13-10-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இரத்த சம்மந்தத்தில் தான் துக்கம் உள்ளது. நீங்கள் அதை தியாகம் செய்து தங்களுக்குள் ஆன்மீக அன்பு கொள்ள வேண்டும். இதுவே சுகம் மற்றும் ஆனந்தத்திற்கான ஆதாரம் ஆகும்.

கேள்வி:
வெற்றி மாலையில் வர வேண்டும் என்றால் குறிப்பாக எந்த ஒரு முயற்சி வேண்டும்?

பதில்:
வெற்றி மாலையில் வர வேண்டும் என்றால் குறிப்பாக தூய்மையாக ஆவதற்கான முயற்சி செய்யுங்கள். பக்குவமான சந்நியாசி அதாவது நிர்விகாரியாக ஆகும் பொழுதே வெற்றி மாலையின் மணி ஆவீர்கள். ஏதேனும் ஒரு கர்மபந்தனத்தின் கணக்கு வழக்கு உள்ளது என்றால் வாரிசு ஆக முடியாது. பிரஜையில் சென்று விடுவார்கள்.

பாடல்:
விட்டில் பூச்சிகளுக்காக கூட்டத்தில் விளக்கொளி எரிந்தது . ..

ஓம் சாந்தி.
பாருங்கள் நாம் நமது தந்தையைத் தான் மகிமை செய்கிறோம். ஆத்மாவாகிய நான் அவசியம் எனது தந்தையை வெளிப்படுத்துவேன் அல்லவா? மகன் தந்தையை வெளிப்படுத்து கிறார். எனவே நான் ஆத்மா. நீங்கள் கூட ஆத்மாக்களாகிய நாம் என்று கூறுவீர்கள். நம் அனைவரின் தந்தை ஒரு பரமாத்மா ஆவார். அவர் அனைவரின் தந்தை ஆவார். இதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆத்மாக்களாகிய நமது தந்தை தனித் தனி ஆவார்கள் என்று கூற மாட்டார்கள். அனைவரின் தந்தை ஒருவர் ஆவார். இப்பொழுது நாம் அவரது குழந்தைகள் ஆன காரணத்தினால் அவரது தொழிலை அறிந்துள்ளோம். நாம் பரமாத்மா எங்கும் நிறைந்துள்ளார் என்று கூற முடியாது. பிறகு எல்லோருக்குள்ளும் பரமாத்மா இருப்பதாக ஆகிவிடும். தந்தையை நினைவு செய்து குழந்தைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஏனெனில் தந்தையிடம் என்ன இருக்கிறதோ அவருடைய ஆஸ்தி குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. இப்பொழுது நாம் பரமாத்மா வின் வாரிசு ஆவோம். அவரிடம் என்ன இருக்கிறது? அவர் ஆனந்தக் கடல் ஆவார். ஞானக் கடல் ஆவார். அன்புக் கடல் ஆவார். நமக்குத் தெரியும், அதனால் நாம் அவரை மகிமை செய் கிறோம். மற்றவர்கள் இவ்வாறு கூற மாட்டார்கள். அப்படியே யாராவது கூறுகிறார்கள் என்றாலும் கூட அவர் எப்படி அவ்வாறு இருக்கிறார் என்பது தெரியவே தெரியாது. மற்றவர்கள் எல்லோரும் பரமாத்மா எங்கும் நிறைந்தவர் என்று கூறி விடுகிறார்கள். ஆனால் நாம் அவரது குழந்தைகள் ஆவோம். எனவே நமது நிராகார அழியாத தந்தைக்கு அவர் ஆனந்தக் கடல், ஞானக்கடல், அன்பின் களஞ்சியம் ஆவார் என்று மகிமை வர்ணனை செய்கிறோம். ஆனால் அங்கு நிராகார உலகத்தில் துக்கம் சுகத்திலிருந்து விடுபட்ட நிலை இருக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்களே என்று யாராவது கேள்வி எழுப்புவார்கள். அங்கு சுகம் அல்லது ஆனந்தம் அல்லது அன்பு எங்கிருந்து வந்தது? இப்பொழுது இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இந்த ஆனந்தம், சுகம் அல்லது அன்பு என்று கூறுவது சுகத்தின் நிலையாகும். ஆனால் அங்கு சாந்தி தேசத்தில் ஆனந்தம், அன்பு அல்லது ஞானம் எங்கிருந்து வந்தது? அந்த சுகக் கடல் இந்த சாகார சிருஷ்டியில் வரும் பொழுது தான் வந்து சுகம் அளிக் கிறார். அங்கே துக்கம் சுகத்திலிருந்து விடுபட்ட நிலையில் இருப்பார்கள். ஏனெனில் ஒன்று துக்கம் சுகத்திலிருந்து தனிப்பட்ட உலகம் என்பது உங்களுக்கு புரிய வைக்கப் பட்டுள்ளது. அது நிராகார உலகமாகும். இரண்டாவது, பிறகு இருப்பது சுகத்தின் உலகம். அங்கு எப்பொழுதும் சுகம் ஆனந்தம் இருக்கும். அது சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது துக்கத்தின் உலகமாகும். அதற்கு நரகம் அல்லது இரும்பு யுக உலகம் என்று கூறுகிறார்கள். இப்பொழுது இந்த இரும்பு யுக உலகத்தை சுகத்தின் கடலான பரமபிதா பரமாத்மா வந்து மாற்றி, ஆனந்தம், சுகம், அன்பின் களஞ்சியமாக ஆக்குகிறார். அங்கு சுகமே சுகம் இருக்கும். அன்பே அன்பு இருக்கும். அங்கு மிருகங்களுக்கிடையே கூட மிகவும் அன்பு இருக்கும். பசுவும், புலியும் சேர்ந்து தண்ணீர் குடிக்கும். அந்த அளவிற்கு அவைகளுக்கிடையே அன்பு நிறைந்திருக்கும். எனவே பரமாத்மா வந்து ஸ்தாபனை செய்யும் தனது ராஜதானியில் சுகம் மற்றும் ஆனந்தம் இருக்கும். மற்றபடி நிராகார உலகத்தில் சுகம் ஆனந்தம் என்ற விஷயமே கிடையாது. அன்பின் விஷயமே கிடையாது. அது நிராகார (அசரீரி) ஆத்மாக்கள் வசிக்குமிட மாகும். அங்கு எல்லோருக்கும் ஓய்வு பெற்ற வாழ்க்கை அதாவது நிர்வாண நிலை இருக்கும். அங்கு துக்கம் சுகத்தின் எந்த உணர்வும் இருக்காது. அந்த துக்கம் சுகத்தின் பாகமோ இந்த சாகார உலகத்தில் நடக்கிறது. இதே சிருஷ்டி யில் சொர்க்கம் இருக்கும் பொழுது நிலையான ஆன்மீக அன்பு இருக்கும். ஏனெனில் இரத்த சம்மந்தத்தில் துக்கம் இருக்கிறது. சந்நியாசிகளுக்கிடையில் கூட இரத்த சம்மந்தம் இருப்ப தில்லை. எனவே அவர்களிடமும் கூட துக்கத்தின் எந்த விஷயமும் இருப்பதில்லை. அவர்கள் நான் சத் சித் ஆனந்த சொரூபம் ஆவேன் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இரத்த சம்மந்தத்தை தியாகம் செய்து விடுகிறார்கள். அதே போல இங்கும் உங்களுக்கு எந்த ஒரு இரத்த சம்மந்தமும் இல்லை. இங்கு நம் அனைவருக்கும் ஆன்மீக அன்பு இருக்கிறது. அதை பரமாத்மா கற்பிக்கிறார்.

நீங்கள் என்னுடைய அன்பிற்குரிய குழந்தைகள் ! என்று தந்தை கூறுகிறார். என்னுடைய ஆனந்தம், அன்பு, சுகம் உங்களுடையது. ஏனெனில், நீங்கள் அந்த உலகத்தை விட்டு விட்டு என்னுடைய மடியை அடைந்துள்ளீர்கள். இங்கும் நீங்கள் நடைமுறை வாழ்க்கையில் மடியில் வந்து அமர்ந்துள்ளீர்கள். அப்படி இன்றி எப்படி அந்த குருவின் மடியில் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள் ! அப்படி அல்ல. அதற்கு அன்பிற் குரிய குழந்தைகள் என்று கூறமாட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் பிரஜைகள் போல ஆவார்கள். மற்றபடி யார் சந்நியாசம் செய்து அவர்களது மடியில் செல்கிறார்களோ அவர்கள் தான் அன்பிற்குரிய மகன்கள் ஆகிறார்கள். ஏனெனில், அவர்கள் தான் குருவிற்குப் பின்னால் சிம்மாசனத்தில் அமருகிறார்கள். குழந்தைகள் மற்றும் பிரஜைகளில் இரவு பகலுக்கான வித்தியாசம் இருக்கும். அவர்கள் வாரிசாகி ஆஸ்தியை அடைகிறார்கள். எப்படி நீங்கள் அவர்களிடமிருந்து இரத்த சம்மந்தத்தை விடுத்து இந்த நிராகார அல்லது சாகாரத்தின் மடியில் வந்துள்ளீர்கள். எனவே வாரிசு ஆகி உள்ளீர்கள். இதில் கூட பின் யார் எவ்வளவு ஞானம் எடுப்பார்களோ அது தான் ஆனந்தம் ஆகும். கல்விக்கு ஆனந்தம் என்று கூறப்படுகிறது. எனவே எந்த அளவிற்கு அவர்கள் ஞானம் கற்று தாரணை செய்வார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் ராஜதானியில் பிரஜைகளாக சுகம் பெறுவார்கள். இது இறை கல்வியின் ஆனந்தம் ஆகும் அல்லவா? இதன் மூலம் மிக உயர்ந்த அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்கிறது. இந்த நிலையான, இடையறாத சுகம் சாந்திமயமான சுயராஜ்யம் இறைவனின் சொத்து ஆகும். அது குழந்தை களுக்கு கிடைக்கிறது. பிறகு எந்தெந்த அளவிற்கு யார் ஞானம் எடுப்பார்களோ அந்த அளவிற்கு தந்தையின் ஆஸ்தி கிடைத்து விடும். எப்படி உங்களிடம் எத்தனை பேர் அறிய ஆவலுடையவர்கள் வருகிறார்கள், அவர்கள் உங்களுடைய அன்பிற்குரிய பிரஜை ஆவார்கள். குழந்தைகள் அல்ல. ஏனெனில் வருவதும் போவதுமாக இருப்பார்கள். குழந்தைகளாகவும் இருக்கக் கூடும். ஏனெனில் பிரஜைகளில் ஒரு சிலர் வாரிசாகவும் ஆகி விடுகிறார்கள். ஏனெனில் ஞானம் எடுக்க எடுக்க இங்கோ ஏராளமான சுகம் மற்றும் சாந்தி உள்ளது. அந்த உலகத்திலோ துக்கம் இருக்கிறது என்பதைப் பார்க்கும் பொழுது மடியில் வந்து விடுகிறார்கள். உடனேயே யாரும் குழந்தை ஆகி விடுவதில்லை. நீங்கள் கூட முதலில் வருவதும் போவதுமாக இருந்தீர்கள். பிறகு கேட்டு கேட்டு அமர்ந்து விட்டீர்கள். பின் வாரிசு ஆகி விட்டீர்கள். சந்நியாசிகளிடம் கூட இவ்வாறு ஆகிறது. கேட்டுக் கேட்டு சந்நியாசத்திலோ சாந்தி சுகம் இருக்கிறது என்று நினைக்கும் பொழுது சந்நியாசம் செய்து விடுகிறார்கள். இங்கும் கூட சுவை ஏற்பட்டு விடும் பொழுது அன்பிற்குரிய மகன் ஆகி விடுகிறார்கள். ஆக ஜன்ம ஜன்மாந்திரத்திற்கு ஆஸ்தி கிடைத்து விடுகிறது. அவர்கள் பிறகு தேவதா பரம்பரையில் வந்து கொண்டே இருப்பார்கள். பிரஜைகளோ கூடவே இருப்ப தில்லை. அவர்கள் ஆங்காங்கே கர்ம பந்தனத்தில் சென்று விடுகிறார்கள்.

விட்டில் பூச்சிகளுக்காக கூட்டத்தில் விளக்கு எரிந்தது என்று பாடலில் கூறுகிறார்கள் - எனவே விட்டில் பூச்சிகள் கூட ஒளி மீது நடனம் ஆடி ஆடி இறந்து விடுகின்றன. ஒரு சில சக்கரம் சுற்றி வந்து போய் விடுகின்றன. இந்த உடல் (பிரம்மா) கூட ஒரு ஒளியாகும். இதில் ஆல் மைட்டி பாபா பிரவேசம் ஆகி உள்ளார். நீங்கள் விட்டில் பூச்சிகளாக ஆகி வந்தீர்கள். வருவதும் போவது மாக ஆகி கடைசியில் எல்லா இரகசியங்களையும் புரிந்து கொண்டு விடும் பொழுது உட்கார்ந்து விட்டீர்கள். ஆயிரக்கணக்கானோர், இலட்சக் கணக்கானோர் வருகிறார்கள். உங்கள் மூலமாகக் கூட கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு கேட்பார்களோ அந்த அளவிற்கு அமைதி மற்றும் ஆனந்தத்தின் வரதானத்தைப் பெற்றுக் கொண்டே செல்வார்கள். ஏனெனில், இந்த அழியாத தந்தையின் கல்வி அழிந்து போவதில்லை. இதற்கு அழியாத ஞானச் செல்வம் என்று கூறப்படுகிறது. அது அழிந்து போவது இல்லை. எனவே யார் சிறிதளவு ஞானம் கேட்டாலும் கூட அவர்கள் அவசியம் பிரஜையில் வருவார்கள். அங்கோ பிரஜைகள் கூட மிக மிக சுகமுடையவர்களாக இருப்பார்கள். நிலையான ஆனந்தம் இருக்கும். ஏனெனில் அங்கு எல்லோரும் ஆத்ம உணர்வுடையவர்களாக இருப்பார்கள். இங்கு தேக உணர்வுடையவர்களாக ஆகி விட்டுள்ளார்கள். எனவே துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். அங்கோ இருப்பதே சொர்க்கமாக. அங்கு துக்கத்தின் பெயர் அடையாளம் இல்லை. மிருகங்களே அவ்வளவு சுகம் சாந்தியில் இருக்கிறது என்றால், பிரஜைகளிடம் எவ்வளவு அன்பு மற்றும் சுகம் இருக்கும். எல்லோருமே வாரிசு ஆகி விடுவதில்லை என்பது நிச்சயம். இங்கு 108 பக்குவமான சந்நியாசிகள் வெற்றி மாலையின் மணி களாக ஆகப் போகிறார்கள். அவர்களும் இதுவரையும் ஆகவில்லை. ஆகிக் கொண்டு இருக்கிறார்கள். கூடவே பிரஜைகளும் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கூட வெளியில் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வீட்டில் அமர்ந்தபடியே யோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். யோகம் செய்து செய்து ஒரு சிலர் பின் உள்ளே வந்து விடுகிறார் கள். ஆக பிரஜையிலிருந்து வாரிசு ஆகி விடுகிறார்கள். அவர்கள் கர்ம பந்தன கணக்கு கொஞ்சம் இருக்கும் வரையிலும் வெளியில் இருந்து யோகம் செய்தபடியே நிர்விகாரியாக ஆகியே விடு கிறார்கள். எனவே வீட்டில் இருந்து யார் நிர்விகாரியாக ஆகிறார்களோ - பிறகு வீட்டில் அவசியம் சண்டை ஏற்படும். ஏனெனில் காமம் கோபம் உடையவர்களாக இருப்பார்கள். காமம் என்ற மகா எதிரி மீது நீங்கள் வெற்றி அடையும் பொழுது, விஷத்தைக் கொடுப்பதை நிறுத்தி விடும் பொழுது தான் சண்டை ஏற்படுகிறது.

குழந்தைகளே மரணம் எதிரிலேயே உள்ளது என்று பரமாத்மா கூறுகிறார். முழு உலகமும் விநாசம் ஆகப் போகிறது. எப்படி முதியவர்களின் மரணம் முன்னால் உள்ள சமயத்தில். பரமாத்மாவை நினைவு செய்யுங்கள் என்று முதியவர்களுக்குக் கூறுகிறார்கள். குழந்தைகளே நிர்விகாரி ஆகி விடுங்கள் என்று தந்தையும் கூறுகிறார். பரமாத்மாவை நினைவு செய்யுங்கள். எப்படி தீர்த்தங்களுக்கு செல்லும் பொழுது காமம், கோபம் எல்லாவற்றையும் நிறுத்தி விடுகிறார்கள். வழியில் காமத்தை சிந்திப்பார்களா என்ன? அவர்கள் வழி முழுவதும் அமர்நாத் திற்கு ஜே ஜே.. .. என்று கொண்டே போகிறார்கள். ஆனால் திரும்பி வந்த உடன் பிறகு அதே விகாரங்களில் மூழ்கிக் கொண்டே இருப்பார்கள். நீங்களோ திரும்ப வேண்டியதில்லை. காமம், கோபம் வரக் கூடாது. விகாரங்களில் சென்றீர்கள் என்றால் பதவி தாழ்ந்ததாக ஆகி விடும். (ஹோலினெஸ்) தூய்மையானவராக ஆக மாட்டார்கள். யார் தூய்மை (ஹோலி) ஆகிறார்களோ அவர்கள் வெற்றி மாலையில் வருவார்கள். யார் தோல்வி அடைவார்களோ அவர்கள் சந்திரவம்ச குடும்பத்தில் சென்று விடுவார்கள். இதை உங்கள் அனைவருக்கும் பரமபிதா பரமாத்மா படிப்பிக்கிறார். அவரே ஞானக் கடல் ஆவார் அல்லவா? அங்கு நிராகார உலகத்திலோ ஆத்மாக் களுக்கு அமர்ந்து ஞானத்தைக் கூற மாட்டார். இங்கு வந்து உங்களுக்கு ஞானத்தைக் கூறுகிறார். நீங்கள் எனது குழந்தைகள் ஆவீர்கள் என்று கூறுகிறார். எப்படி நான் தூய்மையாக இருக்கிறேனோ அவ்வாறே நீங்களும் தூய்மை ஆகுங்கள். அப்பொழுது நீங்கள் சத்யுகத்தில் சுகமயமான, அன்பு மயமான ஆட்சி புரிவீர்கள். அதற்கு வைகுண்டம் என்று கூறுவார்கள். இப்பொழுது இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் இரும்பு யுகத்திலிருந்து தங்க யுகமாக ஆகிக் கொண்டிருக் கிறது. பிறகு தங்கயுகத்திலிருந்து வெள்ளி யுகமாக மாறும். வெள்ளி யுகத்திலிருந்து செம்பு யுகம் பிறகு செம்பு யுகத்திலிருந்து இரும்பு யுகமாக மாறிக் கொண்டே போகும். இது போல உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. எனவே இப்பொழுது இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. யார் மாற்றிக் கொண்டிருக்கிறார். சுயம் இறைவனே ! அவருக்கு நீங்கள் அன்பிற்குரிய குழந்தைகளாக ஆகி உள்ளீர்கள். பிரஜைகளும் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் குழந்தைகள் தான். பிரஜைகள் பிரஜைகள் தான். யார் சந்நியாசம் செய்கிறார்களோ அவர்கள் வாரிசு ஆகி விடுகிறார்கள். அவர்களை இராயல் குடும்பத்தில் அவசியம் அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் ஒரு வேளை இந்த அளவிற்கு ஞானம் எடுக்கவில்லை என்றால் பதவி அடைய மாட்டார்கள். யார் படிப்பார்களோ அவர்கள் நவாப் ஆவார்கள். யார் வந்து போய் கொண்டிருக் கிறார்களோ அவர்கள் பின் பிரஜையில் வருவார்கள். பிறகு எந்த அளவிற்கு தூய்மை ஆவார்களோ அந்த அளவிற்கு சுகம் கிடைக்கும். அன்பிற்குரியவர்களாகவோ அவர்களும் ஆகிறார்கள். ஆனால் எப்பொழுது குழந்தைகள் ஆகிறார்களோ அப்பொழுது தான் முழுமையாக அன்பிற்குரிய வர்கள் ஆகிறார்கள். புரிந்ததா?

சந்நியாசிகள் கூட அநேகவிதமானோர் இருக்கிறார்கள். ஒரு சிலர் வீடு வாசலை விட்டு விட்டுச் செல்கிறார்கள். இரண்டாவது விதம் இல்லறத்தில் இருந்தபடியே விகாரத்தில் போகாமல் இருப்பார் கள். அவர்கள் சீடர்களுக்கு சாஸ்திரங்கள் ஆகியவற்றைக் கூறுவார்கள். ஆத்மாவின் ஞானம் கொடுப்பார்கள். அவர்களுக்கு சிஷ்யர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய சீடர்கள் அவர் களுடைய அன்பிற்குரிய மகன் ஆக முடியாது. ஏனெனில் அவர்களோ வீடு, வாசல், குழந்தைகள் உடையவர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் தங்களிடமே உட்கார்த்தி வைக்க முடியாது. சுயம் தாங்களும் சந்நியாசம் செய்தவர்களாக இருக்க மாட்டார்கள். மற்றவர்களையும் அவர்கள் சந்நியாசம் செய்விக்க முடியாது. அவர்களுடைய சீடர்கள் கூட இல்லறத்தில் இருப்பார்கள். அவர்களிடம் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஞானம் மட்டும் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் அல்லது மந்திரம் கொடுத்து விடுவார்கள். அவ்வளவே ! இப்பொழுது அவர்களுடைய வாரிசாக ஆக வில்லை. எனவே அவர்களுடைய விருத்தி (நினைவு, உணர்வு) எப்படி இருக்கும்? ஞானம் கொடுத்துக் கொடுத்து சரீரத்தை விட்டுப் போய் விடுவார்கள். அவ்வளவு தான்.

பாருங்கள் ஒரு மாலை 108ன்னுடையது. இரண்டாவது பிறகு அதைவிட பெரிய 16108ன் மாலை அது சந்திர வம்ச குடும்பத்தின் ராயல் இளவரசர், இளவரசிகளின் மாலை. ஆக இங்கு யார் இந்த அளவிற்கு ஞானம் எடுக்க முடிவதில்லையோ, தூய்மை ஆவதில்லையோ அவர்கள் பிறகு தண்டனைகள் அடைத்து சந்திர வம்ச குடும்பத்தின் மாலையில் வந்து விடுவார்கள். இளவரசர் இளவரசிகளோ நிறைய பேர் இருப்பார்கள். இந்த இரகசியத்தையும் நீங்கள் இப்பொழுது தான் கேட்கிறீர்கள். அறிந்திருக்கிறீர்கள். அங்கு இந்த ஞானத்தின் விஷயங்கள் இருப்பதில்லை. இந்த ஞானமோ இப்பொழுது தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக் கின்ற இந்த சங்கமத் தில் மட்டும் தான் கிடைக்கிறது. எனவே தான் கூறினார், யார் முழுமையாக கர்ம இந்திரியங்கள் மீது வெற்றி அடையாமல் இருக்கிறார்களோ அவர்கள் சந்திரவம்ச குடும்பத்தின் மாலையில் சென்று விடுவார்கள். யார் வெற்றி அடைவார்களோ அவர்களே சூரியவம்ச குடும்பத்தில் வருவார்கள். அவர்களிலும் கூட அவசியம் வரிசைக்கிரமமாக ஆகிடுவார்கள். சரீரம் கூட அவரவர் நிலைக்கேற்ப கிடைக்கிறது. பாருங்கள், எல்லோரையும் விட மம்மா வேகமாகச் சென்றுள்ளார். எனவே அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்து விட்டுள்ளது. தலைவி ஆகி விட்டார். அவருக்கு முழு ஞான கலசம் அளித்து விட்டார். அவரை நான் கூட மாதா என்று கூறுகிறேன். ஏனெனில் நான் கூட முழுமையாக உடல், மனம், பொருளை அவரது பாதங்களில் ஸ்வாஹா செய்து விட்டேன். லௌகீக குழந்தைகளுக்குக் கொடுக்கவில்லை. ஏனெனில் அதுவோ இரத்த சம்மந்தம் ஆகி விட்டது. இவர்களோ சாசுவதமான குழந்தைகள் ஆகிறார்கள். எல்லாவற்றையும் சந்நியாசம் செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மீது அதிகமான அன்பு செல்கிறது. சாசுவத மான அன்பு எல்லாவற்றையும் விட கூர்மையாக இருக்கிறது. சந்நியாசிகள் தனியாக வீடு வாசலை விட்டு விட்டு ஓடி விடுகிறார்கள். இங்கோ எல்லாமே எடுத்துக் கொண்டு வந்து ஸ்வாஹா செய்துள்ளார்கள். சுயம் பரமாத்மா நடைமுறையில் செய்து காண்பிக்கிறார்.

உங்களுக்கு எந்த ஒரு கேள்விக்கும் இங்கு விடை கிடைக்க முடியும். அந்த பரமாத்மா சுயம் அவரே வந்து கூட கூற முடியும். அவரோ மந்திரவாதி ஆவார். அவருடைய இந்த (ஆன்மிக) மந்திர ஜாலத்தின் பாகம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் மிகவும் பிரியமான குழந்தைகள் ஆவீர்கள். உங்கள் மீது ஒரு பொழுதும் தந்தை கோபப்பட முடியாது. கோபப்பட்டார் என்றால் குழந்தைகளும் கோபப்பட கற்றுக் கொண்டு விடுவார்கள். இங்கு எல்லோருக்கும் உள்ளார்ந்த அன்பு ஆகும். சொர்க்கத்தில் கூட எவ்வளவு அன்பு இருக்கும். அங்கோ சதோபிரதானமாக இருப்பார்கள்.

இங்கு வரக் கூடிய பார்வையாளர்களுக்குக் கூட நிறைய சேவை ஆகிறது. ஏனெனில் அவர்கள் மீது கூட அமைதி மற்றும் மகிழ்ச்சியின் மழை பொழியப் படுகிறது. அவர்கள் அன்பிற்குரிய பிரஜைகள் ஆகக் கூடியவர்கள் ஆவார்கள். தாய் தந்தை குழந்தைகள் எல்லோரும் அவர்களுடைய சேவையில் ஈடுபட்டு விடுகிறார்கள். தேவி தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் கூட இங்கு அந்த பதவியின் அகங்காரம் இருப்பதில்லை. எல்லோரும் கீழ்ப்படிதலுள்ள சேவகர் களாகி சேவையில் ஆஜராகி விடுகிறார்கள். இறைவன் கூட கீழ்ப்படிதலுள்ள சேவகன் ஆகி தனது அன்பிற்குரிய குழந்தைகள் மற்றும் பிரஜைகளுக்கு சேவை செய்கிறார். அவருடைய ஆசிகள் குழந்தைகள் மீது தான் இருக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட கல்ப கல்பமாக பிரிந்திருந்து மீண்டும் வந்து சந்தித்திருக்கும், அப்பேர்ப்பட்ட கண்மணியான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் உள்ளார்ந்த, ஆழ்ந்த அன்புடன் கூடிய அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எப்படி பாப்தாதா ஒரு பொழுதும் குழந்தைகள் மீது கோபப்படுவதில்லையோ, அதே போல குழந்தைகளாகிய நீங்கள் கூட யார் மீதும் கோபப்படக் கூடாது. தங்களுக்குள் உள்ளார்ந்த அன்புடன் இருக்க வேண்டும். ஒரு பொழுதும் கோபப்படக் கூடாது.

2. அமைதி மற்றும் ஆனந்தத்தின் வரதானத்தைப் பெறுவதற்காக ஒளி மீது முழுமையாக சமர்ப்பணம் ஆக வேண்டும். படிப்பின் மூலமாக உயர்ந்த அமைதி மற்றும் மகிழ்ச்சியின் இறை அதிகாரம் பெற வேண்டும்.

வரதானம்:

குழுவில் சகயோகத்தின் சக்தி மூலம் வெற்றியாளர் ஆகக்கூடிய அனைவரின் சுப சிந்தனையாளர் ஆகுக.

குழுவில் ஒவ்வொருவரும் ஒருவர்-மற்றவர்க்கு உதவியாளர், சுபசிந்தனையாளர் ஆகி இருப்பார் களானால் சகயோகத்தின் சக்தியினுடைய வளையம் (அரண்) மிகுந்த அற்புதம் செய்ய முடியும். தங்களுக்கள் ஒருவர்- மற்றவரின் சுபசிந்தனையாளர், சகயோகி ஆகி இருப்பீர்களானால் -- இந்த வளையத்தினுள் வருவதற்கு மாயாவுக்கு தைரியம் இருக்காது. ஆனால் எத்தனை விஷயங்களை சகித்துக் கொள்ள வேண்டி இருந்தாலும் எதிர்கொண்டு காட்டுவோம், வெற்றியாளர் ஆகிக் காட்டு வோம் என்ற திடசங்கல்பம் செய்வீர்களானால் அப்போது குழுவில் சகயோகத்தின் சக்தி வரும்.

சுலோகன்:

எந்த ஓர் இச்சையும் அச்சா (நல்லவர்) ஆக விடாது. அதனால் இச்சா மாத்திரம் அவித்யா (ஆசை என்றால் என்னவென்று அறியாதவர்) ஆகுங்கள்.