15.01.2021    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் அரைகல்பமாக யாரை பக்தி செய்தீர்களோ அதே தந்தை சுயம் உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். இந்த கல்வியின் (படிப்பின்) மூலமாகவே நீங்கள் தேவி தேவதை ஆகிறீர்கள்.

 

கேள்வி:

யோகம் என்ற லிஃப்டின் அற்புதம் என்ன?

 

பதில்:

குழந்தைகளாகிய நீங்கள் யோக பலத்தின் லிஃப்ட் மூலமாக ஒரு நொடியில் மேலே ஏறி விடுகிறீர்கள். அதாவது ஒரு நொடியில் ஜீவன் முக்தியின் ஆஸ்தி உங்களுக்குக் கிடைத்துவிடுகிறது. ஏணிப்படி இறங்குவதில் 5 ஆயிரம் வருடங்கள் பிடித்தன. மேலும் ஒரு நொடியில் ஏறி விடுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது தான் யோக பலத்தின் அற்புதம் ஆகும். தந்தையின் நினைவினால் எல்லா பாவங்களும் நீங்கி விடுகின்றன. ஆத்மா சதோபிரதானமாக ஆகிவிடுகிறது.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு வந்துப் புரிய வைக்கிறார். ஆன்மீகத் தந்தையின் மகிமையோ குழந்தைகளுக்கு கூறியிருக்கிறார். அவர் ஞானக் கடல் சத்-சித்-ஆனந்த சொரூபம் ஆவார். அமைதியின் கடல் ஆவார். அவருக்கு எல்லாமே எல்லைக்கப்பாற்பட்ட பட்டங்கள் அளிக்கப்படுகின்றன. இப்பொழுது தந்தை ஞானக்கடல் ஆவார். மேலும் இச்சமயம் இருக்கும் மனிதர்கள் அனைவருமே நாங்கள் பக்தியின் கடல் ஆவோம் என்பதை அறிந்துள்ளார்கள். பக்தியில் யார் எல்லோரையும் விட தீவிரமாக இருக்கிறாரோ அவருக்கே மதிப்பு கிடைக்கிறது. இச்சமயம் கலியுகத்தில் இருப்பது பக்தி, துக்கம். சத்யுகத்தில் இருப்பது ஞானத்தின் சுகம். அப்படியின்றி அங்கு ஞானம் இருக்கிறது என்பதல்ல. எனவே இந்த மகிமை ஒரே ஒரு தந்தையினுடையதாகும். மேலும் குழந்தைகளின் மகிமையும் இருக்கிறது. ஏனெனில் தந்தை குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார் அல்லது யாத்திரை கற்பிக்கிறார். இரண்டு யாத்திரைகள் உள்ளன என்று தந்தை புரிய வைத்துள்ளார். பக்த ஜனங்கள் தீர்த்த யாத்திரை செய்கிறார்கள். நாலா புறங்களிலும் சுற்றி வருகிறார்கள். ஆக எவ்வளவு காலம் நாலா புறங்களிலும் சுற்றி வருகிறார்களோ அவ்வளவு காலம் விகாரத்தில் செல்வதில்லை. சாராயம் போன்ற சீ-சீ பொருட்கள் எதையும் உட்கொள்ளவோ, அருந்தவோ மாட்டார்கள். சிலசமயம் பத்ரிநாத், சிலசமயம் காசி என்று சுற்றி வருவார்கள். பகவானிடம் பக்தி செய்கிறார்கள். இப்பொழுது பகவானோ ஒருவராகத் தான் இருக்க வேண்டும் அல்லவா? எல்லா புறங்களிலும் சென்று சுற்றி வரவேண்டியதில்லை அல்லவா? சிவபாபாவினுடைய தீர்த்தங்களில் சுற்றி வருகிறார்கள். எல்லாவற்றையும் விட பெரியது பனாரஸ் தீர்த்தம் என்று பாடப்பட்டுள்ளது. அதற்கு சிவனின் புரி (நகரம்) என்று கூறுகிறார்கள். நாலாபுறங்களிலும் செல்கிறார்கள். ஆனால் யாருடைய தரிசனம் செய்ய செல்கிறார்களோ அல்லது யாரை பக்தி செய்கிறார்களோ அவருடைய வாழ்க்கை சரித்திரம், தொழில் பற்றி யாருக்குமே தெரியாது. எனவே அதற்கு குருட்டு நம்பிக்கை என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு பூஜை செய்வது, தலை வணங்குவது மற்றும் அவரது வாழ்க்கைச் சரித்திரத்தை அறியாமலிருப்பது - இதற்கு குருட்டு நம்பிக்கை என்பார்கள். வீட்டில் கூட கொண்டாடுகிறார்கள். தேவிகளுக்கு எவ்வளவு பூஜை செய்கிறார்கள். மண்ணினால் அல்லது கல்லினால் தேவிகளை அமைத்து அவற்றை மிகவுமே அலங்கரிக்கிறார்கள். உதாரணமாக லட்சுமியின் படத்தை அமைக்கிறார்கள். அவர்களிடம் இவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைக் கூறுங்கள் என்றால் அவர் சத்யுகத்தின் மகாராணியாக இருந்தார் என்பார்கள். திரேதாவில் பிறகு சீதை இருந்தார். மற்றபடி இவர்கள் எவ்வளவு காலம் ஆட்சி புரிந்தார்கள். லட்சுமி நாராயணரின் ஆட்சி எப்பொழுதிலிருந்து எப்பொழுது வரை நடந்தது என்பது யாருக்குமே தெரியாது. மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் யாத்திரை செல்கிறார்கள். இவை எல்லாமே பகவானை சந்திப்பதற்கான வழிகளாகும். சாஸ்திரங்கள் படிப்பது இதுவும் பகவானை சந்திப்பதற்கான வழி ஆகும். ஆனால் பகவான் எங்கே இருக்கிறார் என்றால், அவரோ சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என்பார்கள்.

 

ஆன்மிகக் கல்வியின் மூலம் நாம் இவர்கள் போல (தேவி தேவதை) ஆகிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். யாரை சந்திப்பதற்காக அரை கல்பம் பக்தி மார்க்கம் நடக்கிறதோ அதே தந்தை சுயம் வந்து கற்பிக்கிறார். பாபா! பாவனமாக ஆக்குங்கள். மேலும் நீங்கள் யார் என்று உங்கள் அறிமுகத்தையும் கொடுங்கள்! என்று கூறுகிறார்கள். ஆத்மாவாகிய நீங்கள் புள்ளி ஆவீர்கள் என்று பாபா புரிய வைத்துள்ளார். ஆத்மாவிற்குத் தான் இங்கு சரீரம் கிடைத்துள்ளது. எனவே இங்கே கர்மம் செய்கிறது. தேவதைகளுக்கு அவர்கள் சத்யுகத்தில் ஆட்சி புரிந்து சென்றுள்ளார்கள் என்று கூறுவார்கள். கிறிஸ்தவர்களோ காட்ஃபாதர் உண்மையில் பேரடைஸ் (சொர்க்கத்தை) ஸ்தாபனை செய்தார் என்று புரிந்துள்ளார்கள். நாங்கள் அங்கு இருக்கவில்லை. பாரதத்தில் பேரடைஸ் இருந்தது. அவர்களுடைய புத்தியாவது நன்றாக உள்ளது. பாரதவாசிகள் சதோபிரதானமாகவும் ஆகிறார்கள். பிறகு தமோபிரதானமாகவும் ஆகிறார்கள். அவர்கள் இவ்வளவு சுகத்தைப் பார்ப்பதில்லை. பின் துக்கத்தைக் கூட இந்த அளவு பார்ப்பதில்லை. இப்பொழுது பின்னால் இருக்கும் கிறிஸ்தவர்கள் எவ்வளவு சுகமாக இருக்கிறார்கள். முதலிலோ அவர்கள் ஏழைகளாக இருந்தார்கள். பணம் உழைப்பு மூலமாக சம்பாதிக்கப்படுகிறது அல்லவா? முதலில் ஒரு கிறிஸ்து வந்தார். பிறகு அவரது தர்ம ஸ்தாபனை ஆகிறது. விருத்தி ஆகிக் கொண்டே போகிறது. ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து நான்கு.. .. .. பிறகு இவ்வாறே விருத்தி ஆகிக் கொண்டே போகிறது. இப்பொழுது பாருங்கள் கிறிஸ்துவர்களினுடைய விருட்சம் எவ்வளவு ஆகிவிட்டுள்ளது. அஸ்திவாரம் தேவி தேவதா குடும்பம் ஆகும். அது மீண்டும் இங்கு இச்சமயம் ஸ்தாபனை ஆகிறது. முதலில் ஒரு பிரம்மா பிறகு பிராமணர்களின் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் விருத்தி அடைகிறார்கள். தந்தை கற்பிக்கிறார். அப்பொழுது மிகவுமே ஏராளமான பிராமணர்கள் ஆகிவிடுகிறார்கள். முதலிலோ இந்த ஒருவர் இருந்தார் அல்லவா? ஒன்றிலிருந்து எவ்வளவு விருத்தி ஆகிவிட்டுள்ளது. எவ்வளவு ஆக வேண்டி உள்ளது. எத்தனை பேர் சூரிய வம்சம் சந்திர வம்சத்தில் தேவதைகளாக இருந்தார்களோ அத்தனை பேர் ஆகவே வேண்டியுள்ளது. முதலில் இருப்பவர் ஒரு தந்தை. அவருடைய ஆத்மா இருக்கவே இருக்கிறது. தந்தையின் குழந்தைகளாகிய நாம் ஆத்மாக்கள் எத்தனை பேர் இருக்கிறோம்? ஆத்மாக்களாகிய நம் அனைவரின் தந்தை ஒருவர் அனாதி ஆவார். பிறகு சிருஷ்டி சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. எல்லா மனிதர்களும் எப்பொழுதுமே இருக்கமாட்டார்கள் அல்லவா? ஆத்மாக்கள் பல்வேறு பாகத்தை ஏற்று நடிக்க வேண்யுள்ளது . இந்த விருட்சத்தின் முதன்முதல் வேர் தேவி தேவதைகளினுடையதாகும். பிறகு அவற்றிலிருந்து தண்டுகள் வெளிப்பட்டுள்ளன. எனவே குழந்தைகளே நான் வந்து என்ன செய்கிறேன் என்பதை தந்தையே வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஆத்மாவில் தான் தாரணை ஆகிறது. நான் எப்படி வந்தேன் என்பதை தந்தை வந்து கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் அனைவருமே பதீதமாக (தூய்மை அற்றவராக) ஆகிவிடும் பொழுது நினைவு செய்கிறீர்கள். சத்யுக திரேதாவிலோ நீங்கள் சுகமாக இருக்கும்பொழுது நினைவு செய்யாமல் இருந்தீர்கள். துவாபரத்திற்கு பிறகு துக்கம் அதிகமாக ஆகும் பொழுது ஹே, பரமபிதா! பரமாத்மா! பாபா என்று கூப்பிட்டீர்கள். ஆம், குழந்தைகளே! கேட்டேன். என்ன விரும்புகிறீர்கள்! பாபா வந்து பதீதர்களை பாவனமாக ஆக்குங்கள். பாபா நாங்கள் மிகவும் துக்கமுடையவர்களாக பதீதமாக உள்ளோம். நீங்கள் வந்து எங்களை பாவனமாக ஆக்குங்கள். கிருபை புரியுங்கள். ஆசீர்வாதம் செய்யுங்கள்! பாபா வந்து பதீதர்களை பாவனமாக ஆக்குங்கள் என்று நீங்கள் என்னை அழைத்தீர்கள். பாவனம் என்று சத்யுகத்திற்குக் கூறப்படுகிறது. இதுவும் சுயம் தந்தை வந்து கூறுகிறார். நாடகத் திட்டப்படி சங்கமயுகம் ஆகும்பொழுது சிருஷ்டி பழையதாகிவிடும் பொழுது நான் வருகிறேன்.

 

சந்நியாசிகள் கூட இரண்டு விதமாக உள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். அவர்கள் ஹடயோகி ஆவார்கள். அவர்கள் இராஜயோகி என்று கூறப்படுவதில்லை. அவர்களுடையது எல்லைக்குட்பட்ட சந்நியாசம் ஆகும். வீடு வாசல் விட்டு போய் காட்டில் இருக்கிறார்கள். குருமார்களுக்கு சீடர்கள் ஆகிறார்கள். கோபிசந்த் இராஜாவுக்கும் கூட ஒரு கதை கூறுகிறார்கள். நீங்கள் ஏன் வீடு வாசல் விடுகிறீர்கள்? எங்கு செல்கிறீர்கள்? சாஸ்திரங்களில் நிறைய கதைகள் உள்ளன. இப்பொழுது பி.கே.க்களாகிய நீங்கள் இராஜாக்களுக்கும் போய் ஞானம் மற்றும் யோகம் கற்பிக்கிறீர்கள். ஒரு அஷ்டாவக்கிர கதையும் உள்ளது. அதில் காண்பிக்கிறார்கள் - இராஜாவிற்கு வைராக்கியம் ஏற்பட்டது. யாராவது என்னை பரமாத்மாவை சந்திக்குமாறு செய்யுங்கள் என்று கூறினார். தண்டோரா அடிக்குமாறு செய்வித்தார். இது அதே நேரமாகும். தந்தையைச் சந்திக்குமாறு செய்விப்பதற்கு நீங்கள் போய் இராஜாக்களுக்கு ஞானம் அளிக்கிறீர்கள் அல்லவா? எப்படி நீங்கள் சந்தித்துள்ளீர்களோ அதே போல மற்றவர்களையும் சந்திக்க வைக்கும் முயற்சி செய்கிறீர்கள். நாங்கள் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதி ஆக்கிவிடுவோம், முக்தி ஜீவன் முக்தி அளிப்போம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். பிறகு அவர்களுக்குக் கூறுங்கள், சிவபாபாவை நினைவு செய்யுங்கள், வேறு யாரையுமே அல்ல. உங்களிடம் கூட ஆரம்பத்தில் உட்கார்ந்தபடியே ஒருவரையொருவர் பார்த்து தியானத்தில் சென்றுவிடுவார்கள் அல்லவா? மிகவுமே ஆச்சரியமாக இருந்தது. இவருக்குள் தந்தை இருந்தார் அல்லவா? எனவே அவர் அதிசயம் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய கயிற்றையும் (புத்தி) இழுத்து விட்டுக் கொண்டிருந்தார். பாப்தாதா இருவரும் சேர்ந்திருந்தார்கள் அல்லவா? சுடுகாடு அமைப்பார்கள். எல்லோரும் தந்தையின் நினைவில் உறங்கிவிடுங்கள். எல்லோரும் தியானத்தில் சென்று விடுவார்கள். இவை எல்லாமே சிவபாபாவின் சாமர்த்தியமாக இருந்தது. இதை பிறகு நிறைய பேர் மாயா ஜாலம் என்று நினைக்க முற்பட்டார்கள். இது சிவபாபாவின் விளையாட்டாக இருந்தது. தந்தை மந்திரவாதி, வியாபாரி, ரத்தினங்களை அளிப்பவர் ஆவார் அல்லவா? வண்ணானும் ஆவார், தட்டானும் ஆவார், வழக்கறிஞரும் ஆவார். அனைவரையும் இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்கிறார். அவரைத் தான் ஹே பதீத பாவனரே, ஹே தூரதேசத்தில் இருப்பவரே.. .. .. வந்து எங்களை பாவனமாக்குங்கள் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அதுவும் பதீத உலகத்தில் பதீத (தூய்மையற்ற) சரீரத்தில் வந்து எங்களை தூய்மையாக ஆக்குங்கள். இப்பொழுது நீங்கள் அதனுடைய பொருளையும் புரிந்துள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் என்னை இராவணனின் தேசத்தில் அழைத்துள்ளீர்கள் என்று தந்தை வந்து கூறுகிறார். நானோ பரந்தாமத்தில் அமர்ந்திருந்தேன். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வதற்காக என்னை நரகமான இராவணனின் தேசத்தில் அழைத்துள்ளீர்கள் - இப்பொழுது சுகதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை அழைத்துச் செல்கிறார் அல்லவா? எனவே இது நாடகமாகும். நான் உங்களுக்கு அளித்திருந்த இராஜ்யம் முடிவடைந்தது. பிறகு துவாபர முதல் இராவண இராஜ்யம் நடந்தது. 5 விகாரங்களில் விழுந்தீர்கள். அது பற்றிய சித்திரங்கள் கூட ஜகந்நாதபுரியில் உள்ளன. முதல் நம்பரில் இருந்தவரே பிறகு 84 பிறவிகள் எடுத்து இப்பொழுது கடைசியில் இருக்கிறார். பிறகு அவர் தான் முதல் நம்பரில் செல்ல வேண்டும். இந்த பிரம்மா அமர்ந்துள்ளார். விஷ்ணு கூட அமர்ந்துள்ளார். இவர்களுக்குள் என்ன தொடர்பு உள்ளது? உலகத்தில் யாருக்குமே தெரியாது. பிரம்மா சரஸ்வதி கூட உண்மையில் சத்யுகத்திற்கு அதிபதியாக இலட்சுமி நாராயணராக இருந்தார்கள். இப்பொழுது நரகத்திற்கு அதிபதி ஆவார்கள். இப்பொழுது இவர்கள் இந்த இலட்சுமி நாராயணராக ஆவதற்காக தபஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். தில்வாலா கோவிலில் முழுமையாக நினைவார்த்தம் உள்ளது. தந்தை கூட இங்கு தான் வந்துள்ளார். எனவே தான் இப்பொழுது அபுமலை அனைத்து தீர்த்தங்களிலும் அனைத்து தர்மங்களின் தீர்த்தங்களிலும் முக்கியமான தீர்த்தம் என்று எழுதவும் செய்கிறோம். ஏனெனில் இங்கு தான் தந்தை வந்து அனைத்து தர்மங்களுக்கும் சத்கதி செய்கிறார். நீங்கள் சாந்திதாமம் சென்று பிறகு சொர்க்கத்திற்குச் செல்கிறீர்கள். பிற அனைவரும் சாந்திதாமத்திற்குச் சென்றுவிடுகிறார்கள். அது ஜட நினைவார்த்தம் ஆகும். இது உயிரூட்டமானது. நீங்கள் உயிரூட்டமாக அதுபோல ஆகிவிடும் பொழுது பிறகு இந்த கோவில்கள் ஆகியவை எல்லாமே முடிந்து போய்விடும். பிறகு பக்தி மார்க்கத்தில் இந்த நினைவார்த்தம் அமைப்பார்கள். இப்பொழுது நீங்கள் சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். சொர்க்கம் மேலே இருக்கிறது என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். இதே பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்பொழுது நரகமாக உள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இந்த சக்கரத்தை பார்த்த உடனேயே முழு ஞானமும் வந்துவிடுகிறது. துவாபர முதல் வேறு வேறு தர்மங்கள் வருகின்றன. ஆக இப்பொழுது பாருங்கள் எவ்வளவு தர்மங்கள் உள்ளன. இது இரும்பு யுகம் ஆகும். இப்பொழுது நீங்கள் சங்கமயுத்தில் உள்ளீர்கள். சத்யுகத்திற்கு செல்வதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறீர்கள். கலியுகத்தில் எல்லோருமே கல்புத்தியாக உள்ளார்கள். சத்யுகத்தில் தங்க புத்தியாக இருப்பார்கள். நீங்கள் தான் தங்க புத்தியாக இருந்தீர்கள். நீங்கள் தான் பிறகு கல்புத்தியாக ஆகி உள்ளீர்கள். மீண்டும் தங்க புத்தி ஆக வேண்டும். இப்பொழுது தந்தை கூறுகிறார் - நீங்கள் என்னை கூப்பிட்டீர்கள். எனவே நான் வந்துள்ளேன். மேலும் உங்களுக்குக் கூறுகிறேன் - காமத்தை வென்றீர்கள் என்றால் உலகத்தை வென்றவர் ஆகிவிடுவீர்கள். முக்கியமானது இந்த விகாரமே ஆகும். சத்யுகத்தில் எல்லோருமே நிர்விகாரியாக இருப்பார்கள். கலியுகத்தில் இருப்பவர்கள் விகாரி. குழந்தைகளே இப்பொழுது நிர்விகாரி ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். 63 பிறவிகள் விகாரத்தில் சென்றுள்ளீர்கள். இப்பொழுது இந்த கடைசி பிறவியில் தூய்மை ஆகுங்கள். இப்பொழுது அனைவருமே சாகத்தான் வேண்டும். நான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய வந்துள்ளேன். எனவே இப்பொழுது என்னுடைய ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள். நான் என்ன கூறுகிறேனோ அதைக் கேளுங்கள். இப்பொழுது நீங்கள் கல்புத்தியை தங்க புத்தியாக ஆக்குவதற்கான முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தான் முழுமையாக படி இறங்குகிறீர்கள். பிறகு ஏறுகிறீர்கள். நீங்கள் ஜின் என்ற பூதம் போல. ஜின் என்ற பூதத்தின் கதை உள்ளது அல்லவா? எனக்கு வேலை கொடு என்று அது கூறியது. ஆக இராஜா கூறினார், நல்லது படி ஏறு மற்றும் இறங்கு. பகவானுக்கு என்ன வந்தது என்று இவ்வாறு படியில் ஏற வைக்கிறார் மற்றும் இறங்க வைக்கிறார் என்று நிறைய மனிதர்கள் கூறுகிறார்கள். பகவானுக்கு என்ன ஆகியது என்று இதுபோல ஏணிபடியை அமைத்தார்! இது அனாதி நாடகம் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் 5 ஆயிரம் வருடங்களில் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். உங்களுக்கு கீழே இறங்குவதற்கு 5 ஆயிரம் வருடங்கள் பிடித்தன. பின் ஒரு நொடியில் மேலே செல்கிறீர்கள். இது உங்களுடைய யோகபலத்தின் லிஃப்ட் ஆகும். நினைவு செய்தீர்கள் என்றால் உங்கள் பாவங்கள் நீங்கிவிடும் என்று தந்தை கூறுகிறார். தந்தை வந்துவிடும் பொழுது நீங்கள் ஒரு நொடியில் மேலே ஏறி விடுகிறீர்கள். பின் கீழே இறங்குவதில் 5 ஆயிரம் வருடங்கள் பிடித்தன. கலைகள் குறைந்துக் கொண்டே போகின்றன. ஏறுவதற்கோ லிஃப்ட் உள்ளது. ஒரு நொடியில் ஜீவன் முக்தி. சதோபிரதானமாக ஆக வேண்டும். பிறகு மெது மெதுவாக தமோபிரதானமாக ஆகிவிடுவீர்கள். 5 ஆயிரம் வருடங்கள் பிடிக்கின்றது. நல்லது. பிறகு தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஒரு பிறவியில் ஆக வேண்டும். இப்பொழுது நான் உங்களுக்கு சொர்க்கத்தின் அரசாட்சி அளிக்கிறேன். எனவே ஏன் நீங்கள் தூய்மையாக ஆகக் கூடாது. ஆனால் காமம் கோபம் ஆகியவை கூட உள்ளன அல்லவா? விகாரம் கிடைக்காமல் இருக்கும்பொழுது பெண்களை அடிக்கிறார்கள். வெளியே தள்ளிவிடுகிறார்கள். நெருப்பிலிடுகிறார்கள். அபலைகள் மீது எவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன. இதுவும் நாடகத்தில் அமைந்துள்ளது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. உலகிற்கு அதிபதி ஆவதற்கு அல்லது உலக அரசாட்சி பெற வேண்டும் என்றால் முக்கியமாக காம விகாரத்தின் மீது வெற்றி அடைய வேண்டும். சம்பூர்ண விகாரமற்றவர்களாக அவசியம் ஆக வேண்டும்.

 

2. எப்படி நமக்கு தந்தை கிடைத்துள்ளாரோ அதே போல அனைவரையும் தந்தையை சந்திக்குமாறு செய்யும் முயற்சி செய்ய வேண்டும். தந்தையின் சரியான அறிமுகத்தை கொடுக்க வேண்டும். உண்மையிலும் உண்மையான யாத்திரையை கற்பிக்க வேண்டும்,

 

வரதானம்:

அமைதி சக்தியின் மூலம் விநாடியில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு காணக் கூடிய ஏகாந்தவாசி ஆகுக.

 

ஏதாவது புதிய அல்லது சக்திசாலியான கண்டுபிடிப்பு செய்கின்றனர் எனில் அண்டர்கிரவுண்டில் சென்று விடுவர். இங்கு ஏகாந்தவாசி ஆவது தான் அண்டர்கிரவுண்ட் ஆகும். நேரம் கிடைக்கும் போது, காரியங்கள் செய்தாலும், பேசும் போது - கேட்கும் போது, கட்டளைகள் பிறப்பிக்கும் போதும் இந்த தேக உலகம் மற்றும் தேக உணர்விலிருந்து விடுபட்டு அமைதியில் சென்று விடுங்கள். இந்த பயிற்சி அல்லது அனுபவம் செய்வதற்கு, செய்விக்கும் நிலையானது ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு ஏற்படுத்தி விடும். இதன் மூலம் ஒரு விநாடியில் யாரை வேண்டுமென்றாலும் அமைதி அல்லது சக்தியின் அனுபவத்தை செய்விக்க முடியும். யார் எதிரில் வந்தாலும் அவர்கள் இதே நிலையின் சாட்சாத்காரத்தின் அனுபவம் செய்வார்கள்.

 

சுலோகன்:

வீண் எண்ணங்கள் அல்லது விகார எண்ணங்களிலிருந்து விடுபட்டு ஆத்ம நிலையில் நிலைத்திருப்பது தான் யோகயுக்த் ஆவதாகும்.

 

ஓம்சாந்தி