14-03-2020 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்


இனிய குழந்தைகளே, நீங்கள் மிகவும் அதிர்;டசாலிகள், ஏனெனில் தந்தையை நினைவுசெய்வதைத் தவிர வேறு எந்த அக்கறையையும் நீங்கள் கொண்டிருப்பதில்லை. எனினும் இந்தத் தந்தையோ (பிரம்மபாபா) பல விடயங்களில் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது.

கேள்வி:

தந்தையின் தகுதிவாய்ந்த குழந்தைகளின் அடையாளங்கள் எவை?

பதில்:

அவர்கள் தொடர்ந்தும் அனைவருடைய புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைக்கிறார்கள். அவர்கள் சேவாதாரிகள் ஆவார்கள். அவர்கள் நன்றாகக் கற்று ஏனையோருக்கும் கற்பிக்கிறார்கள். அவர்கள் தந்தையின் இதயத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அத்தகைய தகுதிவாய்ந்த குழந்தைகள் மட்டுமே தந்தையின் பெயரை புகழடைய செய்கிறார்கள். முழுமையாகக் கற்காதவர்கள் ஏனையோரை பாழாக்குகிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

பாடல்:

தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் ஆசீர்வாதங்களைக் கோருங்கள்…

ஓம்சாந்தி. ஒவ்வொரு வீட்டிலும், பெற்றோரும் ஆசீர்வாதங்கள், போன்றவற்றை வேண்டுகின்ற இரண்டு முதல் நான்கு வரையான குழந்தைகளும் உள்ளார்கள். அது ஓர் எல்லைக்குட்பட்ட விடயமாகும். அது எல்லைக்குட்பட்டதாக நினைவுகூரப்படுகின்றது. எல்லையற்றதைப் பற்றி எவருக்குமே எதுவும் தெரியாது. நீங்களே எல்லையற்ற தந்தையின் புதல்வர்களும் புதல்விகளும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். அப்பெற்றோர்கள் எல்லைக்குட்பட்டவர்கள். நீங்கள் ஓர் எல்லைக்குட்பட்ட தாய், தந்தையரிடமிருந்து ஆசீர்வாதங்களை கோருகிறீர்கள். அவர் எல்லையற்ற தாயும் தந்தையும் ஆவார். எல்லைக்குட்பட்ட பெற்றோர்களும் குழந்தைகளை பராமரிக்கின்றார்கள்;, பின்னர் ஓர் ஆசிரியர் அவர்களுக்குக் கற்பிக்கிறார். இவரே எல்லையற்ற தாயும் தந்தையும் எல்லையற்ற ஆசிரியரும் எல்லையற்ற சற்குருவும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துகொள்கிறீர்கள். அவரே பரம தந்தையும் பரம ஆசிரியரும் பரம சற்குருவும் ஆவார். அவரே உண்மையை பேசி உண்மையைக் கற்பிப்பவர் ஆவார். குழந்தைகள் வரிசைக்கிரமமானவர்கள் ஆவர். ஒரு பௌதீக வீட்டில் இரண்டு முதல் நான்கு வரையிலான குழந்தைகள் இருக்கும்பொழுது, அவர்களில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இங்கு, பல குழந்தைகள் உள்ளார்கள். பல நிலையங்களிலிருந்து குழந்தைகளை பற்றிய செய்திகள் வருகின்றன: இக்குழந்தை இவ்வாறானவர், இவர் அசுரகுணம் உடையவர், இவர் ஏனையோரை குழப்புகிறார், இவர் தடைகளை உருவாக்குகிறார். இந்தத் தந்தை அக்கறை கொள்வார், இல்லையா? இவர் மனிதர்களின் தந்தையாகிய, பிரஜாபிதா, அல்லவா? இவர் பல குழந்தைகளையிட்டு அக்கறை கொண்டிருக்கின்றார். ஆகவே, பாபா கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களால் தந்தையின் நினைவில் மிகவும் நன்றாக நிலைத்திருக்க முடியும், இவருக்கு ஆயிரக்கணக்கான அக்கறைகள் உள்ளன. எனினும் ஒரேயொரு அக்கறையுடன், ஆயிரக்கணக்கான வேறு அக்கறைகளும் உள்ளன. பல குழந்தைகளை பராமரிக்க வேண்டும். மாயையும் மகா எதிரியாவாள். அவள் சிலரின் தோலை மிகவும் நன்றாக உரித்துவிடுகிறாள். அவள் சிலரின் மூக்கைப் பற்றிப் பிடிக்கிறாள், ஏனையோரின் பின்னலைப் பிடித்து இழுக்கின்றாள். எவ்வாறாயினும், அவர்கள் அனைவர் பற்றியும் இவர் சிந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், இவர் எல்லையற்ற தந்தையின் நினைவிலும் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: நான் ஏன் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி அவரிடமிருந்து என்னுடைய முழு ஆஸ்தியையும் கோரக்கூடாது? அனைவராலும் சம அளவில் முன்னேற முடியாது. ஏனெனில் இது ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் இராச்சியம் ஆகும். இது வேறு எவரது புத்தியிலும் பிரவேசிக்க முடியாது. இது மிகவும் மேன்மையானதொரு கல்வி ஆகும். நீங்கள் இராச்சியத்தை அடையும் போது, எவ்வாறு அந்த இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருப்பதில்லை. அந்த இராச்சியத்தின் ஸ்தாபனை பணியானது மிகவும் அற்புதமானதாகும். நீங்கள் இப்பொழுது அனுபவசாலிகள் ஆவீர்கள். முன்னர், இவருக்குமே, இவர் யாராக இருந்தார் என்பதோ எவ்வாறு 84 பிறவிகளை எடுத்தார்; என்பதோ தெரியாது. இவர் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளார். நீங்களும் கூறுகிறீர்கள்: பாபா, நீங்களே அந்த அவர். இவ்விடயம் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தை மட்டுமே இந்நேரத்தில் வந்து அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்துகிறார். இந்நேரத்தில், ஒருவர் ஒரு கோடீஸ்வரராக அல்லது பல்கோடீஸ்வரராக இருந்தாலென்ன, தந்தை கூறுகிறார்: இப்பணம் போன்ற அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகின்றன. எவ்வாறாயினும், எவ்வளவு காலம் எஞ்சியுள்ளது? நீங்கள் வானொலியில் செய்திகளைச் செவிமடுக்கிறீர்கள் அல்லது செய்தித்தாள்களை வாசிக்கிறீர்கள். என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பாருங்கள்! நாளுக்கு நாள், சண்டை தொடர்ந்து பெருமளவில் அதிகரித்து வரு;கிறது. அனைத்தும் சிக்கலாகுகின்றது. அவர்கள் அனைவரும் தங்கள் மத்தியில் சண்டையிட்டு மரணிக்கிறார்கள். ஆயத்தங்கள் செய்யப்படுவதை பார்க்கும் போது, எந்நேரத்திலும் யுத்தம் ஆரம்பிக்கலாம் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. என்ன நடக்கின்றது என்பதை அல்லது இனிமேல் என்ன நடக்கும் என்பதை உலகம் அறியாதுள்ளது. உங்கள் மத்தியிலும் மிகச் சிலர் முழுமையாகப் புரிந்துகொண்டு சந்தோஷமாக இருக்கிறீர்கள். இன்னும் சில நாட்களுக்கே நாங்கள் இவ்வுலகில் இருப்போம். நாங்கள் இப்பொழுது கர்மாதீத ஸ்திதியை நோக்கி முன்னேற வேண்டும். ஒவ்வொருவரும் சுயத்திற்கான முயற்சியை செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகவே முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு அதிகமாக நீங்கள் முயற்சி செய்கிறீர்களோ, அந்தளவு பலனை நீங்கள் அடைவீர்கள். நீங்கள் உங்களுக்காக முயற்சி செய்வதுடன் ஏனையோரையும் முயற்சி செய்யத் தூண்டுங்கள். அனைவருக்கும் பாதையை காட்டுங்கள். இப்பழைய உலகம் முடிவடைய போகின்றது. பாபா புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு இப்பொழுது வந்துள்ளார். ஆகவே இவ்விநாசம் நடைபெறுவதற்கு முன்னர், புதிய உலகத்துக்காக இக்கல்வியை கற்றுக் கொள்ளுங்கள். கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். அன்பிற்கினிய குழந்தைகளே, நீங்கள் பெருமளவுக்குப் பக்தி செய்துள்ளீர்கள். அரைக்கல்பமாக நீங்கள் இராவண இராச்சியத்தில் இருந்தீர்கள். யார் இராமர் அல்லது எவ்வாறு இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதைக் கூட யாரும் அறியார். பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே இவை அனைத்தையும் அறிந்துகொள்கிறீர்கள். முற்றிலும் எதையும் அறியாத சிலரும் உங்கள் மத்தியில், உள்ளார்கள். ஒரு தந்தையுடன் ஒவ்வொருவரின்; புத்தியின் யோகத்தை இணைப்பவர்களே, தந்தையின் தகுதிவாய்ந்த குழந்தைகள் ஆவார்கள். சேவாதாரிகளும் நன்கு கற்பவர்களும் தந்தையின் இதயத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சிலர் தகுதியற்றவர்கள் ஆவர்;. அவர்கள் சேவைக்குப் பதிலாக, அவச்சேவை செய்கிறார்கள். அவர்கள் ஏனையோர்களின் புத்தியின் யோகத்தைத் தந்தையிடமிருந்து அப்பால் துண்டித்து விடுகிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகத்துக்கேற்ப, இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். முழுமையாகக் கற்காதவர்களால் என்ன செய்யமுடியும்? அவர்கள் ஏனையோரை பாழாக்கியும் விடுவார்கள். இதனாலேயே குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டும் உள்ளது: தந்தையை பின்பற்றுங்கள். சேவாதாரிகளாகவுள்ள மற்றும் பாபாவின் இதயத்தில் அமர்;ந்துள்ள குழந்தைகளின் சகவாசத்தையே கொண்டிருங்கள். நீங்கள் கேட்க முடியும்: நான் யாருடைய சகவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும்? பாபா உங்களுக்கு யாருடைய சகவாசம் மிகவும் சிறந்ததென்று உடனடியாகவே கூறுவார். தவறான வழியில் நிறமூட்டப்பட்ட, அவ்வாறானவர்களின் சகவாசத்தைக் கொண்டிருக்கும் பலர் உள்ளார்கள். நினைவுகூரவும்படுகின்றது: நல்ல சகவாசம் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கிறது, தீய சகவாசம் உங்களை மூழ்கடிக்கிறது. தீய சகவாசம் உங்களில் செல்வாக்குச் செலுத்தினால், நீங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிடுவீர்கள். ஒரு வீட்டிற்கும்; பணிப்பெண்களும் வேலையாட்களும் தேவைப்படுகிறார்கள். பிரஜைகளுக்கு வேலையாட்கள் போன்றவர்களும் தேவைப்படுகிறார்கள், இல்லையா? முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. இதற்கு மிகவும் பரந்த புத்தி தேவையாகும். ஆகவே, இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டீர்கள். அவரிடமிருந்து ஸ்ரீமத்தைப் பெறுங்கள், அத்துடன் அதைப் பின்பற்றுங்கள். இல்லாவிட்டால், உங்கள் அந்தஸ்து எதுவுமில்லாமல் அழிக்கப்பட்டு விடும். இது ஒரு கல்வி ஆகும். இப்பொழுது நீங்கள் இதில் சித்தியடையாதுவிட்டால், நீங்கள் தொடர்ந்தும் கல்பம் கல்பமாகப் பிறவிபிறவியாகச் சி;த்தியடைய மாட்டீர்கள். நீங்கள் இப்பொழுது நன்றாகக் கற்றால், தொடர்ந்தும் கல்பம் கல்பமாக நன்றாகக் கற்பீர்கள். நன்கு கற்காதவர்கள் என்ன அந்தஸ்தை அடைவார்கள்? அவர்களே புரிந்துகொள்கிறார்கள்: நாங்கள் முற்றாகவே எச்சேவையும் செய்வதில்லை. பலர் எங்களை விட அதிக திறமைசாலிகள். திறமைசாலிகள் மட்டுமே சொற்பொழிவாற்ற அழைக்கப்படுகிறார்கள். ஆகவே, திறமைசாலிகள் ஓர் உயர்ந்த அந்தஸ்தையும் நிச்சயமாக அடைவார்கள். நான் அவ்வளவுக்குச் சேவை செய்வதில்லை, அதனால் என்னால் ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைய முடியாது. ஓர் ஆசிரியரால் அவருடைய மாணவர்களை புரிந்துகொள்ள முடியும், இல்லையா? அவர் ஒவ்வொரு நாளும் கற்பிக்கிறார்; அவர் ஒரு பதிவேட்டையும் வைத்திருக்கிறார். அவர்களின் கல்விகள் அத்துடன் அவர்களின் நடத்தை பற்றி ஒரு பதிவேடும் வைக்கப்பட்டுள்ளது. இங்கும் அதைப் போன்றே உள்ளது. யோகமே இதில் பிரதான விடயமாகும். உங்கள் யோகம் சிறந்ததாக இருப்பின், உங்கள் நடத்தையும் சிறந்ததாக இருக்கும். எவ்வாறாயினும், சில சமயங்களில் கற்கும் வேளையில் அகங்காரம் இருக்கிறது. இங்கு நீங்கள் நினைவுசெய்வதற்கு, மறைமுகமான முயற்சி செய்ய வேண்டும். இதனாலேயே பலரிடமிருந்து முறைப்பாடுகள் வருகின்றன: பாபா, என்னால் யோகத்தில் நிலைத்திருக்க முடியவில்லை. பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: "யோகம்” என்னும் வார்த்தையை அகற்றுங்கள். நீங்;கள் யாரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்களோ, அந்தத் தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியாதா? இது ஓர் அற்புதம்! தந்தை கூறுகிறார்: ஓ ஆத்மாக்களே, உங்கள் தந்தையான, என்னை நீங்கள் நினைவுசெய்வதில்லை. நான் உங்களுக்குப் பாதையை காட்டுவதற்கு வந்துள்ளேன். என்னை நினைவுசெய்யுங்கள், அத்துடன் இந்த யோகத் தீயில் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றது. பக்தி மார்க்கத்தில், மனிதர்கள் தொடர்ந்தும் அதிகளவு தடுமாறுகிறார்கள்.; கும்பமேளாவில் அவர்கள் மிகவும் குளிர்ந்த நீரில் நீராடுகிறார்கள்;. அவர்கள் பல்வேறு சிரமங்களைச் சகிக்கிறார்கள். இங்கே எந்த சிரமங்களும் இல்லை. முதற்தரமான குழந்தைகள் ஒரேயொரு அன்பிற்கினியவரின் உண்மையான காதலர்கள் ஆகித் தொடர்ந்தும் அவரை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் உலாவ செல்லும்பொழுது, அவர்கள் ஒரு மலர்த்தோட்டத்தில் ஏகாந்தத்தில் அமர்ந்து, அவரை நினைவுசெய்கிறார்கள். எந்தவொரு வம்பளத்தல் போன்றவற்றில் ஈடுபடும் போது சூழல் கெடுக்கப்படுகிறது. உங்களுக்கு நேரம் கிடைக்கும்;பொழுதெல்லாம், தந்தையை நினைவுசெய்வதைப் பயிற்சி செய்யுங்கள். உண்மையான அன்பிற்கினியவரின் முதற்தரமான அன்பிற்கினியவர்களாக ஆகுங்கள். தந்தை கூறுகிறார்: சரீரதாரிகளின் புகைப்படங்களை வைத்திருக்காதீர்கள். நீங்கள் நினைவுசெய்ய வேண்டிய, ஒருவரான சிவபாபாவின் படத்தை மட்டும் வைத்திருங்கள். உதாரணமாகக் கூறவேண்டுமெனில், நீங்கள் தொடர்ந்தும் உலகச் சக்கரத்தை நினைவுசெய்ய விரும்பினால், திரிமூர்த்தி மற்றும் சக்கரத்தின் படங்கள் முதற்தரமானவையாகும். அவற்றில் முழு ஞானமும் உள்ளது. "சுயதரிதனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள்” என்னும் உங்கள் தலைப்பு அர்த்தமுள்ளதாகும். புதியவர் எவரேனும் தலைப்பைக் கேட்க நேரி;ட்டால், அவரால் புரிந்துகொள்ள இயலாதிருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே இதைப் புரிந்துகொள்கிறீர்கள். பாபாவை மிகவும் நன்றாக நினைவுசெய்கின்ற சிலர் உங்கள் மத்தியிலும் உள்ளார்கள். முற்றிலும் பாபாவை நினைவுசெய்யாத பலர் உள்ளனர். அவர்கள் தாங்களாகவே அனைத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள். எவ்வாறாயினும் இக்கல்வி, மிகவும் இலகுவானதாகும். தந்தை கூறுகிறார்: மௌனத்தின் மூலம் நீங்கள் விஞ்ஞானத்தை வெற்றி கொள்வீர்கள். விஞ்ஞானம், மௌனம் என்னும் வார்த்தைகள் (ஆங்கிலத்தில்) ஒரே முதலெழுத்தையும் ஒரே ஓசையையும் கொண்டுள்ளன. இராணுவத்தில் அவர்கள் மூன்று நிமிட மௌனத்தைக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களும் அமைதியையே விரும்புகின்றார்கள்.;; அமைதிக்கான இடம் நிச்சயமாகச் சின்னஞ்சிறிய புள்ளிகளான ஆத்மாக்களாகிய நாங்கள் வசிக்கின்ற மகா பிரம்மதத்துவமான பிரம்மந்த் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். ஆத்மாக்கள் அனைவரினதும் அந்த விருட்சம் உண்மையிலேயே அற்புதமாக இருக்க வேண்டும், இல்லையா? மனிதர்களும் கூறுகிறார்கள்: நெற்றியின் மத்தியில் ஒரு வியப்புக்குரிய தனித்துவமான நட்சத்திரம் பிரகாசிக்கிறது”. அவர்கள் தங்கத்தில் மிகவும் சின்னஞ் சிறிய திலகத்தை உருவாக்கி அதை அங்கு இடுகிறார்கள். ஆத்மாவும் ஒரு புள்ளி ஆவார். தந்தை வந்து அதன் அருகில் அமர்கிறார். எவரும், சாதுக்கள், சந்நியாசிகள் போன்றோர்கள் கூட, தன்னுடைய சொந்த ஆத்மாவை அறியார். அவர்கள் ஆத்மாக்களை பற்றி அறியாதபொழுது, அவர்கள் பரமாத்மாவை எவ்வாறு அறியக்கூடும்? பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே ஆத்மா மற்றும் பரமாத்மா பற்றி அறிவீர்கள். மற்றய சமயத்தவர்களால் அறிய முடியாது. அத்தகைய ஒரு சின்னஞ் சிறிய ஆத்மா, தன்னுடைய பாகம் முழுவதையும் எப்படி நடிக்கிறார் என்பது இப்பொழுது தான் உங்களுக்குத் தெரியும். அவர்களுக்குப் பல சற்சங்கங்கள் உள்ளன, இருப்பினும் அவர்கள் முற்றாகவே எதையும் புரிந்துகொள்வதில்லை. இவரும் பல குருமார்களை ஏற்றுக் கொண்டார். இப்பொழுது தந்தை கூறுகிறார்: அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்துக்குரிய குருமார்கள் ஆவர். ஞான மார்க்கத்தில் ஒரேயொரு குரு மட்டும் உள்ளார். ஒற்றைக் கிரீடம் அணிந்த அரசர்கள் இரட்டைக் கிரீடம் அணிந்த அரசர்கள் முன்னிலையில் தலைவணங்குகிறார்கள். அந்த அரசர்கள் தூய்மையாக இருந்த காரணத்தினால் அவர்கள் தலைவணங்குகிறார்கள். அந்தத் தூய்மையான அரசர்களுக்கு மட்டுமே ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. தூய்மையற்றவர்கள் அவர்களுக்கு (அவர்களின் சிலைகள்) முன் சென்று தலை வணங்குகின்றார்கள். ஆனால் அவர்கள் யார் என்பதோ அவர்கள் ஏன் அவர்களுக்குத் தலைவணங்குகிறார்கள் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. சோமநாதர் ஆலயம் கட்டப்பட்டது. இப்பொழுது, அவர்கள் அங்கு பூஜிக்கிறார்கள், ஆனால் அவர்கள் எவ்வாறு ஒரு புள்ளியைப் பூஜிக்க முடியும்? எவ்வாறு ஒரு புள்ளிக்கு ஓர் ஆலயம் கட்டப்படும். இவை மிகவும் ஆழமான விடயங்கள் ஆகும். இவ்விடயங்கள் அனைத்தும் கீதை போன்றவற்றில் இல்லை. ஒரேயொரு அதிபதியால் மாத்திரமே விளங்கப்படுத்த முடியும். அத்தகைய ஒவ்வொரு சின்னஞ் சிறிய ஆத்மாவி;லும் ஒரு பாகம் எவ்வாறு நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு இப்பொழுது தெரியும். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். அவர்களின் பாகங்களும் அநாதியானவை ஆகும். இது ஓர் அற்புதம், இல்லையா? இந்த நாடகம் முழுவதும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதாகும். அவர்களும் கூறுகிறார்கள்: ஏற்கனவே படைக்கப்பட்டதே மீண்டும் படைக்கப்படுகின்றது. நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது நிச்சயமாக நடைபெறும். கவலைப்படுவதற்கு எதுவுமேயில்லை. எது நடந்தாலும் கண்ணீர் விடமாட்டோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குள் இப்பொழுது சத்தியம் செய்ய வேண்டும். இன்ன இன்னார் இறந்தார்;. அந்த ஆத்மா உடலை நீக்கி வேறொரு சரீரத்தை எடுத்துள்ளார். அவ்வாறாயின், அழுது என்ன பயன்? எவ்வாறாயினும், அவரால் திரும்பிவர முடியாது. நீங்கள் கண்ணீர் விட்டால், நீங்கள் தோற்கின்றீர்கள். ஆகவே, பாபா கூறுகிறார்: நீங்கள் என்றுமே அழ மாட்டீர்கள் என்று உங்களுக்குள் சத்தியம் செய்யுங்கள். அப்பால் உள்ள தாமமாகிய, பிரம்மத்;தில் வசிக்கும் தந்தையை சந்திக்கும் அக்கறையே உங்களுக்கு இருந்தது. நீங்கள் அவரைக் கண்டு விட்டீர்கள். இதனை விட வேறு என்ன உங்களுக்கு வேண்டும்? தந்தை கூறுகிறார்: தந்தையான, என்னை நினைவுசெய்யுங்கள். நான் இந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு ஒருமுறை மட்டுமே வருகிறேன். இதில் சண்டையிடல் போன்றவற்றுக்கான கேள்வியே கிடையாது. ஒரு யுத்தம் இடம்பெற்றதாகவும் அதில் பாண்டவர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டனர் என்றும் கீதையில் காட்டப்பட்டுள்ளது.; அவர்கள் ஒரு நாயை தங்களுடன் அழைத்துச் சென்று மலைகளில் மறைந்து விட்டார்கள். அவர்கள் வெற்றியடைந்து பின்னர் மரணி;த்தார்கள். அவ்விடயத்தில் அர்த்தமில்லை. அவை அனைத்தும் கட்டுக்கதைகள் ஆகும். அது பக்தி மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் அதற்கான விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். பழைய விடயங்களில் வெறுப்பு உள்ளது, இல்லையா? வெறுப்பு என்பது ஒரு கசப்பான வார்த்தை ஆகும். விருப்பமின்மை என்னும் வார்த்தை இனிமையானதாகும். ஞானம் பெறப்படுகின்றபொழுது, பக்தியில் விருப்பமின்மை இருக்கும். ஞானத்தின் பலன் பின்னர் சத்திய, திரேதா யுகங்களில் 21 பிறவிகளுக்குப் பெறப்படுகிறது. அங்கு, ஞானத்துக்கான தேவை எதுவும் இல்லை. பின்னர், நீங்கள் பாவப் பாதையில் செல்லும்பொழுது, ஏணியில் கீழிறங்கி வருகிறீர்கள். இப்பொழுது முடிவு ஏற்படுகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இப்பழைய உலகத்துக்கான விருப்பமின்மையை கொண்டிருக்க வேண்டும். நீங்;கள் இப்பொழுது சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். பின்னர் அந்த நீங்களே தேவர்கள் ஆகுவீர்கள். இவ்விடயங்களை பற்றி ஏனைய மனிதர்கள் என்ன அறிவார்கள்;? அவர்கள் பல்வகை ரூபத்தின் படங்களை உருவாக்கினாலும், அங்கு உச்சிக்குடுமி அல்லது சிவபாபா இல்லை. அவர்கள் வெறுமனே கூறுகிறார்கள்: தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள். அவ்வளவுதான்! யார், எவ்வாறு அவர்களைச் சூத்திரர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகிறார் என்பது எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. தந்தை கூறுகிறார்: தேவர்களாகிய நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தீர்கள். பின்னர் அந்தப் பணம் அனைத்தும் எங்கு சென்றது? நாங்கள் தொடர்ந்தும் தலைவணங்கியும், தரையில் விழுந்து விழுந்து வணங்கியதாலும் வழுக்கை விழுந்ததுடன் எங்கள் பணத்தை வீண்விரயமாக்கினோம். அது நேற்றைக்குரிய விடயம், இல்லையா? நான் உங்களை அவ்வாறு ஆக்கிய பின்னர் பிரிந்து சென்றேன். இப்பொழுது, நீங்கள் என்னவாகி விட்டீர்கள் என்று பாருங்கள்! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. மற்றவர்களைப் பற்றி எவ்வடிவத்திலும் வம்பளத்தலால் சூழலை கெடுக்க வேண்டாம். ஏகாந்தத்தில் இருந்து, ஓர் உண்மையான அன்பிற்கினியவராக இருந்து உங்கள் அன்பிற்கினியவரை நினைவுசெய்யுங்கள்.
  2. உங்களுக்குள்; சத்தியம் செய்யுங்கள்: ஒருபொழுதும் நான் அழ மாட்டேன். நான் ஒருபொழுதும் கண்ணீர் விட மாட்டேன். சேவாதாரிகள் மற்றும் தந்தையின் இதயத்தில் அமர்ந்துள்ளவர்களின் சகவாசத்தை மட்டுமே கொண்டிருங்கள். உங்கள் பதிவேட்டை சிறந்ததாக வைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் தடைகளிலிருந்து விடுபட்டிருப்பவராக இருக்கும் உங்கள் ஸ்திதியினால் உங்கள் அத்திவாரத்தைப் பலப்படுத்துவதன் மூலம் திறமை சித்தியடைவீர்களாக.

சில குழந்தைகள் நீண்ட காலத்திற்கு தடைகளிலிருந்து விடுபட்டிருக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பதால், அவர்களுக்குப் பலமான அத்திவாரம் உள்ளது. அவர்கள் தங்களை சக்திவாய்ந்தவர்களாக ஆக்குவதுடன் மற்றவர்களையும் சக்திவாய்ந்தவர்களாக ஆக்குகின்றார்கள். நீண்ட காலத்திற்கு சக்திவாய்ந்தவராகவும் தடைகளிலிருந்து விடுபட்டவராகவும் உள்;ள ஓர் ஆத்மா இறுதியில் தடைகளிலிருந்து விடுபட்டவராவதுடன் திறமை சித்திகள் பெற்று முதலாம் பிரிவில் வருகிறார். ஆகையால் நீண்ட காலத்திற்கு தடைகளிலிருந்து விடுபட்டிருப்பவராக இருக்கின்ற ஒரு ஸ்திதியை நிச்சயமாக அனுபவம் செய்கின்ற ஓர் இலக்கை சதா கொண்டிருங்கள்.

சுலோகம்:

எப்பொழுதும்; ஒவ்வொரு ஆத்மா மீதும் மேன்மையான உணர்வையும் நல்லாசிகளையும் கொண்டிருங்கள். நீங்கள் இயல்பாகவே தொடர்ந்தும் ஆசீர்வாதங்களை பெறுவீர்கள்.


---ஓம் சாந்தி---