16-01-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களுக்கு ஞானத்தை கூறுகிறீர்களோ அவ்வளவு உங்களுடைய புத்தியில் ஞானம் தெளிவாகிக் கொண்டே போகும். ஆகவே சேவை அவசியம் செய்ய வேண்டும்.

கேள்வி:
பாபாவிடம் இரண்டு விதமான குழந்தைகள் யார் இருக்கிறார்கள்? அவர்களுக் கிடையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது?

பதில்:
பாபாவிடம் ஒன்று சொந்தக் குழந்தைகள் இருக்கின்றார்கள். இரண்டாவது மாற்றாந்தாய் குழந்தைகள் இருக்கின்றார்கள். மாற்றாந்தாய்க் குழந்தைகள் வாயில் மட்டும் மம்மா, பாபா என்று கூறுகிறார்கள். ஆனால் ஸ்ரீமத்படி முழுமையாக நடப்பதில்லை. முழுமை யாக அர்ப்பண மாவதில்லை. சொந்தக் குழந்தைகளோ உடல், மனம் மற்றும் பொருளால் முழுமையாக அர்ப்பணம் ஆகிறார்கள். அதாவது டிரஸ்டியாகிறார்கள். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்படி நடக் கின்றார்கள். மாற்றாந்தாய் குழந்தைகள் சேவை செய்யாத காரணத்தால் போகப் போக விழுந்து விடுகிறார்கள். சந்தேகம் வந்து விடுகிறது. சொந்தக் குழந்தைகள் முழுமையாக நிச்சய புத்தி உடையவர்களாக இருக்கின்றார்கள்.

பாடல்:
குழந்தைப் பருவத்தை மறந்து விடாதீர்கள் .....

ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். எந்த தந்தை? உண்மையில் இரண்டு தந்தை இருக்கின்றார்கள். ஒன்று ஆன்மீகத் தந்தை, அவருக்கு பாபா என்று கூறப் படுகிறது. இன்னொருவர் உடல் உடையவர். அவருக்கு தாதா என்று கூறப்படுகிறது. நாம் பாப்தாதாவின் குழந்தைகள் என அனைத்து சென்டர்களில் உள்ள குழந்தைகளும் அறிகிறார் கள். ஆன்மீக தந்தை சிவன் ஆவார். அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை. மேலும் பிரம்மா தாதா அனைத்து மனித குலத்தின் தலைவராக இருக்கின்றார். நீங்கள் வந்து அவருடைய குழந்தை யாக ஆகியிருக்கிறீர்கள். அதிலோ ஒரு சிலர் உறுதியான சொந்தக் குழந்தையாக இருக்கிறார் கள். பிறகு சிலர் மாற்றாந்தாய் குழந்தைகளாக இருக்கிறார்கள். மம்மா, பாபா என இருவரும் கூறுகிறார்கள். ஆனால் மாற்றாந்தாய் குழந்தைகள் அர்ப்பணம் ஆவதில்லை. அர்ப்பணமாகாத வர்களுக்கு அவ்வளவு சக்தி கிடைப்பதில்லை. அதாவது தன்னுடைய தந்தையை உடல், மனம், பொருளிற்கு டிரஸ்டியாக்க முடியாது. உயர்ந்தவர்களாக மாறுவதற்காக அவருடைய ஸ்ரீமத்படி நடக்க முடியாது. சொந்தக் குழந்தைகளுக்கு சூட்சுமமாக உதவி கிடைக்கின்றது. ஆனால் அதுவும் மிகச் சிலரே இருக்கிறார்கள். சொந்தக் குழந்தைகளாக இருக்கிறார்கள். ஆனால் அவர் களையும் இப்போது உறுதியானவர்கள் என்று ரிசல்ட் வரும் வரை கூற முடியாது. இங்கேயே வசிக்கிறார்கள், மிகவும் நல்லவர்கள், சேவையும் செய்கிறார்கள், பிறகு விழுந்தும் விடுகிறார்கள். இது முழு புத்தியோகத்தின் விஷயம் ஆகும். பாபாவை மறக்கக்கூடாது. பாபா இந்த பாரதத்தை குழந்தைகளின் உதவியால் சொர்க்கமாக மாற்றுகின்றார். சிவசக்தி சேனை என்று பாடப்பட்டும் உள்ளது. ஒவ்வொருவரும் தனக்குத்தானே, நாம் உண்மையில் சிவபாபாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், பாபாவிடமிருந்து நாம் சொர்க்கத் தின் ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக் கின்றோம் என பேசிக் கொள்ள வேண்டும். துவாபரயுகத்திலிருந்து நாம் லௌகீக தந்தையின் எந்த ஆஸ்தியை அடைந்தோமோ நரகத் தினுடையதைத் தான் அடைந்தோம். துக்கம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றோம். பக்தி மார்க்கத்தில் மூட நம்பிக்கை தான் இருக்கின்றது. பக்தி மார்க்கம் ஆரம்பமாகியதிலிருந்து எத்தனை வருடங்கள் கழிந்ததோ, நாம் கீழே இறங்கிக் கொண்டே தான் வந்திருக்கின்றோம். பக்தியும் முதலில் தூய்மையானதாக இருந்தது. ஒருவருக்கு பூஜை செய்தனர். அதற்கு பதிலாக பலருக்கு பூஜை செய்து கொண்டு வந்துள்ளனர். ரிஷி, முனி, சாது, சந்நியாசி போன்றோர் பக்தி எப்போதிலிருந்து ஆரம்பமாகியது என்ற விஷயங்கள் அனைத்தையும் அறியவில்லை. சாஸ்திரங்களில் கூட பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என இருக்கிறது. நல்லது. பிரம்மா சரஸ்வதிதான் லட்சுமி, நாராயணனாக ஆகிறார்கள். ஆனால் பிரம்மாவின் பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது. பிரம்மாவுடன் குழந்தை கள் பலர் இருக்கிறார்கள். இலட்சுமி நாராயணனின் குழந்தைகள் நிறைய பேர் இருக்க மாட்டார்கள். அவர்களை பிரஜா பிதா என்றும் கூறமாட்டார்கள் இப்போது புதிய பிரஜை உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள். பிராமணர்களே புதிய பிரஜைகள். பிராமணர்கள் தான் தன்னை ஈஸ்வரனுடைய வாரிசு என நினைக்கிறார்கள். தேவதைகள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு சக்கரத்தைப் பற்றி தெரியாது.

நாம் இப்போது சிவபாபாவின் குழந்தைகள் ஆகியிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். அவர் தான் நமக்கு 84ன் சக்கரத்தைப் புரிய வைத்திருக்கிறார். அவருடைய உதவியால் நாம் பாரதத்தை மீண்டும் தெய்வீக பரிசுத்த இராஜஸ்தானாக மாற்றிக் கொண்டு இருக்கின்றோம். இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். யாருக்காவது புரிய வைப்பதற்கு கூட தைரியம் வேண்டும். நீங்கள் தான் சிவசக்தி பாண்டவ சேனை. வழிகாட்டியாகவும் இருக்கிறீர்கள். அனைவருக்கும் வழிகாட்டுகிறீர்கள். உங்களைத் தவிர ஆன்மீக ஸ்வீட் ஹோமிற்கு வேறு யாரும் வழி காட்ட முடியாது. அந்த வழிகாட்டிகள் அமர்நாத், வேறு ஏதாவது தீர்த்த ஸ்தலத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். நீங்கள் பி.கு. அனைவரையும் தொலைவில் இருக்கும் பரந்தாமத்திற்கு அழைத்து செல்கிறீர்கள். அந்த உலகியல் வழிகாட்டிகள் ஏமாற்றத்தை அடையச் செய்பவர்கள். நீங்கள் அனைவரையும் பாபாவிடம் சாந்தி தாமத்தில் அழைத்துச் செல்கிறீர்கள். எனவே எப்போதும், நாம் பாரதத்தை மீண்டும் தெய்வீக இராஜஸ் தானாக மாற்றிக் கொண்டு இருக்கின்றோம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்வார்கள். பாரதத்தில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. பாரதம் சத்யுகத்தில் எல்லையற்ற தெய்வீக பரிசுத்தமான இராஜஸ் தானாக இருந்தது. பிறகு பரிசுத்தமான சத்திரிய இராஜஸ்தானாக மாறியது. பிறகு மாயையின் பிரவேஷத்தால் அசுர இராஜஸ்தானாக மாறிவிடுகிறது. இங்கே கூட முதலில் இராஜா, இராணி இராஜ்யம் செய்தனர். ஆனால் ஒளி கிரிடம் இல்லாமல் இராஜ்யம் நடந்து கொண்டு இருந்தது. தெய்வீக இராஜஸ்தானுக்குப் பிறகு, அசுர பதீத இராஜஸ்தான் ஆகியது. இப்போதோ அழுக்கான பிரஜைகளின் ஸ்தானமாக இருக்கின்றது. பஞ்சாயத்து இராஜஸ்தான். உண்மையில் இதற்கு இராஜஸ்தான் என்று கூற முடியாது. ஆனால் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இராஜ்யமே இல்லை. இவ்வாறு நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இலட்சுமி, நாராயணனின் சித்திரம் உங்களுக்கு மிகவும் பயன்படும். இதைப் பற்றி புரிய வைக்க வேண்டும். பாரதம் இப்படிப்பட்ட டபுள் கிரீடம் உடையதாக இருந்தது. இந்த இலட்சுமி, நாராயணனுடைய இராஜ்யம் இருந்தது. சிறு வயதில் இராதை, கிருஷ்ணராக இருந்தனர். பிறகு திரேதாவில் இராம இராஜ்யம் உருவாகி யது. பிறகு துவாபர யுகத்தில் மாயை வந்து விட்டது. இது முற்றிலும் எளிதல்லவா! பாரதத்தின் வரலாறு புவியியலை சுருக்கமாக புரிய வைக்கிறார். துவாபர யுகத்தில் தான் பரிசுத்தமான இராஜா, இராணி லட்சுமி, நாராயணரின் கோவிலைக் கட்டினர். தேவதைகள் வாம மார்க்கத்தில் சென்று விட்டனர். பதீதமாக ஆரம்பித்து விட்டனர். பிறகு பரிசுத்தமான தேவதைகளாக யார் இருந்து விட்டுச் சென்றனரோ அவர்களுடைய கோவில்களை உருவாக்க ஆரம்பித்து விட்டனர். தூய்மையற்றவர்கள் தான், பரிசுத்தமானவர்கள் முன்பு தலை வணங்கு கின்றார்கள். பிரிட்டீஷ் அரசாங்கத்தின் இராஜ்யம் இருந்த வரை இராஜா, ராணி இருந்தனர். ஜமீன்தாரர்கள் கூட இராஜா இராணி டைட்டிலை எடுத்துக் கொண்டனர். இதனால் அவர் களுக்கு தர்பாரில் மரியாதை இருந்தது. இப்போதோ யாரும் இராஜா கிடையாது. பின்னால் தங்களுக்குள் சண்டையிடும் பொழுது முஸ்லீம் போன்றோர் வருகின்றனர். இப்போது மீண்டும் வினாசம் எதிரில் இருக்கின்றது. பாபா மீண்டும் இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார். எப்படி ஸ்தாபனை ஆகிறது என்பதை நீங்கள் அறிகிறீர்கள். பிறகு இந்த வரலாறு புவியியல் மறைந்து விடும். பிறகு பக்தியில் அவர்கள் தங்களுடைய கீதையை உருவாக்குகிறார்கள். அதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. பக்தி செய்வதற்காக அவர்களுக்கு தேவி தேவதா தர்மத்தின் புத்தகம் நிச்சயம் வேண்டும். எனவே நாடகத்தின் படி கீதையை உருவாக்குகிறார்கள். பக்தி மார்கத்தின் அந்த கீதையால் யாரும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்யவோ அல்லது நரனி லிருந்து நாராயணனாகவோ மாற முடியாது. கண்டிப்பாக இல்லை.

இப்போது நீங்கள் குப்த சேனை என பாபா புரிய வைக்கின்றார். உங்களையும் குப்தமான (மறைமுகமான) யோக பலத்தினால் இராஜ்யத்தை அடைய வைத்துக் கொண்டிருக்கின்றார். உடல் பலத்தினால் எல்லைக்குட்பட்ட இராஜ்யம் கிடைக்கின்றது. யோக பலத்தினால் எல்லைக் கப்பாற்பட்ட இராஜ்யம் கிடைக்கின்றது. இப்போது நாம் பாரதத்தை அதே தெய்வீக இராஜஸ் தானாக மாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்ற நிச்சயம் இருக்கின்றது. யார் உழைக் கிறார் களோ அவர்களுடைய உழைப்பை மறைக்க முடியாது. வினாசம் நடக்கத்தான் வேண்டும். கீதையில் கூட இந்த விசயம் இருக்கின்றது. இச்சமயத்தின் உழைப்பிற்கு ஏற்ப எங்களுக்கு எதிர்காலத்தில் என்ன பதவி கிடைக்கும் என கேட்கிறார்கள். இங்கே கூட யாராவது உடலை விட்டால் இவர்கள் எந்த பதவியை அடைவர்கள் என்ற சங்கல்பம் எழுகிறது. அதை பாபா தான் அறிவார். இவர் எவ்வாறு உடல், மனம், பொருளால் சேவை செய்தார்? இது குழந்தை களுக்குத் தெரியாது பாப்தாதாவிற்குத் தான் தெரியும். இந்த விதமாக சேவை செய்தீர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஞானத்தை எடுத்தார்களோ அல்லது இல்லையோ, ஆனால் நிறைய உதவி செய்திருக்கிறார்கள். மனிதர்கள் தானம் செய்கிறார்கள் என்றால் இந்த அமைப்பு மிகவும் நல்லது, நல்ல காரியம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறார்கள். ஆனால் எனக்குள் தூய்மையாவதற்கு சக்தி இல்லை. நான் யக்ஞத்திற்கு உதவி செய்கிறேன். எனவே அதற்கான பலனும் அவர்களுக்கு கிடைக்கின்றது. மனிதர்கள் கல்லூரிகளையும், மருத்துவ மனைகளையும் பிறருக்காகக் கட்டுகிறார்கள். எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவமனைக்கு செல்வேன் என யாரும் கூறமாட்டார்கள். எதைச் செய்தாலும் மற்றவர் களுக்காகத்தான். எனவே அதனுடைய பலனும் கிடைக்கின்றது. அதற்கு தானம் என்று கூறப்படுகிறது. பிறகு இங்கு என்ன நடக்கிறது? உங்களுடைய உலகம்! பரலோகம் அழகானது, சுபமானது என ஆசீர்வாதம் அளிக்கிறார்கள். உலகம் மற்றும் பரலோகம் அனைத்தும் சங்கம யுகத்தின் விஷயமாகும். இந்த மரண உலகத்தின் பிறவி மற்றும் அமர லோகத்தின் பிறவி இரண்டும் பயனுள்ளதாக ஆகட்டும். உண்மையில் உங்களுடைய இந்த கடைசிப் பிறவி பயனுள்ளதாக ஆகிக் கொண்டு இருக்கின்றது. சிலர் உடலாலும், சிலர் மனதாலும், சிலர் செல்வத்தாலும் சேவை செய்கிறார்கள். பலர் ஞானத்தை எடுக்க முடிய வில்லை பாபா எங்களிடம் தைரியம் இல்லை என்கிறார்கள். மற்றபடி உதவி செய்ய முடியும் என்கிறார்கள். நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர்களாக ஆக முடியும் என அப்போது பாபா தெரிவிக்கிறார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் கேட்கலாம். அப்பாவைப் பின்பற்ற வேண்டும் என்றால் அவரிடம் இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது எனக் கேட்கலாம். ஸ்ரீமத் கொடுக்கக் கூடியவர் தந்தையாவார். அவரிடம் கேட்க வேண்டும் மறைக்கக்கூடாது. இல்லை யென்றால் நோய் அதிகமாகிவிடும். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் பெரும் சண்டையாகி விடும். பாபா தூரத்தில் இருக்கிறாரா என்ன? எதிரில் வந்து கேட்க வேண்டும். இப்படிப்பட்ட பாப்தாதாவிடம் அடிக்கடி வரவேண்டும். உண்மையில் இப்படிப்பட்ட அன்பான தந்தையிடம் சேர்ந்து இருக்க வேண்டும். சாஜன் (மணவாளன்) உடன் ஒட்டிக்கொள்ள வேண்டும். அங்கேயோ உடல் சம்பந்தமானவர். இங்கேயோ ஆன்மீக மானவர். இதில் ஒட்டிக் கொள்வதற்கான (உடன் இருப்பது) விசயம் இல்லை. இங்கே அனைவரையும் உட்கார வைக்க முடியாது. இது இப்படிப்பட்ட விஷயம் ஆகும். எதிரில் அமர்ந்து கொண்டே யிருங்கள், கேட்டுக் கொண்டேயிருங்கள். அவருடைய வழிப்படி சென்று கொண்டேயிருங்கள். அங்கேயே உட்கார்ந்து கொள்ளக் கூடாது. கங்கை நதியாகுங்கள். சென்று சேவை செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். குழந்தைகளுக்கு போதையில் மயங்கி இருப்பவர்களைப் போன்று அன்பு இருக்க வேண்டும். ஆனால் பிறகு சேவையும் செய்ய வேண்டும். நிச்சய புத்தி உடையவர்கள் ஒரேயடி யாக மாட்டிக் கொள்கிறார்கள். இன்னார் மிகவும் நிச்சய புத்தி உடையவர் எனக் குழந்தைகள் எழுதுகிறார்கள். அவர்கள் எதையும் புரிந்து கொள்ளவில்லை என நான் எழுதுகின்றேன். ஒரு வேளை நிச்சய புத்தி உள்ளவர் என்றால் செர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றக்கூடிய தந்தை வந்துவிட்டார் என்றால் அவரை ஒரு நிமிடம் கூட சந்திக்காமல் இருக்க முடியாது. நிறைய பெண் குழந்தைகள் துடிக்கின்றார்கள். பிறகு வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு பிரம்மா மற்றும் கிருஷ்ணருடைய காட்சிகள் கிடைக்கின்றது. பாபா பரந்தாமத்திலிருந்து நமக்கு இராஜ்யத்தை கொடுக்க வந்திருக்கின்றார் என்ற நிச்சயம் இருந்தால் பாபாவை வந்து சந்தியுங்கள். இப்படியும் வருகிறார்கள். பிறகு ஞான கங்கையாகுங்கள் எனவும் புரிய வைக்கப் படுகிறது. நிறைய பிரஜைகள் வேண்டும். இராஜ்யம் உருவாகிக் கொண்டு இருக்கின்றது. இந்த சித்திரம் புரிய வைப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கின்றது. நாங்கள் மீண்டும் இராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம் என்று நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்கலாம். வினாசம் எதிரில் இருக்கின்றது. மரணத்திற்கு முன்பு பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு சக்திவாய்ந்த அரசாங்கம் வேண்டும் என விரும்புகின்றார்கள். இப்போது அனைவரும் சேர்ந்து ஒன்றாக முடியுமா என்ன ! நிச்சயமாக ஒரு இராஜ்யம் இருந்தது. அதனுடைய புகழும் பாடப் பட்டிருக்கிறது. சத்யுகத்தின் பெயர் மிகவும் பிரசித்தமாக இருக்கின்றது. மீண்டும் அதனுடைய ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக் கின்றது. சிலர் இந்த விஷயங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 5000 வருடங்களுக்கு முன்பு இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. பிறகு இந்த இராஜாக்களின் இராஜ்யம் வந்து விட்டது. இப்போது இராஜாக்கள் கூட பதீதமாகி யிருக்கிறார்கள். இப்போது மீண்டும் பரிசுத்தமான இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் உருவாகும். உங்களுக்கு புரிய வைப்பது மிகவும் எளிதாகும். நாம் தெய்வீக இராஜ்யத்தை சிவபாபாவின் ஸ்ரீமத்தினாலும், அவருடைய உதவியினாலும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சிவபாபாவிடமிருந்து சக்தியும் கிடைக்கின்றது. இந்தப் பெருமிதம் இருக்க வேண்டும். நீங்கள் போர் வீரர்கள். கோவில்களில் கூட நீங்கள் சென்று சொர்க்கத்தின் இராஜ்யம் படைக்கக் கூடியவர் மூலமாகத்தான் உருவாகும் எனப் புரிய வைக்கலாம். எல்லையற்ற தந்தை ஒருவரே என உங்களுக்கு தெரியும். உங்கள் எதிரிலேயே உங்களுக்கு ஞான அலங்காரம் செய்து கொண்டு இருக்கின்றார். இராஜயோகத்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார். அந்த கீதையை சொல்லக்கூடியவர்கள் ஒருபோதும் இராஜயோகத்தை சொல்லித்தர முடியாது. இப்போது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் போதை ஏற்றப்படுகிறது. சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வந்திருக்கிறார். சொர்க்கத்தில் தான் தூய்மையான இராஜஸ்தான் இருந்தது. மனிதர்கள் இலட்சுமி நாராயணரின் இராஜ்யத்தை மறந்துவிட்டார்கள். இப்போது பாபா எதிரில் அமர்ந்து புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் எந்த ஒரு கீதா பாட சாலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். முழு வரலாறு புவியியல் மற்றும் 84 பிறவிகளின் செய்தியை யாரும் கூற முடியாது. இலட்சுமி நாராயணரின் சித்திரத்துடன், இராதா கிருஷ்ணருடையதும் இருந்தால் புரிய வைப்பது எளிதாகிவிடும். இது சரியான சித்திரம் ஆகும். எழுதியிருப்பதும் நன்றாக இருக்கட்டும். உங்களுடைய புத்தியில் முழு சக்கரமும் நினைவிருக்கிறது. கூடவே சக்கரத்தை புரிய வைப்பவரின் நினைவும் இருக்கிறது. மற்றபடி நிரந்தரமாக நினைப்பதில் தான் மிகவும் முயற்சி செய்ய வேண்டி யிருக்கின்றது. நிரந்தரமான நினைவு உறுதியாகி விட்டால், கடைசியில் எந்த ஒரு குப்பையும் நினைவிற்கு வராது. அப்பாவை ஒருபோதும் மறக்கக்கூடாது. சிறிய குழந்தைகள் பாபாவை நிறைய நினைக் கிறார்கள். பிறகு குழந்தைகள் பெரியவராகி விட்டால் செல்வத்தை நினைக் கிறார்கள். உங்களுக்கும் செல்வம் கிடைக்கின்றது. அதை நன்கு தாரணை செய்து பிறகு தானம் செய்ய வேண்டும். முழுமையாக வள்ளல் ஆக வேண்டும். நான் நேரடியாக வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். அந்த கீதையை பல பிறவிகளாக படித்திருக்கிறீர்கள். அதில் எந்த பிராப்தியும் இல்லை. இங்கேயோ நீங்கள் நரனிலிருந்து நாராயணனாக மாறுவதற் காக இந்தப் பாடத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றேன். அது பக்தி மார்க்கம் ஆகும். இங்கேயும் கோடியில் ஒரு சிலர், யார் உங்களுடைய தெய்வீக குலத்தை சார்ந்தவர் களோ அவர்களே வருவார்கள். மீண்டும் பிராமணன் ஆவதற்காக நிச்சயம் வருவார்கள். பின் இராஜா இராணி யாகவும் ஆகலாம். பிரஜையாகவும் ஆகலாம். அதிலும் பலர் கேட்கிறார்கள், கூறுகிறார்கள், ஓடியும் விடுகிறார்கள். யார் குழந்தையாகி பிறகு விவாகரத்து செய்து விடு கிறார்களோ அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை கிடைக்கின்றது. கடுமையான தண்டனை கிடைக்கின்றது. இச்சமயம் யாரும் நாங்கள் நிரந்தரமாக நினைக்கிறோம் என்று கூறமுடியாது. ஒருவேளை யாராவது கூறினால், சார்ட் எழுதி அனுப்பினால் பாபா அனைத்தையும் புரிந்து கொள்வார். பாரதத்தின் சேவையில் தான் உடல், மனம் பொருளை ஈடுபடுத்துகிறார்கள். இலட்சுமி நாராயணரின் சித்திரம் எப்பொழுதும் பாக்கெட்டில் இருக்கட்டும். குழந்தைகளுக்கு மிகவும் போதை இருக்க வேண்டும்.

சமூக சேவகர்கள், பாரதத்திற்கு நீங்கள் என்ன சேவை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என உங்களிடம் கேட்கிறார்கள். நாங்கள் எங்களுடைய உடல் மனம் பெருளால் பாரதத்தை தெய்வீக இராஜஸ்தானாக மாற்றிக்கொண்டு இருக்கின்றோம் என்று கூறுங்கள். இது போன்று சேவை வேறு யாரும் செய்ய முடியாது. நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்களோ அவ்வளவு புத்தி தெளிவாகிக் கொண்டே போகும். யாராவது சரியாக புரிய வைக்காவிட்டால் பெயர் கெட்ட பெயர் ஆகிவிடும், இப்படியும் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். சிலருக்குள் கோபம் என்ற பூதம் இருக்கின்றது என்றால் அதுவும் அழிக்கக்கூடிய வேலையை செய்தது அல்லவா ! அவர்களிடம் உங்களுடைய முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவார். நீங்கள் லட்சுமி அல்லது நாராயணனை மணக்க தகுதி அடைந்திருக்கின்றீரா? இப்படி யார் மரியாதையை இழக்க வைக்கக்கூடிய குழந்தைகளோ அவர்கள் என்ன பதவி பெறுவார்கள்? அவர்கள் காலாட் படை வரிசையில் வந்து விடுகிறார்கள். நீங்களும் சேனையில் இருக்கின்றீர் கள் அல்லவா! நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. அழிவற்ற ஞான ரத்தினங்களின் மகா தானி ஆகுங்கள். உடல், மனம், பொருளால் பாரதத்தை சொர்க்கமாக மாற்றக் கூடிய சேவை செய்ய வேண்டும்.

2. எந்த ஒரு அழிவிற்கான காரியமும் செய்யக்கூடாது. நிரந்தரமான நினைவின் பயிற்சியில் இருக்க வேண்டும்.

வரதானம்:
ஒரே இரசனை மற்றும் நிரந்தர குஷியின் அனுபவத்தின் மூலம் நம்பர் ஒன் பெறக்கூடிய துண்டிக்கப்படாத பொக்கிஷங்களினால் முழுமையானவர் ஆகுக.

நம்பர் ஒன்னில் வருவதற்காக ஒரே இரசனை மற்றும் நிரந்தர குஷியை அனுபவம் செய்துக் கொண்டேயிருங்கள். எந்தவிதமான பிரச்சனைகளிலும் (வம்பு) சென்று விடாதீர்கள். பிரச்சனை களில் செல்வதினால் குஷி என்ற ஊஞ்சல் தளர்ச்சியடைந்து விடுகிறது, பிறகு மிக வேகமாக ஊஞ்சல் ஆட முடிவதில்லை, ஆகையால் எப்பொழுதும் மற்றும் ஒரே இரசனை என்ற ஊஞ்சலில் ஊஞ்சாலாடிக் கொண்டேயிருங்கள். பாப்தாதா மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் அழிவற்ற, தொடர்ந்து மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட பொக்கிஷம் கிடைக்கிறது. எனவே சதா அந்த பொக்கிஷங்களின் பிராப்திகளில் ஒரே இரசனை மற்றும் முழுமையானவராக இருங்கள். சங்கமயுகத்தின் விசேஷத்தன்மை அனுபவம் செய்வதாகும். இந்த யுகத்தின் விசேஷத் தன்மையின் இலாபத்தை அதிகரியுங்கள்.

சுலோகன்:
மனதில் மகாதானி ஆக வேண்டுமென்றால் ஆன்மீக மனநிலையில் சதா நிலைத்திருங்கள்.