14-02-2021 காலை முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 02.11.1987


சுயமாற்றத்திற்கு ஆதாரம் - "உண்மையான உள்ளத்துடன் உணருதல்”

இன்று உலகை மாற்றுபவர், உலகிற்கு நன்மை செய்பவர் பாப்தாதா தனது அன்பான, சகயோகி, உலகை மாற்றும் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொருவரும் சுய மாற்றத்தின் மூலம் உலகை மாற்றும் சேவையில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இந்த உலகை மாற்றியே தீர வேண்டும் என்ற ஒரே ஒரு ஆர்வம்-உற்சாகம் தான் அனைவரின் மனதில் இருக்கிறது. மேலும் மாற்றம் நடந்தே தீரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதாவது மாற்றம் ஏற்பட்டு விட்டது என்றே கூறலாம். நிமித்தமானவர்களாக ஆகி பாப்தாதாவிற்கு சகயோகிகளாக, சகஜயோகிகளாக ஆகி நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைத சிரேஷ்டமானதாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

இன்று பாப்தாதா நாலா புறங்களிலும் உள்ள உலக மாற்றத்திற்கு நிமித்தமாக இருக்கும் குழந்தை களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். விசே‘மாக ஒரு விசயத்தை பார்த்துக் கொண்டிருந்தார் - அனைவரும் ஒரே ஒரு காரியத்திற்குத் தான் நிமித்தமாக இருக்கிறீர்கள், இலட்சியமும் அனைவருக்கும் சுயமாற்றம் மற்றும் உலக மாற்றமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் சுயமாற்றம் மற்றும் உலக மாற்றத்திற்கு நிமித்தமாக இருந்தாலும் வரிசைக்கிரமம் ஏன் ஏற்படுகிறது? சில குழந்தைகள் சுயமாற்றம் வெகு எளிதாக மற்றும் விரைவில் செய்து கொள்கின்றனர். சிலர் மாறுவதற்கான சங்கல்பம் செய்கின்றனர். ஆனால் சுயத்தின் சன்ஸ்காரம் அல்லது மாயை மற்றும் இயற்கையின் மூலம் வரக் கூடிய பிரச்சனைகள் அல்லது பிராமண குடும்பத்தின் மூலம் தீர்க்க வேண்டிய கணக்கு வழக்கு போன்றவைகள் சிரேஷ்ட மாற்றத்தின் ஆர்வத்தை பலவீனமாக ஆக்கி விடுகிறது. சில குழந்தைகள் மாற்றம் கொண்டு வரும் தைரியத்தில் பலவீனமாக இருக்கின்றனர். எங்கு தைரியம் இல்லையோ, அங்கு ஆர்வம், உற்சாகம் இருக்காது. மேலும் சுயமாற்றம் இன்றி உலக மாற்றத்திற்கான காரியத்தில் விரும்பிய வெற்றி கிடைக்காது. ஏனெனில் இந்த அலௌகீக ஈஸ்வரிய சேவையானது ஒரே நேரத்தில் மூன்று வகையான சேவையின் பலனாகும். அந்த மூன்று வகையான சேவை எது? ஒன்று - விருத்தி, இரண்டாவது - வைபிரேசன், மூன்றாவது - வார்த்தை. மூன்றும் சக்திசா-யாக, நிமித்தமாக, நிர்மாணம் (உருவாக்குதல்) மற்றும் சுய நலமின்றி இருத்தல் - இதன் ஆதாரத்தில் தான் விரும்பிய வெற்றி கிடைக்கும். இல்லையெனில் சேவை நடைபெறும், தனக்கும், பிறருக்கும் சேவையின் வெற்றிக்கான குஷி சிறிது காலத்திற்கு ஏற்படும். ஆனால் பாப்தாதா கூறும் விரும்பிய வெற்றி கிடைக்காது. குழந்தைகளின் குஷியில் பாப்தாதாவும் குஷியடைந்து விடுகின்றார். ஆனால் திலாராமின் உள்ளத்தில் உண்மையான ரிசல்ட் அவசியம் குறிக்கப்படுகிறது. சபாஷ், சபாஷ் என்று அவசியம் கூறுவார். ஏனெனில் தந்தை ஒவ்வொரு குழந்தையின் மீதும் வரதானி திருஷ்டி மற்றும் விருக்தி வைத்திருக்கின்றார் - இந்த குழந்தை இன்று இல்லையெனில் நாளை வெற்றி சொரூபமான வராக ஆகியே தீருவார். ஆனால் வரதாதாவின் கூடவே ஆசிரியராகவும் இருக்கின்றார். ஆகையால் வரக் கூடிய நாட்களுக்காக கவனமும் ஏற்படுத்துகின்றார்.

இன்று பாப்தாதா உலக மாற்றத்திற்கான காரியம் மற்றும் உலகை மாற்றும் குழந்தைகளின் ரிசல்ட் பார்த்துக் கொண்டிருந்தார். விருத்தி ஆகிக் கொண்டிருக்கிறது, ஓசை நாலா புறமும் பரவிக் கொண்டிருக்கிறது, பிரத்ட்சதாவின் திரை திறக்கவும் ஆரம்பமாகி விட்டது. நாலா புறங்களிலும் உள்ள ஆத்மாக்களிடம் இப்போது ஆசை உருவாகிக் கொண்டிருக்கிறது - அருகில் சென்ற பார்க்க வேண்டும். கேட்ட விசயங்களை இப்போது பார்க்க வேண்டும் என்ற மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அனைத்தும் மாறிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் நாடகப்படி இன்று வரை தந்தை மற்றும் நிமித்தமாக இருக்கும் சில ஆத்மாக்களின் சக்திசா-யான பிரபாவம் தான் இப்போது தென்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அதிகபட்சமானவர்கள் இந்த விதியின் மூலம் வெற்றியை பிராப்தியாக அடைந்து விட்டால் மிக விரைவில் அனைத்து பிராமணர்களும் வெற்றி சொரூபமாக பிரத்ட்சம் ஆகிவிடுவீர்கள். பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார் - மனதிற்குப் பிரியமான, உலகிற்குப் பிரியமான, தந்தைக்குப் பிரியமான வெற்றிக்கு ஆதாரம் "சுயமாற்றத்தில்” இப்போது குறை இருக்கிறது. மேலும் சுயமாற்றத்தில் ஏன் குறை இருக்கிறது? அதற்கு மூல ஆதாரம் ஒரு விசேஷ சக்தி யில் குறை இருக்கிறது. அந்த விசேஷ சக்தி உணரும் சக்தியாகும். (ரியலைசேஷசன்).

எந்த ஒரு மாற்றத்திற்கும் எளிய ஆதாரம் உணரும் சக்தியாகும். எதுவரை உணரும் சக்தி வர வில்லையோ, அதுவரை அனுபவம் ஏற்படாது. மேலும் எதுவரை அனுபவம் இல்லையோ, அதுவரை பிராமண வாழ்க்கையின் விசே‘தா என்ற அஸ்திவாரம் உறுதியாக இருக்காது. ஆரம்பத்தி-ருந்து தனது பிராமண வாழ்க்கையை எதிரில் கொண்டு வாருங்கள்.

முதல் மாற்றம் - நான் ஆத்மா, தந்தை என்னுடையவர் - இந்த மாற்றம் எதன் ஆதாரத்தில் ஏற்பட்டது? நான் ஆத்மா, இவர் தான் என்னுடைய தந்தை என்பதை உணரும் போது. ஆக உணருதல் என்பது அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அப்பொழுது தான் மாற்றம் ஏற்படுகிறது. எதுவரை உணர வில்லையோ, அதுவரை சாதாரண முறையில் நடந்து கொள்கிறீர்கள். எந்த நேரத்தில் உணரும் சக்தி அனுபவியாக ஆக்குகிறதோ, அப்போது தீவிர முயற்சியாளர்களாக ஆகிவிடுகிறீர்கள். இவ்வாறு எந்த ஒரு மாற்றத்திற்கான விசே‘ விசயம் - அது படைப்பவரைப் பற்றி இருக்கலாம், படைப்புகளைப் பற்றி இருக்கலாம், எதுவரை ஒவ்வொரு விசயத்தையும் உணரவில்லையோ - ஆம், இது அதே நேரமாகும், அதே யோகா ஆகும், நானும் அதே சிரேஷ்ட ஆத்மா - அதுவரை ஆர்வம், உற்சாகத்துடன் நடந்து கொள்ள முடியாது. சிலருக்கு சூழ்நிலையின் பிரபாவத்தினால் சிறிது காலத்திற்கு மாற்றம் ஏற்படும். ஆனால் சதா காலத்திற்கு இருக்காது. உணரும் சக்தியானது சதா காலத்திற்கும் எளிதாக மாற்றம் செய்து விடும்.

இதே போன்று சுய மாற்றத்திலும் எதுவரை உணரும் சக்தியில்லையோ, அதுவரை சதா காலத்திற்கான சிரேஷ்ட மாற்றம் ஏற்பட முடியாது. இதற்கு விசே‘மாக இரண்டு விசயங்களை உணர வேண்டும். ஒன்று தனது பலவீனங்களை உணர வேண்டும். இரண்டாவது - எந்த ஒரு பிரச்சனை அல்லது மனிதன் நிமித்தமாக இருக்கிறாரோ, அவரது ஆசை மற்றும் அவரது மனதின் பாவணை அல்லது அவரது பலவீனம் அல்லது அவரது மயக்க நிலையை உணருதல். பிரச்சனைகள் என்ற பேப்பரின் காரணத்தை அறிந்து தன்னை தேர்ச்சியாக்கும் சிரேஷ்ட சொரூபத்தை உணர வேண்டும் - நான் சிரேஷ்டமானவன், சுய ஸ்திதி சிரேஷ்டமானது, பிரச்சனைகள் டெஸ்ட் பேப்பர் ஆகும். இதை உணரும் போது மாற்றம் எளிதாக ஏற்பட்டு விடும், மேலும் தேர்ச்சி அடைந்து விடுவீர்கள். மற்றவர்களது ஆசை மற்றும் மற்றவர்களது சுய முன்னேற்றத்தை உணருவதும் தனது சுய முன்னேற்றத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆக சுய முன்னேற்றம் என்பது உணரும் சக்தியில்லாமல் ஏற்பட முடியாது. இதிலும் ஒன்று உண்மையான உள்ளத்துடன் உணருதல், மற்றொன்று சாமர்த்தி யமான உணருதலும் இருக்கிறது. ஏனெனில் அதிகம் ஞானம் நிறைந்தவர்களாக ஆகிவிட்டீர்கள். ஆக நேரத்தைப் பார்த்து தனது காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள, தனது பெயரை பிரபலபடுத்திக் கொள்வதற்காக அந்த நேரத்தில் உணரவும் செய்கிறீர்கள். ஆனால் அந்த உணர்த-ல் மாறக் கூடிய அளவிற்கு சக்தி இருப்பது கிடையாது. எனவே உள்ளப்பூர்வமான உணர்தல் திலாராமின் ஆசிர்வாதம் செய்ய வைக்கிறது, சாமர்த்தியமான உணர்தல் சிறிது காலத்திற்காக மற்றவர்களை குஷிப்படுத்தி விடுகிறது, தன்னையும் குஷிப்படுத்தி விடுகிறது.

மூன்றாவது வகையான உணர்தல் - இது சரியல்ல என்று மனம் ஏற்றுக் கொள்கிறது, இது யதார்த்தம் அல்ல என்று விவேகம் கூறுகிறது. ஆனாலும் வெளியில் தன்னை மகாரதி என்று நிரூபணம் செய்வதற்காக, குடும்பத்தினரிடம் தனது பெயரை குறைத்துக் கொள்ளாமல் இருப்பதற்காக விவேகத்தை கொன்று விடுகின்றனர். இவ்வாறு விவேகத்தை கொல்வதும் பாவமாகும். எவ்வாறு தற்கொலை செய்து கொள்வது மகாபாவமோ, அவ்வாறு இதுவும் பாவக் கணக்கில் சேர்ந்து விடுகிறது. ஆகையால் பாப்தாதா புன்னகைத்துக் கொண்டே இருக்கின்றார். மேலும் அவர்களது மன உரை யாடலையும் கூறிக் கொண்டிருக்கின்றார். மிக அழகான உரையாடல் ஆகும். மூல விசயம் என்னவெனில் யாருக்கு என்ன தெரியும், இவ்வாறு தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது …… என்று நினைக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு இலையைப் பற்றி தந்தைக்குத் தெரியும். வாயின் மூலம் கூறினால் தெரியும் என்பது கிடையாது. தந்தை அறிந்திருந்தாலும் அறியாதவர் போல் கள்ளங்கபட மற்ற போலாநாத் ரூபத்தில் குழந்தைகளை நடத்துகின்றார். அறிந்திருந்தும் ஏன் கள்ளங்கபடமற்று இருக்கின்றார்? ஏனெனில் தந்தை கருணையுள்ளம் உடையவர். மேலும் பாவம் அதிகரித்து விடக் கூடாது என்று கருணை காட்டுகின்றார். புரிந்ததா? இப்படிப்பட்ட குழந்தைகள் சாமர்த்தியமுள்ள தந்தையிடத்திலும் அதாவது நிமித்த ஆத்மாக்களிடத்திலும் மிகவும் சாமர்த்தியமானவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆகையால் தந்தை கருணை உள்ளமுடையவராக, கள்ளங்கபடமற்றவராக ஆகிவிடுகின்றார்.

பாப்தாதாவிடம் ஒவ்வொரு குழந்தையின் கர்மம், மனதின் சங்கல்பங்களின் கணக்குகள் ஒவ்வொரு நேரத்திலும் தெளிவாக இருக்கிறது. உள்ளத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒவ்வொரு குழந்தையின் உள்ளம் பட படக்கும் சித்திரம் தெளிவாகவே இருக்கிறது. அதனால் தான் - நான் ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்தை அறிந்து கொள்ளவில்லை என்று கூறுகின்றார். ஏனெனில் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது, தெளிவாக இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் உள்ளத்தின் பட படப்பு மற்றும் மனதில் சங்கல்பங்களின் சார்ட் பாப்தாதாவின் எதிரில் இருக்கிறது. சொல்ல முடியாது என்று கிடையாது. நேரம், சொல்லவும் முடியும். நாள், நேரம், இடம் மற்றும் என்ன என்ன செய்தீர்கள் - அனைத்தும் கூறி விட முடியும். ஆனால் அறிந்திருந்தாலும் அறியாதவர் போன்று இருக்கின்றேன். ஆக இன்று முழு சார்ட் பார்த்தார்.

சுய மாற்றம் தீவிர வேகத்தில் ஏற்படாததற்குக் காரணம் "உண்மையான உள்ளத்துடன் உணர்தல்” என்பதில் குறை இருக்கிறது. உணரும் சக்தியானது மிகவும் இனிய அனுபவம் செய்விக்கிறது என்பதை உணர்கிறீர்கள் தானே! சில நேரம் தன்னை தந்தையின் கண்ணின் மணியான ஆத்மா அதாவது கண்ணுக்குள் கலந்திருக்கும் சிரேஷ்ட பிந்து என்று உணருங்கள். கண்களில் பிந்து தான் கலந்திருக்க முடியும், சரீரம் கலந்திருக்க முடியாது. சில நேரம் தன்னை நெற்றியில் ஜொ-க்கும் நெற்றி மணி, ஜொ-க்கும் நட்சத்திரம் என்பதை உணருங்கள். சில நேரங்களில் தன்னை பிரம்மா பாபாவின் சகயோகி, வலது கரமாக, சாகார பிராமண ரூபத்தில் பிரம்மாவின் புஜங்களாக அனுபவம் செய்யுங்கள், உணருங்கள். சில நேரங்களில் அவ்யக்த பரிஸ்தா சொரூபத்தை உணருங்கள். இவ்வாறு உணரும் சக்தியின் மூலம் அதிக விசித்திரமான, அலௌகீக அனுபவம் செய்யுங்கள். ஞானத்தின் ரீதியில் வர்ணனை மட்டுமே செய்யாதீர்கள், உணருங்கள். இந்த உணர்தல் சக்தியை அதிகப்படுத்துங் கள். அப்போது பலவீனங்களை உணர்தல் என்பது தானாகவே தெளிவாகிவிடும். சக்திசா-யான கண்ணாடிவில் ஒரு சிறிய கறை கூட தெளிவாக தென்படும், மேலும் மாற்றம் செய்து விடுவர். ஆக புரிந்து கொண்டீர்களா, சுய மாற்றத்திற்கு ஆதாரம் உணர்தல் சக்தியில் இருக்கிறது. சக்தியை காரியத்தில் பயன்படுத்துங்கள், எண்ணிக்கையில் குஷியடைந்து விடாதீர்கள் - ஆம், இந்த சக்தியும் இருக்கிறது, இந்த சக்தியும் இருக்கிறது. ஆனால் தனக்காக, அனைவருக்காக, சேவைக்காக சதா ஒவ்வொரு காரியத்திலும் பயன்படுத்துங்கள். புரிந்ததா? தந்தை இந்த காரியம் மட்டுமே செய்து கொண்டு இருக்கின்றாரா என்ன? என்று சில குழந்தைகள் கேட்கின்றனர். ஆனால் தந்தை என்ன செய்வார்? தன்னுடன் அழைத்து சென்றே ஆக வேண்டும். கூடவே அழைத்துச் செல்ல வேண்டும் எனில் கூட செல்பவர்களும் இவ்வாறு இருக்க வேண்டும் அல்லவா! ஆகையால் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றார் மற்றும் செய்திகளை கூறிக் கொண்டிருக்கின்றார் - துணையாக வருபவர்கள் சமமாக ஆகிவிட வேண்டும். பின்னால் வருபவர்களுக்கான விசயமே கிடையாது, அவர்கள் அதிகமானவர்களாக இருப்பார்கள். ஆனால் கூடவே இருப்பவர்கள் சமமாக இருக்க வேண்டும் அல்லவா! நீங்கள் கூடவே வருபவர்களா? அல்லது ஊர்வலத்தில் வருபவர்களா? ஊர்வலம் மிகவும் நீளமாக இருக்கும். அதனால் தான் சிவனின் ஊர்வலம் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. ஊர்வலத்தில் பல விதங்கள் இருக்கும். ஆனால் கூட இருப்பவர்கள் அவ்வாறு இருக்க வேண்டும் அல்லவா! நல்லது.

இது ஈஸ்டர்ன் ஜோன். ஈஸ்டர்ன் ஜோன் என்ன செய்து கொண்டிருக்கிறது? பிரதட்சதா என்ற சூரியன் எங்கிருந்து உதயம் செய்ய வைப்பீர்கள்? தந்தையிடம் பிரதட்சதா ஏற்பட்டு விட்டது. அந்த விசயம் இப்போது பழசாகி விட்டது. ஆனால் இப்பொழுது என்ன செய்வீர்கள்? பழைய சிம்மாசனம் - இந்த போதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்பொழுது என்ன செய்வீர்கள்? இப்பொழுது ஏதாவது புதுமை என்ற சூரியனை உதயமாக்குங்கள். அனைவரின் வாயி-ருந்தும் இந்த ஈஸ்டர்ன் ஜோனி-ருந்து புதுமை என்ற சூரியன் உதயமாகியிருக்கிறது வெளிப்பட வேண்டும். எந்த ஒரு காரியம் இது வரை யாரும் செய்யவில்லையோ அதை இப்பொழுது செய்து காண்பியுங்கள். நிகழ்ச்சி, செமினார் செய்திருக் கிறீர்கள், முக்கிய நபர்களுக்கு (ஐ.பி) சேவை செய்தீர்கள், செய்தித்தாள்களில் வெளியிட்டீர்கள் - இதை அனைவரும் செய்கின்றனர். ஆனால் புதுமைக்கான ஜொ-ப்பு ஏதாவது செய்து காட்டுங்கள். புரிந்ததா!

தந்தையின் வீடு தனது வீடு ஆகும். ஓய்வான அனைவரும் வந்து சேர்ந்து விட்டீர்கள். உள்ளத்தின் ஓய்வு ஸ்தூல ஓய்வு கொடுக்கிறது. உள்ளத்தில் ஓய்வு இல்லையெனில் ஓய்விற்கான சாதனங்கள் இருந்தாலும் ஓய்வின்றி இருப்பீர்கள். உள்ளத்தின் ஓய்வு என்றால் உள்ளத்தில் சதா இராமர் சதா துணையாக இருக்கின்றார். ஆகையால் எந்த ஒரு பிரச்சனையின் போதும் ஓய்வை அனுபவம் செய்கிறீர்கள். ஓய்வாக இருக்கிறீர்கள் அல்லவா! அல்லது வந்து செல்வது ஓய்வற்றதாக தோன்றுகிறதா? இருப்பினும் இனிமையான நாடகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேளா கொண்டாடிக் கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா! தந்தையை சந்திப்பது, பரிவாரத்தை சந்திப்பது - இந்த மேளா செய்வதும் நிச்சயிக்கப்பட்ட இனிமையான ஒன்றாகும். நல்லது.

சர்வசக்திசா-யான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, ஒவ்வொரு சக்தியையும் தகுந்த நேரத்தில் காரியத்தின் பயன்படுத்தக் கூடிய அனைத்து தீவிர முயற்சியாளர் குழந்தைகளுக்கு, சதா சுய மாற்றத்தின் மூலம் சேவையின் மனம் விரும்பும் வெற்றி அடையக் கூடிய தில்குஷ் குழந்தைகளுக்கு, சதா திலாராம் தந்தையிடம் உண்மையான உள்ளத்துடன் தெளிவாக இருக்கக் கூடிய வெற்றி சொரூப சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு திலாராம் பாப்தாதாவின் உள்ளப்பூர்வமான அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:

சதா தன்னை தந்தையின் நினைவு என்ற குடைக்குள் இருக்கக் கூடிய விசே‘ ஆத்மா என்று அனுபவம் செய்கிறீர்களா? எங்கு தந்தையின் குடை இருக்கின்றதோ, அங்கு சதா மாயையிடமிருந்து பாதுகாப்பாக இருப்பீர்கள். குடைக்குள் மாயை வரவே முடியாது. கடின உழைப்பி-ருந்து தானாகவே தூர விலகி விடுவீர்கள். சதா போதையுடன் இருப்பீர்கள். ஏனெனில் எப்போது கடின உழைப்பு ஏற்படு கிறதோ, அந்த உழைப்பானது போதையின் அனுபவம் செய்விக்காது. குழந்தைகள் படிக்கின்றனர் எனில் படிப்பில் உழைப்பு இருக்கும் அல்லவா! தேர்வுக்கான நேரம் எனில் அதிக உழைப்பு செய்கின்றனர், மகிழ்ச்சியாக விளையாடமாட்டார்கள். எப்போது உழைப்பு நின்று விடுகிறதோ, தேர்வு முடிவடைந்து விடுகிறதோ, அப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆக எங்கு கடின உழைப்பு இருக்கிறதோ, அங்கு மகிழ்ச்சி இருக்காது. எங்கு மகிழ்ச்சி இருக்கிறதோ, அங்கு கடின உழைப்பு இருக்காது. குடைக்குள் இருக்கிறீர்கள் என்றால் சதா மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஏனெனில் இங்கு உயர்ந்த படிப்பு படிக்கிறீர்கள். ஆனால் உயர்ந்த படிப்பாக இருந்தாலும் கூட நாம் தான் வெற்றி யாளர்கள், தேர்ச்சி கிடைத்தே விட்டது என்ற நிச்சம் இருக்கிறது. ஆகையால் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். கல்ப கல்பத்திற்கான படிப்பாகும், புது விசயமல்ல. ஆக சதா மகிழ்ச்சியாக இருங்க, மேலும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சிக்கான செய்தி கொடுத்துக் கொண்டே இருங்கள், சேவை செய்து கொண்டே இருங்கள். ஏனெனில் சேவைக்கான பலன் இந்த நேரத்திலும் கிடைக்கிறது, எதிர்காலத் திலும் அடைகின்றோம். சேவை செய்தால் தான் பலன் கிடைக்கும்.

விடைபெறும் நேரத்தில் - முக்கிய சகோதர, சகோதரிகளுடன்:

பாப்தாதா அனைத்து குழந்தைகளையும் சமம் ஆக்குவதற்கான சுப பாவனையுடன் முன்னேற்ற விரும்புகின்றார். நிமித்தமாக இருக்கும் சேவாதாரிகள் பாப்சமான் ஆகியே தீர வேண்டும். எப்படி யாவது பாபாவினுடையவர்களாக ஆக்கியே தீர வேண்டும். எப்படியாவது தந்தையினுடையவர் களாக ஆக்கியே தீர வேண்டும். ஏனெனில் இப்படி அப்படி என்று இருப்பவர்களை கூடவே அழைத்துச் செல்லமாட்டார். தந்தைக்கும் கௌரவம் இருக்கிறது அல்லவா! தந்தை சம்பன்னமாக இருக்கின்றார், ஆனால் கூட இருப்பவர்கள் முடமாக, கூனியாக இருந்தால் அழகாக இருக்காது. முடம், கூனியாக இருப்பவர்கள் ஊர்வலத்தில் வருவார்கள், கூடவே வரமாட்டார்கள். அதனால் தான் சிவனின் ஊர்வலத்தில் கூனி, முடம் என்று காண்பித்திருக்கின்றனர். ஏனெனில் சில பலவீன ஆத்மாக்கள் தர்மராஜபுரியை கடந்து சென்ற தகுதியானவர்களாக ஆவார்கள். நல்லது.

வரதானம்:

சேவையின் மேடையில் கரைத்துக் கொள்ளும் சக்தியின் (அனுசரிக்கும் சக்தியின்) மூலம் வெற்றி மூர்த்தியாக ஆகக் கூடிய மாஸ்டர் வள்ளல் ஆகுக.

சேவையின் மேடைக்கு வரும் பொழுது பல விதமான விசயங்கள் வருகின்றன, அந்த விசயங்களை தனக்குள் கரைத்துக் கொண்டார் (அனுசரித்துக் கொண்டால்) வெற்றி மூர்த்திகளாக ஆகிவிடுவீர்கள். கரைப்பது என்றால் சங்கல்பத்திலும் எந்த வீண் விசயங்கள் மற்றும் உணர்வுகள் துளியளவும் இருக்கக் கூடாது. நன்மையற்ற விசயங்களை நமைக்குரியதாக மாற்றி விடுங்கள், அதாவது நன்மையற்ற வார்த்தைகள் ஒன்றும் இல்லை என்றாகி விட வேண்டும். அவகுணங்களை குணங்களாக, நிந்தனையை புகழாக மாற்றி விடுங்கள். அப்போது தான் மாஸ்டர் கடல் என்று கூற முடியும்.

சுலோகன்:

விஸ்தாரத்தைப் பார்க்காமல் சாரத்தை பார்ப்பது மற்றும் தனக்குள் கரைத்துக் கொள்பவர்களே தீவிர முயற்சியாளர்கள்.