15.09.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! பாபா வந்துள்ளார், உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண்ணைக் கொடுப்பதற்காக. இதன் மூலம் நீங்கள் சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி அறிந்து கொள்கிறீர்கள்.

 

கேள்வி :

பெண் சிங்கங்களாகிய சக்திகள் மட்டுமே எந்த ஒரு விஷயத்தை தைரியமாகப் புரிய வைக்க முடியும்?

 

பதில்:

மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும் - பாபா சொல் கிறார், உங்களை நீங்கள் ஆத்மா என உணருங்கள், பரமாத்மா அல்ல. ஆத்மா எனப் புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். மேலும் நீங்கள் முக்திதாமத்திற்குச் சென்று விடுவீர்கள். பரமாத்மா என உணர்வதால் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகாது. இந்த விஷயங்களை மிகவும் துணிச்சலோடு பெண் சிங்கங்களாகிய சக்திகள் நீங்கள் மட்டுமே புரிய வைக்க முடியும். புரிய வைப்பதற்கும் பயிற்சி வேண்டும்.

 

பாடல் : கண்ணில்லாதவர்களுக்கு வழி காட்டுங்கள் பிரபு...

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் அனுபவம் செய்து கொண்டிருக்கிறார்கள்-ஆன்மிக நினைவு யாத்திரையில் கடினம் இருப்பதாக தோன்றுகிறது. பக்தி மார்க்கத்தில் வாசல் தோறும் அலைந்து கடுமையான அடி வாங்க வேண்டி உள்ளது. அநேக விதமான ஜபம்-தபம்-யக்ஞம் செய்கின்றனர், சாஸ்திரங்கள் முதலியவற்றைப் படிக் கின்றனர். இந்தக் காரணத்தால் தான் பிரம்மாவின் இரவு எனச் சொல்லப் படுகின்றது. அரைக்கல்பம் இரவு, அரைக்கல்பம் பகல். பிரம்மா தனியாகவோ இருக்க மாட்டார் இல்லையா? பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார் என்றால் நிச்சயமாக அவருடைய குழந்தைகள் குமார்-குமாரிகள் கூட இருப்பார்கள். ஆனால் மனிதர்களுக்கு இது தெரியாது. பாபா தான் குழந்தைகளுக்கு ஞானத்தின் மூன்றாவது கண்ணைத் தருகிறார். இதன் மூலம் உங்களுக்கு சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானம் கிடைத்துள்ளது. நீங்கள் கல்பத்திற்கு முன்பும் கூட பிராமணர்களாக இருந்தீர்கள் மேலும் தேவதையாக ஆகியிருந்தீர்கள். என்னவாக ஆகியிருந்தீர்களோ, அவ்வாறே மீண்டும் ஆவீர்கள். நீங்கள் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தினர். நீங்கள் தான் பூஜைக்குரியவர் மற்றும் பூஜாரியாக ஆகின்றீர்கள். ஆங்கிலத்தில் பூஜைக்குரியவரை வொர்ஷிப் வொர்த்தி என்றும் பூஜாரியை வொர்ஷிப்பர் என்றும் சொல்கின்றனர். பாரதம் தான் அரைக்கல்பத்துக்குப் பூஜாரி ஆகின்றது. நாம் பூஜைக்குரியவராக இருந்தோம், பிறகு நாம் தான் பூஜாரியாக ஆகியிருக்கிறோம் என்பதை ஆத்மா ஏற்றுக் கொள்கின்றது, பூஜைக்குரிய நிலையிலிருந்து பூஜாரியாகவும் பிறகு மீண்டும் பூஜைக்குரியவராகவும் ஆகிறோம். பாபாவோ பூஜைக்குரியவராகவும் பூஜாரியாகவும் ஆவதில்லை. நீங்கள் சொல்வீர்கள், நாம் தான் பூஜைக்குரிய பாவனமான தேவி-தேவதைகளாக இருந்தோம். பிறகு 84 பிறவிகள் எடுத்த பிறகு முழுமையான பதீத் பூஜாரியாக ஆகி விடுகிறோம். இப்போது ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தினராக இருந்த பாரதவாசிகளுக்கு தங்களுடைய தர்மத்தைப் பற்றி எதுவும் தெரியாது. உங்களுடைய இந்த விஷயங்களை அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொள்ள மாட்டார்கள். யார் இந்த தர்மத்தினராக இருந்து எங்காவது மதம் மாறியிருக்கிறார்களோ, அவர்கள் தான் வருவார்கள். அதுபோல் அநேகரோ மதம் மாறி விட்டுள்ளனர். பாபா சொல்கிறார், யார் சிவன் மற்றும் தேவதைகளின் பூஜாரிகளாக உள்ளனரோ, அவர்களுக்கு இது எளிது. மற்ற தர்மத்தினர் புத்தியை பேதலிக்கச் செய்து விடுவார்கள். யார் மதம் மாறியவர்களோ, அவர்களுக்கு டச் (உணர்வு) ஆகும். மேலும் வந்து புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். இல்லையென்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆரிய சமாஜத்தில் இருந்தும் சீக்கியர்களும் கூட அநேகர் வந்துள்ளனர். ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தினரில் யார் மதம் மாறி சென்றுவிட்டார்களோ, அவர்கள் மீண்டும் தங்களுடைய தர்மத்தில் அவசியம் வந்தாக வேண்டும். விருட்சத்திலும் கூட தனித்தனிப் பிரிவுகள் உள்ளன. பிறகு வருவதும் நம்பர்வார் தான் வருவார்கள். கிளைகள் மேலும்-மேலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் பவித்திரமாக இருக்கும் காரணத்தால் அவர்களின் பிரபாவம் தோற்றம் நன்றாக வெளிப்படும். இச்சமயம் தேவி-தேவதா தர்மத்தின் அஸ்திவாரம் இல்லை. மீண்டும் அஸ்திவாரம் போட வேண்டி இருக்கிறது. சகோதர-சகோதரியாகவோ ஆகியே தீர வேண்டும். நாம் ஒரு தந்தையின் குழந்தைகள், அனைவரும் சகோதர-சகோதரர்கள். பிறகு சகோதர-சகோதரி ஆகிறோம். இப்போது புதிய சிருஷ்டியின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. முதல்-முதலில் பிராமணர்கள். புதிய சிருஷ்டியின் ஸ்தாபனையில் பிரஜாபிதா பிரம்மாவோ அவசியம் வேண்டும். பிரம்மாவின் மூலமாக பிராமணர்கள் உருவாகின்றனர். இது ருத்ர ஞான யக்ஞம் என்றும் சொல்லப் படுகின்றது. இதில் பிராமணர்கள் அவசியம் வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் நிச்சயமாக வேண்டும். அவர் கிரேட்-கிரேட் கிராண்ட் ஃபாதர். பிராமணர்கள் முதல் நம்பரில் குடுமி (உயர்ந்த நிலை) உள்ளவர்கள். ஆதம் பீபி, ஆதாம் ஏவாள் என்று ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றனர். இச்சயம் நீங்கள் பூஜாரி நிலையிலிருந்து பூஜைக்குரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய மிக நல்ல நினைவுச் சின்னமாக தில்வாடா கோவில் உள்ளது. கீழே தபஸ்யாவில் அமர்ந்துள்ளனர். மேலே இராஜ்யம். மேலும் இங்கே நீங்கள் சைதன்யத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கோவில்கள் அழிந்து போகும், பிறகு பக்தி மார்க்கத்தில் மீண்டும் உருவாகும்.

 

நீங்கள் அறிவீர்கள், நாம் இப்போது இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். பிறகு புதிய உலகத்திற்குச் செல்வோம். அது ஜட ஆலயம். நீங்கள் சைதன்யத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். முக்கியமான கோவில் இது சரியாகக் கட்டப்பட்டுள்ளது. சொர்க்கத்தை இல்லையென்றால் எங்கே காட்டுவார்கள்? அதனால் கூரை மீது சொர்க்கத்தைக் காட்டியுள்ளனர். இதைப் பற்றி மிக நன்கு புரிய வைக்க முடியும். சொல்லுங்கள் - பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. பிறகு இப்போது பாரதம் நரகமாக உள்ளது. இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்கள் உடனே புரிந்து கொள்வார்கள். இந்துக்களிலும் கூடப் பார்ப்பீர்களானால் அநேக விதமான தர்மங்களில் மாறிச் சென்றுள்ளனர். அவர்களை வெளியில் கொண்டுவர நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டியுள்ளது. பாபா புரிய வைத்துள்ளார், தன்னை ஆத்மா என உணர்ந்து என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அவ்வளவு தான், வேறு எதுவும் பேசத் தேவையில்லை. யாருக்கு (முறையான) பயிற்சி இல்லையோ, அவர்கள் பேசவும் கூடாது. இல்லையென்றால் பி.கே.க்களின் பெயரைக் கெடுத்து விடுவார்கள். வேறு தர்மங்களைச் சேர்ந்தவர்கள் என்றால் புரிய வைக்க வேண்டும்-நீங்கள் முக்தி தாமம் செல்ல விரும்பினால் தன்னை ஆத்மா என உணருங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள். தன்னைப் பரமாத்மா என நினைக்காதீர்கள். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்வீர்களானால் உங்களுடைய ஜென்ம-ஜென்மாந்தரப் பாவங்கள் நீங்கி விடும். மேலும் முக்திதாமம் சென்று விடுவீர்கள். உங்களுக்காக இந்த மன்மனாபவ மந்திரமே போதும். ஆனால் பேசுவதற்கான துணிச்சல் வேண்டும். பெண் சிங்கங்களாகிய சக்திகள் தான் சேவை செய்ய முடியும். சந்நியாசிகள் வெளியில் சென்று வெளிநாட்டினரை அழைத்து வருகின்றனர் - வாருங்கள், உங்களுக்கு ஆன்மிக ஞானம் தருகிறோம் என்று. இப்போது அந்தத் தந்தையை அறிந்து கொள்ளவே இல்லை. பிரம்மத்தை பகவான் எனப் புரிந்து கொண்டு, அதை நினைவு செய்யுமாறு சொல்கின்றனர். அவ்வளவு தான். அந்த மந்திரத்தைக் கொடுத்து விடுகின்றனர். அது, பறவையைத் தனது கூண்டுக்குள் அடைத்து விட்டது போல் ஆகிறது. ஆக, இப்படி-இப்படியெல்லாம் புரிய வைப்பதற்கும் சிறிது காலம் தேவைப்படுகிறது.. பாபா சொல்லியிருந்தார் - சிவபகவான் வாக்கு என்பது ஒவ்வொரு சித்திரத்திலும் எழுதப் பட்டிருக்க வேண்டும்.

 

நீங்கள் அறிவீர்கள், இவ்வுலகில் பிரபுவை அறியாததால் அனைவரும் அநாதைகளாக உள்ளனர். நீங்கள் தான் தாயும் தந்தையும் என்று சொல்லி அழைக்கின்றனர். நல்லது. அதன் அர்த்தம் என்ன? அதே போல உங்கள் கிருபையால் அளவற்ற சுகம் கிடைக்கிறது என்றும் சொல்கின்றனர். இப்போது பாபா உங்களுக்கு சொர்க்கத்தின் சுகத்தை அடையச் செய்வதற்காகப் படிப்பித்துக் கொண்டிருக்கிறார். இதற்காகத் தான் நீங்கள் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். யார் முயற்சி செய்கிறார்களோ, அவர்கள் அடைவார்கள். இச்சமயமோ அனைவரும் தூய்மையிழந்துள்ளனர். பாவன உலகமோ ஒரு சொர்க்கமாகிய புது உலகம் தான். இங்கே சதோபிரதானமாக யாருமே இருக்க முடியாது. சத்யுகத்தில் யார் சதோபிரதானமாக இருந்தார்களோ, அவர்கள் தான் தமோபிரதான், தூய்மை இழந்தவாராகி விடுகின்றனர். கிறிஸ்துவுக்குப் பிறகு அவருடைய தர்மத்தினர் யாரெல்லாம் வருகின்றனரோ, அவர்கள் முதலில் சதோபிரதானமாக இருப்பார்கள் இல்லையா? எப்போது லட்சக் கணக்கில் ஆகி விடுகிறார்களோ, அப்போது சேனை தயாராகின்றது, போரிட்டு இராஜ்யத்தை அடைவதற்காக. அவர்களுக்கு சுகமும் குறைவு என்றால் துக்கமும் குறைவு. உங்களைப் போல் சுகமோ யாருக்கும் கிடைக்க முடியாது. சுகதாமத்தில் வருவதற்காக நீங்கள் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். மற்ற அனைத்து தர்மங்களும் சொர்க்கத்தில் வருவதில்லை. பாரதம் எப்போது சொர்க்கமாக இருந்ததோ, அப்போது அது போன்ற தூய்மையான கண்டம் வேறெதுவும் கிடையாது. எப்போது பாபா வருகிறாரோ, அப்போது தான் ஈஸ்வரிய இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது. அங்கே யுத்தம் முதலியவற்றின் விஷயம் கிடையாது. சண்டையிடுவதோ மிகவும் பிற்காலத்தில் ஆரம்பமாகின்றது. பாரதவாசிகள் அந்த அளவு சண்டையிட்டதில்லை. கொஞ்சம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்து விட்டுள்ளனர். துவாபரயுகத்தில் ஒருவர் மற்றவர் மீது படையெடுத்துப் போரிடுகின்றனர். இந்தச் சித்திரங்கள் முதலியவற்றை உருவாக்குவதிலும் மிகவும் புத்தி வேண்டும். இதையும் எழுத வேண்டும் - சொர்க்கமாக இருந்த பாரதம் நரகமாக எப்படி ஆயிற்று? வந்து புரிந்து கொள்ளுங்கள். பாரதம் சத்கதியில் இருந்தது. இப்போது துர்கதியில் உள்ளது. இப்போது சத்கதியை அடைவதற்காக பாபா தான் ஞானம் தருகிறார். மனிதர்களிடம் இந்த ஆன்மிக ஞானம் கிடையாது. அது இருப்பது பரமபிதா பரமாத்மாவிடம். பாபா இந்த ஞானத்தை ஆத்மாக்களுக்குத் தருகிறார். மற்றப்படி மனிதர்கள் அனைவரும் மனிதர்களுக்குத்தான் கொடுக்கின்றனர். சாஸ்திரங்களையும் மனிதர்கள் எழுதியுள்ளனர். மனிதர்கள் அவற்றைப் படித்துள்ளனர். இங்கோ உங்களுக்கு ஆன்மிகத் தந்தை கற்றுத் தருகிறார். மற்றும் ஆத்மா படிக்கின்றது. படிப்பதோ ஆத்மா தான் இல்லையா? அங்கே எழுதுகிறவர் மற்றும் படிப்பவர்கள் மனிதர்கள் தான். பரமாத்மாவோ சாஸ்திரங்களைப் படிப்பதற்கான தேவை இல்லை. பாபா சொல்கிறார், இந்த சாஸ்திரங்கள் முதலியவற்றால் யாருக்கும் சத்கதி கிடைக்காது. நான் தான் வந்து அனைவரையும் வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும். இப்போதோ உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் உள்ளனர். சத்யுகத்தில் இந்த லட்சுமி-நாராயணரின் ஆட்சி இருக்கும் போது அங்கே 9 லட்சம் மனிதர்கள் உள்ளனர். மிகச்சிறிய மரமாக இருந்தது. பிறகு சிந்தித்துப் பாருங்கள்-இவ்வளவு ஆத்மாக்கள் அனைவரும் எங்கே சென்று விட்டார்கள்? பிரம்மத்தில் அல்லது நீரில் ஐக்கியமாகி விடவில்லை. மற்ற ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்தில் உள்ளனர். ஒவ்வோர் ஆத்மாவும் அழியாதது. அந்த ஆத்மாவுக்குள் அழியாத நடிப்பின் பங்கு விதிக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழியாது. ஆத்மா அழியாதது. ஆத்மாவோ ஒரு புள்ளியாக உள்ளது. மற்றப்படி நிர்வாண் (சப்தத்தைக் கடந்த உலகம்) முதலியவற்றில் யாரும் செல்வதில்லை. அனைவரும் இங்கே தங்களின் பாகத்தை நடித்தே ஆக வேண்டும். எப்போது அனைத்து ஆத்மாக்களும் இங்கே வந்து விடுகின்றனரோ, அப்போது நான் வந்து அனைவரையும் அழைத்துச் செல்கிறேன். கடைசியில் தான் பாபாவின் நடிப்பின் பாகம். புது உலகின் ஸ்தாபனை, பிறகு பழைய உலகின் விநாசம். இதுவும் டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. நீங்கள் ஆரிய சமாஜத்தின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குப் புரிய வைப்பீர்களானால் அவர்களுக்குள் யாராவது இந்த தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்களானால் அவர்களுக்கு டச் ஆகும். நிச்சயமாக இவ்விஷயமோ சரியானது தான். பரமாத்மா சர்வவியாபியாக எப்படி இருக்க முடியும்? பகவானோ தந்தை ஆவார். அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. யாராவது ஆரிய சமாஜத்தினர் கூட உங்களிடம் வருகிறார்கள் இல்லையா? அவர்கள் கன்றுகள் (நாற்றுகள்) எனச் சொல்லப்படுகின்றனர். நீங்கள் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். பிறகு உங்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் யார் இருக்கிறார்களோ, அவர்கள் வந்து விடுவார்கள். பகவான் தந்தை தான் பாவனமா வதற்கான யுக்தி சொல்கிறார். பகவான் சொல்கிறார்-என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். நான் பதித-பாவன். என்னை நினைவு செய்வதன் மூலம் உங்கள் விகர்மங்கள் விநாசமாகும். மேலும் முக்திதாமத்திற்கு வந்து விடுவீர்கள். இந்தச் செய்தியை அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சொல்லுங்கள். தந்தை சொல்கிறார்-தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டு, என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். நான் குஜராத்தி, இன்னார்... இவையனைத்தையும் விட்டு விடுவீர்கள். தன்னை ஆத்மா என உணருங்கள், மற்றும் தந்தையை நினைவு செய்யுங்கள். இது யோக அக்னியாகும். கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும். அனைவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். பாபா சொல்கிறார் - பதித-பாவன் நான் தான். நீங்கள் அனைவரும் பதீத். நிர்வாண் (முக்தி) தாமத்திற்கும் கூட பாவனமாகாமல் வர முடியாது. படைப்பின் முதல்-இடை-கடை பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். முழுமையாகப் புரிந்து கொள்வதால் தான் உயர்ந்த பதவி பெறுவீர்கள். கொஞ்சமாக பக்தி செய்திருந்தால் கொஞ்சம் ஞானத்தைப் புரிந்து கொள்வார்கள். அதிக பக்தி செய்திருந்தால் அதிகமாக ஞானத்தைப் புரிந்து கொள்வார்கள். பாபா எதைப் புரிய வைக்கிறாரோ, அதை தாரணை செய்ய வேண்டும். வானபிரஸ்திகளுக்கு இன்னும் கூட சுலபமாகும். இல்லற விவகாரங்களில் இருந்து விலகி விடுகிறார்கள். வானபிரஸ்த நிலை 60 வயதுக்குப் பிறகு ஏற்படுகின்றது. அப்போது தான் குருவிடம் செல்கின்றனர். தற்சமயமோ, சிறு வயதிலேயே குருவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இல்லையென்றால் முதலில் தந்தை, பிறகு ஆசிரியர். அதன் பிறகு 60 வயதுக்கு மேல் குரு வைத்துக் கொள்கின்றனர். சத்கதி அளிப்பதோ ஒரே ஒரு தந்தை மட்டுமே. அநேக குருமார் என்பது கிடையாது. இவையனைத்தும் பணம் சம்பாதிப்பதற்கான யுக்திகள். சத்குரு ஒருவர் தான் - அனைவருக்கும் சத்கதி அளிப்பவர். பாபா சொல்கிறார், உங்களுக்கு வேத-சாஸ்திரங்கள் அனைத்தினுடைய சாரத்தைப் புரிய வைக்கிறேன். மற்றவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்கள். ஏணிப்படியில் இறங்கி வர வேண்டியுள்ளது. ஞானம், பக்தி, பிறகு பக்தியின் வைராக்கியம். எப்போது ஞானம் கிடைக்கிறதோ, அப்போது தான் பக்தியின் மீது வைராக்கியம் ஏற்படுகின்றது. இந்தப் பழைய உலகத்தின் மீது உங்களுக்கு வைராக்கியம் வருகின்றது. மற்றப்படி உலகத்தை விட்டுவிட்டு எங்கே செல்வீர்கள்? நீங்கள் அறிவீர்கள், இந்த உலகமே முடிந்துவிடப் போகின்றது. அதனால் இப்போது எல்லையற்ற உலகத்தை சந்நியாசம் செய்ய வேண்டும். பவித்திரம் ஆகாமல் வீட்டுக்குச் செல்ல முடியாது. பவித்திரம் ஆவதற்காக நினைவு யாத்திரை வேண்டும். பாரதத்தில் ரத்த ஆறுகள் ஓடிய பின் பாலாறுகள் ஓடும். விஷ்ணுவையும் கூடப் பாற்கடலில் காட்டுகின்றனர். புரிய வைக்கப் படுகின்றது-இந்த யுத்தத்தின் மூலம் முக்தி-ஜீவன் முக்திக்கான கேட் திறக்கும். குழந்தைகள் நீங்கள் எவ்வளவு முன்னேறிச் செல்கிறீர்களோ, அவ்வளவு தான் சப்தம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்போது யுத்தம் ஆரம்பமாகி விட்டது போலத் தான். ஒரு கோபமூட்டும் பேச்சு(தீப்பொறி) மூலம் பாருங்கள், முன்னால் என்ன நடந்தது? நிச்சயமாக யுத்தம் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர். யுத்தம் நடைபெற்றுக் கொண்டே உள்ளது. ஒருவர் மற்றவர்க்கு இதில் உதவியாளர் ஆகிக் கொண்டே இருக்கின்றனர். உங்களுக்கும் கூடப் புதிய உலகம் வேண்டும். எனவே பழைய உலகம் நிச்சயமாக அழிந்தாக வேண்டும். நல்லது. ஓம் சாந்தி.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) இப்பழைய உலகம் இப்போது முடிந்துவிடப் போகின்றது. அதனால் இந்தப் பழைய உலகினை சந்நியாசம் செய்ய வேண்டும். உலகை விட்டு வேறெங்கும் செல்வது என்பதில்லை. ஆனால் இதனை புத்தி மூலம் மறந்துவிட வேண்டும்.

 

2) நிர்வாண்தாமம் (வீட்டிற்குச்) செல்வதற்காக முழுமையாக தூய்மை ஆக வேண்டும். படைப்பின் முதல்-இடை-கடை பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டு புது உலகில் உயர்ந்த பதவி பெற வேண்டும்.

 

வரதானம்:

கவனக் குறைவு மற்றும் அலட்சியப் போக்கு என்ற உறக்கத்திற்கு விடை கொடுத்து விடக் கூடிய உறக்கத்தை வென்ற சக்கரவர்த்தி ஆவீர்களாக.

 

சாட்சாத்கார மூர்த்தி ஆகி பக்தர்களுக்கு சாட்சாத்காரம் செய்விப்பதற்காக அல்லது சக்கரவர்த்தி ஆக வேண்டும் என்றால் நித்ரா ஜீத் - உறக்கத்தை வென்றவர் ஆகுங்கள். விநாசகாலம் மறந்து விடும் பொழுது அலட்சியப் போக்கு என்ற உறக்கம் வருகிறது. பக்தர்களின் கூக்குரலை கேளுங்கள். துக்கமுடைய ஆத்மாக்களின் துக்கத்தின் கூக்குரலுக்கு செவி சாயுங்கள். தாகம் கொண்டிருக்கும் ஆத்மாக்களின் பிரார்த்தனையின் கூக்குரலை கேட்பீர்கள் என்றால் ஒரு பொழுதும் கவனக் குறைவின் உறக்கம் வராது. எனவே இப்பொழுது சதா ஏற்றப்பட்ட (பிரகாசிக்கும்) ஜோதி ஆகி கவனக்குறைவின் உறக்கத்திற்கு விடை கொடுத்து விடுங்கள். மேலும் சாட்சாத்கார மூர்த்தி ஆகுங்கள்.

 

சுலோகன்:

உடல் மனம் பொருள் - மனம் சொல் செயல் - ஏதாவதொரு வகையில் தந்தையின் காரியத்தில் சகயோகி (ஒத்துழைப்பு அளிப்பவர்) ஆனீர்கள் என்றால் சகஜயோகி ஆகி விடுவீர்கள்.

 

ஓம்சாந்தி