15.05.22    காலை முரளி            ஓம் சாந்தி   18.01.91      பாப்தாதா,   மதுபன்


விஷ்வ கல்யாணகாரி ஆவதற்காக அனைத்து நினைவுகளிலும் முழுமையாகி அனைவருக்கும் உதவி செய்யுங்கள்

இன்று சக்திசாலி தந்தை தன்னுடைய நினைவு சொரூப குழந்தைகளை பார்த்து புன்சிரித்துக் கொண்டிருக்கிறார். உள்நாடு மற்றும் வெளி நாட்டில் அனைத்து குழந்தைகளும் நினைவு நாளை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். இன்றைய நினைவு நாள் குழந்தைகளுக்கு தன்னுடைய பிராமண வாழ்க்கை அதாவது சக்திசாலி வாழ்க்கையின் நினைவைக் கொடுக் கிறது. ஏனெனில் பிரம்மா பாபாவின் வாழ்க்கைக் கதையின் கூடவே பிராமணக் குழந்தை களுக்கும் வாழ்க்கைக் கதை உள்ளது. நிராகார தந்தை சாகார பிரம்மா பாபாவுடன் பிராமணர் களையும் படைத்தார். அப்போது தான் பிராமணர்கள் மூலமாக அழிவற்ற யக்ஞம் படைக்கப் பட்டது. பிரம்மா பாபா பிராமணர்களாகிய உங்களுடன் ஸ்தாபனைக்கு நிமித்தம் ஆனார். ஆக பிரம்மா பாபா கூடவே பிராமணர்களுக்கும் வாழ்க்கைக் கதை உள்ளது, ஆதி தேவ் பிரம்மா மற்றும் ஆதி பிராமணர்கள் இருவருக்கும் மகத்துவம் யக்ஞ ஸ்தாபனையில் உள்ளது. அனாதி தந்தை ஆதி தேவ் பிரம்மா மூலமாக ஆதி பிராமணர்களை படைத்தார். மேலும் ஆதி பிராமணர் கள் அனேக பிராமணர்களை உருவாக்கினர். இந்த ஸ்தாபனையின், பிரம்மா பாபாவின் கதையை இன்றைய நினைவு நாளில் வர்ணனை செய்கின்றீர்கள். நினைவு நாள் என்று சொல்கிறீர்கள் என்றால் வெறும் பிரம்மா பாபாவை மட்டும் நினைவு செய்தீர்களா அல்லது பிரம்மா பாபாவின் மூலமாக பாபா என்ன நினைவுகளைக் கொடுத்தாரோ, அந்த அனைத்து நினைவுகளையும் நினைவில் கொண்டு வந்தீர்களா? ஆரம்பத்திலிருந்து இப்போது வரை என்னென்ன மற்றும் எவ்வளவு நினைவுகளை கொடுத்தார் என்று நினைவு இருக்கிறதா? அமிர்த வேளையில் இருந்து இரவு வரை அனைத்து நினைவுகளையும் முன்னால் கொண்டு வாருங்கள், ஒருநாள் முழுமையாக முடிந்துவிடும். மிக நீளமான பட்டியல் அல்லவா! நினைவு வாரமாகக் கூட கொண்டாடலாம், அவ்வளவு விஸ்தாரமாக உள்ளது. ஏனெனில் வெறுமனே ரிவைஸ் செய்யக்கூடாது, ஆனால் உணர்ந்து பார்க்கிறீர்கள். ஆகையால் தான் நினைவு சொரூபம் என்று சொல்கின்றீர்கள். சொரூபம் என்றால் ஒவ்வொரு நினைவின் அனுபவம் ஆகும். நீங்கள் நினைவு சொரூபம் ஆகின்றீர்கள் மற்றும் பக்தர்கள் வெறும் நினைவு செய் கின்றார்கள். ஆக என்னென்ன நினைவுகளை அனுபவம் செய்தீர்கள்? இதனுடைய விஸ்தாரம் மிகப்பெரியதாகும். எப்படி தந்தையின் அறிமுகம் மிகப்பெரியதாக உள்ளது, ஆனால் நீங்கள் சார ரூபத்தில் 5 விசயங்களில் தந்தையின் அறிமுகம் கொடுக்கின்றீர்கள். இதேபோல் நினைவு களின் விஸ்தாரத்தையும் ஐந்து விஷயங்களின் சாரத்தில் கொண்டு வாருங்கள், ஆரம்பத் திலிருந்து இப்போது வரை பாப்தாதா எத்தனை பெயர்களின் நினைவைக் கொடுத்தார். எவ்வளவு பெயர்கள் இருக்கும்! விஸ்தாரம் அல்லவா! ஒவ்வொரு பெயரை நினைவில் கொண்டு வாருங்கள் மற்றும் சொரூபமாகி அனுபவம் செய்யுங்கள். வெறுமனே ரிவைஸ் செய்யக் கூடாது. நினைவு சொரூபம் ஆவதன் ஆனந்தம் மிக அன்பானதும் விலகியதுமாக இருக்கும். எப்படி பாபா குழந்தைகளாகிய உங்களை கண்ணின் மணி என்ற பெயரின் நினைவை கொடுக்கின்றார். தந்தையின் கண்ணின் மணி என்பதன் விசேஷத்தன்மை என்னவாக இருக்கிறது? மணியின் காரியம் என்னவாக இருக்கிறது? மணியின் சக்தி என்னவாக இருக்கிறது? இப்படிப்பட்ட அனுபவங்களை செய்யுங்கள், அதாவது நினைவு சொரூபம் ஆகுங்கள். இதேபோல ஒவ்வொரு பெயரின் நினைவை அனுபவம் செய்து கொண்டே இருங்கள். இது ஒரு உதாரணமாகக் கூறப்பட்டது. இதேபோல சிரேஷ்ட சொரூபத்தின் நினைவுகள் எத்தனை இருக்கிறது? பிராமணர்களாகிய உங்களுக்கு எத்தனை ரூபங்கள் இருக்கிறது? எது தந்தையின் ரூபமோ, அது பிராமணர்களின் ரூபம் ஆகும். அந்த அனைத்து ரூபங்களின் நினைவை அனுபவம் செய்யுங்கள். பெயர், ரூபம், குணம் - அனாதி, ஆதி மற்றும் தற்போது பிராமண வாழ்க்கையின் அனைத்து குணங்களின் நினைவு சொரூபம் ஆகுங்கள்.

இதேபோல் தான் கர்மங்கள், எவ்வளவு சிரேஷ்ட கர்மங்கள் செய்ய நிமித்தமாகி உள்ளீர்கள். அந்த கர்மங்களின் நினைவை எமர்ஜ் செய்யுங்கள். ஐந்தாவது விஷயம் பாப்தாதா அனாதி ஆதி தேசத்தின் நினைவைக் கொடுத்தார். தேசத்தின் நினைவு மூலம் வீட்டுக்கு திரும்பிச் செல்வதற் கான சக்தி வந்துவிட்டது. தன்னுடைய இராஜ்யத்தில் இராஜ்ய அதிகாரி ஆவதற்கான தைரியம் வந்தது மற்றும் நிகழ்கால சங்கமயுக பிராமண உலகத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற் கான கலை நினைவுக்கு வந்தது, வாழ்வதற்கான கலை நன்றாக வந்து விட்டது அல்லவா! உலகம் இறப்பதற்கான கலையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது, மேலும் பிராமணர் களாகிய நீங்கள் சுகமயமான மகிழ்ச்சியான வாழ்க்கையின் கலையில் பறந்து சென்று கொண்டி ருக்கின்றீர்கள். எவ்வளவு வேறுபாடு உள்ளது!

ஆக நினைவு நாள் என்பது அனைத்து நினைவுகளின் ஆன்மீக போதையின் அனுபவம் செய்வதாகும். இந்த நினைவு நாளில் உலகத்தினரைப் போல இப்படியாக எங்கள் பிரம்மா பாபா இருந்தார் என்ற வார்த்தையை நீங்கள் சொல்வதில்லை. அவர் இதைச் சொன்னார், இதைச் செய்தார், இப்படியாக இருந்தார் என்று உலகத்தில் சொல்வார்கள் மற்றும் துக்கத்தின் அலையை பரப்புவார்கள், ஆனால் பிராமணர்களாகிய உங்கள் விசேஷத்தன்மை, இப்போதும் கூடவே இருக்கிறார், துணையாக இருப்பதை அனுபவம் செய்கின்றோம் என்று நீங்கள் சொல்வீர்கள். ஆக உங்களிடம் இந்த விசேஷத்தன்மை உள்ளது, பிரம்மா பாபா சென்றுவிட்டார் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் கூடவே இருப்போம் கூடவே செல்வோம் என்று உறுதி மொழி கொடுத்துள்ளார் ஆதி ஆத்மா அவரே உறுதிமொழியை கடைபிடிக்கவில்லை என்றால் யார் உறுதிமொழியை கடைபிடிப்பார்கள் வெறும் ரூபமும் சேவைக்கான விதியும் பரிவர்த் தனை ஆகியுள்ளது. உங்கள் அனைவரின் லட்சியம் பரிஸ்தாவிலிருந்து தேவதை ஆவதாகும். பரிஸ்தாவின் உதாரணமாக பிரம்மா பாபா ஆகிவிட்டார். அனைத்துக் குழந்தைகளின் பாலனை இப்போதும் பிரம்மா மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் தான் பிரம்மா குமார் மற்றும் பிரம்மா குமாரிகள் என்று சொல்கிறீர்கள். நினைவு நாளில் மகத்துவம் என்ன என்று புரிந்ததா? இந்த நினைவுகள் மூலம் சதா அன்பில் மூழ்கி இருங்கள். இதைத்தான் பாபாவுக்கு சமமாக ஆகக்கூடிய அனுபவம் என்று சொல்லப்படுகிறது. ஆத்மாக்கள் நீங்கள் பாபாவுக்கு சமமாக அனுபவம் செய்தீர்கள். இந்த சமமான என்ற வார்த்தையை மனிதர்கள் ஒன்றாகக் கலப்பது என்ற வார்த்தையாக மாற்றி விட்டார்கள். ஆத்மா பரமாத்மா தந்தையுடன் ஒன்றாகக் கலப்பதில்லை. ஆனால் தந்தைக்கு சமமாக ஆகிறது. அனைத்து குழந்தைகளும் தத்தமது பெயரால் நினைவு நாளுக்கான நினைவை அனுப்பி உள்ளீர்கள். நிறைய பேர் சந்தேசி (செய்தி கொண்டு செல்பவர்) ஆகி அன்பு நினைவுகளை கொண்டு வந்தார்கள். மேலும் ஒவ்வொருவரும் குறிப்பாக என்னுடைய அன்பு நினைவை கொடுங்கள் என்று சொன்னார்கள். ஒவ்வொரு வருக்கும் தனியாக நினைவுக் கடிதம் எழுதுவதற்கு பதிலாக மனதில் இருந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவர் மனதின் அன்பு பாப்தாதாவின் கண்களில், மனதில் நிறைந்துள்ளது, மேலும் இப்போது விசேஷமாக நிரம்பி உள்ளீர்கள். குறிப்பாக நினைவு செய்பவர்களுக்கு பாப்தாதா குறிப்பாக இப்போதும் எமர்ஜ் செய்து அன்பு நினைவுகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொருவரின் மனதின் ஊக்கம் மற்றும் மனதின் ஆன்மீக உரையாடல், மனதின் விசயங்கள் திலாராம் தந்தையிடம் வந்தடைந்து விட்டது. பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் இந்த நினைவை கொடுத்துக் கொண்டிருக்கின்றார், சதா மனதில் கூடவே இருங்கள், சேவையில் கூடவே இருங்கள் மற்றும் ஸ்திதியில் சதா சாட்சியாக இருங்கள். எப்போதும் மாயாஜீத் கொடி பறந்து கொண்டே இருக்கட்டும். அனைத்து குழந்தை களுக்கும் எதுவும் புதிதல்ல என்ற பாடம் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சதா நினைவில் இருக்கட்டும். பிராமண வாழ்க்கை என்றால் அதில் கேள்விக்குறி ஆச்சரியக்குறி இருக்க முடியாது. எத்தனை தடவைகள் இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறோம்! புதிய விஷயமா என்ன? பிராமண வாழ்க்கை என்றாலே ஒவ்வொரு விஷயத்தை கேட்டாலும் கல்பத்திற்கு முந்தையது என்ற நினைவில் சக்திசாலியாக இருக்க வேண்டும். எது நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் என்ன ஆகும் என்ற கேள்வி எழ முடியாது. திரிகால தரிசியாக (மூன்று காலத்தை உணர்ந்தவராக) இருக்கிறீர்கள் நாடகத்தின் முதல் இடை கடைசியை தெரிந்தவராக இருக்கிறீர்கள் என்றால் நிகழ்காலம் உங்களுக்குத் தெரியாதா என்ன? பயப்படுவதில்லை தானே! பிராமண வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் நன்மை அடங்கி யுள்ளது. பயப்படுவதற்கான விஷயமே இல்லை. உங்கள் அனைவரின் கடமை, தன்னுடைய அமைதி சக்தி மூலம் அமைதியற்ற ஆத்மாக்களுக்கு அமைதியின் கிரணங்களை கொடுக்க வேண்டும். நம்முடைய சகோதர சகோதரிகள் அல்லவா! ஆகையினால் தன்னுடைய ஈஸ்வரிய குடும்பத்தின் சம்பந்தத்தின் மூலம் உதவியாளராக ஆகுங்கள். எவ்வளவுதான் யுத்தம் தீவிரமாக இருந்தாலும், யோகி ஆத்மாக்களாகிய உங்களின் யோகம் அவர்களுக்கு அமைதியின் சகயோகம் கொடுக்கும். ஆகையால் விசேஷமாக நேரத்தை ஒதுக்கி அமைதியின் சகயோகம் கொடுங்கள். இதுதான் பிராமண ஆத்மாக்களாகிய உங்கள் கடமை ஆகும் நல்லது.

அனைத்து நினைவுகளின் சொரூபமான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா தந்தைக்கு சமமாக ஆகக்கூடிய லட்சியம் மற்றும் லட்சணத்தை தாரணை செய்யக்கூடிய ஆத்மாக்களுக்கு, சதா தன்னை தந்தையுடன் கூடவே இருக்கும் அனுபவம் செய்யக்கூடிய சமீப ஆத்மாக் களுக்கு, சதா எதுவும் புதிதல்ல என்ற பாடத்தை சகஜமாக சொரூபத்தில் கொண்டு வரக்கூடிய வர்களுக்கு, சதா விஷ்வ கல்யாணகாரி ஆகி உலகத்தின் ஆத்மாக்களுக்கு சகயோகம் கொடுக் கக்கூடிய அப்படிப்பட்ட சதா வெற்றி ரத்தினங்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்

தாதிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:

ஆதி பிராமணர்களின் மாலை பிரம்மா பாபாவுடன் சேர்த்து ஆதி பிராமணர்கள் நிமித்தம் ஆனீர்கள் அல்லவா! ஆதி பிராமணர்களுக்கு மிகப் பெரிய மகத்துவம் உள்ளது. ஸ்தாபனை பாலனை மற்றும் பரிவர்த்தனை. வினாசம் என்ற வார்த்தை கொஞ்சம் சட்டரீதியாக உள்ளது. ஆகையால் ஸ்தாபனை பாலனை மற்றும் உலக பரிவர்த்தனை செய்வதில் ஆதி பிராமணர் களின் விசேஷ பாகம் இருக்கிறது. சக்திகளை வெகு விமரிசையாக பூஜை செய் கின்றனர். தந்தை மற்றும் பிரம்மா பாபாவின் பூஜை அந்தளவு விமரிசையாக நடப்பதில்லை. பிரம்மாவின் கோயில் கூட மிக குப்தமாக இருக்கிறது. ஆனால் சக்தி சேனை பக்தியில் கூட மிகவும் பெயர் பெற்றது. ஆகையால் கடைசி வரை மேடையில் விசேஷமாக குழந்தைகளின் பாகம் இருக்கிறது. பிரம்மாவுடையது குப்தமான பாகமாகும். அவ்யக்த ரூபம் குப்தமானது. பிராமணர் களை தயார் செய்தார் மற்றும் பிரம்மாவின் பாகம் குப்தமாக ஆகிவிட்டது. சரஸ்வதியைக் கூட குப்தமாக காட்டியுள்ளார்கள். ஏனெனில் இவருடையதும் நாடகத்தில் குப்தமான பாகம் நடந்துகொண்டிருக்கிறது. ஆதி பிராமண ஆத்மாக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சமீபமாக சக்திசாலியாக இருக்கிறார்கள். சரிரம் கூட பலவீனமாக இல்லை, சக்திசாலியாக இருக்கிறது. (ஜானகி தாதியிடம்) இடையில் இது கொஞ்ச காலம் ஓய்வு கொடுப்பதற்கான சாதனம் ஆகிவிட்டது. மற்றபடி எதுவும் இல்லை. அப்படி நீங்கள் ஓய்வு எடுப்பதும் இல்லை, ஓய்வு எடுப்பதற்காக ஏதேனும் காரணம் உருவாகிறது. அனைத்து தாதிகளிடம் மிகுந்த அன்பு இருக்கிறதல்லவா! தந்தையின் கூட கூடவே நிமித்தமான ஆதி பிராமணர்களிடமும் அன்பு உள்ளது. தங்கள் அனைவரின் அன்பின் ஆசீர்வாதங்கள் சுப பாவனைகள் ஆதி பிராமண ஆத்மாக்களுக்கு ஆரோக்கியமாக வைக்கிறது, நல்லது. அமைதியின் சேவைக்கான பாகம் நன்றாக கிடைத்துள்ளது. எத்தனை ஆத்மாக்கள் அமைதியின்றி இருக்கிறார்கள், எத்தனை பேர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சமாவது அஞ்சலி கொடுக்க வேண்டும் அல்லவா! தேவிகளிடம் சென்று சக்தி கேட்கிறார்கள். சக்தி சேனை விசேஷ ஆத்மாக்களாகிய உங்களின் கடமை இருக்கிறது அல்லவா? நாளுக்கு நாள் இந்த அனுபவம் செய்வார்கள், எங்கிருந்தோ அமைதியின் கிரணங்கள் வந்துகொண்டிருக்கிறது, பிறகு தேடு வார்கள், அனைவருடைய பார்வையும் பாரத பூமியின் மீது விழும், நல்லது.

அவ்யக்த மகாவாக்கியம் பார்ட்டிகளுடன் சந்திப்பு

1. நிச்சய புத்தி (நம்பிக்கை) வெற்றி நிறைந்த ஆத்மாக்களாக இருக்கின்றீர்கள், அப்படி அனுபவம் செய்கிறீர்கள் அல்லவா? நம்பிக்கை எப்போதும் ஆடாத அசையாததாக இருக்கிறதா? அல்லது எப்போதாவது மேல் கீழ் ஆகிறதா? நிச்சய புத்தியின் அடையாளம், அவர்கள் ஒவ்வொரு காரியத்திலும், காரிய விவகாரமாக இருந்தாலும், பரமாத்ம காரியமாக இருந்தாலும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியின் அனுபவம் செய்வார்கள். சாதாரண கர்மமாக இருந்தாலும் வெற்றியின் அதிகாரம் அவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். ஏனெனில் பிராமண வாழ்க்கை யின் விசேஷ பிறப்புரிமை வெற்றி ஆகும். எந்த ஒரு காரியத்திலும் அவர்கள் மனமுடைந்து போக மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு வெற்றி தனது பிறப்புரிமை என்ற நம்பிக்கை இருக்கும். அந்தளவு பிறப்புரிமையின் போதை இருக்கிறதா? யாருக்கு பகவான் உதவியாளராக இருக்கிறாரோ, அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றால் யாருக்கு கிடைக்கும்! எங்கே பகவான் இருக்கிறாரோ அங்கே வெற்றி இருக்கும் என்று கல்பத்திற்கு முந்தைய நினைவுச் சின்னத்தை காட்டியிருக்கிறார்கள். பாண்டவர்கள் ஐந்து பேராக இருந்தாலும் எப்படி வெற்றி கிடைத்தது? பகவான் துணையாக இருக்கின்றார். கல்பத்திற்கு முந்தைய நினைவுச் சின்னத்தில் வெற்றியாளர் ஆகி உள்ளீர்கள், இப்போதும் வெற்றியாளராக ஆவீர்கள் அல்லவா? ஒருபோதும் எந்தக் காரியத்திலும் ஆகுமா ஆகாதா? வெற்றி கிடைக்குமா கிடைக்காதா? என்ற எண்ணமே வரக்கூடாது. இந்தக் கேள்வியே எழ முடியாது. தந்தையின் துணையாக இருப்பவர்களுக்கு ஒருபோதும் தோல்வி ஏற்பட முடியாது. இது கல்ப கல்பத்திற்கும் நிச்சயிக்கப்பட்டதாகும். இந்த விதியை யாரும் உடைக்க முடியாது. இந்தளவு திடமான நம்பிக்கை எப்போதும் முன்னேறிப் பறந்து செல்ல வைக்கும். ஆகையால் எப்போதும் வெற்றியின் மகிழ்ச்சியில் ஆடிப் பாடிக் கொண்டே இருங்கள்.

2. எப்போதும் தன்னை பாக்கியத்தை வழங்கும் வள்ளலின் (பாக்ய விதாதாவின்) பாக்கியசாலி குழந்தை என்று அனுபவம் செய்கிறீர்களா? பத்மாபதம் பாக்கியசாலியா அல்லது சௌபாக்கிய சாலியா? யாருக்கு இந்தளவு சிரேஷ்ட பாக்கியம் இருக்குமோ, அவர்கள் எப்போதும் புன்சிரித்துக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் பாக்கியசாலி ஆத்மாவுக்கு கிடைக்கவில்லை என்று எந்த பொருளும் கிடையாது. எங்கே அனைத்து பிராப்திகளும் இருக்குமோ, அங்கே சதா மகிழ்ச்சி இருக்கும். யாருக்கேனும் அல்ப கால லாட்டரி கிடைத்தாலும், அவர்களுக்கு ஏதோ கிடைத்து விட்டது என்று அவர்களின் முகம் காட்டிவிடுகிறது. யாருக்கு பத்மாபதம் பாக்கியம் கிடைத்து விட்டதோ அவர்கள் எப்படி இருப்பார்கள்? எப்போதும் புன்சிரிப்புடன் இருப்பார்கள். இப்படி புன்சிரிப்புடன் இருந்தால் உங்களுக்கு அப்படி என்ன கிடைத்தது என்று யாராவது கேட்பார்கள். எந்தளவு முயற்சியில் முன்னேறி செல்கிறீர்களோ அந்தளவு உங்களுக்கு பேசுவதற்கான அவசியமும் இருக்காது. இவர்களுக்கு ஏதோ கிடைத்து விட்டது என்று உங்கள் முகம் பேசும். ஏனெனில் முகம் கண்ணாடியாக இருக்கிறது. கண்ணாடியில் எந்த பொருள் எப்படி இருக்குமோ அப்படியே தென்படுகிறது. ஆகையால் உங்கள் முகம் கண்ணாடியின் வேலை செய்யும். இத்தனை ஆத்மாக்களுக்கு என்ன செய்தி கிடைத்ததோ, அதை இப்போது நீங்கள் அமர்ந்து சொல்வதற்கு எங்கே நேரம் இருக்கிறது? சமயம் மோசமாக ஆகிக்கொண்டே செல்லும். அப்போது சொல்வதற்குக் கூட நேரம் கிடைக் காது. பிறகு சேவை எப்படி செய்வீர்கள்? தன்னுடைய முகத்தின் மூலம் சேவை செய்ய வேண்டும். மியூசியத்தில் சித்திரங்கள் மூலம் சேவை செய்கிறீர்கள். சித்திரங்களைப் பார்த்து மனிதர்கள் புரிந்து கொள்வதைப் போல உங்களுடைய சைத்தன்ய சித்திரம் (முகம்) சேவைக்கு நிமித்தம் ஆகிவிடும். அப்படிப்பட்ட சித்திரம் தயாராக இருக்கிறதா? அத்தனை சைத்தன்ய சித்திரங்கள் தயாராகி விட்டால் சத்தம் பலமாகக் கேட்கும். நடந்தாலும் சுற்றினாலும், அமர்ந்தாலும் எழுந்தாலும், நாம் சைத்தன்ய சித்திரங்கள் என்பதை நினைவில் வையுங்கள். முழு உலகமும் ஆத்மாக்களாகிய நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. சைதன்ய சித்திரத்தில் அனைவரையும் கவரக் கூடிய விஷயம் என்னவாக இருக்கிறது? எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர் களா அல்லது அவ்வப்போது குழப்பத்தில் வந்து விடுகிறீர்களா? இப்படி ஆகிவிட்டது, ஆகையால் மகிழ்ச்சி குறைந்துவிட்டது என்று அங்கே போன பிறகு சொல்வீர்களா? எது நடந்தாலும் மகிழ்ச்சியை இழக்கக் கூடாது, அவ்வளவு உறுதியாக இருக்கிறீர்களா? பெரிய சோதனைத்தாள் வந்தாலும் தேர்ச்சி அடைந்து விடுவீர்களா? யாரெல்லாம் ஆமாம் என்று சொல்கின்றீர்கள் என்று பாப்தாதா அனைவரின் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் அப்படி சொல்லி விட்டேன் என்று சொல்லக்கூடாது. மாஸ்டர் சர்வ சக்திவானுக்கு முன்னால் எதுவும் பெரிய விஷயமல்ல. நம்முடைய வெற்றி நடந்தே தீரும் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறது, ஆகையால் எதுவும் பெரிய விஷயமல்ல. யாரிடம் சர்வ சக்திகளின் பொக்கிஷங்கள் இருக்குமோ, அவர்கள் எந்த சக்திக்கு கட்டளை கொடுத்தாலும், அந்த சக்தி உதவி செய்ய வந்துவிடும். கட்டளை கொடுப்பவர் தைரியசாலியாக இருக்க வேண்டும். கட்டளை கொடுக்க வருகிறதா அல்லது கட்டளைப்படி நடக்க வருகிறதா? அவ்வப்போது மாயாவின் கட்டளைப்படி நடப்பதில்லை தானே? ஏதோ விஷயம் வருகிறது பிறகு முடிந்து போய்விடுகிறது. இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று.

பிறகு சிந்திக்கிறீர்கள். அப்படி இல்லை தானே சமயபடி சர்வ சக்திகள் காரியத்தில் வருகிறதா அல்லது கொஞ்சம் முன்பின்னாக வருகிறதா? மாஸ்டர் சர்வ சக்திமான் என்ற சீட்டில் செட் ஆகி இருந்தால் எந்த சக்தியும் கட்டளைப்படி வரவில்லை என்பது நடக்க முடியாது. நீங்கள் சீட்டில் இருந்து கீழே வந்த பிறகு கட்டளை கொடுத்தால், சக்திகள் நம் கட்டளையை ஏற்ப தில்லை. லௌகீகத்தில் கூட, யாரேனும் சீட்டிலிருந்து (பதவியிலிருந்து) கீழே இறங்கிய பிறகு அவருடைய கட்டளையை யாரும் ஏற்று நடப்பதில்லை. சக்திகள் கட்டளையை ஏற்று நடக்க வில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் சீட்டிலிருந்து இறங்கி விட்டீர்கள் என்பதாகும். ஆகையால் எப்போதும் மாஸ்டர் சர்வசக்திவான் என்ற சீட்டில் செட் ஆகி இருங்கள், எப்போதும் ஆடாமல் அசையாமல் இருங்கள், குழப்பத்தில் வரக்கூடியவர்களாக இருக்கக் கூடாது. பாப்தாதா சொல்கிறார், இந்த சரீரமே போய்விட்டாலும் மகிழ்ச்சி போகக்கூடாது. பணம் அதற்கு முன்னால் ஒன்றும் இல்லை. யாரிடம் மகிழ்ச்சியின் பொக்கிஷம் இருக்குமோ அவருக்கு முன்னால் எதுவும் பெரிய விஷயமல்ல மற்றும் பாப்தாதா எப்போதும் சகயோகி சேவாதாரி குழந்தைகளின் கூடவே இருக்கிறார். குழந்தை தந்தையுடன் கூடவே இருக்கிறது என்றால் பெரிய விஷயம் என்ன இருக்கிறது? ஆகையால் பயப்படுவதற்கான எந்த விஷயமும் இல்லை. தந்தை அமர்ந்திருக்கிறார், குழந்தைகளுக்கு என்ன கவலை! தந்தையோ செல்வந்தராக இருக்கின்றார். ஏதேனும் யுக்தி மூலம் குழந்தைகளின் பாலனை செய்வார், ஆகையால் கவலைப்படாமல் இருங்கள். துக்க தாமத்தில் சுகதாமத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறீர்கள் என்றால் துக்க தாமத்தில் குழப்பம் ஏற்படத் தானே செய்யும். வெப்பமான சீசனில் வெப்பம் இருக்கத்தானே செய்யும். ஆனால் பாபாவின் குழந்தைகள் சதா பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஏனெனில் பாபாவின் துணை இருக்கிறது.

அனைத்து குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் செய்தி:

அனைத்து தபஸ்வி குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள். பாருங்கள், சமயத்தின் செய்தியைக் கேட்டு உயர்ந்ததிலும் உயர்ந்த சாட்சி என்ற ஆசனத்தில் கவலையற்ற மகாராஜா என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து அனைத்து விளையாட்டையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா! இந்த பிராமண வாழ்க்கையில் பயப்படக்கூடிய சங்கல்பம் கனவில் கூட வர முடியாது. இந்த தபஸ்யா வருடத்தில் நிரந்தரமாக ஈடுபாட்டின் அக்னியில் எல்லைக்கப் பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வை வெளிப்படுத்தும் காரியம் தீவிரமாக நடந்து கொண்டிருக் கிறது. நீங்கள் தந்தைக்கு சமமாக முழுமை அடைவதற்கான சங்கல்பம் செய்தீர்கள். அதாவது வெற்றிக் கொடியை பறக்க விடுவதற்கான திட்டமிட்டீர்கள், மறுபுறம் சமாப்தியின் குழப்பமும் கூட கூடவே ஏற்படுகிறது அல்லவா! இந்த ஒத்திகை கூட நாடகத்தின் காட்சியை முடிப்பதற் கான சாதனம் ஆகும். ஆகையால் எதுவும் புதிதல்ல.

சமயத்தின் சூழ்நிலையின் படி, வருவது போவதில், ஏதேனும் பொருள் கிடைப்பதில் கொஞ்சம் இழுபறி ஏற்படும், ஆனால் மனதின் எண்ணத்தின் இழுபறியில் வரக்கூடாது. எந்த சூழ்நிலையில் இருந்தாலும், மனதின் மகிழ்ச்சி என்ற மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டே இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள், பரிஸ்தாவாக பறந்து செல்லுங்கள். கூடவே இந்த நேரம் ஒவ்வொரு சென்டரிலும் விசேஷ தபஸ்யாவுக்கான நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கட்டும். யார் எந்தளவு அதிக நேரம் ஒதுக்க முடியுமோ, அந்தளவு நேரம் ஒதுக்கி அமைதியின் சகயோகம் கொடுங்கள். நல்லது ஓம் சாந்தி

வரதானம்:
அனைத்து பொக்கிஷங்களில் நிறைந்தவராகி ஒவ்வொரு நேரமும் சேவையில் பிஸியாக இருக்கக்கூடிய உலக நன்மையாளர் ஆகுக.

உலக நன்மைக்கு நிமித்தமாகி உள்ள ஆத்மா, முதலில் தனக்குள் அனைத்து பொக்கிஷங் களிலும் நிறைந்தவராக இருப்பார்கள். ஞானத்தின் பொக்கிஷத்தில் முழு ஞானம் நிறைந்த வராக இருப்பார்கள். எந்த குறையும் இல்லை எனும்போது தான் நிரம்பியவர் என்று சொல்ல முடியும். சில பேரிடம் பொக்கிஷம் நிரம்பி இருந்தாலும், சமயப்படி காரியத்தில் பயன்படுத்த முடிவதில்லை. சமயம் கடந்து போன பிறகு யோசிக்கிறார்கள், ஆகையால் அவர்களையும் நிரம்பியவர் என்று சொல்ல முடியாது. உலக நன்மையாளர் ஆத்மாக்கள் மனம், சொல், செயல், சம்பந்தம், தொடர்பில் ஒவ்வொரு நேரமும் சேவையில் பிசியாக இருப்பார்கள்.

சுலோகன்:
ஞானம் மற்றும் யோகத்தை உங்கள் இயற்கையான சுபாவமாக ஆக்கிக்கொள்ளுங்கள், அப்போது ஒவ்வொரு கர்மமும் இயற்கையாகவே சிரேஷ்டமாகவும் யுக்தியுக்தாகவும் இருக்கும்.

அறிவிப்பு:
இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை, அனைத்து இராஜ யோகி தபஸ்வி சகோதர சகோதரிகளும் மாலை 6:30 முதல் 7:30 மணி வரை விசேஷ யோக அப்பியாசத்தின் நேரத்தில் தன்னுடைய மூதாதையர் (பூர்வஜ்) என்ற சுயமரியாதையில் நிலைத்திருங்கள், கல்ப விருட்சத்தின் வேரில் அமர்ந்து முழு மரத்திற்கும் சக்திசாலி யோக தானம் கொடுத்தபடி, தன்னுடைய வம்சாவழிக்கு தெய்வீக பாலனை கொடுங்கள்.