16-03-2020 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்


இனிய குழந்தைகளே, நீங்கள் ஞானத்தின் மூலம் மிகச் சிறந்த ஞானோதயத்தைப் பெற்றுள்ளீர்கள். உங்கள் 84 பிறவிகளையும், உங்கள் அசரீரியான தந்தையையும், உங்கள்; லௌகீகத் தந்தையையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அலைந்து திரிவது முடிவடைந்து விட்டது.

கேள்வி:

கடவுளின் வழிகளும், வழிகாட்டல்களும் ஏன் தனித்துவமானது என நினைவு கூரப்படுகின்றன?

பதில்:

1. கடவுள் கொடுக்கும் வழிகாட்டல்களினால் பிராமணர்களாகிய நீங்கள் தனித்துவமானவர்கள் ஆகுவதால் ஆகும். ஒரேயொருவரின் வழிகாட்டல்களின் மூலம் நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைக்கப்படுகின்றீர்கள்;. 2. கடவுள் ஒருவரே அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள்பவர். அவர் உங்களைப் பூஜை செய்பவர்களில் இருந்து பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். இதனாலேயே அவருடைய வழிகளும், வழிகாட்டல்களும் தனித்துவமானவை. குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவரும் இவற்றைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

ஓம் சாந்தி. குழந்தை ஒருவரின் ஆரோக்கியம் குறைவாக இருந்தால், தந்தை, "நல்லது. இங்கேயே உறங்குங்கள்” எனக் கூறுவார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஏனெனில் குழந்தைகளாகிய நீங்கள் எப்போதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டவர்கள். அதாவது நீங்கள் 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வந்து பாபாவைச் சந்திக்கின்றீர்கள். நீங்கள் யாரைச் சந்திக்கின்றீர்கள்? எல்லையற்ற தந்தையை. இதனை நம்பிக்கையுள்ள குழந்தைகள் புரிந்துகொள்கின்றார்கள். நீங்கள் நிச்சயமாக எல்லையற்ற தந்தையைச் சந்தித்தீர்கள். இரு தந்தையரே உள்ளனர்: ஒருவர் எல்லைக்குட்பட்டவரும், மற்றவர் எல்லையற்றவரும் ஆவார். துன்பத்தில் அனைவரும் எல்லையற்ற தந்தையையே நினைவு செய்கின்றார்கள். சத்தியயுகம் சந்தோஷ தாமம் என்பதால், நிச்சயமாக அவர்கள் பௌதீகத் தந்தையை மாத்திரமே நினைவு செய்கின்றார்கள். இந்த உலகில் நீங்கள் பௌதீகத் தந்தையின் ஊடாகவே பிறப்பு எடுக்கின்றீர்கள். எவ்வாறாயினும் பரலோகத் தந்தை ஒரேயொரு தடவையே வந்து உங்களைத் தனக்குரியவர்; ஆக்குகின்றார். நீங்களும் தந்தையுடன் அமரத்துவ பூமியில் வாழ்கின்றீர்கள். அது பூமிக்கு அப்பாற்பட்ட பரந்தாமம் என அழைக்கப்படுகின்றது. அது அப்பாற்பட்ட பூமியாகும். சுவர்க்கம் அப்பாற்பட்ட பூமி என அழைக்கப்படமாட்டாது. சுவர்க்கம், நரகம் இரண்டும் நிச்சயமாக இங்கேயே உள்ளது. புதிய உலகம் சுவர்க்கம் எனவும், பழைய உலகம் நரகம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது இப்போது தூய்மையற்ற உலகமாகும். அவர்கள் கூவியழைக்கின்றார்கள்: ஓ, தூய்மையாக்குபவரே வாருங்கள். சத்திய யுகத்தில் அவ்வாறு அழைக்கமாட்டார்கள். இராவணனின் இராச்சியம் ஆரம்பமாகும்போதே அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். அது ஐந்து விகாரங்களின் இராச்சியம் என அழைக்கப்படுகிறது. சத்திய யுகத்தில் நிச்சயமாக விகாரமற்ற இராச்சியமே இருந்தது. பாரதத்தின் புகழ் மிகவும் மகத்தானது. ஆனால் அவர்கள் விகாரமுள்ளவர்கள் ஆகியதால் பாரதத்தின் புகழை அவர்கள் அறியவில்லை. இலக்ஷ்மி நாராயணன் ஆட்சியில் பாரதம் முற்றிலும் விகாரமற்றிருந்தது. இப்பொழுது அந்த இராச்சியம் இல்லை. அந்த இராச்சியம் எங்கு சென்று விட்டது? கல்லுப் புத்தியுள்ளவர்கள் இதனை அறியார். ஏனைய அனைவரும் தங்கள் சமய ஸ்தாபகர்களை அறிவார்கள். ஆனால் பாரதமக்கள் தங்கள் சமயத்தையோ அல்லது தங்கள் சமய ஸ்தாபகரையோ அறியார்கள். ஏனைய சமயத்தவர்கள் தங்கள் சமயத்தைச் ஸ்தாபித்தவர்களை அறிந்திருந்தாலும், மீண்டும் அவர்கள் எப்போது வருவார்கள் என்பதை அறியமாட்டார்கள். சீக்கிய மக்களுக்குத் தங்களுடைய சமயம் முன்னர் இருக்கவில்லை என்பதும், குருநானக் வந்தே அதனை ஸ்தாபித்தார் என்பதும் தெரியும். எனவே, அவர் நிச்சயமாக சத்திய யுகத்தில் வரமாட்டார். பின்னரே குருநானக் வந்து அதனை மீண்டும் ஸ்தாபித்தார், ஏனெனில் உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. கிறிஸ்தவ சமயம் இருக்கவில்லை, அது பின்னரே ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அது புதிய உலகமாக இருந்தது. ஒரு தர்மமே இருந்தது. அங்கு பாரத மக்களாகிய நீங்களே இருந்தீர்கள். ஒரு தர்மமே இருந்தது. பின்னர் 84 பிறவிகளைத் தொடர்ந்து எடுத்து வருகையில் நீங்களே நிச்சயமாகத் தேவர்களாக இருந்தவர்கள் என்பதையும,; நீங்களே 84 பிறவிகளையும் எடுத்தவர்கள் என்பதையும் நீங்கள் மறந்து விட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் பிறவிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. நான் உங்களுக்குக் கூறுகின்றேன். அது அரைச்சக்கரத்திற்கு இராம இராச்சியமாகவும், பின்னர் அதுவே இராவண இராச்சியமாகவும் ஆகியது. சூரியவம்சமானது இலக்ஷ்மி நாராயணது குடும்பம் ஆகும். முதலில் அது சூரியவம்சமாகவும்;, பின்னர், இராம இராச்சியமான சந்திர வம்சம் ஆகியது. இலக்ஷ்மி நாராயணனது குடும்பமான சூரிய வம்சத்திற்கு உரியவர்களே 84 பிறவிகளை எடுத்து, இப்பொழுது இராவணனது குடும்பத்திற்கு உரியவர்களாகி விட்டார்கள். முன்னர், அவர்கள் புண்ணிய ஆத்மாக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்பொழுது அவர்கள் பாவாத்மாக்களின் குடும்பத்திற்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் 84 பிறவிகளையும் எடுத்தவர்கள். நாங்கள் 8.4 மில்லியன் பிறவிகளை எடுக்கின்றோம் என அவர்கள் கூறுகின்றார்கள். இப்பொழுது, யார் அமர்ந்திருந்து 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றிச் சிந்திப்பார்கள். இதனாலேயே எவருமே இதனைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இப்பொழுது தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்;: நீங்கள் தந்தைக்கு முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். அசரீரியான தந்தையும், பௌதீகத் தந்தையும் பாரதத்தில் மிகவும் பிரபல்யமானவர்கள். மக்கள் தந்தையைப் போற்றிப் பாடுகின்றார்கள். ஆனால், அவரை அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அறியாமை எனும் உறக்கத்தில் உறங்குகின்றார்கள். ஞானத்தின் மூலம் ஞானோதயம் உள்ளது. ஒளி இருக்கும் போது மனிதர்கள் என்றுமே தடுமாறித் திரிவதில்லை. காரிருளில் அவர்கள் தொடர்ந்தும் தடுமாறுகின்றார்கள். பாரத மக்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள். இப்பொழுது அவர்கள் பூஜை செய்பவர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள். அவர்கள் யாரை வணங்குவார்கள்? அவர்கள் தாங்களாகவே சிலைகளை உருவாக்கி அவற்றை வழிபட முடியாது. அது சாத்தியமல்ல. நாங்கள் நிச்சயமாகப் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தவர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பின்னர் எவ்வாறு அவர்கள் பூஜிப்பவர்கள் ஆகினார்கள்? இவ்விடயங்களை வேறு எவருமே புரிந்து கொள்வதில்லை. தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். இதனாலேயே அவர்களும் கூறுகின்றார்கள்: கடவுளின் வழிகளும், வழிகாட்டல்களும் தனித்துவமானவை. பாபா எங்கள் வழிகளையும் வழிகாட்டல்களையும் இப்பொழுது உலகம் முழுவதிலும் தனித்துவமானதாக ஆக்கியுள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உலகில் பலவகையான வழிகாட்டல்கள் உள்ளன. இங்கு பிராமணர்களாகிய உங்களின் வழிகாட்டல்கள் ஒன்றே ஆகும். அவை கடவுளின் வழிகாட்டல்களும், வழிகளும் ஆகும். வழிகள் என்றால் ஜீவன் முக்தியாகும். தந்தை ஒருவரே ஜீவன் முக்தியை அருள்பவர். அவர்களும் பாடுகிறார்கள்: அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள்பவர் இராமரே. எனினும் அவர்கள் உண்மையாகவே இராமர் யார் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: நான் பார்க்குமிடமெல்லாம் இராமர், இராமர் மாத்திரமே உள்ளார். அதனை அறியாமை எனும் காரிருள் என அழைக்கிறார்கள். காரிருளில் துன்பம் உள்ளது. வெளிச்சத்தில் சந்தோஷம் உண்டு. அவர்கள் காரிருளில் மாத்திரமே கூவியழைக்கிறார்கள். பிரார்த்தனை செய்வதென்றால் தந்தையைக் கூவியழைப்பதாகும். அவர்கள் இரப்பவர்கள் அல்லவா? தேவர்களின் ஆலயங்களுக்குச் செல்வது என்றால் தானங்களை வேண்டி நிற்பவர்கள், அல்லவா? சத்தியயுகத்தில் தானங்களை வேண்டி நிற்பதற்கான அவசியமில்லை. இரப்பவர்கள், செழிப்பற்றவர்கள் என அழைக்கப்படுவார்கள். சத்திய யுகத்தில் நீங்கள் மிகவும் செழிப்பானவர்களாக இருந்தீர்கள். அதுவே செழிப்பு என அழைக்கப்படும். இப்பொழுது பாரதம் கடனாளியாகிவிட்டது. இதனை எவருமே புரிந்து கொள்வதில்லை. சக்கரத்தின் கால எல்லையைத் தவறாக எழுதியுள்ளதால், நிச்சயமாக அவர்கள் குழப்பமடைந்து விட்டார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து மிக அன்புடன் விளங்கப்படுத்துகின்றார். ஒரு சக்கரத்திற்கு முன்பும் அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தினார்: தூய்மையாக்குகின்ற, தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். நீங்கள் எவ்வாறு தூய்மையற்றவர் ஆகினீர்கள்? உங்களில் விகாரம் எனும் கலப்படம் கலக்கப்பட்டு விட்டது. மனிதர்கள் அனைவரும் துருப்பிடித்தவர்கள். இப்பொழுது அந்தத் துருவை எவ்வாறு அகற்ற முடியும்? என்னை நினைவு செய்யுங்கள்! சரீர உணர்வை நீக்கிவிட்டு, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! நீங்கள் உங்களை ஓர் ஆத்மா எனக் கருதிக் கொள்ளுங்கள். முதலில், நீங்கள் ஓர் ஆத்மா, பின்னர் நீங்கள் ஒரு சரீரத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள். எனினும் ஆத்மா அநாதியானவர். சரீரம் மரணிக்கின்றது. சத்தியுகம், அமரத்துவ பூமி என அழைக்கப்படுகின்றது. கலியுகம் மரணபூமி என அழைக்கப்படுகின்றது. அமரத்துவ பூமி இருந்தது என்றும், பின்னர் அது மரணபூமி ஆகியது என்றும் உலகில் உள்ள எவருக்குமே தெரியாது. அமரத்துவ பூமி என்றால், அங்கே அகால மரணம் ஏற்படுவதில்லை. அங்கு ஆயுட்காலமும் நீண்டதாகவே இருக்கும். அது தூய உலகாகும். நீங்கள் இராஜரிஷிகள். தூய்மையானவரை ரிஷி என அழைக்கிறார்கள். உங்களைத் தூய்மையாக்கியது யார்? அவர்கள் சங்கராச்சாரியாரினால் ரிஷிகள் ஆக்கப்பட்டார்கள். நீங்கள் சிவாச்சாரியாரினால் (ஆசிரியரான சிவன்) தூய்மை ஆக்கப்படுகிறீர்கள். அந்த ஒரேயொருவர் எதனையும் கற்கவில்லை. சிவபாபா வந்து, இவர் மூலமாகவே கற்பிக்கின்றார். சங்கராச்சாரியார் ஒரு கருப்பையின் மூலம் பிறப்பு எடுத்தார். அவர் மேலிருந்து அவதாரம் எடுக்கவில்லை. எவ்வாறாயினும், தந்தை இவரினுள் பிரவேசிக்கின்றார். அவர் வந்து கூறுகிறார், அவரே அதிபதி. அவர் விரும்புகின்ற எவரிலும் அவரால் பிரவேசிக்க முடியும். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: எவருக்காவது நன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் பிரவேசிக்கின்றேன். நிச்சயமாக நான் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். நான் பலருக்கு நன்மையை ஏற்படுத்துகின்றேன். மாயையும் குறைந்தவளல்ல என்று குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சிலவேளைகளில் திரான்ஸில் செல்பவர்களிடமும் மாயை உட்புகுந்து தவறான விடயங்களைக் கூறச் செய்கிறாள். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மாயை சிலரில் பிரவேசிக்கும்போது அவர்கள் கூறுகிறார்கள்: நானே சிவன், நான் இன்னார், இன்னார். மாயை மிகவும் அசுரத்தனமானவள். விவேகமான குழந்தைகள் பிரவேசித்துள்ளவர் யார் என்பதை மிக விரைவாகவே புரிந்து கொள்வார்கள். இச்சரீரம் அவருக்காகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் நீங்கள் ஏன் பிறருக்கு செவிசாய்க்;கிறீர்கள்? நீங்கள் அதனைச் செவிமடுத்தால், அந்த விடயம் சரியா, பி;ழையா என பாபாவிடம் நீங்கள் கேட்கலாம். தந்தை நேரடியாக விளங்கப்படுத்துவார். அவ்விடயங்கள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாத பல புத்திரிகளும் உள்ளார்கள். ஒருவர் வேறொருவரில் அவதாரம் எடுப்பது அவர்கள் பிறரை அறைவதுடன்; நிந்தனை செய்யவும் ஆரம்பித்து விடுவார்கள். இப்பொழுது தந்தை நிந்தனை செய்வாரா? பல குழந்தைகள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதும் இல்லை. முதற்தரமான குழந்தைகளும் சில வேளைகளில் மறந்து விடுகின்றார்கள். பலரில் மாயை புகுந்து விடுவதால், நீங்கள் அனைத்தையும் பற்றி கேட்டறிந்து கொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் திரான்ஸில் சென்று, அத்தகைய அர்த்தமற்ற விடயங்களைப் பேசுவார்கள். இதில் மிக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தந்தையிடம் முழுச்செய்திகளையும் கொடுக்க வேண்டும். இன்னாரில் மம்மா வந்தார், இன்னாரில் பாபா வந்தார். அவ்விடயங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள். தந்தை ஒரு அறிவுறுத்தலை மாத்திரம் கொண்டுள்ளார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். தந்தையையும், உலக சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். படைப்பவரையும் படைப்பையும் நினைவு செய்பவர்களி;ன் முகம், எப்பொழுதும் மலர்ச்சியாகவே இருக்கும். பலர் நினைவைக் கொண்டிருப்பதில்லை. கர்ம பந்தனம் மிகவும் கடுமையானது. மனச்சாட்சி கூறுகின்றது: நான் இப்பொழுது எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டேன், அவர் கூறுகின்றார்: "என்னை நினைவு செய்யுங்கள்” அவரை நான் ஏன் நினைவு செய்யக்கூடாது? ஏதேனும் நிகழ்ந்தால் தந்தையிடம் வினவுங்கள். தந்தை விளங்கப்படுத்துவார். இன்னமும் கர்மவேதனை உள்ளது. நீங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும் போது, நீங்கள் சதா முகமலர்ச்சியுடன் இருப்பீர்கள். அது வரைக்கும் ஏதாவதொன்று நிகழும். நீங்களும் அறிவீர்கள்: இரைக்குத் திண்டாட்டம், வேடனுக்குக் கொண்டாட்டம். விநாசம் இடம் பெறவுள்ளது. நீங்கள் தேவதைகள் ஆகுவீர்கள். நீங்கள் இவ்வுலகில் மேலும் சொற்ப நாட்களுக்கே இருப்பீர்கள். பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் இந்த பௌதீக உலகை விரும்பமாட்டீர்கள். நீங்கள் சூட்சும உலகையும், அசரீரி உலகையுமே பெரிதும் விரும்புவீர்கள். சூட்சும உலகவாசிகள் தேவதைகள் என அழைப்படுவார்கள். நீங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும் போது, நீ;ங்களும் ஒரு குறுகிய காலத்திற்கு அவ்வாறு ஆகுவீர்கள். சூட்சும உலகில் தசையோ, எலும்புகளோ இல்லை. அங்கு தசையும் எலும்பும் இல்லாவிட்டால், வேறு என்ன இருக்கும்? சூட்சும சரீரமே இருக்கும். நீங்கள் அசரீரியாகுவீர்கள் என்றில்லை. இல்லை. சூட்சும வடிவமே இருக்கும். அங்கேயுள்ள மொழி, மௌன அசைவுகள் ஆகும். ஆத்மா சத்தத்திற்கு அப்பாற்பட்டவர். அது சூட்சும உலகம் என அழைக்கப்படுகிறது. அங்கு சூட்சுமமான ஒலியே உள்ளது. இங்கே இது பேசும் உலகம். ஆனால் அங்கே அது அசையும் உலகாகும். பின்னர் மௌனதாமம் உள்ளது இங்கே இது பேசும் உலகம். இந்தப் பாகம் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. அங்கு மௌனமே உள்ளது. பின்னர் அசையும் உலகம் உள்ளது, இதுவோ பேசும் உலகம் ஆகும். இந்த மூவுலகங்களையும் நினைவு செய்பவர்கள் மிகச் சிலரே ஆவார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு, கர்மயோகிகளாகி, குறைந்தது 8 மணித்தியாலங்களுக்காவது செயல்கள் செய்ய வேண்டும், 8 மணித்தியாலங்களுக்கு ஓய்வும், 8 மணித்தியாலங்களுக்கு தந்தையை நினைவு செய்யவேண்டும். இந்தப்பயிற்சியின் மூலமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். நீங்கள் உறங்குவது, தந்தையின் நினைவில் இருப்பது என்றல்ல. எவருமே நினைக்கக் கூடாது: நாங்கள் பாபாவின் குழந்தைகள் என்பதால், நாங்கள் ஏன் அவரை நினைவு செய்ய வேண்டும்? இல்லை. தந்தை கூறுகின்றார்: என்னை அங்கே நினைவு செய்யுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் யோக சக்தியின் மூலம் தூய்மையாகும் வரை உங்களால் வீட்டிற்குச் செல்ல முடியாது. இல்லையேல், நீங்கள் தண்டனையைப் பெற்ற பின்னர்; செல்லலாம். நீங்கள் சூட்சும உலகிற்கும் அசரீரி உலகிற்கும் செல்ல வேண்டும். பின்னர் நீங்கள் சுவர்க்கத்திற்குள் பிரவேசிப்பீர்கள். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: சிறிது காலத்திற்குப் பின்னர் இது செய்தித்தாள்களிலும் பிரசுரிக்கப்படும். இப்பொழுது அதிகநேரம் உள்ளது. ஒரு பெரிய இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு - என பாரதமே மிகவும் பெரியது. செய்தித் தாள்கள் மூலம் ஓசை வெளிப்படும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அவர்களும் கூவியழைக்கிறார்கள்: ஓ, தூய்மையாக்குபவரே, விடுதலையளிப்பவரே துன்பத்தில் இருந்து எங்களை விடுவியுங்கள். நாடகத்திட்டத்திற்கேற்ப, விநாசமும் நிகழவேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இந்த யுத்தத்திற்குப் பின்னர் அமைதி, நிலவும், அமைதி மாத்திரமே இருக்கும். இது சந்தோஷ தாமம் ஆகுகின்றது. அனைத்தும் தலைகீழாக மாறும். சத்திய யுகத்தில் ஒரேயொரு தர்மம் மாத்திரமே உண்டு. கலியுகத்தில் பல சமயங்கள் உள்ளன. எவராலும் இதனைப் புரிந்து கொள்ள முடியும். முதலில், ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருக்கும். சூரிய வம்சம் இருக்கின்ற காலத்தில், சந்திர வம்சம் இருப்பதில்லை. பின்னர் தாமதமாகவே சந்திர வம்சம் வரும். சிறிது காலத்திற்குப் பின்னர் இந்த தேவதர்மம் மறைந்துவிடும். ஏனைய சமயங்கள் பின்னர் சிறிது காலத்திற்குப் பின் தோன்றுகின்றன. அவர்களின் ஸ்தாபனம் விரிவாக்கம் அடையும்போதே அவர்கள் அதனை அறிவார்கள்? குழந்தைகளாகிய உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி இறுதியை இப்பொழுது தெரியும். அவர்கள் உங்களை வினவுகிறார்கள்: ஏணியி;ல் ஏன் பாரதமக்களை மாத்திரம் காட்டியுள்ளார்கள்? அவர்களிடம் கூறுங்கள்: இந்த நாடகம் பாரதத்தைப் பற்றியதே ஆகும். அரைச்சக்கரத்திற்கு இது அவர்களுடைய பாகம். புpனனர்; ஏனைய சமயங்கள் துவாபர, கலியுகங்களில் வருகின்றன. இந்த ஞானம் முழுவதும் சக்கரத்தின் படத்தில் உள்ளது. சக்கரத்தின் படம் உண்மையாகவே முதற்தரமானதாகும். சத்திய திரேதாயுகங்களே மேன்மையான உலகாகும். துவாபர, கலியுகங்கள் சீரழிந்த உலகமாகும். இப்பொழுது நீ;ங்கள் சங்கம யுகத்தில் உள்ளீர்கள். இவை ஞான விடயங்களாகும். எவ்வாறு இந்தச் சக்கரத்தின் நான்கு யுகங்களும் சுழல்கின்றதென எவருக்குமே தெரியாது. சத்திய யுகத்தில் இலக்ஷ்மி நாராயணனது இராச்சியமே உள்ளது. சத்திய யுகத்திற்குப் பின் திரேதா யுகம் வரும் என்பதை அவர்களும் முன் கூட்டியே அறிந்திருக்கவில்லை. திரேதாயுகத்திற்குப் பின்னரே துவாபர யுகமும் கலியுகமும் வரும் என்பதைப் பற்றி மனிதர்கள் எதனையுமே அறிந்திருக்கவில்லை. தங்களுக்குத் தெரியும் என அவர்கள் கூறினாலும், எவ்வாறு சக்கரம் சுழல்கின்றதென எவருக்குமே தெரியாது. இதனாலேயே பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: முழு முக்கியத்துவத்தையும் கீதைக்கே விட்டு விடுங்கள். உண்மையான கீதையைச் செவிமடுப்பதினால், நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவீர்கள். இங்கு சிவபாபாவே பேசுகின்றார். அங்கு மனிதர்களே வாசிக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் முதலில் கீதையைக் கற்றிடுங்கள். நீங்கள் பக்தி மார்க்கத்திலும் சென்றீர்கள். முதலில் நீங்கள் சிவனை வழிபடுபவர்கள் ஆகினீர்கள். நீ;ங்களே முதலில் ஒரேயொரு சிவபாபாவைக் கலப்படமற்ற வழிபாடு செய்தவர்கள். எனினும் வேறு எவராவது சோமநாதர் ஆலயத்தைக் கட்டுவதற்கான சக்தியைக் கொண்டிருந்தார்களா? பலகையில் பல்வேறு விடயங்களைப் பற்றி நீங்கள் எழுதலாம். நீங்கள் இதனையும் எழுதலாம்: கீதையைச் செவிமடுப்பதன் மூலம் பாரத மக்கள் சத்தியயுக அதிபதிகள் ஆகமுடியும். உண்மையான கீதையைச் செவிமடுப்பதன் மூலம், நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துகொள்கிறீர்கள். நீங்கள் விளங்கப்படுத்தும்போது அவர்கள் கூறுகிறார்கள்: ஆம், நிச்சயமாக இது நல்லது. பின்னர் அவர்கள் வெளியில் சென்றதும் அனைத்துமே முடிந்துவிடும்! அவர்கள் அங்கு செவிமடுத்ததை அங்கேயே விட்டுச் செல்வார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. படைப்பவரினதும், படைப்பினதும் ஞானத்தைக் கடைந்து சதா முகமலர்ச்சியுடன் இருங்கள். நினைவு யாத்திரையினால் உங்கள் பழைய கர்மக் கணக்குகள் அனைத்தையும் முடித்து, உங்கள் ஸ்திதியை கர்மாதீதம் ஆக்குங்கள்.
  2. திரான்ஸ் செல்வதிலும், காட்சிகள் காண்பதிலும் மாயை அதிகளவு தலையீடு செய்கிறாள், ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்! உங்கள் செய்திகளைத் தந்தையிடம் கொடுத்து அவருடைய ஆலோசனையைப் பெறுங்கள். தவறுகள் எதனையும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:

முரளிதாரின் முரளிமீது எப்பொழுதும் அன்பைக் கொண்டிருந்து சதா சக்திசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

கல்வியில் அன்பைக் கொண்டிருக்கும் குழந்தைகள் அதாவது முரளியில் அன்பைக் கொண்டிருக்கும் குழந்தைகள் சதா சக்திசாலியாக இருப்பதற்கான ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு முன்னால் எந்தத் தடையும் இருக்க முடியாது. முரளீதாரிடம் அன்பைக் கொண்டிருப்பது என்பது அவரது முரளியின் மீது அன்பைக் கொண்டிருப்பதாகும். முரளிதாரிடம் அதிகளவு அன்பைக் கொண்டிருப்பதாகவும் ஆனால் கற்பதற்கு நேரம் இல்லையென எவராவது கூறினால் தந்தை அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏனெனில் எங்கு அன்பு உள்ளதோ அங்கு சாக்குப் போக்கு இருக்கமுடியாது. கல்வியும் குடும்பத்தின்; அன்பும் ஒரு கோட்டை ஆகுகிறது. அதனால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

சுலோகம்:

ஒவ்வொரு சூழ்நிலையிலும் வளைந்து கொடுங்கள். அப்பொழுது நீங்கள் நிஜத் தங்கம் ஆகுவீர்கள்.


---ஓம் சாந்தி---