14.04.2019                           காலை               முரளி ஓம் சாந்தி                         ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ்   07.05.1984           மதுபன்


 

'' சமநிலை வைப்பதினால் தான் ஆசீர்வாதங்களின் பிராப்தி இருக்கும் ''

 

இன்று அன்பு சொரூபமான, நினைவு சொரூபமான குழந்தைகளுக்கு அவர்களுடைய அன்பு மற்றும் நினைவுக்கான பிரதிபலனைக் கொடுப்பதற்காக அன்புக்கடல் தந்தை இந்த அன்பான சபையின் நடுவில் வந்திருக்கிறார். இது ஆன்மீக அன்பு நிறைந்த கூட்டம். ஆன்மீக சம்மந்தத்தினால் சந்திக்கும் கூட்டம், அதை முழுக் கல்பத்திலும் இப்பொழுது தான் அனுபவம் செய்கிறீர்கள். இந்த ஒரு ஜென்மத்தைத் தவிர வேறு ஒருபொழுதும் ஆன்மீகத் தந்தையின் ஆன்மீக அன்பு கிடைக்க முடியாது. இந்த ஆன்மீக அன்பு ஆத்மாக்களுக்கு உண்மையான ஆறுதலைக் கொடுக்கிறது. உண்மையான வழி கூறுகிறது. உண்மையான அனைத்து பிராப்திகளையும் செய்விக்கிறது. இந்த சாகார உலகத்தில் இந்த ஜென்மத்தின் மேலும் இந்த மாதிரி சகஜ விதியுடன் இம்மாதிரி ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ஆன்மீக சந்திப்பு நம் எதிரிலேயே இருக்கும் என்று எப்பொழுதாவது உங்களுக்கு எண்ணத்தில் வந்துள்ளதா? எப்படி தந்தையைப் பற்றி கூறும்பொழுது உயர்ந்ததிலும் உயர்ந்தவர். மிகவும் தேஜோமயமானவர், மிகப்பெரியவர் என்று கேட்டிருக்கிறீர்கள். அது போன்றே சந்திப்பதற்கான விதியும் கடினமானதாக மேலும் மிகுந்த பயிற்சிக்குப் பிறகு கிடைக்கும் என்று யோசித்து யோசித்து நம்பிக்கை இழந்தவர்கள் ஆகிவிட்டிருந்தீர்கள். ஆனால் தந்தை நம்பிக்கையற்ற குழந்தைகளையும் நம்பிக்கைக்குரியவர்களாக ஆக்கிவிட்டார். மனமுடைந்து போன குழந்தைகளை சக்திசாலி ஆக்கி விட்டார். எப்பொழுது கிடைப்பார் என்ற அவர், இப்பொழுது சந்திப்பின் அனுபவம் செய்வித்து விட்டார். அனைத்து செல்வங்களின் அதிகாரி ஆக்கிவிட்டார். இப்பொழுது அதிகாரி ஆத்மாக்கள் நீங்கள் உங்களுடைய அதிகாரத்தை தெரிந்திருக்கிறீர்கள் இல்லையா? நல்ல முறையில் தெரிந்து விட்டீர்களா அல்லது தெரிய வேண்டுமா?

 

இன்று பாப்தாதா குழந்தைகளைப் பார்த்து அனைத்து குழந்தைகளுக்கும் எப்பொழுதும் நிச்சயமும் இருக்கிறது, அன்பும் இருக்கிறது, நினைவு செய்வதற்கான முழு ஈடுபாடு மற்றும் ஆர்வமும் இருக்கிறது, சேவைக்கான ஊக்கமும் இருக்கிறது, லட்சியமும் சிரேஷ்டமாக இருக்கிறது என்று எங்களுக்குள் ஆன்மீக உரையாடல் செய்து கொண்டிருந்தோம். யாரிடமாவது என்ன ஆக வேண்டும் என்று கேட்டால், என்ன பதில் கூறுவார்கள்? அனைவருமே நாங்கள் இலட்சுமி நாராயணன் ஆகப்போகிறவர்கள் என்று கூறுவார்கள். இராம், சீதை ஆவோம் என்று யாரும் கூறுவதில்லை. 16,000 மணிகளின் மாலையையும் யாரும் மனமுவந்து விரும்புவதில்லை. 108 மாலையின் மணியாகத் தான் ஆவோம். இந்த ஊக்கம் தான் அனைவரிடமும் இருக்கிறது. சேவையில், படிப்பில் ஒவ்வொருவரும் தன்னை மற்றவர்களிடமிருந்து குறைந்த தகுதியானவர் என்று நினைப்பதேயில்லை. இருந்தும் எப்பொழுதும் ஒரே சீரான நிலை, எப்பொழுதும் பறக்கும் கலையின் அனுபவம், எப்பொழுதும் ஒருவரின் நினைவில் மூழ்கியிருப்பது, உடல் மற்றும் உடலின் அற்பகால பிராப்திகளிலிருந்து விலகியிருப்பது. அழியும் உணர்வுகளை மறந்த நிலையில் இருப்பது என்ற நிலையை நிரந்தரமாக அனுபவம் செய்வதில் வரிசைக்கிரமமாக ஆகிவிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம்? பாப்தாதா இதற்கான விசேஷ காரணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். காரணமாக என்ன பார்த்தார்? ஒரே ஒரு வார்த்தையின் காரணம் தான்!

 

அனைத்தையும் தெரிந்திருக்கிறார்கள், மேலும் அனைத்தும் அனைவருக்கும் பிராப்தியும் ஆகியிருக்கிறது, அதற்கான விதியின் ஞானமும் இருக்கிறது, வெற்றி அடைவதற்கான ஞானமும் இருக்கிறது. செய்யும் காரியம் மற்றும் அதன் பலன் இரண்டின் ஞானம் இருக்கிறது. ஆனால் எப்பொழுதும் சமநிலையில் இருக்கத் தெரிவதில்லை இந்த சமநிலையின் ஈஸ்வரிய நியமத்தை தேவையான நேரத்தில் கடைபிடிக்கத் தெரியாது. எனவே ஒவ்வொரு எண்ணத்திலும், ஒவ்வொரு காரியத்திலும் பாப்தாதா மற்றும் அனைத்து சிரேஷ்ட ஆத்மாக்களின் சிரேஷ்ட ஆசீர்வாதம், வாழ்த்துக்கள் கிடைப்பதில்லை. கடும் உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்கிறது. சுலபமான வெற்றி அனுபவம் ஆவதில்லை. எந்த விஷயத்தின் சமநிலை மறந்து விடுகிறது. ஒன்றோ நினைவு மற்றும் சேவை. நினைவிலிருந்து சேவை செய்வது என்பது தான் நினைவு மற்றும் சேவையின் சமநிலை. ஆனால் சேவையில் இருந்து கொண்டே நேரத்திற்கு ஏற்றபடி நினைவு செய்வது, நேரம் கிடைத்தால் நினைவு செய்வேன், இல்லையென்றால் சேவையையே நினைவு என்று புரிந்து கொள்வது சமநிலையில்லாத நிலையாகும். சேவை தான் நினைவு மேலும் நினைவிலேயே சேவை இருக்கிறது. இந்த விதியின் சிறிதளவு வித்தியாசம் வெற்றியை மாற்றி விடுகிறது. பிறகு நினைவின் சதவிகிதம் எப்படி இருந்தது என்று முடிவைக் கேட்டோம் என்றால் என்ன கூறுகிறார்கள்? சேவையில் அந்த அளவு பிஸியாக இருந்தோம். எந்த விஷயமும் நினைவில் இருக்கவில்லை, நேரமே இருக்கவில்லை என்று கூறுவார்கள். அல்லது சேவையும் பாபாவினுடையது தானே, தந்தை என் நினைவில் இருந்தார் என்று கூறுவார்கள். ஆனால் சேவையில் எந்த அளவு நேரம் மற்றும் ஈடுபாடு இருந்ததோ அந்த அளவே நினைவின் சக்திசாலியான நிலை அனுபவம் ஆனதா? எந்த அளவு சேவையில் சுயமரியாதை இருந்ததோ அந்த அளவே பணிவுத் தன்மை இருந்ததா? இந்த சமநிலை இருந்ததா? மிகப்பெரிய, மிக நல்ல சேவை செய்தோம். இந்த சுயமரியாதை நல்லது தான்! ஆனால் எந்த அளவு சுயமரியாதை இருக்கிறதோ அந்த அளவே பணிவுத் தன்மை இருக்க வேண்டும். செய்விக்கும் தந்தை என்னை ஒரு கருவி ஆக்கி சேவை செய்வித்தார். இது தான் கருவி மற்றும் பணிவுத்தன்மை. கருவியாக ஆகியிருந்தேன். சேவை நன்றாக நடந்தது, வளர்ச்சி அடைந்தது, வெற்றி சொரூபம் ஆகியிருந்தேன். இந்த சுயமரியாதை நல்லது தான்! ஆனால் சுயமரியாதை மட்டுமின்றி பணிவுத் தன்மையின் சமநிலையும் இருக்க வேண்டும். இந்த சமநிலை எப்பொழுதுமே சகஜ வெற்றி சொரூபமாக ஆக்கிவிடும். சுயமரியாதையும் அவசியம் வேண்டும். தேக உணர்வு இல்லை, சுயமரியாதை. ஆனால் சுயமரியாதை மற்றும் பணிவு இரண்டின் சமநிலை இல்லாத காரணத்தினால் சுயமரியாதை தேக அபிமானத்தில் மாறி விடுகிறது. சேவை நடந்தது, வெற்றி கிடைத்தது, கூடவே இந்த குஷியும் இருக்க வேண்டும். ஆஹா! பாபா, என்னை உங்களுடைய கருவியாக ஆக்கியிருந்தீர்கள். நான் செய்யவில்லை. இந்த நான் என்ற தன்மை சுயமரியாதையின் தேக அபிமானத்தில் கொண்டு வந்து விடுகிறது. நினைவு மற்றும் சேவையின் சமநிலையில் இருப்பவர்கள், சுயமரியாதை மற்றும் பணிவில் சமநிலை யுடனிருப்பார்கள். எனவே சமநிலை எந்த விஷயத்தில் மேலே கீழே கொண்டு செல்கிறது என்று புரிந்து கொண்டீர்களா?

 

அது போலவே பொறுப்பின் கிரீடம் அணிந்திருப்பதின் காரணத்தினால் ஒவ்வொரு காரியத்திலும் பொறுப்பையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அது உலகியல் குடும்ப பொறுப்பானாலும் சரி அல்லது ஆன்மீக குடும்பத்தினுடையதாக இருந்தாலும் சரி அல்லது ஈஸ்வரிய சேவையின் பொறுப்பானாலும் சரி. இரண்டு குடும்பத்தின் அவரவர்களின் பொறுப்பை நிறைவேற்றுவதில் எந்தளவு விலகியிருப்பீர்களோ அந்தளவு அன்பானவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த சமநிலை இருக்க வேண்டும். ஒவ்வொரு பொறுப்பையும் செய்ய வேண்டும், இதுவும் அவசியம். ஆனால் எந்தளவு பெரிய பொறுப்போ அந்தளவு டபுள் லைட்டாக இருக்க வேண்டும். பொறுப்பை ஏற்று செய்து கொண்டே பொறுப்பின் சுமையிலிருந்து விலகியிருப்பவராக இருக்க வேண்டும், இதைத் தான் தந்தைக்குப் பிரியமானது என்று கூறுவது. மிகுந்த பொறுப்பிருக்கிறது, என்ன செய்வது என்று பயப்படாதீர்கள். இதை செய்யவா அல்லது வேண்டாமா, என்ன செய்வது, இதையும் செய்வது அதையும் செய்வது மிகக் கடினம் என்று உணர்வது என்றால் சுமை இருக்கிறது. டபுள் லைட்டாக இருக்கவில்லை தான் இல்லையா? டபுள் லைட் என்றால் விலகியிருப்பவர். மேலும் எந்தவொரு பொறுப்பின் காரியத்தின் சஞ்சலத்தின் சுமை இல்லாத நிலை. இதைத் தான் விலகி மற்றும் அன்பாக இருப்பதின் சமநிலை வைப்பவர் என்று கூறுவது.

 

இன்னொரு விஷயம் இந்த முயற்சி செய்யும் வாழ்க்கையில் காலப்போக்கில் முயற்சி செய்வதினால் என்னென்ன பிராப்தி ஆகிறதோ அதை அனுபவம் செய்து செய்து பிராப்தியின் மிகுந்த போதை மற்றும் குஷியில் வந்து விடுகிறார்கள். நான் அடைந்து விட்டேன், அனுபவம் செய்து விட்டேன் போதும். நான் மகாவீர், மகாரதி ஆகிவிட்டேன், ஞானி ஆகிவிட்டேன், யோகியாகவும் ஆகிவிட்டேன், சேவாதாரியாகவும் ஆகிவிட்டேன். இந்த பிராப்தி மிகவும் நல்லது ஆனால் இந்த பிராப்தியின் போதையில் அலட்சியமும் வந்து விடுகிறது. இதற்கான காரணம் என்ன? ஞானி ஆனீர்கள், யோகி ஆனீர்கள், சேவாதாரி ஆனீர்கள் ஆனால் ஒவ்வொரு அடியிலும் பறக்கும் கலையின் அனுபவம் செய்கிறீர்களா? எதுவரை உயிரோடு இருப்போமோ அதுவரை ஒவ்வொரு அடியிலும் பறக்கும் கலையில் பறக்க வேண்டும். இந்த இலட்சியத்தோடு இன்று என்ன செய்கிறீர்களோ அதில் மேலும் புதுமை வந்ததா அல்லது எதுவரை வந்து சேர்ந்திருக்கிறீர்களோ அந்த எல்லையைத் தான் சம்பூர்ணத்தின் எல்லை என்று புரிந்து கொண்டீர்களா? முயற்சி செய்வதில் பிராப்தியின் போதை மற்றும் குஷியும் அவசியம் தான், ஆனால் ஒவ்வொரு அடியிலும் முன்னேற்றம் மற்றும் பறக்கும் கலையின் அனுபவமும் அவசியம். ஒருவேளை இந்த சமநிலை இருப்பதில்லை என்றால் அலட்சியம் இருக்கிறது, ஆசீர்வாதத்தை பிராப்தி செய்ய முடியாது. எனவே முயற்சி செய்யும் வாழ்க்கையில் எவ்வளவு அடைந்திருக்கிறீர்களோ அதன் போதையும் இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு அடியிலும் முன்னேற்றத்தின் அனுபவமும் இருக்க வேண்டும். இதைத் தான் சமநிலை என்று கூறுவது. இந்த சமநிலை எப்பொழுதுமே இருக்க வேண்டும். நானோ அனைத்தையும் தெரிந்து கொண்டேன், அனுபவி ஆகிவிட்டேன். நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறேன் என்று அந்த மாதிரி நினைக்காதீர்கள். நல்லவராக ஆகியிருக்கிறீர்கள் இதுவோ மிகவும் நல்லது தான் ஆனால் இன்னும் வரும் நாட்களில் முன்னேற்றத்தை அடைய வேண்டும். அந்த மாதிரி விசேஷ காரியம் செய்து, அனைத்து ஆத்மாக்களின் எதிரில் ஒரு உதாரணமாக ஆக வேண்டும். இதை மறக்காதீர்கள். எந்தெந்த விஷயங்களில் சமநிலை வைக்க வேண்டும் என்று புரிந்து கொண்டீர்களா? இந்த சமநிலை மூலமாக இயல்பாகவே ஆசீர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கும். எனவே வரிசைக்கிரமமாக ஏன் ஆகிறோம் என்று புரிந்து கொண்டீர்களா? சிலர் சில விஷயத்தின் சமநிலையில், சிலர் வேறு சில விஷயத்தின் சமநிலையில் அலட்சியமானவராக ஆகிவிடுகிறார்கள்.

 

மும்பையில் வசிப்பவர்களோ அலட்சியமானவர்களாக இல்லை தான் இல்லையா? நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் சமநிலை வைப்பவர்கள் தான் இல்லையா? சமநிலையின் கலையில் திறமைசாலிகள் தான் இல்லையா? சமநிலை கூட ஒரு கலை தான். இந்தக் கலையில் நீங்கள் நிரம்பியவர்கள் தான் இல்லையா? மும்பையை செல்வம் நிறைந்த தேசம் என்று கூறுவார்கள். அந்த மாதிரி சமநிலையின் செல்வத்தில், ஆசீர்வாதத்தின் செல்வத்திலும் நிரம்பியவர் தான் இல்லையா? மும்பையைச் சேர்ந்தவர்கள் என்ன விசேஷத்தை காண்பிப்பீர்கள்? மும்பையில் பல மடங்கு கோடீஸ்வரர்கள் அதிகம் இருக்கிறார்கள் தான் இல்லையா? எனவே மும்பையைச் சேர்ந்தவர்களுக்கு அந்த மாதிரியான ஆத்மாக்களுக்கு ஆன்மீக அழியாத பல மடங்கு கோடீஸ்வரன், அனைத்து பொக்கிஷங்களின் சுரங்கங்களின் அதிபதி என்றால் என்ன என்பதை அவர்களுக்கு அனுபவம் செய்வியுங்கள். இப்போதோ அழியும் செல்வத்தில் மட்டும் அதிபதிகளாக இருக்கிறார்கள். அந்த மாதிரி மனிதர்களுக்கு இந்த அழியாத பொக்கிஷத்தின் மகத்துவத்தைக் கூறி அழியாத செல்வம் நிறைந்தவராக ஆக்குங்கள். இந்த பொக்கிஷம் அழியாதது, சிரேஷ்ட பொக்கிஷம் என்று அவர்கள் உணர வேண்டும். அந்த மாதிரி சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள் தான் இல்லையா? செல்வந்தவர்களின் பார்வையில் இந்த அழியாத செல்வந்த ஆத்மாக்கள் சிரேஷ்டமானவர்கள் என்று அனுபவம் செய்யட்டும். புரிந்ததா? இவர்களுக்கோ பங்கே இல்லை என்று அப்படி நினைக்காதீர்கள். இறுதியில் .இவர்களும் விழித்தெழ வேண்டும் என்ற பங்கும் இருக்கிறது. சம்மந்தத்தில் வர மாட்டார்கள், ஆனால் தொடர்பில் வருவார்கள். எனவே இப்பொழுது அந்த மாதிரி ஆத்மாக்களையும் எழுப்புவதற்கான நேரம் வந்து விட்டது. எனவே மிக நல்ல முறையில் அவர்களையும் எழுப்பி விடுங்கள். ஏனென்றால் செல்வத்தின் போதையின் தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். போதையில் இருப்பவர்களை அடிக்கடி எழுப்ப வேண்டியதாக இருக்கும். ஒரு தடவையில் எழுந்திருக்க மாட்டார்கள். எனவே இப்பொழுது அந்த மாதிரி போதையில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு அழியாத செல்வத்தின் அனுபவங்களைத் தெரிந்தவர்களாக ஆக்குங்கள். புரிந்ததா? மும்மையைச் சேர்ந்தவர்களோ மாயாவை வென்றவர்கள் தான் இல்லையா! மாயாவை கடலில் போட்டு விட்டீர்கள் இல்லையா! ஆழத்தில் போட்டீர்களா? அல்லது மேலேயே போட்டு விட்டீர்களா? ஒருவேளை ஏதாவது ஒரு பொருள் மேலே இருக்கிறது என்றால் அது அலைகளால் அடிக்கப்பட்டு கரைக்கு வந்து விடும், ஆழத்தில் போட்டுவிட்டீர்கள் என்றால், அழிந்து விடும். எனவே மாயா மீண்டும் கரைக்கு வந்து விடுவது இல்லையே? மும்பையில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் உதாரணமாக ஆக வேண்டும். ஒவ்வொரு விசேஷத்திலும் உதாரணமாக ஆக வேண்டும். எப்படி மும்பையின் அழகைப் பார்ப்பதற்காக அனைவரும் வெகு தூர இடங்களிலிருந்தும் வருகிறார்கள் தான் இல்லையா! அந்த மாதிரி பார்ப்பதற்காக தொலை தூரத்திலிருந்து வருகிறார்கள். ஒவ்வொரு குணத்தின் நடைமுறை சொரூபத்தில் உதாரணம் ஆகுங்கள். சரளத்தன்மையை வாழ்க்கையில் பார்க்க வேண்டும் என்றால், இந்த சென்டரில் சென்று இந்த பரிவாரத்தை பாருங்கள். சகித்துக் கொள்ளும் தன்மையைப் பார்க்க வேண்டும் என்றால், இந்த சென்டரில் சென்று இந்த பரிவாரத்தை பாருங்கள். சமநிலையைப் பார்க்க வேண்டும் என்றால் இந்த விசேஷ ஆத்மாக்களை பாருங்கள். நீங்கள் அந்த மாதிரி அதிசயம் செய்பவர்கள் தான் இல்லையா? மும்பையைச் சேர்ந்தவர்களுக்கு இரட்டை பிரதிபலன் கொடுக்க வேண்டும். ஒன்று ஜகத்தம்பா தாயின் பாலனைக்கு, இன்னொன்று பிரம்மா பாபாவின் விசேஷ பாலனைக்கு. ஜகத்தம்பா தாயின் பாலனையும் மும்பையைச் சேர்ந்தவர் களுக்கு விசேஷமாக கிடைத்தது. அந்த அளவு மும்பைக்கு பிரதிபலனை அளிக்க வேண்டும் இல்லையா? ஒவ்வொரு ஸ்தானமும், ஒவ்வொரு விசேஷ ஆத்மா மூலமாக தந்தையின், தாயின் விசேஷ ஆத்மாக்களின் விசேஷம் தென்பட வேண்டும். இதைத் தான் பலன் கொடுப்பது என்று கூறுவது. நல்லது. வந்திருக்கிறீர்கள், அனைவரையும் வரவேற்கிறோம். தந்தையின் வீட்டில் அதாவது உங்களுடைய வீட்டில் வாருங்கள், வாருங்கள்!

 

தந்தையோ குழந்தைகளைப் பார்த்து எப்பொழுதும் மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொரு குழந்தையும் உலகத்தின் தீபம். குலத்தின் தீபம் மட்டும் இல்லை, உலகத்தின் தீபம். ஒவ்வொருவரும் உலக நன்மை காரியத்திற்காகப் பொறுப்பாளர் ஆகியிருக்கிறார்கள் என்றால் உலகத்தின் தீபம் ஆகிவிட்டார் இல்லையா? பார்க்கப் போனால் முழு உலகமும் எல்லைக்கப்பாற்பட்ட குலம் தான். அந்த முறையில் எல்லைக்கப்பாற்பட்ட குலத்தின் தீபம் என்றும் கூற முடியும். ஆனால் எல்லைக்குட்பட்ட குலத்தின் தீபம் இல்லை, எல்லைக்கப்பாற்பட்ட குலத்தின் தீபம் அல்லது உலகின் தீபம் என்று கூறுங்கள். நீங்கள் அந்த மாதிரியானவர்கள் தான் இல்லையா? நீங்கள் எப்பொழுதும் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தீபம் தான் இல்லையா. அணைந்து அணைந்து எரியும் தீபமாக இல்லையே? எப்பொழுது விளக்கு அணைந்து அணைந்து எரிகிறது என்றால், பார்ப்போரின் கண்களும் கெட்டு விடுகிறது. பார்க்க பிடிக்காது தான் இல்லையா? நீங்களோ எப்பொழுதும் பிரகாசமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தீபம் தான் இல்லையா? அந்த மாதிரி தீபங்களைப் பார்த்து பாப்தாதாவும் எப்பொழுதும் மகிழ்ச்சி அடைகிறார். புரிந்தத!. நல்லது.

 

எப்பொழுதும் ஒவ்வொரு காரியத்தில் சமநிலை வைக்கக்கூடிய, எப்பொழுதும் தந்தையிடமிருந்து ஆசீர்வாதம் பெறக்கூடிய, ஒவ்வொரு அடியிலும் பறக்கும் கலையை அனுபவம் செய்யக்கூடிய, எப்பொழுதும் அன்பின் கடலில் மூழ்கியிருக்கும், சமநிலையில் நிலைத்திருக்கக்கூடிய, பலகோடி மடங்கு பாக்கியவான் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

 

தாதிகளுடன் சந்திப்பு :

நீங்கள் அனைவரும் கிரீடம் அணிந்திருக்கும் இரத்தினங்கள் தான் இல்லையா? எவ்வளவு பெரிய கிரீடமோ அந்த அளவே எப்பொழுதுமே மிகவும் இலேசாக இருப்பவர்கள். அந்த மாதிரி கிரீடத்தை அணிந்திருக்கிறீர்கள், இந்த கிரீடத்தை அணிந்து கொண்டு ஒவ்வொரு காரியத்தை செய்து கொண்டும் கிரீடம் அணிந்திருப்பவராகவும் இருக்க முடியும். இரத்தினம் பதித்த கிரீடமாக இருப்பதை தேவையான நேரத்தில் அணிந்து கொள்வார்கள். பிறகு கழற்றி வைத்து விடுவார்கள். ஆனால் இந்த கிரீடம் அந்த மாதிரியானது அதை கழற்றி கீழே வைப்பதற்கு அவசியமே இல்லை. தூங்கிக் கொண்டிருந்தாலும் கிரீடம் அணிந்தவர் மேலும் எழுந்தாலும் கிரீடம் அணிந்தவர். அனுபவம் இருக்கிறது தான் இல்லையா? கிரீடம் சுமையற்று இலேசாக இருக்கிறது இல்லையா? ஏதாவது சுமையோ இல்லையே? பெயர் பெரியது, எடை மிகவும் லேசானது. சுகம் கொடுக்கும் கிரீடம், குஷி கொடுக்கக்கூடிய கிரீடம். உங்களை அந்த மாதிரி கிரீடம் அணிந்தவராக தந்தை ஆக்குகிறார். அதன் காரணமாக வரும் காலத்தில் பல ஜென்மங்கள் கிரீடம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அந்த மாதிரி கிரீடம் அணிந்த குழந்தைகளைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். பாப்தாதா இராஜ கிரீடம் அணிவிக்கும் நாளை (பட்டாபிஷேகம்) இப்பொழுதிலிருந்தே கொண்டாடி நிரந்தரமான பழக்கமாகவும் நியமமாகவும் ஆக்கிவிட்டார். சத்யுகத்திலும் பட்டாபிஷேக தினம் கொண்டாடப்படும். யார் சங்கமயுகத்தில் பட்டாபிஷேக நாளை கொண்டாடினாரோ அதனுடைய நினைவுச் சின்னம் தான் அழியாததாக வந்து கொண்டே இருக்கும். அவ்யக்த வதனத்தில் சேவாதாரிகள் இருக்கிறார்கள். ஆனால் சாகார உலகத்திலிருந்து வானபிரஸ்தம் ஆகிவிட்டார்கள் இல்லையா? சுயம் தந்தை சாகார உலகத்திலிருந்து வானப்பிரஸ்தம் ஆகி குழந்தைகளுக்கு கிரீடம் மற்றும் ஆசனத்தை வழங்கிவிட்டு அவர் அவ்யக்த உலகத்திற்குச் செல்ல வேண்டும். அப்படி பட்டாபிஷேக நாள் ஆகிவிட்டது இல்லையா? விசித்திரமான நாடகம் இல்லையா? ஒருவேளை தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே கூறிவிட்டோம் என்றால், அதிசயம் நிறைந்த நாடகம் என்று இருக்காது. இது அந்த மாதிரி விசித்திர நாடகம் அதனுடைய சித்திரத்தை வரைய முடியாது. விசித்திர தந்தைக்கு விசித்திரமான பங்கு இருக்கிறது. அதன் சித்திரத்தை புத்தியில் எண்ணம் மூலமாகவும் வரைய முடியாது. இதைத் தான் விசித்திரம் என்று கூறுகிறோம். எனவே விசித்திரமான பட்டாபிஷேகம் ஆனது. பாப்தாதா எப்பொழுதுமே மகாவீர் குழந்தைகளை பட்டாபிஷேக நாளைக் கொண்டாடும் கிரீடம் அணிந்த சொரூபத்தில் பார்க்கிறார். பாப்தாதா துணையை கொடுப்பதிலிருந்து மறைந்து விடவில்லை. ஆனால் சாகார உலகத்திலிருந்து மறைந்து அவ்யக்த உலகத்தில் உதயம் ஆகிவிட்டார். உடன் இருப்போம், உடன் செல்வோம் என்ற இந்த உறுதிமொழியோ கண்டிப்பாக இருக்கிறது. இந்த உறுதிமொழி ஒருபொழுதும் அகல முடியாது. எனவே தான் பிரம்மா பாபா உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். இல்லையென்றால் கர்மாதீத் ஆகிவிட்டார் என்றால் அவர் செல்ல முடியும். பந்தனமோ இல்லை தான் இல்லையா? ஆனால் அன்பின் பந்தனம் இருக்கிறது. அன்பின் பந்தனத்தின் காரணமாக உடன் செல்வதற்கான உறுதிமொழியை நிறைவேற்றும் காரணமாக தந்தைக்கு காத்திருக்க வேண்டிய தாகத் தான் இருக்கிறது. துணையாக இருக்கிறார். மேலும் அவருடன் செல்ல வேண்டும். அந்த மாதிரி தான் அனுபவம் இருக்கிறது இல்லையா? நல்லது. ஒவ்வொருவரும் விசேஷமானவர்கள். ஒவ்வொருவரின் விசேஷத்தை வர்ணனை செய்தோம் என்றால் எத்தனை ஆகிவிடும். மாலையாகிவிடும். எனவே இதயத்தில் மட்டும் வைத்துக் கொள்கிறோம், வர்ணனை செய்வதில்லை. நல்லது.

 

வரதானம் :

வீணானது மற்றும் டிஸ்டர்ப் (தொந்தரவு) செய்யும் வார்த்தைகளிலிருந்து விடுபட்டு டபுள் லைட் அவ்யக்த ஃபரிஷ்தா ஆகுக.

 

அவ்யக்த ஃபரிஷ்தா ஆக வேண்டும் என்றால் வீணான வார்த்தைகள் எவை யாருக்குமே பிடிப்ப தில்லையோ அவற்றை நிரந்தரமாக அகற்றி விடுங்கள். விஷயம் இரண்டு வார்த்தைகளுக்கானதாக இருக்கும். ஆனால் அதை நீளமாக்கி பேசிக் கொண்டே இருப்பது இதுவும் வீணானது. எது நான்கு வார்த்தைகளில் காரியம் முடிந்து விடுமோ அதை 12-15 வார்த்தைகளில் பேசாதீர்கள். குறைவாக பேசுங்கள் மெதுவாக பேசுங்கள்... இந்த சுலோகனை கழுத்தில் டாலராக மாட்டிக் கொள்ளுங்கள். வீணானவை மற்றும் டிஸ்டர்ப் செய்யும் வார்த்தைகளிலிருந்து விடுபட்டீர்கள் என்றால் ,அவ்யக்த ஃபரிஷ்தா ஆவதில் மிகுந்த உதவி கிடைக்கும்.

 

சுலோகன் :

யார் தன்னை பரமாத்மா அன்பிற்காக அர்ப்பணம் செய்கிறாரோ வெற்றி அவருடைய கழுத்தின் மாலையாக ஆகிவிடுகிறது.

 

ஓம்சாந்தி