16.05.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே! இப்பொழுது நாடகத்தின் சக்கரம் முடிகின்றது, நீங்கள் இனிமையாகவும், அன்பானவருமாகி புதிய உலகிற்கு வர வேண்டும், அங்கே அனைவரும் அன்பாக, இனிமையாக இருப்பார்கள். இங்கு உப்புத் தண்ணீர் போன்று இருக்கின்றனர்.

 

கேள்வி:

நீங்கள் மூன்று கண்கள் உடைய குழந்தைகள் எந்த ஞானத்தைப் புரிந்து கொண்டு திரிகால தரிசியாக ஆகி விட்டீர்கள்?

 

பதில்:

உங்களுக்கு இப்போது முழு உலகிற்கான வரலாறு, பூகோளத்தின் ஞானம் கிடைத்து விட்டது, சத்யுகத்திலிருந்து கலியுகம் முடியும் வரையிலான வரலாறு, பூகோளத்தை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு விட்டு இன்னொரு சரீரம் எடுக்கின்றது என்ற ஞானத்தின் மூன்றாவது கண் உங்களுக்கு கிடைத்து விட்டது. சம்ஸ்காரம் ஆத்மாவில் தான் இருக்கிறது. குழந்தைகளே, பெயர், ரூபத்திலிருந்து விடுபட்ட வராக ஆகுங்கள் என தந்தை கூறுகின்றார். தன்னை தான் ஒரு அசரீரி ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள்.

 

பாடல்:

! மனிதனே, பொறுமையாக இரு.......

 

ஓம் சாந்தி!

கல்ப, கல்பமாக குழந்தைகளுக்கு கூறப்படுகிறது, மேலும் குழந்தைகளும் புரிந்துள்ளனர். இப்போது சீக்கிரமாக சத்யுகம் வரவேண்டும், ஆக இந்த துக்கத்திலிருந்து விடுபடுவோம் என மனம் விரும்புகிறது. ஆனால், நாடகம் மிகவும் மெதுவாக நகர்ந்து செல்கிறது. மீதி உள்ள காலம் மிகவும் குறைவு தான், என தந்தை பொறுமையாக இருக்க அறிவுறுத்துகின்றார். பெரிய மனிதர்களின் மூலமாகவும் உலகம் மாற வேண்டும் என்ற சப்தமும் கேட்கும். போப் மற்றும் யாரெல்லாம் பெரிய மனிதர்களோ அவர்களெல்லாம் உலகம் மாறக்கூடியது எனக் கூறுகின்றனர் நல்லது, இல்லையெனில் பிறகு அமைதி எப்படி ஏற்படும்? இந்த நேரம் அனைவரும் உப்புத் தண்ணீராக இருக்கின்றனர். இப்போது நாம் இனிமையாக, அன்பான வராக ஆகின்றோம். அந்தப் பக்கத்தில் நாளுக்கு நாள் உப்புத் தண்ணீராக ஆகின்றனர். தங்களுக்குள் சண்டை யிட்டு அழிந்து விடுவார்கள், அதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றது. இந்த நாடகச் சக்கரம் இப்பொழுது முடிகின்றது. பழைய உலகம் முடிகின்றது, புதிய உலகம் படைக்கப்படுகின்றது. புதிய உலகம் பழையதாக, பழைய உலகம் புதியதாக மீண்டும் ஏற்படும். இதனை உலகத்தின் சக்கரம் எனக் கூறப்படுகிறது, மீண்டும் சுழல்கிறது. இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பழைய உலகம் புதியதாகும் என சொல்ல முடியாது. குழந்தைகள் இதனை நல்ல முறையில் புரிந்துள்ளீர்கள், பக்தி முற்றிலும் தனிப்பட்டதாகும். இராவணனோடு பக்தியின் சம்மந்தம் இருக்கின்றது. ஞானத்தின் சம்மந்தம் இராமரோடு இருக்கின்றது. இதனை நீங்கள் இப்போது புரிந்துள்ளீர்கள். ஹே! பதீத பாவனரே வாருங்கள், புது உலகை உருவாக்குங்கள் என தந்தையை அழைக்கின்றனர். புது உலகில் நிச்சயமாக சுகம் இருக்கும். இப்போது வீட்டுற்குச் செல்ல வேண்டுமென சிறிய மற்றும் பெரிய குழந்தைகள் அனைவரும் புரிந்துள்ளீர்கள். இந்த நாடகம் முடிகின்றது. நாம் மீண்டும் சத்யுகத்திற்குச் செல்வோம் பிறகு 84 பிறவிச் சக்கரத்தில் சுற்றி வருவோம். சுயம் ஆத்மாவிற்கு தரிசனம் ஏற்படுகிறது, சிருஷ்டி சக்கரத்தின் அதாவது ஆத்மாவிற்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்து விட்டது, இதைத்தான் திரிநேத்ரி எனக் கூறப்படுகிறது. இப்போது நீங்கள் திரிநேத்ரியாக இருக்கின்றீர்கள், மற்ற அனைத்து மனிதர்களுக்கும் ஸ்தூலமான கண்கள் மட்டுமே இருக்கிறது. ஞானக்கண் வேறு யாருக்குமில்லை. திரிநேத்ரி ஆவதன் மூலம் திரிகாலதரிசி ஆகின்றீர்கள், ஏனென்றால் ஆத்மாவிற்கு ஞானம் கிடைக்கின்றதல்லவா! ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு இன்னொரு சரீரம் எடுக்கின்றது. சம்ஸ்காரம் ஆத்மாவில் இருக்கிறது. ஆத்மா அழியாதது பெயர், ரூபத்திலிருந்து விடுபட்ட வராகுங்கள் என தந்தை இப்பொழுது கூறுகின்றார். தன்னைத்தான் அசரீரி எனப் புரிந்து கொள்ளுங்கள். தேகம் எனப் புரிந்து கொள்ளாதீர்கள். நாம் அரைக் கல்பமாக பரமாத்மாவை நினைவு செய்து வந்தோம் எனவும் புரிந்துள்ளீர்கள். எப்பொழுது அதிகமாக துக்கம் ஏற்படுகிறதோ அப்பொழுது அதிகமாக நினைவு செய்கின்றனர், இப்பொழுது எவ்வளவு துக்கம் இருக்கின்றது! இதற்குமுன் இந்தளவு துக்கம் இல்லை. வெளிநாட்டிலிருந்து மற்றவர்கள் இங்கு வந்தபிறகு இராஜாக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுப் பிரிந்து விட்டனர். சத்யுகத்தில் ஒரே யொரு இராஜ்யம் மட்டுமே இருக்கும்.

 

இப்பொழுது நாம் சத்யுகத்திலிருந்து கலியுகம் முடியும் வரையிலான வரலாறு, பூகோளத்தை புரிந்திருக்கிறோம். சத்யுகம், திரேதாயுகத்தில் ஒரேயொரு இராஜ்யம் இருந்தது. அவ்வாறு ஒரேயொரு இராஜ பரம்பரை வேறு யாரும் இல்லை. கிறிஸ்தவர்களுக்கு இடையே பாருங்கள், எவ்வளவு பிரிவுகள் இருக்கிறது, அங்கே முழு உலகமும் ஒருவரின் கையில் இருந்தது. இவ்வாறு சத்யுகம், திரேதாயுகத்தில் மட்டுமே இருக்கும். இந்த எல்லையற்ற வரலாறு, பூகோளம் இப்பொழுது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. வேறு எந்த சத்சங்கத்திலும் வரலாறு, பூகோளம் என்ற வார்த்தையைக் கேட்க முடியாது. அங்கே இராமாயணம், மகாபாரதம் போன்ற விசயங்களை மட்டுமே கேட்பார்கள். இங்கு அம்மாதிரியான விசயங்கள் இல்லை. இங்கு முழு உலகின் வரலாறு, பூகோளம் இருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை நம்முடையவர் என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. தந்தைக்கு நன்றி, ஏனென்றால் அவர் மூலமாக முழு ஞானமும் கேட்கின்றோம். முதலாவது ஆத்மாக்களின் மரம், இரண்டாவது மனிதர்களின் மரமாகும். மனிதர்களின் மரத்தின் உயரத்தில் இருப்பது யார்? உயர்ந்ததிலும் உயர்ந்த பாட்டனார் பிரம்மா என்றே கூறமுடியும். பிரம்மா மிகவும் முக்கியமானவர் எனப் புரிந்தாலும் பிரம்மாவிற்கு பின்னால் எப்படிப்பட்ட வரலாறு, பூகோளம் இருக்கிறது என யாருக்கும் தெரியாது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை பரந்தாமத்தில் இருக்கின்றார் என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. பிறகு சூட்சுமலோகத்தைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும். மனிதர்களே ஃபரிஸ்தாவாக ஆகின்றனர், எனவே சூட்சுமவதனம் காட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் ஆத்மாக்கள் சரீரத்தோடு சூட்சும வதனம் செல்ல முடியாது, எப்படிச் செல்ல முடியும், அதனை மூன்றாவது கண்ணால் பார்ப்பதே திவ்ய திருஷ்டி மற்றும் தியானத்தினால் பார்ப்பதாகக் கூறப்படுகிறது. நீங்கள் தியானத்தின் மூலம் பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் பார்க்க முடியும். சங்கரர் கண்களை திறப்பதனால் விநாசம் ஏற்படுவதாகக் காட்டியுள்ளனர், இதன் மூலம் யாரும் புரிந்து கொள்ள முடியாது. விநாசம் என்பது நாடக அனுசாரப்படி தான் நடக்கும் என இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்து விடுவார்கள். மற்றபடி சங்கரர் என்ன செய்வார்? நாடக அனுசாரப்படி இவ்வாறு பெயர் வைத்துள்ளனர், எனவே புரிய வைக்கப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் என்று மூன்று பேர் இருக்கின்றனர். படைத்தலுக்காக பிரம்மா, பாலனைக்காக (வளர்ப்பு) விஷ்ணு, விநாசத்திற்காக சங்கரரை வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த நாடகம் நிச்சயக்கப்பட்டது. சங்கரருக்கான பங்கு எதுவுமில்லை. பிரம்மா மற்றும் விஷ்ணுவுக்கான பங்கு முழு கல்பத்திலும் இருக்கிறது. பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா எனப்படுகிறது. பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கும் 84 பிறவிகள் முடிகின்றது. சங்கரர் பிறப்பு, இறப்பிலிருந்து விடுபட்டவர். எனவே, சிவன் மற்றும் சங்கரரை ஒன்றாக்கி விட்டனர். நடைமுறையில் சிவனுக்கு அதிகமான பாகம் இருக்கிறது, அவர் படிப்பிக்கின்றார்.

 

பகவானை ஞானக்கடல் எனக் கூறப்படுகிறது. அவர் ஒருவேளை பிரேரணை மூலம் காரியம் செய்தால் உலக சக்கரத்தின் ஞானத்தை எப்படிக் கொடுக்க முடியும்? எனவே, தந்தை புரிய வைக்கின்றார், குழந்தைகளே, பிரேரணைக்கான விசயமில்லை. தந்தை நேரில் வரவேண்டியுள்ளது. குழந்தைகளே, என்னிடம் உலக சக்கரத்தின் ஞானம் இருக்கிறது என தந்தை கூறுகின்றார். எனக்கு இந்த பாகம் கிடைத்திருக்கிறது, எனவே என்னை ஞானக்கடல் எனக் கூறுகின்றனர். அவர் நமக்கு கிடைத்த பிறகு தான் ஞானம் என்பது என்னவென்று தெரியும், அவர் கிடைக்கவில்லையெனில் ஞானத்தின் அர்த்தத்தை எப்படி தெரிந்து கொள்ள முடியும்.? ஈஸ்வர் பிரேரணை செய்வதாக இதற்கு முன் நீங்களும் கூறி வந்தீர்கள். அவர் அனைத்தும் அறிந்தவர், நாம் என்ன பாவம் செய்கிறோமோ அதனை ஈஸ்வர் பார்க்கின்றார் எனக் கூறினோம். இந்த வேலையெல்லாம் நான் செய்வதில்லையென பாபா கூறுகின்றார். யார் எவ்வாறு கர்மம் செய்கின்றார்களோ அவர்கள் தானாகவே அதற்கான தண்டனை அனுபவிக்கின்றனர், நான் யாருக்கும் தண்டனை தருவதில்லை, பிரேரணை மூலமாகவும் தண்டனை தருவதில்லை. நான் பிரேரணை மூலம் செய்தால் நான் தண்டனை தருவது போலாகிவிடும். யாரையாவது அழிப்பதற்கு தூண்டுதல் கொடுப்பதும் தோஷமாகும். அவ்வாறு செய்ய வைப்பவரும் மாட்டிக் கொள்வார்கள். சங்கரர் பிரேரணை கொடுத்தால் அவரும் மாட்டிக் கொள்வார். நான் உங்களுக்கு சுகத்தைக் கொடுக்கக் கூடியவர் என தந்தை கூறுகின்றார். பாபா நீங்கள் வந்து எங்களது துக்கத்தைப் போக்குங்கள் என்று மகிமை செய்கின்றீர்கள், நான் ஒரு போதும் துக்கம் தருவதில்லை.

 

இப்பொழுது குழந்தைகள் நீங்கள் தந்தையின் எதிரில் அமர்ந்துள்ளீர்கள், எனவே எவ்வளவு மகிழச்சி இருக்க வேண்டும், இங்கு நேரடியாக அனுபவம் ஏற்படுகிறது, பாபா நமக்கு படிப்பிக்கின்றார். இதைத்தான் மேளா (திருவிழா) எனக் கூறப்படுகிறது. சென்டருக்கு நீங்கள் செல்வதனால் ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு எனக் கூறுவதில்லை. ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் மேளா இங்குதான் (மதுபன்) ஏற்படுகிறது. இங்கு மேளா நடைபெறுகிறது என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை குழந்தைகளுக்கு மத்தியில் வந்திருக்கிறார். ஆத்மாக்கள் அனைவரும் இங்கு உள்ளனர். தந்தை வந்திருக்கிறார் என ஆத்மாதான் நினைவு செய்கின்றது. இது மிகவும் நல்ல மேளாவாகும். தந்தை வந்து அனைவரையும் இராவண இராஜ்யத்திலிருந்து விடுதலை செய்கின்றார். இந்த மேளா மிகவும் நன்றாக இருக்கிறதல்லவா! இதன் மூலம் மனிதர்கள் பாரஸ்புத்தியாக ஆகின்றனர். அந்த மேளாவுக்குச் சென்று மனிதர்கள் அழுக்காகி விடுகின்றனர். செல்வத்தை வீணாக்குகின்றனர், ஆனாலும் எதுவும் கிடைப்பதில்லை. அதனை மாயாவி, அசுர மேளா எனக் கூறப்படுகிறது, இதுவே ஈஸ்வரிய மேளாவாகும். இரவு, பகலுக்கான வேறுபாடு இருக்கிறது. நீங்களும் அசுர மேளாவில் இருந்தீர்கள், இப்பொழுது ஈஸ்வரிய மேளாவில் இருக்கின்றீர்கள். பாபா வந்திருக்கிறார் என்பதை நீங்கள் மட்டுமே அறிந்துள்ளீர்கள். அனைவரும் அறிந்துவிட்டால் எவ்வளவு கூட்டம் இங்கு வந்து சேரும் எனத் தெரியாது! இவ்வளவு பேர் இருப்பதற்கு கட்டிடங்கள் எங்கிருந்து கொண்டு வர முடியும்? ஆஹா! பிரபுவே! உங்களுடைய லீலை! எனக் கடைசியில் பாடுவார்கள். எப்படிப்பட்ட லீலை? உலகத்தை மாற்றும் லீலை, இதுதான் மிகப் பெரிய லீலையாகும். பழைய உலகம் முடியும் முன்பாக புது உலகின் படைத்தல் ஏற்பட வேண்டும். எனவே, எப்பொழுதும் யாருக்குப் புரிய வைத்தாலும் முதலில் படைத்தல், விநாசம் பிறகு பாலனை (வளர்ப்பு) எனக் கூற வேண்டும். எப்பொழுது படைத்தல் முடிகின்றதோ அதன் பிறகு விநாசம் ஆரம்பமாகி, பிறகு பாலனை ஏற்படும். நாம் சுயதர்சன சக்கரதாரி பிராமணர் என்ற மகிழ்ச்சி குழந்தைகள் உங்களுக்கு இருக்கிறது. பிறகு நாம் சக்கரவர்த்தி இராஜாவாக ஆவோம், தேவதைகளின் இராஜ்யம் எங்கு சென்றது என யாருக்கும் தெரியாது. பெயர், அடையாளமே மறைந்து விட்டது. தேவதை என்பதற்குப் பதிலாக தன்னை ஹிந்து எனக் கூறுகின்றனர். ஹிந்துஸ்தானில் வசிப்பதனால் ஹிந்து என்கின்றனர். இலட்சுமி - நாரயணரை அவ்வாறு கூறமாட்டார்கள், அவர்களை தேவதைகள் எனக் கூறுவார்கள். ஆக இந்த மேளாவில் நீங்கள் நாடக அனுசாரப்படி வந்துள்ளீர்கள், இதுவும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. படிப்படியாக வளர்ச்சி பெறுகின்றது. உங்களுடைய பார்ட் இப்போது நடப்பது மீண்டும் கல்பத்திற்குப் பிறகு நடக்கும். இந்த காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. பிறகு இராவண இராஜ்யத்தில் அசுர பாலனை ஏற்படும். நீங்கள் இப்பொழுது ஈஸ்வரிய குழந்தைகள் பிறகு தெய்வீக குழந்தைகளாக, பிறகு சத்ரியராக ஆவீர்கள். நீங்கள் அபவித்திர குடும்ப சூழ்நிலையில் வந்தீர்கள், பிறகு பவித்திர குடும்ப சூழ்நிலை உடையவராக ஆவீர்கள். இவர்களும் கூட தெய்வீக குணங்கள் உடைய மனிதர்கள் அல்லவா! மற்றபடி நிறைய கைகள் காட்டியுள்ளனர், விஷ்ணு என்பவர் யார், என யாரும் சொல்ல முடியாது. மஹாலட்சுமிக்கும் பூஜை செய்கின்றனர். ஜெகதம்பாவிடமிருந்து ஒரு பொழுதும் செல்வம் கேட்பதில்லை. செல்வம் அதிகமாக கிடைத்தால் இலட்சுமிக்கு பூஜை செய்ததால் அவர் பொக்கிஷத்தை நிறைத்து விட்டார் எனக் கூறுகின்றனர். இங்கு நீங்கள் ஜெகதம்பாவிடமிருந்து பரமபிதா பரமாத்மா சிவன் மூலமாக பெறுகின்றீர்கள். குழந்தைகள் நீங்கள் பாப்தாதாவை விட அதிர்ஷ்டசாகள். ஜெகதம்பாவிற்கு எவ்வளவு மேளா நடக்கிறது, பாருங்கள்! பிரம்மாவிற்கு அந்தளவு இல்லை. பிரம்மாவை ஒரு இடத்தில் அமர்த்தி விட்டனர், அஜ்மீரில் பெரிய கோவில் இருக்கிறது. தேவிகளுக்கு நிறைய கோவில்கள் இருக்கின்றது, ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு நிறைய மகிமை இருக்கின்றது. நீங்கள் பாரதத்திற்கு சேவை செய்கின்றீர்கள். உங்களுக்கு அதிகமான பூஜையும் நடக்கின்றது. நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஜெகதம்பாவை ஒரு பொழுதும் சர்வ வியாபி எனக் கூற மாட்டார்கள்.

 

உங்களுக்கு மகிமை ஏற்படுகின்றது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரையும் சர்வ வியாபி எனக் கூறுவதில்லை. என்னைத்தான் அணு, அணுவிலும் இருப்பதாகக் கூறுகின்றனர், எவ்வளவு நிந்தனை செய்கின்றனர். உங்களுடைய மகிமையை நான் எவ்வளவு அதிகப்படுத்துகின்றேன் பாரத மாதாவுக்கு ஜெய் எனக் கூறுகின்றார்கள் அல்லவா! பாரத மாதா நீங்கள் தான் அல்லவா! தற்சமயம் இந்த பூமியை அவ்வாறு கூறமுடியாது. பூமி உட்பட அனைத்தும் தமோபிரதானமாக இருக்கிறது, சத்யுகத்தில் சதோபிரதானமாக இருக்கும். எனவே, தேவதைகள் பதீத உலகத்தில் கால் வைப்பதில்லை. பூமி சதோபிரதானமாகும் பொழுது அவர்கள் வருவார்கள். இப்பொழுது நீங்கள் சதோபிரதானமாக வேண்டும். ஸ்ரீமத்படி நடந்து தந்தையை நினைவு செய்வதனால் உயர்ந்த பதவி அடைவீர்கள். இதனை கவனத்தில் வைக்க வேண்டும். நினைவு செய்வதனால் பாவங்கள் அழியும். ஸ்ரீமத் கிடைத்து கொண்டிருக்கிறது. சத்யுகத்தில் உங்களுடைய ஆத்மா சுத்த தங்கம் போன்று ஆவதனால் சரீரமும் சுத்தமானதாகக் கிடைக்கும். தங்கத்தில் அழுக்குப் படிந்தால் அதனால் செய்யப்படும் ஆபரணங்களும் அவ்வாறுதான் இருக்கும். ஆத்மா பொய்யான நிலை அடைந்ததால் சரீரமும் பொய்யானதாகி விட்டது. அழுக்குப் படிந்தால் தங்கத்தின் மதிப்பும் குறைந்து விடும். உங்களுக்கும் இப்பொழுது மதிப்பு என்பதே இல்லை. முதலில் நீங்கள் உலகின் எஜமானராக 24 காரட் தங்கம் போன்று இருந்தீர்கள், இப்பொழுது 9 காரட் போன்று ஆகி விட்டீர்கள். இவ்வாறு தந்தை குழந்தைகளோடு உரையாடல் செய்கின்றார். குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துகின்றார், நீங்கள் இதனைக் கேட்டு மாறுகின்றீர்கள். மனிதனிலிருந்து தேவதை ஆகின்றீர்கள். அங்கு வைரம், இரத்தினங்கள். நிறைந்த மாளிகைகள் இருக்கும். சொர்க்கம் என்றால் வேறு என்ன சொல்வது? அங்கிருக்கும் பழச்சாறுகளை நீங்கள் பருகி வந்தீர்கள். அங்கே பழங்கள் மிகப் பெரியதாக இருக்கும், இங்கு அவ்வாறு கிடைக்காது. சூட்சும வதனத்தில் இவ்வாறான பொருட்கள் ஒன்றுமில்லை. நீங்கள் இப்பொழுது அங்கே சொர்க்கத்தில் செயல் முறையில் செல்வீர்கள். இதுதான் ஆத்மா மற்றும் பரமாத்மாவிற்கான மேளாவாகும், இதன் மூலம் நீங்கள் உன்னத நிலை அடைகின்றீர்கள்.

 

குழந்தைகள் நீங்கள் இங்கு வந்து மிகவும் ஓய்வாக இருக்கின்றீர்கள் வீடு, தொழில் பற்றிய எந்த கவலையும் இல்லை. இங்கு (மதுபன்) உங்களுக்கு நினைவு யாத்திரை செய்ய நல்ல வாய்ப்பு இருக்கின்றது. அங்கே இருக்கும் பொழுது வீடு, தொழில் பற்றிய நினைவு வரும். இங்கு அவ்வாறான விசயம் ஒன்றுமில்லை. இரவில் 2 மணிக்கு எழுந்து இங்கு அமருங்கள். சென்டருக்கு இந்த நேரத்திற்கு செல்ல முடியாது. இங்கு சகஜமாக இருக்கிறது. வேறு எந்த நினைவும் இல்லாமல் சிவபாபாவின் நினைவின் அமருங்கள். இங்கு உங்களுக்கு உதவியும் கிடைக்கிறது. சீக்கிரம் உறங்கி, சீக்கிரம் எழுந்து 3 மணி முதல் 5 மணி வரை அமருங்கள். பாபாவும் வருவார், குழந்தைகளும் மகிழ்ச்சியடைவர்கள். யோகத்தை கற்றுத் தருபவர் பாபா. இவரும் கூட (பிரம்மா) கற்றுக் கொள்கிறார், ஆக பாப்தாதா இருவரும் வருவார்கள். இங்கு யோகத்தில் அமர்வதற்கும், அங்கே செய்வதற்கும் வித்தியாசம் தெரியும். இங்கு வேறு எந்த நினைவும் ஏற்படாது, இதில் நிறைய இலாபம் இருக்கிறது. இங்கு நன்றாக யோகம் ஏற்படும் என பாபா அறிவுரை தருகின்றார். இப்பொழுது குழந்தைகள் எழுகின்றார்களா? எனப் பார்க்க வேண்டும். சிலருக்கு அதிகாலையில் எழக் கூடிய பழக்கம் இருக்கிறது. உங்களுடைய சந்நியாசம் 5 விகாரங்கள் மீதும், வைராக்கியம் முழு பழைய உலகத்தின் மீதும் இருக்கிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இப்பொழுது உலகம் மாறக் கூடிய லீலை (விளையாட்டு) நடக்கின்றது, எனவே, தன்னையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இனிமையானவராக, அன்பானவராக இருக்க வேண்டும்.

 

2. அதிகாலையில் எழுந்து ஒரு தந்தையின் நினைவில் அமர வேண்டும், அந்த நேரத்தில் வேறு எந்த நினைவும் வரக்கூடாது. பழைய உலகத்தில் எல்லையற்ற வைராக்கியமுடையராகி 5 விகாரங்களை சந்நியாசம் செய்ய வேண்டும்.

 

வரதானம்:

விலகிப்போவதற்கு பதிலாக ஒவ்வொரு வினாடியும் தந்தையினுடைய ஆதரவை அனுபவம் செய்யக்கூடிய நிச்சய புத்தியுடைய வெற்றியாளர் ஆகுக.

 

வெற்றியாளர் ஆகுக என்ற வரதானத்தை அடைந்த ஆத்மா ஒவ்வொரு வினாடியும் தன்னை ஆதரவைப் பெற்றிருப்பவராக அனுபவம் செய்வார்கள். அவர்களுடைய மனதில் எண்ணத்தளவில் கூட ஆதரவற்றவராக அல்லது தனித்திருப்பதாக அனுபவம் ஆகாது. ஒருபொழுதும் துயரம் அல்லது அல்பகால எல்லைக்குட்பட்ட வைராக்கியம் வராது. அவர்கள் ஒருபொழுதும் எந்தவொரு காரியத்திலிருந்தும், பிரச்சனையிலிருந்தும், மனிதரிடமிருந்தும் விலகிப்போகமாட்டார்கள். ஆனால், ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும் போதிலும், எதிர்கொள்ளும் போதிலும், சகயோகி ஆகியிருக்கும் போதிலும் எல்லையற்ற வைராக்கிய விருத்தியில் இருப்பார்கள்.

 

சுலோகன்:

ஒரு தந்தையின் துணையில் (கம்பெனி) இருங்கள் மற்றும் தந்தையை மட்டும் தன்னுடைய துணைவன் (கம்பேனியன்) ஆக்குங்கள்.

 

ஓம்சாந்தி