்களை இந்த அணு ஆயுதங்களை செய்விக்கிறார்கள் என செய்தித்தாள் களில் தாமே போடுகின்றனர். இதன் மூலம் அவர்களுடைய குலமே நாசமாகும். ஆனால் என்ன செய்வது, நாடகத்தில் பதிவாகியுள்ளது, நாளுக்கு நாள் உருவாக்கியபடி இருக்கின்றனர். நேரம் அதிகம் இல்லையல்லவா. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சத்யுகத்தின் அன்பான இராஜ்யத்தில் செல்வதற்காக மிக மிக அன்பானவராக ஆக வேண்டும். இராஜ்ய பதவிக்காக கண்டிப்பாக தூய்மை அடைய வேண்டும். அகையால் காமம் எனும் மிகப் பெரிய எதிரியின் மீது வெற்றி கொள்ள வேண்டும்.

2. இந்த பழைய உலகத்தின் மீது எல்லையற்ற வைராக்கியம் உள்ளவராக ஆவதற்காக தேகத்துடன் சேர்த்து இந்த கண்களால் காணும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் பாராமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு காலடியிலும் தந்தையிடம் வழி (அறிவுரை) கேட்டு நடக்க வேண்டும்.

வரதானம்:

பிரச்சனைகளை ஏறும் கலைக்கான சாதனம் என்று அனுபவம் செய்து சதா திருப்தியாக இருக்கக் கூடிய சக்திசாலி ஆகுக.

யார் சக்திசாலியான ஆத்மாக்களாக இருக்கிறார்களோ, அவர்கள் பிரச்சனைகளை ஒரே நேர் கோட்டில் செல்லும் பாதையை கடப்பது போல மிக எளிதாக கடந்துவிடு வார்கள். அவர்களுக்கு பிரச்சனைகள் என்பது முன்னேறும் கலைக்கான சாதனமாகி விடுகிறது. ஒவ்வொரு பிரச்சனையும் மிக நன்றாக தெரிந்த வியமாக அனுபவமாகிறது. அவர்கள் ஒருபொழுதும் ஆச்சரியமாக பார்ப் பதற்கு பதிலாக எப்பொழுதும் திருப்தியாக இருக்கிறார்கள். வாயிலிருந்து அவ்வப்பொழுது இந்த காரணம் என்ற வார்த்தை வெளிவராது, ஆனால் அந்த நேரத்தில் காரணத்தை நிவாரணமாக மாற்றிவிடுவார்கள்.

சுலோகன்:

சுய நிலையில் நிலைத்திருந்து அனைத்து சூழ்நிலைகளையும் கடந்து செல்வது தான் உயர்ந்த நிலையாகும்.