15-10-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! கர்மம் செய்தபடி தன்னை பிரியதர்ஷினி என புரிந்து கொண்டு ஒரு பிரியதர்ஷனாகிய என்னை நினைவு செய்யுங்கள், நினைவின் மூலமே நீங்கள் தூய்மையடைந்து தூய்மையான உலகிற்குச் செல்வீர்கள்.

கேள்வி:
மகாபாரதப் போரின் சமயத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையின் எந்த கட்டளை கிடைத்திருக்கிறது?

பதில்:
குழந்தைகளே, தந்தையின் கட்டளை என்னவெனில் - ஆத்ம அபிமானி ஆகுங்கள். இப்போது தந்தை மற்றும் இராஜ்யத்தை நினைவு செய்யுங்கள் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுங் கள். தனது நடத்தையை சீர்திருத்திக் கொள்ளுங்கள். மிக மிக இனிமையானவராக ஆகுங்கள். நினைவில் அமரக்கூடிய பயிற்சி செய்யுங்கள் மற்றும் சுயதரிசன சக்ரதாரி ஆகுங்கள். ஒவ்வொரு அடியிலும் முன்னேறுவதற்கான முயற்சி செய்யுங்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகள் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றனர். தந்தையின் நினைவில் அனைத்து குழந்தைகளும் அமர்ந்திருக்கின்றனர் என ஒருவர் வந்து சொல்லக் கூடிய சத்சங்கம் வேறு எங்கும் இல்லை. இந்த ஒரு இடத்தில் மட்டுமே ஆகும். வாழும் வரை தந்தையை நினைவு செய்யுங்கள் என பாபா அறிவுரை கொடுத்திருக்கிறார் என குழந்தைகளுக்குத் தெரியும். இந்த பரலௌகிக தந்தையும் சொல்கிறார் - ஓ குழந்தைகளே ! இதை அனைத்து குழந்தைகளும் கேட்டு கொண்டிருக்கின்றனர். குழந்தைகளாகிய உங்களை மட்டுமல்ல அனைவருக்கும் சொல்கிறார். குழந்தைகளே தந்தையின் நினைவில் அமர்ந்தீர்கள் என்றால் நீங்கள் பிறவி பிறவிகளாக செய் திருக்கும் பாவங்களின் காரணமாக ஏறியிருக்கும் கறை அனைத்தும் வெளியேறிவிடும், அப்போது உங்களுடைய ஆத்மா சதோபிரதானமாகி விடும். உங்களுடைய ஆத்மா உண்மையில் சதோபிர தானமாகத்தான் இருந்தது, பிறகு நடிப்பை நடித்து நடித்து தமோபிரதானமாகி விட்டது. இந்த மகா வாக்கியங்களை ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் சொல்ல முடியாது. லௌகிக தந்தைக்கு ஒன்றிரண்டு குழந்தைகள் இருக்கலாம். அவர்களுக்கு ராமா ராமா என சொல்லுங்கள் அல்லது பதித பாவன சீதாராம் என சொல்லுங்கள் அல்லது ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்யுங்கள் என சொல்வார்கள். ஓ குழந்தைகளே இப்போது தந்தையான என்னை நினைவு செய்யுங்கள் என சொல்ல மாட்டார்கள். தந்தை வீட்டில் இருக்கிறார். நினைவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஜீவாத்மாக்களுக்கு சொல்கிறார். ஆத்மாக்கள்தான் தந்தையின் முன் அமர்ந்திருக்கின்றனர். ஆத்மாக்களின் தந்தை கல்பத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே வருகிறார், 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு ஆத்மாக்களும் பரமாத்மாவும் சந்திக்கின்றனர். நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து இந்த பாடத்தைப் படிப்பிக்கிறேன் என தந்தை சொல்கிறார். ஓ குழந்தைகளே, நீங்கள் என்னை ஓ ! பதீத பாவனா ! வாருங்கள் என நினைவு செய்தபடி வந்தீர்கள். நான் கண்டிப்பாக வருகிறேன். இல்லாவிட்டால் எதுவரை நினைவு செய்து கொண்டே இருப்பீர்கள்! கண்டிப்பாக எல்லை (அளவு) என்பது இருக்கும் அல்லவா! கலியுகத்தின் எல்லை எத்துடன் முடிகிறது என மனிதர்களுக்குத் தெரியாது. இதையும் தந்தைதான் தெரியப்படுத்த வேண்டியுள்ளது. ஓ குழந்தைகளே ! என்னை நினைவு செய்யுங்கள் என தந்தையைத் தவிர வேறு யாரும் சொல்ல முடியாது. நினைவின் விஷயம்தான் முக்கிய மானதாகும். படைப்பின் சக்கரத்தையும் கூட நினைவு செய்வது என்பது பெரிய விஷயம் இல்லை. தந்தையை நினைவு செய்வதில் மட்டுமே உழைக்க வேண்டியுள்ளது. அரைக் கல்ப காலம் பக்தி மார்க்கம், அரைக் கல்பம் ஞான மார்க்கம். ஞானத்தின் பலனை நீங்கள் அரைக் கல்ப காலம் அடைந்தீர்கள், பிறகு அரைக் கல்பம் பக்தியின் பலன். அது சுகத்தின் பலன், இது துக்கத்தின் பலன் ஆகும். துக்கம் மற்றும் சுகத்தின் விளையாட்டாக உருவாகி விட்டுள்ளது. புதிய உலகத்தில் சுகம், பழைய உலகத்தில் துக்கம். மனிதர்களுக்கு இந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. எங்களுடைய துக்கத்தை நீக்குங்கள், சுகத்தைக் கொடுங்கள் என சொல்லவும் செய்கின்றனர். அரைக் கல்பம் இராவண இராஜ்யம் நடக்கிறது. இதுவும் கூட யாருக்கும் தெரியாது, தந்தையைத் தவிர துக்கத்தை யாராலும் நீக்க முடியாது. சரீரத்தின் நோய் முதலானவைகளை மருத்துவர்கள் நீக்குகின்றனர், அது அல்பக் காலத்திற்கானதாக ஆகிவிட்டது. இதுவோ நிலையானது, அரைக் கல்பத்திற் கானதாகும். புதிய உலகம் சொர்க்கம் எனப்படுகிறது. கண்டிப்பாக அங்கே அனைவரும் சுகம் மிக்கவர்களாக இருப்பார்கள். பிறகு மற்ற இவ்வளவு ஆத்மாக்கள் எங்கே இருப்பார்கள்? இது யாருடைய சிந்தனையிலும் வருவதில்லை. இது புதிய படிப்பு, படிப்பிப்பவரும் புதியவர் ஆவார் என நீங்கள் அறிவீர்கள். பகவானுடைய மகா வாக்கியம் - நான் உங்களை இராஜாக்களுக்கு மேலாக இராஜாவாக ஆக்குகிறேன். சத்யுகத்தில் ஒரே தர்மம் இருக்கும் எனும்போது மற்ற அனைத்தும் வினாசமாகிவிடும் என்பதும் கூட மிக்க சரியே ஆகும். புதிய உலகம் மற்றும் பழைய உலகம் என எதற்கு சொல்லப்படுகிறது, சத்யுகத்தில் யார் இருப்பார்கள் என்பதும் கூட இப்போது நீங்கள் அறிவீர்கள். சத்யுகத்தில் ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் இராஜ்யம் இருந்தது. நேற்றைய கடந்த கால விஷயமே ஆகும். இது 5 ஆயிரம் வருடத்தின் கதை ஆகும். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பாரதத்தில் இந்த தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என தந்தை சொல்கிறார். அவர்கள் 84 பிறவிகள் எடுத்து எடுத்து இப்போது தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளனர், ஆகையால் இப்போது வந்து தூய்மையாக்குங்கள் என கூக்குரலிடுகின்றனர். நிராகார உலகத்தில் அனைத்து ஆத்மாக்களுமே தூய்மையாகத்தான் இருப்பார்கள். பிறகு கீழே வந்து நடிப்பை நடிக்கும்போது சதோ, ரஜோ, தமோவில் வருகின்றனர். சதோபிரதானமானவர்கள் நிர்விகாரிகள் எனப்படுகின்றனர். தமோபிரதானமானவர்கள் தம்மை விகாரிகள் என சொல்லிக் கொள்கின்றனர். தேவி தேவதை கள் நிர்விகாரிகளாக இருந்தனர், நாம் விகாரிகள் என புரிந்து கொள்கின்றனர், ஆகையால் தேவதைகளின் பூஜாரிகளுக்கு இந்த ஞானம் சட்டென புத்தியில் பதியும், ஏனென்றால் அவர்கள் தேவதா தர்மத்தவர்கள் என தந்தை சொல்கிறார். பூஜைக்குரியவர் களாக இருந்த நாம்தான் பூஜாரிகளாக ஆகியுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை பூஜிப்பது போல, ஏனென்றால் அவர்கள் அந்த தர்மத்தவர்கள் ஆவார்கள். நீங்களும் தேவதைகளின் பூஜாரிகளாக இருப்பதால் அந்த தர்மத்தவர்களே ஆவீர்கள். தேவதைகள் விகார மற்றவர்களாக இருந்தனர், அவர்கள் இப்போது விகாரிகளாக ஆகியுள்ளனர். விகாரத்திற்காகவே எவ்வளவு கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.

என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய பாவ கர்மங்கள் அழியும், மேலும் நீங்கள் எப்போதும் சுகம் நிறைந்தவர்களாக ஆவீர்கள் என தந்தை சொல்கிறார். இங்கே எப்போதும் துக்கம் நிறைந்தவர்களே உள்ளனர். அல்ப காலத்தின் சுகம்தான் உள்ளது. அங்கேயோ அனைவரும் சுகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எனினும் பதவியில் வித்தியாசம் இருக்குமல்லவா. சுகத்தின் இராஜ்யமும் உள்ளது, துக்கத்தின் இராஜ்யமும் உள்ளது. தந்தை வரும்போது விகாரி இராஜாக் களின் இராஜ்யமும் ஆட்சி முடிந்து போய் விடுகிறது, ஏனென்றால் இங்குள்ள பலன் முடிந்து விட்டது. தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் என குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். எப்படி நான் அமைதிக் கடலாகவும், அன்புக்கடலாகவும் இருக்கிறேனோ அது போல உங்களையும் ஆக்குகிறேன் என தந்தை சொல்கிறார். இந்த மகிமை ஒரு தந்தையுடையதாகும். எந்த மனிதருடைய மகிமையும் கிடையாது. தந்தை தூய்மைக்கடல் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய பரமதாமத்தில் இருக்கும்போது தூய்மையாக இருக்கிறோம். இந்த ஈஸ்வரிய ஞானம் குழந்தைகளாகிய உங்களிடம் தான் உள்ளது, வேறு யாரும் தெரிந்து கொள்ள முடியாது. ஈஸ்வரன் ஞானக்கடல், சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுப்பவர், அவருக்கு குழந்தை களை தமக்குச் சமமாக கண்டிப்பாக ஆக்க வேண்டியுள்ளது. முதலில் உங்களிடம் தந்தையின் அறிமுகம் இல்லாமல் இருந்தது. யாருக்கு இவ்வளவு மகிமை உள்ளதோ அந்த பரமாத்மா நம்மை உயர்ந்தவர்களாக ஆக்குகிறார் என்பதை இப்போது தெரிந்துள்ளீர்கள் எனும்போது தன்னை அதே போல உயர்ந்தவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இவரிடம் தேவதைகள் போல நல்ல தெய்வீக குணங்கள் உள்ளன.... என சொல்கின்றனர் அல்லவா. யாருடைய சுபாவம் சாந்தமாக உள்ளதோ, யாரையும் நிந்திப்பதில்லையோ அவரை நல்ல மனிதர் என சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு தந்தை யையும் சிருஷ்டி சக்கரத்தைப் பற்றியும் தெரியாது. இப்போது தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களை அமர லோகத்தின் எஜமானாக ஆக்குகிறார். புதிய உலகின் எஜமானாக தந்தையைத் தவிர வேறு யாரும் ஆக்க முடியாது. இது பழைய உலகம், அது புதிய உலகம். அங்கே தேவி தேவதைகளின் இராஜ்யம் இருக்கும். கலியுகத்தில் அந்த இராஜ்யம் இல்லை. மற்றபடி வேறு பல இராஜ்யங்கள் உள்ளன. இப்போது மீண்டும் பல இராஜ்யங்களின் வினாசமாகி ஒரு இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆக வேண்டியுள்ளது. (தேவி தேவதைகள்) இராஜ்யம் இல்லாத போது தந்தை வந்து கண்டிப்பாக மீண்டும் ஸ்தாபனை செய்வார். அதுவும் தந்தையைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையின் மீது எவ்வளவு அன்பு இருக்க வேண்டும். தந்தை சொல்வதைக் கண்டிப்பாக செய்வார். தந்தை சொல்கிறார் - என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் சேவை செய்யுங்கள், பிறருக்கு வழி காட்டுங்கள். தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக தாக்கம் ஏற்படும். நாங்கள் ஒரு தந்தையின் மகிமையை செய்கிறோம். தந்தைக்குள் குணம் உள்ளது எனும்போது தந்தை வந்து தான் நம்மை குணவானாக ஆக்குகிறார். குழந்தைகளே, மிகவும் இனிமையானவர்களாக ஆகுங்கள் என தந்தை சொல்கிறார். அன்புடன் அமர்ந்து அனைவருக்கும் புரிய வையுங்கள். பகவானுடைய மகா வாக்கியம் - என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் நான் உங்களை சொர்க்கத்தின் எஜமானாக ஆக்கு வேன். நீங்கள் இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பழைய உலகத்தின் மகா வினாசம் முன்னால் நின்றுள்ளது. முன்பு கூட மிகப் பெரிய மகா பாரதப் போர் ஏற்பட்டிருந்தது. பகவான் இராஜயோகம் கற்பித்திருந்தார். இப்போது பல தர்மங்கள் உள்ளன. சத்யுகத்தில் ஒரு தர்மம் இருந்தது, அது இப்போது மறைந்து விட்டுள்ளது. இப்போது தந்தை வந்து பல தர்மங்களை வினாசம் செய்து ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார். நான் இந்த யக்ஞத்தை உருவாக்குகிறேன், அமரபுரிக்குச் செல்வதற்காக உங்களுக்கு அமர கதை சொல்கிறேன். அமர லோகத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் மரணலோகத்தின் வினாசம் உண்டாகும். தந்தை புதிய உலகத்தைப் படைப்பவர் ஆவார். ஆக தந்தை இங்குதான் கண்டிப்பாக வர வேண்டியுள்ளது. இப்போது வினாசத்தின் ஜுவாலை முன்னால் நின்றுள்ளது. பின்னர் புரிந்து கொண்டார்கள் என்றால் நீங்கள் சொல்வது உண்மைதான், இது அதே மகாபாரதப் போர் என சொல்வார்கள். இது பெயர் பெற்ற ஒன்று எனும் போது கண்டிப்பாக இந்த சமயத்தில் பகவானும் இருக்கிறார். பகவான் எப்படி வருகிறார் என்பதை நீங்கள் சொல்ல முடியும். எங்களுக்கு நேரடியாக பகவான் புரிய வைக்கிறார், என்னை நினைவு செய்யுங்கள் என அவர் சொல்கிறார் என நீங்கள் அனைவருக்கும் சொல்லுங்கள். சத்யுகத்தில் அனைவரும் சதோபிரதானமாக இருப்பார்கள், இப்போது தமோபிரதான மாக இருக்கின்றனர். இப்போது மீண்டும் சதோபிரதானமாக ஆகும்போது முக்தி, ஜீவன் முக்திக்குச் செல்வீர்கள்.

என்னுடைய நினைவின் மூலம் மட்டுமே நீங்கள் சதோபிரதானமாகி சதோபிரதானமான உலகத்தின் எஜமான் ஆகி விடுவீர்கள் என தந்தை சொல்கிறார். நாம் ஆன்மீக வழிகாட்டிகள், மன்மனாபவ எனும் யாத்திரை செய்கிறோம். தந்தை வந்து பிராமண தர்மம், சூரியவம்சம், சந்திர வம்சதை ஸ்தாபனை செய்கிறார். என்னை நினைவு செய்யாவிட்டால் பிறவி பிறவிகளாக செய்த பாவங்களின் சுமை இறங்காது என தந்தை சொல்கிறார். இது பெரியதிலும் பெரிதான கவலை ஆகும். கர்மம் செய்தபடி, தொழில் செய்தபடி என்னுடைய பிரியதர்ஷினிகள் பிரியதர்ஷனாகிய என்னை நினைவு செய்யுங்கள். அனைவருமே தம்மை தாமே முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும். தந்தையை நினைவு செய்யுங்கள். எந்த தூய்மையற்ற காரியமும் செய்யாதீர்கள். வீடுகள் தோறும் தந்தையின் செய்தியை சொன்னபடி இருங்கள் - பாரதம் சொர்க்கமாக இருந்தது, இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது, இப்போது நரகமாக இருக்கிறது. நரகத்தின் வினாசத்திற்காக இது அதே மகாபாரதப் போர் ஆகும். இப்போது ஆத்ம அபிமானி ஆகுங்கள். தந்தையின் கட்டளை - ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி. நான் வந்துள்ளதே அனைவருக்கும் செய்தியை சொல்வதற்காக தான். தந்தையின் கட்டளை - அனைவருக்கும் செய்தியை சொல்லுங்கள். என்ன சேவை செய்யட்டும் என தந்தையிடம் கேட் கின்றனர். செய்தியைக் கொடுத்தபடி இருங்கள் என பாபா சொல்கிறார். தந்தையை நினைவு செய்யுங்கள், இராஜ்யத்தை நினைவு செய்யுங்கள். கடைசி கால சிந்தனைக்குத் தகுந்த கதி (நிலை) ஏற்படும். கோவில்களுக்குச் செல்லுங்கள், கீதா பாடசாலைகளுக்குச் செல்லுங்கள். மேலும் போகப் போக நிறைய பேர் உங்களை சந்தித்தபடி இருப்பார்கள். நீங்கள் தேவி தேவதா தர்மத்தவர்களை எழுப்ப வேண்டும்.

மிக மிக இனிமையானவர்களாக ஆகுங்கள் என தந்தை புரிய வைக்கிறார். கெட்ட நடத்தை இருந்தது என்றால் பதவி கீழானதாக ஆகிவிடும். அன்பான தந்தையை நினைவு செய்யுங்கள், அவரிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கிறது. யாருக்கு புரிய வைக்க முடிய வில்லையோ அவர்கள் ஏணிப்படிகளின் படத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த சிந்தனை மட்டும் செய்யுங்கள் - இப்படி இப்படி நாம் பிறவிகள் எடுக்கிறோம், இப்படி சக்கரம் சுற்றியபடி இருக்கிறது. . . அப்போது தானாக பேச்சு வரும். மனதினுள்ளே வரும் விஷயங்கள் வெளியே வரும். நினைவு செய்வதன் மூலம் தூய்மை அடைவீர்கள் மற்றும் புதிய உலகத்தில் இராஜ்யம் செய்வீர்கள். இப்போது நம்முடைய ஏறும் கலையாகும் எனும்போது உள்ளுக்குள் குஷி இருக்க வேண்டும். நாம் முக்தி தாமத்திற்குச் சென்று பிறகு ஜீவன் முக்தியில் வருவோம். இதுவே மிக உயர்ந்த வருமானமாகும். தொழில் செய்யுங்கள் - புத்தியில் நினைவு மட்டும் செய்யுங்கள். நினைவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சுயதரிசன சக்கரதாரி ஆக வேண்டும். நடத்தை கெட்டு விட்டால் பிறகு தாரணை ஆகாது. பிறருக்கு புரிய வைக்க முடியாது. காலை முன் வைத்து முன்னேற முயற்சிக்க வேண்டும். பின்னால் வரக்கூடாது. கண்காட்சியில் சேவை செய்வதன் மூலம் மிகவும் குஷியாக இருக்கும். என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார் என்பதை மட்டும் சொல்ல வேண்டும். தேகதாரிகளை நினைவு செய்வதன் மூலம் பாவ கர்மங்கள் உண்டாகும். ஆஸ்தியை கொடுப்பது நான் ஆவேன். நான் அனைவரின் தந்தை ஆவேன். நான்தான் வந்து தான் உங்களை முக்தி ஜீவன் முக்திக்கு அழைத்துச் செல்கிறேன். கண்காட்சி, விழாக்களில் சேவை செய்வதற்காக மிகவும் ஆர்வம் வைக்க வேண்டும். சேவையில் கவனம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தாமாக சிந்தனை வரவேண்டும். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஒரு தந்தையிடம் மட்டுமே முழுமையான அன்பு வைக்க வேண்டும். அனைவருக்கும் உண்மையான வழியை காட்ட வேண்டும். தொழில் முதலானவைகளை செய்து கொண்டிருந்தாலும் தன் மீது முழுமையான கவனம் வைக்க வேண்டும். ஒருவரின் நினைவில் இருக்க வேண்டும்.

2. சேவை செய்வதற்காக மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும். தனது நடத்தையை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். சுயதரிசன சக்கரதாரி ஆக வேண்டும்.

வரதானம்:
செய்பவர்-செய்விப்பவரின் நினைவின் மூலம் சகஜயோகத்தின் அனுபவம் செய்யக் கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக.

எந்த ஒரு காரியம் செய்தாலும் இந்த காரியம் செய்வதற்கு நிமித்தமாக இருக்கக் கூடிய முது கெலும்பு யார்? என்ற நினைவு இருக்க வேண்டும். முதுகெலும்பு இன்றி எந்த ஒரு காரியத்திலும் வெற்றி அடைய முடியாது. ஆகையால் எந்த காரியம் செய்தாலும் நான் நிமித்தமானவன், செய்விக்கக் கூடியவர் சுயம் சர்வசக்தி வாய்ந்த தந்தை என்பதை நினைவு செய்ய வேண்டும். இதை நினைவில் வைத்து காரியம் செய்தால் சகஜயோகத்தின் அனுபவம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பிறகு இந்த சகஜயோகம் அங்கு சகஜ இராஜ்யம் செய்விக்கும். இந்த சன்ஸ்காரத்தை அங்கு கொண்டு செல்வோம்.

சுலோகன்:
இச்சைகள் (ஆசைகள்) நிழல் போன்றது, நீங்கள் திரும்பி விட்டால் அது பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.