16-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! வைரத்திற்குச் சமமாக இருந்த பாரதம், பதீதமானதால் (தூய்மை இழந்ததால்) ஏழையாகி விட்டது, இதனை தூய்மையான வைரம் போல ஆக்க வேண்டும், இனிமையான தெய்வீக மரத்தின் நாற்று நட வேண்டும்.

கேள்வி:
தந்தையின் எந்த கடமையில் குழந்தைகள் உதவியாளர் ஆக வேண்டும்?

பதில்:
முழு உலகத்தில் ஒரு தெய்வீக அரசாங்கத்தை ஸ்தாபனை செய்ய வேண்டும், பல தர்மங் களின் வினாசம் மற்றும் ஒரு சத்தியமான தர்மத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டும் - இதுவே தந்தையின் கடமையாகும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த காரியத்தில் உதவியாளர் ஆக வேண்டும். உயர் பதவி பெற முயற்சி செய்ய வேண்டும். நாம் சொர்க்கத்திற்கு என்னவோ போகத் தானே போகிறோம் என்று அப்படி சிந்திக்கக் கூடாது.

பாடல்:
நீங்களே தாயும், தந்தையும். . . .

ஓம் சாந்தி.
உலகத்தில் மனிதர்கள் நீயே தாயும் தந்தையும்...... என்று பாடுகின்றனர். ஆனால் யாரைக் குறித்து பாடுகிறோம் என்பது தெரியாது. இதுவும் கூட அதிசயமான விஷயமாகும். வெறுமனே சொல்ல மட்டும் செய்கிறார்கள். இந்த தாய் தந்தை யார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இவர் பரந்தாமத்தில் வசிப்பவர். பரந்தாமம் ஒன்றுதான். சத்யுகம் பரந்தாமம் என்று சொல்லப்படுவதில்லை. சத்யுகம் இங்கே இருக்கும் அல்லவா. நாம் அனைவரும் பரந்தாமத்தில் இருப்பவர்கள். ஆத்மாக்களாகிய நாம் பரந்தாமம், நிர்வாண தேசத்தில் இருந்து இந்த சாகார சிருஷ்டியில் வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சொர்க்கம் என்று மேலே எதுவும் இல்லை. நீங்களும் கூட பரந்தாமத்தில் இருந்துதான் வருகிறீர்கள். ஆத்மாக் களாகிய நாம் சரீரத்தின் மூலம் நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எத்தனை பிறவிகள் எடுக்கிறோம், எப்படி நடிப்பை நடிக் கிறோம் என்பதை இப்போது அறிவீர்கள். அவர் தூர தேசத்திலிருப்பவர், பரதேசத்தில் வந்திருக் கிறார். இப்போது பரதேசம் என்று ஏன் கூறப்படுகிறது? நீங்கள் பாரதத்தில் வருகிறீர்கள் அல்லவா. ஆனால் முதன் முதலில் தந்தையால் ஸ்தாபனை செய்யப்பட்ட சொர்க்கத்தில் வருகிறீர்கள், பிறகு அது நரகமாக, இராவண இராஜ்யமாக ஆகி விடுகிறது. பல தர்மங்கள், பல அரசாங்கங்கள் ஆகி விடுகின்றன. பிறகு தந்தை வந்து ஒரு இராஜ்யமாக ஆக்கி விடுகிறார். இப்போது பல அரசாங்கங் கள் உள்ளன. அனைவரும் சேர்ந்து ஒன்றாகி விட வேண்டும் என்று சொல்லியபடி இருக்கின்றனர். இப்போது அனைவரும் சேர்ந்து எப்படி ஒன்றாக முடியும்? 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பாரதத்தில் ஒரு அரசாங்கம்தான் இருந்தது, உலகின் ஆல்மைட்டி அத்தாரிட்டி யாக (அனைத்து அதிகாரங்களும் நிறைந்தவர்களாக) லட்சுமி- நாராயணர் இருந்தனர். உலகத்தில் இராஜ்யத்தை ஆள்வதற்கு, வேறு யாரும் அதிகாரமிக்கவர்களாக இல்லை. அனைத்து தர்மங்களும் ஒரு தர்மத்தில் வரமுடியாது. சொர்க்கத்தில் ஒரே இராஜ்யம்தான் இருந்தது, ஆகையால் அனைவரும் சேர்ந்து ஒன்றாகி விடவேண்டும் என்று கூறுகின்றனர். நாம் இந்த பல இராஜ்யங்களை அழித்து ஒரு ஆதி சனாதன தேவதா இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்று இப்போது தந்தை கூறுகிறார். சர்வ சக்திவான், உலகின் ஆல்மைட்டி அத்தாரிட்டியின் வழிப்படி நாங்கள் பாரதத்தில் ஒரு தேவதா இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்று நீங்களும் கூறுகிறீர்கள் அல்லவா. தேவதா இராஜ்யத்தைத் தவிர வேறு எதுவும் ஒரு இராஜ்யமாக இருப்பதில்லை. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பாரதத்தில் அல்லது முழு உலகத்தில் ஒரு தேவதா இராஜ்யம் இருந்தது, இப்போது உலகின் தேவதா இராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வந்துள்ளார். குழந்தைகளாகிய நாம் அவருடைய உதவியாளர்கள். இந்த ரகசியம் கீதையில் உள்ளது. இது ருத்ர ஞான யக்ஞம். ருத்ரன் என்று நிராகாரருக்கு கூறப்படுகிறது, கிருஷ்ணர் அல்ல. ருத்ரன் என்ற பெயரே நிராகாரருடையதாகும். பல பெயர்களைக் கேட்டு மனிதர்கள் ருத்ரன் வேறு சோம்நாத் வேறு என்று புரிந்து கொண்டுள்ளனர். ஆக இப்போது ஒரு தேவதா இராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டும். சொர்க்கத்திற்கு போகத்தான் போகிறோம் என்ற அளவில் மட்டும் குஷியடைந்து விடக்கூடாது. பாருங்கள் நரகத்தில் பதவிக்காக எவ்வளவு மண்டையை உடைத்துக் கொள்கின்றனர். ஒன்று பதவி கிடைக்கிறது, மற்றொன்று நிறைய வருமானத்தை ஈட்டுகின்றனர். பக்தர்களுக்கு ஒரு பகவான் தேவை, இல்லாவிட்டால் அலைந்து திரிவார்கள். இங்கோ அனைவரையும் பகவான் என்று கூறிவிடுகின்றனர். பலரை அவதாரம் என்று ஏற்றுக் கொள்கின்றனர். நான் ஒரு முறை தான் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். பதீத பாவனா வாருங்கள் என்று பாடவும் செய்கின்றனர். முழு உலகமும் தூய்மையற்றிருக்கிறது, அதிலும் கூட பாரதம் அதிக பதீதமாக (தூய்மையின்றி) உள்ளது. பாரதம் தான் ஏழையாக உள்ளது, பாரதம்தான் வைரம் போல் இருந்தது. உங்களுக்கு புதிய உலகில் இராஜ்யம் கிடைக்க வேண்டும். ஆக கிருஷ்ணரை பகவான் என்று கூற முடியாது என்று தந்தை புரிய வைக்கிறார். ஒரு நிராகார பரமபிதா பரமாத்மாதான் பகவான் என்று கூறப்படுகிறார், அவர் பிறப்பு இறப்பு அற்றவர். மனிதர்கள் கூறி விடுகின்றனர் - அவரும் பகவான், நானும் பகவான், இங்கே மகிழ்ச்சியாக இருக்க வந்துள்ளார். மிகவும் போதையுடன் இருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் நீயே நிறைந்திருக்கிறாய், எங்கும் எதிலும் உன்னுடைய தாக்கம் தான். நானே நீ, நீயே நான் என்று நடனம் ஆடியபடி இருக்கின்றனர். அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் சீடர்கள் உள்ளனர். பக்தர்கள் பகவானை வந்தனை செய்தபடி இருக்கின்றனர். பக்தியில் பாவனையுடன் பூஜை செய்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கு காட்சி காட்டுகிறேன் என்று பாபா கூறுகிறார். ஆனால் அவர்கள் என்னை சந்திப்பதில்லை. நான் சொர்க்கத்தின் படைப்பாளி. அவர்களுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுக்கிறேன் என்பதல்ல. பகவான் ஒரே ஒருவர்தான். அனைவரும் மறுபிறவிகள் எடுத்து எடுத்து அபலைகளாகி விட்டனர் என்று தந்தை கூறுகிறார். இப்போது நான் பரந்தாமத்தில் இருந்து வந்துள்ளேன். நான் ஸ்தாபனை செய்யக் கூடிய சொர்க்கத்தில் பிறகு நான் வருவதில்லை. நாங்கள் சுயநலமற்ற சேவை செய்கிறோம் என்று பல மனிதர்கள் கூறுகின்றனர். ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பலன் கண்டிப்பாக கிடைக்கிறது. தானம் செய்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும் அல்லவா. நீங்கள் செல்வந்தராகியுள்ளீர்கள், ஏனென்றால் கடந்த காலத்தில் தான-புண்ணியங்கள் செய்துள்ளீர் கள், இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள், எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு எதிர்காலத்தில் உயர் பதவி அடைவீர்கள். இப்போது உங்களுக்கு எதிர்காலத்தின் பிறவி பிறவிகளுக்காக நல்ல கர்மங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. மனிதர்கள் அடுத்த பிறவிக்காக செய்கின்றனர். பிறகு பூர்வ ஜென்ம பலன் என்று கூறுகின்றனர். சத்ய, திரேதா யுகங்களில் இப்படி கூறுவதில்லை. கர்மங்களின் பலன் 21 பிறவிகளுக்கு இப்போது உருவாக்கப்படுகிறது. சங்கம யுகத்தின் முயற்சியின் பலன் 21 பிறவிகள் நடக்கிறது. நாங்கள் உங்களைப்போல 21 பிறவிகளுக்கு சுகமாக இருக்கக்கூடிய பலனை உருவாக்குகிறோம் என்று சன்னியாசிகள் கூற முடியாது. நல்ல மற்றும் கெட்ட பலன் பகவான் கொடுக்க வேண்டும் அல்லவா. ஆக, ஒரே ஒரு தவறு ஏற்பட்டு விட்டது - கல்பத்தின் ஆயுளை நீளமாக்கி விட்டனர். 5 ஆயிரம் வருடத்தின் கல்பம் என்று பலர் கூறுகின்றனர். உங்களிடம் முஸ்லிம்கள் வந்த போது கல்பத்தின் ஆயுள் சரியாக 5 ஆயிரம் வருடங்கள் என்று அவர்களும் கூறினார்கள். இங்குள்ள விஷயங்களைக் கேட்டிருப்பார்கள். படங்கள் அனைவரிடமும் செல்கின்றன, அதைக் கூட அனைவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது ருத்ர ஞான யக்ஞம், இதிலிருந்து வினாசத்தின் ஜுவாலை வெளிப்படுகிறது, இதன் மூலம் சகஜ ராஜயோகம் கற்றுத் தரப்படுகிறது. கிருஷ்ணருடைய ஆத்மா இப்போது இறுதிப் பிறவியில் சிவனிடமிருந்து (ருத்ரனிடமிருந்து) ஆஸ்தி எடுத்துக் கொண்டிருக்கிறது, இங்கே அமர்ந்துள்ளது. பாபா வேறு இவர் வேறு. பிராமணருக்கு உணவு படைக்கும்போது ஆத்மாவை அழைக்கின்றனர் அல்லவா. பிறகு அந்த ஆத்மா பிராமணருக்குள் வந்து பேசுகிறது. தீர்த்த ஸ்தலங்களிலும் கூட குறிப்பாக சென்று அழைக்கின்றனர். இப்போது ஆத்மாவுக்கு எவ்வளவு காலம் ஆகியுள்ளது, பிறகு அந்த ஆத்மா எப்படி வருகிறது, என்ன நடக்கிறது? நான் மிகவும் சுகத்துடன் இருக்கிறேன், இந்த இடத்தில் (வீட்டில்) பிறவி எடுத்துள்ளேன் என்று கூறுகிறது. என்ன நடக்கிறது? ஆத்மா வெளியேறி வந்துள்ளதா? நான் பாவனைக்கான பலனைக் கொடுக்கிறேன் மற்றும் அவர்கள் குஷியடை கின்றனர். இதுவும் நாடகத்தில் ரகசியமாகும். பேசுகின்றனர் என்றால் நடிப்பு நடக்கிறது. பேச வில்லை என்றால் நாடகத்தில் பதிவு இல்லை என்று அர்த்தம். தந்தையின் நினைவில் இருந்தால் பாவ கர்மங்கள் அழியும், வேறு எந்த உபாயமும் இல்லை. ஒவ்வொருவரும் சதோ, ரஜோ, தமோவில் வரத்தான் வேண்டும். உங்களை புதிய உலகத்தின் எஜமான் ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார். மீண்டும் பரந்தாமத்திலிருந்து பழைய உலகத்தில், பழைய சரீரத்தில் வருகிறேன். இவர் (பிரம்மா) பூஜைக் குரியவராக இருந்தார், பூஜாரி ஆகினார், மீண்டும் பூஜைக்குரிய வராக ஆகிறார். தத்தத்வம். உங்களையும் ஆக்குகிறேன். முதல் எண்ணில் வரும் முயற்சியாளர் இவர் (பிரம்மா). அதனால்தான் மாதேஸ்வரி, பிதாஸ்ரீ என்று கூறுகிறீர்கள். நீங்கள் சிம்மாசன அதிகாரி ஆகக் கூடிய முயற்சி செய்யுங்கள் என்று தந்தையும் கூறுகிறார். இந்த ஜகதம்பா அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார். மாதா (தாய்) இருக்கிறார் என்றால் பிதாவும் (தந்தையும்) இருப்பார், மற்றும் குழந்தைகளும் இருப்பார்கள். நீங்கள் அனைவருக்கும் வழி காட்டுகிறீர்கள், சத்யுகத்தில் உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறுகின்றன. வீட்டில் இருந்தாலும் கூட முழுமையான நினைவை ஈடுபடுத்தினால் இங்குள்ளவர்களையும் விட உயர்ந்த பதவியை அடைய முடியும் என்று பாபா கூறுகிறார்.

பந்தனத்திலிருப்பவர்களும் நிறைய பேர் இருக்கின்றனர். இரவில் கூட உள்துறை அமைச்சருக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தோம் அல்லவா - இவர்களுக்காக ஏதாவது உபாயத்தை உருவாக்க வேண்டும் அதன் மூலம் இந்த அபலைகள் மீது கொடுமைகள் இழைக்கப்படாமல் இருக்கும். ஆனால் இரண்டு மூன்று முறை கேட்கும்போது அவர்களின் நினைவுக்கு வரும். அதிர்ஷ்டத்தில் இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள். சிக்கலான ஞானம் அல்லவா. சீக்கிய தர்மத்தவர்களுக்கும் கூட தெரிந்து விட்டது என்றால் புரிந்து கொள்வார்கள் - மனிதரிலிருந்து தேவதைகளாக்கினார்..... யார்? ஓர் ஓம் கார் சத் நாம், இது அவருடைய மகிமை அல்லவா. அகால மூர்த்தி. பிரம்ம தத்துவம் அவரது சிம்மாசனம். சிம்மாசனத்தை விட்டு வாருங்கள் என்று கூறுகின்றனர் அல்லவா. தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார், சிருஷ்டியின் முதல், இடை, கடைசியை அறிந்தவர், அனைவரின் உள்ளத்தையும் அறிந்தவர் என்பதல்ல. சத்கதிக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று பகவானை நினைவு செய்கின்றனர். நான் உலகின் ஆல்மைட்டி அத்தாரிட்டி இராஜ்யத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறேன் என்று பாபா கூறுகிறார். பிரிவினை ஏற்பட்டுள்ளது, இவர்கள் அனைவரும் வெளியேறி விடுவார்கள். நம்முடைய தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களின் மரக்கன்று தான் நடப்பட வேண்டும். மரம் மிகப் பெரியதாகும். அதில் இனிமையிலும் இனிமையானவர்கள் தேவி-தேவதைகள். அவர்களுடைய மரக்கன்று மீண்டும் நடப்பட வேண்டும். பிற தர்மத்தவர்கள் யார் வருகின்றனரோ, அவர்கள் மரக்கன்று ஏதும் நடுவதில்லை.

நல்லது, இன்று சத்குருவாரமாக உள்ளது. தந்தை கூறுகிறார் - குழந்தைகளே, ஸ்ரீமத்படி நடந்து தூய்மையடைந்தீர்கள் என்றால் உடன் அழைத்துச் செல்வேன். பிறகு வெல்வெட் ராணியாக வேண்டுமானலும் ஆகுங்கள், பட்டு ராணியாக வேண்டுமானாலும் ஆகுங்கள்.ஆஸ்தி எடுக்க வேண்டுமென்றால் என் வழிப்படி நடந்து செல்லுங்கள். நினைவின் மூலம்தான் நீங்கள் தூய்மையற்றவரிலிருந்து தூய்மை ஆவீர்கள். நல்லது,

பாப்தாதா மற்றும் இனிமையான மம்மாவின் காணாமல் கண்டெடுத்த செல்லக் குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் மற்றும் சலாம்-மாலேக்கம் (எஜமானுக்கு வணக்கம்) நலமாக இருக்க வாழ்த்துக்கள்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சங்கம யுகத்தின் முயற்சிக்கான பலன் 21 பிறவிகளுக்கு நடக்க வேண்டும் என்ற இந்த விஷயத்தை நினைவில் வைத்து உயர்ந்த கர்மங்கள் செய்ய வேண்டும். ஞான தானத்தின் மூலம் தன்னுடைய பலனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

2. இனிமையான தெய்வீக மரத்தின் கன்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஆகையால் மிகவும் இனிமையானவர் ஆக வேண்டும்.

வரதானம்:
பிராமண வாழ்க்கையின் விசேசத் தன்மைகளையும், அதிசயங்களையும் நினைவில் வைத்து சேவை செய்யக்கூடிய சாட்சியானவராக ஆகுங்கள்.

இந்தப் பிராமண பிறப்பு என்பது திவ்யமான பிறப்பாகும். சாதாரண பிறப்பெடுத்துள்ள ஆத்மாக்கள் தங்களுடைய பிறந்த நாள், திருமண நாள், நண்பர்கள் தினம் என்று தனித்தனியே கொண்டாடுவர். ஆனால், உங்களுடைய பிறந்த நாள், திருமண நாள், அன்னையர் தினம், தந்தையர் தினம், நிச்சயதார்த்த தினம் அனைத்தும் ஒரே நாள் ஆகும். ஏனெனில் உங்கள் அனைவருடைய வாக்குறுதி யாதெனில்... ஒரு தந்தையைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என்பதாகும். எனவே, இந்தப் பிறப்பினுடைய விசேசங்களையும், அதிசயங்களையும் நினைவில் வைத்துக் கொண்டு சேவையின் நடிப்பை நடிக்க வேண்டும். சேவையில் பிறருக்கு உதவியாளர் ஆகுங்கள். ஆனால், சாட்சியாக இருந்து உதவியாளர் ஆகுங்கள். அதேசமயம் யார் மீதும் வசமாகாமல் இருங்கள்.

சுலோகன்:
யாருடைய வாழ்க்கையில் பணிவுத்தன்மையும், அதிகாரமும் சமநிலையில் உள்ளதோ அவர்களே கவலையற்ற எஜமானர் ஆவார்.


மாதேஸ்வரி அவர்களின் மதுர மகா வாக்கியங்கள்

ஆத்மாவும் பரமாத்மாவும் வெகு காலம் பிரிந்திருந்தனர், சத்குருவானவர் கிடைத்த போது அழகான சந்திப்பு நடந்தது. . . நாம் இந்த வார்த்தைகளை சொல்லும் போது அதனுடைய சரியான அர்த்தம் என்னவென்றால் ஆத்மா, பரமாத்மாவிடமிருந்து வெகு காலம் பிரிந்து போய் விட்டது என்பதாகும். வெகு காலம் என்பதன் அர்த்தம் நீண்ட சமயத்திற்கு ஆத்மா பரமாத்மாவிடமிருந்து பிரிந்து விட்டது என்பதாகும். ஆக இந்த வார்த்தை நிரூபிப்பது என்னவென்றால் ஆத்மா மற்றும் பரமாத்மா இரண்டு வேறு பொருட்கள், இரண்டிற்கும் இடையில் உள்ளார்ந்த வித்தியாசம் உள்ளது என்றாகி விடுகிறது. ஆனால் உலக மனிதர்களுக்கு அறிமுகம் இல்லாத காரணத்தால் அவர்கள் இந்த வார்த்தைக்கு அர்த்தம் - ஆத்மாவாகிய நானே பரமாத்மா என புரிந்து கொள்கிறார்கள், ஆனால் ஆத்மாவின் மீது மாயையின் பிரவேசம் ஆகி விட்ட காரணத்தால் தனது உண்மையான சொரூபத்தை மறந்து விட்டனர், மாயையின் பிரவேசம் நீங்கி விட்டால் பின்னர் ஆத்மாவே பரமாத்மா ஆகும் என ஆத்மா வேறு என இந்த அர்த்தத்தில் சொல்கின்றனர், மற்றொரு சாரார் ஆத்மாவாகிய நானே பரமாத்மா என்ற அர்த்தத்தில் சொல்கின்றனர், ஆனால் ஆத்மா தன்னை மறந்து விட்ட காரணத்தினால் துக்கம் மிக்கவர்களாகிக் கிடக்கின்றனர். ஆத்மா தன்னைத் தான் அறிந்து தூய்மையடையும் போது பிறகு ஆத்மா பரமாத்மாவுக்குள் கலந்து ஒன்றாகி விடும் என ஆத்மாவை வேறு என இந்த அர்த்தத்தில் சொல்கின்றனர், ஆனால் ஆத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறு என நாம் தெரிந்திருக்கிறோம். ஆத்மா பரமாத்மாவாக ஆக முடியாது, ஆத்மா பரமாத்மாவுக்குள் கலந்து ஒன்றாக முடியாது, மேலும் பரமாத்மாவுக்குள் மாயையின் பிரவேசம் ஆக முடியாது.