14.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஆத்மா அபிமானி ஆகி சேவை செய்தீர்கள் என்றால் ஒவ்வொரு அடியிலும் வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

கேள்வி:

எந்த நினைவில் இருந்தோமானால் தேக அபிமானம் வராது?

 

பதில்:

நான் இறைவனின் வேலைக்காரன் என்பது சதா நினைவு இருக்க வேண்டும். வேலைக்காரனுக்கு ஒருபோதும் தேக அபிமானம் வர முடியாது. எந்த அளவுக்கு யோகத்தில் (நினைவில்) இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு தேக அபிமானம் வராது.

 

கேள்வி:

தேக அபிமானம் உடையவர்களுக்கு நாடகத்தின் அனுசாரமாக எந்த ஒரு தண்டனை கிடைக்கிறது?

 

பதில்:

அவர்களுடைய புத்தியில் ஞானம் பதியாது. பணக்காரர்களுக்கு பணத்தின் காரணத்தால் தேக அகங்காரம் இருக்கிறது. எனவே அவர்கள் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இது தான் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய தண்டனையாகும். ஏழைகள் சகஜமாகப் புரிந்து கொள்வார்கள்.

 

ஓம்சாந்தி.

ஆன்மீகத் தந்தை பிரம்மா மூலமாக வழியைக் கூறிக் கொண்டிருக்கின்றார் நினைவு செய்தீர்கள் என்றால் இப்படி ஆவீர்கள்; சதோபிரதானம் ஆகி தன்னுடைய சொர்க்க இராஜ்யத்திற்கு செல்வீர்கள். இதனை உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை இந்த வார்த்தை முழு பாரதம் மற்றும் அயல் நாட்டிலும் எல்லோரிடமும் சென்று சேரும். நிறைய பேருக்கு சாட்சாத்காரம் கூட கிடைக்கும். யாருடைய சாட்சாத்காரம் கிடைக்க வேண்டும்? இதுகூட புத்திக்கு கொடுக்கும் வேலையாகும். பாபா பிரம்மா மூலமாக சாட்சாத்காரம் ஏற்படுத்தி கூறுகின்றார் இளவரசன் ஆக வேண்டுமானால் பிரம்மா மற்றும் பிராமணர்களிடம் செல்லுங்கள். ஐரோப்பியர்கள் கூட இதனைப் புரிந்துக் கொள்ள விரும்புகிறார்கள். பாரதம் சொர்க்கமாக இருந்தபோது யாருடைய இராஜ்யம் இருந்தது? இதனை யாரும் முழுமையாக் தெரிந்து கொள்ளவில்லை. பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. இப்பொழுது நீங்கள் அனைவருக்கும் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இது சகஜ இராஜயோகம் ஆகும். இதன் மூலமாகத் தான் பாரதம் சொர்க்கமாகின்றது. அயல் நாட்டவரின் புத்தி கூட சிறிது நன்றாக இருக்கின்றது. அவர்கள் உடனே புரிந்து கொள்வார்கள். எனவே சேவாதாரி குழந்தைகள் என்ன செய்ய வேண்டும்? அவர்களுக்குத் தான் வழிமுறை கொடுக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு பழைமையான இராஜயோகம் கற்றுக் கொடுக்க வேண்டும். உங்களுடைய மியுசியம் மற்றும் கண்காட்சிகளில் நிறைய பேர் வருகிறார்கள். அபிப்பிராயத்தை எழுதுகிறார்கள். இவர்கள் நல்ல காரியம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தான் புரிந்து கொள்வதில்லை. ஏதோ கொஞ்சம் (புத்தியில்) உரைக்கும் போது வருகிறார்கள். பிறகும் கூட ஏழைகள் தான் நல்ல பாக்கியத்தை உருவாக்குகிறார்கள். புரிந்து கொள்ளவும் முற்சி செய்கிறார்கள். செல்வந்தர்கள்  முயற்சி செய்வதில்லை. தேக அபிமானம் இருக்கிறதல்லவா? நாடகப்படி பாபா தண்டனை அளித்தது போல் ஆகின்றது ஆனாலும் கூட அவர்கள் மூலமாக சப்தத்தை (விசயத்தை) வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அயல் நாட்டில் இருப்பவர்கள் கூட இந்த ஞானத்தை விரும்புகிறார்கள். கேட்டு சந்தோஷப்படுகிறார்கள். அரசாங்க அலுவலர்கள் இறுதியில் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஒருவேளை வீட்டில் அமர்ந்தபடியே அவர்களுக்கு காட்சி கிடைத்தாலும் கூட புத்தியில் வராது. எனவே பாபா குழந்தைகளுக்கு வழி கூறுகின்றார். நல்ல நல்ல அபிப்பிராயங்களை ஒன்று சேர்த்து புத்தகத்தை உருவாக்குங்கள். பாருங்கள்! இது அனைவருக்கும் எவ்வளவு பிடித்திருக்கிறது! இப்படியும் கூட வழி கூற முடியும் - அயல் நாட்டவர் மற்றும் பாரதவாசிகள் கூட இராஜயோகத்தைப் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். சகஜ இராஜயோகத்தின் மூலம் சொர்க்கத்தினுடைய தேவி தேவதைகளுடைய இராஜ்யம் பிராப்தியாக கிடைக்கிறது என்று வழிமுறை கூற முடியும். எனவே ஏன் இந்த மியூசியத்தை அரசாங்க அலுவலகத்தில் வைக்கக் கூடாது? எங்கெல்லாம் மாநாடு நடக்கின்றது குழந்தைகளுக்கு அதற்கான சிந்தனை வர வேண்டும். இப்பொழுது கொஞ்சம் நேரம் ஆகும். அவ்வளவு வேகமாக புத்தி பக்குவமாவதில்லை. கோத்ரேஜ் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. இப்பொழுது சப்தம் வெளிப்படுமானால் புரட்சி (புது உலக மாற்றம்) அவசியம் ஏற்படும் என்று கூறுங்கள். அரசாங்க மாளிகையில் மியூசியம் இருந்தால் கூட வெளிநாட்டினர் வந்து பார்ப்பார்கள். குழந்தைகளுக்கு வெற்றி அவசியம் ஏற்பட வேண்டும். எனவே சிந்தனை செய்யுங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை ஆத்ம அபிமானிகளாக இருப்பவர்களுக்குத் தான் வரும். அனைவரும் பாபாவைத் தெரிந்துகொண்டு ஆஸ்தி அடைய வேண்டும். நாம் எழுதவும் செய்கின்றோம் எந்த செலவும் செய்யாமல்... நல்ல நல்ல குழந்தைகள் யாரெல்லாம் வருகிறார்களோ அவர்கள் வழி தருகிறார்கள். உதவி பிரதம மந்திரி திறப்பு விழாவிற்கு வந்து பார்த்து சென்று இது மிக அதிசயமான ஞானம் என்று கருத்து சொன்னால் பிரதம மந்திரி, குடியரசு தலைவர் கூட வருவார்கள். உண்மையான அமைதி இப்படி ஸ்தாபனை ஆக வேண்டும். இதைப் புரிய வைப்பது கூட ஏற்றுக் கொள்வதற்காகத் தான். இப்பொழுது இல்லையென்றாலும் நாளை புரிந்துக் கொள்வார்கள். பாபா கூறுகின்றார் பெரிய பெரிய மனிதர்களிடம் செல்லுங்கள் நாளாக நாளாக அவர்களும் புரிந்து கொள்வார்கள். மனிதர்களுடைய புத்தி தமோபிரதானமாக இருப்பதால் தவறான காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர். நாள் போகப் போக தமோபிரதானம் ஆகிக் கொண்டேயிருக்கிறார்கள்.

 

இந்த விகாரி தொழிலை விட்டு தன்னை முன்னேற்றிக் கொள்ள என்று நீங்கள் புரிய வைப்பதற்கு முயற்சி செய்கின்றீர்கள் பாபா வந்திருக்கின்றார், பவித்ர தேவதையாக்குவதற்காக! கடைசியில் அந்த நாள் வரும் அரசாங்க மாளிகையில் மியூசியம் இருக்கும். சொல்லுங்கள் செலவு நாங்கள் செய்கின்றோம். அரசாங்கம் ஒருபோதும் செலவு செய்வதில்லை. நாங்களே செலவு செய்து அரசாங்க மாளிகையில் மியூசியம் வைக்க முடியும் என்று குழந்தைகள் சொல்லலாம். ஒரு பெரிய அரசாங்க மாளிகையில் மியூசியம் வந்ததானால் அனைத்திலும் வந்துவிடும். புரிய வைப்பவர்கள் கூட அவசியம் வேண்டும். அவர்களுக்கு சொல்லுங்கள் நேரத்தை நிச்சயப்படுத்துங்கள் யார் வேண்டுமானாலும் வந்து புரிந்துக் கொள்ளலாம். சோழி செலவு செய்யாமல் வாழ்க்கையை உருவாக்க வழி சொல்கின்றோம். இது நடைபெறப் போகின்றது. ஆனால் பாபா குழந்தைகள் மூலம்தான் கூறுகின்றார். தன்னை நல்ல நல்ல மகாவீர் என்று புரிந்து கொண்டிருக்கின்ற குழந்தைகளைக் கூட மாயா பிடித்துவிடுகிறது. மிக உயர்ந்த லட்சியமாக இருக்கிறது. மிகவும் கவனம் அவசியம் தேவை. குத்துச்சண்டை ஒன்றும் குறைவானது அல்ல. பெரியதிலும் பெரிய குத்துச் சண்டை இராவணனை வெற்றி அடைவதற்கான யுத்த மைதானமாக இருக்கிறது. கொஞ்சம் கூட தேக அபிமானம் இருக்கக்கூடாது. நான் இதை செய்கின்றேன் இப்படி சேவை செய்கின்றேன்... நாம் இறைவனின் வேலைக்காரர்கள் நாம் அனைவருக்கும் செய்தியைக் கொடுத்துதான் ஆக வேண்டும். இதில் குப்தமான (மறைமுக) முயற்சி நிறைய இருக்கிறது. நீங்கள் ஞான யோக பலத்தின் மூலம் தனக்குத் தானே புரிய வைக்கின்றீர்கள் இதில் குப்தமாக இருந்து ஞான சிந்தனை செய்தீர்களேயானால் போதை அதிகமாகும். ஒவ்வொரு கல்பமும் பாரதவாசிகளுக்குத்தான் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. என அன்பாகப் புரிய வையுங்கள். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு லெஷ்மி நாராயணன் இராஜ்யம் இருந்தது. இப்பொழுது இதனை விகார உலகம் என்று சொல்லப்படுகிறது. சத்யுகம் என்பது சிவாலயம். அது சிவபாபாவினுடைய ஸ்தாபனை, இது இராவணனுடைய ஸ்தாபனை, இதில் இரவுக்கும் பகலுக்குமான வேறுபாடு உள்ளது. குழந்தைகள் உணர்கிறீர்கள் நாம் என்னவாக ஆகி இருந்தோம். பாபா தனக்குச் சமமாக ஆக்குகின்றார் முக்கியமான விஷயம் ஆத்ம அபிமானி ஆவதாகும். ஆத்ம அபிமானியாகி சிந்தனை செய்யுங்கள். இன்று நான் பிரதம மந்திரிக்குச் சென்று புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கு திருஷ்டிக் கொடுத்தீர்களானால் சாட்சாத்காரம் செய்விக்க முடியும். ஆத்ம அபிமானியாகி இருந்தீர்கள் என்றால் பேட்டரி நிறைந்து விடும். காரணம் ஆத்மா அபிமானி ஆகி அமருங்கள், அப்போது பாபாவுடன் தொடர்பு வைத்தால் பேட்டரி நிறைந்துவிடும். ஏழைகள் அதிகமாக நினைக்கின்றனர்; ஞானம் அதிகமாக இருக்கின்றது; யோகம் குறைவாக இருந்தால் பேட்டரியை நிறைக்க முடியாது. ஏனெனில் தேக அபிமானம் இருக்கிறது. யோகம் கொஞ்சம் கூட இல்லையென்றால் ஞானம் என்ற அம்பில் சிறிது கூட கூர்மை ஆவதில்லை. ஆயுதத்தில் கூர்மை இருக்கிற தென்றால் அதே ஆயுதம் பத்து ரூபாயிலும் ஐம்பது ரூபாயிலும் கிடைக்கின்றது. குரு கோவிந்த சிங் ஆயுதத்திற்கு மகிமை இருக்கிறது. இதில் ஹிம்சைக்கான விஷயமில்லை. தேவதைகள் டபுள் அஹிம்சாவாதிகளாக இருக்கிறார்கள். இன்று பாரதம் எப்படி இருக்கிறது. நாளைய பாரதம் அப்படி தேவதைகள் உலகமாக ஆகிவிடும். எனவே குழந்தைகளுக்கு சந்தோஷம் இருக்க வேண்டும். நேற்று இராவண இராஜ்யத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்தோம். இன்று பரமாத்மாவுடன் இருந்து கொண்டு இருக்கின்றோம்.

 

நாம் ஈஸ்வரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சத்யுகத்தில் தெய்வீக பரிவாரத்தில் இருப்பீர்கள். இப்பொழுது சுயம் பகவான் நமக்கு கல்வி கற்றுத் தருகின்றார். நமக்கு பகவானின் அன்பு எவ்வளவு கினடத்துக் கொண்டே இருக்கின்றது. அரை கல்பமாக இராவணனின் அன்பு கிடைத்ததால் குரங்கு போல் ஆகி விட்டோம். இப்பொழுது எல்லையற்ற பாபாவின் அன்பு கிடைத்துவிட்டதால் தேவதா ஆகின்றீர்கள். இது ஐயாயிரம் ஆண்டுகளுக்கான விஷயம். அவர்கள் லட்ச கணக்கான ஆண்டுகள் என்கின்றனர். இவர் (பிரம்மா) கூட உங்களைப் போல பூஜாரியாக இருந்தார். மரத்தின் கடைசி பாகத்தில் நின்று கொண்டிருக்கின்றார். சத்யுகத்தில் உங்களுக்கு எவ்வளவு அளவற்ற செல்வம் இருந்தது. பிறகு யார் கோவிலைக் கட்டினார்களோ அவர்களிடமும் நிறைய செல்வம் இருந்தது. அதனை கொள்ளையடித்துச் சென்று விட்டார்கள். கோவில்கள் நிறைய இருக்கின்றன. பிரஜைகளுக்கும் கூட நிறைய கோவில்கள் இருக்கும். பிரஜைகளிடம் ராஜாக்கள் கூட கடன் வாங்குகின்றனர். இது மிகவும் அழுக்கான உலகம். அனைத்தையும் விட அழுக்கானது கல்கத்தாவாகும். இதனை மாற்றுவதற்கு குழந்தைகள் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். செய்யும் காரியத்திற்கேற்ப பலன் அடைவார்கள். தேக அபிமானம் வந்தால் வீழ்ந்து விடுவார்கள். மன்மனாபவ என்பதின் அர்த்தத்தைப் புரிந்துக்கொள்வதில்லை. சுலோகனை மனப்பாடம் செய்கிறார்கள். பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரிடமும் இந்த ஞானம் இருக்க முடியாது. எந்த ஒரு மடம் மற்றும் ஆசிரமத்தில் இருப்பவர்கள் தேவதையாக முடியாது யார் கல்பத்திற்கு முன்பு ஆனார்களோ அவர்களே ஆகிறார்கள். பிரஜாபிதா பிரம்மாகுமார் குமாரிகள் பிராமணர்கள் ஆகாமல் தேவதை ஆக முடியாது. யார் கல்பத்திற்கு முன் ஆனார்களோ அவர்களே ஆகிறார்கள். நேரம் ஆகின்றது. மரம் பெரியதாகிவிட்டால் விருத்தியாகிக் கொண்டேயிருக்கும். எறும்பு போல் ஊறக் கூடிய மார்க்கத்திலிருந்து பறந்து சொல்லும் மார்க்கம் ஏற்படும். பாபா புரிய வைக்கின்றார். பாபாவை நினைவு செய்யுங்கள் சுய தரிசன சக்கரத்தைச் சுழற்றுங்கள் உங்களுடைய புத்தியில் முழு 84 ஜன்ம சக்கரம் இருக்கிறது. பிராமணர்கள் நீங்கள் தான் தேவதை மற்றும் சத்திரிய வம்சத்தினர் ஆகின்றீர்கள். சூரிய வம்சம் சந்திர வம்சம் என்பதின் அர்த்தத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை. முயற்சி செய்து புரிய வைக்கிறீர்கள். பிறகும் புரிந்து கொள்ளவில்லை என்றால், இப்பொழுது சமயம் ஆகவில்லை. மீண்டும் வருகிறார்கள் பிரம்மாகுமாரிகளுக்கு வெளியில் பெயர் அப்படி இருக்கிறது; என புரிந்துக் கொள்கிறார்கள். இவர்கள் நல்ல காரியம் செய்கிறார்கள் என்பதை உள்ளே வந்து பார்த்த பிறகு தெரிந்துக் கொள்கிறார்கள். இங்கு மனிதர்களுடைய நடத்தை மாற்றியனமக்கப்படுகிறது. பாருங்கள் தேவதைகள் நடத்தை எப்படி சம்பூர்ண நிர்விகாரி!. காமம் என்பது மகா எதிரி. இந்த ஐந்து பூதங்களின் காரணத்தினால் தான் உங்களுடைய நடத்தை கெட்டுவிட்டது. எந்த நேரம் புரிய வைக்கிறார்களோ அந்த நேரம் நன்றாகி விடுகிறார்கள். வெளியில் செல்லும் போது அனைத்தையும் மறந்து விடுகின்றனர். எனவே சொல்லப்படுகிறது. மீண்டும் மீண்டும் அலங்கரிக்கப்படுகிறது... பாபா நிந்தனை செய்வதில்லை புரிய வைக்கின்றார் தெய்வீக நடத்தை கொண்டு வாருங்கள். ஏன் கோபத்தில் வந்து குரைக்கிறீர்கள்? சொர்க்கத்தில் கோபம் இருப்பதில்லை. பாபா அனைத்தையும் நேரடியாக புரிய வைத்தார், ஒருபோதும் கோபம் வந்ததில்லை. பாபா அனைத்தையும் தெளிவுபடுத்தி புரிய வைக்கின்றார். டிராமா விதிப்படி நடந்து கொண்டிருக்கிறது. டிராமாவில் எந்த ஒரு தவறும் இல்லை. உருவாக்கப்பட்ட அழியாத நாடகம்! எந்த செயல் நன்றாக நடந்ததோ அது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நடக்கும். பலர் சொல்கிறார்கள் இந்த மலை உடைந்தால் மீண்டும் எப்படி உருவாகும்? நாடகத்தை பாருங்கள், மாளிகை உடைந்து விட்டால் நாடகம் ரிப்பிட் ஆகும் போது மறுபடியும் அதே மாளிகை உருவாக்கப் பட்டிருப்பதைப் பார்க்கின்றோம். இந்த நாடகம் கூட ரிப்பிட் ஆகிக் கொண்டேயிருக்கிறது. புரிந்து கொள்வதற்குக் கூட புத்தி இருக்க வேணடும். சிலருடைய புத்தியில் பதிவது மிக கடினமாக இருக்கிறது. உலகத்தின் சரித்திர பூகோளம் அல்லவா? இராம் இராஜ்யத்தில் இந்த தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, அவர்களுக்கும் பூஜை நடைபெற்றது. பாபா புரிய வைக்கின்றார், நீங்கள் தான் பூஜிக்கதக்கவராக இருந்தீர்கள் நீங்களே பூஜாரியா கின்றீர்கள். அதுவே நான் என்பதின் அர்த்தம் கூட புரியவைக்கப் படுகிறது; நாமே தேவதை, நாமே சத்திரியன்... சதுரங்க விளையாட்டு அல்லவா? இதனை நல்ல முறையில் புரிந்து கொண்டு புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும். தொழில்களை விடுங்கள் என்று பாபா சொல்லவில்லை. சதோபிரதானம் ஆக வேண்டும் சரித்திர பூகோளத்தை புரிந்து கொண்டு புரிய வைக்க வேண்டும். முக்கிய விஷயமே மன்மனாபவ என்பதாகும். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்தீர்களானால் சதோபிரதானம் ஆகி விடுவீர்கள் நினைவு யாத்திரை தான் நம்பர் ஒன்! பாபா கூறுகின்றார் நான் அனைத்து குழந்தைகளையும் என்னுடன் அழைத்துச் செல்கின்றேன். சத்யுகத்தில் மிகக் குறைவான மனிதர்கள் இருப்பார்கள்.; கலியுகத்தில் இவ்வளவு நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். அனைவரையும் திரும்பவும் யார் அழைத்துச் செல்வார்கள். இந்த இவ்வளவு பெரிய உலகத்தையும் யார் சுத்தப்படுத்துவது. தோட்டத்திற்கு எஜமானன், படகோட்டி என்று பாபாவிற்குத் தான். சொல்லப்படுகிறது. அவர் தான் துக்கத்திலிருந்து விடுபட வைத்து அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார். படிப்பு மிக இனிமையானதாக இருக்கின்றது ஏனென்றால் இதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. உங்களுக்கு எடுக்க எடுக்க குறையாத கஜானா கிடைக்கிறது. பக்தியில் ஒன்றுமே கிடைப்பதில்லை. இங்கு காலில் விழ வேண்டிய விஷயங்கள் கிடையாது. அது குருமார்களுக்கு முன்னால் செய்கிறார்கள். அதிலிருந்தும் பாபா விடுபட வைக்கின்றார். அப்படிப்பட்ட பாபாவை நினைவு செய்ய வேண்டுமல்லவா? அவர் தான் நமது தந்தை என்பதைப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? பாபாவிடமிருந்து அவசியம் ஆஸ்தி கிடைக்கிறது. அந்த குஷி இருக்கின்றது அல்லவா? செல்வந்தர்களிடம் சென்றால் எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது, ஏனென்றால் நாங்கள் ஏழையாக இருக்கிறோம் என்கின்றனர். ஏழையாக இருப்பது தான் மிக நல்லது என்று பாபா கூறுகின்றார். செல்வந்தர்கள் இங்கு வரமாட்டார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ,ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இப்பொழுது சுயம் பகவானே எனக்கு கல்வி கற்றுத் தருகின்றா.ர் நான் ஈஸ்வரிய குடும்பத்தில் இருக்கின்றேன் அவருடைய அன்பு எனக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கிறது என்ற குஷி மற்றும் நஷா சதா இருக்க வேண்டும். இந்த அன்பு மூலமாக நாம் தேவதை ஆகின்றோம்.

 

2. இந்த உருவாக்கப்பட்ட நாடகத்தை மிகச் சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும். இதில் எந்த தவறும் ஏற்பட முடியாது. எந்த செயல் நடந்ததோ அது மீண்டும் நடக்கும். இந்த விஷயத்தை நல்ல புத்தியோடு புரிந்து கொண்டு நடந்தால் ஒருபோதும் கோபம் வராது.

 

வரதானம்:

ஞானத்தின் உயர்ந்த பொக்கிஷங்களை மகாதானியாகி தானம் செய்யக் கூடிய மாஸ்டர் ஞானக்கடல் ஆகுக.

 

தந்தை எப்படி ஞானக்கடலாக இருக்கிறாரோ அது போல மாஸ்டர் ஞானக்கடலாகி பிறருக்கு ஞானத்தின் தானத்தைக் கொடுத்தபடி இருங்கள். எவ்வளவு உயர்ந்த ஞானத்தின் பொக்கிஷம் குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கின்றது. அந்தப் பொக்கிஷத்தாலேயே நிரம்பியவராகி, நினைவின் அனுபவங்களின் மூலம் பிறருக்கு சேவை செய்யுங்கள். கிடைத்திருக்கக் கூடிய பொக்கிஷங்களை மகாதானியாகி தானம் செய்தபடி இருங்கள், ஏனென்றால் இந்த பொக்கிஷங்கள் எவ்வளவு தானம் செய்கிறீர்களோ அவ்வளவு அதிகரித்தபடி இருக்கும். மகாதானி ஆவது என்பதன் அர்த்தம் கொடுப்பது என்பதல்ல, இன்னும் கூட நிரப்புவதாகும்.

 

சுலோகன்:

ஜீவன்முக்தியுடன் தேகத்திலிருந்து தனிப்பட்டு விதேஹி (தேகமற்றவர்) ஆவது முயற்சியின் இறுதிக் கட்டமாகும்.

 

ஓம்சாந்தி