16-09-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! எல்லையற்ற தந்தை இந்த எல்லையற்ற சபையில் ஏழைக் குழந்தைகளை தத்தெடுப்பதற்காக வந்திருக்கிறார். அவர் தேவதைகளின் சபையில் வர வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி:

குழந்தைகள் எந்த தினத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாட வேண்டும்?

பதில்:

எந்த நாளில் இறந்து பிறந்தீர்களோ பாபாவின் மீது நிச்சயம் ஏற்பட்டதோ..... அந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாட வேண்டும். அந்த நாளே உங்களுடைய பிறந்த நாள் ஆகும். ஒரு வேளை தங்களுடைய இறந்து பிறந்த நாளை கொண்டாடினால் புத்தியில் நாம் பழைய உலகத்திலிருந்து விலகி விட்டோம் என்பது நினைவிற்கு வரும். நாம் பாபாவினுடையவராகி விட்டோம் என்றால், ஆஸ்திக்கு அதிகாரி (உரிமையுடையோர்) ஆகிவிட்டோம்.

பாடல்:

அவையில் விளக்கு பிரகாசமாய் எழுந்தது.....

ஓம் சாந்தி.
பாட்டு, கவிதைகள் பஜனை, வேத சாஸ்திரங்கள், உபநிடதங்கள், தேவதை களின் மகிமைகள் போன்றவைகளை பாரதவாசி குழந்தைகளாகிய நீங்கள் தான் மிகவும் கேட்டு வந்துள்ளீர்கள். இப்போது இந்த சிருஷ்டி சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதை புரிந்துக் கொண்டுள்ளீர்கள். கடந்த காலத்தைப் பற்றியும் குழந்தைகள் அறிந்துள்ளீர்கள் நிகழ்கால உலகம் எப்படி இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதையும் நடைமுறையில் அனுபவம் செய்துள்ளீர்கள். மற்றபடி எது நடக்கப்போகிறதோ அதை நடைமுறையில் அனுபவம் செய்யவில்லை. கடந்த காலத்தில் என்ன நடந்ததோ அதை அனுபவம் செய்துள்ளீர்கள். பாபா தான் புரிய வைத்திருக்கிறார். பாபாவைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. எண்ணற்ற மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதையும் அறியவில்லை. படைக்கக் கூடியவர் மற்றும் படைப்பின் முதல் இடை கடை எதையும் அறியவில்லை. இப்போது கலியுகத்தின் முடிவாகும். இதையும் மனிதர்கள் அறியவில்லை. ஆம் இன்னும் போகப் போக முடிவைப் பற்றி அறிவார்கள். முக்கியமானதைத் தெரிந்துக் கொள்வார்கள். மற்றபடி முழு ஞானத்தை அறிய மாட்டார்கள். படிக்க கூடிய மாணவர்கள் தான் புரிந்துக் கொள்ள முடியும். இது மனிதனிலிருந்து ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக மாறுவதாகும். அதுவும் அசுர ராஜாக்கள் அல்ல. தெய்வீக ராஜாக்கள். இவர்களை அசுர ராஜாக்கள் பூஜிக்கின்றனர். இந்த வியங்கள் அனைத்தையும் குழந்தை களாகிய நீங்கள் தான் அறிகிறீர்கள். வித்துவான், ஆச்சாரியர் போன்ற எவரும் சிறிதும் அறிய வில்லை. பகவான், யாரை விளக்கு என்று அழைக்கிறாரோமோ அவரை பற்றி தெரியவில்லை. பாட்டு பாடுபவர்களுக்குக் கூடத் தெரியவில்லை மகிமையை மட்டும் பாடுகிறார்கள். பகவான் ஏதோ ஒரு நேரத்தில் இந்த உலகத்தின் அவையில் வந்திருக்கிறார். அவை என்றால் அங்கே நிறைய பேர் கூட்டமாய் குழுமியிருப்பது. அவையில் சாப்பிடுதல், குடித்தல், மது அருந்துதல் போன்றவை கிடைக்கிறது. இப்போது இந்த அவையில் உங்களுக்கு பாபாவிடமிருந்து அழிவற்ற ஞான ரத்தினங்கள் கிடைத்துக் கொண்டிருக் கின்றன. மேலும் நமக்கு வைகுண்டத்தின் இராஜ்ய பதவியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். இந்த முழு அவையிலும் குழந்தைகள் தான் பாபாவை அறிகிறார்கள். பாபா நமக்கு பரிசு கொடுப்பதற்காக வந்திருக்கிறார். பாபா அவையில் என்ன அளிக்கிறார்? மனிதர்கள் அவையில் ஒருவருக்கொருவர் என்ன கொடுக் கிறார்கள்? இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. பாபா அல்வா ஊட்டுவது போல கொடுக்கின்றார்! அவர்கள் மலிவான பொருளான சுண்டல் போன்றவைகளைக் கொடுக்கிறார்கள். அல்வா மற்றும் சுண்டல் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒருவருக்கொருவர் சுண்டலை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். யாராவது சம்பாதிக்கவில்லை என்றால், இவர்கள் கடலையை மென்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இப்போது எல்லையற்ற தந்தை நமக்கு சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை வரதானமாக அளித்துக் கொண்டிருக்கிறார் என்று குழந்தைகள் அறிகிறீர்கள். சிவபாபா இந்த சபையில் வருகிறார் அல்லவா? சிவஜெயந்தியும் கொண்டாடுகிறார்கள் அல்லவா? ஆனால் அவர் வந்து என்ன செய் கிறார்? இது யாருக்கும் தெரியவில்லை. அவர் தந்தையாக இருக்கிறார். பாபா நிச்சயமாக எதை யாவது உணவாக அளிப்பார். தாய் தந்தை வாழ்க்கையை கவனித்துக் கொள்வார்கள் அல்லவா. அந்த தாய் தந்தை வாழ்க்கையை பராமரிப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தத்தெடுக் கிறார்கள். பாபா நாங்கள் உங்களுடைய 10 நாள் குழந்தை என்று குழந்தைகளே கூறுகிறார்கள். அதாவது 10 நாட்களாக உங்களுடையவராகியிருக் கிறோம். நாம் தங்களிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை அடையும் உரிமையாளர் ஆகிவிட்டோம் என புரிந்துக் கொள்ள வேண்டும். மடியில் வந்து விட்டோம். உயிருடனே யாராவது தத்தெடுக்கிறார்கள் என்றால் மூட நம்பிக்கை யில் எடுப்பதில்லை. தாய் தந்தையரே குழந்தையை தத்து கொடுக்கிறார்கள். நம்முடைய குழந்தை அவர்களிடம் அதிகம் சுகமாக இருப்பார்கள். மேலும் அன்போடு பார்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள். நீங்களும் லௌகீக தந்தையின் குழந்தைகள். இங்கே எல்லையற்ற தந்தையின் மடியை அடைந்துள்ளீர்கள். எல்லையற்ற தந்தை எவ்வளவு ஆர்வத்தோடு தத்தெடுத்திருக்கிறார். பாபா நாங்கள் உங்களுடையவராகி விட்டோம் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். தூரத்திலிருந்து மட்டும் சொல்ல மாட்டார்கள். நடைமுறையில் தத்து எடுத்து விட்டார்கள் என்றால் விழா கொண்டாடப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள் அல்லவா, அது போல! இவ்வாறு குழந்தைகள் மாறுகிறார்கள். நான் உங்களுடையவர் என்றால் ஆறு, ஏழு நாட்களுக்குப் பிறகு பெயர் சூட்டும் விழா கொண்டாட வேண்டும் அல்லவா என கூறுகிறார்கள். ஆனால் யாரும் கொண்டாடு வதில்லை. தங்களுடைய பிறந்த தினத்தை மிகவும் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும். ஆனால் கொண்டாடுவதில்லை. நாம் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்ற ஞானமே இல்லை. 12 மாதம் ஆனதும் கொண்டாடுகிறார்கள். அட, முதலில் கொண்டாடவில்லை. 12 மாதங்களுக்கு பிறகு ஏன் கொண்டாடுகிறீர்கள். ஞானம் இல்லை. நிச்சயம் ஏற்படுவதில்லை. ஒரு முறை (மறு பிறவியின்) பிறந்த நாள் கொண்டாடினார்கள் என்றால் உறுதி ஆகிவிட்டனர். ஒரு வேளை பிறந்த நாள் கொண்டாடிய பிறகு ஓடி விட்டனர் என்றால், இவர்கள் இறந்து விட்டனர் என புரிந்துக் கொள்ள வேண்டும். பிறப்பைக் கூட சிலர் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடு கின்றனர். யாராவது ஏழையாக இருந்தால் வெல்லமும் கடலையும் கூட வழங்கலாம். குழந்தை களுக்கு முழுமையாகப் புரியவில்லை. ஆகையால் மகிழ்ச்சி அடைவ தில்லை. பிறந்த நாள் கொண்டாடினார்கள் என்றால், நினைவும் உறுதியாக இருக்கும். இது புத்தியில் இல்லை. இன்று யாரெல்லாம் புதிய குழந்தைகள் ஆகியிருக்கிறார்களோ அவர் களுக்கு நிச்சயம் ஏற்பட்டு விடுகிறது என்றால், பிறந்த நாள் கொண்டாடலாம் என்று பாபா புரிய வைக்கின்றார். இந்த நாள் எங்களுக்கு நிச்சயம் ஏற்பட்டது. அதிலிருந்து பிறந்த நாள் ஆரம்பமாகின்றது. எனவே, குழந்தைகள் தந்தை மற்றும் ஆஸ்தியை முழுமையாக நினைக்க வேண்டும். நான் இன்னாருடைய குழந்தை என்பதை ஒரு போதும் குழந்தைகள் மறப்பது கிடையாது. இங்கேயோ பாபா தங்களின் நினைவு எங்களுக்கு இல்லை என்கிறார்கள். இவ்வாறு அறியாமை காலத்தில் கூட கூற மாட்டார்கள். நினைக்கவில்லை என்ற கேள்வியே எழுவதில்லை. நீங்கள் தந்தையை நினைக்கிறீர்கள். பாபா அனைவரையும் நினைத்துக் கொண்டே தான் இருக்கிறார். என்னுடைய குழந்தைகள் அனைவரும் காமச்சிதையில் எரிந்து பஸ்பமாகியிருக்கின்றனர். இவ்வாறு வேறு எந்த குருவோ மகாத்மாவோ கூற மாட்டார்கள். அனைவரும் என்னுடைய குழந்தைகள் என்று கூறுவது பகவான் வாக்கு தான். அனைவரும் பகவானின் குழந்தைகள் அல்லவா? அனைத்து ஆத்மாக்களும் பரமாத்மா தந்தையின் குழந்தைகள் ஆவர். பாபாவும் சரீரத்தில் வரும் போது இந்த ஆத்மாக்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள் என கூறுகின்றார். காமச்சிதையில் அமர்ந்து சாம்ப லாகி தமோபிர தானம் ஆகிவிட்டனர். பாரதவாசிகள் கலியுகத்தினராக மாறிவிட்டனர். காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகி விட்டனர். யார் நம்பர் ஒன் வெள்ளையாக இருந்தாரோ அவரே இப்போது பூஜாரியாகி கருப்பாகி விட்டார். அழகிலிருந்து கருப்பாகி விட்டார். இந்த காமச்சிதையில் அமர்வது என்றால் பாம்பின் மீது ஏறுவதாகும். யாரையும் கடிப்பதற்கு வைகுண்டத்தில் பாம்பு போன்றவை இருக்காது. இது போன்ற வியங்கள் கிடையாது. 5 விகாரங்கள் நுழைந்த காரணத்தினால் நீங்கள் காட்டு முள் போன்று ஆகி விட்டீர்கள் என பாபா கூறுகின்றார். பாபா இது முள் காடு என்று நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் என கூறு கிறார்கள். ஒருவரையொருவர் தீண்டி பஸ்பமாகி விட்டனர். பகவான் வாக்கு நான் ஞானக் கடலின் குழந்தைகளை போன கல்பத்திலும் வந்து தூய்மையாக்கினேன். இப்போது அவர்கள் அழுக்காகி விட்டனர். நாம் வெள்ளையிலிருந்து எப்படி கருப்பாகிறோம் என குழந்தைகள் அறிகிறார்கள். முழு 84 பிறவிகளின் வரலாறு புவியியலும் சுருக்கமாக புத்தியில் இருக்கிறது. சிலர் 5-6 வருடங்களிலிருந்து தங்களின் வாழ்க்கை வரலாற்றை அவரவர் புத்திக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக அறிகிறார்கள் என நீங்கள் இச்சமயம் தெரிந்துக் கொள்கிறீர் கள். ஒவ்வொருவரும் நாம் என்னென்ன தீய வேலைகளைச் செய்தோம் என கடந்த கால வாழ்க்கை வரலாற்றை அறிகிறார்கள். பெரிய பெரிய விசயங்கள் நாம் என்னென்ன செய்தோம் என தெரிவிக் கப்படுகிறது. போன பிறவியின் வியம் தெரியாது. பல பிறவி களின் வாழ்க்கை வரலாற்றை யாரும் தெரிவிக்க முடியாது. மற்றபடி 84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம் என்பதை பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். யார் 84 பிறவி களை எடுத்தார்களோ அவர்களின் புத்தியில் தான் நினைவிற்கு வரும். வீட்டிற்குச் செல்வதற்காக நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன். இந்த ஞானம் அனைத்து தர்மங்களைச் சார்ந்தவர்களுக்குமாகும். ஒரு வேளை முக்தி தாமம் வீட்டிற்குச் செல்ல விரும்பினால், பாபா தான் அழைத்துச் செல்ல முடியும். பாபாவைத் தவிர வேறு யாரும் தங்களுடைய வீட்டிற்கு அழைத்துப் போக முடியாது. பாபாவை நினைவு செய்து அங்கே போகலாம் என்ற வழி யாரிடமும் இல்லை. அனைவரும் மறுபிறவி எடுக்கத்தான் வேண்டும். பாபாவைத் தவிர யாரும் அழைத்துப் போக முடியாது. மோட்சம் என்ற எண்ணம் ஒரு போதும் வரக் கூடாது. இது நடக்க முடியாது. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம். இதிலிருந்து யாரும் வெளியே வரமுடியாது. அனைவருக்கும் ஒரு தந்தை தான் விடுவிக்கக் கூடியவர் வழிகாட்டியாவார். அவரே வந்து யுக்தியை தெரிவிக்கின்றார். என்னை நினைத்தால் உங்களின் விகர்மங்கள் அழியும். இல்லையென்றால் தண்டனைகள் அடைய வேண்டியிருக் கும். முயற்சி செய்யவில்லை என்றால், இவ்விடத்தைச் சார்ந்தவர் இல்லை என்று புரிந்துக் கொள்ளலாம். குழந்தைகளாகிய நீங்கள் முக்தி ஜீவன் முக்தியின் வழியை முயற்சிக்கு ஏற்ப அறிகிறீர்கள். ஒவ்வொருவரின் புரிந்துக் கொள்ளும் வேகம் அவரவருடையது. இச்சமயம் அழுக்கான உலகமாக இருக்கின்றது என்று நீங்கள் கூட கூறலாம். எத்தனை அடிதடி கொள்ளைகள் நடக்கின்றது. இதெல்லாம் சத்யுகத்தில் நடக்காது. இது கலியுகம் ஆகும். இதை அனைத்து மனிதர்களும் ஏற்பார்கள். சத்யுகம் திரேதா..... கோல்டன் ஏஜ், சில்வர் ஏஜ்..... இன்னும் வேறு வேறு மொழிகளில் கூட வேறு பெயர்களில் நிச்சயம் கூறுவார்கள். அனைவரும் ஆங்கிலத்தை அறிவார்கள். ஆங்கிலம் இந்தியில் அகராதியும் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நீண்ட காலமாக இராஜ்யம் செய்து விட்டு போனதால் அவர்களின் ஆங்கிலம் பயன்படுகிறது.

மனிதர்கள் இச்சமயம் எங்களுக்குள் எந்த குணமும் இல்லை. பாபா நீங்கள் வந்து இரக்கம் காட்டுங்கள் மீண்டும் எங்களைத் தூய்மையாக்குங்கள். நாங்கள் அழுக்காக இருக் கின்றோம் என ஒத்துக் கொள்கிறார்கள். அழுக்கான ஆத்மாக்கள் ஒருவர் கூட திரும்பிப் போக முடியாது என குழந்தைகள் அறிகிறீர்கள். அனைவரும் சதோ ரஜோ தமோவில் வரத்தான் வேண்டும். இப்போது பாபா இந்த அழுக்கான அவையில் வந்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அவையாக இருக்கிறது. நான் ஒரு போதும் தேவதைகளின் அவையில் வருவதில்லை. எங்கு நிறைய செல்வங்கள், 36 வகையான உணவு வகைகள் கிடைக்குமோ அங்கே நான் வருவதில்லை. எங்கே குழந்தைகளுக்கு ரொட்டி கூட கிடைக்கவில்லையோ அவர்களிடம் வந்து தத்தெடுத்து, குழந்தையாக்கி, ஆஸ்தியை அளிக்கிறேன். பணக் காரர்களைத் தத்தெடுப்பதில்லை. அவர்கள் தங்களின் போதையில் இருக்கிறார்கள். எங்களுக்கு சொர்க்கம் இங்கேயே இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். பிறகு யாராவது இறந்து விட்டால் சொர்க்கத்திற்குச் சென்று விட்டனர் என்றும் கூறுகின்றார்கள். எனவே நிச்சயம் இது நரகம் அல்லவா? நீங்கள் ஏன் புரிய வைப்பதில்லை. இது வரை செய்தி தாளில் கூட யாரும் யுக்தியோடு போடவில்லை. டிராமா நம்மை முயற்சி செய்ய வைக்கிறது. நாம் என்ன முயற்சி செய்கிறோமோ அது நாடகத்தில் இருக்கிறது என குழந்தை கள் அறிகிறீர்கள். முயற்சி நிச்சயம் செய்ய வேண்டும். டிராமா என்று உட்கார்ந்து கொள்ளக் கூடாது. ஒவ்வொரு வியத்திலும் அவசியம் முயற்சி செய்ய வேண்டும். கர்ம யோகி ராஜ யோகி அல்லவா? அவர்கள் கர்ம சன்னியாசி, ஹடயோகி ஆவர். நீங்களோ அனைத்தையும் செய்கிறீர்கள், வீட்டிலிருக்கிறீர்கள், குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறீர்கள். அவர்களோ ஓடிப் போகிறார்கள். நன்றாக இல்லை. ஆனால் அந்த தூய்மையும் பாரதத்தில் வேண்டும் அல்லவா? இருப்பினும் நல்லது. இப்போதோ தூய்மையாகவும் இருப்பதில்லை. அவர்கள் தூய்மையான உலகத்திற்கு போவார்கள் என்பது கிடையாது. பாபாவைத் தவிர வேறு யாரும் அழைத்துச் செல்ல முடியாது. சாந்தி தாமம் என்பது நம்முடைய வீடு என இப்போது நீங்கள் அறிகிறீர்கள். ஆனால் எப்படி போவது? நிறைய பாவங்களைச் செய்து விட்டிருக் கின்றனர். ஈஸ்வரனை சர்வ வியாபி என கூறுகிறார்கள். யாருடைய மரியாதையை இழக்க வைக்கிறார்கள். சிவபாபாவின்! நாய், பூனை, அணு அணுவிலும் பரமாத்மா இருக்கிறார் என கூறுகிறார்கள். இப்போது யாரிடம் புகார் செய்வது? நான் தான் சர்வ சக்திவான் என, பாபா கூறுகிறார். என்னுடன் தர்மராஜரும் இருக்கிறார். இது அனைவரின் மரணத்தின் நேரமாகும். அனைத்து தண்டனைகளையும் அனுபவித்து, திரும்பிப் போய் விடுவார் கள். நாடகத்தின் அமைப்பே அவ்வாறு இருக்கிறது. நிச்சயமாக தண்டனைகளை அடையத் தான் வேண்டும். இவ்வாறு காட்சிகளும் கிடைக்கிறது. கர்ப்ப மாளிகையிலும் காட்சிகள் கிடைக் கிறது. நீங்கள் இந்ததந்த வேலைகளைச் செய்தீர்கள். பிறகு அதற்கு தண்டனை கிடைக் கிறது. அப்போது தான் இந்த சிறையிலிருந்து வெளியே எடுங்கள், நாங்கள் மீண்டும் இது போன்ற பாவங்களை செய்ய மாட்டோம் என கூறுவார்கள். பாபா இங்கே நேரடியாக வந்து அனைத்து வியங்களையும் புரிய வைக்கிறார். கர்ப்பத்தில் தண்டனைகளை அடைகிறார்கள். அதுவும் சிறையே ஆகும். துக்கத்தை உணர்கிறார்கள். அங்கே சத்யுகத்தில் தண்டைனைகளை அடைவதற்கு இரண்டு சிறைகளும் இல்லை.

இப்போது குழந்தைகளே! என்னை நினைத்தால் துரு நீங்கி விடும் என பாபா புரிய வைக்கின்றார். உங்களுடைய இந்த வார்த்தைகளை பலர் ஏற்பார்கள். பகவானின் பெயர் இருக்கிறது. கிருஷ்ணரின் பெயரை போட்டது மட்டுமே தவறு. இங்கே என்ன கேட்கிறீர் களோ அதைக் கேட்டு செய்தி தாளில் போடுங்கள் என்று இப்போது பாபா குழந்தை களுக்குப் புரிய வைக்கிறார். 84 பிறவிகளை அனுபவித்து அழுக்காகி விட்டீர்கள் என்று இச்சமயம் அனைவருக்கும் பாபா கூறுகின்றார். என்னை நினைவு செய்தால் விகர்மங்கள் அழிந்து போகும். மீண்டும் நீங்கள் முக்தி ஜீவன் முக்தி தாமத்திற்குச் செல்லலாம் என இப்போது ஆலோசனை வழங்குகிறோம். என்னை நினைத்தால் துரு நீங்கிப் போய்விடும் என்பது பாபாவின் கட்டளை ஆகும். நல்லது. குழந்தைகளுக்கு எவ்வளவு புரிய வைப்பது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஒவ்வொரு வியத்திற்காகவும் முயற்சி செய்ய வேண்டும். டிராமா என கூறிக் கொண்டு உட்காரக் கூடாது. கர்ம யோகி இராஜயோகி ஆக வேண்டும். கர்ம சன்னியாசி ஹடயோகி ஆகக் கூடாது.

2. தண்டனை இல்லாமல் பாபாவுடன் வீட்டிற்குச் செல்வதற்கு நினைவிலிருந்து ஆத்மாவை தூய்மையாக்க வேண்டும் கருப்பிலிருந்து வெள்ளையாக வேண்டும்.

வரதானம்:

தனது உயர்ந்தத் தன்மையின் மூலம் புதுமைத் தன்மை என்ற கொடியை பறக்க விடக்கூடிய சக்தி சொரூபமானவர் ஆகுக

இப்பொழுது நேரத்திற்கு ஏற்றவாறு, அருகாமைக்கு தகுந்தவாறு சக்தி சொரூபத்தின் தாக்கம் மற்றவர்கள் மீது ஏற்படும் பொழுது தான் கடைசி நேரத்தின் வெளிப்பாட்டை நெருக்கத்தில் கொண்டு வர முடியும். அன்பு மற்றும் உதவியை வெளிப்படுத்த வேண்டும், அப்படிப்பட்ட சேவை யின் கண்ணாடியில் சக்தி சொரூபத்தை அனுபவம் செய்ய வையுங் கள். தனது உயர்ந்த தன்மை மூலம் சக்தி சொரூபத்தின் புதுமை தன்மை என்ற கொடியை பறக்கவிடும் பொழுதுதான் பிரத்யக்ஷத்தா (பாபாவை வெளிப்படுத்துதல்) ஏற்படும். தனது சக்தி சொரூபத்தினால் சர்வ சக்திவான் பாபாவின் சாட்சாத்காரத்தை செய்ய வையுங்கள்.

சுலோகன்:

மனதின் மூலம் சக்திகளையும் செயலின் மூலம் குணங்களையும் தானம் செய்வது தான் மகாதானம் (மிகப்பெரிய தானம்) ஆகும்.