15-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! அனைவர் மீதும் ஆசீர்வாதம் செய்யக் கூடிய ஆனந்தக் கடலான பாபா ஒருவரே ஆவார், பாபாவைத் தான் துக்கத்தை போக்குபவர், சுகத்தை வழங்குபவர் என்று சொல்லப்படுகிறது, அவரைத் தவிர வேறு யாரும் துக்கத்தைப் போக்க முடியாது

கேள்வி:
பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கம் இரண்டிலுமே தத்தெடுக்கப்படும் வழக்கம் இருக்கிறது ஆனால் வித்தியாசம் என்ன?

பதில்:
பக்தி மார்க்கத்தில் யாரிடமாவது தத்தெடுக்கப்படுகிறோம் என்றால் குரு மற்றும் சீடர் என்ற உறவு இருக்கிறது, சன்னியாசிகளும் தத்தெடுக்கப்படுகிறார்கள் என்றால் தங்களை பின்பன்று பவர்கள் என்று சொல்வார்கள், ஆனால் ஞான மார்க்கத்தில் நீங்கள் பின்பற்றுபவர்கள் அல்லது சிஷ்யர்கள் கிடையாது. நீங்கள் தந்தையின் குழந்தைகளாக ஆகின்றீர்கள். குழந்தைகளாக ஆவது என்றால் ஆஸ்திக்கு அதிகாரியாக ஆவதாகும்.

பாடல்:
ஓம் நம சிவாய...............

ஓம் சாந்தி.
குழந்தைகள் பாட்டை கேட்டீர்கள். இது பரமபிதா பரமாத்மா சிவனின் மகிமையாகும். சிவாய நமஹ! என்று சொல்கிறார்கள். ருத்ராய நமஹ! அல்லது சோமநாத் நமஹ! என்று சொல்வதில்லை. சிவாய நமஹ! என்று சொல்கிறார்கள் மேலும் அவருக்கு நிறைய ஸ்துதி நடக் கிறது. சிவாய நமஹ! என்றால் தந்தை. இறை தந்தையின் பெயர் சிவன் ஆகும். அவர் நிராகார மானவராக இருக்கின்றார். ஓ இறை தந்தையே என்று சொன்னது யார்? ஆத்மா. வெறுமனே ஓ தந்தையே என்று சொல்கிறார்கள் என்றால் அது சரீர தந்தை ஆகி விடுகிறது. ஓ இறை தந்தையே என்று சொல்வதின் மூலம் ஆன்மீக தந்தை ஆகி விடுகிறது. இது புரிந்துக் கொள்ள வேண்டிய விசயங்களாகும். தேவதைகளுக்கு பாரஸ்புத்தி (தங்கபுத்தி) என்று சொல்லப்படுகிறது. தேவதைகள் உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தார்கள். இப்போது யாரும் எஜமானர்கள் கிடையாது. பாரதத் தின் தலைவன் யாரும் இல்லை. ராஜாவை தந்தை, அன்னதாதா என்று சொல்லப்படுகிறது. இப்போது ராஜாக்கள் கிடையாது. அப்படியானால் சிவாய நமஹ! என்று யார் சொன்னது? இவர் தந்தை என்று எப்படி தெரியும்? பிரம்மாகுமார-குமாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் சிவபாபாவின் பேரன் - பேத்திகளாவர். பிரம்மாவின் மூலம் இவர்களை தத்தெடுக்கின்றார். நாங்கள் பிரம்மா குமார-குமாரிகள் என்று அனைவரும் சொல்கிறார்கள். நல்லது, பிரம்மா யாருடைய குழந்தை? சிவனுடைய குழந்தை. பிரம்மா, விஷ்ணு, சங்கர் மூவருமே சிவனுடைய குழந்தை களாவர். சிவபாபா உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஆவார், நிராகார வதனத்தில் வசிக்கக் கூடியவர் ஆவார். பிரம்மா விஷ்ணு சங்கர் மூவரும் சூட்சுமவதனவாசிகளாவர். நல்லது, மனித சிருஷ்டியை எப்படி படைத்தார்? நாடகத்தின்படி நான் பிரம்மாவின் சாதாரண உடலில் பிரவேசித்து அவரை பிரஜாபிதாவாக மாற்றுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். பிரம்மா என்று யாருக்கு பெயர் வைத்தேனோ அவருக்குள் தான் நான் பிரவேசம் ஆக வேண்டும். தத்தெடுத்த பிறகு பெயர் மாறி விடுகிறது. சன்னியாசிகள் கூட பெயரை மாற்று கிறார்கள். முதலில் குடும்பத்திலுள்ளவர் களிடம் பிறவி எடுக்கிறார்கள் பிறகு சம்ஸ்காரங்களின்படி சிறுவயதிலேயே சாஸ்திரங்கள் போன்றவைகளை படிக்கிறார்கள் பிறகு வைராக்கியம் வருகிறது. சன்னியாசிகளிடம் சென்று தத்தெடுக்கப்படுகிறார்கள், இவர் என்னுடைய குரு என்று சொல்வார்கள். அவர்களை தந்தை என்று சொல்ல மாட்டார்கள். சீடன் அல்லது பின்பற்றுபவர்கள் என்று சொல்வார்கள். குரு சீடனை தத்தெடுக்கிறார், நீ என்னுடைய சீடன் அல்லது பின்பற்றுபவன் என்று சொல்கிறார்கள். பாபா கூறுகின்றார் நீ என்னுடைய குழந்தையாவாய். குழந்தைகளாகிய நீங்கள் பாபாவை பக்திமார்க்கத் திலிருந்தே அழைத்து வந்துள்ளீர்கள், ஏனென்றால் இங்கே நிறைய துக்கம் இருக்கிறது ஆகையினால் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்ற கூக்குரல் ஒ-த்துக் கொண்டிருக்கிறது. தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் பாபா ஒருவரே. நிராகார சிவனை ஆத்மா வணங்குகிறது. எனவே பாபா இருக்கவே இருக்கின்றார். நீங்கள் தான் தாயும்-தந்தையும் என்பதும் இறை தந்தையைப் பற்றி தான் பாடுகிறார்கள். தந்தை இருக்கின்றார் என்றால் தாயும் கண்டிப்பாக வேண்டும். தாய்-தந்தை இல்லாமல் படைப்பு நடப்பதில்லை. தந்தை குழந்தைகளிடத்தில் வரத்தான் வேண்டும். இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி திரும்பவும் நடக்கிறது, இதனுடைய முதல், இடை, கடைசியை தெரிந்து கொள்ள வேண்டும் - இதைத் தான் திரிகாலதரிசி என்று சொல்லப் படுகிறது. இவ்வளவு கோடிக்கணக்கான நடிகர்கள் இருக்கிறார்கள், ஒவ்வொருவருடைய நடிப்பும் அவரவருடையதாகும். இது எல்லையற்ற நாடகமாகும். பாபா கூறுகின்றார், நான் படைப்பவன், டைரக்டர், முதன்மையான நடிகனாகவும் இருக்கின்றேன். நடித்துக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய ஆத்மாவை பரம் என்று சொல்கிறார்கள். ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ரூபம் ஒன்று தான் ஆகும். உண்மையில் ஆத்மா புள்ளியானதாகும். இரு புருவங்களுக்கு மத்தியில் ஆத்மா நட்சத்திரம் போல் இருக்கிறது அல்லவா. முற்றிலும் சூட்சுமமானதாக இருக்கிறது. அதனை பார்க்க முடியாது. ஆத்மாவும் சூட்சுமமானது என்றால் ஆத்மாவின் தந்தையும் சூட்சும மாகவே இருக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்களும் புள்ளியைப் போல் இருக்கின்றீர்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். சிவனாகிய நானும் கூட புள்ளியாக இருக்கின்றேன். ஆனால் நான் பரம், படைப்பவனாக, டைரக்டராக இருக்கின்றேன். ஞானக்கடலாக இருக்கின்றேன். என்னிடத்தில் சிருஷ்டியின் முதல், இடை, கடைசியின் ஞானம் இருக்கிறது. நான் ஞானக்கடலாக, ஆனந்தக் கடலாக, அனைவர் மீதும் இரக்கம் காட்டுகிறேன். அனைவரையும் சத்கதிக்கு அழைத்துச் செல் கின்றேன். துக்கத்தைப் போக்கி, சுகத்தை வழங்குபவர் ஒரு பாபாவே ஆவார். சத்யுகத்தில் யாரும் துக்கமுடையவர்களாக இருப்பதில்லை. லஷ்மி-நாராயனனுடைய இராஜ்யம் தான் இருக்கிறது.

நான் இந்த மனித சிருஷ்டி எனும் மரத்தின் விதை ரூபமாக இருக்கின்றேன் என்று பாபா புரிய வைக்கின்றார். மாமரம் இருக்கிறது என்றால் அது ஜடமான விதையாக இருக்கிறது, அது பேசாது. ஒருவேளை உயிருள்ளதாக இருந்தால் விதையாகிய என்னிடமிருந்து இப்படிப்பட்ட கிளைகள், இலை போன்றவை வருகிறது என்று சொல்லும். இவர் உயிருள்ளவராக இருக்கின்றார், இதனை கல்பவிருட்சம் என்று சொல்லப்படுகிறது. மனித சிருஷ்டியின் விதை பரமபிதா பரமாத்மா ஆவார். நான் தான் வந்து இதனுடைய ஞானத்தைப் புரிய வைக்கின்றேன், குழந்தைகளை எப்போதும் சுக முடையவர்களாக மாற்றுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். துக்கமுடையவர்களாக மாற்றுவது மாயையாகும். பக்திமார்க்கம் முடிய வேண்டும். நாடகம் கண்டிப்பாக சுற்ற வேண்டும். இது எல்லையற்ற உலகத்தின் வரலாறு- புவியியலாகும். சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. கலியுகம் மாறி பிறகு சத்யுகமாக ஆக வேண்டும். உலகம் (படைப்பு) ஒன்று தான் ஆகும். இறை தந்தையும் ஒருவரே ஆவார். இவருக்கு யாரும் தந்தை கிடையாது. அவர் தான் டீச்சராகவும் இருக்கின்றார், படிப்பித்துக் கொண்டிருக்கின்றார். பகவானுடைய மகாவாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன். மனிதர்கள் தாய்-தந்தையை தெரிந்திருக்கவில்லை. நாம் நிராகார சிவபாபாவின் நிராகார குழந்தைகள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு சாகார பிரம்மாவிற்கும் குழந்தைகளாவீர்கள். நிராகார குழந்தைகள் அனைவரும் சகோதர-சகோதரர்களாவர் மற்றும் பிரம்மாவின் குழந்தைகள் சகோதர-சகோதரிகளாவர். இது தூய்மையாக இருப்பதற்கான யுக்தியாகும். சகோதர-சகோதரி எப்படி விகாரத்தில் செல்ல முடியும். விகாரத்தின் தீ தான் பிடிக்கிறது அல்லவா. காமத்தீ என்று சொல்லப்படுகிறது, அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான யுக்தியை பாபா கூறுகின்றார். முக்கிய மாக இதனால் ஏற்படும் பலன் மிகவும் உயர்ந்ததாகும். நாம் பாபாவின் ஸ்ரீமத்படி நடந்தால் எல்லையற்ற தந்தையின் ஆஸ்தியை அடைவோம். நினைவின் மூலம் தான் எப்போதும் ஆரோக்கியமானவர் களாக ஆகின்றோம். பழமையான பாரதத்தின் யோகம் புகழ்பெற்றதாகும். என்னை நினைவு செய்து-செய்து நீங்கள் தூய்மையாக ஆகி விடுவீர்கள் மற்றும் பாவம் அழிந்து விடும் என்று பாபா கூறுகின்றார். பாபா வின் நினைவில் சரீரத்தை விட்டீர்கள் என்றால் என்னை வந்தடைவீர்கள். இந்த பழைய உலகம் அழிய வேண்டும். இது அதே மஹாபாரத சண்டையாகும். யார் பாபாவினுடையவர்களாக ஆகி யுள்ளார்களோ அவர் களுக்கு தான் வெற்றி கிடைக்க வேண்டும். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சொர்க்கத்திற்கு எஜமானர்களாக மாற்றுவதற்கு பகவான் இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றார். பிறகு மாயை இராவணன் நரகத்திற்கு எஜமானர்களாக மாற்றுகின்றான். அது சாபம் கிடைப்பது போலாகும்.

பாபா கூறுகின்றார் - செல்லக் குழந்தைகளே, என்னுடைய வழிப்படி நீங்கள் சொர்க்கவாசிகளாக ஆகுக. பிறகு இராவண இராஜ்யம் ஆரம்பிக்கும்போது இராவணன் கூறுகின்றான் - ஹே ஈஸ்வரனுடைய குழந்தைகளே, நரகவாசிகளாக ஆகுக. நரகத்திற்குப் பிறகு கண்டிப்பாக சொர்க்கம் வர வேண்டும். இது நரகம் அல்லவா. எவ்வளவு சச்சரவுகள் நடக்கின்றன. சத்யுகத்தில் சண்டை போன்றவை நடப்பதில்லை. பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது, வேறு எந்த இராஜ்யமும் இருக்க வில்லை. இப்போது பாரதம் நரகமாக இருக்கிறது, அனேக தர்மங்கள் இருக்கின்றன. அனேக தர்மங்களின் வினாசம், ஒரு தர்மத்தின் ஸ்தாபனை செய்வதற்கு நான் வர வேண்டியிருக்கிறது என்று பாடப்படுகிறது. நான் ஒரு முறை தான் அவதாரம் எடுக்கின்றேன். பாபா தூய்மையற்ற உலகத்தில் வர வேண்டியிருக்கிறது. எப்போது பழைய உலகம் அழிய வேண்டுமோ அப்போது தான் பாபா வருகின்றார். அதற்காக சண்டையும் வேண்டும்.

பாபா கூறுகின்றார் - இனிமையான குழந்தைகளே, நீங்கள் அசரீரியாக வந்தீர்கள், 84 பிறவிகளின் நடிப்பை முடித்து விட்டீர்கள், இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். நான் உங்களை தூய்மை யற்ற நிலையிலிருந்து தூய்மையாக்கி திரும்பி அழைத்துச் செல்கின்றேன். கணக்கு இருக்கிறது அல்லவா. 5 ஆயிரம் ஆண்டுகளில் தேவதைகள் 84 பிறவிகள் எடுக்கிறார்கள். அனைவரும் 84 பிறவிகள் எடுக்க மாட்டார்கள். இப்போது பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை அடையுங்கள். சிருஷ்டி சக்கரம் புத்தியில் சுற்ற வேண்டும். நாம் நடிகர்கள் அல்லவா. நடிகர்களாக இருந்து கொண்டு நாடகத்தின் படைப்பவர், டைரக்டர், முக்கிய நடிகரை தெரிந்து கொள்ள வில்லை என்றால் அவர்கள் முட்டாள்களே ஆவர். இதன்மூலம் பாரதம் எவ்வளவு ஏழையாக ஆகி விட்டது. பிறகு பாபா வந்து அனைத்தும் நிறைந்ததாக மாற்றி விடுகின்றார். பாரதவாசிகளாகிய நீங்கள் சொர்க்கத்தில் இருந்தீர்கள் பிறகு நீங்கள் 84 பிறவிகள் கண்டிப்பாக எடுக்க வேண்டியிருக்கிறது என்று பாபா புரிய வைக்கின்றார். இப்போது உங்களுடைய 84 பிறவிகள் முடிந்திருக்கிறது. இந்த கடைசி பிறவி மீதமிருக்கிறது. பகவானுடைய மகா வாக்கியம், பகவான் அனைவருக்கும் ஒருவரே ஆவார். கிருஷ்ணரை மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்கள் பகவான் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிராகாரமானவரைத் தான் ஏற்றுக் கொள்வார்கள். அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாவார். நான் பல பிறவிகளின் கடைசியில் வந்து பிரவேசிக்கின்றேன் என்று கூறுகின்றார். இராஜ்யம் ஸ்தாபனை ஆகி விடும், பிறகு வினாசம் ஆரம்பமாகி விடும், அதன் பிறகு நான் சென்று விடுவேன். இது மிகப்பெரிய யக்ஞ மாகும். மற்ற என்னவெல்லாம் யக்ஞம் இருக்கிறதோ அவையனைத்தும் இதில் சுவாஹா ஆகி விடும். முழு உலகத்தின் குப்பைகளும் இதில் விழுந்து எரிந்து விடுகிறது பிறகு எந்த யக்ஞமும் படைக்கப்படுவதில்லை. பக்தி மார்க்கம் முடிந்து விடுகிறது. எனவே மகிமைகள் அனைத்தும் சிவபாபாவினுடையதாகும். இவருக்கு எவ்வளவு பெயர் கொடுத்திருக்கிறார்கள், எதையும் தெரிந்திருக்கவில்லை. இவர் சிவன் பிறகு ருத்ரன், சோமநாத், பாபுரிநாத் என்று கூறுகிறார்கள். ஒருவருக்கு நிறைய பெயர்களை வைத்து விட்டார்கள். எப்படி எப்படியெல்லாம் சேவை செய்தாரோ அப்படி பெயர் வந்து விட்டது. உங்களுக்கு சோமரசத்தை குடிக்க வைக்கின்றார். தாய்மார்களாகிய நீங்கள் சொர்க்கத்தின் நுழைவாயிலை திறப்பதற்கு நிமித்தமாகியுள்ளீர்கள். தூய்மைக்குத் தான் வந்தனம் செய்யப் படுகிறது. தூய்மையற்றவர்கள் தூய்மையானவர்களை வந்தனம் செய்கிறார்கள். கன்னிக்கு அனைவரும் தலை வணங்குகிறார்கள். இந்த பிரம்மாகுமார-குமாரிகள் இந்த பாரதத்தை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தூய்மையாக ஆகி பாபாவிட மிருந்து தூய்மையான உலகத்தின் ஆஸ்தியை அடைய வேண்டும். குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே தூய்மையாக ஆக வேண்டும், இதில் உழைப்பு தேவைப்படுகிறது. காமம் மிகப்பெரிய எதிரியாகும். காமம் இல்லாமல் இருக்க முடியவில்லை எனும்போது அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ருத்ர யக்ஞத்தில் அபலைகள் மீது கொடுமைகள் நடக்கிறது. அடியை வாங்கி வாங்கி கடைசியில் அவர்களின் பாவத்தின் குடம் நிரம்புகிறது பிறகு வினாசம் ஆகி விடுகிறது. நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள், ஒருபோதும் பார்த்ததில்லை, எனினும் பாபா நாங்கள் தங்களை தெரிந்திருக்கிறோம் என்று எழுதுகிறார்கள். தங்களிடமிருந்து ஆஸ்தி எடுப்பதற்காக கண்டிப்பாகத் தூய்மையாக ஆவேன். சாஸ்திரங்கள் படிப்பது, தீர்த்த யாத்திரை செல்வது போன்ற இந்த பக்தி மார்க்கத்தின் சரீரத்தின் மூலம் செய்யும் யாத்திரைகளை செய்து வந்துள்ளீர்கள், இப்போது நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் ஆகையினால் என்னோடு யோகத்தை ஈடுபடுத்துங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். மற்ற தொடர்புகளை துண்டித்து என் ஒருவனோடு இணைத்தீர்கள் என்றால் உங்களை என்னோடு அழைத்துச் செல்வேன் பிறகு சொர்க்கத் திற்கு அனுப்பி விடுவேன். அது சாந்திதாமமாகும். அங்கே ஆத்மாக்கள் எதையும் பேசுவதில்லை. சத்யுகம் சுகதாமமாகும், இது துக்கதாமமாகும். இப்போது இந்த துக்கதாமத்தில் இருந்து கொண்டே சாந்திதாமம்- சுகதாமத்தை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் சொர்க்கத்தில் வந்து விடுவீர்கள். நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். வர்ணம் சுற்றிக் (மாறிக்) கொண்டே செல்கிறது. முதலில் பிராமணர்களின் உச்சிக் குடுமி பிறகு தேவதா வர்ணம், சத்திரிய வர்ணம் குட்டிகர்ணம் விளையாடுகிறார்கள் அல்லவா. பிறகு இப்போது நாம் பிராமணர் களிலிருந்து தேவதைகளாக ஆவோம். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கிறது, இதனை தெரிந்து கொள்வதின் மூலம் சக்கரவர்த்தி ராஜாவாக ஆகி விடுவீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி வேண்டும். எனவே கண்டிப்பாக பாபாவின் வழிப்படி நடக்க வேண்டும். நிராகார பரம் ஆத்மா வந்து இந்த சாகார(பௌதீக) சரீரத்தில் பிரவேசித்திருக்கின்றார் என்று நீங்கள் புரிய வைக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நாம் நிராகாரமானவர்களாக இருக்கும்போது அங்கே இருக்கின்றோம். இந்த சூரியனும்-சந்திரனும் விளக்குகளாகும். இதனை எல்லையற்ற பகல் மற்றும் இரவு என்று சொல்லப் படுகிறது. சத்யுகம் திரேதா பகல், துவாபர கலியுகம் இரவாகும். பாபா வந்து சத்கதி மார்க்கத்தை சொல்கின்றார். எவ்வளவு நல்ல ஞானம் கிடைக்கிறது. சத்யுகத்தில் சுகம் இருக்கிறது, பிறகு கொஞ்சம்-கொஞ்சமாக குறைந்து கொண்டே செல்கிறது. சத்யுகத்தில் 16 கலைகள், திரேதாவில் 14 கலைகள்...... இவையனைத்தும் புரிந்துக் கொள்ள வேண்டிய விசயங்களாகும். அங்கே ஒருபோதும் அகால மரணம் நடப்பதில்லை. அழுவதற்கு, சண்டையிட்டுக் கொள்வதற்கான விசயமே கிடையாது, அனைத்தும் படிப்பில் ஆதாரப் பட்டிருக்கிறது. இது வைரத்திற்கு ஒப்பான படிப்பாகும். இந்த கடைசி பிறவியில் மட்டும் தூய்மை யாக ஆக வேண்டும். இது சுலபத்திலும் சுலபமான இராஜயோகமாகும். வழக்கறிஞர் போன்றவைக் காக படிப்பது ஒன்றும் அந்தளவிற்கு சகஜமானது கிடையாது. இங்கே பாபா மற்றும் சக்கரத்தை நினைவு செய்வதின் மூலம் சக்கரவர்த்தி ராஜாவாக ஆகி விடுவீர்கள். பாபாவை தெரிந்து கொள்ளவில்லை என்றால் எதையுமே தெரிந்து கொள்ளாதது போலாகும். பாபா, அவர் உலகத்திற்கு எஜமானராக ஆவதில்லை, குழந்தைகளை எஜமானர்களாக மாற்றுகின்றார். இவர் (பிரம்மா) மகாராஜாவாக ஆவார் நான் ஆவதில்லை, என்று சிவபாபா கூறுகின்றார். நான் நிர்வாணதாமத்தில் அமர்ந்து (ஓய்வெடுத்துக்) கொள்கின்றேன், குழந்தைகளை உலகத்திற்கு எஜமானர் களாக மாற்றுகின்றேன். உண்மையிலும்-உண்மையான பலனை எதிர்பாராத சேவையை நிராகார பரமபிதா பரமாத்மா தான் செய்ய முடியும், மனிதர்கள் செய்ய முடியாது. ஈஸ்வரனை அடைவதின் மூலம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகி விடுகிறீர்கள். பூமி ஆகாயம் அனைத்திற்கும் எஜமானர்களாக ஆகி விடுகிறீர்கள். தேவதைகள் உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தார்கள் அல்லவா. இப்போது எவ்வளவு பிரிவினைகள் வந்து விட்டன. இப்போது பாபா கூறுகின்றார், நான் உங்களை உலகத்திற்கு எஜமானர்களாக மாற்றுகின்றேன். நீங்கள் தான் சொர்க்கத்தில் இருந்தீர்கள். பாரதம் உலகத்திற்கு எஜமானனாக இருந்தது, இப்போது எதுவுமற்றதாக இருக்கிறது. மீண்டும் இந்த தாய்மார்களின் மூலம் உலகத்திற்கு எஜமானனாக மாற்றுகின்றேன். அதிகம் தாய்மார்கள் இருக்கிறார்கள் ஆகையினால் வந்தே மாதரம் என்று சொல்லப்படுகிறது.

சமயம் கொஞ்சமே இருக்கிறது, உடலின் மீது நம்பிக்கை இல்லை. அனைவரும் இறக்கத்தான் வேண்டும். அனைவருக்கும் வானப்பிரஸ்த (ஒய்வு பெறும்) நிலையாகும், அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். இதை பகவான் கற்பிக்கின்றார். ஞானக்கடல், ஆனந்தக்கடல், கருணைக்கடல் என்று அவரை சொல்லப்படுகிறது. அவர் தான் பிறகு அப்படி சர்வகுணங்களும் நிறைந்தவர்களாக, 16 கலைகள் முழுமையாக தூய்மையாக மாற்றுகின்றார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் வரிசைகிரமமான முயற்சியின்படி அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நன்ஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்த படிப்பு வைரத்திற்குச் சமமாக மாற்றுகின்றது ஆகையினால் இதனை நல்ல விதத்தில் படிக்க வேண்டும் மற்றும் அனைத்து தொடர்புகளையும் துண்டித்து விட்டு ஒரு பாபாவின் சேர்க்கையில் இணைய வேண்டும்.

2) ஸ்ரீமத்படி நடந்து சொர்க்கத்தின் முழுமையான ஆஸ்தியை எடுக்க வேண்டும். நடக்கும் போதும் சுற்றும்போதும் சுயதரிசன சக்கரத்தை சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

வரதானம்:
எனது என்பதை விட்டு, டிரஸ்டி ஆகி சேவை செய்யக்கூடிய, சதா திருப்தியான ஆத்மா ஆகுக.

லௌகிகப் பரிவாரத்தில் இருந்தாலும், சேவை செய்யும் போது சதா நினைவிருக்க வேண்டும் - நான் டிரஸ்டி, சேவாதாரி. சேவை செய்யும் போது ஒரு சிறிதும் எனது என்பது இருக்கக் கூடாது. அப்போது தான் திருப்தியாக இருப்பீர்கள். எப்போது எனது என்பது வருகின்றதோ, அப்போது துன்பத்திற்கு ஆளாகிறீர்கள். யோசிக்கிறீர்கள் - என் குழந்தை இது போல் செய்கிறான் என்றால் - எங்கே எனது என்பது இருக்கிறதோ, அங்கே துன்பத்தை உணர்கிறீர்கள். எங்கே உனது-உனது வந்ததோ, அங்கே நீச்சலடிக்கத் தொடங்குகிறீர்கள். உனது-உனது (பாபாவுடையது) என்று சொல்வ தென்றால் சுவமானத்தில் இருப்பதாகும். எனது-எனது எனச் சொல்வதென்றால் அபிமானத்தில் வருவதாகும்.

சுலோகன்:
புத்தியில் ஒவ்வொரு நேரமும் பாபா மற்றும் ஸ்ரீமத்தின் நினைவு இருக்குமானால், அப்போது மனதால் சமர்ப்பணமான ஆத்மா எனச் சொல்வார்கள்.