13-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய உண்மையிலும் உண்மையான தீபாவளி புது உலகத்தில் இருக்கும். ஆகையால் இந்த பழைய உலகத்தின் பொய்யான விழாக்களை பார்க்க வேண்டும் என உங்களின் மனம் விரும்பாது.

கேள்வி:
நீங்கள் புனிதமான அன்னப்பறவைகள், உங்களுடைய கடமை என்ன?

பதில்:
நம்முடைய முக்கியமான கடமை ஒரு பாபாவின் நினைவில் இருத்தல் மற்றும் அனைவருடைய புத்தியோகத்தை ஒரு பாபாவுடன் இணைத்தல் ஆகும். நாம் தூய்மையாகி அனைவரையும் தூய்மை யானவர்களாக மாற்றுகிறோம். நாம் மனிதர்களை தேவதையாக மாற்றக் கூடிய கடமையில் சதா ஈடுபட வேண்டும். அனைவரையும் துக்கத்தில் இருந்து விடுவித்து வழிகாட்டியாகி முக்தி, ஜீவன் முக்திக்கான வழியைக் காண்பிக்க வேண்டும்.

பாடல்:
உங்களை அடைந்து நாங்கள் உலகை அடைந்து விட்டோம்...........

ஓம் சாந்தி.
குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். நாங்கள் சொர்க்கத்தின் இராஜ்ய பதவியின் ஆஸ்தி அடைகிறோம் என குழந்தைகள் கூறுகிறார்கள். அதை யாரும் ஒரு போதும் எரிக்க முடியாது, யாரும் பறிக்க முடியாது, அந்த ஆஸ்தியை யாரும் வெற்றி அடைய முடியாது. ஆத்மாவிற்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. இப்படிப்பட்ட தந்தையை தாய் தந்தை என சரியாக கூறுகிறார்கள். தாய் தந்தையை அறிந்துக் கொள்ளக் கூடியவர்கள் தான் இந்த அமைப்பில் வர முடியும். நான் குழந்தைகளுக்கு முன்பு பிரத்யக்ஷம் ஆகி படிக்க வைக்கிறேன், இராஜயோகம் கற்பிக்கிறேன் என பாபா கூறுகிறார். குழந்தைகள் வந்து எல்லையற்ற தந்தையை உயிரோடு இருந்து கொண்டே தன்னுடையவர் ஆக்கிக் கொள்கிறார்கள். தர்மத்தின் குழந்தைகள் உயிரோடே போகிறார்கள். நீங்கள் எங்களுடையவர், நாங்கள் உங்களுடையவர். நீங்கள் ஏன் என்னுடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள். பாபா தங்களிடம் சொர்க்கத்தின் ஆஸ்தி அடைவதற் காக நாங்கள் உங்களுடையவர் ஆகியிருக்கிறோம் என கூறுகிறீர்கள். சரி, குழந்தைகளே, இப்படிப் பட்ட தந்தையை ஒரு போதும் (விவாகரத்து) கைவிட்டு சென்றுவிடக் கூடாது. இல்லையென்றால் பலன் என்னவாகும். சொர்க்கத்தின் இராஜ்ய பதவி நீங்கள் பெற முடியாது. பாபா மம்மா மகாராஜா மகாராணி ஆகிறார்கள் அல்லவா. எனவே, முயற்சி செய்து அந்தளவு சொத்து அடைய வேண்டும். ஆனால் குழந்தைகள் முயற்சி செய்து செய்து (விவாகரத்து) கைவிட்டு விட்டு சென்று விடு கிறார்கள். பிறகு சென்று விகாரத்தில் மாட்டிக் கொள்கிறார்கள் அல்லது நரகத்தில் விழுகிறார்கள். நரகத்தை ஹெல் என்றும், சொர்க்கத்தை ஹெவன் என்றும் கூறப்படுகிறது. நாம் சதா சொர்க்கத் திற்கு அதிபதியாவதற்காக பாபாவை தன்னுடையவராக ஆக்கியிருக் கிறோம். ஏனென்றால், நாம் இப்போது நரகத்தில் இருக்கிறோம் என கூறுகிறார்கள். சொர்க்கத்தின் இறை தந்தை சொர்க்கத்தை படைக்கக் கூடியவர் வராத வரை சொர்க்கத்திற்குப் போக முடியாது. அவருடைய பெயரே சொர்க்கத்தின் இறை தந்தை. இதை கூட இப்போது நீங்கள் அறிகிறீர்கள். குழந்தைகளே உண்மையில் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைவதற்காக நாம் பாபாவிடம் 5000 வருடங்களுக்கு முன்பு போலவே வந்திருக்கின்றோம் என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள் என பாபா கூறிக் கொண்டிருக்கின்றார். ஆனால் போகப்போக மாயாவின் புயல் ஒரேயடியாக வீழ்த்துகின்றது. பிறகு படிப்பை விட்டு விடுகிறார்கள். இறந்து விட்டது போன்றாகும். ஈஸ்வரனுடையவராகி ஒரு வேளை கையை விட்டு விட்டால் புது உலகத் தில் இருந்து இறந்து பழைய உலகத்திற்கு சென்று விட்டனர். சொர்க்கத்தின் தந்தை தான் நரகத்தின் துக்கத்தில் இருந்த விடுவித்து வழிகாட்டியாக இருந்து எங்கிருந்து நாம் வந்தோமோ அந்த இனிமையான அமைதியான வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். பிறகு இனிமையான சொர்க்கத்தின் இராஜ்ஜியத்தை கொடுக்கிறார். கதி மற்றும் சத்கதி என்ற இரண்டு விசயங்களைக் கொடுப்பதற்காக பாபா வருகிறார். சத்யுகம் என்பது சுகதாமம் ஆகும். கலியுகம் என்பதை துக்கதாமம் ஆகும். ஆத்மாக்களாகிய நாம் எங்கிருந்து வருகிறோமோ அது சாந்திதாமம் ஆகும். இந்த தந்தை தான் எதிர் காலத்திற்கான அமைதியின் வள்ளல், சுகத்தின் வள்ளல் ஆவார். இந்த அசாந்தி தேசத்தில் இருந்து முதலில் சாந்தி தேசத்திற்குப் போவோம். அதற்கு இனிமையான அமைதியான வீடு என்று பெயர். நாம் அங்கே தான் வசிக்கின்றோம். நம்முடைய ஸ்வீட் ஹோம் அது தான். இந்த நேரத்தில் நாம் படித்துக் கொண்டிருக்கின்ற இந்த ஞானத்தின் மூலம் சொர்க்கத்தின் இராஜ்ய பதவி நமக்கு கிடைக்கும் என ஆத்மா கூறுகின்றது. சொர்க்கத்தின் இறை தந்தை, விடுவிக்கக் கூடியவர், வழிகாட்டி, ஞானம் நிறைந்தவர், ஆனந்தக் கடல், ஞானக் கடல் என்பவை பாபாவின் பெயர் ஆகும். இரக்க மனம் கொண்டவர். அனைவர் மீதும் இரக்கப்படுகிறார். தத்துவங்கள் மீதும் இரக்கப் படுகிறார். அனைவரும் துக்கத்திலிருநது விடுபட்டு போகிறார்கள். விலங்குகள் போன்ற அனைத்திற்கும் துக்கம் ஏற்படுகிறது அல்லவா. யாரையாவது அடித்தால் துக்கம் ஏற்படும் அல்லவா. மனிதர்கள் மட்டும் அல்ல அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்கிறேன் என பாபா கூறுகிறார். ஆனால் விலங்குகளை அழைத்துச் செல்ல மாட்டார். இது மனிதர்களின் விசயம் ஆகும். இப்படிப்பட்ட எல்லையற்ற தந்தை ஒருவர் தான். மற்ற அனைவரும் துர்கதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். எல்லையற்ற தந்தை தான் சொர்க்கம் அல்லது முக்தி தாமத்தின் பரிசு கொடுக்கக் கூடியவர் என குழந்தைகள் அறிகிறீர்கள் சொத்து கொடுக்கிறார் அல்லவா. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரே ஒரு தந்தை தான். அனைத்து பக்தர்களும் அந்த பகவான் தந்தையைத் தான் நினைக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் கூட கடவுளை நினைக்கிறார்கள். சொர்க்கத்தின் இறை தந்தை சிவன் ஆவார். அவரே நாலெட்ஜ்ஃபுல் ஆனந்தக் கடல் ஆவார். இதனுடைய பொருள் குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். உங்களிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. சிலரோ எவ்வளவு தான் ஞான அலங்காரம் செய்தாலும் விகாரங்களில் முற்றிலும் விழுகிறார்கள். அழுக்கான உலகத்தை பார்ப்பார்கள்.

நிறைய குழந்தைகள் தீபாவளியை பார்க்கச் செல்கிறார்கள். உண்மையில் என்னுடைய குழந்தை கள் இந்த பொய்யான தீபாவளியை பார்க்க மாட்டார்கள். ஆனால் ஞானம் இல்லை என்றால் மனம் விரும்பும். உங்களுடைய தீபாவளி சத்யுகத்தில் தான். அப்போது நீங்கள் தூய்மையாகி விடுகிறீர்கள். தந்தை வருவதே இனிமையான இல்லம் அல்லது இனிமையான சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல என குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும். யார் நன்கு படிக்கிறார் களோ, தாரணை செய்கிறார்களோ, அவர்களே சொர்க்கத்தின் இராஜ்யத்தில் வருவார்கள். ஆனால் அதிர்ஷ்டமும் வேண்டும் அல்லவா. ஸ்ரீமத் படி நடக்க வில்லை என்றால் சிரேஷ்டமாக மாட்டார்கள். இதுவே ஸ்ரீ சிவபகவான் வாக்கு ஆகும். மனிதர்களுக்கு பாபாவின் அறிமுகம் கிடைக்காத வரை பக்தி செய்துக் கொண்டே இருப்பார்கள். நிச்சயம் உறுதி ஏற்படும் போது தானாகவே பக்தியை விடுவார்கள். நீங்கள் புனிதமானவர்கள். இறை தந்தையின் வழிமுறைபடி அனைவரையும் தூய்மையாக்க வேண்டும். அவர்கள் இந்துக்கள் அல்லது முஸ்லீம்களை கிறிஸ்த்துவர்களாக மாற்றுவார்கள். நீங்களோ அசுர மனிதர்களை தூய்மையாக மாற்றுகிறீர்கள். தூய்மையாக்கும், போது தான் சொர்க்கம் அல்லது இனிமையான இல்லத்திற்குப் போக முடியும். ஒன்றுமில்லை ஆனால் ஒன்று அவரைத்தவிர வேறு யாருமில்லை. நீங்கள் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரையும் நினைப்பதில்லை. ஒரு தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்க வேண்டும். எனவே நிச்சயம் ஒரு தந்தையைத் தான் நினைப்பார்கள். நீங்கள் தூய்மையாகி மற்றவர்களையும் தூய்மையாக்க உதவி செய்கிறீர்கள். அந்த கன்னியாஸ்திரிகள் யாரையும் தூய்மையாக்கு வதில்லை. தனக்கு சமமாக கன்னியாஸ்திரிகளாக மற்றுவ தில்லை. இந்து விலிருந்து கிறிஸ்துவராக மட்டும் மாற்றுகிறார்கள். நீங்கள் தூய்மையான கன்னியாஸ்திரிகள். தூய்மையாகவும் மாற்றுகிறீர்கள். அனைத்து ஆத்மாக்களின் புத்தியை இறை தந்தையிடம் இணைக்கிறீர்கள். தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு தன்னை ஆத்மா என புரிந்துக் கொண்டு தந்தையை நினையுங்கள் என கீதையில் கூட இருக்கிறது அல்லவா. பிறகு ஞானத்தை தாரணை செய்வதால் தான் இராஜ்யம் கிடைக்கும். பாபாவின் நினைவினால் தான் சதோ ஆரோக்கியமாக இருப்பீர்கள். மேலும் ஞானத்தினால் சதா செல்வந்தராக மாறுவீர்கள். பாபா தான் ஞானக் கடல் அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தை தெரிவிக்கிறார். பிரம்மாவின் கையில் சாஸ்திரத்தைக் காண்பிக்கிறார்கள் அல்லவா. எனவே இவர் பிரம்மா ஆகிவிட்டார். சிவபாபா இவர் மூலமாக அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கின்றார். அவர் தான் ஞானக்கடல். இவர் மூலமாக உங்களுக்கு ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் மூலமாக பிறகு மற்றவர்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

பாபா, நாங்கள் இந்த ஆன்மீக மருத்துவமனை திறக்கின்றோம் இங்கே நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் வந்து நோயற்றவர்களாக மாறுவார்கள். மேலும் சொர்க்கத்தின் ஆஸ்தி அடைவார்கள், தங்களின் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வார்கள், நிறைய சுகம் அடைவார்கள் என பல குழந்தைகள் கூறுவார்கள். எனவே நிச்சயமாக அத்தனை பேரின் ஆசீர்வாதமும் அவர்களுக்கு கிடைக்கும். கீதை, பாகவதம், வேதம், உபநிடதங்கள் போன்ற அனைத்து பாரதத்தின் சாஸ்திரங்கள், இந்த சாஸ்திரங்களை ஆராய்தல், யாகம், தவம், விரதம், தீர்த்த யாத்திரைகள் போன்ற அனைத்தும் பக்தி மார்கத்தின் விசயம் என்ற நீர்மோராகும் என பாபா அன்றும் புரிய வைத்தார். ஒரேயொரு ஸ்ரீமத் பகவத் கீதையின் பகவானிடம் இருந்து தான் பாரதத்திற்கு வெண்ணெய் கிடைக்கிறது. ஸ்ரீமத் பகவத் கீதையை மாற்றிவிட்டனர். ஞானக் கடல் பதீத பாவனர் நிராகார் பரம்பிதா பரமாத்மாவிற்கு பதிலாக ஸ்ரீ கிருஷ்ணனின் பெயரை போட்டு மோராக்கி விட்டனர். ஒரேயொரு எவ்வளவு பெரிய தவறு. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானக் கடல் நேரடியாக ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த சிருஷ்டி சக்கரம் எவ்வாறு சுழல்கிறது, இந்த சிருஷ்டி என்ற மரம் எப்படி வளர்ச்சி அடைகிறது என நீங்கள் அறிகிறீர்கள் பிராமணர்களாகிய நீங்களே சிகரம் போன்றவர்கள். சிவபாபா பிராமணர்களின் தந்தையாவார். பிறகு பிராமணர்களில் இருந்து தேவதை, பிறகு சத்திரியர், வைசியர், சூத்திரன் ஆவார்கள். இது தான் குட்டிக் கரணம் போடுதல் ஆகும், இதற்கு 84 பிறவிகளின் சக்கரம் என்று பெயர். வேத சம்மந்தமான விழாக்கள் செய்வோருக்கும் நீங்கள் புரிய வைக்கலாம். பக்தி என்பது மோர் ஆகும். ஞானம் என்பது வெண்ணெய் ஆகும். இதன் மூலம் உங்களுக்கு முக்தி ஜீவன் முக்தி கிடைக்கிறது. இப்போது நீங்கள் விளக்கமாக, விரிவாக ஞானத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் பொறுமையாக கேளுங்கள். பிரம்மா குமாரிகள் உங்களுக்குப் புரிய வைக்க முடியும். பீஷ்ம பிதா, அஸ்வத்தாமா போன்றோர்களுக்கு இந்த குழந்தைகள் ஞானம் கொடுத்தனர் என சாஸ்திரங்களில் எழுதப் பட்டிருக்கிறது. கடைசியில் இது அனைத்தையும் புரிந்துக் கொள்வார்கள். சரியாக சொல்கிறார்கள், கடைசியில் நிச்சயம் வருவார்கள். நீங்கள் படக் கண்காட்சி வைக்கிறீர்கள். எத்தனை ஆயிரம் மனிதர்கள் வருகிறார்கள். ஆனால் அனைவரும் நிச்சயபுத்தி உடையவர் ஆவதில்லை. கோடியில் ஒரு சிலர் நன்கு புரிந்துக் கொண்டு நிச்சயம் வைக்கிறார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட அதிர்ஷ்ட ஞான நட்சத்திரங்களுக்கு, வரிசைக் கிரமப்படி முயற்சிக்கு ஏற்ப தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தூய்மையாகி தனக்குச் சமமாக தூய்மையாக்க வேண்டும். ஒரு தந்தையைத் தவிர வேறு யாரையும் நினைக்கக் கூடாது.

2. அநேக ஆத்மாக்களின் ஆசிர்வாதத்தை அடைவதற்கு ஆன்மீக மருத்துவமனை திறக்க வேண்டும்.அனைவருக்கும் கதி சத்கதியின் வழி காண்பிக்க வேண்டும்.

வரதானம்:
பிரம்மா பாபாவை பின்பற்றி முதல் கிரேடில் (படி நிலையில்) வரக்கூடிய (பாபாவிற்கு) சமமானவர் ஆகுக.

அனைத்து குழந்தைகளுக்கும் பிரம்மா பாபாவின் மிகுந்த அன்பு இருக்கிறது. அன்பினுடைய அடையாளம் சமமாக மாறுவது. இதில் எப்பொழுதும் இந்த இலட்சியத்தை வையுங்கள் - முதலில் நான் செய்வேன். பொறாமைக்கு வசப்பட்டு நான் அல்ல. அது நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் பாபாவை பின்பற்றுவதில் முதலில் நான் என்று சொல்லவும் செய்கிறீர்கள் என்றால் முதல் நம்பரில் வருபவருடன் சேர்ந்து நீங்களும் வந்துவிடுவீர்கள். எப்படி பிரம்மா பாபா முதல் நம்பரில் வந்தாரோ, அவரை பின்பற்றக்கூடியவர்களும் கூட நம்பர் ஒன் என்ற இலட்சியதை வையுங்கள். முதலில் செய்பவர் அர்ஜூன். அனைவருக்கும் முதல் நம்பரில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது, எல்லைக்கு அப்பாற்பட்ட நிலையில் முதலில் வருவது குறைந்த வியம் கிடையாது.

சுலோகன்:
வெற்றி மூர்த்தி ஆக வேண்டுமென்றால் சுயத்தின் சேவையின் கூடவே மற்றவர்களின் சேவையும் இணைந்தே செய்யுங்கள்.

மாதேஸ்வரிஜியின் மகாவாக்கியம்: 21.01.1957 இந்த ஈஸ்வரிய சத்சங்கம் பொதுவான சத்சங்கம் அல்ல.

நம்முடைய இந்த ஈஸ்வரிய சத்சங்கம் பொதுவான சத்சங்கம் அல்ல. இது ஈஸ்வரிய பள்ளிக் கூடம், கல்லூரி. இந்த கல்லூரியில் நாம் தினந்தோறும் படிக்க வேண்டும். மற்ற சத்சங்கங்கள் என்றால் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வது அவ்வளவு தான் சிறிது நேரம் அங்கே கேட்போம். பிறகு எப்படி இருந்தார்களோ அப்படியே இருப்பார்கள். ஏனென்றால் அங்கே யாருக்கும் பிராப்தி அடைவதற்கு தினந்தோறும் படிப்பு (ஞானம்) கிடைப்பதில்லை. ஆகவே, நம்முடைய சத்சங்கம் ஏதோ பொதுவான சத்சங்கம் அல்ல. நம்முடையது ஈஸ்வரிய கல்லூரி ஆகும். இங்கே பரமாத்மா அமர்ந்து நமக்கு படிக்க வைக்கிறார். நாம் அந்த படிப்பினை முழுமையாகப் பின்பற்றி உயர்ந்த பதவி அடைய வைக்கிறோம். தினந்தோறும் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் படிக்க வைத்து பட்டம் பெற வைப்பது போல இங்கேயும் பரமாத்மா குரு, தந்தை, டீச்சர் ரூபத்தில் நம்மை படிக்க வைத்து மிக உயர்ந்த தேவி தேவதா பதவியை அடைய வைக்கின்றார். ஆகவே, பள்ளிக் கூடத்தில் நிச்சயமாக சேர வேண்டும். இங்கே வரக் கூடியவர்களுக்கு இந்த ஞானத்தை நிச்சயம் புரிந்துக் கொள்ள வேண்டும். இங்கே எப்படிப்பட்ட போதனைகள் (அறிவுரைகள்) கிடைக்கிறது. இந்த போதனைகளை அடைவதால் நமக்கு என்ன பிராப்தி கிடைக்கும். நமக்கு பரமாத்மாவே வந்து பட்டம் தேர்ச்சி அடைய வைக்கிறார். என நாம் புரிந்துக் கொண்டோம். இந்த ஒரே பிறவியில் முழு கோர்ஸையும் (படிப்பை) முடிக்க வேண்டும். யார் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இந்த ஞானத்தின் வகுப்பை முழுமையாக படிக்கிறார்களோ அவர்களே முழுமையாக தேர்ச்சி அடைவார்கள். மற்ற படி வகுப்புக்கு இடையில் வருபவர்கள் இவ்வளவு ஞானத்தை எடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு முதல் கோர்ஸ் என்ன என்று எப்படி தெரியும். ஆகவே, இங்கே தினந்தோறும் படிக்க வேண்டும். இந்த ஞானத்தை தெரிந்துக் கொள்வதால் தான் முன்னேறலாம். ஆகவே தினந்தோறும் படிக்க வேண்டும்.

2. பரமாத்மாவின் உண்மையான குழந்தையாகி எந்த சந்தேகத்திலும் வரக் கூடாது.

பரமாத்மாவே இந்த சிருஷ்டியில் இறங்கி வந்திருக்கிறார் என்றால் அந்த பரமாத்மாவிற்கு நாம் உறுதியான கையை கொடுக்க வேண்டும். ஆனால் உறுதியான உண்மையான குழந்தைகள் தான் பாபாவிற்கு கை கொடுக்க முடியும். இந்த பாபாவின் கைளை ஒரு போதும் விடக் கூடாது. ஒரு வேளை விட்டு விட்டால் ஏழைகளாகி எங்கே போவீர்கள்? பரமாத்மாவின் கையை பிடித்த பிறகு சூட்சுமத்தில் கூட நான் விட்டு விடுவேன் என்ற எண்ணமோ அல்லது சந்தேகமான எண்ணங்களோ வரக் கூடாது. நாங்கள் கடந்து செல்வோமோ இல்லையா தெரியவில்லை, தந்தையை அறிந்துக் கொள்ளாத காரணத்தால் தந்தைக்கு முன்பாக இருந்தும், எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை என்றும் சில குழந்தைகள் கூறுகிறார்கள். இப்படிப் பட்ட எண்ணம் வந்தால் இப்படிபட்ட தகுதி அற்ற குழந்தைகளை எப்படி தந்தை பாதுகாப்பார். பிறகு விழுந்து விட்டனர் என்றால் விழுந்தது தான். ஏனென்றால் மாயை விழ வைப்பதற்காக மிகவும் முயற்சி செய்கிறது. ஏனென்றால் நிச்சயமாக வீரன் எவ்வளவு பலசாலியாக குத்துச் சண்டை போடுபவராக இருக்கிறான் என அறிய மாயை தேர்வு வைக்கும். இப்போது இதுவும் அவசியம் ஆகும். எந்த அளவிற்கு நாம் பிரபுவுடன் பலசாலியாகிக் கொண்டே போகிறோமோ அந்தளவிற்கு மாயையும் பலசாலியாகி நம்மை கீழே தள்ளுவதற்காக முயற்சி செய்யும். சரியான ஜோடியாக இருக்கும். எவ்வளவு பிரபு பலவானாக இருக்கிறாரோ அவ்வளவு மாயையும் பலத்தை காண்பிக்கும். ஆனால் நமக்கு பக்கா நிச்சயம் இருக்கிறது. கடைசியில், பரமாத்மா மகான் பலவான், கடைசியில் அவருக்குத் தான் வெற்றி. ஒவ்வொரு மூச்சிலும் இந்த நம்பிக்கை நிலைத்திருக்க வேண்டும். மாயாவிற்கு நமது பலத்தை காண்பிக்க வேண்டும். அது பிரபுவிற்கு முன்பு தனது பலவீனத்தை காண்பிக்காது. ஒரு முறை பலவீனமாகிவிட்டால் தொலைந்தது. ஆகவே, மாயை தனது வேகத்தை காண்பிக்கட்டும். ஆனால் நாம் மாயாபதியின் கையை விடக் கூடாது. அவர் கையை முழுமையாக பிடித்துக் கொள்பவர்களுக்கு வெற்றி தான். பரமாத்மா நமக்கு அதிபதியாக இருக்கிறார். கையை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் கூட வரக் கூடாது. குழந்தைகளே நான் சக்திசாலி இருக்கும் போது என்னுடன் நீங்களும் சக்தி சாலியாக ஆவீர்கள் என்று பரமாத்மா கூறுகிறார். புரிந்ததா குழந்தைகளே?