ஓம் சாந்தி.
கள்ளம் கபடமற்றவர் என்று எப்பொழுதும் சிவனைத் தான் கூறுகின்றனர்.
சிவன், சங்கரருடைய வேறுபாட்டை நல்ல முறையில்
புரிந்திருக்கிறீர்கள். சிவன் உயர்ந்ததிலும் உயர்ந்த
மூலவதனத்தில் இருக்கின்றார். சங்கரரோ சூட்சுமவதனவாசி ஆவார்.
அவரைப் பகவான் என்று எவ்வாறு கூற முடியும்? உயர்ந்ததிலும்
உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடியவர் ஒரு தந்தை ஆவார். பின்னர்,
இரண்டாம் தளத்தில் மூன்று தேவதைகள் இருக்கின்றனர். அவர்
தந்தையாவார். உயர்ந்ததிலும் உயர்ந்த நிராகாரமானவர் ஆவார்.
சங்கரரோ ஆகாரி (சூட்சும உடல் தரித்தவர்) ஆவார். சிவன்
கள்ளங்கபடமற்றவர், ஞானக்கடல் ஆவார். சங்கரரை ஞானக் கடல் என்று
கூற முடியாது. கள்ளங்கபடமற்ற சிவபாபா வந்து நம்முடைய பையை
நிறைக் கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள். முதல், இடை, கடை நிலைப் பற்றிய
இரகசியத்தைக் கூறிக் கொண்டு இருக்கின்றார். படைப்பாளர் மற்றும்
படைப் பின் இரகசியம் மிகவும் எளிதானதாகும். பெரிய பெரிய ரிஷிகள்,
முனிவர்கள் போன்றோர் கூட இந்த எளிய விசயங்களை அறிய முடியவில்லை.
இப்பொழுது, அந்த இரஜோகுண நிலையில் உள்ளவர்களே
அறிந்திருக்கவில்லை என்றால், தமோகுண நிலையில் உள்ளவர்கள்
எவ்வாறு அறிந்து கொள்வார்கள்? இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
தந்தைக்கு எதிரில் அமர்ந்து இருக்கிறீர்கள். தந்தை அமரகதை
கூறிக்கொண்டிருக்கின்றார். நம்முடைய பாபா (சிவபாபா) உண்மையிலும்
உண்மையான அமரகதையைக் கூறிக்கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கை
குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. இதில் எந்தச் சந்தேகமும்
இருக்கக்கூடாது. எந்த மனிதரும் இதை நமக்குக் கூறிக்கொண்டு
இருக்கவில்லை. கள்ளங் கபடமற்றவர் சிவபாபா ஆவார். எனக்குத்
தனக்கென்று சரீரம் கிடையாது. நான் நிராகாரமானவர் என்று
கூறுகின்றார். பூஜை கூட நிராகாரமான எனக்குத் தான் செய்கின்றனர்.
சிவஜெயந்தி கூடக் கொண்டாடு கின்றனர். இப்பொழுது, தந்தையோ
பிறப்பு இறப்பு அற்றவர். அவர் கள்ளங் கபடமற்றவர் ஆவார். அவர்
அவசியம் வந்து அனைவருடைய பையையும் நிறைப்பார். எவ்வாறு
நிறைப்பார்? என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் தான்
புரிந்திருக்கிறீர்கள். அழிவற்ற ஞான இரத்தினங் களால் பையை
நிறைக்கின்றார். இதுவே ஞானம் ஆகும். ஞானக்கடல் வந்து ஞானம்
அளிக் கின்றார். இது அதே கீதை தான், ஆனால், இதில் சமஸ்கிருத
சுலோகன் கிடையாது. இது சமஸ்கிருதத்தில் இருந்தால்
கள்ளங்கபடமற்ற தாய்மார்கள் என்ன அறிந்து கொள்வார்கள்?
அவர்களுக்காகத் தான் கள்ளம் கபடமற்ற பாபா வருகின்றார். இந்தத்
தாய்மார்கள் வீட்டின் வேலையிலேயே மூழ்கி இருக்கின்றனர்.
வேலைக்குச் செல்வது இப்பொழுது நாகரிகம் ஆகிவிட்டது. பாபா
இப்பொழுது குழந்தைகளுக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பை
கற்பித்துக் கொண்டு இருக்கின்றார். யார் முற்றிலும் எதுவும்
படிக்காதவர்களாக இருந்தார்களோ, அவர்கள் மீது முதன் முதலில்
படிப்பின் கலசத்தை வைக்கின்றார். அனைவரும் பக்தைகள், சீதைகள்
ஆவார்கள். இராவணனுடைய இலங்கையிலிருந்து விடுவிப்பதற்காகவே
அதாவது துக்கத் திலிருந்து விடுவிப்பதற்காகவே இராமர்
வந்திருக்கின்றார். பின்னர், தந்தையுடன் இணைந்து வீட்டிற்குத்
தான் செல்வோம், வேறு எங்குச் செல்வோம்? நாம் துக்கத்திலிருந்து
விடுபட வேண்டும் என்று வீட்டை நினைவு செய்கின்றனர். நாடகத்தின்
நடுவில் எவருக்கும் முக்தி கிடைக்க முடியாது என்பதைக்
குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். அனைவரும் தமோபிரதானம் ஆகியே
தீரவேண்டும். முக்கியமான அஸ்திவாரம் எதுவோ, அது
எரிந்துவிடுகிறது, அந்தத் தர்மமே மறைந்து போய்விடுகிறது.
மற்றபடி, சில சித்திரங்கள் மட்டும் உள்ளன. இலட்சுமி,
நாராயணருடைய சித்திரம் கூட மறைந்துவிட்டது என்றால்
நினைவுச்சின்னம் எவ்வாறு கிடைக்கும்? தேவி தேவதைகள் இராஜ்யம்
செய்தனர் என்பதை அறிந்திருக்கின்றனர். அவர்களுடைய சித்திரங்கள்
இப்பொழுது வரை உள்ளன. குழந்தைகள் இதைப் பற்றிப் புரிய வைக்க
வேண்டும். இலட்சுமி, நாராயணர் குழந்தைப் பருவத்தில் இளவரசன்,
இளவரசியாக, இராதை, கிருஷ்ணராக இருந்தார்கள் என்பதை நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள். பிறகு, மகாராஜா மகாராணி ஆகின்றார்கள்.
அவர்கள் தான் சத்யுகத்தின் எஜமானர்கள் ஆவார்கள். தேவதைகள்
ஒருபொழுதும் பதீத உலகத்தில் பாதம் பதிக்க முடியாது.
ஸ்ரீகிருஷ்ணரோ வைகுண்டத்தின் இளவரசர் ஆவார். அவர் கீதை சொல்ல
முடியாது. தவறு கூட எவ்வளவு பெரியதாகச் செய்து விட்டனர்.
கிருஷ்ணரை பகவான் என்று கூறமுடியாது. அவரோ மனிதர் ஆவார், தேவி
தேவதை தர்மத்தைச் சேர்ந்தவர் ஆவார். உண்மையில், தேவதைகளான
பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சுமவதனத்தில் தான்
இருக்கின்றார்கள். இங்கே மனிதர்கள் இருக்கின்றார்கள். மனிதர்
களைச் சூட்சும வதனவாசிகள் என்று கூறமுடியாது. பிரம்மா தேவதாய
நமஹ, விஷ்ணு தேவதாய நமஹ என்று கூறுகின்றார்கள் அல்லவா? அது தேவி
தேவதை தர்மம் ஆகும். ஸ்ரீஇலட்சுமி தேவி, ஸ்ரீநாராயணர் தேவதை
ஆவார்கள். மனிதர்கள் தான் 84 பிறவிகள் எடுக்க வேண்டியதாக உள்ளது.
உண்மையில் நாம் தேவதை தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம்.
அந்தத் தர்மம் மிகுந்த சுகம் கொடுக்கக்கூடியதாகும் என்பதை
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அங்கே
நாங்கள் ஏன் வரமுடியாது என்று எவரும் கேட்க முடியாது. அங்கே ஒரே
ஒரு ஆதி சநாதன தேவி தேவதை தர்மம் இருந்தது. பிறகு, மற்ற அனைத்து
தர்மத்தினரும் வரிசைக்கிரமமாக வருகின்றனர் என்பதை இப்பொழுது
நீங்கள் அறிந்திருக் கிறீர்கள் அல்லவா. இதைக் குழந்தைகளாகிய
நீங்கள் புரிய வைக்க இயலும். இது அநாதியான உருவான
உருவாக்கப்பட்ட விளையாட்டு ஆகும். அதில், பிறகு சத்யுகம்
இருக்கும். பாரதத்தில் தான் சத்யுகம் இருக்க வேண்டும். ஏனெனில்,
பாரதம் தான் அழிவற்ற கண்டமாக உள்ளது. இதனுடைய விநாசம்
ஏற்படுவதில்லை.
இதையும் புரியவைக்க வேண்டியதாக உள்ளது. தந்தையினுடைய பிறப்பு
கூட இங்கே தான் ஏற்படுகிறது. மனிதர்களுடையதைப் போல் அல்லாமல்
அவருடைய பிறப்பு தெய்வீகப் பிறப்பாகும். தந்தை வந்திருப்பதே
விடுவிப்பதற்காகத் தான். இப்பொழுது நீங்கள் தந்தை மற்றும்
வீட்டை மட்டும் நினைவு செய்யுங்கள். பிறகு, நீங்கள்
இராஜ்யத்தில் வந்துவிடுவீர்கள். இது அசுர இராஜ்ய இடமாகும்,
தந்தை தெய்வீக இராஜ்ய ஸ்தானத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.
அவர் வேறு எந்தக் கஷ்டமும் கொடுக்கவில்லை. தந்தை மற்றும்
ஆஸ்தியை மட்டும் நினைவு செய்ய வேண்டும். இது ஜெபிப்பதற்கான
விஷயம் அல்ல. வாயினால் எதையும் சொல்ல வேண்டியது இல்லை.
சூட்சுமத்தில் கூட எதையும் சொல்ல வேண்டியது இல்லை. வீட்டில்
அமர்ந்தபடியே அமைதியாகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
பந்தனத்தில் இருக்கும் சகோதரிகள் கூட வீட்டில் அமர்ந்தபடியே
கேட்கின்றனர். அனுமதி கிடைப்பதில்லை. ஆம், வீட்டில் இருந்தபடியே
தூய்மையாக இருப்பதற்கு மட்டும் முயற்சி செய்யுங்கள். தூய்மையாக
ஆகுங்கள் என்று எனக்குக் கனவில் கட்டளை கிடைத்தது என்று
சொல்லுங்கள். இப்பொழுது மரணம் எதிரில் நிற்கின்றது. நீங்கள்
இப்பொழுது வானப்பிரஸ்த நிலையில் இருக்கிறீர்கள். வானப்பிரஸ்த
நிலையில் ஒருபொழுதும் விகாரத்தின் எண்ணம் வராது. இப்பொழுது
தந்தை முழு உலகத்தில் அனைவரும் வானப்பிரஸ்த நிலையில் உள்ளனர்
என்று கூறுகின்றார். அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும்
என்றால் வீட்டை நினைவு செய்ய வேண்டும். பிறகு, வரப்போவதும்
பாரதத்தில் தான். முகம் வீட்டை நோக்கி தான் இருக்கும் அல்லவா?
குழந்தைகளுக்கு வேறு எந்தக் கஷ்டமும் கொடுக்கப்படுவதில்லை,
மிகவும் சகஜம் ஆகும். வீட்டில் இருந்தபடியே சிவபாபாவின்
நினைவில் உணவு சமைத்திடுங்கள். வீட்டில் உணவு சமைக்கும்பொழுது
பதியின் நினைவு இருக்கிறது அல்லவா? இவரோ பதிகளுக்கெல்லாம் பதி
ஆவார் என்று தந்தை கூறுகின்றார். இவரை நினைவு செய்யுங்கள், இதன்
மூலம் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறது. நல்லது, சிலருக்கு
அனுமதி கிடைப்பதில்லை. அங்கேயே இருந்துகொண்டு தந்தை மற்றும்
ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். தன்னை நீங்கள் விடுவித்துக்
கொள்ளுங்கள். தந்தையிடமிருந்து முழுமையான ஆஸ்தியைப் பெற
முடியும். படிப்படியாக விடுதலை கிடைத்துத் தான் ஆகவேண்டும். ஆம்,
ருத்ர ஞான யக்ஞத்தில் அவசியம் தடைகள் கூட வரத்தான் செய்யும்.
இறுதியில் எப்பொழுது உங்களுடைய பிரபாவம் வெளிப்படுமோ அப்பொழுது
உங்களுடைய பாதங்களில் விழுந்து வணங்குவார்கள். தடைகள்
ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கும். இதில், பொறுமையைக்
கடைப்பிடிக்க வேண்டும், பொறுமையற்றவர் ஆகக்கூடாது. என்னை நினைவு
செய்யுங்கள், ஆஸ்தியை அடையுங்கள் என்பது தந்தையின் கட்டளையாகும்
என்ற இந்த ஒரு விஷயத்தை வீட்டில் இருந்தபடியே பதி மற்றும்
உற்றார் உறவினர்களுக்குப் புரிய வைத்திடுங்கள். கிருஷ்ணரோ
இருக்கவே முடியாது. தந்தையைத் தான் நினைவு செய்ய வேண்டும்.
நம்முடைய பாபா சிவபாபா ஆவார் என்பதை அனைவரும் அறிந்து
கொள்ளும்படியாகத் தந்தையினுடைய அறிமுகத்தை மட்டும் கொடுக்க
வேண்டும். அதுவும் கூட இப்பொழுது மட்டுமே நினைவு நன்றாக இருக்க
முடியும். இந்தப் பந்தனம், அடிதடி போன்றவை சிறிது காலத்திற்கு
மட்டும் தான் இருக்கும். போகப் போக இவையனைத்தும் முடிந்துவிடும்.
ஏதாவது நோய் வருகிறது என்றால், உடனடியாக விலகிவிடுகிறது. சில
ஒன்று இரண்டு வருடங்கள் வரை கூடத் தொடர்கிறது. இதில் கூட அதே
மாதிரி தான். தந்தையை நினைவு செய்யச் செய்யப் பந்தனம்
நீங்கிவிடும். ஆகையினால், ஒவ்வொரு விஷயத்திலும் பொறுமை இருக்க
வேண்டும். எவ்வளவு நீங்கள் நினைவு செய்வீர்களோ, அவ்வளவு
விகர்மங்கள் விநாசம் ஆகும் என்று தந்தை கூறுகின்றார். புத்தி
துண்டிக்கப்படுவது கூட விகர்மங்களின் பந்தனம் ஆகும்.
விகாரத்தைத் தான் முதல் எண் விகர்மம் என்று கூறப்படுகிறது.
இப்பொழுது நீங்கள் விகர்மாஜீத் (விகர்மங்களை வென்றவர்கள்)
ஆகிறீர்கள். நினைவின் மூலம் தான் தன்னை விகர்மத்தை வென்றவராக
ஆக்கிக் கொள்ள முடியும். அனைத்து கணக்குகளும் முடிந்துவிடும்,
பிறகு, சுகத்தின் கணக்கு ஆரம்பம் ஆகும். வியாபாரிகளுக்கு மிக
எளிது ஆகும். பழைய கணக்கை முடித்துவிட்டு பிறகு புதியதைத்
துவங்க வேண்டும் என்று புரிந்து கொள்கின்றனர். நினைவு செய்து
கொண்டே இருந்தால் சேமிப்பு ஆகிவிடும். நினைவு செய்யவில்லை
என்றால், எவ்வாறு சேமிப்பு ஆகும்? இது கூட வியாபாரம் அல்லவா?
தந்தை எந்தக் கஷ்டமும் கொடுப்பதில்லை. ஏமாற்றம் எதுவும் அடைய
வேண்டியதில்லை. ஜென்ம ஜென்மங்களாக ஏமாற்றத்தை அடைந்து தான்
வந்திருக்கிறீர்கள். இப்பொழுது சத்தியமான தந்தை எவ்வளவு
நல்லமுறையில் புரிய வைக்கின்றார். கடவுள் தான் சத்தியத்தை உரைக்
கின்றார். மற்ற அனைத்தும் பொய் ஆகும். பாபா என்ன புரிய
வைக்கின்றார் மற்றும் மனிதர்கள் என்ன புரிய வைக்கின்றனர் என்ற
வேறுபாட்டைப் பாருங்கள். இது நாடகம் ஆகும். மீண்டும் இவ்வாறே
நடைபெறும். ஸ்ரீமத்படி நடப்பதன் மூலம் நாம் சத்கதியை
அடைகின்றோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
இல்லையெனில், அந்தளவு உயர்ந்த பதவி கிடைக்காது. சொர்க்கம்
செல்வதற்கு நீங்கள் நிமித்தம் ஆகிறீர்கள். அங்கே எந்த
விகர்மமும் கிடையாது. இங்கே விகர்மம் ஏற்படுகிறது எனில்,
தண்டனையையும் அனுபவிக்க வேண்டிய தாக உள்ளது. யார் ஸ்ரீமத்படி
நடப்பதில்லையோ அவர்களை என்ன வென்று கூறப்படுகிறது? நாஸ்திகர்.
பாபா ஆஸ்திகர் ஆக்குக் கின்றார் என்பதை அறிந்திரு கின்றனர்,
ஆனாலும் கூட ஒருவேளை அவருடைய வழிப்படி நடக்கவில்லை எனில்,
நாஸ்திகர்களே ஆவார்கள் இல்லையா? சிவபாபாவின் ஸ்ரீமத்படி தான்
நடக்க வேண்டும் என்று அறிந்தும் இருக்கின்றனர். ஆனால்,
அறிந்திருந்தும் கூட நடக்கவில்லை எனில், அவர்களை என்னவென்று
சொல்வது! சிரேஷ்டமாக ஆவதற்காகவே ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது.
அனைவரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அந்தச் சத்குரு ஆவார்.
தந்தை குழந்தைகளுக்கு எதிரில் அமர்ந்து புரிய வைக்கின்றார்.
கல்ப கல்பமாகப் புரிய வைத்திருந்தார். மற்றபடி, சாஸ்திரங் கள்
அனைத்தும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவை ஆகும். அநேக
சாஸ்திரங்கள் உள்ளன. சாஸ்திரங்களுக்குக் கூட அதிக மரியாதை
கொடுக்கின்றனர். எவ்வாறு சாஸ்திரங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்
கின்றனரோ, அவ்வாறு சித்திரங்களையும் கூட ஊர்வலமாக எடுத்துச்
செல்கின்றனர். இவை அனைத்தையும் மறந்துவிடுங்கள் என்று இப்பொழுது
பாபா கூறுகின்றார். முற்றிலும் பிந்து (பூஜ்ஜியம்) ஆகிவிடுங்கள்.
புள்ளி வைத்துவிடுங்கள், வேறு எந்த விசயங்களையும் கேட்காதீர்கள்.
கெட்டதைக் கேட்காதீர்கள், கெட்டதைப் பார்க்காதீர்கள், கெட்டதைப்
பேசாதீர்கள். ஒரு தந்தை கூறும் விசயங்களைத் தவிர வேறு எவருடைய
விசயத்தையும் கேட்காதீர்கள். அசரீரி ஆகிவிடுங்கள், மற்ற
அனைத்தையும் மறந்துவிடுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள்
சரீரத்துடன் கேட்கிறீர்கள். தந்தை வந்து பிரம்மா மூலம் புரிய
வைக்கின்றார். குழந்தைகளுக்குச் சத்கதிக்காக வழியைக்
கூறுகின்றார். அவர்கள் முன்பு கூட எவ்வளவு முயற்சி செய்தனர்,
ஆனால், முக்தி, ஜீவன்முக்தியை எவரும் அடைய முடிய வில்லை.
கல்பத்தினுடைய ஆயுளை யும் நீளமாகக் காண்பித்துவிட்டனர்.
யாருக்கு அதிர்ஷ்டத்தில் இருக்குமோ, அவர்கள் கேட்பார்கள்.
அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் வர இயலாது. இங்கே கூட
அதிர்ஷ்டத்திற்கான விசயம் உள்ளது. தந்தை எவ்வளவு எளிமையாகப்
புரிய வைக்கின்றார். எங்களுடைய வாய் திறக்க மறுக்கிறது என்று
சிலர் கூறுகின்றனர். அட, தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு
செய்யுங்கள் என்பது எவ்வளவு எளிய விசயம்! அதையே சமஸ்கிருதத்தில்
மன்மனாபவ என்று கூறுகின்றனர். சிவபாபா, அனைத்து ஆத்மாக்களின்
தந்தை ஆவார். கிருஷ்ணரை தந்தை என்று கூறமுடியாது. பிரம்மா கூட
அனைத்து பிரஜைகளின் தந்தை ஆவார். ஆத்மாக்களின் தந்தை பெரியவரா
அல்லது பிரஜைகளின் தந்தை பெரியவரா? பெரிய பாபாவை நினைவு
செய்வதால் சொர்க்கப் பிராப்தி ஆஸ்தியாகக் கிடைக்கும். போகப்
போக உங்களிடம் அதிகமானோர் வருவார்கள். எங்கே செல்வார்கள்? வந்து
கொண்டே இருப்பார்கள். எங்காவது அதிகமானோர் செல்கின்றனர் என்றால்
ஒருவரை ஒருவர் பார்த்து இன்னும் அதிகமானோர் நுழைந்து
விடுவார்கள். உங்களிடத்திலும் கூட விருத்தி அடைந்து கொண்டே
இருப்பார்கள். தடைகள் எத்தனை வந்தாலும், அந்தப் பிரச்சனைகளைக்
கடந்து தனது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து தான் ஆகவேண்டும். இராம
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்துகொண்டு இருக்கின்றோம். புது உலகமே
இராம இராஜ்யம் ஆகும்.
நாம் ஸ்ரீமத்படி நம்முடைய உடல், மனம், பொருள் மூலம்
பாரதத்தைச் சொர்க்கம் ஆக்கிக் கொண்டு இருக்கின்றோம் என்பதை
நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பரமபிதா பரமாத்மாவுடன்
உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது? பிரஜாபிதா பிரம்மாவுடன்
என்ன சம்பந்தம் உள்ளது? என்பதை முதலில் நீங்கள் பிறரிடம்
கேளுங்கள். இவர் எல்லையற்ற தந்தை ஆவார். பிறகே, வம்சாவளி
உருவாகின்றனர். ஒருவரிடமிருந்து தான் உருவாகி இரு கின்றனர்
அல்லவா! பரமபிதா பரமாத்மா பிரஜாபிதா பிரம்மா மூலமாகச்
சிருஷ்டியைப் படைத் திருக்கின்றார். அதாவது, பதீதத்திலிருந்து
பாவனம் ஆக்கியிருக்கின்றார். உலகம் எதையுமே அறியவில்லை. நாமே
பூஜைக்குரிய வர்கள், நாமே பூஜாரிகள் என்று பாடுகின்றனர். ஆனால்,
இது பகவானைப் குறிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை, பகவானே
பூஜாரியாக ஆனார் என்றால் பிறகு, யார் பூஜைக்குரியவராக ஆக்குவது
என்று கேட்க வேண்டும். குழந்தைகளுக்கு, நானே அது என்பதன்
அர்த்தம் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. நாமே சூத்திரர்களாக
இருந்தோம், இப்பொழுது நாமே தேவதை ஆகிக்கொண்டு இருக்கின்றோம்.
சக்கரத்தை நினைவு செய்யமுடியும் அல்லவா! தந்தை மகனை
வெளிப்படுத்துகின்றார், பிறகு, மகன் தந்தையை வெளிப்படுத்து
கின்றார் என்றும் பாடப்படுகிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்காகத் தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு, ஆன்மிகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. புத்திசாலியான வியாபாரி ஆகி அனைத்து பழைய
கணக்குகளை முடித்துவிட்டு சுகத்தின் கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.
நினைவில் இருந்து விகர்மங்களின் பந்தனத்தைத் துண்டிக்க வேண்டும்.
பொறுமையாக இருக்க வேண்டும், பொறுமை யற்றவர் ஆகக்கூடாது.
2. வீட்டில் இருந்தபடியே, உணவு சமைத்துக்கொண்டே, ஒவ்வொரு
செயல்களையும் செய்து கொண்டே தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்.
தந்தை, என்ன அழிவற்ற ஞான இரத்தினங்களை அளிக்கின்றாரோ, அதன்
மூலம் பையை நிறைத்து பிறருக்குத் தானம் செய்ய வேண்டும்.