14.08.22    காலை முரளி            ஓம் சாந்தி   13.02.92      பாப்தாதா,   மதுபன்


பல பிறவிகளுக்கு அன்பு நிறைந்த வாழ்க்கையை உருவாக்குவதற்கு ஆதாரம் - இந்தப் பிறவியின் பரமாத்மாவின் அன்பு

இன்று சர்வ சக்திகளின் கடலானவர் மற்றும் உண்மையான அன்பின் கடலானவர் திலாராம் பாப்தாதா தனது மிக அன்பான நெருங்கிய குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கின்றார். இந்த ஆன்மீக அன்பு நிறைந்த சந்திப்பு அல்லது அன்புத் திருவிழா விசித்திரமான சந்திப்பாகும். சத்யுக ஆரம்பத்திலிருந்து கலியுக கடைசி வரை பல சந்திப்புத் திருவிழா நடந்திருக்கிறது. ஆனால் இந்த ஆன்மீக சந்திப்புத் திருவிழா இப்பொழுது இந்த சங்கமயுகத்தில் தான் நிகழ்கிறது. இந்த சந்திப்பு ஆன்மீக சந்திப்பாகும். இந்த சந்திப்பு தில்வாலா (உள்ளத்தை கொள்ளை கொள்ளும்) தந்தை மற்றும் உண்மையான உள்ளம் உடைய குழந்தைகளின் சந்திப்பாகும். இந்த சந்திப்பு அனைத்து விதமான பல குழப்பங்களிலிருந்து தூர விலக்கக் கூடியதாகும். ஆன்மீகப் பெருமைக்கான ஸ்திதியின் அனுபவத்தை செய்விக்கக் கூடியது. இந்த சந்திப்பு எளிதாக பழைய வாழ்க்கையை மாற்றக் கூடியது. இந்த சந்திப்பு சர்வ சிரேஷ்ட பிராப்திகளின் அனுபவத்தினால் நிறைக்கக் கூடியது. இப்படிப்பட்ட விசித்திரமான, அன்பான சந்திப்பு விழாவிற்கு பத்மாபதம் பாக்கியவான் ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் வந்து சேர்ந்திருக் கிறீர்கள். இந்த பரமாத்மத் திருவிழா அனைத்து பிராப்திகளுக்கான விழாவாகும், சர்வ சம்பந்தங்களின் அனுபவத் திருவிழாவாகும், அனைத்துப் பொக்கிஷங்களையும் நிறைக்கக் கூடிய திருவிழாவாகும். சங்கமயுகத்தின் சர்வ சிரேஷ்ட அலௌகீக உலகத்திற்கான திருவிழா. எவ்வளவு பிரியமானதாக இருக்கிறது! மேலும் இந்த அனுபவங்களை அனுபவம் செய்வதற்குத் தகுதியானவர்கள் கோடியில் சிலர், சிலரிலும் சிலர், பரமாத்மாவிற்குப் பிரியமான ஆத்மாக்களாகிய நீங்கள். கோடிக்கணக்கான ஆத்மாக்கள் இந்த அனுபவத்திற்காக தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர், ஆனால் நீங்கள் சந்திப்பு செய்து கொண்டிருக்கிறீர்கள். மேலும் சதா பரமாத்ம சந்திப்பிலேயே இருக்கிறீர்கள். ஏனெனில் உங்களுக்கு தந்தை மிகவும் பிரியமானவர், தந்தைக்கு நீங்கள் மிகவும் பிரியமானவர்கள். ஆக அன்பானவர்கள் எங்கு இருப்பார்கள்? எப்பொழுதும் அன்பான சந்திப்புத் திருவிழாவில் இருப்பார்கள். ஆக சந்திப்பு விழாவில் இருக்கிறீர்களா? அல்லது தனியாக இருக்கிறீர்களா? தந்தை மற்றும் நீங்கள் கூடவே இருக்கிறீர்கள் எனில் என்ன ஆகிவிடுகிறீர்கள்? சந்திப்பு விழா ஆகிவிடுகிறது அல்லவா! நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? என்று யாராவது கேட்டால் நான் சதா பரமாத்ம சந்திப்பு விழாவில் இருக்கின்றேன் என்று உடனடியாக கூறுவீர்கள். இதைத் தான் அன்பு என்று கூறப்படுகிறது. உண்மையான அன்பு என்றால் ஒருவருக்கொருவர் உடல் அளவில் அல்லது மனதளவில் பிரிந்திருக்க மாட்டார்கள். பிரிந்திருக்க முடியாது, யாராலும் பிரிக்க முடியாது. முழு உலகிலுள்ள கோடிக் கணக்கான ஆத்மாக்கள், இயற்கை, மாயை, பிரச்சனைகள் பிரிக்க நினைத்தாலும் இந்த பரமாத்ம சந்திப்பை பிரிப்பதற்கான சக்தி யாரிடத்திலும் கிடையாது. இது தான் உண்மையான அன்பு என்று கூறப்படுகிறது. அன்பை துண்டிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவர், ஆனால் அன்பு அழியாது. இப்படிப்பட்ட உறுதியான, உண்மையான அன்புடையவர்கள் தானே?

இன்று பக்கா அன்பான நாள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா! இப்படிப்பட்ட அன்பு இப்பொழுது இந்த ஒரு பிறவியில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நேரத்திற்கான பரமாத்ம அன்பு பல பிறவிகளுக்கு அன்பு நிறைந்த வாழ்க்கையை பிராப்தியுடையதாக ஆக்கி விடுகிறது. ஆனால் பிராப்திக்கான நேரம் இப்பொழுதாகும். விதை விதைக்கும் நேரம் இப்பொழுதாகும். இந்த நேரத்திற்கு எவ்வளவு மகத்துவம் இருக்கிறது! யார் உண்மையான தில்வாலாவிற்குப் பிரியமானவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் சதா அன்பில் மூழ்கியிருப்பார்கள். இவ்வாறு அன்பில் மூழ்கி யிருப்பவர்கள் நெருக்கத்தில் வருவதற்கும், எதிர்கொள்வதற்கும் யாருக்கும் தைரியம் இருக்காது. ஏனெனில் நீங்கள் மூழ்கியிருக்கிறீர்கள், எந்த ஒருவரின் கவர்ச்சியும் உங்களை ஈர்க்க முடியாது. விஞ்ஞானத்தின் சக்தியான பூமியில் ஈர்ப்பிலிருந்து தூர அழைத்து செல்வது போன்று இந்த அன்பில் மூழ்கிய நிலையானது அனைத்து எல்லைக்குட்பட்ட கவர்ச்சிகளிலிருந்து மிகத் தொலைவில் அழைத்துச் செல்கிறது. ஒருவேளை மூழ்கிய நிலையில் இல்லையெனில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். அன்பு இருக்கிறது, ஆனால் அன்பில் மூழ்கிய நிலை இல்லை. உங்களுக்கு தந்தையின் மீது அன்பு இருக்கிறதா? என்று யாரிடத்தில் கேட்டாலும் அனைவரும் ஆம் என்று கூறுவீர்கள் தானே! ஆனால் சதா அன்பில் மூழ்கியிருக்கிறீர்களா? என்று கேட்டால் என்ன கூறுவீர்கள்? இதற்கு ஆம் என்று கூறவில்லை. வெறும் அன்பு இருக்கிறது - இதுவரை மட்டும் இருந்து விடாதீர்கள். மூழ்கி விடுங்கள். இந்த சிரேஷ்ட மூழ்கிய ஸ்திதியைத் தான் உலகத்தினர் மிகவும் உயர்ந்தது என்று நினைக்கின்றனர். நாம் ஜீவன்முக்தியில் வருவோம் என்று நீங்கள் ஒருவரிடம் கூறினால் இவர்கள் சக்கரத்தில் வரக் கூடியவர்கள், நாம் சக்கரத்திலிருந்து விடுபட்டு ஐக்கியமாகி விடுவோம் என்று நினைக்கின்றனர். ஏனெனில் ஐக்கியமாவது என்றால் பந்தனங்களிலிருந்து முக்தி ஆகிவிடுவதாகும். ஆகையால் அவர்கள் முக்தி நிலையை அதிகம் விரும்புகின்றனர். மூழ்கி விட வேண்டும், ஐக்கியமாகி விட வேண்டும். ஆனால் அவர்கள் எதை மூழ்கிய நிலை என்று கூறுகிறார்களோ, நாடகப்படி யாரும் அடைய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாப்சமான் ஆகி விட முடியும். ஆனால் பாபாவிடம் ஐக்கியமாக முடியாது. அவர்களது ஐக்கியமாகும் நிலையில் எந்த அனுபவமும் கிடையாது, எந்த பிராப்தியும் கிடையாது. ஆனால் நீங்கள் மூழ்கியிருக்கிறீர்கள், அனுபவம் மற்றும் பிராப்திகளும் இருக்கின்றன. எந்த ஒரு மூழ்கிய நிலை அல்லது ஐக்கியமாகும் நிலைக்காக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களோ அதை நாம் உயிருடன் இருந்து கொண்டே அந்த மூழ்கிய நிலையின் அனுபவம் செய்து கொண்டிருக்கின்றோம் என்று நீங்கள் சவால் விட முடியும். அன்பில் மூழ்கி விடும் பொழுது, அன்பில் ஐக்கியமாகி விடும் பொழுது வேறு நினைவு இருக்குமா? தந்தை மற்றும் நான் சமம், அன்பில் மூழ்கியிருக்கின்றேன். தந்தையைத் தவிர வேறு எதுவும் இல்லை எனும் போது இருவரும் சேர்ந்து ஒருவராக ஆகிவிடுகிறீர்கள். சமம் ஆவது என்றால் மூழ்கி விடுவது, ஒன்றாகி விடுவது. இப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறது தானே? கர்மயோக ஸ்திதியில் இவ்வாறு மூழ்கிய அனுபவம் செய்ய முடியுமா? என்ன நினைக்கிறீர்கள்? காரியமும் செய்யுங்கள் மற்றும் மூழ்கியும் இருங்கள் - இவ்வாறு இருக்க முடியுமா? காரியம் செய்வதற்காக கீழே வர வேண்டிருக்காதா? காரியங்கள் செய்தாலும் மூழ்கி இருக்க முடியுமா? அந்த அளவிற்கு புத்திசாலிகளாக ஆகிவிட்டீர்களா?

கர்மயோகி ஆகக் கூடியவர்களுக்கு காரியத்திலும் துணையாக இருக்கின்ற காரணத்தினால் அதிகப்படியான உதவிகளும் அடைய முடிகிறது. ஏனெனில் ஒன்றிலிருந்து இருவராக ஆகிவிடுகிறீர்கள், ஆக காரியம் அதிகமாகி விடுகிறது அல்லவா! ஒரு காரியத்தை ஒருவர் செய்கின்ற பொழுது மற்றொருவரும் துணையாக வந்து விட்டால் காரியம் எளிதாகி விடுமா அல்லது கடினமாக இருக்குமா? கைகள் உங்களுடையது, தந்தை தனது கை, கால்களை பயன்படுத்தமாட்டார் அல்லவா! கைகள் உங்களுடையது, ஆனால் உதவி தந்தையினுடையது எனும் போது இரண்டு வேகத்தின் மூலம் காரியம் நன்றாக ஆகிவிடும் அல்லவா! காரியம் எவ்வளவு தான் கடினமானதாக இருக்கட்டும், ஆனால் தந்தையின் உதவி சதா ஆர்வம்-உற்சாகம், தைரியம், களைப்பற்ற நிலைக்கான சக்தி கொடுக்கக் கூடியது. எந்த காரியத்தில் ஆர்வம்-உற்சாகம் அல்லது களைப்பற்ற நிலை இருக்கிறதோ, அந்த காரியம் வெற்றி அடையும் அல்லவா! ஆக தந்தை கைகளின் மூலம் காரியங்கள் செய்வது கிடையாது, ஆனால் உதவி செய்யும் இந்த காரியம் செய்கின்றார். ஆக கர்மயோகி வாழ்க்கை என்றால் இரண்டு தூண்டுதல்களுடன் காரியம் செய்யக் கூடிய வாழ்க்கை. நீங்கள் மற்றும் தந்தை, அன்பு இருக்கும் போது எந்த கடினம் அல்லது களைப்பு இருக்காது. அன்பு என்றால் அனைத்தையும் மறந்து விடுவதாகும். என்ன ஆகும்? எப்படி நடைபெறும்? சரியாக நடைபெறுமா? நடைபெறாதா? - போன்ற அனைத்தையும் மறந்து விட வேண்டும். நடந்தே விட்டது. எங்கு பரமாத்மாவின் தைரியம் இருக்கிறதோ, எந்த ஆத்மாவின் தைரியமும் கிடையாது. ஆக எங்கு பரமாத்மாவின் தைரியம் இருக்கிறதோ, உதவி இருக்கிறதோ, அங்கு நிமித்தமாக இருக்கும் ஆத்மாவிடம் தைரியம் வந்து விடுகிறது. இவ்வாறு துணையின் அனுபவம் செய்யும், உதவியின் அனுபவம் செய்பவரின் சங்கல்பம் சதா என்னவாக இருக்கும் - எதுவும் புதிதல்ல, வெற்றி கிடைத்து விட்டது, வெற்றி உறுதி. இது தான் உண்மையான அன்பின் அனுபவம். நான் எங்கு இருந்தாலும் அங்கு நீ தான் என்று எல்லைக்குட்பட்ட நாயகி இந்த அனுபவம் செய்கின்றனர். அவர் சர்வசக்திவான் கிடையாது. ஆனால் தந்தை சர்வசக்திவான் ஆவார். சாகார சரீரதாரி அல்ல. ஆனால் எப்பொழுது வேண்டுமோ, எங்கு வேண்டுமோ விநாடியில் வந்து சேர்ந்து விடுவார். கர்மயோகி வாழ்க்கையில் அன்பில் மூழ்கிய நிலை ஏற்படாது என்று நினைக்காதீர்கள். ஏற்படும். துணையின் அனுபவம் என்றால் அன்பிற்கான நடைமுறை நிரூபனம் துணை ஆகும். ஆக சகஜயோகி சதா காலத்திற்கும் யோகி ஆகிவிட்டார் அல்லவா! காதலர்கள் என்றால் சதா சகஜயோகி. ஆகையால் கட்டளையும் கொடுத்திருக்கின்றார் அல்லவா - இந்த தபஸ்யா ஆண்டில் பரிசு அடைவதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஆனால் சமாப்தி ஆகாமல் இருக்கிறது. இந்த பயிற்சிக்காகத் தான் சேவையை இலேசாக ஆக்கப்பட்டிருக்கிறது, மேலும் தபஸ்யாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தபஸ்யா ஆண்டு முடிவடைந்த பின்பு பரிசு அடைய வேண்டும், ஆனால் வரும் நாட்களில் காரியம் மற்றும் யோகா, சேவை மற்றும் யோகா, சமநிலைக்கான ஸ்திதியைப் பற்றி என்னவெல்லாம் கூறியிருக்கின்றேனோ - சமநிலை என்றாலே சமம் ஆவதாகும். நினைவு, தபஸ்யா மற்றும் சேவை - இது சமமாக இருக்க வேண்டும். சக்தி மற்றும் அன்பு சமமாக இருக்க வேண்டும். அன்பு மற்றும் விடுபட்ட நிலையில் சமமாக இருக்க வேண்டும். காரியம் செய்தாலும் காரியத்திலிருந்து விடுபட்டு தனியாக அமரும் ஸ்திதியில் சமமாக இருக்க வேண்டும். யார் இந்த சமமான நிலைக்கான கலையில் வெற்றி அடைகிறார்களோ அவர்கள் மகான் ஆவர். இரண்டுமே செய்ய முடியுமா? அல்லது சேவை ஆரம்பித்ததும் மேலிருந்து கீழே வந்து விடுவார்களா? இந்த ஆண்டில் பக்கா ஆகிவிட்டீர்கள் தானே! இப்பொழுது சமமாக இருக்க முடியுமா? முடியாதா? சேவையில் சண்டை, சச்சரவுகள் ஏற்படுகிறது. இதிலும் தேர்ச்சி பெற வேண்டும் அல்லவா! முன்பே கூறியிருக்கின்றேன் - காரியங்கள் செய்தாலும் கர்மயோகியாக இருந்தாலும் அன்பில் மூழ்க முடியும். பிறகு வெற்றியாளர்களாக ஆகிவிடுவீர்கள் அல்லவா! யார் சமநிலையுடன் இருந்து வெற்றி அடைகிறார்களோ அவர்களுக்குத் தான் பரிசு கிடைக்கும்.

இன்று விசேஷமாக அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய சொர்கம் இவ்வாறு இருக்குமா? குழந்தைகள் கொண்டாடுவதையே பாப்தாதா தனது கொண்டாட்டமாக நினைக்கின்றார். நீங்கள் சொர்கத்தில் கொண்டாடுவீர்கள், தந்தை இந்த கொண்டாடத்திலேயே கொண்டாடுகின்றார். நன்றாக கொண்டாடுங்கள், ஆடுங்கள், ஊஞ்சல் ஆடுங்கள், சதா குஷியுடன் கொண்டாடுங்கள். முயற்சிக்கான பலன் அவசியம் கிடைக்கும். இங்கு சகஜ முயற்சியாளர்களாக இருக்கிறீர்கள், பிறகு அங்கு சகஜ பிராப்தியாளர்களாக இருப்பீர்கள். ஆனால் வைரத் திலிருந்து தங்கமாக மாறி விடுவீர்கள். இப்பொழுது வைரமாக இருக்கிறீர்கள். முழு சங்கமயுகமே உங்களுக்கு விசேஷமாக தந்தை மற்றும் குழந்தை அல்லது துணைவனாக ஆவதற்கான அன்பான நாள் ஆகும். இன்றும் மட்டுமே அன்பான நாளா? அல்லது சதா அன்பான நாளா? எல்லையற்ற நாடகத்தின் விளையாட்டில் இதுவும் சிறிய சிறிய விளையாட்டாகும். ஆக இந்த அளவிற்கு சொர்கத்தை அலங்கரித்திருக்கிறீர்கள், அதற்கான வாழ்த்துக் கள். இந்த அலங்காரம் தந்தைக்கு அலங்காரமாக தென்படவில்லை. ஆனால் அனைவரின் உள்ளத்தின் அன்பாக தென்படுகிறது. உங்களது உண்மையான அன்பிற்கு முன் இந்த அலங்காரம் ஒன்றுமில்லை. பாப்தாதா அன்பை பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒருவருக்கு அழைப்பு கொடுக்கிறீர்கள் எனில் அழைப்பை ஏற்று வருபவர் பேசமாட்டார், அழைப்பு கொடுத்தவர் பேசுவார். குழந்தைகளின் அன்பு அந்த அளவிற்கு இருக்கிறது தந்தையைத் தவிர வேறு எதையும் நினைப்பது கிடையாது. ஆகையால் உள்ளப்பூர்வமான அன்பை வெளிப்படுத்துவதற்காக இன்று இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருக் கிறது. நல்லது.

சதா அன்பில் மூழ்கியிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கு, அன்பில் சதா துணையின் அனுபவம் செய்யக் கூடிய ஆத்மாக்களுக்கு, சதா ஒரு பாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்ற சமீபமான ஆத்மாக்களுக்கு, சங்கமயுகத்தின் சிரேஷ்ட பிராப்தி சொர்க்கத்திற்கு அதிகாரி ஆத்மாக்களுக்கு, சதா கர்மயோகி வாழ்க்கையின் சிரேஷ்ட கலையை அனுபவம் செய்யும் விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா அனைத்து எல்லைக்குட்பட்ட கவர்ச்சி களிலிருந்து விடுபட்டு அன்பில் மூழ்கிய ஆத்மாக்களுக்கு தந்தையின் சர்வ சம்பந்தங்களினால் அன்பு நிறைந்த அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

மகாரதி தாதிகள் மற்றும் முக்கிய சகோதரர்களிடம்: யார் நிமித்தமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு சதா எளிதாக நினைவு இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கூட நிமித்த ஆத்மாக்களின் விசேஷ அன்பு இருக்கிறது அல்லவா! ஆகையால் நீங்கள் அனைவரும் மூழ்கியிருக்கிறீர்கள். நிமித்த ஆத்மாக்களுக்கு நாடகத்தில் பாகம் பதிவாகி இருக்கிறது. சக்திகளும் நிமித்தமாக இருக்கிறீர்கள், பாண்டவர்களும் நிமித்தமாக இருக்கிறீர்கள். நாடகம் சக்திகளை மற்றும் பாண்டவர்களை நிமித்தமாக ஆக்கியிருக்கிறது. ஆக நிமித்தம் ஆவதற்கான விசேஷ பரிசு கிடைத்திருக்கிறது. நிமித்தம் என்ற பாகம் சதா விடுபட்டவர்களாக மற்றும் அன்பானவர்களாக ஆக்குகிறது. நிமித்த உணர்விற்கான பயிற்சி இயற்கையாக மற்றும் எளிதாக இருந்தால் அவர்களது ஒவ்வொரு அடியிலும் சதா சுய முன்னேற்றம் மற்றும் அனைவரது முன்னேற்றம் கலந்திருக்கும். அந்த ஆத்மாக்களது அடி பூமியில் இருக்காது, ஆனால் மேடையில் இருக்கும். நாலாபுறங்களிலும் உள்ள ஆத்மாக்கள் இயற்கையாகவே மேடையை பார்ப்பார்கள். எல்லையற்ற உலகம் மேடையாகும், மேலும் எளிய முயற்சியும் சிரேஷ்ட மேடையாகும். இரண்டு மேடையும் உயர்ந்தது. நிமித்த ஆத்மாக்களிடம் சதா இந்த நினைவு சொரூபம் இருக்கிறது - உலகிற்கு முன் பாப்சமான் நிலைக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றேன். நிமித்த ஆத்மாக்கள் இவ்வாறு இருக்கிறீர்கள் தானே? ஸ்தாபனைக்கான ஆரம்பத்திலிருந்து இன்று வரை நிமித்தமாக இருக்கிறீர்கள் மற்றும் சதா இருப்பீர்கள். இப்படித் தானே! இதுவும் அதிகப்படியான அதிர்ஷ்டம் ஆகும். மேலும் இந்த அதிர்ஷ்டம் உள்ளப்பூர்வமான அன்பை அதிகப்படுத்துகிறது. நல்லது, நிமித்தமாக ஆகி திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக் கிறீர்கள். பாப்தாதாவிடம் வந்து சேர்கிறது. நடைமுறையில் சக்திசாலி ஆகி மற்றவர்களிடத்திலும் சக்தி நிறைத்து பிரத்யட்சத்தை நெருக்கத்தில் கொண்டு வாருங்கள். இப்பொழுது அதிகப்படியான ஆத்மாக்கள் இந்த உலகைப் பார்த்து பார்த்து களைப்படைந்து விட்டார்கள். புதுமையை விரும்புகிறார்கள். புதுமையின் அனுபவத்தை இப்பொழுது செய்விக்க முடியும். என்ன செய்தீர்களோ மிக நன்றாக செய்தீர்கள். நடைமுறையிலும் மிக நன்றாகவே நடைபெறும். உள்நாட்டில்-வெளிநாட்டில் நன்றாக திட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். பிரம்மா பாபாவை வெளிப்படுத்துகிறீர்கள் என்றால் பாப்தாதாவையும் கூடவே வெளிப்படுத்துகிறீர்கள். ஏனெனில் தந்தை தான் அவரை பிரம்மாவாக ஆக்கியிருக்கின்றார். ஆக தந்தையிடம் தாதாவும், தாதாவிடம் தந்தையும் கலந்திருக்கின்றனர். இவ்வாறு பிரம்மாவை பின்பற்றுவது என்றால் அன்பில் மூழ்கிய ஆத்மாவாக ஆவதாகும். இவ்வாறு இருக்கிறீர்கள் தானே! நல்லது.

குழுக்களுடன் சந்திப்பு: அனைவரின் உள்ளத்தின் விசயங்கள் திலாராம் தந்தையிடம் மிக வேகமாக வந்து சேர்ந்து விடுகிறது. நீங்கள் சங்கல்பம் செய்கிறீர்கள், பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து விடுகிறது. பாப்தாதாவும் அனைவரது அவரவரது விதிபூர்வ சங்கல்பம், சேவை மற்றும் ஸ்திதி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அனைவரும் முயற்சியாளர்களாக இருக்கிறீர்கள். அனைவரிடத்தில் ஆர்வமும் இருக்கிறது, ஆனால் பலவகையாக அவசியம் இருக்கிறீர்கள். அனைவரின் இலட்சியமும் சிரேஷ்டமாக இருக்கிறது. சிரேஷ்ட இலட்சியத்தின் காரணத்தினால் தான் ஒவ்வொரு அடியிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். சிலர் தீவிர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள், சிலர் சாதாரண வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். முன்னேற்றம் ஏற்பட்டால் வரிசைக்கிரமமாக இருக்கிறது. அனைவரிடத்தில் தபஸ்யாவின் ஆர்வம்-உற்சாகமும் இருக்கிறது. ஆனால் நிரந்தரம் மற்றும் எளிது என்பதில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. அனைத்தையும் விட எளிய மற்றும் நிரந்தரமான நினைவிற்கான சாதனம் - சதா தந்தையின் துணையின் அனுபவம் இருக்க வேண்டும். துணையின் அனுபவம் நினைவிற்கான முயற்சியிலிருந்து விடுவித்து விடுகிறது. துணையாக இருக்கும் போது நினைவு இருக்கும் அல்லவா! துணையாக இருக்கின்றார் எனில் கூட அமர்ந்திருக்கின்றார் என்று பொருள் அல்ல. துணை என்றால் உதவியாளர். கூட இருப்பவர் தனது காரியத்தில் பிசியாக இருப்பதால் மறந்து விடவும் முடியும், ஆனால் துணையாக இருப்பவர் மறக்க மாட்டார். எனவே ஒவ்வொரு காரியத்திலும் தந்தை கூடவே துணையாக இருக்க வேண்டும். துணை கொடுப்பவர் ஒருபோதும் மறக்கமாட்டார். துணையாக இருக்கின்றார், கூடவே இருக்கின்றார் மற்றும் காரியத்தை எளிதாக ஆக்கக் கூடியவராகவும் இருக்கின்றார். அப்படிப்பட்டவரை எப்படி மறக்க முடியும்! சாதாரண ரூபத்திலும் ஒருவர் காரியத்திற்கு உதவி செய்கின்றார் எனில் அவரை அடிக்கடி மனதார நன்றி கூறுவர். தந்தை துணையாக இருந்து கடினமானதை எளிதாக ஆக்கக் கூடியவர். இப்படிப்பட்ட துணையை எப்படி மறக்க முடியும்? நல்லது.

வரதானம்:
நினைவின் மகத்துவத்தை அறிந்து தனது ஸ்திதியை சிரேஷ்டமாக ஆக்கக் கூடிய அழிவற்ற திலகதாரி ஆகுக.

பக்தி மார்க்கத்தில் திலகத்திற்கு அதிக மகத்துவம் இருக்கிறது. இராஜ்யம் கொடுக்கும் போது திலகம் அணிவிப்பர், சுமங்கலி மற்றும் பாக்கியத்தின் அடையாளம் திலகமாகும். ஞான மார்க்கத்தில் நினைவு என்ற திலகத்திற்கு அதிக மகத்துவம் இருக்கிறது. நினைவு எப்படியோ அப்படி ஸ்திதி இருக்கும். நினைவு சிரேஷ்டமாக இருந்தால் ஸ்திதியும் சிரேஷ்டமாக இருக்கும். ஆகையால் பாப்தாதா குழந்தைகளுக்கு மூன்று நினைவுகளின் திலகம் கொடுத்திருக்கின்றார். சுயத்தின் நினைவு, தந்தையின் நினைவு மற்றும் சிரேஷ்ட காரியத்திற்காக நாடகத்தின் நினைவு - அமிர்தவேளையில் இந்த மூன்று நினைவுகளின் திலகம் அணிந்து கொள்ளும் அழிவற்ற திலகதாரி குழந்தைகளின் ஸ்திதி சதா சிரேஷ்டமாக இருக்கும்.

சுலோகன்:
சதா நல்லதையே நினைத்துக் கொண்டிருந்தால் அனைத்தும் நல்லதாக ஆகிவிடும்.