ஓம் சாந்தி.
கள்ளம் கபடமற்றவர் என்று எப்பொழுதும் சிவபாபாவுக்குத் தான்
கூறப்படு கின்றது. சங்கரரைச் சொல்லப்படுவதில்லை. அவரோ விநாசம்
செய்கின்றார் மற்றும் சிவபாபா ஸ்தாபனை செய்கின்றார். அவசியம்
சொர்க்கத்தின் ஸ்தாபனை மற்றும் நரகத்தின் விநாசத் தையே
செய்வார்கள். எனவே, ஞானக் கடல், கள்ளம் கபடமற்றவர் என்று
சிவனைத் தான் கூறுவார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
அனுபவியாக இருக் கிறீர்கள். அவசியம் கல்பத்திற்கு முன்பும் கூட
சிவபாபா வந்திருப்பார் மற்றும் இப்பொழுது அவசியம் வந்திருக்
கின்றார். அவர் அவசியம் வரவேண்டும். ஏனெனில், புதிய மனித
சிருஷ்டியைப் படைக்க வேண்டும். இந்த நாடகத்தின் முதல், இடை, கடை
நிலையைப் பற்றிய இரகசியத்தைச் சொல்ல வேண்டும். ஆகையினால்,
அவசியம் இங்கே வரவேண்டும். சூட்சும வதனத்தில் சொல்ல மாட்டார்.
சூட்சும வதனத்தின் மொழியோ தனிப்பட்டதாகும். மூலவதனத்திலோ மொழியே
(பேச்சு) இல்லை, இங்கு டாக்கி (பேசும் உலகம்) சிவபாபா தான்
கெட்டு போனவர்களை மாற்றுபவர். எப்பொழுது சிருஷ்டி தமோபிரதானம்
ஆகிவிடு கிறதோ, அப்பொழுது, நான் வரவேண்டியதாக உள்ளது என்று
அனைவருக்கும் சத்கதியைக் கொடுக்கக்கூடிய பகவான் கூறுகின்றார்.
நினைவுச் சின்னம் கூட இங்கே உள்ளது. இந்த நாடகத்தில் எந்தெந்த
மனிதர் களுடைய சித்திரங்கள் உள்ளனவோ, அவற்றை ஒரு முறை தான்
பார்க்க முடியும். இலட்சுமி, நாராயணருடைய சித்திரத்தை (முகம்)
சத்யுகத்தைத் தவிர வேறு எங்கும் ஒருபொழுதும் பார்க்க முடியும்
என்பது கிடையாது. அவர்கள் மறுபிறவி எடுக்கும்பொழுது பெயர்,
உருவம் மாறிவிடும். அதே இலட்சுமி, நாராயணரின் தோற்றம் ஒரு முறை
பார்த்த பிறகு, 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு தான்
பார்ப்பீர்கள். காந்தியினுடைய அதே தோற்றத்தைப் பிறகு 5 ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பின்னர் பார்ப்பீர்கள். எண்ணிலடங்காத மனிதர்கள்
உள்ளனர், மனிதர்களுடைய சித்திரங்கள் எவற்றை எல்லாம் இப்பொழுது
பார்க்கின்றீர்களோ, அவற்றை பிறகு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப்
பின்னர் பார்ப்பீர்கள். 84 பிறவி களுக்கு 84 சித்திரங்கள்
உருவாகும். மேலும், அனைத்தும் வெவ்வேறாக இருக்கும். கர்மம் கூட
பிறருடைய கர்மம் போல இருக்க முடியாது. யார் என்ன கர்மம்
செய்தார்களோ, அதே கர்மத்தை 5 ஆயிரம் ஆண்டு களுக்குப் பிறகு
மீண்டும் செய்வார்கள். இவை மிகவும் புரிந்துகொள்வதற்கான
விசயங்கள் ஆகும். பாபாவினுடைய சித்திரமும் உள்ளது. முதன்முதலில்
சிருஷ்டியைப் படைப்பதற்காக அவசியம் அவர் வந்திருப்பார் என்று
நாம் புரிந்திருக்கிறோம். உங்களுடைய புத்தியின் பூட்டு
இப்பொழுது திறந்திருக்கின்றது, எனவே, நீங்கள்
புரிந்துகொள்கிறீர்கள். இப்பொழுது பிறருடைய பூட்டையும் திறக்க
வேண்டும். நிராகார தந்தை அவசியம் பரந்தாமத்தில் தான் இருப்பார்.
நீங்கள் அனைவரும் கூட என்னுடன் இருக்கிறீர்கள். முதலில்
எப்பொழுது நான் வரு கின்றேனோ, அப்பொழுது என்னுடன் பிரம்மா,
விஷ்ணு, சங்கரர் இருக்கின்றார்கள். மனித சிருஷ்டியோ
துவக்கத்திலிருந்தே உள்ளது. பிறகு, அது எவ்வாறு மாற்றம்
அடைகிறது, எவ்வாறு திரும்ப நடக்கிறது? முதன்முதலில் அவசியம்
சூட்சும வதனத்தைப் படைக்க வேண்டியதாக உள்ளது, பிறகு, ஸ்தூல
வதனத்திற்கு வரவேண்டியதாக உள்ளது. ஏனெனில், எந்த மனிதர்கள்
தேவதைகளாக இருந்தனரோ, அவர்கள் இப்பொழுது சூத்திரர் கள்
ஆகிவிட்டனர். அவர்களைப் பிறகு பிராமணரிலிருந்து தேவதையாக மாற்ற
வேண்டிய தாக உள்ளது. எனவே, கல்பத்திற்கு முன்னர் நான் என்ன
ஞானம் கொடுத்திருந் தேனோ, பிறகு, அதையே மீண்டும் கொடுப்பேன்.
இந்த சமயத்தில் அமர்ந்து இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். பிறகு,
அரைக்கல்பத்திற்குப் பின்னர் பக்தி ஆரம்பம் ஆகிறது. பழைய
சிருஷ்டி எவ்வாறு புதியதாகிறது என்பதை தந்தை, தானே அமர்ந்து
புரியவைக்கின்றார். இறுதியிலிருந்து பிறகு துவக்கம் எவ்வாறு
ஏற்படுகிறது? பரமாத்மா வந்திருந்தார் என்று மனிதர்கள்
புரிந்திருக்கின்றனர், எப்பொழுது, எவ்வாறு வந்தார்? ஆதி,
மத்திய, அந்திமத்தின் இரகசியத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார்
என்பதை அவர்கள் அறியவில்லை.
அனைவருக்கும் சத்கதியைக் கொடுப்பதற்காக நான் எதிரில்
வந்திருக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். மாயை இராவணன்
அனைவருடைய அதிர்ஷ்டத்தையும் கெடுத்து விட்டான். எனவே,
கெட்டுப்போனதை சீர்திருத்தக்கூடியவர் அவசியம் ஒருவர் வேண்டும்.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் கூட பிரம்மாவின் உடலில்
வந்திருந்தேன் என்று தந்தை கூறுகின்றார். மனித சிருஷ்டியானது
அவசியம் இங்கே தான் படைக்கப் பட்டிருக் கின்றது. இங்கே வந்து
சிருஷ்டியை மாற்றி சரீரத்தை கல்ப விருட்சத்திற்கு சமமாக ஆக்கு
கின்றார். இப்பொழுது உங்களுடைய சரீரம் முற்றிலும்
பழையதாகிவிட்டது. இதைப் பிறகு, அரைக்கல்பத்திற்கு நீங்கள் அமரர்
ஆகிவிடும்படியாக ஆக்குகின்றார். சரீரத்தை மாற்றுகிறீர்கள்,
ஆனால், குஷியுடன் மாற்றுகிறீர்கள். பழைய சட்டையை விடுத்து
புதியது எடுக்கிறீர்கள். இன்னார் இறந்துவிட்டார் என்று அங்கே
ஒருபொழுதும் கூறமாட்டார்கள். அதை மரணம் என்று கூறப்படுவதில்லை.
எவ்வாறு நீங்கள் உயிருடன் இருந்துகொண்டே இறந்துவிடுகிறீர்கள்
எனில், நீங்கள் உண்மை யில் இறந்து போய்விட்டீர்களா என்ன?
நீங்களோ சிவபாபாவினுடையவர் ஆகியிருக்கிறீர்கள். நீங்கள்
என்னுடைய கண்மணிகள், செல்லக் குழந்தைகள் ஆவீர்கள் என்று பாபா
கூறுகின்றார். சிவபாபா கூறுகின்றார் எனில், பிரம்மா பாபாவும்
கூறுகின்றார். அவர் நிராகார தந்தை, இவர் சாகார தந்தை ஆவார்.
பாபா நீங்கள் கூட, அதே தந்தை தானே என்று இப்பொழுது நீங்கள்
கூறுகிறீர்கள். நாமும் அதே ஆத்மாக்கள், மீண்டும் வந்து
சந்திக்கின்றோம். நான் வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றேன்
என்று தந்தை கூறகின்றார். இராஜ்யம் அவசியம் வேண்டும். ஆகையினால்,
இராஜ யோகத்தைக் கற்பிக்கின்றேன். பின்னாளில் உங்களுக்கு
இராஜ்யம் கிடைத்துவிடும். பிறகு, இந்த ஞானத்திற்கான அவசியம்
அங்கு இருக்காது. பிறகு, இந்த சாஸ்திரம் போன்ற அனைத்தும்
பக்தியில் பயன்படுகின்றன, படித்துக்கொண்டே இருக் கிறார்கள்.
எவ்வாறு யாராவது ஒரு பெரிய மனிதர் வரலாறு, பூகோளத்தை
எழுதுகிறார் என்றால், அதை பின்னாளில் படித்துக்கொண்டே
இருக்கின்றனர். எண்ணிலடங்காத புத்தகங்கள் உள்ளன. மனிதர்கள்
படித்துக்கொண்டே இருக்கின்றனர். சொர்க்கத்திலோ எதுவுமே
இருக்காது. அங்கே பாஷை (மொழி) கூட ஒன்று தான் இருக்கும்.
இப்பொழுது சிருஷ்டியைப் புதியதாக ஆக்குவதற்காக நான்
வந்திருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். முதலில் புதியதாக
இருந்தது, இப்பொழுது பழையதாக ஆகிவிட்டது. என்னுடைய அனைத்து
மகன்களை (குழந்தைகளை) மாயை எரித்து சாம்பலாக்கிவிட்டிருந்தது.
கடலுடைய குழந்தைகள்.... என்று அவர்கள் காண்பிக் கின்றனர்.
ஞானக்கடல் என்பது சரியே, நீங்கள் அவருடைய குழந்தைகள் ஆவீர்கள்.
உண்மையில் அனைவருமே குழந்தைகள் தான். ஆனால், இப்பொழுது நடைமுறை
யில் நீங்களே குழந்தைகள் ஆவீர்கள். உங்களுக்காகத்தான் தந்தை
வருகின்றார். குழந்தை களாகிய உங்களை விழிப்படையச் செய்வதற்காக
நான் மீண்டும் வந்திருக்கின்றேன் என்று கூறுகின்றார். யார்
முற்றிலும் கருப்பாக, கல்புத்தி உடையவராக ஆகிவிட்டனரோ அவர்களை
மீண்டும் வந்து தங்கபுத்தி உடையவர்களாக ஆக்குகின்றேன். இந்த
ஞானத்தின் மூலம் நாம் தங்கபுத்தி உடையவராக எவ்வாறு ஆகின்றோம்
என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எப்பொழுது நீங்கள்
தங்கபுத்தி உடையவர்களாக ஆகிவிடு வீர்களோ அப்பொழுது இந்த உலகம்
கூட கல் போன்ற நிலையிலிருந்து (கல்புரி) மாறி தங்கம் போன்ற
நிலையை (பாரஸ்புரி) ஆகிவிடும். இதற்காகவே பாபா முயற்சி
செய்வித்துக் கொண்டு இருக்கின்றார். எனவே, மனித சிருஷ்டியைப்
படைப்பதற்காக அவசியம் பாபா இங்கே தான் வரவேண்டியதாக உள்ளது
அல்லவா. யாருடைய உடலில் வருகின்றாரோ, அவர் மூலம் வாய்வழி
வம்சத்தினரைப் படைக்கின்றார். எனவே, இவர் தாய் ஆகிவிட்டார். இது
எவ்வளவு ஆழமான விசயம் ஆகும்! இவரோ ஆண் ஆவார், இவருக்குள் பாபா
வரு கின்றார். எனவே, இவர் எவ்வாறு தாய் ஆனார்? இதில் அவசியம்
குழப்பம் அடைவார்கள்.
இந்த தாய்-தந்தை, பிரம்மா, சரஸ்வதி ஆகிய இருவரும்
கல்பவிருட்சத்திற்குக் கீழே அமர்ந்திருக்கின்றனர்,
இராஜயோகத்தைக் கற்றுக்கொண்டு இருக்கின்றனர் எனில், அவசியம்
அவர்களுடைய குரு இருந்திட வேண்டும் என்பதை நீங்கள் நிரூபித்துக்
கூறுகிறீர்கள். பிரம்மா, சரஸ்வதி மற்றும் குழந்தைகள் ஆகிய
அனைவரையும் இராஜரிஷி என்று கூறு கின்றார்கள். இராஜ்யத்திற்காக
யோகம் (நினைவு) செய்கின்றனர். தந்தை வந்து இராஜயோகம் மற்றும்
ஞானத்தைக் கற்பிக்கின்றார். இதை வேறு எவரும் கற்பிக்க முடியாது.
வேறு எவருடைய இராஜயோகமும் கிடையாது. அவர்களோ யோகத்தைக்
கற்றுக்கொள்ளுங்கள் என்று மட்டும் கூறுவார்கள். அனேக விதமான
ஹடயோகம் உள்ளன. இராஜயோகத்தை எந்த சந்நியாசியும் கற்பிக்க
முடியாது. பகவான் வந்து இராஜயோகத்தைக் கற்பித்திருந்தார். கல்ப
கல்பமாக மனித சிருஷ்டியை புதியதாகப் படைப்பதற்காக நான் மீண்டும்
வர வேண்டியதாக உள்ளது என்று கூறுகின்றார். பிரளயம் ஏற்படாது.
ஒருவேளை, பிரளயம் ஏற்பட்டால் நான் யாருக்குள் வருவேன்?
நிராகாரமானவர் வந்து என்ன செய்வார்? சிருஷ்டியோ முதலிலிருந்தே
உள்ளது என்று தந்தை புரியவைக்கின்றார். பக்தர்களும் உள்ளனர்,
பகவானை அழைக்கவும் செய் கின்றனர், இதன் மூலம் அவர்கள் பக்தர்கள்
என்பது நிரூபணம் ஆகின்றது. எப்பொழுது பக்தர்கள் மிகுந்த துக்கம்
உடையவர்களாக ஆகின்றனரோ, கலியுகத்தின் இறுதி காலம் வருகிறதோ
அப்பொழுது பகவான் வரவேண்டிய தாக உள்ளது. இராவண இராஜ்யம்
முடியும்பொழுதே நான் வரவேண்டியதாக உள்ளது. சரியாக இந்த
சமயத்தில் அனைவரும் துக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர். மகாபாரத
யுத்தம் எதிரில் நிற்கிறது.
இது பாடசாலை ஆகும். இங்கே இலட்சியம் உள்ளது. சத்யுகத்தில்
இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யம் இருந்தது, பிறகு, ஒரு கிரீடம்
அணிந்தவர்களின் இராஜ்யம் நடந்தது, பிறகு, மற்ற தர்மத்தினர்
விருத்தியை அடைந்தனர், பிறகு, இராஜ்யம் போன்றவற்றை
அதிகரிப்பதற்காக யுத்தம் போன்றவை நடந்தன என்பதை நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள். எது நடந்து முடிந்து விட்டதோ, அது பிறகு
திரும்ப நடக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். பிறகு,
இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யம் ஆரம்பமாகும். பாபா உலகத்தின்
வரலாறு, பூகோளத்தின் இரகசியம் முழுவதையும் புரியவைக்கின்றார்.
விரிவாகச் செல்வதற் கான அவசியம் இல்லை. நாம் சூரியவம்சத்தினர்
எனில், அவசியம் மறுபிறவி கூட சூரிய வம்சத்தில் தான் எடுப்போம்
என்பதை அறிந்திருக்கிறீர்கள். பெயர், உருவம் மாறிக்கொண்டே
இருக்கும். ஒவ்வொரு பிறவி யிலும் வெவ்வேறு தாய், தந்தை
கிடைப்பார்கள். இந்த முழு நாடகத்தையும் புத்தியில் வைக்க
வேண்டும். தந்தை எவ்வாறு வருகின்றார் என்பதைக் கூட
புரிந்துகொண்டீர்கள். மனிதர்களின் புத்தியில் அதே கீதையின்
ஞானம் உள்ளது. முன்னர் நம்முடைய புத்தியிலும் கூட, அதே பழைய
கீதையின் ஞானம் இருந்தது. இப்பொழுது தந்தை ஆழமான விசயங்களைக்
கூறுகின்றார். அதைக் கேட்டுக் கேட்டு அனைத்து இரகசியங்களையும்
புரிந்துகொண்டீர்கள். முன்னர் உங்களுடைய ஞானம் வேறாக இருந்தது,
இப்பொழுது மிகவும் நன்றாக உள்ளது என்று மனிதர்கள் கூடக்
கூறுகின்றனர். எவ்வாறு இல்லறத்தில் இருந்துகொண்டு தாமரை மலர்
ஆக வேண்டும் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டீர்கள். இது
அனைவருடைய கடைசி பிறவியாகும். அனைவரும் மரணம் அடையத்தான்
வேண்டும். நீங்கள் தூய்மை ஆகுவதற்கான உறுதிமொழி
செய்துகொண்டீர்கள் என்றால் 21 பிறவிகளுக்காக சொர்க்கத்தின்
எஜமானர் ஆகிவிடுவீர்கள் என்று சுயம் எல்லையற்ற தந்தை
கூறுகின்றார். இங்கேயோ ஒருவர் கோடீஸ்வரனாக இருந்தாலும் கூட
துக்கம் நிறைந்தவராக இருக்கின்றார். சரீரம் கல்பமரம் போன்று
இல்லை. உங்களுடைய சரீரம் கல்பமரம் போன்று உள்ளது. நீங்கள் 21
பிறவிகளுக்கு மரணம் அடைவதில்லை. எந்த சூரிய வம்சத்தினர்,
சந்திரவம்சத்தினர் காமச் சிதையில் அமர்ந்து கறுப்பாகிவிட்டனரோ,
அவர்களே இங்கே வருவார்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆகையினால்,
இராதை, கிருஷ்ணர், நாராயணர் ஆகிய அனைவரையும் கறுப்பாக காண்பிக்
கின்றனர். இப்பொழுதோ அனைவரும் கறுப்பாக உள்ளனர். காமச் சிதையில்
அமர்ந்ததால் கறுப்பாக ஆகிவிட்டனர். இப்பொழுது நீங்கள்
காமச்சிதையில் இருந்து இறங்கி, ஞானச் சிதையில் அமரவேண்டும்.
விஷத்தின் கங்கணத்தை இரத்து செய்து, ஞானஅமிர்தத்தின் கங்கணத்தை
அணிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சுபகாரியம் செய்து கொண்டு
இருக்கிறீர்கள் என்று அவர்கள் கூறும்வண்ணம் புரியவைக்க வேண்டும்.
எதுவரை குமாரர், குமாரியாக இருக்கிறார்களோ அதுவரை அவர்களை
அழுக்குத் துணி என்று கூறமாட்டார்கள். நீங்கள் ஒருபொழுதும்
அழுக்காகக் கூடாது என்று தந்தை கூறுகின்றார். போகப்போக அனேகர்
வருவார்கள், ஞானச் சிதையில் அமர்வதனால் நாம் சொர்க்கத்தின்
எஜமானர் ஆகப்போகிறோம் என்பது மிகவும் நன்றாக உள்ளது என்று
கூறுவார்கள். பிராமணர் தான் நிச்சயம் செய்விக் கின்றார்கள்.
இராஜாக்களிடம் கூட பிராமணர் கள் இருக்கின்றார்கள், அவர்களை
இராஜகுரு என்று கூறுகின்றார்கள். தற்காலத்தில் சந்நியாசி கள்
கூட கங்கணம் அணிவிக்கின்றனர். நீங்கள் எப்பொழுது இந்த ஞானத்தின்
விசயத்தைக் கூறுகின்றீர்களோ, அப்பொழுது மக்கள் மிகவும்
மகிழ்ச்சி அடைகின்றனர். உடனே இராக்கியும் அணிந்துகொள்கிறார்கள்.
பிறகு, வீட்டில் சண்டை யும் வருகின்றது. அவசியம் கொஞ்சம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.
நீங்கள் மறைமுகமான (குப்தமான) சிவசக்தி சேனைகள் ஆவீர்கள்.
உங்களிடம் எந்த ஆயுதமும் கிடையாது. தேவிகளிடம் நிறைய
ஆயுதங்களைக் காண்பிக்கின்றனர். இவை அனைத்தும் ஞானத்தின்
விசயங்கள் ஆகும். இங்கே இருப்பதோ யோகபலத்தின் விசயங்கள் ஆகும்.
நீங்கள் யோகபலத்தின் மூலம் உலகத்தின் இராஜ்யத்தை அடைகிறீர்கள்.
உடல் வலிமை மூலம் எல்லைக்குட்பட்ட இராஜ்யம் கிடைக்கிறது.
எல்லையற்ற இராஜ்யத்தையோ எல்லையற்ற எஜமானரே கொடுப்பார்.
யுத்தத்திற்கான எந்த விசயமும் கிடையாது. நான் எவ்வாறு சண்டை
யிடச் செய்வேன்! என்று தந்தை கூறுகின்றார். நானோ சண்டை சச்சரவை
நீக்குவதற்காக வந்திருக்கின்றேன். பிறகு, இதன் பெயர், அடையாளம்
கூட இருக்காது. ஆகையினாலேயே பரமாத்மாவை அனைவரும் நினைவு
செய்கின்றனர். என்னுடைய கௌரவத்தைக் காப்பாற்றுங் கள் என்று
கூறுகின்றார். ஆனாலும் கூட ஒருவரிடத்தில் நம்பிக்கை
இல்லையென்றால் பிறரைப் பிடித்துக்கொள்கின்றனர். எனக்குள்
ஈஸ்வரன் இருக்கின்றார் என்று கூறுகின்றனர். பிறகு, தன்மீதே
நம்பிக்கை வைக்காமல் குருவிடம் செல்கின்றனர். உங்களுக்குள்ளேயே
பகவான் இருக்கின்றார் எனில், பிறகு, ஏன் குருவிடம்
செல்கிறீர்கள்? இங்கே உள்ள விசயமோ தனிப்பட்டது ஆகும். எவ்வாறு
இப்பொழுது வந்திருக்கின்றேனோ, இதைப் போலவே கல்பத்திற்கு
முன்பும் கூட வந்திருந் தேன் என்று தந்தை கூறுகின்றார்.
படைப்பாளர் தந்தை எவ்வாறு படைக்கின்றார் என்பதை இப்பொழுது
நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இது கூட நாடகம் ஆகும். எதுவரை
இந்தச் சக்கரத்தை அறியவில்லையோ, அதுவரை அடுத்து என்ன நடக்கப்
போகிறது என்பதை எவ்வாறு அறிய முடியும்? இது கர்மசேத்திரம் ஆகும்
என்று கூறுகின்றார். நாம் நிராகாரமான உலகத்தில் இருந்து நடிப்பு
நடிப்பதற்காக வந்திருக்கின்றோம். எனவே, நீங்கள் முழு நாடகத்தின்
படைப்பாளர், இயக்குனரைப் (டைரக்டர்) பற்றி அறிந்திருக்க
வேண்டும். இந்த நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது? இந்த
சிருஷ்டி எவ்வாறு விருத்தி அடைகிறது என்பதை நடிகர்களாகிய நாம்
அனைவரும் அறிந்துகொண்டோம். இப்பொழுது கலியுகத்தின் இறுதிக்காலம்
என்றால் அவசியம் சத்யுகம் ஸ்தாபனை ஆக வேண்டும். இந்தச்
சக்கரத்தைப் பற்றிய ஞானம் முற்றிலும் சரியானதாகும். யார்
பிராமண குலத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்கள் இதைப்
புரிந்துகொள்வார்கள். இவர் பிரஜாபிதா ஆவார். எனவே, நம்முடைய
குலம் வளர்ச்சி அடைந்துகொண்டே செல்லும். வளர்ச்சி அடைந்தே ஆக
வேண்டும். கல்பத்திற்கு முன்பு போல் அனைவரும் முயற்சி
செய்துகொண்டே இருக்கின்றனர். நாம் சாட்சியாகிப் பார்க்கின்றோம்.
நான் எந்தளவிற்கு சத்யுக இராஜ்யத்தைப் பெறுவதற்குத் தகுதி
ஆகியிருக்கின்றேன்? என்று ஒவ்வொருவரும் தன்னுடைய முகத்தைக்
கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இது கல்ப
கல்பத்தின் பந்தயம் ஆகும், யார் எந்தளவிற்கு சேவை செய்வார்களோ,
அந்தளவே பலன் அடைவார்கள். நீங்கள் எல்லையற்ற ஆன்மிக சமூக
சேவகர்கள் ஆவீர்கள். நீங்கள் பரம் ஆத்மாவின் வழிப்படி
நடக்கின்றீர்கள். இத்தகைய நல்ல நல்ல கருத்துக்களை தாரணை செய்ய
வேண்டும். தந்தை வந்து காலனுடைய பிடியிலிருந்து
விடுவிக்கின்றார். அங்கே மரணம் என்ற பெயரே கிடையாது. இது
மரணலோகம் ஆகும், அது அமரலோகம் ஆகும். இங்கே ஆதி, மத்திமம்,
அந்திமத்தில் துக்கம் உள்ளது. அங்கே துக்கத்தின் பெயர் அடையாளமே
கிடையாது. நல்லது!
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.