15-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! நீங்கள் இறைவனால் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் தூய்மையாக ஆகி, தூய்மையான உலகத்தின் ஆஸ்தி பெற வேண்டும். இது கடைசி நேரமாகும். எனவே அவசியம் தூய்மையாக வேண்டும்.

கேள்வி:
இச்சமயம் மனிதர்களுக்கு ஒட்டகப் பறவை என்ற பட்டம் கொடுக்கலாம் - ஏன்?

பதில்:
ஏனெனில் ஒட்டகப் பறவைக்கு நீ பறந்து செல் என்று கூறினால் எனக்கு இறக்கை இல்லை. நான் ஒட்டகம் என்று கூறும். நல்லது. சாமான்களைத் தூக்கு என்று கூறினால், இல்லை நான் பறவை என்று கூறும். இதே போலத் தான் இன்றைய மனிதர்களின் நிலைமையாகும். அவர்களிடம் நீங்கள் உங்களை தேவதைக்குப் பதிலாக இந்து என்று ஏன் அழைத்து கொள்கிறீர்கள் என்று கேட்டால் தேவதைகளோ தூய்மை யானவர்கள், நாங்கள் தூய்மை அற்றவர்கள், என்பார்கள். நல்லது. அப்படி யெனில் இப்பொழுது (பதீதமான) தூய்மையற்ற நிலையிலிருந்து (பாவனமாக) தூய்மையாக ஆகுங்கள் என்று கூறினால், நேரம் இல்லை என்பார்கள். மாயை தூய்மையின் சிறகுகளையே துண்டித்து விட்டுள்ளது. எனவே எங்களுக்கு நேரமில்லை என்று கூறுபவர்கள் ஒட்டகப்பறவை. குழந்தைகளாகிய நீங்கள் ஒட்டகப்பறவை ஆகக் கூடாது.

பாடல்:
ஓம் நமோ சிவாய .. .. .. ..

ஓம் சாந்தி.
இது யார் கூறினார்? தங்களிடமே கேள்வி கேட்க வேண்டும். ஓம் என்பதன் பொருளை மனிதர்கள் அநேக விதமாகக் கூறுகின்றனர். பாபா என்று கூறுவதால் ஒரு நொடியில் ஆஸ்திக்கு அதிகாரி ஆகி விடுகிறார்கள். குழந்தை பிறந்து விட்டது என்றால், வாரிசு பிறந்து விட்டது என்பார்கள். பிறகு பாலகனிலிருந்து வாலிபன் ஆகிறான். இங்கும் அதே போலத் தான். பாபாவை அறிந்து கொண்டீர்கள். அடையாளம் கண்டு கொண்டீர்கள். மேலும் ஆஸ்திக்கு அதிபதி ஆனீர்கள். இங்கோ நீங்கள் பெரியவர்களாக இருக்கவே இருக்கிறீர்கள். ஆத்மாவிற்குத் தந்தையின் அறிமுகம் கிடைத்தது. ஒரு நொடியில் தந்தையின் ஆஸ்தி கிடைத்தது. குழந்தை பிறந்த உடனேயே தந்தை யினுடைய சொத்தை ஆஸ்தியாகப் பெறுவோம் என்று புரிந்திருப்பார்கள். இவர் எல்லையில்லாத தந்தை ஆவார்.

ஹே குழந்தைகளே, தந்தை வந்துள்ளார் என்பதை ஆத்மா அறிந்துள்ளது என்று கூறுகிறார். நாம் தந்தையிடமிருந்து கல்ப கல்பமாக அரசாட்சியைப் பெறுகிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் ஒரு நொடியில் உலகிற்கு அதிபதியாகி விடுகிறீர்கள் என்பது போல உள்ளது. ஓம் என்றால் அஹம் - நான் ஆத்மா, இது என்னுடைய சரீரம். நான் ஆத்மா, யாருடைய குழந்தை? பரமாத்மாவின் குழந்தை. நான் ஓம் - பரம ஆத்மா ! என்று தந்தையும் கூறுகிறார். எனக்கென்று உடல் கிடையாது. எவ்வளவு சுலபமான விஷயமாகும். ஓம் என்றால் பகவான் என்று அவர்கள் நினைக் கிறார்கள். ஆக எல்லோரும் பகவான் ஆகி விட்டார்கள். பகவானோ ஒரே ஒருவர் ஆவார். நான் உங்கள் தந்தை ஆவேன் என்று அவர் கூறுகிறார். பரம ஆத்மா என்றால், பரமாத்மா அவரை முழு உலகமே பதீத பாவனரே வாருங்கள் என்று அழைக்கிறது. பரமபிதா பரமாத்மாவின் ஆத்மா, என் மூலமாக உங்களுக்கு இராஜயோகம் கற்பிக் கிறார் என்று யாருமே கூறமாட்டார்கள். யாருக்கும் தெரியவே இல்லை. தெரியாத காரணத்தினால் கிருஷ்ண பகவான் என்று அவரது பெயரை எழுதி விட்டுள்ளார்கள். அவர் இராஜ யோகம் கற்பித்தார் என்றோ அல்லது அவரை பதீத பாவனர் என்றோ கூற முடியாது. அவரோ சொர்க்கத்தினுடைய முதல் குழந்தை ஆவார். யார் முதலில் இருக்கிறாரோ அவர் கடைசியிலும் இருப்பார். எனவே அவரை ஷியாம் சுந்தர் என்று கூறுகிறார்கள். முதல் நம்பரில் இருப்பது கிருஷ்ணர். பிறகு 84 பிறவிகளுக்குப் பிறகு அவரது பெயர் பிரம்மா என்று ஏற்றுக் கொள்ளப் படுகிறது. தந்தை வந்து குழந்தைகளைத் தத்து எடுக்கிறார். நீங்கள் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள், இறைவனின் குழந்தைகள் ஆவீர்கள். உங்களுக்கு தாயும் ஆவார், தந்தையும் ஆவார், பிரஜாபிதாவும் ஆவார். பிறகு நீங்கள் என்னுடைய குழந்தைகள் ஆவீர்கள் என்று இவரது வாய் மூலமாகக் கூறுகிறேன் என்று தந்தை சொல்கிறார். பாபா நாங்கள் உங்களுடையவர் ஆவோம், உங்களிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கு வந்துள்ளோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். தந்தை அவசியம் வருகிறார் என்று புத்தியும் கூறுகிறது. எப்பொழுது வருகிறார் என்பது கூட சிந்திக்க வேண்டிய விஷயமாகும் அல்லவா? பதீத பாவனரே வாருங்கள் என்று கூறுகிறார்கள். எனவே அவசியம் பதீதமான உலகத்திற்கு முடிவு ஏற்படும் பொழுது தான் நான் வருவேன் அல்லவா? இதற்கு கல்பத்தின் ஆரம்பம் மற்றும் முடிவிற்கிடையேயான சங்கமம் என்று கூறப்படுகிறது. கடைசியில் எல்லோருமே பதீதமாக உள்ளார்கள். ஆரம்பத்தில் எல்லோருமே பாவனமாக இருப்பார்கள். கடைசியில் பதீத உலகத்தின் விநாசம் ஆகிறது. பாவன உலகத்தின் ஸ்தாபனை ஆகிறது. பிறகு விருத்தி அடைந்து கொண்டே போகிறார்கள். பிரம்மா மூலமாக ஸ்தாபனை என்றும் பாடப்படுகிறது. இவர் திரிமூர்த்தி ஆவார்.

சிவபாபாவின் குழந்தைகள் அனவைரும் சகோதரர்கள் ஆவார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறகு படைக்கும் பொழுது சகோதர சகோதரிகள் ஆகிறார்கள். மாதா பிதா என்று ஏன் கூறுகிறீர்கள்? வருங்கால ஆஸ்தி பெறுவதற்காக லௌகீக ஆஸ்தி இருக்கையிலும் பரலௌகீக ஆஸ்தி பெறுவதற் கான புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறீர்கள். இது கலியுகம், மரண உலகமாகும். சத்யுகத்தை அமரலோகம் என்று கூறுவார்கள். இங்கோ மனிதர்கள் காலம் தவறி இறந்து போகிறார்கள். சத்யுகம் தெய்வீக உலகமாகும். அங்கு ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருக்கும். இந்து தர்மம் என்று எதுவும் கிடையாது. ஜனத்தொகை கணக்கெடுக்கும் பொழுது நீங்கள் எந்த தர்மத்தினர் என்று கேட்கிறார்கள். நாங்கள் பிராமண தர்மத்தினர் ஆவோம் என்று கூறினால், அவர்கள் இந்து தர்மத்தில் சேர்த்து விடுவார்கள். ஏனெனில், அந்த பிராமணர்கள் கூட இந்து தர்மத்தில் வந்து விடுகிறார்கள். ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்களை இந்து தர்மத்தில் சேர்த்து விட்டுள்ளார்கள். உண்மையில் இந்து தர்மம் என்று ஒன்றும் கிடையாது. ஐரோப்பாவில் இருப்பவர்களுக்கு ஐரோப்பிய தர்மத்தினர் என்று கூறுவார்களா என்ன? தர்மமோ கிறிஸ்தவ தர்மம் ஆகும் அல்லவா? கிறிஸ்து கிறிஸ்தவ தர்மத்தை ஸ்தாபித்தார். நல்லது. இந்து தர்மத்தை யார் ஸ்தாபித்தார்? எனவே பாவம் குழம்பி விடுகிறார்கள். கீதை மூலமாக ஸ்தாபனை ஆகியது என்று கூறி விடுகிறார்கள். ஆக கீதை மூலமாகவே ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகியது என்று புரிய வைக்கப்படுகிறது. நீங்களோ தேவதா தர்மத்தினர் ஆவீர்கள். தேவதைகளோ மிகவும் பவித்திரமாக இருந்தார்கள். நாங்களோ பதீதமாக இருக்கிறோம் என்று பின்னர் கூறுவார்கள். நாங்கள் எங்களை தேவி தேவதை என்று எப்படி அழைத்துக் கொள்ள முடியும்? நல்லது. தூய்மை ஆகுங்கள் என்று புரிய வைக்கப்படுகிறது. மீண்டும் தேவி தேவதா தர்மத்தில் வந்து விடுங்கள் என்றால், அப்பொழுது நேரம் எங்கே இருக்கிறது என்கிறார்கள். உங்களுடைய இந்த விஷயங்களோ மிகவும் புதிதாக உள்ளது. உண்மையில் நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினர் ஆவோம். பாரதவாசிகள் பூஜிப்பதும் தேவி தேவதைகளைத் தான். எப்படி கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப் பூஜிக்கிறார்கள்! ஆனால் பதீதமாக இருக்கும் காரணத்தினால் தங்களை தேவதை என்று கூறிக் கொள்ள முடியவில்லை. நல்லது. வந்து பாவனம் ஆகுங்கள் என்றால், நேரம் இல்லை என்கிறார்கள். ஒட்டகப்பறவை போன்றவர்கள் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் ஏன் தேவதை என்று அழைத்து கொள்வது இல்லை என்று கேட்கப்படும் பொழுது நாம் பதீதமாக இருக்கிறோம் என்கிறார்கள். நல்லது. பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆகுங்கள் என்று கூறினால் நேரமில்லை என்கிறார்கள். ஒட்டகப் பறவையிடம் நீ பறந்து செல் என்று கூறினால், சிறகுகள் இல்லை. நான் ஒட்டகம் என்று கூறும். அப்படியானால் சாமான்களைத் தூக்கு என்று கூறினால் நானோ பறவை ! என்று கூறும். எனவே மாயை உங்களுடைய தூய்மையின் சிறகுகளை வெட்டி விடுகிறது என்று தந்தை கூறுகிறார்.

இப்பொழுது மார்களிமாதத்தில் சிவனுக்கு பூஜை செய்கிறார்கள். விரதம் மேற்கொள்கிறார்கள். உங்களை பொருத்தவரை ஞான மழையின் காலமே மார்கழி மாதம் ஆகும். நீங்கள் தூய்மையாக ஆகி, தூய்மையான உலகிற்கு அதிபதி ஆகிறீர்கள். மனிதர்கள் உணவு உட்கொள்ளாமல் இருப்பதற்கான விரதம் மேற்கொள்கிறார்கள். தந்தை விஷத்தை (விகாரம்) உட்கொள்ளாதீர்கள் என்று கூறுகிறார். இது பற்றிக் கூட புரிய வைக்க வேண்டி இருக்கும். சிவனை நிறைய பேர் பூஜிக்கிறார்கள். தூய்மையின் விரதம் மேற்கொள்ளுங்கள் என்று இப்பொழுது சிவபாபா கூறுகிறார். நான் தூய்மையான தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய வந்துள்ளேன். இங்கோ யாருமே பாவனமாக இல்லை. பவித்திரமான தேவி தேவதைகள் சத்யுகத்தில் இருப்பார்கள். அவர்கள் விஷத்தினால் பிறப்பதில்லை. இல்லையென்றால் அவர்களை சம்பூர்ண நிர்விகாரி என்று ஏன் கூறுகிறார்கள்? இலட்சுமி நாராயணர், இராதை கிருஷ்ணர் ஆகியோரை சம்பூர்ண நிர்விகாரி என்றே கூறுகிறார்கள். இங்கோ எல்லோருமே பதீதமாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் எந்த குணமும் இல்லை. நாங்கள் பதீதமானவர்கள், தாழ்ந்தவர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். என் வழிப் படி நடந்து, நீங்கள் சம்பூர்ண நிர்விகாரி ஆனீர்கள் என்றால், நீங்கள் இந்த இலட்சுமி நாராயணரைப் போல அதிபதி ஆகி விடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார். உங்களது படிப்பு எவ்வளவு பெரியது ஆகும். மனிதனிலிருந்து தேவதை ஆவதற் கான புருஷார்த்தம் செய்யுங்கள். உலகத்திற்கு அதிபதி ஆக வேண்டும். சத்யுகத்தில் தேவி தேவதை களின் இராஜ்யம் இருந்தது அல்லவா? இப்பொழுது மீண்டும் தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் தூய்மையாக ஆகி சொர்க்கத்தின் ஆஸ்தி எடுக்கிறீர்கள். சுயம் என்றால் ஆத்மா. ஆத்மாவிற்கு இராஜ்யம் கிடைக்கிறது. அதற்கு சுயராஜ்யம் என்று கூறப்படுகிறது. மனிதர்களோ தேக அபிமானியாக (தேக உணர்வுடையவர்களாக) இருக்கிறார்கள். தேக அபிமானத் துடன் உங்களுடைய இராஜ்யம் என்று கூறுகிறார்கள். இங்கு நீங்கள் நாம் ஆத்மா ஆவோம் என்று கூறுகிறீர்கள். இந்த சரீரத்தின் அதிபதி ஆவோம். நாம் மகாராஜா ஆகப் போகிறோம். நமக்கு சத்யுகத்தில் தூய்மையான சரீரம் கிடைக்கும். இப்பொழுதோ பதீதமாக இருக்கிறோம். எப்படி ஆத்மாவோ அப்படியே சரீரம். ஆத்மாவில் துரு படிந்துள்ளது. ஆத்மா முதலில் உண்மையான தங்கமாக இருந்தது. தங்கயுகம் என்று கூறப்பட்டது. பிறகு திரேதா வரும் பொழுது வெள்ளியின் கலப்படம் ஏற்பட்டது. பிறகு துவாபரயுகத்திற்குச் செல்லும் பொழுது செம்பு படிந்து விட்டது. இச்சமயம் ஆத்மாவும் பொய்யாக உள்ளது. பின் சரீரமும் பொய்யாக உள்ளது. இதற்கு பொய்யான கண்டம் என்றே கூறப்படுகிறது. இப்பொழுது தந்தையுடன் யோகம் கொள்வதால் கலப்படம் நீங்கிப் போய் விடும். இதற்கு யோக அக்னி என்று கூறப்படுகிறது. ஆபரணங் களிலிருந்து அசுத்தத்தை நீக்குவதற்கு நெருப்பில் இடப்படுகிறது. இது கூட யோக அக்னி ஆகும். அதில் அசுத்தம் சாம்பலாகி விடும். மேலும் நாம் உண்மையான தங்கமாக ஆகி, தந்தையுடன் சென்று விடுவோம். நீங்கள் என்னுடன் கூடவே வருவீர்கள். சத்யுகத்தில் உண்மையான தங்கம் கிடைக்கும். இப்பொழுது கிருஷ்ணரை கரு நீலம் என்று ஏன் கூறுகிறார்கள்? கிருஷ்ணருடைய பெயர் ரூபமோ மாறி விடுகிறது. நீங்கள் வெண்மையாக (தூய்மையாக) இருந்தீர்கள். உங்கள் மீது துரு படிந்துள்ளது என்று தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது முற்றிலும் இரும்பு யுகத்தினராக ஆகி உள்ளீர்கள். இப்பொழுது நான் பொற்கொல்லன் ஆவேன். குழந்தைகளை சூளையில் போட்டு விடுகிறேன். மூங்கில் காட்டிற்கு நெருப்பு பிடித்து விடும். எல்லோருடைய உடல்களும் அழிந்து போய் விடும். ஆத்மாவோ அழியாதது ஆகும். ஒன்று யோக அக்னியினால் தூய்மை ஆகி விடுவீர்கள். மற்றவர்கள் அனைவரும் தண்டனை கள் வாங்கி கணக்கு வழக்குகளை முடித்து விட்டு, பிறகு செல்வார்கள். இது அனைவரையும் பாவனமாக ஆக்குவதற்கான இறைவனின் சூளை ஆகும். இவர் ஞானக் கடல் ஆவார். அவரிடமிருந்து ஞான கங்கைகளான நீங்கள் வெளிப்பட்டுள்ளீர்கள். பிறகு மனிதர்கள் அந்த தண்ணீரின் கங்கை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அங்கு தேவதைகளின் விக்கிரகங்கள் கூட வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் நீங்கள் பகவானின் குழந்தைகள் ஞான கங்கைகள் ஆவீர்கள். பிறகு தேவதை ஆகி விடுகிறீர்கள். சொர்க்கத்தில் நீங்கள் வரும் பொழுது உங்களை தேவதைகள் என்று கூறுவார்கள். அங்கு ஆத்மா சரீரம் இரண்டுமே தூய்மையாக இருக்கும். இப்பொழுதோ பதீதமாக உள்ளோம். பாரதம் தங்க யுகமாக இருந்தது. பிறகு வெள்ளி, செம்பு, இரும்பு யுகம் ஆகியது. மீண்டும் தந்தை தங்க யுகத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். உங்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே தூய்மையாக ஆகி விடுகிறது. நான் வண்ணானும் ஆவேன் என்று தந்தை கூறுகிறார். உங்களுடைய ஆத்மாவை துவைப்பவன் ஆவேன். தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். அவ்வளவே ! யோகத்தில் இருப்பதால் நீங்கள் உலகிற்கு அதிபதியாக ஆக முடியும். புஜபலம் உடையவர்கள் உலகிற்கு அதிபதி ஆக முடியாது. ஆம். அவர்களிடம் அவ்வளவு பலம் உள்ளது என்றால் ஒரு வேளை கிறிஸ்தவர்களான இரண்டு சகோதரர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்றால் உலகத்திற்கு அதிபதி ஆகி விட முடியும். ஆனால் அப்படி (நடைமுறை) சட்டம் இல்லை. இரண்டு பூனைகள் தங்களுக்குள் சண்டையிட்டன. மேலும் குரங்கு வெண்ணையை சாப்பிட்டு விட்டது என்ற கதையும் உள்ளது. எனவே அவர்கள் இருவரும் சண்டையிடுகிறார்கள். நடுவில் வெண்ணைய் பாரதத்திற்கு கிடைத்து விடுகிறது. இதில் கூட முதல் நம்பரில் இருப்பவர் ஸ்ரீகிருஷ்ணர். எனவே ஸ்ரீகிருஷ்ணரின் வாயில் உருண்டையைக் காண்பிக்கிறார்கள். அந்த வெண்ணெய் கிடையாது. இது சொர்க்கத்தின் இராஜ்ய பாக்கியம் ஸ்ரீகிருஷ்ணருக்கு கிடைத்தது. எல்லாமே அழிந்து போய்விடும். பின் நீங்கள் அதிபதியாகி விடுவீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். அதற்கு முன்பு தந்தையின் ஸ்ரீமத்படி அவசியம் நடக்க வேண்டும். ஸ்ரீமத் மூலமாக சிறந்தவர் களாகவும் அசுர வழி மூலமாக இழிந்தவர்களாகவும் ஆகிறீர்கள். இங்கு இருப்பது அசுர பதீதமான உலகம். ஒருவர் கூட தூய்மையாக இல்லை. பாவன உலகத்தில் ஒருவர் கூட பதீதமாக இருப்ப தில்லை. இப்பொழுதோ எல்லோருமே பதீதமாக இருக்கிறார்கள். பதீத பாவன சீதாராம் என்று பாடவும் செய்கிறார்கள். சீதைகளாகிய நாம் இராவணனின் சிறையில் உள்ளோம். ஹே இராமரே! வந்து விடுவியுங்கள். பாவன உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூப்பிடுகிறார்கள், பாடுகிறார்கள். என்றாலும் கூட எதுவுமே அறியாமல் உள்ளார்கள். எது தோன்றுகிறதோ அதைக் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இராவணன் முற்றிலும் தூங்க வைத்துள்ளான். இப்பொழுது தந்தை வந்து எழுப்புகிறார். பரமபிதா பரமாத்மா, பதீத பாவனர், சிருஷ்டியின் படைப்புக் கர்த்தாவான அவருடைய வாழ்க்கை சரித்திரத்தை நாம் அறிந்துள் ளோம். பிரம்மா, விஷ்ணு, சங்கரன் மற்றும் இலட்சுமி நாராயணரின் வாழ்க்கை சரித்திரத்தையும் கூட நாம் அறிந்துள்ளோம். இலட்சுமி நாராயணரின் 84 பிறவிகளையும் நாம் அறிந்துள்ளோம். எனவே ஞானம் நிறைந்தவர் ஆகி விட்டீர்கள் அல்லவா? நீங்கள் கிருஷ்ணரின் கோவிலுக்குச் சென்றீர்கள் என்றால், அவர் சத்யுகத்தின் முதல் இளவரசராக இருந்தார் என்பதைப் புரிந்திருப்பீர்கள். இப்பொழுது கடைசி 84வது பிறவியில் பிரம்மாவாக ஆகி உள்ளார். இது கூட மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

குழந்தைகளே எச்சரிக்கையுடன் இருங்கள். ஒரு பொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள் என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். தந்தையோ துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஆவார் அல்லவா? நீங்கள் கூட 5 விகாரங்களை தானம் கொடுக்கிறீர்கள். தானம் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும். கிரகணம் பிடிக்கும் பொழுது துறவிகள் தானம் கொடுங்கள் என்பார்கள். எனது செல்லமான குழந்தைகளே! விகாரங்களை தானம் கொடுத்தீர்கள் என்றால் சர்வ குணங்களும் நிறைந்தவர்களாகி தேவதை ஆகி விடுவீர்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். துக்கத்தின் கிரகணம் விடுபட்டு விடும். நீங்கள் சுகதாமத்திற்கு அதிபதியாக ஆகி விடுவீர்கள். எனவே 5 விகாரங்களின் தானம் பெறப்படுகிறது. இது நல்லது தானே ! இப்பொழுது உங்கள் மீது விகாரங்களின் கிரகணம் படுவதால் முற்றிலும் கருப்பாக ஆகி விட்டுள்ளீர்கள். நான் உங்களிடம் விகாரங்களைத் தான் கேட்கிறேன். வேறு எதுவுமே கேட்பதில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானியாக வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். நான் ஆத்மா ஆவேன் பரமாத்மாவை நினைவு செய்ய வேண்டும். ஆஸ்தி அவரிடமிருந்து பெற வேண்டும். எனவே ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். தேவதைகள் ஆத்ம அபிமானி ஆகி உள்ளார்கள். இப்பொழுது தந்தையாகிய என்னை நினைவு செய்வதால் தான் உங்களது பாவங்கள் சாம்பலாகும். நான் பாதுகாப்பு அளிப்பேன். நீங்கள் என்னை நினைவே செய்யவில்லை என்றால், என்ன பாதுகாப்பு. தந்தை எவ்வளவு புரிய வைக்கிறார். இந்த விஷயங்கள் எந்த ஒரு சாஸ்திரங்களிலும் இல்லை. அது பக்தி மார்க்கத்தின் பொருட்கள். தந்தையோ உங்களை சத்கதியில் அழைத்துச் செல்வதற்காகக் கற்பிக்கிறார். நான் இந்த சரீரம் மூலமாக உங்களுக்குப் புரிய வைக்கிறேன். இது என்னுடைய சரீரம் கிடையாது. இதுவோ இவருடைய பழைய செருப்பு ஆகும். கடனாக எடுக்கப்பட்டுள்ளது. நான் இவருக்குள் பிரவேசம் செய்கிறேன். பிறகு பாவனமாக ஆக்குகிறேன். எவ்வளவு நல்ல முறையில் தந்தை புரிய வைக்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தையின் ஸ்ரீமத் படி நடந்து சம்பூர்ண நிர்விகாரி ஆக வேண்டும். படிப்பின் மூலம் உலகத்தின் இராஜ்யத்தைப் பெற வேண்டும். ஆத்மாவில் படிந்திருக்கும் துருவை யோக அக்னி மூலமாக நீக்க வேண்டும்.

2. ஆத்ம உணர்வுடையவராகி தந்தையை நினைவு செய்ய வேண்டும். எந்த அளவிற்கு நினைவில் இருப்பீர்களோ அந்த அளவிற்கு தந்தை பாதுகாத்துக் கொண்டே இருப்பார்.

வரதானம்:
எனது எனது என்பதை உன்னுடையதாக மாற்றம் செய்து சிரேஷ்ட குறிக்கோளை அடையக்கூடிய பற்றுதலை வென்றவர் ஆகுக.

எங்கு என்னுடையது என்பது வருகிறதோ, அங்கு குழப்பம் ஏற்படும். என்னுடைய படைப்பு, என்னுடைய கடை, என்னுடைய பணம், என்னுடைய வீடு இந்த என்னுடையது என்பது சிறிதளவு இருந்துவிட்டாலும் குறிக்கோளின் எல்லையை அடைய முடியாது. உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காக என்னுடையதை உன்னுடையதாக மாற்றி விடுங்கள். எல்லைக்குட்பட்ட என்னுடையது என்பதல்ல. எல்லைக்கு அப்பாற்பட்ட என்னுடையது என்பதில் இருங்கள். அது தான் என்னுடைய பாபா (மேரா பாபா). பாபாவின் நினைவு மற்றும் நாடகத்தின் ஞானத்தின் மூலம் எதுவும் புதியதல்ல என்ற உறுதியான மனநிலை இருக்கும் மேலும் பற்றற்றவர் ஆகி விடலாம்.

சுலோகன்:
உண்மையான சேவாதாரி ஆகி சுயநலமற்ற சேவை செய்துக் கொண்டேயிருந்தால் சேவையின் பலன் தானாக கிடைத்துவிடும்.