16.11.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! நீங்கள் இந்த ஆன்மீகப் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள், உங்களுடைய வேலை இந்த உலகம் முழுவதிற்கும் தந்தையின் செய்தியை கொடுப்பதாகும்.

 

கேள்வி :

குழந்தைகளாகிய நீங்கள் என்ன தண்டோரா அடிக்கிறீர்கள் மேலும் எந்த விஷயத்தைப் புரிய வைக்கிறீர்கள்?

 

பதில்:

இந்த புதிய தெய்வீக இராஜ்யம் மீண்டும் உருவாகிக் கொண்டிருக்கிறது. பல தர்மங்கள் இப்போது அழிய வேண்டும் என்று தண்டோரா அடிக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் கவலையற்று இருங்கள். இது நாடு களுக்கிடையே நடக்கும் சண்டையாகும் என அனைவருக்கும் நீங்கள் புரிய வைக்கிறீர்கள். நிச்சயம் சண்டை நடக்கும். அதன் பிறகு தெய்வீக இராஜ்யம் வரும்.

 

ஓம் சாந்தி.

இது ஆன்மீகப் பல்கலைக்கழகம் ஆகும். முழு உலகிலும் உள்ள ஆத்மாக் கள் யாராக இருந்தாலும் பல்கலைக்கழகத்தில் தான் படிக்கின்றது. பிரபஞ்சம் என்றால் உலகம் ஆகும். இப்போது முறைப்படி பல்கலைக்கழகம் என்ற வார்த்தை உங்களுடையது ஆகும். இது ஆன்மீகப் பல்கலைக்கழகம் ஆகும். உலகியல் பல்கலைக்கழகம் கிடையாது. இது ஒன்று தான் இறை தந்தையின் பல்கலைக்கழகம் ஆகும். அனைத்து ஆத்மாக்களுக்கும் பாடம் கிடைக்கிறது. உங்களுடைய இந்த செய்தி எந்த விதத்திலாவது அனைவரையும் சென்று சேர வேண்டும். செய்தியை அளிக்க வேண்டும் அல்லவா? இந்த செய்தி முற்றிலும் எளிதாகும். அவர் நம்முடைய எல்லையற்ற தந்தை. அவரைத் தான் அனைவரும் நினைக்கிறார்கள் என குழந்தைகளுக்குத் தெரியும். அவர் நம்முடைய எல்லையற்ற பிரிய தர்ஷன் என்றும் கூறலாம். உலகத்தில் உள்ள ஜீவாத்மாக்கள் அனைவரும் அந்த ஒரு பிரியதர்ஷனை நினைக்கிறார்கள். இந்த கருத்துகளை நன்கு கடைப்பிடிக்க வேண்டும். யார் தெளிவான புத்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் நன்கு கடைப்பிடிப்பார்கள். உலகில் உள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஒருவரே. பல்கலைக் கழகத்தில் மனிதர்கள் தான் படிப்பார்கள் அல்லவா? இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நாம் தான் 84 பிறவிகளை எடுக்கிறோம் என அறிகிறீர்கள். 84 லட்சத்தின் விஷயமே கிடையாது. உலகில் உள்ள ஆத்மாக்கள் அனைவரும் இச்சமயம் பதீதமாக இருக்கிறார்கள். இது துக்க உலகம் சீ,சீ உலகம் ஆகும். அவர்களை சுகதாமத்திற்கு அழைத்துச் செல்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். அவருக்கு விடுதலை அளிப்பவர் என்ற பெயரும் உண்டு. நீங்கள் முழு உலகிற்கும் அல்லது விஷ்வத்திற்கு அதிபதியாகிறீர்கள் அல்லவா? இந்த செய்தியைத் தெரிவித்து வாருங்கள் என்று அனைவருக்கும் பாபா கூறுகின்றார். அனைவரும் தந்தையை நினைக்கிறார்கள். அவருக்கு வழிகாட்டி, லிபரேட்டர், இரக்க மனம் உடையவர் என்று கூட கூறுகிறார்கள். பல மொழிகள் இருக்கின்றது அல்லவா? அனைத்து ஆத்மாக்களும் ஒருவரை அழைக்கிறார்கள் என்றால் அவர் ஒருவரே முழு உலகிற்கும் டீச்சர் அல்லவா? தந்தை தான் அவர். ஆனால் அவர் நம் அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆசிரியர், குரு என்பது யாருக்கும் தெரியவில்லை. அனைவருக்கும் வழி காட்டு கின்றார். இந்த எல்லையற்ற வழிகாட்டியை குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிகிறீர்கள். பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. ஆத்மா என்றால் என்ன என்று ஆத்மாவைப் பற்றியும் நீங்களே அறிகிறீர்கள். முக்கியமாக பாரதம், பொதுவாக உலகில் யாருக்குமே ஆத்மா என்றால் என்ன என்று தெரியவில்லை. உலகில் ஒரு மனிதர் கூட தெரிந்தவர்கள் இல்லை. புருவ மத்தியில் மின்னக் கூடிய நட்சத்திரம் என்று கூறுகிறார்கள். ஆனால் புரிந்துக் கொள்ளவில்லை. ஆத்மா அழிவற்றது என நீங்கள் அறிந்துக் கொள்கிறீர்கள். அது ஒரு போதும் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ ஆவதில்லை. உங்களுடைய ஆத்மா இருப்பது போன்று பாபாவும் புள்ளியாக இருக்கின்றார். பெரியதோ சிறியதோ ஆவதில்லை. அவரும் ஆத்மாவே. ஆனால் பரமாத்மா, சுப்ரீம் ஆவார். உண்மையில் அனைத்து ஆத்மாக்களும் பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். இங்கே நடிப்பதற்காக வருகிறார்கள். மீண்டும் தன்னுடைய பரந்தாமம் செல்வதற்காக முயற்சி செய்கிறார்கள். பரம்பிதா பரமாத்மாவை அனைவரும் நினைக்கிறார்கள். ஏனென்றால் ஆத்மாக்களை பரமாத்மா தான் முக்திக்கு அனுப்பி வைத்தார். ஆகவே அவரை நினைக்கிறார்கள். ஆத்மா தான் தமோ பிரதானம் ஆகிறது. ஏன் நினைக் கிறார்கள். இதுவும் தெரியவில்லை. எப்படி குழந்தை அப்பா என்கிறது. அவ்வளவு தான் அதற்கு எதுவும் தெரியாது. நீங்களும் அப்பா, அம்மா என்பீர்கள் எதையும் அறியவில்லை. பாரதத்தில் ஒரே தர்மம் இருந்தது. அதற்கு தெய்வீக தர்மம் என்று பெயர். பிறகு அதில் மற்றவை நுழைய ஆரம்பித்தது. இப்போது எவ்வளவு ஆகிவிட்டது. ஆகையால் தான் இவ்வளவு சண்டைகள் நடக்கிறது. எங்கெல்லாம் அதிகமாக நுழைந்திருக் கிறார்களோ அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்துக் கொண்டே இருக்கிறார்கள். நிறைய சண்டைகள் நடந்து விட்டது. மிகவும் இருளாகி விட்டது. அனைத்திற்கும் ஒரு அளவு உண்டு அல்லவா? நடிகர்களுக்கும் ஒரு அளவு இருக்கிறது. இது முன்பே உருவாக்கப்பட்ட அளவாகும். இதில் எவ்வளவு நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் கூட குறையவோ, கூடவோ இருக்காது, எப்போது அனைத்து ஆத்மாக்களும் மேடைக்கு வருகிறார்களோ பிறகு அனைவரும் திரும்பப் போக வேண்டும். நடிகர்கள் யாரெல்லாம் இன்னமும் இருக்கிறார்களோ வந்து கொண்டே இருப்பார்கள். எவ்வளவு தான் கட்டுப்படுத்துவதற்காக தலையைப் பிய்த்துக் கொண்டாலும் முடியாது. நாங்கள் பி.கே. இவ்வாறு பிறப்பை (மக்கள் தொகையை) கட்டுப்பாடு செய்து வருகிறோம். ஒன்பது லட்சம் பேர் தான் வசிப்போம் என்று கூறுங்கள். பிறகு மக்கள் தொகை குறைந்து விடுகிறது. நாங்கள் அனைவருக்கும் சத்தியத்தை தெரிவிக்கிறோம். இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். புதிய உலகம், புதிய மரம் நிச்சயம் சிறியதாகத் தான் இருக்கும். இங்கேயோ இதைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் மேலும் தமோபிரதானமாக மாறிக் கொண்டே போகிறது. வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது. யாரெல்லாம் நடிகர்கள் வர வேண்டி இருக்கிறதோ இங்கே தான் வந்து உடலை ஏற்பார்கள். இந்த விஷயங்கள் வேறு யாருக்கும் புரிவதில்லை. கூர்மையான புத்தி உடையவர்கள் புரிந்துக் கொள்கிறார்கள். இராஜ்யத்தில் வித விதமாக நடிக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். சத்யுகத்தில் எந்த இராஜ்யம் இருந்ததோ, அது மீண்டும் உருவாகிக் கொண்டிருக்கிறது. மாறிவிடு வார்கள். இப்போது நீங்கள் தமோ பிரதானத்திலிருந்து சதோபிரதானமான வகுப்பிற்கு மாறிக் கொண்டிருக்கிறீர்கள். பழைய உலகத்திலிருந்து புதிய உலகத்திற்குச் செல்கிறீர்கள். உங்களுடைய படிப்பு இந்த உலகத்திற்குக் கிடையாது. இது போன்ற பல்கலைக்கழகம் வேறு எதுவும் கிடையாது. நான் உங்களுக்கு அமர உலகத்திற்காக படிக்க வைக்கிறேன் என்று இறை தந்தையே கூறுகிறார். இந்த மரண உலகம் அழியப் போகிறது. சத்யுகத்தில் இந்த லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. இது எப்படி உருவாகியது என்று யாருக்கும் தெரியவில்லை.

 

எங்கே நீங்கள் சொற்பொழிவாற்றுகிறீர்களோ அங்கே நிச்சயம் லஷ்மி நாராயணனின் சித்திரத்தை வையுங்கள். அதில் நிச்சயம் தேதி போன்றவைகள் இருக்கட்டும். கிறிஸ்தவ தர்மத்தின் இராஜ்யம் இருந்தது என்று கூறுவது போல புதிய உலகம் ஆரம்பத்திலிருந்து 1250 வருடம் வரை இந்த வம்சத்தின் இராஜ்யம் இருந்தது என்று குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்கலாம். ஒருவர் பின் ஒருவர் வருகிறார்கள். தேவதா வம்சம் இருந்த போது மற்ற எதுவும் இல்லை. மீண்டும் இப்போது இந்த வம்சம் உருவாகிக் கொண்டி ருக்கிறது. மற்ற அனைத்தும் அழிய வேண்டும். போர் எதிரில் இருக்கிறது. பாகவதத்தில் இதைப் பற்றிய கதை கள் எழுதப் பட்டிருக்கிறது. சிறிய வயதில் இந்த கதைகள் போன்றவைகளை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இப்போது இராஜ்யம் எப்படி உருவாகிறது என்பதை நீங்கள் அறிகிறீர்கள். நிச்சயம் பாபா தான் இராஜயோகத்தைக் கற்பித்தார். யார் தேர்ச்சி அடைகிறார்களோ அவர்கள் வெற்றி மாலையில் மணியாக முடியும். வேறு யாரும் இந்த மணியைப் பற்றி அறியவில்லை. உங்களுக்குத் தான் தெரியும். உங்களுடையது இல்லற மார்க்கமாகும். மேலே பாபா நிற்கிறார், அவருக்கு தனக்கென்று உடல் இல்லை. பிறகு பிரம்மா சரஸ்வதியிலிருந்து லஷ்மி நாராயணன் ஆகின்றனர். முதலில் தந்தை வேண்டும். பிறகு ஜோடி, ருத்ராட்ச மணிகள் இருக்கின்றது அல்லவா? நேபாளத்தில் ஒரு மரம் இருக்கிறது. அங்கிருந்து இந்த ருத்ராட்ச மணிகள் வருகின்றன. அதில் உண்மையான வையும் இருக்கிறது. எவ்வளவு சிறியதோ அவ்வளவு விலை அதிகம். இப்போது நீங்கள் கருத்தை புரிந்துக் கொண்டீர்கள். விஷ்ணுவின் வெற்றி மாலை மற்றும் ருண்ட (மண்டை ஓடு) மாலை உருவாகிறது. அவர்கள் மாலையை உருட்டிக் கொண்டே ராம் ராம் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். காரணம் எதுவும் புரிவதில்லை. மாலையை உருட்டுகிறார்கள். இங்கேயோ என்னை நினையுங்கள் என பாபா கூறுகிறார். இல்லை என்றால், இதுவே தொடர்ந்து உச்சரித்தல் ஆகும். வாயின் மூலம் எதுவும் கூற வேண்டியதில்லை. பாடல்கள் கூட ஸ்தூலம் ஆகிவிடுகிறது. குழந்தைகள் தந்தையை மட்டும் நினைக்க வேண்டும். இல்லையென்றால், பாட்டு போன்றவைகள் தான் நினைவில் வந்து கொண்டே இருக்கும். இங்கே முக்கியமான விசயம் நினைவாகும். நீங்கள் சத்தத்திலிருந்து விடுபட்டுப் போக வேண்டும். பாபாவின் டைரக்ஷன் மன்மனாபவ ஆகும். பாட்டு பாடுங்கள் கத்திக் கதறுங்கள் என பாபா ஒரு போதும் கூறவில்லை. என்னுடைய புகழைப் பாடவேண்டிய அவசியம் இல்லை. அவர் ஞானக்கடல், சுகம் சாந்தியின் கடல் என்று உங்களுக்குத் தெரியும் மனிதர்களுக்குத் தெரியவில்லை. அப்படியே பெயர் வைத்து விட்டார்கள். உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. நான் எப்படி இருக்கிறேன், ஆத்மாக் களாகிய நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று தந்தையே வந்து தனது பெயர் ரூபத்தை அளிக்கிறார். நீங்கள் நடிப்பதற்கு மிகவும் உழைக்கிறீர்கள். அரைக் கல்பம் பக்தி செய்திருக் கிறீர்கள். நான் இவ்வாறு நடிப்பதற்கு வர வில்லை. நான் சுக துக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கிறேன். நீங்கள் துக்கத்தை அனுபவிக்கிறீர்கள். பிறகு சத்யுகத்தில் நீங்களே சுகத்தை அனுபவிக்கிறீர்கள். உங்களுடைய நடிப்பு என்னை விட உயர்ந்ததாகும். நான் அரைக் கல்பத்திற்கு அங்கேயே வானப் பிரஸ்தத்தில் ஓய்வாக அமர்ந்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். நான் அங்கே அமர்ந்து உங்களின் கூப்பாட்டை கேட்பதில்லை. என்னுடைய நடிப்பு இச்சமயம் தான். நாடகத்தின் பாகத்தை நான் அறிகிறேன். இப்போது நாடகம் முடியப் போகிறது. நான் சென்று தூய்மையற்றவர்களை தூய்மையாக்கக் கூடிய நடிப்பை நடிக்க வேண்டும். வேறு எந்த விஷயமும் இல்லை. பரமாத்மா சர்வ சக்திவான், நமக்குள்ளேயே இருக்கிறார், அனைவருக்குள்ளும் என்னென்ன ஓடுகிறது என்பதை அறிகின்றார் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு இல்லை என்று பாபா கூறுகின்றார். நீங்கள் முற்றிலும் தமோபிரதானமாக (அழுக்காக) மாறிவிடும் போது சரியான நேரத்தில் நான் வர வேண்டியிருக்கிறது. சாதாரண உடலில் தான் வருகிறேன். குழந்தைகளாகிய உங்களை துக்கத்திலிருந்து விடுவிக்கிறேன். பிரம்மா மூலமாக ஒரு தர்மம் ஸ்தாபனையாகிறது. சங்கர் மூலமாக பல தர்மங்கள் அழிகிறது... ஐயோ, ஐயோவிற்குப் பிறகு வெற்றி முழக்கம் ஏற்படும். எவ்வளவு காலம் ஐயோ, ஐயோ என்பது ஏற்படப் போகிறது. ஆபத்துக்களில் இறந்துக் கொண்டே இருப்பார்கள். இயற்கை சீற்றங்கள் கூட மிகவும் உதவி செய்கிறது. இல்லை என்றால் மனிதர்கள் மிகவும் நோயாளிகளாக துக்கமடைந்து விடுவார்கள். குழந்தைகள் துக்கம் அடையக் கூடாது என்பதற்காகத் தான் இந்த இயற்கை சீற்றங்கள் கூட வேகமாக வந்து அனைவரையும் அழித்து விடுகிறது என பாபா கூறுகிறார். இதற்கு முன்பாக அணுகுண்டுகள் ஒன்றுமே இல்லை. இயற்கை சீற்றங்கள் தான் மிகவும் உதவி செய்கிறது. பூகம்பத்தில் பலர் மடிந்து போகிறார்கள். தண்ணீர் (வெள்ளம்) ஒன்று, இரண்டு முறை பெருக்கு ஏற்பட்டால் அனைத்தும் அழிந்தது. நிச்சயம் சமுத்திரம் பொங்கும், பூமி கூட முழ்கிவிடும். 100 அடி உயரத்திற்கு கடல் அலை (தண்ணீர்) பொங்கினால் என்ன செய்வீர்கள்? இதுவே ஐயோ, ஐயோவின் காட்சியாகும். இப்படிப்பட்ட காட்சியை பார்ப்பதற்கு தைரியம் வேண்டும். முயற்சியும் செய்ய வேண்டும். பயமற்றும் இருக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்குள் முற்றிலும் அகங்காரம் இருக்கக் கூடாது. ஆத்ம உணர்வுடையவராக இருங்கள். ஆத்ம உணர்வில் இருப்பவர்கள் மிகவும் இனிமை யாக இருக்கிறார்கள். நான் நிராகார், விசித்திரமானவன் என பாபா கூறுகின்றார். இங்கே சேவை செய்வதற்காக வருகிறேன். என்னுடைய புகழ் எவ்வளவு பாடுகிறார்கள் பாருங்கள். ஞானக் கடல்..... ஓ, பாபா பிறகு பதீத உலகத்திற்கு வாருங்கள் என கூறுகிறார்கள். நீங்கள் மிகவும் நன்றாகவே அழைக்கிறீர்கள். சொர்க்கத்திற்கு வந்து சுகத்தைப் பாருங்கள் என கூறுவது கிடையாது. பதீத பாவனா நாங்கள் பதீதமாகி விட்டோம், எங்களை தூய்மை யாக்குங்கள் என்று கூறுகிறார்கள். அழைப்பு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ஒரேயடி யாக தமோபிரதான அழுக்கான உலகத்தில் அழுக்கான உடலில் அழைக்கிறீர்கள். மிகவும் நன்றாகவே பாரத வாசிகள் அழைக்கிறீர்கள். நாடகத்தில் ரகசியமே இப்படித்தான் இருக் கிறது. என்னுடைய பல பிறவிகளின் கடைசி பிறவி என்று இவருக்கு ஒன்றும் தெரியாது. பாபா பிரவேசம் ஆனதும் தான் தெரிவிக்கிறார். பாபா ஒவ்வொரு விஷயத்தின் ரகசியத்தையும் புரிய வைத்துள்ளார். பிரம்மாவைத் தான் மனைவியாக்க வேண்டும். இவர் என்னுடைய மனைவி என பாபாவே கூறுகிறார். நான் இவருக்குள் பிரவேசம் ஆகி இவர் மூலமாக உங்களை என்னுடையவர் ஆக்கிக் கொள்கிறேன். இவர் உண்மையிலும் உண்மையான பெரிய அம்மா ஆகி விட்டார். மேலும் தத்தெடுக்கப்பட்ட அம்மாவாக இருக்கிறார். தாய் தந்தை என்று இவரை நீங்கள் கூறலாம். சிவபாபாவை தந்தை என்று மட்டும் தான் கூறலாம். இவர் பிரம்மா பாபா, அம்மா குப்தமாக இருக்கிறார். பிரம்மா தாய் ஆவார். ஆனால் ஆண் உடலாக இருக்கிறது. இவர் பராமரிக்க முடியாது. ஆகையால் பெண் குழந்தையை தத்தெடுத்திருக்கிறார். மாதேஸ்வரி என்று பெயர் வைத்துள்ளார். தலைமையாகி விட்டார். நாடகத்தின்படி ஒரு சரஸ்வதிதான். மற்றபடி துர்க்கை, காளி என்று பல பெயர்கள் இருக் கின்றது. தாய் தந்தை ஒருவர் தான் இருக்கிறார் அல்லவா? நீங்கள் அனைவரும் குழந்தைகள் ஆவீர். பிரம்மாவின் மகள் சரஸ்வதி என்று பாடப் பட்டிருக்கிறது. நீங்கள் பிரம்மா குமார், குமாரிகள் அல்லவா? உங்களுக்கு நிறைய பெயர் இருக்கிறது. இந்த விசயங்கள் அனைத்தையும் நீங்களும் வரிசைக் கிரமமாகத்தான் புரிந்துக் கொள்கிறீர்கள். படிப்பில் வரிசைக்கிரமம் இருக்கிறது அல்லவா. ஒருவர் போல இன்னொருவர் இருப்பதில்லை. இந்த இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக் கிறது. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம் ஆகும். இதை விஸ்தாரமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். நிறைய கருத்துகள் இருக்கின்றது. வக்கீலுக்குப் படிக்கிறார்கள் என்றால் அவர்களுக்குள்ளும் வரிசைக்கிரமம் இருக்கிறது. ஒரு சில வக்கீல்கள் இரண்டு மூன்று லட்சம் சம்பாதிக்கிறார்கள். ஒரு சிலர் பாருங்கள், கிழிந்து போன ஆடையை அணிந்திருக்கிறார்கள். இதிலும் இப்படி தான்.

 

இது சர்வதேச போர் என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அனைவரும் கவலையற்று இருங்கள், போர் நிச்சயம் நடக்கும் என்று அனைவருக்கும் புரிய வைக்கிறீர்கள். புதிய தெய்வீக இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று தண்டோரா போடுகிறீர்கள். பல தர்மங்கள் அழியும், எவ்வளவு தெளிவாக இருக்கிறது. பிரஜா பிதா பிரம்மாவிடமிருந்து இந்த பிரஜைகள் படைக்கப்படுகிறார்கள். என்னுடைய முக வம்சாவளி என்று கூறுகிறார்கள். நீங்கள் வாய் வழி வம்ச பிராமணர்கள். அவர்கள் வயிற்று வழி வம்ச பிராமணர்கள். அவர்கள் பூஜாரிகள். நீங்களோ இப்போது பூஜைக் குரியவர் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நாம் பூஜைக்குரிய தேவதை ஆகிக் கொண்டிருக் கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். உங்கள் மீது ஒளிக் கிரீடம் இல்லை. உங்களுடைய ஆத்மா தூய்மையாகும் போது இந்த உடலை விட்டு விடும். இந்த சரீரத்தின் மீது உங்களுக்கு ஒளிக் கிரீடம் கொடுக்க முடியாது. அழகாக இருக்காது. இச்சமயம் நீங்கள் மகிமைக்குரியவராக இருக்கிறீர்கள். இச்சமயம் யாருடைய ஆத்மாவும் தூய்மையாக இல்லை. ஆகவே யார் மீதும் இச்சமயம் ஒளி கொடுக்க முடியாது. சத்யுகத்தில் தான் ஒளி இருக்கிறது. இரண்டு கலைகள் குறைந்தவர்களுக்குக் கூட இந்த ஒளியைக் கொடுக்க முடியாது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. தன்னுடைய நிலையை கடைசி அழிவின் காட்சிகளை பார்க்கும் அளவிற்கு ஆடாமல், பயமற்றவராக வைத்துக் கொள்ள வேண்டும். ஆத்ம உணர்வடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.

 

2. புது உலகில் உயர்ந்த பதவி அடைவதற்கு படிப்பில் முழு கவனம் கொடுக்க வேண்டும். தேர்ச்சி அடைந்து வெற்றி மாலையில் மணியாக வேண்டும்.

 

வரதானம்:

பலமற்ற, மனம் உடைந்து போன, சக்தியற்ற ஆத்மாக்களுக்கு அதிகப்படியான சக்தியை தரக்கூடிய ஆன்மீக இரக்கமனமுடையவர் ஆகுக.

 

யார் ஆன்மீக இரக்கமனமுடைய குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்கள் மகாதானி ஆகி முற்றிலும் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளவர்களிடமும் நம்பிக்கையை கொண்டு வரச் செய்வார்கள். சக்தியற்றவர்களை சக்திசாலியாக மாற்றிவிடுவார்கள். தானம் என்பது எப்பொழுதுமே ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தான் கொடுக்கப் படுகிறது. எனவே யார் பலமற்ற, மனமுடைந்தவர்களாக, சக்தியற்ற பிரஜை நிலையிலுள்ள ஆத்மாக்களாக இருக்கிறார்களோ, அவர்கள் மீது ஆன்மீக இரக்கமனமுடையவர் ஆகி மகாதானி ஆகுங்கள். தங்களுக்குள் ஒருவர் மற்றவர்கள் மீது மகாதானி ஆவது அல்ல. அவர்கள் சகயோகி துணையாக இருப்பவர்கள், சகோதர சகோதரர்களாக இருப்பவர்கள், ஒரேவிதமான முயற்சியாளர்களாக இருக்கிறோம், சகயோகம் கொடுங்கள், தானம் அல்ல.

 

சுலோகன்:

சதா ஒரு பாபாவின் உயர்ந்த தொடர்பில் இருந்தால் மற்ற எந்தவிதமான தொடர்பின் தாக்கமும் ஏற்படுத்த முடியாது.

 

ஓம்சாந்தி