ஓம் சாந்தி.
உண்மையில் ஓம்சாந்தி என்றும் கூற வேண்டிய அவசியமில்லை. ஆனால்
குழந்தைகளுக்கு ஏதாவது புரிய வைக்க வேண்டியிருக்கிறது, அறிமுகம்
கொடுக்க வேண்டி யிருக்கிறது. இன்றைய நாட்களில் பலர் ஓம்சாந்தி,
ஒம்சாந்தி என்று கூறிக் கொண்டே இருக்கின்றனர். பொருள் புரிந்து
கொள்வது கிடையாது. ஓம்சாந்தி, ஆத்மாக்களாகிய நமது சுய தர்மம்
சாந்தி. இது சரி தான், ஆனால் பிறகு ஓம் சிவோஹம் என்றும் கூறி
விட்டனர். அது தவறாகி விடுகிறது. உண்மையில் இந்தப் பாடல்
போன்றவைகளின் அவசியமும் கிடையாது. இன்றைய நாட்களில் உலகில் இசை
கேட்பதில் மகிழ்ச்சி (கவர்ச்சி) அதிகம் இருக்கிறது. இது போன்ற
கவர்ச்சி களினால் எந்த இலாபமும் கிடையாது. காதிற்கு இனிமையான
ஒரு விசயமோ இப்போது தான் வருகிறது. தந்தை குழந்தைகளின் எதிரில்
அமர்ந்து புரிய வைக்கின்றார், நீங்கள் அதிகப் பக்தி
செய்திருக்கிறீர்கள், இப்போது பக்தியின் இரவு முடிவடை கிறது,
அதிகாலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று கூறுகின்றார்.
அதிகாலைக்குத் தான் அதிக மகத்துவம் இருக்கிறது. அதிகாலை
நேரத்தில் தந்தையை நினைவு செய்ய வேண்டும். அதிகாலை நேரத்தில்
பக்தியும் அதிகம் செய்கின்றனர். மாலையும் ஜெபிக்கின்றனர்.
இந்தப் பக்தியின் வழக்கம் நடைபெற்று வருகிறது. தந்தை
கூறுகின்றார் லி குழந்தைகளே! இந்த நாடகம் முடிவடைகிறது,
மீண்டும் சக்கரம் சுற்றும். அங்குப் பக்திக்கான அவசியமில்லை.
பக்திக்குப் பின் பகவான் கிடைப்பார் என்று சுயம் கூறுகின்றனர்.
பகவானை நினைவு செய்கின்றனர், ஏனெனில் துக்கமானவர்களாக
இருக்கின்றனர். ஏதாவது ஆபத்து வரும் போது அல்லது வியாதி வரும்
போது பகவானை நினைவு செய்கின்றனர். பக்தர்கள் தான் பகவானை நினைவு
செய்வர். சத்யுகம், திரேதாவில் பக்தியே கிடையாது. இல்லையெனில்
அனைத்தும் பக்தியின் கலாச்சாரமாகவே ஆகிவிடும். பக்தி, ஞானம்
பிறகு தான் வைராக்கியம். பக்திக்குப் பின் தான் பகல். பகல்
என்று புது உலகத்திற்குக் கூறப்படுகிறது. பக்தி, ஞானம்,
வைராக்கியம் என்ற வார்த்தை சரியானது. எதில் வைராக்கியம்? பழைய
உலகம், பழைய சம்மந்தம் போன்றவைகளில் வைராக்கியம். நாம் பாபாவின்
கூடவே முக்திதாமத்திற்குச் செல்ல வேண்டும் என்று
விரும்புகிறீர்கள். பக்திக்குப் பிறகு அவசியம் நமக்குப் பகவான்
கிடைப்பார். பக்தர்களுக்குத் தான் பகவான் தந்தை கிடைக்கின்றார்.
பக்தர்களுக்குச் சத்கதி கொடுப்பது பகவானின் காரியமாகும். வேறு
எதுவும் செய்ய வேண்டாம், தந்தையைப் புரிந்து கொண்டால் போதும்.
தந்தை இந்த மனித சிருஷ்டியின் விதையானவர், இது தலைகீழான மரம்
என்று கூறப் படுகிறது. விதையிலிருந்து மரம் எப்படி உருவாகிறது?
இது மிகவும் எளிதாகும். வேத சாஸ்திரங்கள், கிரந்தம்
போன்றவைகளைப் படிப்பது, ஜெபம், தவம் செய்வது போன்ற அனைத்தும்
பக்தி மார்க்கமாகும் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இது
பகவானை அடைவதற்கான உண்மையான மார்க்கம் கிடையாது. உண்மையான
மார்க்கமாகிய முக்தி, ஜீவன் முக்தியை பகவானே காண்பிக்கின்றார்.
இப்போது நாடகம் முடிவடைகிறது, எது நடந்து முடிந்ததோ அது நாடகம்
என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைப் புரிந்து கொள்வதற்கு
எல்லையற்ற புத்தி தேவை. எல்லையற்ற எஜமான் தான் முழுச்
சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றி எல்லையற்ற ஞானம்
கொடுக்கின்றார். அவர் தான் ஞானேஸ்வர், படைப்பவர் என்று
கூறப்படுகின்றார். ஞானேஸ்வரன் என்றால் ஈஸ்வரனிடத்தில் ஞானம்
இருக்கிறது, அது ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது. இறை
தந்தையின் ஞானமாகும். நீங்களும் இறை தந்தையின் மாணவர்களாக
ஆகியிருக்கிறீர்கள். பகவானின் மகாவாக்கியம் லி உங்களுக்கு
இராஜயோகம் கற்பிக்கிறேன், எனவே பகவான் ஆசிரியர் ஆகிவிடுகிறார்.
நீங்கள் மாணவர்களாகவும் இருக்கிறீர் கள், குழந்தைகளாகவும்
இருக்கிறீர்கள். குழந்தைகளுக்குத் தாத்தாவிடமிருந்து ஆஸ்தி
கிடைக் கிறது. இது மிகவும் எளிய விசயமாகும். குழந்தை தகுதி
யில்லாததாக இருந்தால் தந்தை உதைத்து வெளியேற்றி விடுவார்,
தொழில் போன்றவைகளில் யார் நல்ல உதவியாளர்களாக இருக்கிறார்களோ
அவர்களுக்குத் தான் பங்கு கிடைக்கும். ஆகக் குழந்தைகளாகிய
உங்களுக்கும் தாத்தாவின் ஆஸ்திக்கு உரிமை இருக்கிறது. அவர்
நிராகார மானவர். நாம் நமது தாத்தாவிடமிருந்து ஆஸ்தியடைந்து
கொண்டிருக்கிறோம் என்பதைக் குழந்தைகள் அறிவீர்கள். அவரே
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். ஞானம் நிறைந்தவர் ஆவார்.
பிரம்மா, விஷ்ணு, சங்கரை பதீத பாவன் என்று கூறமாட்டார்கள்.
அவர்கள் தேவதைகள். அவர்களைச் சத்கதி கொடுக்கும் வள்ளல் என்று
கூறமாட்டார்கள். சத்கதி அளிப்பவர் அவர் ஒருவர் மட்டுமே ஆவார்.
அனைவரும் நினைவு செய்வதும் கூட அந்த ஒருவரைத் தான். தந்தையைப்
பற்றித் தெரியாத காரணத்தினால் அனைத்திலும் பரமாத்மா இருப்பதாகக்
கூறிவிட்டனர். ஒருவேளை யாருக்காவது சாட்சாத்காரம் ஏற்பட்டு
விட்டால் ஹனுமான் தரிசனம் செய்ய வைத்தாக நினைக்கின்றனர். பகவான்
சர்வவியாபி எனக் கூறிவிட்டனர். எந்த ஒரு பொருளின் மீதும் பாவனை
வைத்து விட்டால் அதன் சாட்சாத்காரம் ஏற்பட்டு விடும். இங்குப்
படிப்பிற்கான விசயமாகும். நான் வந்து குழந்தைகளுக்குக்
கற்பிக்கிறேன் என்ற தந்தை கூறுகின்றார். எப்படிக்
கற்பிக்கின்றார்? என்பதை நீங்கள் பார்க்கவும் செய்கிறீர்கள்.
மற்ற ஆசிரியர்களைப் போன்றே சாதாரண முறையில் கற்பிக்கின்றார்.
கற்றுத் தருபவர் வழக்கறிஞராக இருந்தால் தன்னைப் போன்று
வழக்கறிஞராக ஆக்குவார். இந்தப் பாரதத்தைச் சொர்க்கமாக ஆக்கியது
யார்? மேலும் பாரதத்தில் வசித்த சூரியவம்சி தேவி தேவதைகள்
எங்கிருந்து வந்தனர்? என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள்.
மனிதர்களுக்கு முற்றிலும் தெரியாது. இப்போது சங்கமம் ஆகும்.
நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். வேறு யாரும் சங்கமத்தில்
கிடையாது. சங்கமத்தில் இந்த மேளா (சந்திப்பு) பாருங்கள் எப்படி
இருக்கிறது! தந்தையைச் சந்திப்பதற்காகக் குழந்தைகள்
வந்திருக்கிறீர்கள். இந்த மேளா கல்யாணகாரி மேளா ஆகும். மற்றபடி
கும்பமேளா போன்ற எந்த மேளாவாக இருந்தாலும் அதில் எந்தப்
பிராப்தியும் கிடையாது. சங்கமத்தை தான் உண்மையிலும் உண்மையான
கும்பமேளா என்று கூறப் படுகிறது. ஆத்மா பரமாத்மாவைப் பிரிந்து
வெகு காலம் ஆகிவிட்டது என்று பாடு கின்றனர், பிறகு அழகான,
மங்களகரமான மேளாவாக ஆக்கி விட்டனர். இந்த நேரம் எவ்வளவு
உயர்ந்தது! இந்தச் சங்கமத்தின் நேரம் எவ்வளவு கல்யாணகாரியாக
இருக்கிறது! ஏனெனில் இந்த நேரத்தில் தான் அனைவருக் கும் நன்மை
ஏற்படுகிறது. தந்தை வந்து அனைவருக்கும் கற்பிக்கின்றார், அவர்
நிராகாரமானவர், நட்சத்திரம் போன்றவர். புரிய வைப்பதற்காக லிங்க
ரூபம் வைக்கப்பட்டிருக்கிறது. பிந்துவாக வைத்தால் எதையும்
புரிந்து கொள்ள முடியாது. ஆத்மா ஒரு நட்சத்திரம் போன்று
இருக்கிறது, தந்தையும் நட்சத்திரமாக இருக்கின்றார் என்று
நீங்கள் புரிய வைக்க முடியும். எப்படி ஆத்மாவோ அதே போன்று
பரம்பிதா பரமாத்மா. வித்தியாசம் கிடையாது. உங்களது ஆத்மாக்களும்
வரிசைக்கிரமமாக இருக்கிறது. சிலருடைய புத்தியில் எவ்வளவு ஞானம்
நிறைந்திருக்கிறது! சிலரது புத்தியில் எத்தனை.....
ஆத்மாக்களாகிய நாம் எப்படி 84 பிறவிகள் எடுக்கிறோம் என்பதை
இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். ஒவ்வொருவரும் அவரவர்களது
கணக்கு வழக்குகளை அனுபவித்தே ஆக வேண்டும். யாருக்காவது நோய்
வருகிறது, கணக்கு முடிக்க வேண்டும். ஈஸ்வரிய குழந்தை களுக்கு
ஏன் இந்த மாதிரி ஏற்படுகிறது? என்பது கிடையாது. குழந்தைகளே!
ஜென்ம ஜென்மத் திற்கான பாவம் இருக்கிறது என்று தந்தை புரிய
வைத்திரு கின்றார். குமாரியாக இருக்கலாம், குமாரியிடத்தில்
என்ன பாவம் ஏற்பட்டிருக்கக் கூடும்? ஆனால் இது பல பிறவிகளின்
கணக்கு வழக்குகளை முடிக்க வேண்டும் அல்லவா! இந்தப பிறவியிலும்
செய்த பாவங்களைக் கூறவில்லையெனில் உள்ளுக்குள் அதிகரித்துக்
கொண்டே செல்லும் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார்.
கூறிவிட்டால் பிறகு அது அதிகரிக்காது. பாரதம் அனைத்தையும் விட
நம்பர் ஒன் தூய்மையாக இருந்தது, இப்போது பாரதம் அனைத்தையும்
விடத் தூய்மையின்றி இருக்கிறது. ஆக அவர்கள் தான் முயற்சியும்
அதிகம் செய்ய வேண்டும். யார் அதிகச் சேவை செய்கிறார்களோ, நான்
உயர்ந்த நம்பரில் செல்வேன் என்று புரிந்து கொள்ள முடியும்.
சிறிது கணக்கு வழக்கு பாக்கி இருந்தால் அதை அனுபவிக்க
வேண்டியிருக்கும். அதை அனுபவிப்பதும் குஷியுடன் அனுபவிக்க
வேண்டும். அஞ்ஞானி மனிதர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் ஐயோ ஐயோ
என்று துக்கமடைய ஆரம்பித்து விடுவர். இங்குக் குஷியாக
அனுபவிக்க வேண்டும். நாம் தான் தூய்மையாக இருந்தோம், பிறகு நாம்
தான் அனைவரையும் விடத் தூய்மை இல்லாமல் ஆகிறோம். இந்த ஆடை
நடிப்பு நடிப்பதற்காக நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம்
அனைவரையும் விட அதிகம் தூய்மை இல்லா திருக்கிறோம்
ஆகியிருக்கிறோம் என்பது இப்போது புத்தியில் வந்திருக்கிறது.
அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. இன்னாருக்கு இந்த வியாதி
ஏன்? என்று ஆச்சரியப் படக் கூடாது. அரே, கிருஷ்ணருக்கும் சியாம்,
சுந்தர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சித்திரம்
உருவாக்கு பவர் புரிந்து கொள்வது கிடையாது. அவர்கள் இராதையை
அழகாகவும், கிருஷ்ணரை நீல நிறத்திலும் காண்பிக்கின்றனர். இராதை
குமாரியாக இருப்பதால் அவருக்கு மரியாதை செலுத்துவதாக
நினைக்கின்றனர். அவர் எப்படி நீல நிறம் ஆக முடியும்? இந்த
விசயங்களை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். யார் தேவதா
குலத்தினர்களோ அவர்கள் இப்போது தங்களை இந்து தர்மம் என்று
புரிந்து கொண்டிருக் கின்றனர்.
நீங்கள் ஸ்ரீமத் மூலம் தனது குலத்தை முன்னேறச் செய்கிறீர்கள்.
முழுக் குலத்தையும் தூய்மை ஆக்குவது, விகாரத்திலிருந்து
விடுவித்து மேலே அழைத்து வர வேண்டும். நீங்கள் விடுவிக்கும்
வீரர்கள் அல்லவா! தந்தை தான் துர்கதியிலிருந்து விடுவித்துச்
சத்கதி கொடுக்கின்றார். அவர் தான் படைப்பவர், டைரக்டர்,
முக்கிய நடிகர் என்று பாடப்பட்டிருக்கிறது. எப்படி நடிகராக
ஆகிறார்? தூய்மைப் படுத்தும் தந்தை வந்து தூய்மை இல்லாத உலகில்
அனைவரையும் தூய்மையாக ஆக்குகின்றார் எனில் முக்கியமானவர் ஆகி
விடுகிறார் அல்லவா! பிரம்மா, விஷ்ணு, சங்கரை யாரும் செய்பவர்,
செய்விப்பவர் என்று கூறமாட்டார்கள். யாரை செய்பவர்,
செய்விப்பவர் என்று கூறுகிறோமோ அவர் இந்த நேரத்தில் தன்
பாகத்தில் நடிக்கிறார் என்பதை நீங்கள் இப்போது அனுபவத்தில் கூற
முடியும். அவர் சங்கமத்தில் தான் தன் பங்கை நடிப்பார். அவரை
யாரும் அறியவில்லை. மனிதர்கள் 14 கலைகளிலிருந்து மேலும் கீழே
வீழ்ச்சி யடைகின்றனர். சிறிது சிறிதாகக் கலைகள் குறைந்து கொண்டே
செல்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் ஏதாவது கலைகள் குறைகிறது.
சத்யுகத்தில் 8 பிறவிகள் எடுக்கிறீர்கள். ஒவ்வொரு பிறவியிலும்
நாடகப்படி ஏதாவது கலைகள் குறையவே செய்கிறது. இப்போது ஏறும்
நேரமாகும். எப்போது முழுவதுமாக ஏறிவிடுவீர்களோ பிறகு சிறிது
சிறிதாகக் கீழே இறங்குவீர்கள். இப்போது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது என்பதைக் குழந்தைகள் அறிவீர்கள். இராஜ்யத்தில்
ஒவ்வொரு வகையினரும் தேவை. யார் நல்ல முறையில் ஸ்ரீமத் படி
நடக்கிறார்களோ அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள், அதுவும்
கேட்கும் போது தான் அல்லவா! பாபாவிற்குத் தனது முழுக்
கணக்கையும் அனுப்ப வேண்டும், அப்போது தான் பாபா ஆலோசனை கூற
முடியும். பாபா அனைத்தையும் அறிவார் என்று கிடையாது. அவர் முழு
உலகின் முதல், இடை, கடையை அறிவார். ஒவ்வொருவரின் உள்ளத்தில்
உள்ளதை அறியமாட்டார், அவர் ஞானம் நிறைந்தவர் ஆவார். நான் முதல்,
இடை, கடையை அறிவேன் என்று பாபா கூறுகின்றார். அதனால் தான்
நீங்கள் இவ்வா றெல்லாம் வீழ்ச்சி அடைகிறீர்கள் என்று கூறுகிறேன்.
பிறகு மீண்டும் இவ்வாறு முன்னேறு கிறீர்கள். இந்தப் பாகம்
பாரதத்திற்கானது. அனைவரும் பக்தி செய்கின்றனர். யார் அதிகம்
பக்தி செய் கிறார்களோ அவர்களுக்கு முதலில் சத்கதி கிடைக்க
வேண்டும். பூஜைக்குரியவர்களாக இருந்தார்கள், பிறகு 84
பிறவிகளும் அவர்கள் எடுக்கிறார்கள். பக்தியும் அவர்கள் வரிசைக்
கிரமமாகச் செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் பிறப்புக்
கிடைத் திருக்கலாம், ஆனால் முந்தைய பிறப்பின் பாவங்கள்
இருக்கிறது அல்லவா! அது நினைவு பலத்தின் மூலம் அழிந்து விடும்.
நினைவு தான் கடினமாக இருக்கிறது. நீங்கள் நினைவில் அமர்ந்தால்
நோயற்றவர் களாக ஆகிவிடுவீர்கள் என்று உங்களுக்குப் பாபா
கூறுகின்றார். பாபாவிடமிருந்து சுகம், சாந்தி, தூய்மைக்கான
ஆஸ்தி கிடைக்கிறது. நினைவின் மூலம் நோயற்ற சரீரம் அல்லது நீண்ட
ஆயுள் கிடைக்கிறது. ஞானத்தின் மூலம் நீங்கள் திரிகாலதர்சியாக
ஆகிறீர்கள். திரிகாலதர்சி என்பதன் பொருளையும் யாரும் அறியவில்லை.
மாயா ஜாலம் செய்பவர்களும் பலர் இருக் கின்றனர். இங்கு அமர்ந்து
கொண்டு லண்டன் பார்லிமென்டை பார்த்துக் கொண்டே இருப்பர். ஆனால்
இந்த மாதிரியான மாயா ஜாலத்தினால் எந்த இலாபமும் கிடையாது.
தெய்வீக திருஷ்டியின் மூலம் காட்சியும் கிடைக்கிறது, இந்தக்
கண்களினால் அல்ல. இந்த நேரத்தில் அனைவரும் அசுத்தமாக
இருக்கின்றனர். நீங்கள் பலியாகிறீர்கள் அதாவது தந்தை
யினுடையவர்களாக ஆகிறீர்கள். பாபாவும் முழுமையாகப் பலியாகி
விட்டார், யார் அரைகுறையாகப் பலியாகிறார்களோ அவர்கள்
அரைகுறையாகத் தான் அடைவார்கள். பாபாவும் பலி ஆகிவிட்டார் அல்லவா!
எதுவெல்லாம் இருந்ததோ பலி கொடுத்து (அர்ப்பணம்) விட்டார்.
இவ்வளவு பேர் பலியாகி விட்டீர்கள்! உங்கள் அனைவருக்கும் 21
பிறவிகளுக்குப் பலன் கிடைக்கும். இதில் உயிர் தியாகத்திற்கான (தற்கொலை)
விசயம் கிடையாது. தற்கொலை செய்பவர் மிகப் பெரிய பாவிகள் என்று
கூறப்படுகின்றனர். ஆத்மா தனது சரீரத்தை தியாகம் செய்வது என்பது
நல்லது கிடையாது. மனிதர்கள் மற்றொருவரது தலையைத் துண்டித்து
விடுகின்றனர், இவர்கள் தங்களுடையதை துண்டித்துக் கொள்கின்றனர்,
அதனால் தான் தற்கொலை செய்பவர், மஹாபாவி என்று கூறப்படுகின்றனர்.
தந்தை இனிமையிலும் இனிய குழந்தைகளுக்கு எவ்வளவு நல்ல
முறையில் புரிய வைக்கின்றார். கல்ப கல்பம், கல்பத்தின்
சங்கமயுகத்தில் இந்தக் கும்பமேளாவில் வருகின்றார் என்பதை
நீங்கள் அறிவீர்கள். இவர் அதே தாய், தந்தை ஆவார். பாபா, நீங்கள்
தான் எனக்கு அனைத்துமாக இருக்கிறீர்கள் என்று கூறுகிறீர்கள்.
ஹே குழந்தைகளே! ஆத்மாக்களாகிய நீங்கள் என்னுடையவர்கள் என்று
பாபாவும் கூறுகின்றார். கல்பத்திற்கு முன்பு போன்று சிவபாபா
வந்திருக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
யார் முழு 84 பிறவிகள் எடுத்திருக்கிறீர்களோ அவர்களை
அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன். பாபா ஞானம் நிறைந்தவர், பதீத
பாவன் என்பதை உங்களது ஆத்மா அறிந்திருக்கிறது. அவர் நமக்கு
இப்போது முழு ஞானம் கொடுக்கின்றார். அவர் தான் ஞானக் கடலாக
இருக்கின்றார், இதில் சாஸ்திரத் திற்கான எந்த விசயமும் கிடையாது.
இங்குத் தேகச் சகிதமாக அனைத்தையும் மறந்து தன்னை ஆத்மா என்று
புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தந்தையினுடையவர்களாக ஆகியிருக்
கிறீர்கள் எனில் மற்ற அனைத்தையும் மறந்து விட வேண்டும். மற்ற
அனைவரிடத்திலிருந்தும் புத்தியோகத்தைத் துண்டித்து
ஒருவரிடத்தில் ஈடுபடுத்த வேண்டும். நாம் உங்களிடம் மட்டுமே
தொடர்பு வைத்துக் கொள்வோம் என்றும் பாடுகிறீர்கள். பாபா நாம்
முழுமையாகப் பலியாகி விடுவோம். நானும் உங்களிடம் பலியாகி
விடுவேன் என்று தந்தையும் கூறுகின்றார். இனிய குழந்தைகளே! முழு
உலகிற்கும் இராஜாவாக உங்களை ஆக்குகிறேன். நான் சுய நலமற்றவன்.
சுயநலமின்றிச் சேவை செய்வதாக மனிதர்கள் கூறலாம், ஆனால் அதன்
பலன் கிடைக்கும் அல்லவா! தந்தை சுயநலமின்றிச் சேவை செய்கின்றார்
என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நான் சுயநலமின்றிச் சேவை
செய்கிறோம் என்ற ஆத்மா கூறகிறது எனில் இதை எங்கிருந்து கற்றுக்
கொண்டார்கள்? சுயநலமற்ற சேவை பாபா தான் செய்கிறார் என்பதை
நீங்கள் அறிவீர்கள். வருவதோ கல்பத்தின் சங்கமத்தில். இப்போதும்
உங்கள் எதிரில் அமர்ந்திருக்கின்றார். நான் நிராகாரா
இருக்கிறேன் என்று தந்தை சுயம் கூறுகின்றார். நான் உங்களுக்கு
இந்த ஆஸ்தியை எப்படிக் கொடுப்பேன்? சிருஷ்டியின் முதல், இடை,
கடையின் ஞானம் எப்படிக் கூறுவேன்? இதில் தூண்டுதலுக்கான (பிரேரணைக்கான)
விசயம் எதுவும் கிடையாது. சிவஜெயந்தி கொண்டாடு கிறீர்கள் எனில்
அவசியம் வந்திருக்கிறேன் அல்லவா! நான் பாரதத்தில் வருகிறேன்.
பாரதத்தின் மகிமை கூறுகிறேன். பாரதம் முற்றிலும் தூய்மையாக,
மகானாக இருந்தது, இப்போது மீண்டும் ஆகிக் கொண்டிருக்கிறது.
தந்தைக்குக் குழந்தைகளின் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது!
நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஸ்ரீமத் மூலம் தனது குலத்தை முன்னேற்ற வேண்டும்.
முழுக் குலத்தையும் தூய்மையாக்க வேண்டும். தந்தைக்குத் தனது
உண்மையிலும் உண்மையான கணக்கைக் கொடுக்க வேண்டும்.
2) நினைவு பலத்தின் மூலம் தனது சரீரத்தை நோயற்றதாக ஆக்க
வேண்டும். தந்தையிடம் முழுமையிலும் முழுமையாகப் பலியாக வேண்டும்.
புத்தியோகத்தை மற்றவை களிலிருந்து நீக்கி ஒருவரிடத்தில்
ஈடுபடுத்த வேண்டும்.