16-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! நீங்கள் எந்த ஒரு தேகதாரியின் பெயர் ரூபத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது. நீங்கள் அசரீரி ஆகி பாபாவை நினைத்தால் ஆயுள் அதிகரிக்கும், நோயற்றவராக ஆகிக் கொண்டே போகலாம்.

கேள்வி:
புத்திசாலி குழந்தைகளின் முக்கிய அடையாளங்கள் என்ன?

பதில்:
புத்திசாலி குழந்தைகள் என்றால் முதலில் அவர்கள் தனக்குள் தாரணை செய்து பிறகு மற்றவர்களையும் செய்ய வைப்பார்கள். மேகங்களை நிறைத்துக் கொண்டு சென்று மழை பொழிவார்கள். படிப்பின் நேரத்தில் கொட்டாவி விட மாட்டார்கள். யார் புத்துணர்வு பெற்று சென்று மழை பொழிகிறார்களோ அப்படிப்பட்டவர்களை தான் இங்கே அழைத்து வர வேண்டும் இது பிராமணிகளின் பொறுப்பாகும். 2. யார் நன்கு யோகத்தில் இருந்து வாயுமண்டலத்தை சக்திசாலியாக மாற்றுவதில் உதவி செய்கிறார்களோ அவர்கள் தான் இங்கே வர வேண்டும். விக்னங்களை ஏற்படுத்தக் கூடாது. இங்கே அக்கம் பக்கத்தில் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். எந்த ஒரு விதமான சத்தமும் வரக் கூடாது.

பாடல்:
ஓம் நமசிவாய....

ஓம் சாந்தி.
ஓம் சாந்தி என்பதன் பொருள் புரிய வைக்கப்பட்டிருக்கிறது அல்லவா! ஆத்மா மற்றும் பரமாத்மா சாந்த சொரூபமானவர்கள் என பாபா கூறுகின்றார். எப்படி பாபாவோ அப்படியே குழந்தைகள். எனவே, நீங்கள் சாந்த சொரூபமானவர்களே தான். வெளியிலிருந்து எந்த அமைதியும் கிடைக்காது என பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இது இராவண இராஜ்யம் அல்லவா! இப்போது இச்சமயம் நீங்கள் உங்களுடைய தந்தையை மட்டும் நினையுங் கள். நான் இவருக்குள் வீற்றிருக்கிறேன். உங்களுக்கு என்ன வழி கூறுகிறேனோ அதன்படி நடங்கள், பாபா யாருடைய பெயர் ரூபத்திலும் மாட்ட வைப்பதில்லை. இந்த பெயர் ரூபம் வெளித் தோற்றத்தினுடையதாகும். இந்த ரூபத்தில் நீங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஆனால் உலகமோ பெயர் ரூபத்தில் மாட்ட வைக் கின்றது. இவர்கள் அனைவருக்கும் பெயர் ரூபம் இருக்கிறது. இவர்களை நினைக்காதீர்கள் என பாபா கூறுகின்றார். தங்களுடைய பாபாவை நினையுங்கள். உங்களுடைய ஆயுள் நினை வினால் அதிகரிக்கும். நோயற்றவர்களாக மாறு வீர்கள். லஷ்மி நாராயணன் கூட உங்களைப் போன்றவர்களாக இருந்தனர். அலங்காரம் மட்டும் செய்யப்பட்டிருந்தார்கள். ஏதோ மேற் கூரை வரை உயரமாக அகலமாக இருப்பார்கள் என்று கிடையாது. மனிதர்கள் மனிதர்களே தான். எந்த ஒரு தேகதாரியையும் நினைக்காதீர்கள் என பாபா கூறுகின்றார். தேகத்தை மறக்க வேண்டும். தன்னை ஆத்மா என்று உணருங்கள். இந்த சரீரத்தை விட வேண்டும். மற்றொரு விஷயம் தவறு செய்யாதீர்கள், விகர்மங்களின் சுமை தலை மீது நிறைய இருக்கிறது. மிகப் பெரிய சுமை இருக்கிறது. ஒரு பாபாவின் நினைவு இல்லாமல் பாவ சுமை குறையாது. யார் அனைவரையும் விட உயர்ந்தவராக மாறுகிறாரோ அவரே மீண்டும் அனைவரையும் விட அழுக்காக மாறுகின்றார். இதில் அதிசயப் பட வேண்டிய தில்லை. தன்னை பார்த்துக் கொள்ளுங்கள். பாபாவை மிகவும் அதிகமாக நினைக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ பாபாவை நினையுங்கள். மிகவும் எளிதாகும். இவ்வளவு அன்பான பாபாவை உட்காரும் போதும், எழும் போதும் நினைக்க வேண்டும். யாரை பதீத பாவனா வாருங்கள் என அழைத்தீர்களோ அவர் மீது உறுதியான அன்பில்லை. இருப்பினும் தன்னுடைய கணவர் குழந்தைகள் மீது தான் அன்பிருக்கிறது. பதீத பாவனா வாருங்கள் என மட்டும் கூறினார்கள். குழந்தைகளே, நான் கல்ப கல்பமாக கல்பத்தின் சங்கமத்தில் தான் வருகிறேன் என்று பாபா கூறுகிறார். ருத்ர ஞான வேள்வி என கூட பாடப்பட்டிருக்கிறது. கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசன் ஆவார். பிறகு அவர் அந்த பெயர், ரூபம், தேசம் காலத்தைத் தவிர வேறு நேரத்தில் வர மாட்டார். நேரு அதே தோற்றத்தில் அதே பதவியில் மிண்டும் கல்பத்திற்கு பிறகு வருவார். அவ்வாறே ஸ்ரீ கிருஷ்ணரும் சத்யுகத்தில் வருவார். அவருடைய தோற்றம் மாறாது. இந்த வேள்வியின் பெயரே ருத்ர ஞான யாகம் ஆகும். இராஜஸ்வ அஸ்வ மேத யாகம். இராஜ்யத்திற்காக பலியாவது என்றால், அவர்களுடையவராக மாறுதல் ஆகும். பாபாவினுடையவர் ஆகி இருக்கிறீர்கள் என்றால் ஒருவரைத்தான் நினைக்க வேண்டும். எல்லைக்குட்பட்டதிலிருந்து விடுபட்டு எல்லைக்கப்பாற்பட்டவரிடம் இணைக்க வேண்டும். மிகப் பெரிய தந்தையாவார் பாபா வந்து என்ன கொடுக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். எல்லை யற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். வேறு யாரும் கொடுக்க முடியாது. மனிதர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும் வெட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். முன்பு இதெல்லாம் கிடையாது.

பாபா மீண்டும் வந்திருக்கிறார் என உங்களுக்குத் தெரியும். கல்ப கல்பமாக சங்கம யுகத்தில் புதிய உலகத்தை ஸ்தாபனை செய்வதற்காக நான் வருகிறேன் என கூறுகின்றார். புதிய உலகம், புதிய இராஜ்யம் வேண்டும் என கேட்கிறார்கள். அங்கே சுகம் செல்வம், அனைத்தும் இருக்கிறது. சண்டை போடுபவர்கள் யாரும் கிடையாது. சாஸ்திரங்களிலோ சத்யுகம் திரேதாவை கூட நரகமாக்கி விட்டார்கள். இது தவறல்லவா? அவர்கள் பொய் கூறுகின்றார்கள். பாபா உண்மையைக் கூறுகின்றார். நீங்கள் என்னை சத்தியமானவர் என்று கூறுகின்றீர்கள் அல்லவா? நான் வந்து சத்திய கதையைக் கூறுகின்றேன் என பாபா கூறு கின்றார். 5000 வருடங்களுக்கு முன்பு பாரதத்தில் யாருடைய இராஜ்யம் இருந்தது. உண்மையில் 5000 வருடத்திற்கு முன்பு முதலில் இந்த லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. என குழந்தைகள் அறிகிறீர்கள். கிறிஸ்துவிற்கு 3000 வருடத்திற்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது என கூறுகிறார்கள். கணக்கு நேராக இருக்கிறது. கல்பத்தின் ஆயுளை இவ்வளவு ஏன் வைத்திருக்கிறார்கள். அட, கணக்கிடுங்களேன். கிறிஸ்து வந்து இவ்வளவு காலம் ஆகிவிட்டது. யுகங்களே 4 ஆகிவிட்டது. அரை கல்பம் பகல் அரை கல்பம் இரவாக இருக்கிறது. புரிய வைக்கக் கூடியவர் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். குழந்தைகளே காமம் மிகப் பெரிய எதிரி என பாபா புரிய வைக்கிறார். பாரத வாசிகள் தான் தேவதைகளின் மகிமைகளை சர்வ குணங்களும் நிறைந்தவர், 16 கலை களிலும் நிரம்பியவர், சம்பூரண நிர்விகாரி..... எனப் பாடுகின்றனர். பிறகு 16108 இராணிகள் எங்கிருந்து வந்தனர். தர்ம சாஸ்திரம் எதுவும் இல்லை என உங்களுக்குத் தெரியும் தர்ம ஸ்தாபகர் எதை கூறினாரோ அதற்கே தர்ம சாஸ்திரம் என கூறப்படுகிறது. தர்ம ஸ்தாபகரின் பெயரினால் சாஸ்திரம் உருவாக்கப்பட்டது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புது உலகிற்குச் செல் கிறீர்கள். இவை அனைத்தும் பழையதாக தமோபிரதானமாக இருக்கிறது. பழைய பொருட் களிலிருந்து புத்தி யோகத்தை விலக்குங்கள். என்னை மட்டும் நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழியும் என்று பாபா கூறுகிறார். தவறு செய்தீர்கள் என்றால் இவர்களுடைய அதிர்ஷ்டம் இப்படித் தான் இருக்கிறது என பாபா புரிந்துக் கொள்வார். மிகவும் எளிதான வியம் ஆகும். இதை நீங்கள் புரிந்துக் கொள்ள மாட்டீர்களா? மோகத்தின் கயிற்றை அனைத்து பக்கங்களிலிருந்தும் நீக்கி ஒரு தந்தையை நினையுங்கள். பிறகு 21 பிறவிகளுக்கு உங்களுக்கு எந்த துக்கமும் கிடையாது. இவ்வளவு கூனிகளாகவும் நீங்கள் ஆக மாட்டீர்கள். அங்கே ஆயுள் நிறைவடைந்தது, ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுக்கலாம் என புரிந்துக் கொள்கிறார்கள். பாம்பின் எடுத்துக்காட்டு இருக்கிறது, விலங்குகளின் எடுத்துக் காட்டு கொடுக்கிறார்கள். நிச்சயமாக அவைகளுக்கு தெரிந்திருக்கும். இச்சமயம் மனிதர்களை விட அதிகமாக அறிவு விலங்குகளுக்கு இருக்கிறது. குளவியின் எடுத்துக் காட்டும் இங்கே தான், புழுக்களை எப்படி எடுத்துச் செல்கின்றது. இப்போது உங்களுடைய சுகத்தின் நாட்கள் வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தூய்மையாக இருக்கின்றோம். ஆகவே மிகவும் அடி வாங்க வேண்டியிருக்கின்றது. என்று பெண் குழந்தைகள் கூறுகின்றார்கள். ஆம், குழந்தைகளே சிறிதாவது பொறுத்துக் கொள்ள வேண்டும். அபலைகள் மீது கொடுமைகள் எனப் பாடப்பட்டிருக்கிறது. கொடுமை இழைத்தால் தான் பாவத்தின் குடம் நிரம்பும்.

ருத்ர ஞான வேள்வியில் தடைகள் நிறைய ஏற்படும். அபலைகள் மீது கொடுமை செய்வார்கள். இது சாஸ்திரங்களில் கூட சொல்லப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகள் பாபா இன்றிலிருந்து 5000 வருடத்திற்கு முன்பு தங்களை சந்தித்தோம், சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைந்தோம், மகாராணி ஆனோம் என்று கூறுகிறார்கள். ஆம், குழந்தாய் இவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என பாபா புரிய வைக்கிறார். சிவபாபாவை நினைக்க வேண்டும் இவரை அல்ல. இவர் குரு அல்ல. இவருடைய காதும் கேட்கின்றது. அவர் உங்களுடைய தந்தையாகவும், ஆசிரியராகவும், சத்குருவாகவும் இருக்கின்றார். இவர் மூலமாக கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு கற்பிக்கின்றார். அனைவருக்கும் தந்தை அவர் ஒருவரே. நமக்கும் கற்பிக்கக் கூடியவர் அவரே. எனவே, எல்லையற்ற தந்தையை நினைக்க வேண்டும். விஷ்ணுவை அல்லது பிரம்மாவை கணவருக்கெல்லாம் கணவர் என கூற மாட்டார்கள். சிவபாபாவைத் தான் கணவருக்கெல்லாம் கணவர் என கூறப்படுகிறது என்றால் ஏன் அவரை பிடித்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் முதலில் அனைவரும் மூல வதனத்திற்கு உங்களுடைய அப்பா வீட்டிற்குச் செல்வீர்கள். பிறகு மாமியார் வீட்டிற்கு வர வேண்டும். முதலில் சிவபாபாவிடம் வணக்கம் செலுத்த வேண்டும். பிறகு சத்யுகத்தில் வருவீர்கள். எவ்வளவு எளிதான நயா பைசாவின் விஷயம்.

பாபா எல்லா பக்கங்களிலும் குழந்தைகளைப் பார்க்கிறார். யாரும் எங்கேயும் தூங்க வில்லையா, தூங்கினார்கள், கொட்டாவி விட்டார்கள், புத்தியோகம் வெளியே சென்றது, என்றால் வாயுமண்டலத்தை கெடுத்து விடுகிறார்கள். ஏனென்றால் புத்தியோகம் வெளியே திரிகிறதல்லவா! பொழியக்கூடிய மேகங்களை அழைத்து வாருங்கள் என பாபா எப்போதும் கூறுகின்றார். மற்றவர்கள் வந்து என்ன செய்வார்கள். அழைத்து வரக்கூடியவர்களுக்கு மேலும் பொறுப்பு இருக்கிறது. எந்த பிராமணிகள் புத்திசாலிகளாக இருக்கிறார்களோ அவர்கள் நிரப்பிக்கொண்டு சென்று மழை பொழிவார்கள். அப்படிப்பட்டவர்களை அழைத்து வர வேண்டும். மற்றவர்களை அழைத்து வருவதால் என்ன நன்மை? கேட்டு, தாரணை முதலில் தான் செய்து பிறரை தாரணை செய்விக்க வேண்டும். கடின உழைப்பும் இருக்க வேண்டும். காலன் (எமன்) விலகிப்போகும் அளவிற்கு இந்த பண்டாராவில் இருந்து சாப்பிடுகிறோம். யார் யோகத்தில் இருக்கிறார்களோ அவர்கள் தான் இங்கு வரவேண்டும். இல்லை என்றால் வாயுமண்டலத்தைக் கெடுத்து விடுவார்கள். இச்சமயம் இன்னும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். புகைப்படம் போன்றவைகளை எடுக்க வேண்டிய தில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாபா நினைவில் இருந்து யோக தானம் அளிக்க வேண்டும். அக்கம் பக்கம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். மருத்துவமனை எப்பொழுதும் வெளியே ஏகாந்தத்தில் (தனியாக) இருக்கின்றது. அங்கே சத்தம் இருக்கக் கூடாது. நோயாளிக்கு அமைதி வேண்டும். உங்களுக்கு டைரக்ஷன் கிடைக்கின்றது என்றால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அப்பாவை நினைக்க வேண்டும். இதுவே உண்மையான அமைதியாகும். மற்றது செயற்கையானது. இரண்டு நிமிடம் ஆழ்ந்த அமைதி என்று அவர்கள் கூறுகிறார்கள் அல்லவா? ஆனால் அந்த இரண்டு நிமிடத்தில் புத்தி எங்கெங்கு செல்கிறது என்று தெரியவில்லை. ஒருவருக்கு கூட உண்மையான அமைதி இல்லை. நீங்கள் விடுபட்டு விடுகிறீர்கள். நாம் ஆத்மா. இதுவே நம்முடைய சுய தர்மத்தில் இருப்பது ஆகும். மற்றபடி தூங்கி வழிந்து கொண்டு இருப்பது உண்மையான அமைதியாகாது. மூன்று நிமிடம் அமைதியாக அசரீரி ஆகுக என்று பாபா கூறுகிறார். இவ்வாறு கூறுவதற்கு வேறு யாருக்கும் சக்தி இல்லை. செல்லமான குழந்தைகளே என்னை நினைவு செய்தால், பல பிறவிகளின் பாவங்கள் விலகிப் போகும் என்பது பாபாவினுடைய மகாவாக்கியம் ஆகும். இல்லை என்றால் பதவி குறைந்து போகும். மேலும் தண்டனைகள் அடைய வேண்டி இருக்கும். சிவபாபாவினுடைய டைரக்ஷன் படி நடப்பதில் தான் நன்மை இருக் கின்றது. எப்போதும் பாபாவை நினைக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ மிகவும் இனிமை யான தந்தையை நினைக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கு மிகவும் கவனம் வைக்க வேண்டும். நிறைய மாணவர்கள் தேர்ச்சி அடைய வில்லை என்றால் ஆசிரியருக்கு வளர்ச்சி இருக்காது. இங்கே இரக்கம் அல்லது ஆசீர்வாதத் தின் விஷயம் எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் தன்மீது கருணை மற்றும் ஆசீர்வாதம் காண்பித்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் மீது கருணை காட்டுகிறார்கள் என்றால் கடினமாக உழைக்கிறார்கள். இதுவும் படிப்பு ஆகும். எவ்வளவு யோகத்தில் இருக்கிறார்களோ அவ்வளவு விகர்மங்களை வெற்றி அடைகிறார்கள். உயர்ந்த பதவி பெறுவார்கள். நினைவினால் எப்போதும் நோயற்றவர் ஆகலாம். மன்மனாபவ. இப்போது இவ்வாறு கிருஷ்ணர் ஒரு போதும் கூற முடியாது. இந்த நிராகார தந்தை விதேகி ஆகுங்கள் என்று கூறுகின்றார். இது ஈஸ்வரிய எல்லையற்ற பரிவாரம் ஆகும். தாய், தந்தை, சகோதரன், சகோதரி அவ்வளவு தான். வேறு எந்த சம்மந்தமும் இல்லை. மற்ற அனைத்து உறவுகளிலும் சித்தப்பா மாமா இருக்கிறார்கள். இங்கேயோ சகோதரன் சகோதரி உறவு மட்டுமே. சங்கமத்தைத் தவிர வேறு எப்போதும் இவ்வாறு இல்லை. அப்போது தான் நாம் தாய் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைகிறோம். அளவற்ற சுகத்தை அடைகிறோம் அல்லவா? இராவண இராஜ்யத்தில் அளவற்ற துக்கம் இருக்கின்றது. இராம இராஜ்யத்தில் அளவற்ற சுகம். அதற்காகத்தான் நீங்கள் அளவற்ற முயற்சி செய்கிறீர்கள். யார் எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அது கல்ப கல்பத்திற்கும் உறுதி ஆகிறது. பிராப்தி நிறைய இருக்கிறது. கோடீஸ்வரன், பதமாபதி போன்றோரின் செல்வமும் மண்ணோடு மண்ணாகிப் போகிறது. சிறிது சண்டை நடக்கட்டும், பிறகு என்ன நடக்கிறது பாருங்கள். மற்றபடி குழந்தைகளாகிய உங்களின் கதையாகும். உண்மையான கதையைக் கேட்டு குழந்தைகளாகிய நீங்கள் உண்மை யான கண்டத்திற்கு அதிபதியாகிறீர்கள். இதில் உறுதியான நிச்சயம் இருக்கிறதல்லவா? நிச்சயம் இல்லாமல் இங்கே யாரும் வரமுடியாது. குழந்தைகளாகிய நீங்கள் எந்த தவறும் செய்யக் கூடாது. பாபாவிடமிருந்து மம்மா பாபா அடைந்து கொண்டிருந்ததைப் போன்று முழு ஆஸ்தி அடைய வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சரீரத்தில் இருந்து விடுபட்டு சுயதர்மத்தில் நிலைத்திருக்க பயற்சி செய்ய வேண்டும். எவ்வளவு முடியுமோ மிகவும் இனிமையான தந்தையை நினைக்க வேண்டும். மோகத்தின் கயிற்றை அனைத்து பக்கங்களிலிருந்தும் விலக்க வேண்டும்.

2. படிப்பின் மீது முழு கவனம் கொடுத்து தன் மீது தானே இரக்கம் அல்லது ஆசீர்வாதம் செய்து கொள்ள வேண்டும். புத்தியோகத்தை எல்லைக்குள் இருந்து துண்டித்து எல்லைக் கப்பால் இணைக்க வேண்டும். பாபாவினுடையவராகி, பாபாவிற்கு முழுமையாக அர்ப்பணம் ஆக வேண்டும்.

வரதானம்:
சதா உண்மையான தொடர்பின் மூலம் பலவீனங்களை சமாப்தி செய்யக்கூடிய சகஜயோகி, சகஜ ஞானம் நிறைந்தவர் ஆகுக.

உண்மையான தொடர்பிலிருந்து ஒதுங்கி மற்ற தொடர்பில் செல்லும் பொழுது தான் ஏதாவதொரு பலவீனம் வருகிறது. ஆகையால் பக்தியில் எப்பொழுதுமே உண்மையான தொடர்பில் (சத்சங்கத்தில்) இருங்கள் என்று சொல்கிறார்கள். சத்சங்கம் என்றால் சதா உண்மையான பாபாவுடைய தொடர்பில் இருப்பதாகும். உங்கள் அனைவருக்கும் உண்மையான பாபாவுடைய தொடர்பில் இருப்பது மிக எளிதானது. ஏனெனில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே சதா சத்சங்கத்தில் இருந்து பலவீனங்களை முடித்து விடக் கூடிய சகஜயோகி, சகஜ ஞானம் நிறைந்தவர் ஆகுங்கள்.

சுலோகன்:
சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் பாராட்டுதலை கேட்க வேண்டுமென்ற ஆசையை தியாகம் செய்யுங்கள்.

மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பற்ற மகாவாக்கியங்கள் -

முக்தி மற்றும் ஜீவன் முக்தியின் நிலை.

முக்தி மற்றும் ஜீவன் முக்தி இரண்டு விதமான நிலைகள் தனி தனியானதாகும். முக்தி என்ற வார்த்தையை சொல்கிறீர்கள் என்றால் முக்தியின் பொருள் ஆத்மா உடலின் நடிப் பிலிருந்து விடுபட்டு விட்டது, ஆத்மாவிற்கு இந்த உடலோடு இந்த உலகத்தில் நடிப்பு இல்லை. ஆத்மா விற்கு மனித உடலோடு எந்தவிதமான நடிப்பும் இல்லையென்றால் ஆத்மா நிராக்காரி உலகத்தில் இருக்கிறது, சுகம் துக்கத்திலிருந்து விடுப்பட்ட உலகத்திலில் இருக் கிறது, இதைத் தான் முக்தி நிலை என்று சொல்லப்படுகிறது. இதை யாரும் முக்தியின் பதவி என்று சொல்ல முடியாது. மேலும் எந்த ஆத்மா கர்மபந்தனத்திலிருந்து விடுப்பட்டு இருக்கிறது அதாவது உடலின் நடிப்பு இருந்தாலும் கூட அது கர்மபந்தனத்திலிருந்து விடுப்பட்டிருக்கிறதோ அதை ஜீவன் முக்தியின் பதவி என்று சொல்கிறோம், இது தான் அனைத்தையும் விட மிக உயர்ந்த நிலையாகும். அது நம்முடைய தேவதை நிலையை அடைவதாகும், இதே பிறவியில் முயற்சி செய்வதினால் இந்த சத்யுக தேவதை பதவி கிடைக்கிறது. அதுவே நம்முடைய உயர்ந்த பதவி ஆகும், ஆனால் ஆத்மாவிற்கு நடிப்பே இல்லாத பொழுது அதை எப்படி பதவி என்று சொல்ல முடியும்? ஆத்மாவிற்கு உலக நாடகத்தில் நடிப்பு இல்லாத பொழுது இருக்கும் முக்தி நிலை என்பது பதவி என்று சொல்ல முடியாது. இப்பொழுது இத்தனை மனித பிரிவினைகள் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் சத்யுகத்திற்கு வருவதில்லை, ஏனெனில் அங்கு மனித பிரிவினைகள் கிடையாது, எனவே யார் எந்தளவு பிரபுவிடம் நினைவை ஈடுபடுத்தி கர்மாதீத் நிலை அடைகிறார்களோ, அவர்கள் சத்யுகத்தில் ஜீவன் முக்தி நிலையடைந்த தேவி தேவதா பதவியை அடைகிறார்கள். மற்ற யாரெல்லாம் தர்மராஜரின் தண்டனைகளை அடைந்து கர்மபந்தனத்திலிருந்து விடுபட்டு, தூய்மையாகி முக்தி தாமத்திற்கு செல்கிறார்களோ, அவர்கள் முக்தியில் இருக்கிறார்கள், ஆனால் முக்திதாமத்தில் எந்த பதவியும் இல்லை. அந்த நிலை என்பது முயற்சி ஏதுமின்றி தானாகவே தனக்கேற்ற நேரத்தில் கிடைத்துவிடும். நாங்கள் பிறப்பு - இறப்பு சக்கரத்தில் வரக்கூடாது என்ற மனிதர்களின் விருப்பம் துவாபர் யுகத்திலிருந்து கலியுக இறுதிவரை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அந்த ஆசை இப்பொழுது நிறைவடை கிறது. அதாவது அனைத்து ஆத்மாக்களும் முக்தி தாமத்தை கடந்து தான் செல்ல வேண்டும். நல்லது.