15-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

பாபா அனைத்து குழந்தைகளுக்கும் நிறைய வாழ்த்துகளை வழங்குகிறார் ஏன்?

பதில்:

ஏனென்றால் என்னுடைய குழந்தைகளாகிய நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாகிறீர்கள் என்று பாபா கூறுகிறார். இப்போது நீங்கள் இராவணனின் சங்கி- பிணைப்பி-ருந்து விடுபடு கிறீர்கள். நீங்கள் சொர்க்கத்தின் இராஜ்யத்தைப் பெறுகிறீர்கள், மதிப்புடன் தேர்ச்சி அடைகின்றீர்கள். நான் ஆவதில்லை. ஆகவே, பாபா உங்களுக்கு நிறைய வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றார். ஆத்மாக் களாகிய நீங்கள் பட்டங்கள், உங்களுடைய கயிறு என் கையில் இருக்கிறது. நான் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுகிறேன்.

பாடல்:

கடைசியில் அந்த நாள் வந்தது இன்று .....

ஓம் சாந்தி. இந்த அமர கதையை யார் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அமர கதை என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள். சத்திய நாராயணனின் கதை என்றும் சொல்லுங் கள் அல்லது மூன்றாவது கண் கிடைத்த கதை என்றும் சொல்லுங்கள். மூன்றும் முக்கிய மானதாகும். இப்போது நீங்கள் யார் முன்பாக அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள். இவர் பிரம்மா கூட நிறைய சத்சங்கங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கே அனைத்து மனிதர்களும் கண்களுக்கு தெரிகிறார்கள். இந்த சன்னியாசி கதை கூறுகிறார் என்று கூறுவார்கள். சிவானந்த் கூறுகின்றார். பாரதத்திலோ நிறைய சத்சங்கங்கள் உள்ளன. வீதிக்கு வீதி சத்சங்கம் இருக்கிறது. தாய்மார்கள் கூட புத்தகங்களை எடுத்துக் கொண்டு சத்சங்கம் செய்கிறார்கள். எனவே, அங்கு மனிதர்கள் பார்ப்பதற்கு தெரிகிறார்கள். ஆனால் இங்கு அதிசயமான விஷயம் ஆகும். உங்களுடைய புத்தியில் யார் இருக்கிறார்கள்? பரமாத்மா இப்போது பாபா எதிரில் வந்திருக்கின்றார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நிராகார தந்தை நம்மைப் படிக்க வைக்கிறார், ஆஹா ! ஈஸ்வரன் பெயர் உருவத்திலிருந்து விடுபட்டவர் என கூறுகிறார்கள். பெயர் உருவத்திலிருந்து விடு பட்ட பொருள் என்று ஒன்று கிடையாது என பாபா புரிய வைக்கிறார். இங்கே எந்த ஒரு சாகார மனிதனும் கற்பிக்கவில்லை என்று குழந்தைகள் அறிகிறீர்கள். எங்கு வேண்டு மானாலும் செல்லுங்கள். முழு உலகத்திலும் சாகாரத்தில் இருப்பவர்கள் தான் கற்பிக் கிறார்கள். இங்கேயோ சுப்ரீம் தந்தை இருக்கிறார். அவருக்கு நிராகார் இறை தந்தை என்று கூறப்படுகிறது. அந்த நிராகார் சாகாரத்தில் அமர்ந்து படிக்க வைக்கிறார். இது முற்றிலும் புதிய விஷயம் ஆகும். ஒவ்வொரு பிறவியிலும் இவர் இந்த பண்டிதர், குரு என கேட்டு வந்துள்ளீர்கள். நிறைய பெயர்கள் இருக்கிறது. பாரதம் மிகப் பெரியது. எதை கற்றுக் கொடுக்கிறார்களோ புரிய வைக்கிறார்களோ அவர்கள் மனிதர்களே ! மனிதர்கள் தான் சீடர்களாக மாறு கிறார்கள். பல்வேறு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். இன்னார் கூறுகிறார்கள் என எப்போதும் சரீரத்தின் பெயர் கூறப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் பதீத பாவனா வாருங்கள் என்று நிராகாரரை அழைக்கிறார்கள். அவரே வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஒவ்வொரு கல்பத்திலும் முழு உலகமும் அசுத்தமாகி விடுகிறது. அதை தூய்மையாக்கக் கூடியவர் ஒரேயொரு நிராகாரர் தந்தை என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களிலும் ஒரு சிலர் அரைகுறையாக இருக்கிறார்கள். சிலர் உறுதியாக இருக்கிறார்கள். ஏனென்றால் நீங்கள் அரைக் கல்பமாக தேக உணர்வில் இருந்தீர்கள். இப்போது இப்பிறவியில் ஆத்ம உணர்வுடையவராக மாற வேண்டும். உங்களுடைய தேகத்தில் உள்ள ஆத்மாவிற்கு பரமாத்மா புரிய வைக்கிறார். ஆத்மா தான் சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கிறது. ஆத்மா உடல் மூலமாக நான் இன்னார் என கூறுகிறது. ஆனால் ஆத்ம உணர்வுடையவராக யாரும் இல்லை. இந்த பாரதத்தில் யார் சூரிய வம்சத்தினராக சந்திர வம்சத்தினராக இருந்தனரோ அவர்களே இச்சமயம் வந்து பிராமணர் ஆவார்கள். பிறகு அவர்களே தேவதையாவார்கள் என பாபா புரிய வைக்கிறார். மனிதர்கள் தேக உணர்வில் இருக்கக் கூடிய பழக்கத்தினால் ஆத்ம உணர்வில் இருப்பதை மறந்து போகிறார்கள். ஆகவே பாபா ஆத்ம உணர்வுடையவராகுங்கள் என அடிக்கடி கூறுகின்றார். ஆத்மா தான் விதவிதமான உடலை எடுத்து நடிக்கிறது. இது அவருடைய உடல் ஆகும். இப்போது பாபா குழந்தைகளுக்கு மன்மனாபவ என்று கூறுகிறார். மற்றபடி கீதையை படிப்பதினால் எந்த இராஜ்ய பாக்கியமும் கிடையாது. உங்களை இச்சமயம் திரிகால தரிஷியாக மாற்றுகிறார். இரவு பகல் வித்தியாசம் ஆகிவிட்டது. நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். கிருஷ்ணரோ சத்யுகத்தின் இளவரசன் என பாபா புரிய வைக்கிறார். சூரிய வம்சத்தின் தேவதைகளாக இருப்பவர்களுக்கு எந்த ஞானமும் இல்லை. ஞானம் மறைந்து போய்விடும். ஞானம் சத்கதிக்காகத் தான். சத்யுகத்தில் யாரும் துர்கதியில் இல்லை. இது கலியுகம் ஆகும். பாரதத்தில் முதலில் சூரிய வம்சத்தினர் 8 பிறவிகளும், பிறகு சந்திரவம்சத்தினர் 12 பிறவிகளும் எடுக்கின்றனர். இப்போது உங்களுடைய இந்த ஒரு பிறவி எல்லாவற்றையும் விட உயர்ந்த பிறவியாகும். நீங்களே பிரஜா பிதா பிரம்மாவின் வாய் வழி வம்சமாகும். இது மிக உயர்ந்த தர்மம் ஆகும். தேவதா தர்மத்தைக் கூட உயர்ந்த தர்மம் என கூற முடியாது. பிராமண தர்மம் அனைத்தையும் விட உயர்ந்தது. தேவதைகள் பிராப்தியை அனுபவிக்கிறார்கள்.

இன்று பல சமூக சேவகர்கள் இருக்கிறார்கள். உங்களுடயதோ ஆன்மீக சேவை யாகும். அவர்கள் செய்வது உடலுக்கான சேவையாகும். ஆன்மீக சேவை ஒரு முறை தான் செய்யப்படுகிறது. முன்பு இந்த சமூக சேவகர் யாரும் இல்லை. இந்த ராஜா ராணி ராஜ்யம் செய்தனர். சத்யுகத்தில் தேவி தேவதை இருந்தனர். நீங்களே பூஜைக்குரியவராக இருந்தீர்கள். பிறகு பூஜாரி ஆகிவிட்டீர். லஷ்மி நாராயணன் வாம மார்க்கத்தில் போகும் போது கோவில்களைக் கட்டுகிறார்கள். முதன் முதலில் சிவனுடைய கோயிலைக் கட்டு கிறார்கள். அவர் அனைவருக்கும் சத்கதியைக் கொடுக்கக் கூடிய வள்ளல் என்றால் அவருடைய பூஜை நிச்சயம் நடக்க வேண்டும். சிவபாபா தான் ஆத்மாக்களை நிர்விகாரியாக மாற்றினார் அல்லவா? பிறகு தேவதைகளுடைய பூஜை நடக்கிறது. நீங்களே பூஜைக்குரியவராக இருந்தீர்கள். பிறகு நீங்களே பூஜாரி ஆகிவிட்டீர்கள். பாபா புரிய வைத்திருக்கிறார்-சக்கரத்தை நினைத்துக் கொண்டே இருங்கள். ஏணிப்படியில் இறங்கி இறங்கி ஒரேயடியாக தரையில் வந்து விட்டீர்கள். இப்போது உங்களுடையது ஏறும் கலையாகும். உங்களுடையது ஏறும் கலை என்றால் அனைவருக்குமே நன்மை என கூறுகிறார்கள். முழு உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரையும் இப்போது ஏறும் கலையில் கொண்டு செல்கிறேன். பதீத பாவனர் வந்து அனைவரையும் தூய்மையாக மாற்றுகிறார். சத்யுகமாக இருந்த போது ஏறும் கலை இருந்தது. மற்ற ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்தில் இருந்தார்கள்.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே ! நான் பாரதத்தில் தான் ஜன்மம் எடுக்கிறேன் என பாபா புரிய வைத்திருக்கிறார். சிவபாபா வந்தார் என பாடப்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் வந்திருக்கிறார். இதற்கு ராஜஸ்வ அஸ்வமேத அழியாத ருத்ர ஞான யாகம் என கூறப்படுகிறது. சுய இராஜ்யத்தை அடைவதற்காக யாகம் படைக்கப் பட்டிருக்கிறது. தடைகள் ஏற்பட்டது. இப்போதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தாய்மார்கள் மீது கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. பாபா இவர் துயிலுரிக்கிறார், (மானபங்கம்) எங்களை இவர்கள் விடுவதில்லை என கூறுகிறார்கள். பாபா எங்களுக்கு பாதுகாப்பு செய்யுங்கள். திரௌபதிக்கு காப்பாற்றியதாகக் காண்பிக்கிறார்கள். இப்போது நீங்கள் 21 பிறவிகளுக்கு எல்லையற்ற தந்தையிடமிருந்து சொத்து அடைவதற்காக வந்துள்ளீர்கள். நினைவு யாத்திரையினால் தங்களை தூய்மையாக்கிக் கொள்கிறீர்கள். பிறகு விகாரத்தில் விழுந்து விட்டால் முடிந்தது. ஒரேயடியாக கீழே விழுந்து விடுவீர்கள். ஆகவே நிச்சயம் தூய்மையாக வேண்டும் என்று பாபா கூறுகிறார். யார் போன கல்பத்தில் மாறினார்களோ அவர்களே தூய்மையின் உறுதி மொழி எடுப்பார்கள். பிறகு ஒரு சிலர் தூய்மையாக இருப்பார்கள். ஒரு சிலர் தூய்யைமாக இருக்க மாட்டார்கள். முக்கியமான விஷயம் நினைவாகும். நினைத்தால் தான் தூய்மையாகலாம். சுய தரிசன சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டே இருந்தால் உயர்ந்த பதவி பெறலாம். விஷ்ணுவின் இரட்டை ரூபம் இராஜ்யம் செய்தார்கள் அல்லவா? ஆனால் விஷ்ணுவிற்குக் காண்பிக்கப்பட்டிருக்கின்ற சங்கு சக்கரம் போன்றவை தேவதைகளிடம் கிடையாது. லஷ்மி நாராயணருக்குக் கூட இல்லை. விஷ்ணுவோ சூட்சும வதனத்தில் இருக்கிறார். அவருக்கு சக்கரத்தின் ஞானத்தைப் பற்றி அவசியம் இல்லை. அங்கே சைகைகள் மட்டும் இருக்கிறது. நான் சாந்திதாமத்தில் இருக்கக் கூடியவர் என நீங்கள் அறிகிறீர்கள். அது நிராகார உலகம் ஆகும். இப்போது ஆத்மா என்றால் என்ன இதுவும் மனிதர் களுக்குத் தெரியவில்லை. ஆத்மா பரமாத்மா ஆகிறது என கூறுகிறார்கள். ஆத்மா ஒரு மின்னக் கூடிய நட்சத்திரம். புருவ மத்தியில் இருக்கிறது என கூறுகிறார்கள். இந்த கண்களினால் பார்க்க முடியாது. யார் எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யட்டும். கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து ஆத்மா எப்படிப் போகிறது என்று கூட பார்க்கட்டும். ஆனால் யாருக்கும் தெரிவதில்லை. ஆத்மா என்றால் என்ன? எப்படி போகிறது? என முயற்சி செய்கிறார்கள். மற்றபடி ஆத்மா நட்சத்திரம் போன்று இருக்கிறது என்று தான் கூறுகிறார்கள். தெய்வீக பார்வை இல்லாமல் அதைப் பார்க்க முடியாது. பக்தி மார்க்கத்தில் அதற்கு காட்சிகள் கிடைக்கிறது. அர்ஜுனனுக்கு அகண்ட ஜோதியாக காட்சி கிடைத்தது என எழுதி உள்ளார்கள். என்னால் பொறுத்துக் கொள்ள முடியாவில்லை என அர்ஜுனர் கூறினார். அவ்வளவு பிரகாசமாக எதுவும் இருந்திருக்காது என பாபா புரிய வைக்கிறார். ஆத்மா வந்து சரீரத்தில் பிரவேசிக்கிறது. யாருக்கும் தெரிவதில்லை. பாபா எப்படி பிரவேசித்து பேசுகிறார் என நீங்கள் கூட புரிந்துக் கொள்கிறீர்கள். ஆத்மா வந்து பேசுகிறது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கும் சக்தியைப் பற்றிய விசயம் இல்லை. ஆத்மா எந்த உடலையும் விட்டு போவதில்லை. இது சாட்சாத்காரத்தின் விஷயம் ஆகும். அதிசயமான விஷயம் அல்லவா? நான் சாதரண உடலில் வருகிறேன் என பாபா கூறுகிறார். ஆத்மாவை அழைக்கிறார்கள் அல்லவா? முன்பு ஆத்மாக்களை அழைத்து அவர்களிடம் கேள்விகள் கூட கேட்பார்கள். இப்போதோ தமோபிரதானம் ஆகிவிட்டது அல்லவா? நாம் சென்று பதீதர்களை தூய்மையாக மாற்றலாம் என்பதற்காகாவே தந்தை வந்துள்ளார். 84 பிறவிகள் என்று கூட கூறுகிறார்கள். யார் முதலில் வந்தனரோ அவர்கள் நிச்சயம் 84 பிறவிகளை எடுப்பர் என புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களோ லட்சக் கணக்கான வருடங்கள் எனக் கூறிவிட்டார்கள். உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பினேன். நீங்கள் சென்று இராஜ்யம் செய்தீர்கள். பாரதவாசிகளாகிய உங்களைத் தான் சொர்க்கத்திற்கு அனுப்பினேன். சங்கமத்தில் தான் இராஜயோகத்தைக் கற்பித்தேன் என்று பாபா புரிய வைக்கிறார். நான் கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். கீதையிலோ ஒவ்வொரு யுகத்திலும் என்ற வார்த்தையை எழுதிவிட்டனர் என பாபா கூறுகிறார்.

இப்போது நாம் ஏணிப்படியில் எப்படி இறங்குகிறோம் ஏறுகிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். ஏறும் கலை, பிறகு இறங்கும் கலையாகும். இப்போது இந்த சங்கமயுகம் அனைவருக்கும் ஏறும் கலையின் யுகம் ஆகும். அனைவரும் ஏறிப் போகிறார்கள். அனைவரும் மேலே செல்கிறார்கள். பிறகு நீங்கள் சொர்க்கத்தில் நடிப்பதற்காக வருவீர்கள். சத்யுகத்தில் வேறு எந்த தர்மமும் இல்லை. அதற்கு விகாரமற்ற உலகம் என்று கூறப்படு கிறது. பிறகு தேவி தேவதைகள் வாம மார்க்கத்தில் சென்று அனைவரும் விகாரிகளா கிறார்கள். ராஜா ராணி எப்படியோ அப்படியே பிரஜைகள். பாரதவாசிகளாகிய நீங்கள் விகாரமற்ற உலகத்தில் இருந்தீர்கள். இப்போது விகார உலகமாக இருக்கிறது என பாபா புரிய வைக்கிறார். பல தர்மங்கள் இருக்கின்றன. மற்ற படி ஒரேயொரு தேவி தேவதா தர்மம் இல்லை. எப்போது இல்லையோ கட்டாயம் அப்போது தானே ஸ்தாபனை ஆகும். நான் பிரம்மா மூலமாக வந்து ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை உருவாக்குகிறேன் என பாபா கூறுகிறார். இங்கே தான் செய்வார்கள் அல்லவா? சூட்சும வதனத்தில் செய்ய மாட்டார். பிரம்மா மூலமாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறேன் என பாபா கூறுகிறார். இச்சமயம் உங்களை தூய்மையானவர்கள் என கூற முடியாது. தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள். நேரம் ஆகிறது அல்லவா. அழுக்கிலிருந்து தூய்மையாக எப்படி மாறுவது என்பது எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. உண்மையில் மகிமைகள் ஒரு தந்தைக்குத் தான். அந்த தந்தையை மறந்தமையால் அனாதைகள் ஆகிவிட்டீர்கள். சண்டயிட்டுக் கொண்டிருக் கிறீர்கள். பிறகு அனைவரும் சேர்ந்து எப்படி ஒன்றாக முடியும் என கூறுகிறீர்கள். சகோதரர்கள் அல்லவா? பிரம்மா பாபா அனுபவியாக இருக்கிறார். இவர் முழுமையாக பக்தி செய்திருக்கிறார். அனைவரையும் விட அதிகமாக இந்த குருக்களை அடைந்திருக்கிறார். இந்த அனைத்தையும் விடுங்கள் என பாபா கூறுகின்றார். இப்போது நான் உங்களுக்குக் கிடைத்திருக்கிறேன். அனைவருக்கும் சத்கதியை கொடுக்கக் கூடிய வள்ளல் ஒரேயொரு சத் ஸ்ரீ அகால் என்று கூறுகிறார்கள் அல்லவா? பொருள் புரிய வில்லை. பலர் படிக்கிறார் கள். அனைவரும் இப்போது தூய்மை இல்லாமல் இருக்கிறார்கள். பிறகு தூய்மையான உலகமாக மாறும் என பாபா புரிய வைக்கிறார். பாரதம் தான் அழிவற்றது. இது யாருக்கும் தெரியவில்லை. பாரதம் ஒரு போதும் அழிவதும் இல்லை. ஒரு போதும் பிரளயமும் நடப்பதில்லை. கடலில் ஆல இலையில் ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார் என காண்பிக் கிறார்கள். இப்போது ஆல இலையில் குழந்தை வர முடியாது. நீங்கள் கருவிலிருந்து மிகவும் எளிதாக பிறவி எடுக்கிறீர்கள் என பாபா புரிய வைக்கிறார். அங்கே கர்ப மாளிகை என்று கூறப்படுகிறது. இங்கே கர்பச் சிறை ஆகும். சத்யுகத்தில் கர்ப மாளிகையாகும். முதலிலேயே ஆத்மாவிற்கு காட்சிகள் கிடைக்கிறது. இந்த உடலை விட்டுவிட்டு மற்றொன்றை எடுக்க வேண்டும். அங்கே ஆத்ம உணர்வில் இருக்கின்றார்கள். மனிதர்கள் படைப் பவரைப் பற்றியோ படைப்பின் முதல், இடை, கடை பற்றியோ அறியவில்லை. இப்போது பாபா ஞானக் கடல் என நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் மாஸ்டர் கடல் ஆகிறீர்கள். நீங்களோ(தாய்மார்கள்) நதிகள், மேலும் இந்த கோபியர்கள் ஞான மான சரோவர் ஆவர். இவர் ஞான நதியாவார், நீங்கள் சரோவர் ஆவீர். இல்லற மார்க்கம் வேண்டும் அல்லவா? உங்களுடைய தூய்மையான கிரகஸ்த ஆஸ்ரமம் இருந்தது. இப்போது பதீதமாக இருக்கிறது. நாம் ஆத்மா என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என பாபா கூறுகிறார். ஒரு பாபாவை நினைக்க வேண்டும். எந்த ஒரு தேக தாரியையும் நினைக் காதீர்கள் என பாபா கட்டளை இட்டுள்ளார். இந்த கண்களினால் பார்ப்பவை அனைத்தும் அழிந்து போகும். ஆகவே மன்மனாபவ மத்யாஜீபவ என பாபா கூறுகிறார். இந்த சுடுகாட்டை மறந்துக் கொண்டே செல்லுங்கள். நீங்கள் பாபாவை மறந்து விடும் போது தான் புயல் வருகிறது. இந்த நினைவு யாத்திரை ஒரு முறை தான் நடக்கிறது. அது மரண உலகத்தின் யாத்திரை யாகும். இது அமர லோகத்தின் யாத்திரையாகும். எனவே இப்போது எந்த தேக தாரியையும் நினைக்காதீர்கள் என பாபா கூறுகின்றார்.

குழந்தைகளே, சிவஜெயந்திக்காக எவ்வளவு கடிதங்களை (தந்தி) அனுப்புகிறீர்கள். அப்படியே ஆகட்டும் என பாபா கூறுகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கும் பாபா வாழ்த்துகளைத் தெரிவிக் கிறார். உண்மையில் உங்களுக்குத் தான் வாழ்த்துகள் ! ஏனென்றால், நீங்கள் தான் மனிதனிலிருந்து தேவதையாகிறீர்கள். பிறகு யார் மதிப்புடன் தேர்ச்சி அடைகிறார்களோ அவர்களுக்கு அதிக மதிப்பெண்ணும் (முன் வரிசையில்) நல்ல நம்பரும் கிடைக்கும். நீங்கள் இப்போது இராவணனின் சங்கிலியிருந்து விடுபடுவதால் பாபா உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறார். அனைத்து ஆத்மாக்களும் பட்டங்கள் ஆகும். அனைவரின் கயிறும் பாபாவின் கையில் இருக்கிறது. அவர் அனைவரையும் அழைத்துச் செல்வார். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளலாக இருக்கிறார். ஆனால் நீங்கள் சொர்க்கத்தின் இராஜ்ய பதவியைப் பெறுவதற்காக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. மதிப்புடன் தேர்ச்சி (பாஸ் வித் ஆனர்) அடைவதற்கு ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். எந்த மனிதரையும் நினைக்கக் கூடாது. இந்த கண்களினால் என்னவெல்லாம் பார்க்கிறீர்களோ அவற்றை பார்த்தாலும் பார்க்கக் கூடாது.

2. நாம் அமரலோகத்தின் யாத்திரை சென்றுக் கொண்டிருக்கிறோம். இந்த மரண உலகத்தின் விஷயங்கள் எதுவும் நினைவிற்கு வரக் கூடாது. இந்த கர்மேந்திரியங்களினால் எந்த பாவ கர்மமும் செய்யக் கூடாது. இதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வரதானம்:

இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட சுகம் நிறைந்த மனநிலையின் மூலம் அநேக ஆத்மாக்களை வரவழைக்கக் கூடிய உலகத்திற்கு நன்மை செய்பவர் ஆகுக.

எந்தளவு கடைசி கர்மாதீத் நிலை அருகாமையில் வருகிறதோ, அந்தளவு சப்தத்திலிருந்து விலகி அமைதி சொருபத்தின் மனநிலை அதிகம் விருப்பமானதாக இருக்கும் - இந்த மனநிலையில் சதா அதீந்திரிய சுகத்தின் அனுபவம் ஆகும், மேலும் இந்த அதீந்திரிய சுகம் நிறைந்த மனநிலை மூலம் அநேக ஆத்மாக்களை எளிதாக வரவழைக்க முடியும். இந்த சக்திவாய்ந்த மனநிலை தான் உலகத்திற்கு நன்மை செய்யக் கூடிய மனநிலை யாகும். இந்த மனநிலை மூலம் நெடுந்தூரத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு (சந்தேஷ்) செய்தியை வழங்க முடியும்..

சுலோகன்:

ஒவ்வொருவரின் விசேஷத்தன்மையை நினைவில் வைத்து நம்பிக்கையுடைவர் ஆகிவிட்டீர்கள் என்றால் குழுவில் ஒற்றுமை ஏற்பட்டுவிடும்.