14.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! எப்படி தந்தை மற்றும் தாதா இருவருமே நிரகங்காரியாக உள்ளனரோ, சுயநலமற்ற சேவை செய்கின்றனரோ, தமக்காக எந்த ஒரு பேராசையும் இல்லையோ, அதுபோலவே குழந்தைகளாகிய நீங்களும் கூட தந்தைக்குச் சமமாக ஆகுங்கள்

 

கேள்வி :

ஏழைப்பங்காளனாகிய பாபா ஏழைக் குழந்தைகளின் அதிர்ஷ்டத்தை எந்த ஆதாரத்தில் உயர்ந்ததாக ஆக்குகிறார்?

 

பதில் :

பாபா சொல்கிறார், குழந்தைகளே, வீட்டில் இருந்தவாறே அனைத்தையும் பராமரித்துக் கொண்டே சதா புத்தி மூலம் இதைப் புரிந்து கொள்ளுங்கள் - இவை அனைத்தும் பாபாவுடையவை, டிரஸ்டியாகி இருப்பீர்களானால் அதிர்ஷ்டம் உயர்ந்ததாக ஆகி விடும். இதில் மிகவும் உண்மையாக இருக்க வேண்டும். முழு நிச்சயம் இருந்தால் யக்ஞத்தின் மூலம் பாலனை நடைபெற்றுக் கொண்டே இருக்கும். வீட்டில் டிரஸ்டியாக இருந்து கொண்டு, சிவபாபாவின் பண்டாராவில் இருந்து சாப்பிடுகிறோம். பாபாவுக்கு அனைத்தும் உண்மையையே சொல்ல வேண்டும்.

 

ஓம் சாந்தி.

பக்தி மார்க்கத்தின் சத்சங்கங்கனை விட இந்த ஞான மார்க்கத்தின் சத்சங்கம் (விசித்திரமானது) மாறுபட்டது. உங்களுக்கு பக்தியின் அனுபவமோ உள்ளது. அநேக சாது சந்நியாசிகள் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரம் முதலானவற்றைச் சொல்கின்றனர். இங்கே அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இங்கே நீங்கள் யாருக்கு முன்பாக அமர்ந்திருக்கிறீர்கள்? தந்தை மற்றும் தாய் இருவருக்கும் முன். அங்கே இதுபோல் கிடையாது. நீங்கள் அறிவீர்கள், இங்கே எல்லையற்ற தந்தையும் உள்ளார். மம்மாவும் கூட இருக்கிறார். சிறிய மம்மாவும் கூட இருக்கிறார். இத்தனை சம்மந்தங்கள் ஆகி விடுகின்றன. அங்கே இது போல் சம்மந்தம் எதுவும் கிடையாது. அவர்கள் ஒன்றும் பின்பற்றுவோரும் அல்ல. அதுவோ துறவற மார்க்கம். அவர்களின் தர்மமே தனிப்பட்டது. இரவு-பகலுக்குள்ள வேறுபாடு. இதையும் நீங்கள் அறிவீர்கள் லௌகிக் தந்தையிடமிருந்து அல்பகால, அழியக்கூடிய சுகம் ஒரு பிறவிக்கு மட்டும் கிடைக்கும். பிறகு புதிய தந்தை, புதிய விசயம், இங்கோ லௌகிக் தந்தையும் இருக்கிறார், பரலௌகிக் தந்தையும் இருக்கிறார். மேலும் அலௌகிக் தந்தையும் இருக்கிறார். லௌகிக் தந்தையிடமிருந்தும் ஆஸ்தி கிடைக்கிறது. மற்றப்படி இந்த அலௌகிக் தந்தை (பிரம்மா பாபா) அற்புதமானவர், இவரிடமிருந்து ஆஸ்தி கிடைப்பதில்லை. ஆம், இவர் மூலம் சிவபாபா ஆஸ்தி தருகிறார். அதனால் அந்தப் பரலௌகிக் தந்தையை அதிகம் நினைக்கின்றனர். லௌகிக் தந்தையையும் நினைக்கின்றனர். மற்றப்படி இந்த அலௌகிக் பிரம்மா பாபாவை யாருமே நினைப்பதில்லை. நீங்கள் அறிவீர்கள், இவர் பிரஜாபிதா. இவர் ஒன்றும் ஒருவருடைய பிதா அல்ல. பிரஜாபிதா கிரேட்-கிரேட் கிரான்ட் ஃபாதர். சிவபாபாவை கிரேட்-கிரேட்-கிரான்ட் ஃபாதர் எனச் சொல்வதில்லை. லௌகிக் சம்மந்தத்தில் லௌகிக் தந்தை மற்றும் கிரான்ட் ஃபாதர் உள்ளனர். இவர் கிரேட்-கிரேட்-கிரான்ட் ஃபாதர். இதுபோல் லௌகிக் தந்தை அல்லது பரலௌகிக் தந்தைக்குச் சொல்ல மாட்டார்கள். இப்போது இதுபோல் கிரேட்-கிரேட் கிரான்ட் ஃபாதரிடமிருந்து பிறகு ஆஸ்தி கிடைப்பதில்லை. இந்த அனைத்து விஷயங்களையும் பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். பக்தி மார்க்கத்தின் விஷயமோ தனி. டிராமாவில் அதுவும் ஒரு பாகமாக உள்ளது, நடைபெற்றுக் கொண்டே இருக்கும். பாபா சொல்கிறார், நீங்கள் எப்படி 84 ஜென்மங்கள் எடுத்தீர்கள் என்று. 84 இலட்சம் அல்ல. பாபா வந்து இப்போது முழு உலகையும் நம்மையும் சரியானவர்களாக (ரைட்டியஸ்) ஆக்குகிறார். இச்சமயம் தர்மாத்மாவாக யாரும் ஆவதில்லை. புண்ணியாத்மாக்களின் உலகமே வேறு. எங்கே பாவாத்மாக்கள் இருக்கின்றனரோ, அங்கே புண்ணியாத்மாக்கள் இருப்பதில்லை. இங்கே பாவாத்மாக்கள், பாவாத்மாக்களுக்குத்தான் தான-புண்ணியம் செய்கின்றனர். புண்ணியாத்மாக்களின் உலகில் தான-புண்ணியம் முதலியன செய்வதற்கான அவசியம் இருப்பதில்லை. நாம் சங்கமயுகத்தில் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி பெற்றுள்ளோம் என்று. இந்த ஞானம் அங்கே இருப்பதில்லை. இந்த ஞானம் இங்கே எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்களுக்குத் தான் கிடைக்கின்றது. இதன் மூலம் 21 பிறவிகளுக்கு சதா சுகம், ஆரோக்கியம், செல்வம் அனைத்தும் கிடைத்து விடுகின்றன. அங்கே உங்கள் ஆயுள் நீண்டதாக இருக்கும். பெயரே அமரபுரி. சங்கர் பார்வதிக்குக் கதை சொன்னதாகச் சொல்கின்றனர். சூட்சும உலகத்திலோ இந்த விஷயங்கள் இருப்பதில்லை. அதுவும் அமரகதை ஒருவருக்கு மட்டும் சொல்லப் படுவதில்லை. இவை பக்தி மார்க்கத்தின் விஷயங்கள். இதிலேயே இதுவரையிலும் பக்குவமடையாமல் இருக்கின்றனர். அனைத்திலும் பெரிய பொய் ஈஸ்வரனை சர்வவியாபி எனச் சொல்வது. இது அவமதிப்பு செய்வதாகும். எல்லையற்ற தந்தை உங்களை உலகின் எஜமானராக ஆக்குபவர். அவரை சர்வவியாபி என்கின்றனர். கல்-மண்ணிலும், ஒவ்வோர் அணுவிலும் உள்ளார் எனச் சொல்கின்றனர். தன்னைக் காட்டிலும் கீழானவராக, அதிக நிந்தனை செய்து விட்டனர். நான் உங்களுக்கு எவ்வளவு சுயநலமற்ற சேவை செய்கிறேன்! எனக்கு ஒரு சிறிதும் பேராசை கிடையாது-நான் நம்பர் ஒன் ஆக வேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லை. மற்றவர்களை ஆக்க வேண்டும் என்பதே உள்ளது. இது தான் சுயநலமற்ற சேவை எனப்படுகிறது.

 

குழந்தைகளாகிய உங்களுக்கு வணக்கம் சொல்கிறேன். பாபா எவ்வளவு நிராகார், நிரகங்காரியாக உள்ளார்! எந்த ஓர் அகங்காரமும் இல்லை. ஆடைகளெல்லாம் கூட அதே தான்! எதுவும் மாறவில்லை. இல்லையென்றால் அந்த மனிதர்கள் ஆடை அனைத்தையும் மாற்றி விடுகின்றனர். இவருடைய ஆடை அதே சாதாரணமானது தான். ஆபீசர்கள் உடையும் மாறுகின்றது. இவருக்கோ அதே சாதாரண உடை தான். எந்த வேறுபாடும் கிடையாது. சிவபாபாவும் சொல்கிறார்-நான் சாதாரண சரீரத்தை எடுத்துக் கொள்கிறேன். அதுவும் எப்படிப்பட்டவர்? யார் தாமே தம்முடைய பிறவிகள் பற்றி, அதாவது நாம் எத்தனை மறு பிறவி எடுக்கிறோம் என்பதை அறியாதிருப்பவர். அவர்களோ, 84 இலட்சம் எனச் சொல்லிவிடுகின்றனர். பிறர் சொல்லக் கேள்விப்பட்ட விசயங்கள். இதனால் எந்த நன்மையும் கிடையாது. பயமுறுத்துகின்றனர் - இத்தகைய காரியங்கள் செய்தீர்களானால் கழுதையாக, நாயாகப் பிறப்பீர்கள், பசுவின் வாலைப் பிடிப்பதால் உயர்ந்து விடுவீர்கள் என்று. இப்போது பசு எங்கிருந்து வந்தது? சொர்க்கத்தின் பசுக்களே வேறு விதமாக இருக்கும். எப்படி நீங்கள் 100 சதவிகிதம் சம்பூர்ணம் என்றால் பசுக்களும் கூட அதுபோல் முதல் தரமான வையாக இருக்கும். கிருஷ்ணர் ஒன்றும் பசுக்களை மேய்ப்பதில்லை. அவருக்கு என்ன வந்தது? இதை அங்குள்ள அழகைக் காட்டுகின்றனர். மற்றப்படி கிருஷ்ணர் பசுக்களைப் பராமரித்தார் என்பதெல்லாம் கிடையாது. கிருஷ்ணரைப் பசு மேய்ப்பவராக ஆக்கி விட்டுள்ளனர். எங்கே சம்பூர்ண சம்பன்ன சத்யுகத்தின் முதல் இளவரசர், எங்கே பசு மேய்ப்பவர்! எதையும் புரிந்து கொள்வதில்லை. ஏனெனில் தேவதா தர்மமோ இப்போது இல்லை. இந்த ஒரு தர்மம் மட்டுமே மறைந்து போகின்றது. இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது. பாபா சொல்கிறார், இந்த ஞானத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தருகிறேன் - உலகின் எஜமானர் ஆக்குவதற்காக. எஜமானர் ஆகி விட்டால் பிறகு ஞானத்திற்கான அவசியம் இல்லை. ஞானம் எப்போதுமே அஞ்ஞானிகளுக்குத் தான் தரப்படுகிறது. பாடல் உள்ளது - ஞான சூரியன் வெளிப்பட்டதும் அஞ்ஞான இருள் விநாசம்............... இப்போது குழந்தைகள் அறிந்துள்ளார்கள், முழு உலகமுமே இருளில் உள்ளது. எவ்வளவு ஏராளமான சத்சங்கங்கள் உள்ளன! இது ஒன்றும் பக்தி மார்க்கம் அல்ல. இது சத்கதிக்கான மார்க்கமாகும். ஒரு தந்தை தான் சத்கதி அளிக்கிறார். நீங்கள் பக்தி மார்க்கத்தில் அழைத்திருக்கிறீர்கள் - நீங்கள் வந்தால் நாங்கள் உங்களுடையவர்களாகவே ஆகி விடுவோம், உங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது. ஏனென்றால் நீங்கள் தான் ஞானக்கடல், சுகத்தின் கடல், தூய்மைக் கடல், செல்வத்தின் கடல். செல்வமும் தருகிறார் இல்லையா? எவ்வளவு பெரிய செல்வந்தராக ஆக்கி விடுகிறார்! நீங்கள் அறிவீர்கள், நாம் சிவபாபாவிடமிருந்து 21 பிறவிகளுக்காகப் பையை நிரப்பிக் கொள்வதற்காக வந்துள்ளோம். அதாவது நரனிலிருந்து நாராயண் ஆகிறோம். பக்தி மார்க்கத்தில் கதைகள் அநேகம் கேட்டிருக்கிறோம். ஏணிப்படியில் கீழே இறங்கியே வந்துள்ளோம். உயரும் கலை யாருக்குமே இருக்க முடியாது. கல்பத்தின் ஆயுளையும் கூட எவ்வளவு நீண்டதாக ஆக்கி விட்டுள்ளனர்! டிராமாவின் கால அளவை இலட்சக்கணக்கான ஆண்டுகள் எனச் சொல்லி விடுகின்றனர். இப்போது உங்களுக்குத் தெரிந்து விட்டது - கல்பமே 5000 ஆண்டுகளினுடையது தான் என்று. அதிக பட்சமாக 84 பிறவிகள், குறைந்த பட்சமாக ஒரு பிறவி. பின்னால் வந்து கொண்டே இருக்கின்றனர். நிராகாரி மரம் உள்ளது இல்லையா? பிறகு நம்பர்வார் வருகின்றனர், பாகத்தை நடிப்பதற்காக. உண்மையில் முதலில் நாம் நிராகாரி மரத்திற்குரியவர்கள். பிறகு அங்கிருந்து இங்கே வருகிறோம், நாடகப் பாத்திரத்தை நடிப்பதற்காக. அங்கே அனைவரும் தூய்மையாக உள்ளனர். ஆனால் நடிப்பின் பாத்திரம் அனைவருக்கும் வேறு-வேறாகும். இதை புத்தியில் வையுங்கள். மரத்தையும் புத்தியில் வையுங்கள். சத்யுகத்திலிருந்து கலியுகக் கடைசி வரை இவற்றை பாபா தான் சொல்கிறார். இதை எந்த ஒரு மனிதரும் சொல்லவில்லை. ஒரே ஒரு சத்குரு மட்டுமே அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். மற்றப்படி அனைவரும் பக்தி மார்க்கத்தினர். எத்தனைக் கர்ம காண்டங்கள் (சடங்குகள்) செய்கின்றனர்! பக்தி மார்க்கத்தின் பகட்டு எவ்வளவு உள்ளது! இது கானல் நீர். இதில் அப்படி சிக்கிக் கொண்டுள்ளனர், யாராவது மீட்டெடுக்கச் சென்றால் தாங்களே அதில் சிக்கிக் கொண்டு விடுகின்றனர். இதுவும் டிராமாவில் விதிக்கப் பட்டதாகும். புதிய விஷயம் எதுவும் கிடையாது. உங்களுடைய ஒவ்வொரு விநாடியும் கடந்து செல்கிறதென்றால் முழுவதும் டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் அறிவீர்கள், இப்போது நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து இராஜயோகம் கற்றுக் கொண்டு நரனில் இருந்து நாராயணனாக உலகின் எஜமானராக ஆகிறோம். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த நஷா இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்கப் பிறகும் பாரதத்தில் தான் வருகிறார். அவர் சாந்தியின் கடல், சுகத்தின் கடலாக உள்ளார். இந்த மகிமை பரலௌகிக் தந்தை யினுடையதாகும். நீங்கள் அறிவீர்கள், இந்த மகிமை முற்றிலும் சரியானதாகும். அனைத்தும் ஒருவரிடமிருந்து கிடைக்கின்றன. அவரே துக்கத்தைப் போக்கி சுகமளிப்பவர். அவர் முன்னால் தான் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்.

 

நீங்கள் உங்கள் சென்டரில் அமந்திருப்பீர்களானால் எங்கே யோகம் (நினைவை) வைப்பீர்கள்? சிவபாபா மதுபனில் இருக்கிறார் என்பது புத்தியில் வரும். அவரைத் தான் நினைவு செய்கிறீர்கள். சிவபாபா தாமே சொல்கிறார் - நான் சாதாரண வயோதிகரின் உடலில் பிரவேசமாகியிருக்கிறேன், மீண்டும் பாரதத்தை சொர்க்கமாக மாற்றுவதற்காக. நான் டிராமாவின் பந்தனத்தில் கட்டுண்டிருக்கிறேன். நீங்கள் எனக்கு எவ்வளவு நிந்தனை செய்தீர்கள்! நான் உங்களைப் பூஜைக்குரியவர்களாக ஆக்குகிறேன். நேற்றைய விசயம் இது. நீங்கள் எவ்வளவு பூஜை செய்திருக்கிறீர்கள்! உங்களுக்கு உங்களின் இராஜ்ய பாக்கியத்தைக் கொடுத்தேன். அனைத்தையும் இழந்து விட்டீர்கள். இப்போது மீண்டும் உங்களை உலகின் எஜமானராக ஆக்குகிறேன். இவை ஒருபோதும் யாருடைய புத்தியிலும் பதியாது. இவர்கள் தெய்விக குணங்கள் நிறைந்த தேவதைகள். மனிதர்கள் தாம், 80-100 அடி உயரமானவர்கள் என்பதெல்லாம் கிடையாது. அவர்களின் ஆயுள் மிக நீண்டது. அதனால் ஆகாயத்தின் (கூரை) அளவு உயரமானவர்கள் என்பதெல்லாம் கிடையாது. கலியுகத்தில் உங்கள் ஆயுள் குறைந்ததாக ஆகி விடுகின்றது. பாபா வந்து உங்கள் ஆயுளை நீண்டதாக ஆக்கி விடுகிறார். அதனால் பாபா சொல்கிறார், நல்வாழ்வு அமைச்சருக்கும் (ஹெல்த் மினிஸ்டர்) சொல்லிப் புரிய வையுங்கள். சொல்லுங்கள், நாங்கள் உங்களுக்கு அந்த மாதிரி யுக்தி சொல்கிறோம், அதன் மூலம் ஒருபோதும் நீங்கள் நோய்வாய்ப்பட வேண்டி வராது. பகவான் வாக்கு - தன்னை ஆத்மா என உணர்ந்து என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் நீங்கள் தூய்மை இல்லாதிலிருந்து தூய்மையாக, சதா ஆரோக்கியமானவர்களாக ஆகி விடுவீர்கள். நான் கேரண்டி தருகிறேன். யோகி தூய்மையாக இருக்கிறார் என்றால் ஆயுளும் நீண்டதாக ஆகிறது. இப்போது நீங்கள் இராஜயோகிகள், இராஜரிஷிகள். அந்த சந்நியாசிகளோ, ஒருபோதும் இராஜயோகத்தைக் கற்றுத்தர இயலாது. அவர்கள் சொல்கிறார்கள், கங்கை பதீதபாவனி, அங்கே தானம் செய்யுங்கள் என்று. இப்போது கங்கையில் தானம் செய்யப் படுவதில்லை. மனிதர்கள் பைசா போடுகின்றனர். பண்டிதர்கள் எடுத்துச் செல்கின்றனர். இப்போது நீங்கள் பாபாவினால் தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபாவுக்கு என்ன கொடுக்கிறீர்கள்? எதுவுமில்லை. பாபாவோ கொடுக்கும் வள்ளல். நீங்கள் பக்தி மார்க்கத்தில் ஈஸ்வரன் பெயரில் ஏழைகளுக்குக் கொடுத்து வந்தீர்கள். அது தூய்மை இல்லாதவர்களுக்குக் கொடுத்தீர்கள் என்றாகிறது. நீங்களும் தூய்மை இல்லாதவர், பெற்றுக் கொள்பவர்களும் தூய்மை இல்லாதவர்கள். இப்போது நீங்கள் தூய்மையாகிறீர்கள். அவர்கள் தூய்மை இல்லாதவர்கள் தூய்மை இல்லாதவர்களுக்கு தானம் கொடுக்கின்றனர். முதலில் தூய்மையாக இருக்கும் குமாரியையும் பிறகு தானம் கொடுக்கின்றனர். வணங்குகின்றனர். உணவு தருகின்றனர். தட்சணையும் தருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு எல்லாம் வீணாகி விடுகின்றது. டிராமாவில் இது விதிக்கப் பட்டுள்ளது. பிறகும் இதுபோல் மீண்டும் நடைபெறும். பக்தி மார்க்கத்திற்கும் டிராமாவில் பாகம் இருந்தது. சத்யுகத்தின் விஷயங்களையும் பாபா சொல்கிறார். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் அறிவு விளக்கம் கிடைத்துள்ளது. முதலில் புத்தியற்றவர்களாக இருந்தீர்கள். சாஸ்திரங்களிலோ பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் உள்ளன. அவற்றால் யாருமே என்னை அடைவதில்லை. நான் எப்போது வருகிறேனோ, அப்போது தான் வந்து அனைவருக்கும் சத்கதி அளிக்கிறேன். மேலும் நான் ஒரு முறை வந்து பழையதைப் புதியதாக ஆக்குகிறேன். நான் ஏழைப்பங்காளன். ஏழைகளைப் பணக்காரர்களாக ஆக்குகிறேன். ஏழைகளோ, உடனே பாபாவினுடையவர்களாக ஆகி விடுகின்றனர். பாபா, நாங்களும் உங்களுடையவர்கள் தான். எங்களிடம் உள்ள இவை அனைத்தும் உங்களுடையவை என்று அவர்கள் சொல்கின்றனர். பாபா சொல்கிறார் - டிரஸ்டி ஆகி இருங்கள். புத்தி மூலம் புரிந்து கொள்ளுங்கள், இவை நம்முடையவை அல்ல பாபாவுடையவை என்று. இதில் மிகவும் புத்திசாலிக் குழந்தைகள் வேண்டும். பிறகு நீங்கள் வீட்டில் உணவு சமைத்துச் சாப்பிடுகிறீர்கள் என்றால் யக்ஞத்தில் இருந்து சாப்பிடுகிறீர்கள். ஆனால் முழு நிச்சயம் வேண்டும். நிச்சயத்தில் குறைபாடு இருந்தாலோ.......... ஹரிச்சந்திரரின் உதாரணம் தருகிறார். பாபாவுக்கோ அனைத்தையும் சொல்லி விட வேண்டும். நான் ஏழைப்பங்காளன்.

 

பாடல் :

இறுதியில் அந்த நாளும் வந்து விட்டது  இன்று...........

 

அரைக்கல்பமாக பக்தி மார்க்கத்தில் நினைவு செய்தீர்கள். இப்போது கடைசியில் சந்தித்து விட்டீர்கள். இப்போது ஞானமே வெல்லப் போகின்றது. சத்யுகம் நிச்சயமாக வரப்போகின்றது. இடையில் உள்ளது சங்கமயுகம். இதில் உத்தமத்திலும் உத்தமமான ஆத்மாவாக ஆகிறீர்கள். நீங்கள் தூய்மையான இல்லற மார்க்கத்தினராக இருந்தீர்கள். பிறகு 84 பிறவிகளுக்குப் பிறகு தூய்மையை இழந்து விடுகிறீர்கள். மீண்டும் தூய்மையாக வேண்டும். கல்பத்திற்கு முன்பும் நீங்கள் இதுபோலவே ஆகியிருந்தீர்கள். கல்பத்திற்கு முன் யார் எவ்வளவு புருஷார்த்தம் செய்திருக்கிறார்களோ, அவ்வளவே இப்போதும் செய்வார்கள். தங்களின் ஆஸ்தியைப் பெறுவார்கள். சாட்சியாகி பார்க்கிறார். பாபா சொல்கிறார், நீங்கள் தூதுவர். உங்களைத் தவிர தூதுவர், பைகம்பர் (தேவதூதர்) யாரும் கிடையாது. சத்குரு, சத்கதி அளிப்பவர் ஒருவரே! மற்ற தர்மத் தலைவர்கள் வருகின்றனர், தர்ம ஸ்தாபனம் செய்வதற்காக. ஆக, குரு எப்படி ஆவார்கள்? நானோ அனைவருக்கும் சத்கதி அளிக்கிறேன். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) சதா சாந்தி, சுகம், செல்வத்தின் கடலாகிய பாபா நமக்குக் கிடைத்துள்ளார் என்ற இந்த பெருமிதத்தில் இருக்க வேண்டும். நமக்கு அனைத்தும் ஒருவரிடமிருந்து கிடைக்கின்றன. அப்படிப்பட்ட தந்தை முன்னிலையில் நாம் அமர்ந்துள்ளோம். அவர் நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார்.

 

2) தனது அகங்காரத்தை விட்டு பாபாவுக்கு சமமாக சுயநலமற்ற சேவை செய்ய வேண்டும். நிரகங்காரி ஆகி இருக்க வேண்டும். (மெசஞ்சர் - பைகம்பர் ) தேவதூதர் ஆகி அனைவருக்கும் செய்தி கொடுக்க வேண்டும்.

 

வரதானம்:

அழியாத சிம்மாசனம் மற்றும் இதய சிம்மாசனத்தின் மீது அமர்ந்து சதா சிரேஷ்ட காரியம் செய்யக் கூடிய கர்மயோகி ஆகுக.

 

இந்த சமயத்தில் குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் இரண்டு ஆசனங்கள் கிடைத்திருக்கிறது. ஒன்று அழியாத ஆசனம், மற்றொன்று இதய சிம்மாசனம். ஆனால் யாரிடத்தில் இராஜ்யம் இருக்கிறதோ அவர்கள் சிம்மாசனத்தின் மீது அமருகிறார்கள். எப்பொழுது அழியாத சிம்மாசனதாரியாக இருக்கிறீர்கள் என்றால் சுயராஜ்ய ஆதிகாரியாகாவும், பாபாவின் இதய சிம்மாசனதாரியாக இருக்கிறீர்கள் என்றால் பாபாவின் ஆஸ்திக்கு அதிகாரியாக இருக்கிறீர்கள். இதில் அனைத்து இராஜ்ய பாக்கியமும் வந்து விடுகிறது. கர்மயோகி என்றாலே இரண்டு சிம்மாசனம். அப்படிப்பட்ட சிம்மாசனதாரி ஆத்மாவின் ஒவ்வொரு காரியமும் சிரேஷ்டமாக இருக்கும் ஏனெனில் அனைத்து கர்மேந்திரியங்களும் சட்டம் மற்றும் ஒழுக்கத்தோடு இருக்கும்.

 

சுலோகன்:

யாரொருவர் சதா சுய மரியாதை என்ற இருக்கையில் அமர்ந்து இருக்கிறார்களோ அவர்கள் தான் குணம் நிறைந்தவர் மற்றும் மகான்.

 

ஓம்சாந்தி