15.11.2020    காலை முரளி      ஓம் சாந்தி         அவ்யக்த பாப்தாதா      

ரிவைஸ் 18.01.1987 மதுபன்


  

கர்மாதீத் நிலையின் அடையாளங்கள்

 

இன்று அவ்யக்த பாப்தாதா தனது அவ்யக்த ஸ்திதி பவ எனும் வரதானம் பெற்ற குழந்தைகளை அவ்யக்த பரிஸ்தாக்களை சந்திக்க வந்துள்ளார். இந்த அவ்யக்த சந்திப்பு முழு கல்பத்திலேயே ஒரே ஒரு முறை சங்கம யுகத்தில் மட்டுமே நடைபெறுகிறது, சத்யுகத்தில் கூட தேவதைகளின் சந்திப்பு நிகழும், ஆனால் பரிஸ்தாக்களின் சந்திப்பு அவ்யக்த சந்திப்பு இப்போது மட்டுமே நிகழும், நிராகார் பாபாவும், அவ்யக்த பிரம்மா பாபா மூலமாக சந்திப்பை நிகழ்த்துகின்றார். நிராகார் தந்தைக்கும் இந்த பரிஸ்தாக்களின் குழு மிகப் பிரியமானது. எனவே, தனது இருப்பிடத்தை விட்டு ஆகாரி (சூட்சுமவதனம்) மற்றும் சாகாரி (பூலோகம்) உலகில் சந்திப்பை கொண்டாட வருகின்றார். பரிஸ்தா குழந்தைகளின் அன்பின் ஈர்ப்பால் தந்தையும் வேடம், ரூபம் மாறி குழந்தைகளின் உலகில் வரவேண்டியுள்ளது. இந்த சங்கமயுகம் தந்தைக்கும் குழந்தைகளுக்கும் மிகப் பிரியமான வித்தியாசமான உலகமாகும். சினேகம் அனைத்திலும் பெரிய சக்தி பந்தனமேயில்லாத, தேகமேயில்லாத அசரீரியான இறைவனையும் வாடகை மனித உடலில் வர வைத்து விட்டது. இதுவே குழந்தைகள் அன்பின் அடையாளமாகும்.

 

இன்று நாலாபுறமும் உள்ள குழந்தைகளின் அன்பு, அன்பு கடலான தந்தையுடன் இணைகின்ற தினமாகும். குழந்தைகள் சொல்கிறார்கள் நாங்கள் பாப்தாதாவை சந்திக்க வந்துள்ளோம். குழந்தைகள் தந்தையை சந்திக்க வந்துள்ளார்களா? தந்தை குழந்தைகளை சந்திக்க வந்துள்ளாரா? அல்லது இருவருமே மதுபனில் சந்திக்க வந்துள்ளார்களா? குழந்தைகள் அன்புக் கடலில் மூழ்க வந்துள்ளார்கள் ஆனால் பாபா ஆயிரக்கணக்கான கங்கையில் மூழ்க வந்துள்ளார். ஆகவே கங்கையும், கடலும் சந்திக்கும் விசித்திரமான மேலா இது. அன்புக் கடலில் மூழ்கி கடலுடன் இணைந்து விடுகின்றனர். இன்றைய நாளை பாப்சமான் ஆவதற்கான நினைவு நாள் மற்றும் சக்தி வாய்ந்த நன்னாளாக கருதப்படுகிறது. ஏன் ? இன்றைய நாள் பிரம்மா பாபாவிற்கு இணையாக சம்பன்னம் மற்றும் சம்பூர்ணமாக மாறுவதற் கான நினைவு நாளாகும். பிரம்மா குழந்தைகள் மற்றும் தந்தை ஏனெனில் பிரம்மா குழந்தை யாகவும் உள்ளார், தந்தையாகவும் உள்ளார். இன்றைய நாளில் பிரம்மா குழந்தை ரூபத்தில் நல்ல குழந்தையாகி அன்பின் சொரூபமாகி சமநிலைக்கான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். மிக பிரியமாகவும் மிகவும் விலகியும் இருப்பதற்கான உதாரணமாக விளங்கினார். பாப்சமான் கர்மாதீத நிலை அதாவது கர்ம பந்தங்களிலிருந்து விடுபட்ட நிலை விலகியிருப்பதற்கான உதாரணமாக திகழ்ந்தார். முழு கல்பத்திலும் கர்மங்களின் கணக்கு வழக்கிலிருந்து விடுபட்டிருப் பதற்கான நிலை காட்டினார். சேவையைத் தவிர வேறெந்த பந்தனமுமில்லை. சிலர் சேவை யெனும் பந்தனத்தில் சிக்கிக் கொள்வார். இவர் சேவையின் பந்தனத்திலும் சிக்கியதில்லை. பிரம்மா பாபாவும் சேவாதாரி தான் ஆனால் சேவை மூலமாக எல்லைக்குட்பட்ட கணக்கு வழக்கிலும் ராயலான ஆசைகளில் சிக்கிக் கொள்வார்கள் சிலர். உண்மையான சேவாதாரி அதிலிருந்தும் விடுபட்டிருப்பார். இதனையே கர்மாதீத நிலை என சொல்லப்படும். தேக பந்தனம், தேக உறவுகளின் பந்தனங்களால், சேவையில் சுய நலம் இவையாவும் கர்மாதீத நிலை அமைய விடாது தடை செய்வதாகும். கர்மாதீத் நிலை என்பது ராயல் கணக்கு வழக்கும் இல்லா திருப்பதாகும்.

 

கீதா பாடசாலைக்கு நிமித்தமானவர்கள் சேவாதாரிகள் வந்துள்ளீர்கள். சேவையென்பது பிறரையும் விடுவிப்பது. பிறரை விடுவிக்கிறேன் என்று தான் மாட்டிக் கொள்வதில்லை? நஷ்ட மோகா ஆகாமல் அதற்கு பதிலாக லௌகீக குழந்தைகளின் மீதெல்லாம் மோகத்தை விட்டு விட்டு மாணவர்கள் மீது மோகம் ஏற்டவில்லையே இவர் மிக நல்லவர், மிக நல்லவர், நல்லவர் நல்லவர் என்று சொல்லி கடைசியில் எனது என்ற எண்ணம் பந்தனத்தில் மாட்டிவிடவில்லையே? தங்கச் சங்கிலியும் மோசமானது தான். இன்றைய நாள் எனது என்ற விசயத்திலிருந்து விடுபபடுவது அதாவது கர்மாதீத நிலைக்காக அவ்யக்த தினத்தை கொண்டாடுவது. இதுவே அன்பின் அடையாளமாகும். கர்மாதீத நிலை அடைய வேண்டும் என்ற இலட்சியம் அனைவருக்கும் நன்றாக உள்ளது. இப்போது சோதனை செய்யுங்கள் கர்ம பந்தனங்களிலிருந்து எவ்வளவு தூரம் விடுபட்டுள்ளேன் முதல் விசயம் லௌகீகம் மற்றும் அலௌகீகம், கர்மம், சம்மந்தம் அனைத்திலும் தன்னலமின்றி இருப்பது மற்றொன்று முன்தைய பிறவியின் கர்ம கணக்கில் இன்றைய முயற்சியின் பல வீணத்தின் காரணமாக ஏதேனும் வீணான சுபாவம், சம்ஸ்காரத்திற்கு வசமாகாமல் விடுபட்டிருக்கிறேனா? எப்போதா வது ஏதேனும் பலவீனமான சுபாவம் சம்ஸ்காரம் முந்தைய சுபாவம் சம்ஸ்காரம் வசமாக்குகிறதா. பந்தனமற்றவரா பந்தனமுள்ளவரா! நான் விரும்பவில்லை ஆனால் சுபாவம், சம்ஸ்காரம் வசமாகியிருக்கிறேன் என்று சொல்லக் கூடாது அப்படியானால் பந்தனமற்றவர் அல்ல. மேலும் ஏதேனும் சேவை குழு இல்லறத்தின் பிரச்சனைகள் தன் சுயநிலையை உன்னத நிலையை தடுமாறச் செய்கிறதெனில் அதுவும் பந்தனமற்ற நிலை அல்ல. இதிலிருந்தும் விடுதலை. மூன்றாவது பழைய உலகம் பழைய இறுதி தேகத்தின் ஏதேனும் வியாதி தன்னிலையை தடுமாறச் செய்ய கூடாது இதிலிருந்து விடுதலை. வியாதி வருவது ஒன்று, அதனால் ஆடிப் போவது மற்றொன்று, வருவதாவது இயற்கை !அதனால் ஆடிப்போவது பந்தனத்தின் அடையாளமேயாகும். சுய சிந்தனை, ஞான சிந்தனை பிறர் மீது சுப சிந்தனை வைப்பது இதையெல்லாம் விட்டு விட்டு வியாதியைப் பற்றியே சிந்திப்பது இதிலிருந்து விடுபட்டு இருக்க வேண்டும். சிந்திப்பதே கவலையாகின்றது. இதிலிருந்து விடுபடுவதே கர்மாதீத நிலையாகும். பிரம்மா பாபா இந்த அனைத்து பந்தங்களிலிருந்து விடுபட்டு கர்மாதீத நிலையை அடைந்தார். இன்றைய நாளும் பிரம்மா பாபாவினைப் போல கர்மாதீத நிலையை அடைவதற் கான தினமாகும். இன்றைய நாளின் மகிமை புரிந்ததா ! நல்லது.

 

இன்றைய சபை விசேஷமாக சேவாதாரி புண்ணியாத்மாக்களின் சபை, கீதா பாடசாலை திறப்பதென்பது புண்ணியாத்மா ஆவதாகும். அனைத்திலும் பெரிய புண்ணியம் ஒவ்வொரு ஆத்மாவும் சதாகாலத்திற்கு அனேக பிறவியின் பாவங்களிலிருந்து விடுவிப்பது இதுவே புண்ணியம் பெயர் நன்றாக உள்ளது, கீதா பாடசாலை. கீதாபாடசாலை காரர்கள் என்றாலே சதா தானும் கீதை படித்து பிறருக்கும் கற்பிப்பார்கள். கீதை ஞானத்தின் முதல் பாடமே அசரீரியாகுக மற்றும் இறுதி பாடம் மோகத்தை வென்று நினைவின் சொரூபமாகுக. முதல் பாடம் விதி முறையாகும் இறுதி பாடம் அதனால் அடையும் பலனாகும். கீதா பாடசாலைகாரர்கள் எப்பாதும் இந்த பாடம் படிப்பவரா அல்லது முரளி மட்டும் சொல்பரா? ஏனெனில் உண்மை யான கீதை பாடசாலையின் விதி இதுவே முதலில் தான் படிப்பது, மாறுவது பிறகு மற்றவருக்கு நிமித்தமாகி பாடம் கற்பிப்பது. கீதா பாடசாலைக்காரர்கள் அனைவரும் இந்த விதிப்படி சேவை செய்கிறீர்களா? ஏனெனில் நீங்கள் அனைவரும் உலகிற்கு முன்பாக பரமாத்மாவின் படிப்பிற்கு உதாரணமாக திகழ்பவர்கள். உதாரண வாழ்விற்கு மதிப்பு உள்ளது. உதாரணமான உங்களது வாழ்க்கை அனேகருக்கு அப்படி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ஆக கீதா பாடசாலைகாரர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. உதாரண வாழ்வில் சிறிதே குறை தென்பட்டாலும் அனேக ஆத்மாக்கள் பாக்யத்தை உருவாக்குவதற்கு பதிலாக வஞ்சிப்பதில் நிமித்தமாகக் கூடும் ஏனெனில் பார்ப்பவர்கள், கேட்பவர்கள் அனைவரும் நேருக்கு நேராக நிமித்தமாக உள்ள உங்களையே பார்ப்பார்கள். பாபா மறைமுகமாக இருக்கின்றார் ஆகவே அப்படி உன்னதமான செயல் செய்து காட்டுங்கள். உங்களைப் பார்த்து அனேக ஆத்மாக்களுக்கு உயர் செயல் செய்து தனது பாக்ய ரேகையை அமைத்துக் கொள்ளட்டும். ஒன்று தன்னை உதாரணமாக உணருங்கள். மற்றொன்று தனது சிம்பல் (அடையாளத்தை) நினைவில் வையுங்கள் சிம்பல் என்ன தெரியுமா ? கமல மலர் பாப்தாதா கூறியுள்ளார் கமல மலராகுங்கள் அதனையே அமல் படுத்தவில்லையெனில் கமல மலராக முடியாது. எனவே உதாரணம் மற்றும் கமல மலர் இந்த சிம்பளை புத்தியில் வையுங்கள். சேவை எவ்வளவு தான் வளர்ச்சியடைந்தாலும் விலகியும் அன்பாகவும் இருக்க வேண்டும். அன்பானவராக மட்டுமின்றி, விலகியிருந்து அன்பானவராகவும். ஏனெனில் சேவை மீது அன்பு வைப்பது நல்ல விசயம் தான், ஆனால் அன்பு ஈர்ப்பாக மாறிவிடக் கூடாது. இதுவே விலகியிருந்து அன்பு செய்வதாகும். சேவைக்கு நிமித்தமானீர்கள் மிக்க நல்லது. புண்ணியாத்மா பெயரும் கிடைத்து விட்டது. எனவே தான் புண்ணிய செயல் செய்பவர்களுக்கான அழைப்பு தரப்பட்டது. இனி போகப் போக பலன் எனும் பாடம் படித்துள்ளீர்கள் அதனை மனோ நிலையில் உள் உணர்வால் பெற வேண்டும். புரிந்ததா? இனி என்ன செய்ய வேண்டும்? நல்லது .

 

அனைவரும் விசேஷமாக ஒரு விசயத்தில் எதிர்பார்ப்புடன் உள்ளீர்கள்? அது என்ன? (ரிசல்ட் சொல்லலாமா) ரிசல்ட் நீங்கள் சொல்வீர்களா பாபா சொல்லட்டுமா? பாப்தாதா என்ன கூறினார் ரிசல்ட் பெறுவீர்களா ? தருவீர்கள்? டிராமா படி நடந்தது அனைத்தும் நன்றாகவே நடந்தது என்றே சொல்ல வேண்டும். அனைவரும் நல்ல இலட்சியம் வைத்துள்ளீர்கள். லட்சணமும் அவரவர் சக்திக்கேற்ப செயலில் தென்படுகிறது. நீண்ட கால வரதானம் வரிசைக் கிரமாக தாரணை செய்கிறீர்கள் இப்போது வரதானம் பெற்றுள்ளீர்கள். வரதானி மூர்த்தியாகி பாப்சமான் வரதானம் வழங்கும் வள்ளலாகுக . இப்போது பாப்தாதா என்ன விரும்புகின்றார்? வரதானம் கிடைத்து விட்டது. இந்த ஆண்டு நீண்ட காலம் பந்தனமற்றவராகி பாப்சமான் கர்மாதீத நிலைக்கான சிறப்பு பயிற்சி செய்து உலகிற்கு விலகியும் அன்பாகவும் இருக்கும் அனுபவம் செய்ய வையுங்கள். எப்போதாவது அனுபவம் செய்ய வைப்பது என்ற விதி முறையை மாற்றி நீண்ட கால அனுபவங்களின் பலனாக நீண்ட காலம் ஆடாத, அசையாத, உறுதியான, தடைகளற்ற, தவறுகளற்ற, தவறான எண்ணங்களற்ற, தவறான செயலற்ற அதாவது நிராகாரி, நிர்விகாரி, நிர்அகங்காரி இந்த மனோநிலையை உலகிற்கு முன்பு நேரில் காண்பிக்கவும். இதுவே பாப்சமான் ஆவதாகும் புரிந்ததா?

 

ரிசல்டில் முதலில் தன்மீது தானே திருப்தி பெற்றவர் எத்தனை பேர்? ஏனெனில் ஒன்று தன் மீது திருப்தி, மற்றொன்று பிராமண பரிவாரத்தின் மீது திருப்தி, மூன்றாவது பாபாவின் மீது திருப்தி. இம்மூன்றிலும் இன்னும் மதிப்பெண் பெற வேண்டும். ஆக திருப்தியாகுங்கள், திருப்தியாக்குங்கள். பாபாவின் திருப்திமணியாகி சதா மின்னிக் கொண்டிருங்கள். பாப்தாதா குழந்தைகளின் மீது மதிப்பு வைக்கிறார். எனவே, குப்தமாக குறிப்பேடை சொல்கிறார். தேவதை யாக மாறுபவர்கள் தான் நீங்கள், எனவே பாப்தாதா அந்த முழுமை நிலை யை பார்க்கின்றார். நல்லது

 

அனைவரும் திருப்தி மணிகள் தானே ? வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடையுங்கள் நீங்கள் அனைவரும் அபுரோடு வரையிலும் வரிசை வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றீர்களா. இப்போது அறை முழுவதும் நிரம்பியுள்ளது, பிறகு என்ன செய்வீர்கள்? உறங்கு வீர்களா அல்லது அகண்ட யோகம் செய்வீர்கள் இதுவும் நடக்கும் எனவே, சிறிதளவிலேயே திருப்தி பெறுங்கள் 3 அடி நிலத்திற்கு பதிலாக ஒரு அடி நிலம் கிடைத்தது அப்போதும் திருப்திபடுங்கள். முன்பு அப்படி இருந்தது என நினைக்காதீர்கள் பரிவார வளர்ச்சியினைக் கண்டு மகிழ்ச்சி அடையுங்கள். ஆகாயம் பூமியும் என்றும் குறையாது மலைகள் அதிகம் உள்ளது இது நடக்க வேண்டும் இது கிடைக்க வேண்டும் இதுவே விசயத்தை பெரிதாக்கி விடுகிறது இந்த தாய் மார்களும் சிந்தனையில் மூழ்கி விடுகின்றனர். என்ன செய்வது எப்படி செய்வது ஒரு நாள் அப்படியும் வரும் பகலில் வெயிலில் உறங்குவீர்கள் இரவில் விழித்திருப் பீர்கள் அவர்கள் நெருப்பை மூட்டி சுற்றி அமர்ந்து குளிர் காய்கிறார்கள் நீங்கள் யோக அக்னியை மூட்டி அமர்கிறீர்கள். விருப்பமா? கட்டில் வேண்டுமா இருக்கை வேண்டுமா அமர்வதற்கு இந்த மலையை இருக்கை ஆக்கி விடுங்கள். சாதனங்கள் உள்ள மட்டிலும் பயன்படுத்தி சுகம் பெறுங்கள் இல்லையா? மலையே இருக்கையாக மாற்றி விடுங்கள். முதுகு சாய்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் அல்லவா வேறொன்றுமில்லை 5000 பேர் வந்தால் நாற்காலி போட வேண்டும் மேலும் கூட்டம் அதிகம் ஆனால் கட்டிலை எல்லாம் விட்டு விட வேண்டும். எவரெடி ஆகுங்கள் கட்டில் கிடைத்தாலும் சரி , தரையே கிடைத்தாலும் சரி இப்படித்தான் ஆரம்பத்தில் அதிக பயிற்சி செய்தார்கள். 15 நாட்கள் மருந்து கடை மூடி இருந்தது. கடும் காய்ச்சல் உள்ளவரும் கூட கம்பு ரொட்டி உண்டு மோர் குடித்து வாழ்ந்தார்கள். நோய் வாய்படவில்லை. அனைவரும் ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்கள். ஆரம்பத்தில் பயிற்சி யாவும் கடைசியில் நடைபெறும் இல்லையெனில் நினைத்து பாருங்கள் காய்ச்சலில் மோர் குடித்தால் என்ன ஆகும் என்று உலகில் உள்ளவர்கள் பயந்தே போவார்கள். ஆனால் ஆசீர்வாதம் எனும் மருந்து உடனிருந்தது, எல்லாம் விளையாட்டாயிற்று சோதனை அல்ல, கடினம் அல்ல, தியாகம் இல்லை சுற்றுலா பயணம் போல் ஆனது அனைவரும் தயாரா. ஏற்பாடு செய்பவரிடம் ஆசிரியர்கள் பெயர் பெற்றுக் கொண்டு செல்வீர்களா எனவே, அழைப் பதில்லை தக்க சமயத்தில் இந்த சாதனங்களிலிருந்து விலகி சாதனையாளர் ஆவீர்கள். ஆன்மீக மிலிட்டரி அல்லவா! மிலிட்டரி நடிப்பும் நடிக்க வேண்டும் இப்போது அன்பான குடும்பம் வீடு என அனுபவம் செய்கிறீர்கள் ஆனால் தற்சமயத்தில் ஆன்மீக மிலிட்டரி ஆகி அன்புடன் அனைத்தையும் கடந்து விட வேண்டும். இதுவும் மிலிட்டிரியின் சிறப்பம்சம்.

 

குஜராத்திற்கு விசேஷமான வரதானம் உள்ளது எவரெடியாக இருக்கின்றார்கள். சாக்கு போக்கு சொல்வதில்லை என்ன செய்வது எப்படி செய்வது ரிசர்வேஷன் கிடைக்காது என்று சொல்லாமல் வந்து சேர்ந்து விட்டீர்கள். குஜராத்திற்கு சொல்படி நடப்பவர் என்ற விசேஷ ஆசிர்வாதம் உள்ளது. ஏனெனில் சேவையில் எப்போதும் ஆம் சரி என்றே சொல்கிறார்கள் சற்று கடினமான சேவைகள் எப்போதும் குஜராத்திற்கு தரப்படுகிறது. ரொட்டி சேவை யார் செய்கிறார்கள், இட ஒதுக்கீடு, அங்கிங்கு ஓடி ஓடி செய்யும் சேவை குஜராத் செய்கிறார்கள் பாப்தாதா எல்லாம் பார்க்கின்றார் பாப்தாதாவிற்கு தெரியாது என்பதில்லை உழைப்பவர்களுக்கு சிறப்பான அன்பும் ப்ராப்தம் ஆகிறது. அருகே இருப்பது பாக்கியமே. பாக்கியத்தை மேலும் உயர்த்துவதற்கான முறையும் நன்றாக வைத்துள்ளார்கள். பாக்கியத்தை வளர்க்கும் விதம் அனைவருக்கும் தெரியாது. சிலருக்கு பாக்கியம் கிடைத்தாலும் வளர்ப்பதில்லை அப்படியே நின்று விடுகிறார்கள். ஆனால் குஜராத் பாக்கியம் பெற்றவர்கள் மேலும் பாக்கியத்தை வளர்த்துக் கொள்கிறார்கள் இதை பார்த்து பாப்தாதா மகிழ்ச்சியடைகின்றார் ஆகவே பாபாவின் விசேஷ ஆசீர்வாதம் இதுவும் பாக்கியத்தை அடையாளமேயாகும். புரிந்ததா?

 

நாலாபுறமுமிருந்து அன்பான குழந்தைகள் வந்து சேர்ந்துள்ளீர்கள் பாப்தாதாவும் உள்நாட்டு, வெளிநாட்டு அன்பான குழந்தைகளைப் பார்த்து அன்பிற்கு கைமாறாக சதா அழியாத சினேகி பவ எனும் வரதானம் தருகின்றார். அன்பால் வெகு தொலைவிலிருந்து ஓடி வந்துள்ளீர்கள் ஓட்டப் பந்தயத்தில் ஓடி வந்தது போல் மிக அருகே ஓடி வந்துள்ளீர்கள் மிக அருகே நேரில் வந்து விட்டீர்கள் அது போலவே முயற்சியிலும் பறக்கும் கலை மூலமாக பாப்சமான் ஆவது என்றாலே சதா பாபாவிற்கும் அருகே இருப்பதாகும். இங்கு எப்படி எதிரில் வந்துள்ளீர்களோ அப்படியே பறக்கும் கலை மூலமாக பாபாவிற்கு பக்கத்தில் இருங்கள் புரிந்ததா என்ன செய்ய வேண்டும்? அன்பானது உள்ளப் பூர்வமான அன்பு திலாராம் பாபா விடம் நீங்கள் வந்து சேர்வதற்கு முன்னதாகவே வந்து சேர்ந்து விடுகிறது எதிரில் இருந்தாலும் இப்போதெல்லாம் உள்நாட்டு வெளிநாட்டு குழந்தைகள் உடலால் தொலைவில் இருந்தாலும் அனைவரும் மிக மிக அருகாமையில் தில்தக்த் நஷினாக உள்ளார்கள் உள்ளம் தான் அனைத் திலும் மிக நெருங்கிய இடம் ஆகவே நீங்கள் அனைவரும் உள்நாடு வெளிநாட்டில் இல்லை தந்தையின் இதயத்தில் அமர்ந்துள்ளீர்கள் அருகே வந்து விட்டீர்கள் அல்லவா ! அனைத்து குழந்தைகளின் அன்பு நினைவுகள் புகார், இனிமையான ஆன்மீக உரையாடல் பரிசுகள் அனைத்தும் பாபாவிடம் வந்து சேர்ந்து விட்டது. பாப்தாதாவும் அன்பான குழந்தைகளுக்கு சதா உழைப்பிலிருந்து விடுபட்டு அன்பிலேயே மூழ்கி விடுங்கள் என்ற வரதானம் தருகின்றார் அனைவருக்கும் கைமாறு கிடைத்து விட்டதா நல்லது !

 

அனைத்து சினேகி ஆத்மாக்களுக்கு சதா அருகிலிருக்கும் ஆத்மாக்களுக்கு சதா பந்தனம் இலலாமல் கர்மாதீத நிலையை நீண்ட காலமாக அனுபவம் செய்யும் விசேஷ ஆத்மாக்களுக்கு அனைத்து மன சிம்மாசனத்தில்அமர்ந்துள்ள திருப்தி மணிகளுக்கு பாப்தாதாவின் அவ்யக்த மனோ நிலை அடைக என்ற வரதானமும் அன்பு நினைவும் மற்றும் இரவு வணக்கம் . மற்றும் காலை வணக்கம்.

 

வரதானம் :

பழைய கணக்கை முடித்து புதிய சம்ஸ்காரம் என்ற புத்தாடை அணிந்து கொண்டு பாபாவைப் போன்று முழுமை பெற்றவர் ஆகுக !

 

எப்படி தீபாவளிஅன்று புத்தாடை அணிகின்றீர்கள் அதுபோலவே நீங்கள் மறுபிறவி எடுத்த நன்னாளில் புதிய சம்ஸ்காரம் என்ற ஆடை அணிந்து புத்தாண்டை கொண்டாடுங்கள். தனது பலவீனங்கள் குற்றங்கள், குறைகள் மிகவும் மிருதுவான மனோ நிலை போன்ற பழைய கணக்குகளை எல்லாம் அழித்து விட்டு உண்மையான தீபாவளி கொண்டாடுங்கள். இந்த புதிய பிறவியில் புதிய சம்ஸ்காரத்தினை கையாளுங்கள் அப்போது பாபாவைப் போன்று முழுமை நிலை அடைவீர்கள்.

 

சுலோகன் :

சுத்தமான எண்ணங்களெனும் பொக்கிஷம் சேமிப்பாகி விடுவதால் வீண் எண்ணங்களால் நேரம் வீணாகாது.

 

குறிப்பு :

இன்று 3 வது ஞாயிறு இராஜயோகிகள் அனைவரும் 6.30 முதல் 7.30 வரை விசேஷமாக தனது சுப பாவனையின் உயர்ந்த உணர்வுகள் மூலமாக மனதால் மகாதானியாகி அனைவருக்கும் பயமற்றவர் ஆகுக என்ற வரதானம் மூலம் சேவை செய்க!

 

ஓம்சாந்தி