15-09-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தற்போது நீங்கள் அமர லோக யாத்திரையில் இருக்கிறீர்கள். இது உங்களது புத்தி மூலமான ஆன்மீக யாத்திரை, இதனை உண்மையிலும் உண்மையான பிராமணர்களாகிய நீங்கள் தான் செய்ய முடியும்.

கேள்வி:

உங்களிடையே எம்மாதிரியான உரையாடலை செய்வது சுபமான சம்மேளனம் (மாநாடு) ஆகும்?

பதில்:

உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளுங்கள், ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது இந்த பழைய அழுக்கான சீ, சீ சரீரத்தை விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் எந்த வேலைக்கும் உதவாதது, இப்பொழுது பாபாவுடன் கூடவே செல்வோம். உங்களிடையே சந்திக்கும் பொழுது இம்மாதிரியான உரையாடலை செய்யுங்கள், சேவையை அதிகரிப்பது எப்படி, அனைவருக்கும் நன்மை எந்த முறையில் செய்வது, அனைவருக்கும் எவ்வாறு வழியைக் காண்பிப்பது....... இதுவே சுபமான சம்மேளனம் ஆகும்.

பாடல்:

மனதிற்கு ஆதரவு உடைந்து விடலாகாது......

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள், அனைத்து சென்டர்களையும் சார்ந்த பிரம்மா வழி வந்த சர்வோத்தம பிராமண குல பூஷணர்கள் தங்களது குலத்தை அறிவீர்களா, பொதுவாக எந்த குலத்தைச் சார்ந்தவர்களோ அவர்கள் தங்களது குலத்தை அறிவார்கள். தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்களாயினும் சரி, உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர் களாயினும் சரி, ஒவ்வொருவரும் தத்தம் குலத்தை அறிவார்கள். மேலும் இந்த குலம் நல்லது என்றும் நினைக்கிறார்கள். குலம் என்றாலும் சரி, ஜாதி என்றாலும் சரி, உலகத்தில் குழந்தை களாகிய உங்களைத் தவிர வேறு எவரும் அறிவதில்லை, (சங்கமயுக) பிராமணர்களது குலமே மிக உத்தமமானது. பிராமணர்களாகிய உங்களது குலத்தையே முதல் குலம் என்று சொல்வோம். பிராமண குலம் என்றால் ஈஸ்வரிய (பகவானின் குலம்) முதலாவது நிராகாரமான குலம், பிறகு தான் இந்த பௌதீக (சாகார) உலகம் ! சூட்சும வதனத்திலோ குலம் என்பதோ கிடையாது. இந்த சாகார உலகத்தில் உங்களது பிராமண குலம் உயர்ந்ததிலும் உயர்ந்தது ! பிராமணர்களாகிய உங்களிடையே நீங்கள் சகோதர, சகோதரிகள்! சகோதரன் சகோதரி ஆன காரணத்தினால் விகாரத்தில் செல்ல முடியாது. இது தூய்மையாக இருப்பதற்கான மிகவும் உன்னதமான யுக்தி (வழி) என்பதை உங்கள் அனுபவத்திலிருந்து கூற முடியும். ஒவ்வொருவரும் கூறுகின்றனர்லிநாம் பிரம்மா குமார், குமாரிகள் ! சிவ வம்சத்தினராகவோ அனைவரும் உள்ளனர். பிறகு சாகாரத்தில் வரும்பொழுது பிரஜாபிதா பிரம்மாவின் பெயர் இருக்கின்ற காரணத்தினால் சகோதரன், சகோதரி ஆகிவிடு கிறீர்கள். பிரஜாபிதா பிரம்மா இருக்கின்றார் என்றால் நிச்சயமாக அவரே படைப்பவர், தத்து எடுத்துக் கொள்கிறார். நீங்கள் (குக வம்சாவழி) பிறப்பின் வழி வம்சத்தினர் அல்ல. வாயின் மூலம் ஞானம் கேட்டு பிறவி எடுத்த வம்சத்தினர், (முக வம்சாவழி) ஆக மனிதர்கள் குக வம்சாவளி முக வம்சாவழியினுடைய அர்த்தத்தை அறிவதில்லை. முக வம்சாவழி என்றால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். குக வம்சாவழி என்றால், சரீரத்தின் மூலமாக பிறப்பு எடுப்பவர்கள். உங்களது இந்த பிறவி அலௌகீகமானது. தந்தையை லௌகீக், அலௌகீக், பரலௌகீக் என்று கூறப்படுகிறது. பிரஜாபிதா பிரம்மா அலௌகீக தந்தை என்று அழைக் கப்படுகிறார். லௌகீக தந்தையோ அனைவருக்கும் உண்டு. அது பொதுவானது. பரலௌகீக தந்தையும் அனைவருக்கு மானவர். பக்தி மார்க்கத்தில் ஏ பகவான், ஹே பரம்பிதா என்று கூறி வருகின்றனர். ஆனால் இந்த தந்தையை (பிரஜாபிதா பிரம்மா) எவரும் அழைப்பதில்லை. இந்த பாபா பிராமணர் குழந்தை களினுடையவர் ஆவார். அந்த இருவரை யும் அனைவரும் அறிவர். மற்றபடி பிரம்மா என வரும்பொழுது குழப்பம் அடைகின்றனர். ஏனெனில் பிரம்மாவோ சூட்சும வதனத்தில் இருப்பவர். இங்கே அப்படி காண்பிப்பதில்லை. படங்களில் பிரம்மாவை தாடி, மீசையோடு காண்பிக்கின்றார் கள். ஏனெனில், பிரஜாபிதா பிரம்மா இந்த சிருஷ்டியில் இருப்பவர். சூட்சும வதனத்திலோ பிரஜைகளைப் படைக்க முடியாது. இதுவும் எவருடைய புத்தியிலும் வருவதில்லை. இந்த விசயங்கள் அனைத்தையும் தந்தை புரிய வைக்கிறார். இந்த ஆன்மீக யாத்திரை கூட மிகவும் புகழ் வாய்ந்தது. ஆன்மீக யாத்திரை என்றால், அங்கிருந்து மீண்டும் திரும்ப வர முடியாது. (அதாவது சங்கமயுகத்திலிருந்து மூல வதனம் சென்ற பிறகு மீண்டும் சங்கமயுகத்திற்குத் திரும்ப முடியாது) பிற யாத்திரைகளோ பல பிறவிகளாக செய்து வருகின்றனர். மேலும் போய் விட்டு திரும்பியும் விடுகின்றனர். அது உலகீய யாத்திரை, இந்த உங்களது யாத்திரை ஆன்மீக யாத்திரை. இந்த ஆன்மீக யாத்திரை செய்வதால் நீங்கள் இந்த மரண உலகத்திற்குத் திரும்புவதில்லை. பாபா உங்களுக்கு அமர லோகத்தின் (சத்யுகம்) யாத்திரையை கற்றுக் கொடுக்கின்றார். அவர்கள் காஷ்மீர் அருகிலுள்ள அமர்நாத்திற்கு யாத்திரையாக செல்கிறார்கள். அது அமர லோகம் கிடையாது. அமர லோகம் ஆத்மாக்களுடையது. அடுத்தது, மனிதர்களுக்குரியது. அதனை சொர்க்கம் அதாவது அமரலோகம் என்று கூற முடியும். ஆத்மாக்களுடைய உலகம் நிர்வாண தாமம் மற்றபடி அமரலோகம், சத்யுகம், மற்றும் மரண உலகம் கலியுகம், மேலும் நிர்வாண தாமம் அமைதி உலகம் ஆகும். அங்கு ஆத்மாக்கள் வசிக்கின்றன. பாபா கூறுகிறார்: நீங்கள் அமரபுரிக்கான யாத்திரையில் உள்ளீர்கள். கால்நடையாகச் செல்வது அந்த சரீர யாத்திரையாகும். இது ஆன்மீக யாத்திரை, கற்பிப்பது ஒரே ஆன்மீக தந்தையாவார். மேலும் ஒரே ஒருமுறை வந்து கற்பிக்கிறார். அது பல பிறவிகளுக்கானது. ஆனால் இது மரண லோகத்தின் கடைசி யாத்திரை யாகும். இதனை பிராமண குல பூஷனர்களாகிய நீங்கள் தான் அறிவீர்கள். ஆன்மீக யாத்திரை அதாவது நினைவில் இருப்பது ! இறுதி நேரத்தில் புத்தியின் நிலை எப்படியோ அப்படியே எதிர்கால கதியும் (நிலை) அமையும். என்று பாடப்படுகிறது. பாபாவினுடைய வீடு உங்களுக்கு நினைவில் வருகிறது. தற்பொழுது நாடகம் முடிவடைந்து விட்டது என்பதை அறிகிறீர்கள். இந்த பழைய ஆடை பழைய உடலாகும். ஆத்மாவில் அழுக்கு சேர்வதால் சரீரத்திலும் அழுக்கு படிகிறது. ஆத்மா எப்பொழுது பவித்ரமாகிறதோ அப்பொழுது நமக்கு தூய்மையான சரீரமும் கூட கிடைக்கிறது. இதனையும் குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள். வெளியில் உள்ளவர்கள் எதையும் அறிய மாட்டார்கள். ஒரு சிலர் அறிந்து கொள்வதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். எவரது புத்தியிலும் இந்த ஞானம் இல்லை. புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்களாயின் நிச்சயம் யாருக்காவது புரியவைப்பார்கள். மனிதர்கள் யாத்திரையில் செல்லும் போது தூய்மையாக இருக்கிறார்கள். பிறகு வீட்டில் வந்து (விகாரி) அபவித்திரமாகிவிடுகிறார்கள். ஓரிரு மாதங்கள் (தூய்மையாக) பவித்திர மாயிருக்கிறார்கள். யாத்திரைக்கும் சீசன் உள்ளது. சதா காலமும் யாத்திரையில் சென்று கொண்டே இருக்க முடியாது. குளிர் காலம் மற்றும் மழை காலத்தில் எவரும் செல்ல முடியாது. ஆனால் உங்களது யாத்திரையில் குளிரோ, வெப்பமோ எதுவும் கிடையாது. நாம் இப்பொழுது பாபாவின் வீட்டிற்குச் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை புத்தியின் மூலம் அறிந்து கொள்ள முடியும். எவ்வளவு நாம் நினைவு செய் கிறோமோ அவ்வளவு விகர்மங்கள் வினாசம் ஆகின்றன. பாபாவினுடைய வீட்டிற்குச் சென்று பிறகு நாம் புதிய உலகத்திற்கு வருவோம். இதனை பாபாவே புரிய வைக்கிறார். இங்கு கூட நம்பர் பிரகாரம் வரிசைக்கிரமமாக குழந்தைகள் உள்ளனர். உண்மையில் யாத்திரையை மறக்கக் கூடாது. ஆனால் மாயை மறக்க வைத்துவிடுகிறது. எனவே, பாபா உங்களுடைய நினைவு மறந்து போகிறது என எழுதுகின்றார்கள். அட, நினைவு யாத்திரை மூலம் நீங்கள் சதா காலத்திற்கும் ஆரோக்கியமாகவும் செல்வந்தர்களாகவும் ஆகிறீர்கள். இந்த மாதிரியான ஒரு மருந்தை நீங்கள் மறந்து போகிறீர்களே ! அவர்கள் இதையும் கூறு கிறார்கள், பாபாவை நினைவு செய்வது மிகவும் எளிது என்றும் கூறுகிறார்கள். நாம் ஆத்மாக் கள் முதலில் சதோபிரதானமாயிருந்தோம் தற்போது தமோபிரதானமாக ஆகிவிட்டோம் என்று உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ள வேண்டும், தற்போது சிவபாபா நமக்கு அற்புதமான வழியைக் கூறிக் கொண்டு இருக்கின்றார். மற்றபடி பயிற்சி செய்வது நாம் தான்! கண்ணை மூடிக் கொண்டு எண்ணங்களை சிந்திப்பது கிடையாது. (பாபா அது மாதிரி செய்து காண்பிக்கிறார்) இவ்வாறு தனக்குத் தானே பேசிக் கொள்ளுங்கள். நாம் சதோபிரதானமாயிருந்தோம் நாமே இராஜாங்கம் நடத்தினோம். அந்த உலகம் தங்கயுகமாக இருந்தது. பிறகு வெள்ளி, தாமிரம், இரும்பு யுகமாக ஆகிவிட்டது. தற்போது இரும்பு யுகத்தில் கடைசி நேரமாகும். அப்பொழுதுதான் பாபா வருகிறார். பாபா ஆத்மாக்களாகிய நமக்குக் கூறுகிறார், என்னை நினைவு செய் மேலும் தங்களது வீட்டையும் நினைவு செய்யுங்கள். எங்கிருந்து வந்தீர்களோ பிறகு கடைசி நேரத்தின் புத்தியின் நிலையே எதிர்கால கதியாகிவிடும். நீங்கள் அங்குதான் செல்ல வேண்டும். இந்த வழியை பாபா கூறுகிறார். அதிகாலையில் எழுந்து தங்களோடு தாங்களே பேசிக் கொள்ளுங்கள். பாபா நடித்துக் காண்பிக் கிறார், நானும் கூட அதிகாலையில் எழுந்து விச்சார் சாகர் மந்தன் செய்கிறேன். உண்மையான வருமானத்தை செய்ய வேண்டுமல்லவா ! அதிகாலையின் சாமி...... அந்த சாமியை நினைவு செய்வதன் மூலம் உங்களது படகு அக்கரை சென்று சேரும். பாபா என்ன செய்கிறாரோ எப்படி செய்கிறாரோ, அதனை குழந்தைகளுக்கும் புரிய வைக்கிறார். இதில் சச்சரவு என்கின்ற விசயமே கிடையாது. இது வருமானத்திற்கான நல்ல வழியாகும். அலஃப் (தந்தை)யை நினைவு செய்வதன் மூலம் ஆஸ்தி என்பதும் கிடைத்துவிடும். நாம் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். பாபா விதை சொரூபமானவர், ஞானம் நிறைந்தவர் என்றால் நாமும் மரத்தை நன்றாகப் புரிந்துக் கொண்டோம் என்று குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள். இதுவும் கூட சாதாரணமான ரூபத்தில் ஞானமேதான். ஆதிகாலத்தில் இந்த மரம் எப்படி வளர்ந்து கொண்டே போகிறது. பிறகு எப்படி அதனுடைய ஆயுள் முடிகிறது. மேலும் பொதுவாக மரங்கள் புயல்கள் வீசும்பொழுது கீழே விழுந்து விடுகின்றன. ஆனால் இந்த மனித ரூப மரத்தின் முதல் அஸ்திவாரமாகிய. தேவி, தேவதா தர்மம் மறைந்து போய் விடுகிறது. இது நடக்க வேண்டியதே. இவ்வாறு எப்பொழுது மறைந்து போகின்றதோ அப்பொழுதுதான் மீண்டும் ஒரு தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது, அநேக தர்மங்களின் அழிவு ஏற்படுகின்றது என்று கூற முடியும். ஒவ்வொரு கல்பத்திலும் இந்த தர்மம் மறைந்து போகின்றது. ஆத்மாவில் அழுக்கு படிந்து விடுகின்றது என்றால் நகை, பொய்யானதாக ஆகிவிடு கிறது. நமக்குள் அழுக்கு இருந்தது என்பதை குழந்தைகள் அறிகிறார்கள். தற்போது நாம் சுத்தமாகும் பொழுது பிறருக்கும் வழியைக் கூறுகிறோம். ஆனால் உலகமோ தமோபிரதானம் ஆகும். முன்பு சதோபிரதான சொர்க்கமாக இருந்தது. ஆக, குழந்தைகள் அதிகாலையில் எழுந்து தங்களுடன் பேசிக்கொள்ள வேண்டும் அதாவது ஆன்மீக உரையாடல் செய்ய வேண்டும். பிறகு யாருக்கு விளங்க வைக்க வேண்டுமோ இந்த 84 பிறவியின் சக்கரத்தை, 84 பிறவி எப்படி எடுக்கிறார்கள், யார் எடுக்கிறார்கள் என்று விளக்க வேண்டும். முதலில் யார் வருகின்றார்களோ அவர்கள் தானே எடுப்பார்கள். பாபாவும் கூட பாரத தேசத்தில் வருகிறார். வந்து 84 பிறவியின் சக்கரத்தைப் பற்றிய இரகசியத்தை புரிய வைக்கிறார். பாபா எங்கு வந்திருக்கிறார் ? இதனைக் கூட தெரிந்திருக்க வில்லை. பாபா வந்து தனது அறிமுகத்தைத் தானே தருகிறார். அவர் கூறுகிறார், நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன், மன்மனாபவ ! என்னை நினைவு செய்தால் விகர்மங்கள் விநாசம் ஆகும். இம்மாதிரியாக எவரும் புரிய வைக்க முடியாது. கீதை முதலியவை பற்றி விளக்கம் தரலாம். ஆனால் அங்கு கூட மக்கள் சென்று கொண்டு இருக்கிறார் கள். ஆனால் பகவான் எப்பொழுதோ ஒரு முறை வந்திருப்பார் அல்லவா ! ஞானத்தைக் கூறி இருப்பார் இல்லையா? பிறகு எப்பொழுது வருகிறாரோ அப்பொழுது கூறுவார். ஆனால் அவர்களோ கீதையினுடைய புத்தகத்தை வைத்துக் கொண்டு கூறிக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயோ பகவான் வந்துள்ளார், ஞானக்கடலானவர், இவர் ஏதேனும் புத்தகத்தை கையில் எடுக்கத் தேவை யில்லை. இவர் எதையும் கற்றுக் கொள்வதில்லை. கல்பம் முன்னரும் கூட சங்கமயுகத்தில் வந்து குழந்தைகளுக்குக் கற்பித்தார். பாபாவே வந்து இராஜயோகத்தை கற்பிக்கிறார். இது நினைவின் பயணம் ஆகும். உங்களது புத்தி இதனைப் புரிந்து கொள்கிறதுலி பிரம்மாவினுடைய முக வம்சாவழி என எந்த மனிதர்களும் இருக்க முடியாது. அவர்களிடம் இந்த ஞானமும் இருக்காது, அனைவரிடமும் சர்வ வியாபியினுடைய ஞானம் நிரம்பியுள்ளது. ஆனால் பரமாத்மா புள்ளி வடிவமானவர் என்பதை எவரும் அறிவதில்லை. ஞானத்தின் கடல் பதீத பாவனர் அவரே ஆவார். ஆனால் அப்படி பாடிக் கொண்டிருக்கிறார்கள். குருமார்கள் என்ன கற்பிக்கிறார்களோ அதனையே சத்தியம், சத்தியம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய அர்த்தத்தை ஒன்றும் புரிந்துக் கொள்வதில்லை. இது சத்தியமா? அல்லது இல்லையா என்று ஒருபொழுதும் சிந்திப்பது கிடையாது. பாபா வந்து புரியவைக்கிறார், குழந்தைகள் நீங்கள் போகும்போதும், வரும்போதும் நினைவு யாத்திரையில் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால் விகர்மங்கள் வினாசம் ஆகாது. எந்த காரியத்தை வேண்மானாலும் செய்து கொண்டிருங்கள், ஆனால் புத்தியில் பாபாவினுடைய நினைவு இருக்கட்டும். ஸ்ரீநாத் கோவிலில் அன்னம் சமைக்கிறார்கள் என்றால், அவர்களது புத்தியில் ஸ்ரீநாத் இருக்கிறார் அல்லவா ! கோவிலிலேயே இருக்கிறார்கள் நாம் ஸ்ரீநாத்திற்காக இதனை சமைக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். உணவு சமைத்தோம் நெய்வேத்தியமாக (போக்) படைக் கிறார்கள், பிறகும் வீட்டில் உள்ளவர்கள், குழந்தைகள் ஆகியோர் நினைவு வந்து கொண்டே இருக்கும். அங்கு சாப்பாடு சமைக்கிறார்கள், வாய் துணியால் மூடி இருக்கின்றது, பேச மாட்டார்கள். மனதின் மூலமாக எந்த விகர்மங்களையும் செய்வதில்லை. அவர்கள் ஸ்ரீநாத் தினுடைய கோவிலில் அமர்ந்திருக்கிறார்கள், ஆனால் இங்கேயோ நீங்கள் சிவபாபாவின் அருகாமையில் அமர்ந்துள்ளீர்கள் இங்கும் நல்ல நல்ல யுக்திகளை பாபா கூறிக் கொண்டி ருக்கிறார். குழந்தைகள் வீணான விசயம் எதையும் பேசக் கூடாது. எப்பொழுதும் பாபாவோடு மிக மிக இனிமையான விசயங்களைப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி பாபாவோ, அப்படியே குழந்தைகளும். பாபாவினுடைய நினைவில் உள்ளது என்ன வென்றால் சக்கரம் எப்படி சுழல்கிறதோ அப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு வந்து கூறுகிறார். குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நமது பாபா மனித சிருஷ்டியின் விதை ரூபமானவர் (சைத்தன்ய மானவர்) எவ்வளவு எளிதான விசயம் ! ஆனால் பிறகும் புரிந்துக் கொள்வதில்லை, ஏனென்றால் கல்புத்தி அல்லவா ! அந்த விதையை நாம் சைத்தன்யம் என்று கூற முடியாது. ஆனால் இவர் ஞானம் நிறைந்தவர் (சைத்தன்யமானவர்) இவர் ஒருவரே ஆவார். அந்த விதைகளோ அநேக விதமாய் இருக்கின்றன. பகவானைப் பற்றி கூறும்பொழுது மனித சிருஷ்டியினுடைய விதை ரூபம் என்றால் தந்தையாகி விடுகிறார் இல்லையா? ஆத்மாக்களின் தந்தை பரமாத்மா, ஆக அனைவருமே சகோதரர்கள் ஆகிறார் கள். பாபாவும் அங்கே வசிக்கிறார். அங்கு ஆத்மாக்களாகிய நீங்களும் வசிக்கிறீர்கள். நிர்வாண தாமத்தில் தந்தையும் குழந்தைகளும் வாழ்கின்றனர். இந்த சமயத்தில் நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் சகோதரன் சகோதரிகள் எனவே தான் கூறப்படுகிறீர்கள் சிவவம்சி பிரம்மா குமார் குமாரிகள் என்று இதையும் நீங்கள் எழுத வேண்டும், நாங்கள் பிரம்மா குமார், குமாரிகள் சகோதரலிசகோதரிகள், தந்தை பிரம்மாவின் மூலம் இந்த படைப்பை படைக்கின்றார் என்றால் நீங்கள் சகோதரர் சகோதரிகள் தானே! ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வாறே படைக்கின்றார். தத்து எடுத்துக் கொள்கிறார். மனிதர்களை பிரஜாபிதா பிரம்மா என்று கூற முடியாது. தந்தை என்று கூறுகிறார்கள். ஆனால் அதுவோ எல்லைக் குட்பட்டது. இவரை பிரஜாபிதா என்று கூறுவீர்கள். ஏனென்றால். இவருக்கு நிறைய பிரஜைகள் உள்ளனர். அதாவது அநேக குழந்தைகள் ! ஆக, எல்லையற்ற தந்தை குழந்தைகளுக்கு அனைத்து விசயங்களையும் கூறிக் கொண்டிருக்கிறார். இந்த உலகம் முற்றிலும் கெட்டுப் போய் சீ சீ ஆகி விட்டது. தற்போது உங்களை ஆஹா ! ஆஹா ! என்று கூறத்தக்க உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். உங்களில் கூட அநேகம் பேர் இருக்கின்றீர்கள். மறந்து போகக் கூடியவர்கள்! இது ஒருவேளை நினைவில் இருந்தால் பாபாவின் நினைவும் இருக்கும். குருவும் நினைவில் இருக்க வேண்டும் ஏனெனில் நாம் வீடு திரும்பிச் செல்ல வேண்டும். பழைய சரீரத்தை விட்டு விடுவோம். ஏனெனில் இந்த உடல் தற்போது வேலைக்கு ஆவதில்லை. ஆத்மா தற்போது பவித்திரமாகிக் கொண்டிருக்கிறது என்றால், சரீரமும் பவித்திரம் ஆக வேண்டும். உங்களிடையே இம்மாதிரியான விசயங்களை அமர்ந்து பேசிக் கொள்ள வேண்டும். இதுவே சுபமான சம்மேளனம். அதில் நல்ல, நல்ல விசயங்கள் பேசப்படும். இல்லையெனில் சேவை என்பது எப்படி அதிகரிக்கும் உலகிற்கு நன்மை எப்படி செய்வது? அவர்களது சீ சீயான சம்மேளனம்! பொய்யும், புரட்டுமான விசயங்களே அங்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே வீணான விசயங்கள் என்பது கிடையாது. உண்மையான சம்மேளனம் என்று இதைத்தான் கூற முடியும். உங்களுக்கு இந்த கதை கூறப் படுகிறது. இது கலியுகம், சத்யுகத்திற்கு சொர்க்கம் என்று கூறப்படுகிறது. பாரதம் சொர்க்கமாக இருந்தது, பாரதவாசிகளே 84 பிறவிகள் எடுக்கின்றனர். தற்போது இறுதியில் உள்ளனர். தற்போது நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இதில் எவ்விதமான கங்கா ஸ்நானம் முதலியவை செய்யத் தேவை யில்லை. நான் அனைவருக்கும் தந்தை என்கிற இது பகவானுடைய வாக்கியம் ஆகும். கிருஷ்ணர் அனைவருக்கும் தந்தையாக முடியாது. ஓரிரு குழந்தையின் தந்தையாக இருப்பவர் ஸ்ரீ நாராயணர் ஆனால் கிருஷ்ணர் அல்ல. கிருஷ்ணரோ குமார் ஆவார். இந்த பிரஜாபிதா பிரம்மாவிற்கு அநேக குழந்தைகள் உள்ளனர். எங்கே கிருஷ்ண பகவானினுடைய வாக்கியம், எங்கே சிவபகாவானினுடைய வாக்கியம் ! எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டனர்! எங்கு வேண்டுமானாலும் கண்காட்சிகள் வையுங்கள். ஆனால் கீதையினுடைய பகவான் இவரா, அல்லது அவரா? என்பதே முக்கிய விசயம் . சிவனைத்தான் பகவான் என்று கூற முடியும் என்பதை முதலில் புரிய வையுங்கள். இதனை முதலில் புத்தியில் பதிய வைக்க வேண்டும். இது சம்மந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். கீதையினுடைய பகவான் சித்திரமும் கூட மிகப் பெரியதாக நிரந்தரமாக வைக்க வேண்டும். கீழே நீங்களே தீர்மானியுங்கள், வந்து புரிந்து கொள்ளுங்கள் என்று கீழே எழுதி வைக்க வேண்டும். பிறகு கையெழுத்தும் வாங்க வேண்டும். நல்லது

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. உங்களிடையே சுபமான சம்மேளனம் செய்து, சேவையை அதிகரிக்க திட்டம் தீட்டம் வேண்டும். தனது மற்றும் எல்லோருடைய நன்மைக்காகவும் வழிமுறை படைக்க வேண்டும். ஒருபொழுதும் எந்தவிதமான வீணான விசயங்களையும் பேசக் கூடாது.

2. அதிகாலையில் அமர்ந்து தனக்குத் தானே பேசிக் கொள்ள வேண்டும், விச்சார் சாகர் மந்தன் ஞானசிந்தனை செய்ய வேண்டும். உணவு சமைக்கும்பொழுது ஒரே ஒரு பாபாவினுடைய நினைவில் இருக்க வேண்டும். மனதாலும் வெளியே அலைந்து திரியக் கூடாது. இதில் கவனமாக இருக்க வேண்டும்.

வரதானம்:

விநாச சமயத்தின் பரீட்சைப் பேப்பரில் தேர்ச்சி ஆகக்கூடிய ஆகாரி லைட் (ஃபரிஸ்தா) ரூபதாரி ஆகுக.

விநாச சமயத்தில் பரீட்சைப் பேப்பரில் பாஸாவதற்கு அல்லது சர்வ சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கு ஆகாரி (ஃபரிஸ்தா) ஒளி ரூபதாரி ஆகுங்கள். நடக்கும் போதும் சுற்றி வரும் போதும் லைட் ஹவுஸ் ஆகி விடுவீர்களானால் உங்களுடைய இந்த ரூபம் (சரீரம்) தென்படாது. எப்படி பார்ட் நடிக்கும் போது ஆடையை அணிந்து கொள்கிறீர்கள், காரியம் முடிந்ததும் ஆடையைக் களைந்து விடுகிறீர்கள், அதுபோல் ஒரு விநாடியில் தாரணை செய்யுங்கள் மற்றும் ஒரு விநாடியில் அதிலிருந்து விலகித் தனியாகி விடுங்கள் லி எப்போது இத்தகைய ஓர் அப்பியாசம் இருக்குமோ, அப்போது பார்ப்பவர்கள் அனுபவம் செய்வார்கள் லி இவர்கள் ஒளி ஆடையை அணிந்தவர்கள், ஒளி தான் இவர்களுடைய அலங்காரம்.

சுலோகன்:

ஊக்கம்-உற்சாகத்தின் இறக்கை சதா கூடவே இருக்குமானால் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி சகஜமாகக் கிடைக்கும்.