16-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

சங்கமயுகத்தில் ஆத்மா தனது கயிற்றை பரமாத்மாவுடன் இணைக்கிறார். இதனுடைய வழக்கம் அஞ்ஞானத்தில் எந்த விதமாக இருந்து கொண்டு வருகிறது?

பதில்:

திருமணத்தின் பொழுது மணப் பெண்ணினுடைய முந்தானையை மணமகனுடன் பிணைக்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் அவருடைய துணைவியாக ஆகியே இருக்க வேண்டும் என்று பெண் நினைக்கிறாள். நீங்கள் இப்பொழுது உங்களுடைய பொறுப்பை தந்தையுடன் இணைத்துக் கொண்டுள்ளீர்கள். அரை கல்பத் திற்கு நம்முடைய பாலனை தந்தை மூலமாக நடைபெறும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.

பாடல்:

வாழ்க்கையின் கயிறை உன்னுடனேயே பிணைத்தேன்.. .. ..

ஓம் சாந்தி. பாருங்கள் வாழ்க்கையின் கயிறை உன்னுடன் பிணைத்தேன் என்று பாடலில் கூறுகிறார்கள். எப்படி ஒரு கன்னிகை தனது வாழ்க்கையின் கயிறை கணவனுடன் பிணைக் கிறாள். வாழ்க்கை முழுவதும் அவருக்கே துணைவியாக ஆகி இருக்க வேண்டும் என்று நினைக் கிறாள். அவர் தான் காப்பாற்ற வேண்டும். அப்படியின்றி கன்னிகை அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பதல்ல. உயிருள்ளவரையும் அவர் பரிபாலனை செய்ய வேண்டும். குழந்தை களாகிய நீங்களும் வாழ்க்கையின் கயிற்றை பிணைத்துள்ளீர்கள். எல்லையில்லாத தந்தை என்று கூறினாலும் சரி, ஆசிரியர் என்று கூறினாலும் சரி. எது வேண்டுமானாலும் கூறலாம்.. இது ஆத்மாக்களின் வாழ்க்கையின் கயிறை பரமாத்மாவுடன் பிணைப்பதற்கானதாகும். அது எல்லைக் குட்பட்ட ஸ்தூல விஷயம். இது சூட்சுமமான விஷயம். கன்னிகையின் வாழ்க்கையின் கயிறு கணவனுடன் பிணைக்கப்படுகிறது. அவள் அவருடைய வீட்டிற்குச் செல்கிறாள். பாருங்கள், ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொள்வதற்கான புத்தி வேண்டும். கலியுகத்தில் இருப்பது எல்லாமே அசுர வழிகளின் விஷயங்கள். நாம் வாழ்க்கையின் கயிறை ஒருவரிடம் பிணைத் துள்ளோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். உங்களுடைய சம்பந்தம் ஒருவரிடம் உள்ளது. ஒருவரிடமே சம்பந்தத்தை நடத்த வேண்டும். ஏனெனில் அவரிடமிருந்து நமக்கு மிகவும் நல்ல சுகம் கிடைக்கிறது. அவரோ நம்மை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குகிறார். எனவே அப்பேர்ப் பட்ட தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். இது ஆன்மீகக் கயிறாகும். ஆத்மா தான் ஸ்ரீமத் பெறுகிறது. அசுர வழியை பெறுவதாலோ கீழே விழுந்துள்ளார்கள். இப்பொழுது ஆன்மீகத் தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும்.

நாம் நமது ஆத்மாவின் கயிறு பரமாத்மாவுடன் பிணைத்து விடும் பொழுது நமக்கு அவரிடமிருந்து 21 பிறவிகளுக்கு சதா சுகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த குறுகிய கால வாழ்க்கைக் கயிற்றினால் கீழே விழுந்து கொண்டே வந்துள்ளோம். இது 21 பிறவிகளுக்கான உத்திரவாதம் ஆகும். உங்களுடைய வருவாய் எவ்வளவு வலிமை உடையது. இதில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. மாயை நிறைய தவறுகளைச் செய்விக்கிறது. இந்த இலட்சுமி நாராயணர் அவசியம் யாரோ ஒருவரிடம் வாழ்க்கைக் கயிற்றைப் பிணைத்திருக்க வேண்டும். அதனால் 21 பிறவிகளின் ஆஸ்தி அவர்களுக்கு கிடைத்தது. ஆத்மாக்களாகிய உங்களுடைய வாழ்க்கைக் கயிறு கல்ப கல்பமாக பரமாத்மாவுடன் பிணைக்கப்படுகிறது. அவற்றிற்கோ கணக்கே இல்லை. நாம் சிவபாபாவினுடையவராக ஆகி உள்ளோம். அவருடன் வாழ்க்கையைப் பிணைத்துள்ளோம் என்பது புத்தியில் பதிகிறது. ஒவ்வொருவிஷயத்தையும் தந்தை வந்து புரிய வைக்கிறார். முந்தைய கல்பத்திலும் பிணைத்திருந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் யாருடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்பது தெரியாது. பதீத பாவனரான சிவபாபா அவசியம் சங்கமத் தில் தான் வருவார். இதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். உலகிற்கு தெரியாது. எனவே கோடியில் ஒருவர் என்று பாடப்பட்டுள்ளது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் பெரும்பாலும் மறைந்து விட்டது. மற்ற எல்லா சாஸ்திரங்கள், கதைகள் ஆகியவை உள்ளன. இந்த தர்மமே இல்லை. பின் எப்படி தெரிந்து கொள்வது? இப்பொழுது நீங்கள் வாழ்க்கையின் கயிறைப் பிணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பரமாத்மாவுடன் ஆத்மாக்களின் கயிறு இணைந்துள்ளது. முந்தானையில் கட்டுகிறார்கள் அல்லவா? அது ஸ்தூல முந்தானை. இது பரமாத்மாவுடன் ஆத்மாக்களின் யோகம். பாரதத்தில் சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர் எப்பொழுது வந்திருந்தார் என்பது யாருக்குமே தெரியாது. கிருஷ்ணரின் ஜெயந்தி எப்பொழுது, இராமரின் ஜெயந்தி எப்பொழுது என்பது தெரியாது. குழந்தைகளே நீங்கள் திரி மூர்த்தி சிவ ஜெயந்தி என்ற வார்த்தைகள் எழுதுகிறீர்கள். ஆனால் இச்சமயத்தில் மூன்று மூர்த்திகளே இல்லை. சிவபாபா பிரம்மா மூலமாக சிருஷ்டியைப் படைக்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். எனவே பிரம்மா சாகாரத்தில் அவசியம் வேண்டும் அல்லவா? மற்றபடி நீங்கள் திரி மூர்த்தி என்று கூறுவதற்கு விஷ்ணு மற்றும் சங்கரன் இச்சமயம் எங்கே இருக்கிறார்கள். இது மிகவுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். திரிமூர்த்தி என்பதன் பொருளே பிரம்மா, விஷ்ணு, சங்கரன் என்பதாகும். பிரம்மா மூலமாக ஸ்தாபனை இச்சமயம் ஆகிறது. விஷ்ணு மூலமாக சத்யுகத்தில் பாலனை ஆகும். விநாசத்தின் காரியம் கடைசியில் ஆகப் போகிறது. பாரதத்தினுடைய இந்த ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஒன்றே ஒன்று தான். அவர்கள் எல்லோருமே தர்ம ஸ்தாபனை செய்வதற் காக வருகிறார்கள். இவர் இந்த தர்மத்தை ஸ்தாபனை செய்தார் மற்றும் இது அவருடைய நூற்றாண்டு என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட இந்த காலத்தில் குறிப்பிட்ட இந்த தர்மத்தை ஸ்தாபனை செய்தார். பாரதம் பற்றி யாருக்குமே தெரியாது. கீதை ஜெயந்தி, சிவ ஜெயந்தி எப்பொழுது ஆகியது என்பது யாருக்குமே தெரியாது. கிருஷ்ணர் மற்றும் ராதையின் ஆயுளுக்கிடையே 2-3 வருடம் வித்தியாசம் இருக்கக் கூடும். சத்யுகத்தில் அவசியம் முதலில் கிருஷ்ணர் ஜன்மம் எடுத்திருக்கக் கூடும். பிறகு ராதை. ஆனால் சத்யுகம் எப்பொழுது இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. உங்களுக்குக் கூட புரிந்து கொள்வதற்கு நிறைய வருடங்கள் ஆகியுள்ளன. பின் 2 நாட்களில் ஒருவர் எதுவரை புரிந்து கொள்வார்! தந்தை மிகவும் எளிமையாகக் கூறுகிறார். அவர் எல்லை யில்லாத தந்தை ஆவார். எனவே அவசியம் அவரிட மிருந்து எல்லோருக்கும் ஆஸ்தி கிடைக்க வேண்டும் அல்லவா? ஓ காட்ஃபாதர் என்று கூறி நினைவு செய்கிறார்கள். இலட்சுமி நாராயணருடைய கோவில் இருக்கிறது. இவர்கள் சொர்க்கத் தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த ஆஸ்தியை அளித்தது யார்? அவசியம் சொர்க்கத்தின் படைப்புக்கர்த்தா தான் அளித்திருக்கக் கூடும். ஆனால் எப்பொழுது எப்படி கொடுத்தார் என்பது யாருக்கும் தெரியாது. சத்யுகம் இருக்கும் பொழுது வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் நாம் தூய்மை யாக இருந்தோம். கலியுகத்தில் நாம் தூய்மையற்றவர்களாக (பதீதமாக) இருக்கிறோம். எனவே சங்கமத்தில் ஞானம் அளித்திருக்க வேண்டும். சத்யுகத்தில் அல்ல. அங்கே பாக்கியம் இருக்கும். அவசியம் முந்தைய பிறவியில் ஞானம் எடுத்திருக்கக் கூடும். நீங்கள் கூட இப்பொழுது எடுத்து கொண்டிருக்கிறீர்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை தந்தை தான் செய்வார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். கிருஷ்ணரோ சத்யுகத்தில் இருந்தார். அவருக்கு இந்த பாக்கியம் எங்கிருந்து கிடைத்தது? இலட்சுமி நாராயணர் தான் இராதை கிருஷ்ணராக இருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. யார் முந்தைய கல்பத்தில் புரிந்திருந்தார்களோ அவர்கள் தான் புரிந்து கொள்வார்கள் என்று தந்தை கூறுகிறார். இது நாற்று நடப்படுகிறது. மிகவுமே இனிமையான செடியின் நாற்று நடப்படுகிறது. இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயும் தந்தை வந்து மனிதனை தேவதையாக ஆக்கி இருந்தார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் டிரான்ஸ்ஃபர் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் பிராமணர் ஆக வேண்டும். குட்டிக் கரணம் போடும் பொழுது அவசியம் (குடுமி) உச்சி வரும். உண்மையில் நாம் இப்பொழுது பிராமணர் ஆகி உள்ளோம். யக்ஞத்திலோ அவசியம் பிராமணர்கள் வேண்டும். இது சிவன் அல்லது ருத்ரரின் வேள்வி ஆகும். ருத்ர யக்ஞம் என்றே கூறப்படுகிறது. கிருஷ்ணர் ஒன்றும் வேள்வியை இயற்றவில்லை. இந்த ருத்ர ஞான யக்ஞத்திலிருந்து விநாச ஜ்வாலை ப்ரஜ்வலிக்கிறது. இந்த சிவபாபாவின் யக்ஞம் பதீதர்களை பாவனமாக ஆக்குவதற்கானதாகும். ருத்ர சிவபாபா நிராகார மானவர் ஆவார். அவர் மனித உடலில் வராமல் எப்படி யக்ஞத்தை உருவாக்க முடியும்? மனிதர்கள் தான் வேள்வியைப் படைக்கிறார்கள். சூட்சம வதனத்திலோ அல்லது மூல வதனத் திலோ இந்த விஷயங்கள் இருப்பதில்லை. இது சங்கமயுகம் ஆகும் என்பதை தந்தை புரிய வைக்கிறார். இலட்சுமி நாராயணருடைய இராஜ்யம் இருக்கும் பொழுது சத்யுகமாக இருந்தது. இப்பொழுது மீண்டும் நீங்கள் இது போல ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாக்களின் இந்த வாழ்க்கைக் கயிறு பரமாத்மாவுடன் உள்ளது. இந்த கயிறு ஏன் பிணைக்கப்பட்டுள்ளது? சதா சுகத்தின் ஆஸ்தியைப் பெறுவதற்காக. எல்லையில்லாத தந்தை மூலமாக நாம் இந்த இலட்சுமி நாராயணர் ஆகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்களே தான் தேவி தேவதா தர்மத்தினராக இருந்தீர்கள் என்று தந்தை புரிய வைத்துள்ளார். உங்களுடைய இராஜ்யம் இருந்தது. பின்னால் நீங்கள் புனர்ஜென்மம் எடுத்து எடுத்து க்ஷத்திரிய தர்மத்தில் வந்தீர்கள். சூரிய வம்சத்தின் இராஜ்யம் போய்விட்டது. பிறகு சந்திர வம்சத்தினர் வந்தார்கள். நாம் இந்த சக்கரம் எப்படி சுற்றி வருகிறோம் என்பது உங்களுக்குக்குத் தெரியும். இவ்வளவு இவ்வளவு பிறவிகள் எடுத்தோம். ஹே குழந்தைகளே ! நீங்கள் உங்களது பிறவிகள் பற்றி அறியாமல் உள்ளீர்கள். நான் அறிந்துள்ளேன் என்று பகவான் கூறுகிறார். இப்பொழுது இச்சமயம் இந்த உடலில் இரண்டு மூர்த்திகள் இருக்கிறார்கள். பிரம்மாவின் ஆத்மா மற்றும் சிவ பரமாத்மா. இச்சமயம் இரண்டு மூர்த்திகளும் சேர்ந்து இருக்கிறார்கள் - பிரம்மா மற்றும் சிவன். சங்கரனோ ஒரு பொழுதும் பார்ட்டில் வருவதில்லை. மற்றபடி விஷ்ணு சத்யுகத்தில் இருக்கிறார். இப்பொழுது பிராமணர் களாகிய நீங்கள் தான் தேவதை ஆவீர்கள். ஹம்சோ ஹம் என்பதன் பொருள் உண்மையில் இதுவே ஆகும். அவர்கள் ஆத்மா சோவி-ருந்து பரமாத்மா - பரமாத்மா சோ ஆத்மா என்று கூறி விட்டுள்ளார் கள். எவ்வளவு வித்தியாசம் உள்ளது. இராவணன் வந்த உடனேயே இராவணனின் வழி ஆரம்பமாகி விட்டது. சத்யுகத்திலோ இந்த ஞானமே மறைந்து போய் விடும். இவை நடப்பது எல்லாமே நாடகத்தில் அமைந்துள்ளது அல்லவா? அப்பொழுது தானே தந்தை வந்து ஸ்தாபனை செய்ய முடியும். இப்பொழுது இருப்பது சங்கமம். நான் கல்ப கல்பமாக கல்பத்தின் சங்கம யுகத்தில் வந்து உங்களை மனிதனிலிருந்து தேவதை ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார். ஞான யக்ஞத்தைப் படைக்கிறேன் மற்றது எதெல்லாம் உள்ளதோ அவை அனைத்தும் இந்த யக்ஞத்தில் ஸ்வாஹா ஆக வேண்டி உள்ளது. இந்த விநாச ஜ்வாலை இந்த யக்ஞத்திலிருந்து பிரஜ்வலிக்கிறது. பதீத உலகமோ விநாசம் ஆக வேண்டி உள்ளது. இல்லை என்றால் பாவன உலகம் எப்படி ஆகும் ஹே பதீத பாவனரே வாருங்கள் என்று நீங்கள் கூறவும் செய்கிறீர்கள். எனவே பதீத உலகம் பாவன உலகம் சேர்ந்திருக்குமா என்ன? பதீத உலகத்தின் விநாசம் ஆகும். இதிலோ மகிழ்ச்சி அடையவேண்டும். மகாபாரத போர் நடந்திருந்தது. அதன் மூலம் சொர்க்க வாசல் திறந்தது. இது அதே மகாபாரத போர் என்று கூறுகிறார்கள். இது நல்லது. பதீத உலகம் முடிந்து போய் விடும். அமைதிக்காக தலை யிலடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கு இப்பொழுது கிடைத்திருக்க கூடிய மூன்றாவது கண் வேறு யாருக்கும் இல்லை. நாம் எல்லையில்லாத தந்தையிடமிருந்து மீண்டும் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று குழந்தைகளுக்கு குஷி ஏற்பட வேண்டும். பாபா நாம் அநேக முறை உங்களிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுள்ளோம். இராவணன் பிறகு சாபம் கொடுத்தான். இந்த விஷயங்களை நினைவு செய்வது சுலபம். மற்றது அனைத்தும் கட்டு கதைகள் ஆகும். உங்களை இவ்வளவு செல்வந்தராக ஆக்கினேன் பின் ஏன் ஏழை ஆனீர்கள். இவை எல்லாமே நாடகத்தில் அமைந்துள்ளது. ஞானம் பக்தி வைராக்கியம் என்றும் பாடப்படுகிறது. ஞானம் கிடைக்கும் பொழுது தான் பக்தி மீது வைராக்கியம் ஏற்படும். உங்களுக்கு ஞானம் கிடைத்தது. அதனால் பக்தி மீது வைராக்கியம் ஏற்பட்டது. முழு பழைய உலகத்தின் மீது வைராக்கியம். இது சுடுகாடு ஆகும். 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள். இப்பொழுது வீடு செல்ல வேண்டும். என்னை நினைவு செய்தீர்கள் என்றால், என்னிடம் வந்து விடுவீர்கள். விகர்மங்கள் விநாசம் ஆகி விடும். வேறு எந்த வழியும் கிடையாது. யோக அக்னி மூலமாக பாவங்கள் சாம்பலாகும். கங்கையில் ஸ்நானம் செய்வதால் அல்ல.

மாயை உங்களை (ஃபூல்) மூர்க்கராக ஆக்கி விட்டுள்ளது என்று தந்தை கூறுகிறார். ஏப்ரல் ஃபூல் என்று கூறுகிறார்கள் அல்லவா? இப்பொழுது நான் உங்களை இலட்சுமி நாராயணரைப் போல ஆக்க வந்துள்ளேன். படம் மிகவும் நன்றாக உள்ளது -இன்று நாம் என்னவாக இருக்கிறோம், நாளைக்கு நாம் என்னவாக இருப்போம். ஆனால் மாயை கூட குறைவானது அல்ல. மாயை கயிறு பிணைக்க விடுவது இல்லை. இழுபறி ஆகிறது. நாம் பாபாவை நினைவு செய்கிறோம். பின் என்ன ஆகிறது என்று தெரியவில்லை? மறந்து விடுகிறோம். இதில் உழைப்பு உள்ளது. எனவே பாரதத் தினுடைய பழைமையான யோகம் பிரசித்தமானது. அவர்களுக்கு ஆஸ்தி யார் அளித்தது என்பதை யாரும் புரிந்து கொள்வது இல்லை. குழந்தைகளே நான் உங்களுக்கு மீண்டும் ஆஸ்தி அளிக்க வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். இது தந்தையினுடைய காரியமாகும். இச்சமயம் எல்லோருமே நரகவாசி ஆவார்கள். நீங்கள் குஷி அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். இங்கு யாராவது வருகிறார்கள், புரிந்து கொள்கிறார்கள் என்றால் குஷி ஏற்படுகிறது. உண்மையில் சரியான விஷயம் ஆகும் என்று. 84 பிறவிகளின் கணக்கு உள்ளது. தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். அரை கல்பம் பக்தி செய்து நீங்கள் களைத்து விட்டுள்ளீர்கள் என்று தந்தை அறிந்துள்ளார். இனிமையான குழந்தைகளே - தந்தை உங்களுடைய எல்லா களைப்பையும் நீக்கி விடுவார். இப்பொழுது பக்தியின் இருண்ட மார்க்கம் முடிவடைகிறது. இந்த துக்க தாமம் எங்கே? அந்த சுகதாமம் எங்கே? நான் துக்கதாமத்தை சுகதாமமாக ஆக்குவதற்காக கல்பத்தின் சங்கமத்தில் வருகிறேன். தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும். தந்தை எல்லை யில்லாத ஆஸ்தி அளிப்பவர் ஆவார். ஒரே ஒருவருடையதே மகிமை ஆகும். சிவபாபா இல்லை என்றால் உங்களை யார் பாவனமாக ஆக்குவார். நாடகத்தில் முழுவதும் பொருந்தி உள்ளது. ஹே பதீத பாவனரே ! வாருங்கள் என்று கல்ப கல்பமாக நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். சிவனுடைய ஜெயந்தி ஆகும். பிரம்மா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்தார் என்கிறார்கள். பிறகு சிவன் வந்து என்ன செய்தார் என்பதற்காக சிவ ஜெயந்தி கொண்டாடு கிறார்கள். ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை. உங்களுடைய புத்தியில் ஞானம் முற்றிலுமாக பதிந்து விட வேண்டும். கயிறு ஒருவருடன் பிணைக்கப்பட்டுள்ளது என்றால் பின் வேறு எவருடனும் பிணைக்காதீர்கள். இல்லையென்றால் விழுந்து விடுவீர்கள். பரலோக தந்தை மிகவும் எளிமையாக இருக்கிறார். எந்த ஒரு ஆடம்பரமும் இல்லை. அந்த தந்தையோ மோட்டார்களில் மற்றும் விமானங்களில் சுற்றுவார். இந்த எல்லை யில்லாத தந்தை நான் பதீத உலகத்தில் பதீத சரீரத்தில் குழந்தைகளின் சேவைக்காக வந்துள்ளேன் என்று கூறுகிறார். ஹே அவினாஷி சர்ஜன் வாருங்கள் வந்து எங்களுக்கு இஞ்ஜெக்ஷ்ன் போடுங்கள் என்று நீங்கள் அழைத்துள்ளீர்கள். இஞ்ஜெக்ஷன் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. யோகம் செய்தீர்கள் என்றால் உங்களது பாவங்கள் சாம்பலாகும் என்று தந்தை கூறுகிறார். தந்தை 63 பிறவிகளின் துக்கத்தை தீர்ப்பவராகவும் 21 பிறவிகளுக்கு சுகத்தை அளிப்ப வராக வும் இருக்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தங்களது புத்தியின் ஆன்மீகக் கயிறை ஒரே ஒரு தந்தையுடன் பிணைக்க வேண்டும். ஒருவரின் ஸ்ரீமத் படி தான் நடக்க வேண்டும்.

2. நாம் மிகவுமே இனிமையான செடியின் நாற்றினை நட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே முதலில் சுயம் தங்களை மிக மிக இனிமையானவராக ஆக்க வேண்டும். நினைவு யாத்திரையில் மூழ்கி இருந்து விகர்மங்களை விநாசம் செய்ய வேண்டும்.

வரதானம்:

சர்வ கஜானாக்களை உலக நன்மையின் பொருட்டு பயன்படுத்தக் கூடிய சித்தி சொரூபம் ஆவீர்களாக.

எப்படி தங்களுடைய எல்லைக்குட்பட்ட குடும்பத்திற்கு, தங்களது எல்லைக்குட்பட்ட சுபாவம், சம்ஸ்காரங்கள் என்ற குடும்பத்திற்கு நிறைய நேரத்தை செலவிடுகிறீர்கள். ஆனால் அவரவர் பிரவிருத்தி - குடும்பத்திற்கு அப்பாற்பட்டு அதாவது விடுபட்டு இருங்கள் மேலும் ஒவ்வொரு சங்கல்பம், பேச்சு, செயல் மற்றும் சம்பந்தம் தொடர்பில் (பேலன்ஸ்) சமநிலை கொள்ளுங்கள். அப்பொழுது அனைத்து கஜானாக்களின் சிக்கனம் மூலமாக குறைந்த செலவில் அதிக பலன் பெறுபவர்களாக ஆகி விடுவீர்கள். இப்பொழுது காலம் என்ற கஜானா, சக்திகளின் (எனர்ஜி) கஜானா மேலும் ஸ்தூல கஜானாக்களில் குறைந்த செலவில் அதிக பலன் பெறுபவராக ஆகுங்கள். இவற்றை சுயம் தனக்கு பதிலாக உலக நன்மையின் பொருட்டு பயன் படுத்துங்கள். அப்பொழுது சித்தி சொரூபம் ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:

ஸ்லோகன்: ஒருவருடைய (லகன்) ஈடுபாட்டில் சதா (மகன்) மூழ்கி இருந்தீர்கள் என்றால் (நிர்விக்கினம்) தடையற்றவர் ஆகி விடுவீர்கள்.