15.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! அந்தர்முகி (உள்நோக்கு முகம் உள்ளவர்) ஆகி ஞான மனன சிந்தனை செய்தீர்கள் என்றால் குஷி மற்றும் போதை இருக்கும். நீங்கள் தந்தைக்குச் சமமாக ஆசிரியர் ஆகிவிடுவீர்கள்.

 

கேள்வி:

எந்த ஆதாரத்தில் உள்ளுக்குள் குஷி நிலையாக இருக்க முடியும்?

 

பதில்:

பிறருக்கும் நன்மையை செய்து அனைவரையும் குஷிப்படுத்தும் போது நிலையான குஷி இருக்கும். இரக்க மனம் உள்ளவராக ஆகுங்கள் அப்போது குஷி நிலைத்திருக்கும். இரக்க மனம் உள்ளவராக ஆகக் கூடியவர்களுடைய புத்தியில் இருக்கும் - ஆஹா எனக்கு அனைத்து ஆத்மாக்களின் தந்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார், தூய்மையானவனாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். நான் உலகின் எஜமானன் ஆகிறேன்! இப்படிப்பட்ட குஷியை அவர்கள் தானம் செய்தபடி இருப்பார்கள்.

 

ஓம் சாந்தி!

ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளிடம் கேட்கிறார் - குழந்தைகளே! இந்த ஓம் சாந்தி என்பதை யார் கூறியது? (சிவபாபா). ஆம், சிவபாபா கூறினார்; ஏனென்றால் இவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை என்பது குழந்தைகளுக்குத் தெரியும். ஒவ்வொரு கல்பமும் இந்த ரதத்தில் தான் வந்து கற்பிக்கிறேன் என்று கூறுகிறார். இப்போது இவர் கற்றுத் தரக் கூடிய ஆசிரியராக ஆகியுள்ளார். ஆசிரியர் வந்தால் காலை வணக்கம் என்று கூறுவார். குழந்தைகளும் கூட காலை வணக்கம் என்று கூறுவார்கள். ஆத்மாக்களுக்கு பரமாத்மா காலை வணக்கம் கூறுகிறார் என்பதை குழந்தைகள் அறிவார்கள். லௌகீகமான முறையில் காலை வணக்கத்தை பலரும் கூறியபடி இருக்கின்றனர். இவரோ எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, அவர் வந்து கற்பிக்கிறார். குழந்தைகளுக்கு முழு மரம் அல்லது நாடகத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார். அனைத்து ஆத்மாக்களுடைய தந்தை வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நம்மை படிப்பிக்கிறார். அவர் நம்முடைய தந்தை, ஆசிரியர், குருவாகவும் இருக்கிறார் என்ற நம்பிக்கை முழு நாளும் புத்தியில் இருக்க வேண்டும். அவரை படைப்பவர் என்றும் கூறுகின்றனர் - இதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாக்களைப் படைப்பதில்லை. நான் விதை ரூபமாக இருக்கிறேன் என்று புரிய வைக்கிறார். இந்த மனித சிருஷ்டி மரத்தைப் பற்றிய ஞானத்தை உங்களுக்குக் கூறுகிறேன். விதையைத் தவிர வேறு யார் இந்த ஞானத்தைக் கொடுப்பார்கள்? மரத்தை அவர் படைத்தார் என்று கூற மாட்டோம். குழந்தைகளே! இது ஆரம்பமும் முடிவும் இல்லாதது என்று கூறுகிறார். தந்தை ஞானக்கடல் என்று கூறப்படுகிறார். அனைத்தும் அறிந்தவர். அதாவது மரத்தின் முதல், இடை, கடைசியின் இரகசியத்தை அறிந்துள்ளார். தந்தைதான் மனித சிருஷ்டியின் விதை ரூபமாகவும் ஞானக்கடலாகவும் இருக்கிறார். அவருக்குள் தான் முழு ஞானமும் உள்ளது அவர் தான் வந்து குழந்தைகளுக்கு கற்பிக்கிறார். அனைத்து மனிதர்களும் கேட்டபடி இருக்கிறார்கள் - அமைதி எப்படி ஏற்படும்? என்று அமைதியையோ அமைதிக் கடல் தந்தை தான் ஸ்தாபனை செய்கிறார் என்று நீங்களும் கூறுவீர்கள். அவர் அமைதி, சுகம் மற்றும் ஞானக்கடலாக இருப்பவர். என்ன ஞானம்? சிருஷ்டியின் முதல், இடை, கடைசியின் ஞானம். அந்த மனிதர்கள் சாஸ்திரங்களைக் கூட ஞானம் என்று புரிந்து கொள்கின்றனர். இப்படி சாஸ்திரங்களை சொல்லக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை தாமே வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கிறார் மற்றும் சிருஷ்டியின் முதல், இடை, கடைசியின் ஞானத்தையும் கூறுகிறார். அவருடைய வருகையின் போது தான் அமைதி ஸ்தாபனை ஆகிறது என்பதை கூட புரிந்து கொள்கிறீர்கள். முக்திதாமத்தில் அமைதி தான் இருக்கிறது. சாந்தி தாமத்தில் அனைவருமே அமைதியில் இருந்தோம் என்பது கூட யாருக்கும் தெரியாது. அமைதி எப்படி ஏற்படும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே கண்டிப்பாக அமைதி இருந்தது. இராம இராஜ்யத்தில் அமைதி தேவை. இராம இராஜ்யம் எப்போது இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. எவ்வளவு அளவற்ற ஆத்மாக்கள் இருக்கிறார்கள் என்பதை தந்தை அறிவார். ஆத்மாக்கள் அனைவருக்கும் நான் தந்தையாக உள்ளேன். இப்படி வேறு யாரும் கூற முடியாது. அனைத்து ஆத்மாக்களும் இப்போது இங்கே இருக்கிறார்கள். முதலில் சாந்தி தாமத்தில் இருந்தார்கள் பிறகு சுகதாமத்திலிருந்து துக்க தாமத்திற்கு வந்தார்கள். இந்த சுக துக்கத்தின் விளையாட்டு எப்படி உருவாகியுள்ளது என்பது யாருக்கும் தெரியாது. போய் வரக்கூடிய விளையாட்டு என்று வெறுமனே சொல்லிவிடுகின்றனர். அவர் நம் அனைத்து ஆத்மாக்களின் தந்தை என்பது இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. அவர் நமக்கு ஞானம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் வந்து சொர்க்க இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார். நமக்கு கற்பிக்கிறார். அவர் கூறுகிறார் - குழந்தைகளே, நீங்கள்தான் தேவதைகளாக இருந்தீர்கள். அனைத்து ஆத்மாக்களின் தந்தை உங்களுக்கு ஞானம் கற்பிக்கிறார் என்று வேறு யாரும் கூறமாட்டார்கள். எவ்வளவு எல்லைக்கப்பாற்பட்ட பெரிய நாடகமாக உள்ளது, அவர்கள் இலட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறி விடுகின்றனர். இது 5 ஆயிரம் வருடங்களின் விளையாட்டு என்று நீங்கள் கூறுவீர்கள். அமைதி இரண்டு விதமானது என்று இப்போது நீங்கள் தெரிந்து கொண்டு விட்டீர்கள் - ஒன்று சாந்தி தாமத்தினுடையது, மற்றொன்று சுக தாமத்தினுடையது. அனைத்து ஆத்மாக்களின் தந்தை நமக்கு ஞானம் கற்பிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இது எந்த சாஸ்திரத்திலும் இல்லை. எல்லைக்கப்பாற்பட்ட தந்தை அல்லவா. அனைத்து தர்மத்தவர்களும் அவரை அல்லாஹ், இறைத் தந்தை, பிரபு என்றெல்லாம் கூறுகின்றனர். அவருடைய படிப்பும் கூட கண்டிப்பாக அவ்வளவு உயர்ந்ததாக இருக்கும். இது முழு நாளும் உள்ளுக்குள் இருக்க வேண்டும். நான் உங்களுக்கு தினம்தோறும் புதிய விஷயங்களைக் கூறுகிறேன் என்று தந்தை கூறுகிறார். புது விதத்தில் படிப்பிக்கிறேன். பிறகு நீங்கள் பிறருக்கும் கற்பிக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் தேவிகளுக்கும் கூட அதிக மதிப்பு உள்ளது. உண்மையில் இந்த பிரம்மாவும் கூட பெரிய தாயாக உள்ளார். இவரை (சிவனை) தந்தை என்று மட்டும்தான் கூறுவார்கள். தாய் தந்தை என்று இவர்களைக் கூறுவார்கள். இந்த மாதாவின் மூலம் தந்தை உங்களைத் தத்தெடுக்கிறார். குழந்தைகளே, குழந்தைகளே என்று கூறியபடி இருக்கிறார்.

 

நான் முழுமையாக 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு உங்களுக்கு இந்த ஞானத்தைக் கூறுகிறேன். இந்த சக்கரம் கூட உங்களுடைய புத்தியில் இருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் புதியதாக கேட்கிறீர்கள். ஞானக் கடலாகிய தந்தையினுடையது ஆன்மீக ஞானமாகும். ஆத்ம தந்தைதான் ஞானக் கடலாவார். ஆத்மா பாபா என்று கூறுகிறது. குழந்தைகளும் கூட அனைத்து விஷயங்களையும் நல்ல முறையில் தாரணை செய்கின்றனர். அந்தர்முகி (உள் நோக்கு முகமுள்ளவர்) ஆகி இப்படி இப்படியாக மனன சிந்தனை செய்யும்போது அந்த குஷி மற்றும் போதை இருக்கும். சிவபாபா பெரிய ஆசிரியர் ஆவார். அவர் பிறகு உங்களையும் ஆசிரியராக ஆக்குகிறார். அவர்களிலும் வரிசைக்கிரமமாக உள்ளனர். பாபாவுக்கும் தெரியும் - இந்த குழந்தை நன்றாக படிக்க வைக்கிறார். அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். உங்களை இப்படி ஆக்கியுள்ள பாபாவிடம் எங்களையும் விரைவாக அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுகின்றனர். பாபா கூறுகிறார் - நான் இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியிலும் இறுதியில் இவருக்குள் பிரவேசம் செய்து உங்களைப் படிப்பிக்கிறேன். ஒவ்வொரு கல்பமும் நாம் எத்தனை முறை இந்த பாரதத்தில் வந்திருப்போம். நீங்கள் இந்த புதிய விஷயத்தைக் கேட்டு அதிசயப் படுகிறீர்கள். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நம்மை படிப்பிக்கிறார். பக்தி மார்க்கத்தில் அவருக்குத் தான் எத்தனை பெயர்கள் உள்ளன, சிலர் பரமாத்மா, ராம், பிரபு, அல்லாஹ். . . என்று கூறுகின்றனர். ஒரே ஒரு ஆசிரியருக்குப் பாருங்கள் எத்தனை பெயர்கள் வைத்து விட்டார்கள். ஆசிரியரின் பெயர் ஒன்றுதான் இருக்க முடியும். பல பெயர்கள் இருக்குமா என்ன? எவ்வளவு அளவற்ற மொழிகள் இருக்கின்றன. ஆக சிலர் குதா, சிலர் காட் (இறைவன்) என்று என்னென்ன கூறி விடுகின்றனர். நான் குழந்தைகளைப் படிப்பிப்பதற்காக வந்துள்ளேன் என்று புரிந்து கொள்கிறார். படித்து தேவதைகள் ஆகி விட்டால் வினாசம் ஆகி விடும். இப்போது பழைய உலகமாக உள்ளது. அதனை புதிதாக யார் ஆக்குவார்கள்? அது என்னுடைய நடிப்பே ஆகும் என்று தந்தை கூறுகிறார். நான் நாடகத்தின் வசப்பட்டுள்ளேன். பக்தியின் விஸ்தாரம் எவ்வளவு உள்ளது என்பதையும் கூட குழந்தைகள் அறிவார்கள். இதுவும் விளையாட்டாகும். பக்திக்கு அரைக் கல்ப காலம் பிடிக்கிறது. இப்போது மீண்டும் தந்தை வந்திருக்கிறார், நமக்கு கற்றுத் தருபவரும் அவர்தான் ஆவார். அமைதியின் ஸ்தாபனம் செய்பவரும் அவர்தான் ஆவார். இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்த போது அமைதி இருந்தது. இங்கே அசாந்தி உள்ளது. தந்தை ஒருவர்தான். ஆத்மாக்கள் எவ்வளவு அளவற்றவர்கள் இருக்கின்றனர். எவ்வளவு அதிசயமான விளையாட்டாக உள்ளது. பாபா அனைத்து ஆத்மாக்களின் தந்தை, அவர்தான் நமக்கு ஞானம் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். எவ்வளவு குஷி இருக்க வேண்டும்.

 

கோப கோபியர்கள் நாம்தான், கோபி வல்லபர் தந்தை என்று நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். வெறும் ஆத்மாக்களை மட்டும் கோப கோபியர் என்று கூற மாட்டோம். சரீரம் இருக்கிறது, எனவேதான் கோப, கோபியர் அல்லது சகோதரன்-சகோதரி என்று கூறப்படுகிறது. கோபி வல்லபர் சிவபாபாவுடைய குழந்தைகள். கோப கோபியர் என்ற வார்த்தையே இனிமையாக உள்ளது. அச்சுதம், கேசவம், கோபி வல்லபன், ஜானகி நாதன், .... என்று பாடலும் உள்ளது. இந்த மகிமையும் கூட இந்த சமயத்தினுடையதுதான். தெரியாத காரணத்தினால் அனைத்து விஷயங்களையும் குடுகுடுப்பை சப்தத்தைப் போலாக்கி விட்டார்கள். தந்தை அமர்ந்து உலகின் இந்த வரலாறு புவியியலை கூறுகிறார். அந்த மனிதர்கள் இந்த கண்டங்களைப் பற்றி மட்டுமே அறிவார்கள். சத்யுகத்தில் யாருடைய இராஜ்யம் இருந்தது, எவ்வளவு சமயம் இருந்தது என்பது பற்றி தெரியாது. ஏனென்றால் கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறி விட்டனர். முற்றிலும் அடர்ந்த காரிருளில் இருக்கின்றனர். இப்போது தந்தை வந்து உங்களுக்கு சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தைக் கொடுக்கிறார். அதை தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் திரிகால தரிசி, திரிநேத்ரி (மூன்று கண்கள் உடையவர்) ஆகி விடுகிறீர்கள். இது படிப்பாகும். தந்தை தாமே கூறுகிறார் - நான் கல்பம் கல்பமாக கல்பத்தின் சங்கம யுகத்தில் வந்து உங்களை புருஷோத்தமராக ஆக்குகிறேன். நீங்கள்தான் வரிசைக்கிரமமாக ஆகிறீர்கள். படிப்பின் மூலம்தான் அந்தஸ்து கிடைக்கிறது. நம்மை எல்லைக்கப்பாற்பட்ட தந்தை படிப்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் பரமாத்மா பெயர் உருவத்திற்கப்பாற்பட்டவர், கல்லிலும் முள்ளிலும் இருக்கிறார் என்று கூறி விடுகின்றனர். என்னென்னவெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தேவிகளுக்கும் கூட எத்தனை புஜங்களை கொடுத்து விட்டனர். இராவணனுக்கு 10 தலைகள் கொடுக்கின்றனர். ஆக குழந்தைகளின் மனதிற்குள் நம்மை அனைத்து ஆத்மாக்களின் தந்தை கற்பிக்கிறார் என்பது வரவேண்டும் - ஆக, எவ்வளவு குஷி இருக்க வேண்டும். ஆனால் அந்த குஷியும் கூட, பிறருக்கு நன்மை செய்து அனைவரையும் குஷிப்படுத்தி, இரக்கமனமுள்ளவராக ஆனீர்கள் என்றால் இருக்கும். ஓஹோ, பாபா! எங்களை உலகின் மஹாராஜாவாக ஆக்கி விடுகிறீர்களே! ராஜா, ராணி, பிரஜைகள் என அனைவரும் உலகின் எஜமானன் ஆவார்கள் அல்லவா. அங்கே மந்திரிகள் இருக்க மாட்டார்கள். இப்போது ராஜாக்கள் இல்லை, வெறும் மந்திரிகளே மந்திரிகள்தான் இருக்கின்றனர். இப்போதோ, பிரஜைகளின் மீது பிரஜைகளின் இராஜ்யம் நடக்கிறது, ஆக அடிக்கடி எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நமக்கு என்ன கற்றுத் தருகிறார் என்பது புத்தியில் வர வேண்டும். நல்ல முறையில் யார் படிப்பார்களோ அவர்கள்தான் முதலில் வருவார்கள் மற்றும் உயர் பதவி அடைவார்கள். இந்த இலட்சுமி நாராயணர் இவ்வளவு செல்வந்தர்களாக எப்படி ஆனார்கள்? என்ன செய்தார்கள்? பக்தி மார்க்கத்தில் யாராவது மிகுந்த செல்வந்தர்களாக இருந்தார்கள் என்றால் இவர்கள் இப்படிப்பட்ட உயர்ந்த கர்மங்கள் செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஈசுவரனின் பெயரால் தான புண்ணியங்கள் கூட செய்கின்றனர். இதற்கு ஈடாக நமக்கு நிறைய கிடைக்கும் என்று புரிந்து கொள்கின்றனர். அடுத்த பிறவியில் செல்வந்தர் ஆகி விடுகின்றனர். ஆனால் அவர்கள் மறைமுகமாக கொடுக்கின்றனர், அதன் மூலம் அல்பக் காலத்திற்காக கொஞ்சம் கிடைக்கிறது. இப்போது தந்தை நேரடியாக வந்துள்ளார். வந்து தூய்மையாக்குங்கள் என்று அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். இந்த ஞானத்தைக் கொடுத்து எங்களை லட்சுமி நாராயணர் ஆக்குங்கள் என்று கூறுவதில்லை. மனிதர்களின் புத்தியிலோ கிருஷ்ணரின் நினைவுதான் வருகிறது. தந்தையை அறியாத காரணத்தினால் எவ்வளவு துக்கம் நிறைந்தவர்களாகிவிட்டார்கள். இப்போது தந்தை உங்களை தெய்வீக சம்பிரதாயத்தவராக ஆக்குகிறார். நீங்கள் சாந்திதாமம் சென்று பிறகு சுகதாமத்திற்கு வருவீர்கள். தந்தை எவ்வளவு நல்ல விதமாகப் புரிய வைக்கிறார். கேட்கிறார்கள், ஆனாலும் கேட்கவே இல்லை என்பது போல் இருக்கிறார்கள். கல்புத்தியிலிருந்து தங்கபுத்தியாக ஆவதே இல்லை. முழு நாளும் பாபா, பாபா தான் நினைவில் இருக்க வேண்டும். கணவனுடைய உயிர் பிரிந்து பின்னால் மனைவியின் உயிர் பிரிகிறது. மனைவி மீது கணவருக்கு அதிக அன்பு இருக்கிறது. இங்கேயோ நீங்கள் அனைவரும் குழந்தைகளாக உள்ளீர்கள். என்றாலும் கூட வரிசைக்கிரமமாகத்தான் இருக்கிறீர்கள் அல்லவா.

 

இப்படிப்பட்ட எல்லைக்கப்பாற்பட்ட தந்தையை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னை நினைவு செய்வதன் மூலம் உங்களுடைய பாவ கர்மங்கள் அழியும் என்று தந்தை கூறுகிறார். என்றாலும் மறந்து விடுகின்றனர். அட, உங்களை உலகின் எஜமானனாக ஆக்கக் கூடிய தந்தையை ஏன் மறக்கிறீர்கள்? மாயையின் புயல்கள் வீசும், ஆனாலும் நீங்கள் முயற்சி செய்தபடி இருங்கள். தந்தையை நினைவு செய்தால் ஆஸ்தி கிடைத்து விடும். சொர்க்கவாசி தேவதைகளாக அனைவரும்தான் ஆகிறார்கள். மற்றபடி தண்டனைகள் அடைந்து பிறகு ஆகின்றனர். பிறகு பதவியும் மிகவும் குறைந்து விடுகிறது. இவையனைத்தும் புதிய விஷயங்களகும். தந்தையை, ஆசிரியரை நினைவு செய்து கொண்டே இருக்கும் போது இவை நினைவில் வரும். நீங்கள் ஆசிரியரைக் கூட மறந்து விடுகிறீர்கள். எதுவரை நான் இருக்கிறேனோ, எப்போது வினாசத்தின் சமயம் வருகிறதோ மற்றும் எப்போது அனைத்தும் இந்த ஞான யக்ஞத்தில் ஸ்வாஹா (சமர்ப்பணம்) ஆகிறதோ அதுவரை படிப்பு நடந்தபடி இருக்கும் என்று தந்தை கூறுகிறார். அனைத்தையும் கற்பித்து விட்டீர்கள், இனி கற்பிக்க என்ன உள்ளது என்று நீங்கள் கேட்கிறீர்கள். புதுப் புது விஷயங்கள் வெளி வந்தபடி இருக்கும் என்று பாபா கூறுகிறார். நீங்கள் கேட்டு குஷியடைகிறீர்கள் அல்லவா. ஆக, நல்லபடி படியுங்கள் மற்றும் குசேலன் போல மாற்றம் செய்ய வேண்டியதை செய்தபடி இருங்கள். இதுவும் கூட மிகப் பெரிய வியாபாரம் ஆகும். பாபா வியாபாரத்தில் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார். ரூபாய்க்கு ஒரு அணா தர்மத்திற்காக ஒதுக்கினார். நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது ஏனென்றால் அனைவருக்கும் முன்பாக நான்(பிரம்மா பாபா) போட(கொடுக்க) வேண்டியிருந்தது. நீங்கள் எவ்வளவு அதிகம் நிரப்புகிறீர்களோ, உங்களைப் பார்த்து அனைவரும் நிரப்புவார்கள், அப்போது அனைவருக்கும் நன்மை உண்டாகும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது பக்தி மார்க்கமாக இருந்தது, இங்கேயோ அனைத்தையும் தந்தைக்குக் கொடுத்துவிட்டார் - பாபா இவையனைத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். உனக்கு முழு உலகத்தின் இராஜ்யத்தைக் கொடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். வினாசத்தின் காட்சி, சதுர்புஜ விஷ்ணுவின் காட்சியும் தெரிந்தது. ஆக அந்த சமயத்தில் நாம் உலகின் எஜமானன் ஆகப்போகிறோம் என்பது புரிந்தது. பாபாவின் பிரவேசம் ஆனது அல்லவா. வினாசத்தைப் பார்த்தார். அவ்வளவுதான், இந்த உலகம் அழிந்து கொண்டிருக்கிறது, இந்த தொழிலில் முதலானவைகளை என்ன செய்யப் போகிறேன். விட்டுவிடு இந்த அல்பத்தை! இராஜ்யம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது தந்தை உங்களுக்கும் கூட முழு பழைய உலகமும் வினாசமாக வேண்டியுள்ளது என புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். உங்களை கும்பகர்ணனின் தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காக எவ்வளவு முயற்சிகள் செய்வித்துக் கொண்டிருக்கிறார், என்றாலும் கூட நீங்கள் எழுவதே இல்லை. எனவே, குழந்தைகள் ஒரு தந்தையைத்தான் நினைவு செய்ய வேண்டும். அனைத்தையும் தந்தைக்குக் கொடுத்து விட்டால் ஒரு தந்தைதான் நினைவில் வருவார். குழந்தைகளாகிய நீங்கள் அதிகமாக நினைவு செய்ய முடியும். பந்தனத்திலிருக்கும் குழந்தைக்களின் செய்திகள் எவ்வளவு வருகின்றன... அவர்களைப் பற்றிய விவாதம்... (பிரம்மா) பாபாவுக்குள் சிந்தனை நடக்கிறது - பாவப்பட்டவர்கள் அடிகளை வாங்குகின்றனர். கணவன்மார்கள் எவ்வளவு அலைக்கழிக்கின்றனர். நாடகத்தில் உள்ளது என்று புரிந்து கொள்ளவே செய்கிறார், நாம் என்னதான் செய்ய முடியும். கல்பத்திற்கு முன்பும் கூட அபலைகளின் மீது கொடுமைகள் இழைக்கப்பட்டன. புதிய உலகமோ ஸ்தாபனை ஆகியே தீர வேண்டும். தந்தை கூறுகிறார் - பல பிறவிகளின் கடைசி பிறவியிலும் கடைசி சமயத்தில் பிரவேசம் செய்கிறேன். ஆக, நாம்தான் அழகாக இருந்தோம், இப்போது கருப்பாகியுள்ளோம். நான் தான் (பிரம்மா பாபா) முதல் நம்பரில் வருவேன். நான் சென்று கிருஷ்ணன் ஆகப் போகிறேன். இந்த படத்தைப் பார்க்கிறேன், அப்போது இது போல சென்று ஆகப் போகிறோம் என்ற சிந்தனை வருகிறது. ஆக தந்தை குழந்தைகளுக்கு நல்ல விதத்தில் புரிய வைக்கிறார், இப்போது பிறருக்குப் புரிய வைப்பது குழந்தைகளின் வேலையாகும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீக குழந்தைகளூக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாராம்சம்:

1. நாம் கோபி வல்லபனின் கோப-கோபியர் என்ற இந்த குஷி மற்றும் போதையில் இருக்க வேண்டும். அந்தர்முகி (உள் நோக்குமுகமுள்ளவர்) ஆகி மனன சிந்தனை செய்து தந்தைக்குச் சமமாக ஆசிரியர் ஆக வேண்டும்.

 

2. குசேலன் போல தனது அனைத்தையும் மாற்றம் செய்வதுடன் கூடவே படிப்பையும் நல்ல விதமாக படிக்க வேண்டும். வினாசத்திற்கு முன்பாக தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுக்க வேண்டும். கும்பகர்ணனின் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களை எழுப்ப வேண்டும்.

 

வரதானம்:

மூன்று காலங்களையும் உணர்ந்தவர் ஆகி தெய்வீக புத்தி என்ற வரதானத்தை காரியத்தில் கொண்டு வரக்கூடிய வெற்றி நிறைந்தவர் ஆகுக.

 

பாப்தாதா ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தெய்வீக புத்தி என்ற வரதானம் கொடுத்திருக்கிறார்.  தெய்வீக புத்தியின் மூலம் தான் பாபாவை, தன்னை தானே மற்றும் மூன்று காலங்களையும் தெளிவாகப் பார்க்க முடியும். அனைத்து சக்திகளை தாரணை செய்ய முடியும். தெய்வீக புத்தியுடைய ஆத்மா எந்தவொரு எண்ணத்தை காரியம் மற்றும் வார்த்தையில் கொண்டு வருவதற்கு முன்னால் ஒவ்வொரு வார்த்தை மற்றும் காரியத்தை மூன்று காலங்களையும் அறிந்து பிறகு நடைமுறையில் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு முன்னால் எந்தளவு நிகழ்காலம் தெளிவாக இருக்கிறதோ, அந்தளவு கடந்த காலம் மற்றும் எதிர்காலம் கூட தெளிவாக இருக்கும். அப்படிப்பட்ட தெய்வீக புத்தியுடைய மூன்று காலத்தையும் பார்க்கக்கூடிய காரணத்தினால் சதா வெற்றி நிரம்பியவர் ஆகிறார்கள்.

 

சுலோகன்:

சம்பூர்ண தூய்மையை தாரணை செய்யக்கூடியவர் தான் மேன்மையான ஆனந்தத்தை அனுபவம் செய்ய முடியும்.

 

ஓம்சாந்தி