14.10.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சங்கமயுகத்தில் தான் நீங்கள் ஆத்ம-அபிமானியாக ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது சத்யுகத்திலோ அல்லது கலியுகத்திலோ இந்த முயற்சி நடப்பதில்லை.

 

கேள்வி:

ஸ்ரீ கிருஷ்ணருடைய பெயர் அவருடைய தாய் தந்தையரை விட அதிகம் புகழ்பெற்றதாக இருக்கிறது, ஏன்?

 

பதில்:

ஏனென்றால் ஸ்ரீகிருஷ்ணருக்கு முன் யாருடைய பிறப்பானாலும் அது யோக பலத்தின் மூலம் நடப்பதில்லை. கிருஷ்ணருடைய தாய் தந்தையர் ஒன்றும் யோக பலத்தின் மூலம் பிறவி எடுக்கவில்லை. 2. முழுமையாக கர்மாதீத் நிலையை அடைபவர்கள் ராதை- கிருஷ்ணர் மட்டுமே, அவர்கள் தான் சத்கதியை அடைகிறார்கள். எப்போது அனைத்து பாவாத்மாக்களின் இவ்வுலக வாழ்வு முடிந்து விடுகின்றனவோ அப்போது தான் தூய்மை யான புதிய உலகத்தில் ஸ்ரீகிருஷ்ணருடைய பிறவி நடக்கிறது, அதைத் தான் வைகுண்டம் என்று சொல்லப்படுகிறது. 3. சங்கமயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மா, அனைவரிலும் அதிக முயற்சி செய்துள்ளது, ஆகையினால் அவருடைய பெயர் புகழ்பெற்றுள்ளது.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கின்றார். 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை மட்டுமே வந்து குழந்தைகளுக்குப் படிப்பிக்கின்றார், வந்து தூய்மையற்ற எங்களை தூய்மை யாக்குங்கள் என்றும் அழைக்கிறார்கள். எனவே இது தூய்மையற்ற உலகம் என்பது நிரூபணம் ஆகிறது. புதிய உலகம் தூய்மையான உலகமாக இருந்தது. புதிய கட்டடம் அழகாக இருக்கிறது. பழையது உடைந்து விடுகிறது. மழையில் விழுந்து விடுகிறது. இப்போது பாபா புதிய உலகத்தை உருவாக்க வந்திருக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது படிப்பித்துக் கொண்டிருக்கின்றார். மீண்டும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கற்பிப்பார். இப்படி ஒருபோதும் எந்த சாதுவோ சன்னியாசி போன்றவர்களோ தங்களுடைய சீடர்களுக்குப் கற்பிக்க மாட்டார்கள். அவர்களுக்கு இது தெரியவே தெரியாது. விளையாட்டைப் பற்றியும் தெரியாது ஏனென்றால் துறவற மார்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பாபாவைத் தவிர யாருமே சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் இரகசியத்தைப் புரிய வைக்க முடியாது. ஆத்ம-அபிமானியாக ஆவதில் தான் குழந்தைகளுக்கு உழைப்பு தேவைப்படுகிறது, ஏனென்றால் அரைக்கல்பமாக நீங்கள் ஒருபோதும் ஆத்ம-அபிமானியாக ஆக வில்லை. இப்போது பாபா கூறுகின்றார், தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். ஆத்மா தான் பரமாத்மா என்பது கிடையாது. அப்படி இல்லை. தங்களை ஆத்மா என்று புரிந்து பரமபிதா பரமாத்மா சிவனை நினைவு செய்ய வேண்டும். நினைவு யாத்திரை முக்கியமானதாகும், அதன்மூலம் தான் நீங்கள் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆகின்றீர்கள். இதில் ஸ்தூலமான விசயம் எதுவும் இல்லை. மூக்கு, காது போன்ற எதையும் மூடிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. முக்கியமான விசயம் - தன்னை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் அரைக்கல்பமாக தேக-அபிமானத்தில் இருந்ததால் மறந்து விட்டீர்கள். முதலில் தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டால் தான் பாபாவை நினைவு செய்ய முடியும். பக்தி மார்க்கத்தில் கூட பாபா-பாபா என்று சொல்லி வருகிறார்கள். சத்யுகத்தில் ஒரு லௌகீக தந்தை தான் இருப்பார் என்பதையும் குழந்தைகள் தெரிந்துள்ளார் கள். அங்கே பரலௌகீக தந்தையை நினைவு செய்வதில்லை ஏனென்றால் சுகம் இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் இரண்டு தந்தைகளாகி விடுகிறார்கள். லௌகீகம் மற்றும் அலௌகீகம். துக்கத்தில் அனைவரும் பரலௌகீக தந்தையை நினைவு செய்கிறார்கள். சத்யுகத்தில் பக்தி நடப்பதில்லை. அங்கே ஞானத்தின் பலனே இருக்கிறது. ஞானம் இருக்கிறது என்பது கிடையாது. இந்த சமயத்தினுடைய ஞானத்தின் பலன் அங்கே கிடைக்கிறது. பாபா ஒருமுறை தான் வருகின்றார். அரைக்கல்பம் எல்லையற்ற தந்தையின், சுகத்தின் ஆஸ்தி இருக்கிறது. பிறகு லௌகீக தந்தையிடமிருந்து அரைக்கல்பம் ஆஸ்தி கிடைக்கிறது. இதை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது. இது புதிய விசயமாகும், 5 ஆயிரம் ஆண்டுகளில் சங்கமயுகத்தில் ஒரு முறை தான் பாபா வருகின்றார். எப்போது கலியுகத்தின் கடைசி, சத்யுக ஆரம்பத்தின் சங்கமம் நடக்கிறதோ அப்போது தான் பாபா புதிய உலகத்தை மீண்டும் ஸ்தாபனை செய்ய வருகின்றார். புதிய உலகத்தில் இந்த லஷ்மி- நாராயணனுடைய இராஜ்யம் இருந்தது பிறகு திரேதாயுகத்தில் இராம இராஜ்யம் இருந்தது. மற்றபடி தேவதை களுடைய இவ்வளவு சித்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதே அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் பொருட் களாகும். இவையனைத்தையும் மறந்து விடுங்கள் என்று பாபா கூறுகின்றார். இப்போது தங்களுடைய வீட்டையும் புதிய உலகத்தையும் நினைவு செய்யுங்கள்.

 

ஞான மார்க்கம் தன்னை அறிந்து கொள்ளும் மார்க்கமாகும், இதன்மூலம் நீங்கள் 21 பிறவிகள் புத்திசாலிகளாக ஆகி விடுகிறீர்கள். எந்த துக்கமும் இருப்பதில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும் என்று யாரும் சத்யுகத்தில் கேட்க மாட்டார்கள். யாசிப்பதை விட இறப்பதே மேல் என்று சொல்லப்படுகிறது அல்லவா. தேவதைகளுக்கு பகவானிடமிருந்து எந்த பொருளும் கேட்பதற்கான அவசியமே இல்லாத அளவிற்கு பாபா உங்களை செல்வந்தர் களாக்கி விடுகிறார். இங்கே ஆசிர்வாதத்தை கேட்கிறார்கள் அல்லவா. போப் போன்றவர்கள் வருகிறார்கள் என்றால் எவ்வளவு பேர் ஆசிர்வாதம் பெறுவதற்கு செல்கிறார்கள். போப் எவ்வளவு பேருக்கு திருமணம் செய்து வைக்கிறார். பாபா இந்த வேலையை செய்வதில்லை. பக்திமார்க்கத்தில் எது கடந்து விட்டதோ அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அது மீண்டும் நடக்கும். நாளுக்கு- நாள் பாரதம் எவ்வளவு தாழ்ந்து கொண்டே செல்கிறது. இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். மற்றவர்கள் அனைவரும் கலியுக மனிதர்களாக இருக்கிறார்கள். இங்கே வராதவரை இப்போது சங்கமயுகமா அல்லது கலியுகமா என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஒரே வீட்டில் குழந்தைகள் சங்மயுகத்தில் இருக்கிறோம் என்று புரிந்து கொள்கிறார்கள், நாம் கலியுகத்தில் இருக்கிறோம் என்றால் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகிறது என்று தந்தை சொல்வார். உணவு பழக்கம் போன்ற வற்றிலும் தொந்தரவு உண்டாகிறது. நீங்கள் தூய்மையான உணவை உண்ணக் கூடிய சங்கமயுகத்தவர்களாவீர்கள். தேவதைகள் வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுகிறார்களா என்ன? இந்த தேவதைகளை நிர்விகாரிகள் என்று சொல்லப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் அனைவரும் தமோபிரதானமாகி விட்டார்கள். சதோபிரதானமாக ஆகுங்கள் என்று இப்போது பாபா கூறுகின்றார். ஆத்மா முதலில் சதோபிரதானமாக இருந்தது பிறகு தமோபிர தானமாக ஆகியது என்று புரிந்து கொள்பவர்கள் யாருமே இல்லை ஏனென்றால் அவர்கள் ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று புரிந்துள்ளார்கள். ஆத்மா தான் பரமாத்மாவாகிறது என்றெல்லாம் சொல்லி விடுகிறார்கள்.

 

நான் தான் ஞானக்கடலாக இருக்கின்றேன், யார் இந்த தேவி-தேவதா தர்மத்தவர் களாக இருப்பார்களோ அவர்கள் அனைவரும் மீண்டும் வந்து தங்களுடைய ஆஸ்தியை எடுப்பார்கள் என்று பாபா கூறுகின்றார். இப்போது நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் அந்தளவிற்கு உயர்ந்த பதவியை அடைவதற்கு தகுதியானவர்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். வீட்டிற்குச் சென்று திருமணம் போன்றவற்றை செய்து தூய்மையற்றவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே உயர்ந்த பதவியை அடைய முடியாது என்று புரிய வைக்கப்படுகிறது. இராஜ்யமானது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நான் உங்களை ராஜாவுக் கெல்லாம் ராஜாவாக ஆக்குகின்றேன் என்றால் கண்டிப்பாக பிரஜைகளை உருவாக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார். இல்லை யென்றால் இராஜ்யத்தை எப்படி அடைவீர்கள். இது கீதையின் வார்த்தைகள் அல்லவா - இதைத் தான் கீதையின் யுகம் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக் கிறீர்கள் - ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின் அடித்தளம் இடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துள்ளீர்கள். சூரியவம்ச-சந்திரவம்ச இரண்டு இராஜ்யங் களும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. பிராமணகுலம் ஸ்தாபனை ஆகிவிட்டது. பிராமணர்கள் தான் பிறகு சூரியவம்ச-சந்திரவம்சத்தவர்களாக ஆகின்றார்கள். யார் நல்ல விதத்தில் முயற்சிப்பார்களோ அவர்கள் சூரியவம்சத்தவர்களாக ஆவார்கள். மற்ற தர்மத்தவர்கள் யார் வருகிறார்களோ, அவர்கள் வருவதே தங்களுடைய தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்கே ஆகும். பின்னால் அந்த தர்மத்தின் ஆத்மாக்கள் வந்து கொண்டிருக்கின்றன, தர்மத்தின் வளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. யாராவது கிறிஸ்துவர்கள் இருக்கின்றனர் என்றால் அவர்களுடைய விதை கிறிஸ்து ஆவார். உங்களுடைய விதை யார்? பாபா, ஏனென்றால் பாபா தான் வந்து பிரம்மாவின் மூலம் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். பிரம்மாவைத் தான் பிரஜாபிதா என்று சொல்லப்படுகிறது. படைப்பவர் என்று சொல்ல முடியாது. இவரின் மூலம் குழந்தைகள் தத்தெடுக்கப் படுகிறார்கள். பிரம்மாவையும் கூட (தந்தை தான்) படைக்கிறார் அல்லவா. பாபா வந்து பிரவேசித்து இவரை படைக்கின்றார். நீ என்னுடைய குழந்தை என்று சிவபாபா கூறுகின்றார். நீங்கள் என்னுடைய பௌதீக குழந்தைகள் என்று பிரம்மாவும் (நம்மை) கூறுகின்றார். இப்போது நீங்கள் கருப்பாக தூய்மை யற்றவர்களாக ஆகி விட்டீர்கள். இப்போது பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள்.இந்த சங்கம யுகத்தில் தான் நீங்கள் புருஷோத்தம தேவி-தேவதைகளாக ஆவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். தேவதைகளுக்கோ சூத்திரர்களுக்கோ எந்த முயற்சியும் செய்ய வேண்டிய தில்லை, பிராமணர்களாகிய நீங்கள் தான் தேவதைகளாக ஆவதற்கு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. பாபா சங்கமயுகத்தில் தான் வருகின்றார். இது மிகவும் சிறிய யுகமாகும் ஆகையினால் இதனை லீப் யுகம் என்று சொல்லப்படுகிறது. இதை யாரும் தெரிந்திருக்க வில்லை. பாபாவும் கூட முயற்சி செய்ய வேண்டியுள்ளது. உடனே புதிய உலகம் உருவாகி விடுகிறது என்பது கிடையாது. நீங்கள் தேவதைகளாக ஆவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. யார் நல்ல கர்மம் செய்கிறார்களோ அவர்கள் நல்ல குலத்தில் பிறவி எடுக்கிறார்கள். இப்போது நீங்கள் வரிசைக்கிரமமான முயற்சியின்படி தூய்மையாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். ஆத்மா தான் தூய்மையாகின்றது. இப்போது உங்களுடைய ஆத்மா நல்ல கர்மத்தை கற்றுக் கொண்டிருக்கிறது. ஆத்மா தான் நல்ல மற்றும் கெட்ட சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கிறது. இப்போது நீங்கள் மலர்களாக ஆகி நல்ல வீட்டில் பிறவி எடுத்துக் கொண்டே இருப்பீர்கள். இங்கே யாராவது நல்ல முயற்சி செய்கிறார்கள் என்றால் கண்டிப்பாக நல்ல குலத்தில் பிறவி எடுப்பார்கள். வரிசைக்கிரமம் என்பது இருக்கிறது அல்லவா. எப்படி-எப்படி கர்மம் செய்கிறார்களோ, அப்படி பிறவி எடுக்கிறார்கள். எப்போது தீய கர்மம் செய்யக் கூடியவர்கள் முற்றிலும் முடிந்து விடுகிறார்களோ அதற்கு பிறகு சொர்க்கம் ஸ்தாபனை ஆகி விடுகிறது, தேர்ந்தெடுக்கப்பட்டவர் இருப்பார்கள், எதுவெல்லாம் தமோபிரதானமாக இருக்கிறதோ அவை அழிந்து விடுகிறது. பிறகு புதிய தேவதைகள் வருவது ஆரம்பமாகிறது. எப்போது கீழானவைகள் அனைத்தும் அழிந்து விடுகிறதோ அப்போது கிருஷ்ணருடைய பிறப்பு நடக்கிறது, அதுவரை மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. தூய்மையற்றவர்கள் யாரும் எப்போது இருக்க மாட்டார்களோ, அப்போது கிருஷ்ணர் வருவார், அதுவரை நீங்கள் வந்து சென்று கொண்டிருப்பீர்கள். கிருஷ்ணர் வரவேற்கக் கூடிய தாய் தந்தையர்கள் கூட முன்பே வேண்டும் அல்லவா. பிறகு அனைவரும் நல்ல - நல்லவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் அனைவரும் சென்று விடுவார்கள், அப்போது தான் அதனை சொர்க்கம் என்று சொல்லப்படும். நீங்கள் கிருஷ்ணரை வரவேற்பவர்களாக இருப்பீர்கள். உங்களுடைய பிறவி தூய்மையற்றதாக இருக்கலாம், ஏனென்றால் இராவண இராஜ்யம் அல்லவா. சுத்தமான பிறவியாக இருக்க முடியாது. முதல் - முதலில் தூய்மையான பிறவி கிருஷ்ணருடையதே ஆகும். அதற்கு பிறகு புதிய உலகம் வைகுண்டம் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணர் முற்றிலும் தூய்மையான புதிய உலகத்தில் வருவார். இராவண சம்பிரதாயம் முற்றிலும் அழிந்து விடும். கிருஷ்ணருடைய பெயர் அவருடைய தாய்-தந்தையரை விட புகழ் பெற்ற தாக இருக்கிறது. கிருஷ்ணருடைய தாய்-தந்தையருடைய பெயர் அந்தளவிற்கு புகழ் பெற்றது இல்லை. கிருஷ்ணருக்கு முன்னால் யாருடைய பிறப்பு நடக்கிறதோ அவர்களுடையது யோக பலத்தின் மூலம் நடந்தது என்று சொல்ல முடியாது. கிருஷ்ணருடைய தாய்-தந்தை யோக பலத்தின் மூலம் பிறந்தார்கள் என்பது கிடையாது. ஒருவேளை அப்படி இருந்திருந்தால் அவர்களுடைய பெயரும் புகழ் பெற்றிருக்கும். எனவே அவருடைய தாய்-தந்தை கிருஷ்ணர் எந்தளவிற்கு முயற்சி செய்தாரோ அந்தளவிற்கு செய்யவில்லை என்பது நிரூபணமாகிறது. இவையனைத்து விசயங்களும் இன்னும் போகப்போக நீங்கள் புரிந்து கொள்வீர்கள். முழுமையாக கர்மாதீத் நிலையை அடைந்தவர்கள் ராதா-கிருஷ்ணனே ஆவர். அவர்கள் தான் சத்கதியில் வருகிறார்கள். பாவ ஆத்மாக்கள் அனைத்தும் முடிந்து விடுகிறது அதன் பிறகு தான் அவர்களுடைய பிறப்பு நடக்கிறது பிறகு தூய்மையான உலகம் என்று சொல்லப் படுகிறது, ஆகையினால் கிருஷ்ணருடைய பெயர் புகழ் பெற்றுள்ளது. அவருடைய தாய்- தந்தையருக்கு அந்தளவிற்கு பெயர் இல்லை. இன்னும் போகப்போக உங்களுக்கு நிறைய காட்சிகள் ஏற்படும். இன்னும் கால அவகாசம் இருக்கிறது. நாம் இப்படி ஆவதற்காக படித்துக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்கலாம். உலகத்தில் லஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நமக்காக புதிய உலகம் வேண்டும். இப்போது உங்களை தெய்வீக சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள் பிராமண சம்பிரதாயத்தவர்களாவீர்கள். தேவதைகளாக ஆகக் கூடியவர்கள். தெய்வீக சம்பிரதாயத்தவர்களாக ஆகி விட்டீர்கள் என்றால் பிறகு உங்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையாகி விடும். இப்போது நீங்கள் சங்கமயுகத்தவர்கள் புருஷோத்தமர்களாக ஆகக்கூடியவர்களாவீர்கள். இவையனைத்தும் முயற்சியின் விஷயங்களாகும். நினைவின் மூலம் விகர்மங்களை வென்றவர்களாக ஆக வேண்டும். நினைவு அடிக்கடி மறந்து விடுகிறது என்று நீங்களே கூறுகின்றீர்கள். பாபா பிக்னிக்கில் அமருகிறார் என்றால் கூட பாபாவிற்கு நினைவு இருக்கிறது. நாம் நினைவில் இல்லை என்றால் பாபா என்ன சொல்வார் ஆகையினால் பாபா கூறுகின்றார், நீங்கள் நினைவில் இருந்து பிக்னிக் செய்யுங்கள். கர்மம் செய்து கொண்டிருக்கும் போதே பிரியதர்ஷனை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகும், இதில் தான் உழைப்பு இருக்கிறது. நினைவின் மூலம் ஆத்மா தூய்மையாக ஆகும், அழிவற்ற ஞானச்செல்வம் கூட சேமிப்பாகும். பிறகு ஒருவேளை தூய்மை யற்றவர் களாக ஆகி விட்டால் ஞானம் முழுவதும் இல்லாமல் ஆகி அழிந்துவிடுகிறது. தூய்மை தான் முக்கியமாகும். பாபா நல்ல - நல்ல விசயங்களைத் தான் புரிய வைக்கின்றார். இந்த சிருஷ்டியின் முதல்-இடை- கடைசியின் ஞானம் வேறு யாரிடத்திலும் இல்லை. இருக்கின்ற மற்ற சத்சங்கங்கள் போன்ற அவையனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையதாகும்.

 

உண்மையில் குடும்ப மார்க்கத்திலுள்ளவர்கள் தான் பக்தி செய்ய வேண்டும் என்று பாபா புரிய வைத்திருக் கிறார். உங்களிடத்தில் எவ்வளவு சக்தி இருக்கிறது. வீட்டில் இருந்து கொண்டிருக்கும்போதே சுகம் கிடைத்து விடுகிறது. சர்வசக்திவான் தந்தையிடமிருந்து நீங்கள் அவ்வளவு சக்தியை எடுக்கின்றீர்கள். சன்னியாசிகளிடத்தில் முதலில் சக்தி இருந்தது, காட்டில் வசித்தார்கள். இப்போது எவ்வளவு பெரிய-பெரிய அடுக்குமாடி கட்டடம் கட்டி அதில் இருக்கிறார்கள். இப்போது அந்த சக்தி இல்லை. உங்களிடத்தில் கூட முதலில் சுகத்தின் சக்தி இருக்கிறது. பிறகு மறைந்து விடுகிறது, அதுபோலாகும். அவர்களிடத்தில் கூட முதலில் அமைதியின் சக்தி இருந்தது இப்போது அந்த சக்தி இருக்கவில்லை. எங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பைப் பற்றி தெரியாது என்று முன்னால் உண்மையை சொன்னார்கள். இப்போது தங்களை பகவான், சிவோஹம் என்று சொல்லிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். பாபா புரிய வைக்கின்றார் - இந்த சமயத்தில் முழு மரமும் தமோபிரதானமாக இருக்கிறது ஆகையினால் சாதுக்கள் போன்ற அனைவரையும் கூட கடைத்தேற்றுவதற்கு நான் வருகின்றேன். இந்த உலகமே மாற வேண்டும். ஆத்மாக்கள் அனைத்தும் திரும்பச் சென்றுவிடும். நம்முடைய ஆத்மாவில் அழிவற்ற நடிப்பு நிறைந்துள்ளது அதை மீண்டும் நடிப்போம் என்பது ஒருவர் கூட தெரிந்திருக்க வில்லை. ஆத்மா அவ்வளவு சிறியதாக இருக்கிறது, இதில் அழிவற்ற நடிப்பு நிறைந்துள்ளது அது ஒருபோதும் வினாசம் அடைவதில்லை. இதில் மிகவும் நல்ல தூய்மையான புத்தி வேண்டும். அது நினைவு யாத்திரையில் நன்றாக ஈடுபட்டால் தான் ஏற்படும். உழைக்காமல் பதவி கிடைக்குமா என்ன, ஆகையினால் தான் முன்னேறினால் வைகுண்டம், விழுந்தால் பாதாளம் என்று பாடப்பட்டுள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்த இரண்டு கிரீடமுள்ள இராஜாவுக் கெல்லாம் ராஜா எங்கே, பிரஜை எங்கே. கற்பிக்கக் கூடியவர் ஒருவரே ஆவார். இதில் மிகவும் நல்ல புத்தி இருக்க வேண்டும். நினைவு யாத்திரை தான் முக்கியம் என்று பாபா அடிக்கடி புரிய வைக்கின்றார். நான் உங்களுக்கு படிப்பித்து உலகத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றேன். எனவே டீச்சர் குருவாகவும் இருப்பார். பாபா டீச்சருக்கெல்லாம் டீச்சர், தந்தைக்கெல்லாம் தந்தையாக இருக்கின்றார். நம்முடைய தந்தை மிகவும் அன்பானவர் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அப்படிப்பட்ட தந்தையை அதிகம் நினைவு செய்ய வேண்டும். முழுமையாக படிக்கவும் வேண்டும். பாபாவை நினைவு செய்யவில்லை என்றால் பாவம் அழியாது. பாபா அனைத்து ஆத்மாக்களையும் தன்னோடு அழைத்துச் செல்வார். மீதமுள்ள சரீரங்கள் அனைத்தும் அழிந்து விடும். ஆத்மாக்கள் அதனதனுடைய தர்மத்தின் பிரிவில் சென்று இருக்கும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) புத்தியை தூய்மையாக்குவதற்காக நினைவு யாத்திரையில் மூழ்கி இருக்க வேண்டும். கர்மம் செய்து கொண்டே கூட ஒரு பிரியதர்னுடைய நினைவு இருந்தால் விகர்மங்களை வென்றவர்களாக ஆக முடியும்.

 

2) இந்த சிறிய யுகத்தில் மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். நல்ல கர்மங்களின் படி நல்ல சம்ஸ்காரங்களை தாரணை செய்து நல்ல (உயர்ந்த) குலத்திற்குச் செல்ல வேண்டும்.

 

வரதானம்:

உலகத்தின் ஒளி ஆகி, பக்தர்களுக்கு ஒரு பார்வையாலேயே முழு திருப்தியளித்து விடுபட்டவராக ஆக்கக் கூடிய, காட்சி கொடுக்கும் (தர்னீய) மூர்த்தி ஆகுக.

 

உலகத்தின் கண்களாகிய உங்கள் திருஷ்டியைப் பெறுவதற்காக முழு உலகமுமே காத்துக் கொண்டிருக்கிறது. உலகத்தின் ஒளியாகிய நீங்கள் உங்களது சம்பூர்ண ஸ்டேஜ் வரை சென்று சேரும் போது, அதாவது சம்பூர்ண நிலையின் கண்ணை எப்போது திறக் கிறீர்களோ, அப்போது ஒரு விநாடியில் உலக மாற்றம் நடைபெறும். பிறகு தரிசனத்திற்குரிய (காட்சி தரும்) மூர்த்தி ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களது பார்வையாலேயே பக்த ஆத்மாக் களை முழு திருப்தியடைந்த, விடுபட்டவர்களாக ஆக்க முடியும். அவ்வாறு விடுபட்ட வர்களாக ஆக விரும்பு கிறவர்களின் நீளமான க்யு உள்ளது. எனவே உங்களது சம்பூர்ண நிலையின் கண்கள் திறந்தே இருக்கட்டும். கண்களைக் கசக்குவது மற்றும் சங்கல்பங்களின் தடுமாற்றம் தான் தூங்கி விழுவதாகும். இதை நிறுத்தி விடுங்கள். அப்போது காட்சி கொடுக்கும் மூர்த்தி ஆகி விடுவீர்கள்.

 

சுலோகன்

மாசற்ற சுபாவம் என்பது பணிவின் அடையாளமாகும். மாசற்றவராக ஆவீர்களானால் வெற்றி கிடைத்து விடும்.

 

ஓம்சாந்தி