16.10.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் சங்கமத்தில் சேவை செய்து புகழ் பாடப்படுவதற்கு உகந்தவராக வேண்டும். பிறகு வருங்காலத்தில் புருஷோத்தமராக ஆகிவிடும் பொழுது நீங்கள் பூஜைக்குரியவர்களாக ஆகி விடுவீர்கள்.

 

கேள்வி:

எந்த ஒரு வியாதி வேரோடு நீங்கி விடும் பொழுது தந்தையின் இதயத்தில் இடம் பெற முடியும்?

 

பதில்:

(1) தேக அபிமானத்தின் வியாதி. இதே தேக உணர்வின் காரணமாகவே அனைத்து விகாரங்களும் மகாரோகியாக ஆக்கி விட்டுள்ளது. இந்த தேக அபிமானம் நீங்கி விடும் பொழுது தான் நீங்கள் தந்தையின் இதயத்தில் இடம் பெற முடியும். (2) இதயத்தில் இடம் பெற வேண்டும் என்றால் பரந்த புத்தியுடையவராக ஆகுங்கள். ஞான சிதையில் அமருங்கள். ஆன்மீக சேவையில் ஈடுபட்டு விடுங்கள். மேலும் சொற்களின் மூலம் சேவை செய்வதுடன் கூடவே தந்தையை நல்ல முறையில் நினைவு செய்யுங்கள்.

 

பாடல்:

மணமகள்களே விழித்துக் கொள்ளுங்கள்..

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள் - ஆன்மீகத் தந்தை இந்த சாதாரண பழைய உடலின் மூலமாக வாய் மூலம் கூறினார். நான் பழைய உடலில் பழைய ராஜதானியில் வர வேண்டியுள்ளது என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது இது இராவணனின் ராஜாங்கம் ஆகும். உடலும் அன்னிய மானது. ஏனெனில் இந்த உடலில் ஏற்கனவே ஆத்மா இருக்கிறது. நான் அன்னிய உடலில் பிரவேசிக்கிறேன். என்னுடைய உடலாக இருந்திருந்தால் அதற்கென்று பெயர் இருந்திருக்கும். என்னுடைய பெயர் மாறுவதில்லை. என்னை சிவபாபா என்றே கூறுகிறார்கள். பாடலை குழந்தைகள் தினமும் கேட்கிறார்கள். நவயுகம் அதாவது புதிய உலகம் சத்யுகம் வந்தது. இப்பொழுது விழித்துக் கொள்ளுங்கள் ! என்று யாருக்கு கூறுகிறார்கள்? ஆத்மாக்களுக்கு. ஏனெனில், ஆத்மாக்கள் கோரமான இருளில் உறங்கியுள்ளார்கள். சிறிதளவும் அறிவு இல்லை. தந்தையை அறியாமல் உள்ளார்கள். இப்பொழுது தந்தை எழுப்ப வந்துள்ளார். இப்பொழுது நீங்கள் எல்லையில்லாத தந்தையை அறிந்துள்ளீர்கள். அவரிடமிருந்து எல்லையில்லாத சுகம் புது யுகத்தில் கிடைக்க வேண்டியுள்ளது. சத்யுகம் புதியது என்று கூறப்படுகிறது. கலியுகத்திற்கு பழைய யுகம் என்று கூறுவார்கள். வித்வான்கள் மற்றும் பண்டிதர்கள் ஆகியோர் யாருக்குமே தெரியாது. புதிய யுகம் பிறகு எவ்வாறு பழையதாக ஆகிறது என்று யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். யாராலும் கூற முடியாது. இதுவோ லட்சக்கணக்கான வருடங்களின் விஷயம் ஆகும் என்று கூறுவார்கள். நாம் புதிய யுகத்திலிருந்து மீண்டும் பழைய யுகத்திற்கு எப்படி வந்தோம். அதாவது சொர்க்கவாசியிலிருந்து நரகவாசியாக எப்படி ஆனோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். மனிதர்களோ எதுவும் அறியாமல் உள்ளார்கள். யாருக்கு பூஜை செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கை மற்றும் சரித்திரம் பற்றிக் கூடத் தெரியாது. எப்படி ஜெகதம்பாவிற்கு பூஜை செய்கிறார்கள். இப்பொழுது அந்த அம்பாள் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அம்பாள் என்று உண்மையில் தாய்மார்களுக்கு கூறப்படுகிறது. ஆனால் பூஜையோ ஒருவருக்குத் தான் நடக்க வேண்டியுள்ளது. சிவபாபாவிற்குக் கூட ஒரே ஒரு கலப்படமற்ற (அவ்யபிசாரி) நினைவார்த்தம் உள்ளது. அம்மா கூட ஒருவர் ஆவார். ஆனால் ஜகதம்பாவை அறியாமல் உள்ளார்கள். இவர் ஜகதம்பா ஆவார் மற்றும் லட்சுமி ஜகத்தின் (உலகத்தின்) மகாராணி ஆவார். ஜகதம்பா யார் மற்றும் ஜகத் மகாராணி யார் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த விஷயங்களை ஒரு பொழுதும் யாரும் தெரிந்துக் கொள்ள முடியாது. லட்சுமியை தேவி என்றும், ஜகதம்பாவை பிராமணி என்றும் கூறுவார்கள். பிராமணர்கள் சங்கமத்தில் தான் இருக்கிறார்கள். இந்த சங்கமயுகத்தை பிறர் அறியாமல் உள்ளார்கள். பிரஜாபிதா பிரம்மா மூலமாக புதிய புருஷோத்தம சிருஷ்டி படைக்கப்படுகிறது. புருஷோத்தமர்கள் உங்களுக்கு அங்கு தெரிய வருவார்கள். இச்சமயம் பிராமணர்களாகிய நீங்கள் புகழ் பாடப்பட உகந்தவர்கள் ஆவீர்கள். சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். பிறகு நீங்கள் பூஜைக்குரியவர்கள் ஆகிவிடுவீர்கள். பிரம்மாவிற்கு இவ்வளவு புஜங்கள் இருப்பதாக காண்பிக்கிறார்கள். பின் அம்பாவிற்கும் ஏன் கொடுப்பதில்லை. அவருக்கும் அனைவரும் குழந்தைகள் தானே !தாய் தந்தை தான் பிரஜாபிதா ஆகிறார்கள். குழந்தைகளை பிரஜாபிதா என்று கூறமாட்டார்கள். லட்சுமி நாராயணரை ஒரு பொழுதும் சத்யுகத்தில் ஜகத்பிதா ஜகத்மாதா என்று கூற மாட்டார்கள். பிரஜாபிதாவின் பெயர் பிரசித்தமானது. ஜெகத்பிதா மற்றும் ஜகத்மாதா ஒரே ஒருவர் ஆவார். மற்றவர்கள் அனைவரும் அவரது குழந்தைகள். அஜ்மீரில் பிரஜாபிதா பிரம்மாவின் கோவிலுக்கு சென்றார்கள் என்றால் பாபா என்று கூறுவார் கள். ஏனெனில் அவர் இருப்பதே பிரஜாபிதாவாக. எல்லைக்குட்பட்ட தந்தைகள் குழந்தை களைப் பிறப்பிக்கிறார்கள் என்றால், அவர்கள் எல்லைக்குட்பட்ட பிரஜாபிதா ஆகிறார்கள். இவர் எல்லையில்லாதவர் ஆவார். சிவபாபாவோ அனைத்து ஆத்மாக்களின் எல்லையற்ற தந்தை ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த வித்தியாசத்தை எழுத வேண்டும். ஜகதம்பா சரஸ்வதி ஒருவர் ஆவார். பெயர்கள் துர்க்கை, காளி என்று எவ்வளவு வைத்து விட்டுள்ளார்கள். அம்பாள் மற்றும் பாபாவிற்கு நீங்கள் அனைவரும் குழந்தைகள் ஆவீர்கள். இது படைப்பு அல்லவா? பிரஜாபிதா பிரம்மாவின் மகள் சரஸ்வதி ஆவார். அவருக்கு அம்பா என்று கூறுகிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் புதல்வர்கள் மற்றும் புதல்விகள். எல்லோருமே தத்து எடுக்கப்பட்டவர்கள். இத்தனை குழந்தைகளும் எங்கிருந்து வரமுடியும். இவர்கள் எல்லோருமே முகவம்சாவளி ஆவார்கள். வாய் மூலமாக பெண்ணை படைத்தார் என்றால் படைப்பவர் ஆகிவிட்டார். இவர் என்னுடையவர் என்று கூறுகிறார். நான் இவர் மூலமாக குழந்தைகளுக்கு பிறவிக் கொடுத்துள்ளேன். இவர்கள் எல்லோருமே தத்து எடுக்கப் பட்டவர்கள் ஆவார்கள். இது பிறகு ஈசுவரிய, வாய் வழி படைப்பு ஆகும். ஆத்மாக்களாகவோ இருக்கவே இருக்கிறார்கள். அவர்கள் தத்து எடுக்கப்படுவது இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் எப்பொழுதுமே என்னுடைய குழந்தைகள் ஆவீர்கள் என்று தந்தை கூறுகிறார். பின்னர் இப்பொழுது நான் வந்து பிரஜாபிதா பிரம்மா மூலமாக குழந்தைகளை சுவீகாரம் செய்கிறேன். குழந்தைகள் (ஆத்மாக்களை) தத்து எடுப்பதில்லை. ஆண் மற்றும் பெண் குழந்தைகளை தத்து எடுக்கிறார்கள். இதுவும் மிகவும் சூட்சுமமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். இந்த விஷயங்களைப் புரிந்து கொள்வதால் நீங்கள் இந்த லட்சுமி நாராயணர் ஆகிறீர்கள். எப்படி ஆகலாம் என்பதை எங்களால் புரிய வைக்க முடியும். இவர்கள் இந்த உலகத்திற்கு அதிபதி ஆகும் வகையில் அப்பேர்ப்பட்ட என்ன செயல்களைச் செய்தார்கள்? நீங்கள் கண்காட்சி ஆகியவற்றில் கூட கேட்கலாம். இவர்கள் இந்த சொர்க்கத்தின் ராஜ்யத்தை எப்படி அடைந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களிலும் கூட ஒரு சிலரால் சரியான முறையில் புரிய வைக்க முடியாது. உங்களில் யார் தெய்வீக குணமுடையவர்களோ, ஆன்மீக சேவையில் ஈடுபட்டு இருப்பார்களோ, அவர்கள் புரிய வைக்க முடியும். மற்றவர்களோ மாயையின் வியாதியில் சிக்கியபடி இருக்கிறார்கள். அநேகவிதமான நோய்கள் உள்ளன. தேக அபிமானத்தின் நோய் கூட உள்ளது. இந்த விகாரங்கள் தான் உங்களை நோயாளிகளாக ஆக்கியுள்ளது.

 

நான் உங்களை தூய்மையான தேவதையாக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் அனைத்து குணங்களிலும் நிறைந்தவராக.. (சர்வகுண சம்பன்ன..) தூய்மையாக இருந்தீர்கள். இப்பொழுது தூய்மையற்றவர்களாக (பதிதமாக) ஆகியுள்ளீர்கள். எல்லையில்லாத தந்தை இவ்வாறு கூறுவார். இதில் நிந்தனை செய்யும் விஷயம் கிடையாது. இது புரிய வைக்க வேண்டிய விஷயமாகும். நான் இங்கு பாரத்தில் வருகிறேன் என்று பாரதவாசிகளுக்கு எல்லையில்லாத தந்தை கூறுகிறார். பாரதத்தின் மகிமையோ அளவற்றதாகும். இங்கு வந்து நரகத்தை சொர்க்கமாக ஆக்குகிறார். அனைவருக்கும் அமைதி தருகிறார். எனவே அப்பேர்ப் பட்ட தந்தையின் மகிமை கூட அளவற்றது. கரை காண முடியாதது. ஜகதம்பா மற்றும் அவரது மகிமை பற்றி யாருக்குமே தெரியாது. இவற்றினுடைய வித்தியாசங்களைக் கூட உங்களால் கூற முடியும். இது ஜகதம்பாவின் சரித்திரம். இது லட்சுமியின் சரித்திரம். அதே ஜகதம்பா மீண்டும் லட்சுமி ஆகிறார். பிறகு அதே லட்சுமி 84 பிறவிகளுக்குப் பிறகு ஜகதம்பா ஆகிடுவார். படங்கள் கூட தனித் தனியாக வைக்க வேண்டும். லட்சுமிக்கு கலசம் கிடைத்தது என்று காண்பிக்கிறார்கள். ஆனால் லட்சுமி பிறகு சங்கமத்தில் எங்கிருந்து வந்தார். அவரோ சத்யுகத்தில் இருந்தார். இந்த எல்லா விஷயங் களையும் தந்தை புரிய வைக்கிறார். படங்களைத் தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்டவர்கள் ஞான சிந்தனை செய்ய வேண்டும். அப்பொழுது புரிய வைப்பது சுலபமாக இருக்கும். இந்த அளவிற்கு பரந்த புத்தி உடையவர்களாக ஆக வேண்டும். அப்பொழுது தான் மனதில் இடம் பெற முடியும். பாபாவை நல்ல முறையில் நினைவு செய்யும் பொழுது மற்றும் ஞானச்சிதையில் அமரும் பொழுது மனதில் இடம் பெற முடியும். அப்படியின்றி யார் மிகவும் நன்றாக முரளி (வாணி) நடத்துகிறார்களோ அவர்கள் மனதில் இடம் பெறுவார்கள் என்பதல்ல. தந்தை கூறுகிறார் - தேக அபிமானம் முழுமையாக நீங்கி விடும் பொழுது கடைசியில் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப மனதில் இடம் பெறுவார்கள்.

 

பிரம்ம ஞானிகள் பிரம்மத்தில் கலந்து விடுவதற்கான முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவ்வாறு யாருமே கலந்து போக முடியாது என்பதை தந்தை புரிய வைத்துள்ளார். மற்றபடி உழைக்கிறார்கள். உத்தமமான பதவி அடைகிறார்கள். பிளாட்டினத்தில் துலாபாரம் செய்யும் அளவிற்கு அப்பேர்ப்பட்ட மகாத்மா ஆகிறார்கள். ஏனெனில் பிரம்மத்தில் கலந்து விடுவதற்கான முயற்சி செய்கிறார்கள் அல்லவா? எனவே உழைப்பின் பலன் கூட கிடைக்கிறது. மற்றபடி முக்தி ஜீவன் முக்தி கிடைக்க முடியாது. இப்பொழுது இந்த பழைய உலகம் முடிவுக்கு வருகிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இத்தனை அணு குண்டுகள் தயாரித்துள்ளார்கள் என்றால் வெறுமனே வைத்துக் கொள்ள மட்டுமே தயாரித்துள்ளார்களா என்ன? பழைய உலகத்தின் அழிவிற்காக இந்த குண்டுகள் பயன்படும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அநேகவிதமான அணு குண்டுகள் உள்ளன. தந்தை ஞானம் மற்றும் யோகத்தைக் கற்பிக்கிறார். இராஜ ராஜேஷ்வர், இரட்டை கிரீடம் அணிந்த தேவி தேவதையாக ஆவீர்கள். எப்பேர்ப்பட்ட உயர்ந்த பதவி ! பிராமணர்கள் மேலே உச்சியில் உள்ளார்கள். உச்சி (குடுமி) எல்லாவற்றையும் விட மேலே உள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்க தந்தை வந்துள்ளார். பிறகு நீங்களும் பதீத பாவனி ஆகிறீர்கள். இந்த போதை இருக்கிறதா?அனைவரையும் பாவனமாக ஆக்கி ராஜ ராஜேஷ்வராக ஆக்கி கொண்டிருக்கிறார். போதை உள்ளது என்றால் மிகுந்த குஷியில் இருக்க வேண்டும். நாம் எத்தனை பேரை நமக்கு சமமாக ஆக்குகிறோம் என்று உங்கள் மனதைக் கேளுங்கள். பிரஜாபிதா பிரம்மா மற்றும் ஜகதம்பா இருவரும் ஒன்று போல உள்ளார்கள். பிராமணர்களின் படைப்பைப் படைக்கிறார்கள். சூத்திரரிலிருந்து பிராமணர் ஆவதற்கான யுக்தியை தந்தை தான் கூறுகிறார். இது எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. இது இருப்பதும் கீதையின் யுகமாக. மகாபாரதப் போர் கூட உண்மையில் நடந்திருந்தது. இராஜயோகத்தை ஒருவருக்கு மட்டும் கற்பித்திருப்பாரா என்ன? மனிதர்களுடைய புத்தியில் அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணர் நினைவு தான் உள்ளது. இங்கோ ஏராளமானோர் படிக்கிறார்கள். அமர்ந்திருப்பதும் பாருங்கள் எவ்வளவு சாதாரணமாக. சிறிய குழந்தைகள் அ, ஆ என்று படிக்கிறார்கள் அல்லவா? நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். உங்களுக்கு கூட அ, ஆ கற்பித்துக் கொண்டிருக்கிறார். அ என்றால் அப்பா மற்றும் ஆ என்பது ஆஸ்தி. என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் உலகிற்கு அதிபதி ஆகிடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார். எந்த ஒரு அசுர செயல் கூட செய்யக் கூடாது. தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். எனக்குள் எந்த ஒரு அவகுணமும் இல்லையே என்று சோதிக்க வேண்டும். நான் நிர்க்குணமானவன், எனக்குள் எந்த குணமும் இல்லை. இப்பொழுது நிர்க்குண ஆசிரமம் கூட உள்ளது. ஆனால் எந்த அர்த்தமும் கிடையாது. நிர்க்குணம் என்றால் எனக்குள் எந்த குணமும் கிடையாது. இப்பொழுது குணவானாக ஆக்குவதோ தந்தையினுடைய காரியம் ஆகும். தந்தையினுடைய பட்டம் என்ற தொப்பியை தங்கள் மீது வைக்கப்பட்டுள்ளது. தந்தை எத்தனை விஷயங்களைப் புரிய வைக்கிறார். (டைரக்ஷன்) உத்தரவுகள் கூட கொடுக்கிறார். ஜகதம்பா மற்றும் லட்சுமிக்கு இடையே உள்ள வித்தியாசங்களை தயாரியுங்கள். பிரம்மா சரஸ்வதி சங்கம யுகத்தினார். லட்சுமி நாராயணர் சத்யுகத்தினர். இந்த படங்கள் புரிய வைப்பதற்காக உள்ளன. சரஸ்வதி பிரம்மாவின் மகள் ஆவார். மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்காக படிக்கிறார். இப்பொழுது நீங்கள் பிராமணர் ஆவீர்கள். சத்யுக தேவதைகள் கூட மனிதர்களே ஆவார்கள். ஆனால் அவர்களை தேவதை என்று கூறுவார்கள். மனிதர்கள் என்று கூறினால் அது அவர்களை இழிவு படுத்துவது போலாகி விடுகிறது. எனவே தேவி தேவதை அல்லது பகவான் பகவதி என்று கூறி விடு கிறார்கள். ராஜா ராணியை பகவான் பகவதி என்று கூறினார்கள் என்றால், பின் பிரஜைகளைக் கூட கூற வேண்டி வரும். எனவே தேவி தேவதைகள் என்று கூறப்படுகிறது. திரிமூர்த்தியின் படம் கூட உள்ளது. சத்யுகத்தில் எவ்வளவு குறைவான மனிதர்கள் கலியுகத்தில் எவ்வளவு அதிகமான மனிதர்கள். அதை எவ்வாறு புரிய வைப்பது? இதற்காக பிறகு காலச் சக்கரம் கூட அவசியம் வேண்டும், கண்காட்சியில் இவ்வளவு பேரை எல்லாம் கூப்பிடுகிறார்கள். இதுவரையும் சுங்கவரி வசூலிக்கும் அதிகாரிக்கு யாருமே அழைப்பு அளிக்கவில்லை. எனவே இது போல சிந்தனை செலுத்த வேண்டும். இதில் மிகவுமே பரந்த புத்தி வேண்டும்.

 

தந்தை மீது மதிப்பு வைக்க வேண்டும். ஹுசைனின் குதிரையை எவ்வளவு அலங்கரிக்கிறார்கள். பட்டை எவ்வளவு சிறியதாக இருக்கும். குதிரை எவ்வளவு பெரியதாக இருக்கும். ஆத்மா கூட எவ்வளவு சிறிய புள்ளியாக உள்ளது. அதனுடைய அலங்காரம் எவ்வளவு பெரியதாக உள்ளது. இது அகால மூர்த்தியின் பீடமாகும் அல்லவா? சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என்ற விஷயத்தைக் கூட கீதையிலிருந்து எடுத்திருக்கிறார்கள். நான் ஆத்மாக்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். பிறகு சர்வவியாபியாக எப்படி இருக்க முடியும்? என்று தந்தை கூறுகிறார். தந்தை, ஆசிரியர் மற்றும் குரு எங்கும் நிறைந்தவராக எப்படி இருக்க முடியும்? நானோ உங்களின் தந்தை ஆவேன் மற்றும் ஞானக் கடலும் ஆவேன் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் எல்லையில்லாத சரித்திரம் பூகோளத்தைப் புரிந்து கொள்வ தால் உங்களுக்கு எல்லையில்லாத ராஜ்யம் கிடைத்துவிடும். தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். மாயை ஒரேயடியாக மூக்கை பிடித்து விடுகிறது. நடத்தை அசுத்தமான தாக ஆகி விடுகிறது. பிறகு இது போல தவறுகள் ஆகிவிட்டன என்று எழுதுகிறார்கள். நாங்கள் முகத்தைக் கருப்பாக ஆக்கிக் கொண்டு விட்டோம். இங்கோ தூய்மை கற்பிக்கப் படுகிறது. பிறகு யாராவது விழுந்து (தவறு செய்து) விட்டார்கள் என்றாலும் கூட அதில் தந்தை என்ன செய்ய முடியும்? வீட்டில் யாராவது ஒரு குழந்தை அசுத்தமாக ஆகி விட்டார், முகத்தை கருப்பாக்கி கொண்டு விட்டார் என்றால், தந்தை நீ இறந்து போய் விட்டிருந்தால் நல்லது என்பார். எல்லையில்லாத தந்தை நாடகத்தை அறிந்திருந்தாலும் கூட பிறகும் அறிவுரை கூறுவார் தான். நீங்கள் மற்றவர்களுக்கு அறிவுரை அளித்து விட்டு சுயம் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்றால், ஆயிரம் மடங்கு பாவம் ஏறி விடுகிறது. மாயை ஓங்கி அறைந்து விட்டது என்று கூறுகிறார்கள். மாயை பலமாக குத்து விடுகிறது என்றால் ஒரேயடியாக அறிவே இல்லாமல் செய்து விடுகிறது.

 

கண்கள் மிகவுமே ஏமாற்றக் கூடியவை என்று தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். ஒரு பொழுதும் எந்த ஒரு விகர்மமும் செய்யக் கூடாது. புயல்களோ நிறைய வரும். ஏனெனில் யுத்தக் களத்தில் இருக்கிறீர்கள் அல்லவா? என்னவாகும் என்று கூடத் தெரியாது. மாயை உடனே அறைந்து விடுகிறது. இப்பொழுது நீங்கள் எவ்வளவு அறிவாளி ஆகிறீர்கள். ஆத்மா தான் அறிவாளியாக ஆகிறது அல்லவா? ஆத்மா தான் அறிவற்றவராக இருந்தது. இப்பொழுது தந்தை அறிவாளியாக ஆக்குகிறார். நிறைய பேர் தேக அபிமானத்தில் இருக்கிறார்கள். நாம் ஆத்மா என்பதைப் புரிந்துக் கொள்வதில்லை. தந்தை ஆத்மாக்களாகிய நமக்கு கற்பிக்கிறார். ஆத்மாவாகிய நாம் இந்த காதுகள் மூலமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். எந்த ஒரு விகாரத்தின் விஷயத்தையும் இந்த காதுகளால் கேட்காதீர்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். தந்தை உங்களை உலகிற்கு அதிபதியாக ஆக்குகிறார். குறிக்கோள் மிகவும் உயர்ந்ததாகும். மரணம் நெருங்கும் பொழுது உங்களுக்கு பயம் ஏற்படும். இறக்கும் தறுவாயில் பகவானை நினைவு செய்யுங்கள் என்று மனிதர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூறுகிறார்கள் அல்லவா? அல்லது ஒரு சிலர் தங்களது குருவை நினைவு செய்வார்கள். தேகதாரியை நினைவு செய்ய கற்பிக்கிறார்கள். தந்தையோ என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். இதுவோ குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கட்டளையிடுகிறார். தேகதாரிகளை நினைவு செய்யக் கூடாது. தாய் தந்தை கூட தேகதாரி ஆவார்கள் அல்லவா? நானே விசித்திரமானவன், விதேகி (உடலற்றவன்) ஆவேன். இவருக்குள் அமர்ந்து உங்களுக்கு ஞானத்தை அளிக்கிறேன். நீங்கள் இப்பொழுது ஞானம் மற்றும் யோகத்தைக் கற்கிறீர்கள். ஞானக் கடலான தந்தை மூலமாக நாங்கள் ராஜ ராஜேஷ்வரி ஆவதற்காக ஞானத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஞானக் கடல் ஞானத்தையும் கற்பிக்கிறார் மற்றும் இராஜயோகத்தையும் கற்பிக்கிறார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. புத்திசாலி ஆகி, மாயையின் புயல்களிடம் ஒரு பொழுதும் தோல்வி அடையக் கூடாது. கண்கள் ஏமாற்றுகின்றன. எனவே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு விகாரி விஷயங் களையும் இந்த காதுகளால் கேட்கக் கூடாது.

 

2. நாம் எத்தனை பேரை நமக்குச் சமானமாக ஆக்குகிறோம் என்று நம் மனதை நாமே கேட்க வேண்டும். மாஸ்டர் பதீத பாவனியாகி அனைவரையும் பாவனமாக (ராஜ-ராஜேஷ்வர்) ஆக்கும் சேவை செய்துக் கொண்டிருக்கிறோமா? நம்மிடம் எந்த ஒரு அவகுணமும் இல்லையே? தெய்வீக குணங்களை எதுவரை தாரணை செய்துள்ளோம்?

 

வரதானம்:

அனைவருக்கும் அடைக்கலம் கொடுக்கக் கூடிய கருணையுள்ளம் உடைய தந்தையின் குழந்தைகள் கருணையுள்ளம் உடையவர் ஆகுக.

 

கருணையுள்ளம் உடைய தந்தையின் கருணையுள்ளம் உடைய குழந்தைகள் யாரை யாவது யாசிக்கும் ரூபத்தில் பார்க்கின்ற பொழுது அவர்களுக்கு இரக்கம் ஏற்படும் - இந்த ஆத்மாவிற்கும் அடைக்கலம் கிடைத்து விட வேண்டும், இவருக்கும் நன்மை ஏற்பட வேண்டும். அவரது சம்மந்தத்தில் யார் வந்தாலும் அவர்களுக்கும் அவசியம் தந்தையின் அறிமுகம் கொடுப்பார்கள். யாராவது வீட்டிற்கு வருகிறார்கள் எனில் முதலில் அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பார்கள், அப்படியே சென்று விட்டால் (தண்ணீர் குடிக்காமல்) தீங்காக நினைப்பர். அதே போன்று யார் தொடர்பில் வந்தாலும் அவர்களுக்கு தந்தையின் அறிமுகம் என்ற தண்ணீர் அவசியம் கொடுப்பார்கள். அதாவது வள்ளலின் குழந்தைகள் வள்ளலாக ஆகி ஏதாவது ஒன்றை கொடுங்கள், அதன் மூலம் அவருக்கு அடைக்கலம் கிடைத்து விட வேண்டும்.

 

சுலோகன்:

யதார்த்த வைராக்கிய விருக்தி (மனநிலை) என்பதன் எளிய பொருள் - எந்த அளவிற்கு விடுபட்டு இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு பிரியமானவர்களாக இருப்பீர்கள்.

 

ஓம்சாந்தி