16-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் பவித்திரமாக இருப்பதற்கான விரதம் மேற்கொள்ள வேண்டும். மற்றப்படி நீர் அருந்தாமல், உண்ணாவிரதம் இருப்பது முதலானவற்றைச் செய்வதற்கான தேவை இல்லை. பவித்திரமாவீர்களனால் உலகத்தின் மாலிக் (எஜமானன்) ஆகிவிடுவீர்கள்.

கேள்வி:
இச்சமயம் உலகத்தில் அனைவரிலும் நல்லவர் யார்? எப்படி?

பதில்:
இவ்வுலகில் இச்சமயம் அனைவரை விடவும் நல்லவர்கள் ஏழைகள். ஏனென்றால் பாபா வந்து ஏழைகளைத்தான் சந்திக்கிறார். பணக்காரர்களோ, இந்த ஞானத்தைக் கேட்கவே மாட்டார்கள். பாபா ஏழைப் பங்காளராகவே உள்ளார். ஏழைகளைத் தான் பணக்காரர்களாக ஆக்குகிறார்.

பாடல்:
இன்றைய மனிதனுக்கு என்னவாயிற்று?

ஓம் சாந்தி.
குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். அது தெய்வீக அன்பு - அதை ஈஸ்வரிய அன்பு எனச் சொல்லலாம். இப்போது ஈஸ்வரன் அன்பைக் கற்றுத் தருகிறார், அதாவது எப்படி ஒருவர் மற்றவர் மீது அன்பு செலுத்துவது? உண்மையான கண்டமாக இருந்த போது பாரதத்தில் எவ்வளவு உண்மையான அன்பு இருந்தது! உண்மையான கண்டமாக யார் ஆக்கியிருந்தார்? சத்குரு, சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர். இப்போது நீங்கள் யாருக்கு முன்னிலையில் அமர்ந் திருக்கிறீர்கள்? சத்தியமான பாபா, அதாவது உண்மையான சுகத்தைத் தருபவர். உண்மையான அன்பைக் கற்றுத் தருபவர். உண்மையான ஞானம் தருபவர் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். பொய்யான கண்டத்திலோ அனைத்தும் பொய். பாடவும் படுகிறது, சத்தியமான சேர்க்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உண்மையோ ஒன்று தான். உண்மையல்லாதவை அநேகம் உள்ளன. எந்தத் தந்தை பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறாரோ, எல்லையற்ற ஆஸ்தி தருகிறாரோ, அந்த எல்லையற்ற தந்தையின் முன்னிலையில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். அவர் மீண்டும் நமக்கு எல்லையற்ற ராஜ்யத்தைத் தருவதற்காக வந்துள்ளார். சத்தியமான பாபா ஒருவர் தான். அவருடைய சங்கத்தினால் (தொடர்பினால்) நீங்கள் உலகத்தின் மாலிக் ஆகிறீர்கள். பக்தியில் முதல்-முதலில் ஒரே ஒரு சிவபாபாவின் உண்மையிலும் உண்மையான பக்தி மட்டுமே இருந்தது. அதற்குத்தான் உண்மையான கலப்படமற்ற பக்தி எனச் சொல்லப்படுகின்றது. பாபா அமர்ந்து குழந்தை களாகிய உங்களுக்கு சக்கரம் முழுவதின் ஞானத்தைச் சொல்கிறார். முதன்-முதலில் ஒரு சிவபாபாவின் பக்தி இருந்தது. அதைக் கலப்படமற்ற பக்தி என்று சொன்னார்கள். பிறகு இப்போது உங்களுக்கு ஞானமும் உண்மையானதையே சொல்கிறார். பொய்யான பக்தியிலிருந்து விடுவிக்கிறார். உண்மையான பாபாவின் மூலம் நீங்கள் ஞானத்தைக் கேட்டுக் கொண்டிருக் கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், இந்த சத்தியத்தின் சங்கம் (தொடர்பு) நம்மை சொர்க்கத்திற்குக் கொண்டு சென்று விடும். உண்மையான ஞானத்தினால் தான் படகு அக்கரை சேரும். யார் பொய்யான ஞானத்தைச் சொல்கின்றனரோ, அதனால் படகு மூழ்கி விடும். அதற்கு அஞ்ஞானம் என்று சொல்லப் படுகின்றது. உண்மையான ஞானத்தை பாபா மட்டுமே சொல்கிறார். குழந்தை களாகிய நீங்கள் முழுச் சக்கரத்தின் சரித்திர-பூகோளத்தை அறிந்து கொண்டு விட்டீர்கள். ஆக, இந்த உண்மையிலும் உண்மையான பாபா, உண்மையிலும் உண்மையான ஆசிரியராக உள்ளார். சத்யுகத்திலும் கூட உண்மையான தந்தை என்பார்கள். ஏனென்றால் அங்கே பொய்யே இருப்பதில்லை. ஈஸ்வரனை சர்வவியாபி என்று அங்கே சொல்வதில்லை. எப்போது பொய்யை உருவாக்குகிற 5 விகாரங்கள் வருகின்றனவோ, அப்போது தான் பொய் ஆரம்பமாகின்றது.

நாம் எல்லையற்ற நிராகார் தந்தையின் முன்னிலையில் அமர்ந்துள்ளோம் என்று இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது, நாம் அந்த பாபாவின் முன்னிலை யில் அமர்ந்துள்ளோம் அவரை நான் நினைவு செய்கிறேன். அடிக்கடி நினைவு செய்கிறேன் என்று. இந்த பாபாவும் சொல்கிறார். பாபாவின் குழந்தை இல்லையா? நீங்களோ இந்த மனிதரை (பிரம்மா) விட்டு, அவரை (சிவாபாபா) நினைவு செய்ய வேண்டும். எனக்கோ ஒரு பாபா மட்டுமே. நீங்கள் கொஞ்சம் சிக்கிக் கொள்ள வேண்டி இருக்கும். நான் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? உங்கள் பார்வை இவர் மீது செல்கிறது. எனது பார்வை யார் மீது செல்லும்? எனக்கோ நேரடியாக சிவபாபா வோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது. நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டியுள்ளது இவரது (பிரம்மா) நினைவு வராதபடி, இந்த சாகாரைத் தாண்டிச் செல்ல வேண்டி உள்ளது. எனக்கோ ஒரு சிவபாபா மட்டுமே. உங்கள் முன் இருவர் அமர்ந்துள்ளனர். எனக்கு முன்போ ஒருவர் மட்டுமே. நான் அவருடைய குழந்தை. பிறகும் கூட நிரந்தர நினைவு செய்ய முடிவதில்லை. ஏனென்றால் பாபா சொல்கிறார் - நீங்கள் கர்மயோகிகள். உங்கள் புத்தியில் முழு சக்கரமும் சுற்றிக் கொண்டி ருக்கிறது. சத்யுக-திரேதாவில் இத்தனை ஜென்மங்கள் கடந்து வந்துள்ளோம். பிறகு இத்தனை ஜென்மங்கள் எடுத்து-எடுத்து 84 ஜென்மங்களின் சக்கரத்தை முடித்து விட்டோம். கணக்கு உள்ளது இல்லையா? இப்போது கலியுகத்தின் கடைசி வந்து விட்டது. பிறகு அடுத்து புதிய சக்கரம் சுற்றும். சரித்திர-பூகோளம் மீண்டும் ரிப்பீட் ஆகும். சத்யுகத்தில் யார் இருந்தனர்? எங்கே ராஜ்யம் செய்தனர்? இதையும் நீங்கள் அறிவீர்கள் - முழு உலகத்தையும் தேவதைகள் தான் ராஜ்யம் செய்தனர். இப்போதோ சொல்வார்கள், நீங்கள் எங்கள் எல்லைக்குள் வராதீர்கள், எங்கள் தண்ணீரை எடுக்காதீர்கள். பாபாவோ எல்லை யற்ற மாலிக். பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள். இந்த (பிரம்மா) பாபா சொல்வதில்லை. இவர் மூலமாக நிராகார் பாபா ஆத்மாக்களாகிய உங்களுக்குச் சொல்கிறார், நீங்கள் என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் ஒரு போதும் நோயாளியாக, வியாதி யுள்ளவராக ஆக மாட்டீர்கள். இங்கேயோ தந்தை குழந்தைகளைப் பெற்றெடுத்து, வளர்த்து ஆளாக்குகிறார். பிறகு திடீரென்று அவர்கள் இறந்து போகின்றனர் (சரீரத்தை விட்டுவிடு கின்றனர்) என்றால் அனைவரும் எவ்வளவு துக்கமடை கின்றனர்! பிறகோ சரீர நிர்வாகத்திற்காகத் தானே வேலை செய்ய நேரிடும். இதுவோ துக்கதாமம். பாபாவோ உங்களுக்கு எந்த ஒரு துக்கமும் தருவதில்லை. என்னை நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகி விடும் என்று மட்டுமே சொல்கிறார். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங் கள். குழந்தைக்குத் தெரியும், தந்தையிடமிருந்து நமக்கு ஆஸ்தி கிடைக்கும் என்று. இந்த பாபாவும் சொல்கிறார். அப்படி இருந்தாலும் கூட அவசியமாகக் கற்றுக் கொள்கின்றனர். ஆஸ்திக்காக சும்மா அமர்ந்து விட மாட்டார்கள். மற்றப்படி யார் ராஜ்யத்தில் ஜென்மம் எடுக்கின்றனரோ, அவர்கள் மட்டும் ஆஸ்திக்காக அமர்ந்து விடுகின்றனர். அதிக தான-புண்ணியம் செய்வதனால் ராஜாவின் வீட்டில் ஜென்மம் கிடைக்கின்றது. இராஜ்யத்தைத் தான் பராமரிக்க வேண்டும். அந்த ராஜாக்களோ தூய்மையற்றவர்கள் இப்போது நீங்கள் பாவன ராஜாக்களிடம் ஜென்மம் எடுக்க வேண்டும். இலட்சுமி, நாராயணரின் வீட்டில் சூரியவம்ச இராஜ்யத்தில், ஜென்மம் எடுக்க வேண்டும். அங்கே எந்த விதமான துக்கமும் இருக்காது. அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுபட்டு விடு கிறீர்கள். பாபா வந்து தைரியம் கொடுக்கிறார். இப்போது இது கடைசிப் பிறவி. உங்களுக்கோ பிறவி பிறவி களாக இந்த நிலை இருந்து வந்துள்ளது. குழந்தைகள் துக்கதாமத்தில் கீழே இறங்கியே வந்துள்ளனர். சுகதாமம் எங்கிருந்து வரும்? இங்கோ துக்கம் அதிகம். சுகம் அல்பகாலத் தினுடையது. பெரிய-பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் துக்கத்தின் மேல் துக்கம் தான். இச்சமயம் யார் ஏழையாக உள்ளனரோ, அவர்கள் அனை வரைக் காட்டிலும் நல்லவர்கள். பாபா வந்திருக்கிறார், ஏழைகளைப் பணக்காரர் ஆக்குவதற் காக. தானமும் ஏழைகளுக்குத் தான் செய்ய வேண்டி யுள்ளது. அனைவரும் சாதாரணமாக உள்ளனர் இல்லையா? மற்றபடி லட்சாதி பதிகள் யார் உள்ளனரோ, யாரிடம் கோடிக்கணக்கான ரூபாய்கள் உள்ளதோ, அவர்களுக்கு எவ்வளவு தான் புரிய வைத்தாலும் தங்களின் பணத்தின் கௌரவம் இருக்கும். பாபா சொல்கிறார், அப்படிப்பட்டவர்களுக்கு ஏன் செல்வம் கொடுக்க வேண்டும்? நானோ ஏழைப்பங்காளனாகவே இருக்கிறேன். இப்படிப்பட்ட கன்னியர்கள், தாய்மார்கள் தான் ஞானத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். கன்னியர் களுக்கு எவ்வளவு மதிப்பு உள்ளது! அனைவரும் அவர்களைப் பூஜிக்கின்றனர். பிறகு திருமணம் செய்து கொண்டால் பூஜாரி ஆகி விடுகின்றனர். நாம் அரைக்கல்பம் பூஜைக்குரியவராக, பிறகு அரைக்கல்பம் பூஜாரியாக ஆகியிருக்கிறோம். கன்யாக்களோ இந்த ஜென்மத்திலேயே பூஜாரி ஆகி விடுகின்றனர். கணவரைப் பரமேஸ்வர் என நினைத்துத் தலைவணங்கிக் கொண்டே இருக்கின்றனர். அவர்கள் முன் தாசி (வேலைக்காரி) ஆகி இருக்கின்றனர். பாபா வந்து அடிமைத் தனத்தில் இருந்து விடுவிக்கிறார். குழந்தைகள் விருத்தி அடைந்து கொண்டே செல்கின்றனர். நீங்கள் புரிய வைக்க முடியும், நாம் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள், சிவபாபாவின் பேரக் குழந்தைகள். அவருடைய ஆஸ்திக்கு நாம் உரிமை உள்ளவர்கள். அவருடைய ஆஸ்தி எல்லையற்றது. உலகத்தின் மாலிக் ஆக்குகிறார். அவருடைய கட்டளை, குழந்தைகளே, நீங்கள் என்னை மட்டும் நினைவு செய்வீர்களானால் நான் சத்தியத்தைச் சொல்கிறேன், நீங்கள் பெண்ணிலிருந்து லட்சுமி ஆகி விடுவீர்கள். இதில் எந்த ஒரு விரதம், நியமம் (நேர்த்திக்கடன்), உண்ணா நோன்பு முதலிய எதையும் மேற்கொள்ளத் தேவையில்லை. முன்பு நீங்கள் அதிக விரதம், நியமம் எல்லாம் மேற் கொண்டீர்கள். 7 நாள் உணவு எதையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தீர்கள். விரதம், நியமம் வைப்பதால் கிருஷ்ணபுரிக்குச் சென்று விடுவோம் என நினைத்துக் கொண்டி ருந்தனர். உண்மையில், உண்மையான விரதம் பவித்திரமாக இருப்பதாகும். அவர்கள் பிடிவாதமாக சட்டென்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஓர் உண்ணாநோன்பு போன்ற எதையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. நாம் அனைவரையும் பாவனமாக்குவோம். உங்களுடைய தொழிலே இது தான். மற்றப்படி நீர் அருந்தாமல், உண்ணாமல் இருப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை. நீங்கள் பவித்திர தாவின் உறுதிமொழி மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மாதர்களுக்கு கணவர் இறந்து போவதால் அதிக துக்கம் ஏற்படுகின்றது. இவர்களுக்குப் போய் புரிய வைக்க வேண்டும் - பதிகளுக்கெல்லாம் மேலான பதி (கணவன்) இப்போது வந்திருக்கிறார். அவர் சொல்கிறார் - என்னை நினைவு செய்தால் போதும், நீங்கள் சொர்க்கத்திற்கு மாலிக் ஆகி விடுவீர்கள். அவரோ பதிகளுக்கெல்லாம் மேலான பதி, தந்தையர்க் கெல்லாம் மேலான தந்தை. பதி இறந்து போனால் மனைவிக்கு ஞானத்தைப் புரிய வைத்து சிவபாபாவோடு திருமணம் செய்து வைக்க வேண்டும். புரிய வைக்க வேண்டும் - நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? சத்யுகத்தில் யாரும் அழுவதில்லை. பாரதத்தில் உண்மையிலும் உண்மையான தேவதை களின் இராஜ்யம் இருந்தது. தற்சமயமோ ஒருவர் மற்றவரை அடிக்கவும் கொல்லவுமாக இருக்கின்றனர். அசுர ராஜ்யம் இல்லையா? இலட்சுமி-நாராயணரின் சித்திரம் மிக நன்றாக உள்ளது. இதில் முழு செட்டும் உள்ளது. திரிமூர்த்தி, லட்சுமி-நாராயணர், ராதை-கிருஷ்ணரும் கூட உள்ளனர். இந்தச் சித்திரங்களைக் கூட யாராவது நாள்தோறும் பார்த்துக் கொண்டே இருப்பார்களானால் சிவபாபா, பிரம்மா மூலமாக நம்மை இதுபோல் உருவாக்கிக் கொண்டிருக் கிறார் என்பது நினைவிருக்கும். வீட்டிலும் கூட சின்னச் சின்ன போர்டு எழுதி வையுங்கள். எல்லையற்ற தந்தையை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கான சுயராஜ்ய பதவி பெற முடியும். கொஞ்சம்-கொஞ்சமாக அநேக மனிதர்கள் போர்டைப் பார்த்து உங்களிடம் வருவார்கள்.

நீங்கள் ஆன்மீக அவிநாசி சர்ஜன். ஆன்மீக சர்ஜரி கோர்ஸ் பாஸ் செய்து கொண்டிருக்கிறீர்கள். போர்டு வைக்க வேண்டியதிருக்கும். இந்தத் தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்களுக்கு எல்லையற்ற ராஜ்யம் கிடைக்கும் எனச் சொல்லுங்கள். பாபா கேள்விகளை மிக நன்றாக எழுதி யுள்ளார். பாபாவுக்கு எத்தனை ஆன்மீகக் குழந்தைகள் உள்ளனர்? குழந்தை-குட்டிக்காரர் இல்லையா? இதில் சகோதர-சகோதரிகள் இருவரும் வந்து விடுகின்றனர். பாபாவிடம் வருகிறார்கள் என்றால் எவ்வளவு பி.குக்.கள் இருக்கின்றனர் என்று புரிய வைக்கின்றேன். நீங்கள் புரிய வைக்க முடியும் - நாம் சகோதர-சகோதரிகள் - விகாரத்தின் திருஷ்டி இருக்க முடியாது. பாபா சொல்கிறார், தேகத் துடன் கூட தேகத்தின் பொய்யான சம்மந்தத்தை விட்டு என்னை நினைவு செய்வீர் களானால் நீங்கள் பாவனமாகி விடுவீர்கள். எனக்கு ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை என முடிவெடுத்தும் வந்திருக்கிறீர்கள். வயதான தாய்மார்களும் கூட இந்த இரண்டு வார்த்தைகளை நினைவில் வைத்தால் அதிக நன்மை கிடைக்கும். நாம் 84 பிறவிகள் எடுத்துள்ளோம். இப்போது நாம் பிராமணர் ஆகியிருக் கிறோம். பிறகு தேவதா, சத்திரிய, வைசிய, சூத்திரர் ஆவோம். பிராமணராக அவசியம் ஆக வேண்டும். கல்பத்திற்கு முன்பு போலவே மீண்டும் ஆகவும் செய்வார்கள். ஏராளமான பேர் ஆவார்கள். இப்போது பிராமணக் குழந்தைகள் வெளிநாடு முதலானவைகளில் இருப்பவர்களும் கூட வெளிவருவார்கள். நினைவு செய்து கொண்டே தான் இருக்கின்றனர். பாபா சொல்கிறார் - தன்னுடைய குடும்பப் பரிவாரத்தில் இருந்து கொண்டே தன்னை ஆத்மா என உணருங்கள். சிவபாபாவுடைய பேரன்கள் என்று தன்னைப் புரிந்து கொள்ளுங்கள். நாம் பிராமணர்கள் தான் பிறகு தேவதை ஆவோம். கலியுகத்தில் மனிதர்கள் உள்ளனர், சத்யுகத்தில் தேவதை ஆவார்கள். கலியுகத்தில் அனைவரும் அசுர மனிதர்கள். இப்போது நீங்கள் தெய்வீக சம்பிரதாயத்தினராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இதை பாபா தான் சொல்கிறார், வேறு யாராலும் சொல்ல முடியாது. இந்த வர்ணங்களை யாரும் அறிந்திருக்கவில்லை. பிராமணர் களாகிய நீங்கள் தாம் ஞானத்தைப் புரிய வைக்க முடியும். எது-வரை

பிரம்மா குமாரிகளாகிய உங்களிடம் ஞானத்தைப் பெறவில்லையோ, அது வரை புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் தான் கொடுக்க முடியும். இதில் மனம் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். உள்ளம் தூய்மையாக இருந்தால் மனதின் ஆசைகள் அனைத்தும் தாமாகவே நிறைவேறும். சிலருடைய மனம் தூய்மையாக இருப்ப தில்லை. உண்மையான மனதோடு, உண்மையான தந்தையின் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். பொழுது போக்கு இருக்க வேண்டும். நமது வேலை புரிய வைப்பது. இதையும் அறிவீர்கள், 108 பேருக்குப் புரிய வைப்பதில் சிரத்தை எடுத்துக் கொண்டால் ஒருவரின் புத்தியில் பதியும். ஓரிருவர் வெளிப்படுவார்கள் - கல்பத்திற்கு முன் யார் வெளியானவர்களோ ! யார் பி.கே. ஆகியிருப்பார்களோ, அவர்கள் தான் வருவார்கள். களைத்துப் போகக் கூடாது. நீங்கள் முயற்சி செய்து கொண்டே இருங்கள். யாராவது ஒருவர் வெளிவரத் தான் செய்வார்கள். எங்கே சென்றாலும் சரி, உற்றார்-உறவினரிடம் செல்லுங்கள். திருமணம் மற்றும் சாவு வீட்டுக்கும் செல்லுங்கள் - ஒவ்வொருவரின் கர்மத்தின் அனுசாரம் அறிவுரை தரப்படு கின்றது. முக்கியமானது பவித்திரமாக இருப்பதற்கான விஷயம். எங்காவது வெளியில் சாப்பிடவும் நேர்ந்து விடுகிறது. நல்லது குழந்தைகளே ! சிவபாபாவின் நினைவில் இருப்பீர் களானால் மாயாவின் தாக்கம் இருக்காது. பாபா அனைவருக்கும் விதிவிலக்கினை அளிப்ப தில்லை. வேறு வழியற்ற நிலையில் இது போல் பார்க்கப் படுகின்றது. இல்லையென்றால் வேலை போய் விடும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறிவுரை தரப்படுகின்றது. உலகம் மிகவும் கெட்டுப்போய் உள்ளது. அநேகருடன் வாழ வேண்டி உள்ளது. ஒரு கதையும் உள்ளது. குருவானவர் சீடனுக்குச் சொன்னார், சிங்கத்தின் குகையில் போய் இரு. வேசியுடன் கூட இரு, பரீட்சை செய்து பார்ப்பதற்காக அனுப்பினார். உண்மையில் அது ஒன்றும் பரீட்சை யல்ல. இது குழந்தைகளாகிய உங்களுக்காக. உங்களை சிங்கத்திடமோ அனுப்புவதில்லை. பாபாவோ புரிய வைக்கிறார், யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாபாவின் அறிமுகம் கொடுங்கள். நாளுக்கு நாள் புத்தியின் பூட்டு திறந்து கொண்டே போகும். மரம் பெரியதாகத் தான் செய்யும் இல்லையா? அப்போது தான் விநாசமும் ஆரம்பமாகும் இதற்கு முன்பு விநாசமோ ஆக முடியாது. இங்கோ இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. பாபாவோ என்னை நினைவு செய்யுங்கள் என்று மட்டுமே சொல்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞானத்தை தாரணை செய்வதற்காக மனதை மிகவும் தூய்மையாக வைக்க வேண்டும். உண்மையான மனதோடு பாபாவின் சேவையில் ஈடுபட வேண்டும். சேவையில் ஒரு போதும் களைப்படையக் கூடாது.

2. உறுதிமொழி எடுக்க வேண்டும் - எனக்கோ ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை. தேகத்துடன் கூட தேகத்தின் அனைத்து பொய்யான உறவுகளையும் விட்டு, ஒருவருடன் அனைத்து சம்மந்தங்களையும் இணைக்க வேண்டும். ஏழைகளுக்கு ஞான செல்வத்தை தானம் செய்ய வேண்டும்.

வரதானம்:
பாக்கியம் மற்றும் பாக்கிய விதாதாவின் நினைவு மூலமாக எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொடுக்கும் சகஜயோகி ஆவீர்களாக.

சங்கமயுகம் குஷிகளின் யுகம், ஆனந்தங்களின் யுகம் ஆகும். எனவே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் குஷிகளை பகிர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள். பாக்கியம் மற்றும் பாக்கிய விதாதா எப்பொழுதும் நினைவில் இருக்கட்டும். தந்தை கிடைத்து விட்டார். எனவே எல்லாமே கிடைத்து விட்டது என்ற இந்த நினைவே சகஜ யோகியாக ஆக்கி விடும். கஷ்டப்படாமல் பரமாத்மாவை அடைய முடியாது என்று உலகத்தார் கூறுகிறார்கள். மேலும் நீங்கள் வீட்டில் அமர்ந்தபடியே தந்தை கிடைத்து விட்டார் என்று கூறுகிறீர்கள். நினைத்துக் கூட பார்க்கவே இல்லை. அவரே கிடைத்து விட்டார். குஷிகளின் கடல் கிடைத்து விட்டார். இதே மகிழ்ச்சியில் இருங்கள் - இது கூட சகஜயோகம் ஆகும்

சுலோகன்:
சுத்தமாகவும், விதிப்பூர்வமாகவும் ஒவ்வொரு செயலையும் செய்பவர்களே, உண்மையிலும் உண்மையான பிராமணர் ஆவார்கள்.