17-01-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! நீங்கள் உங்களது உயர்ந்த அதிர்ஷ்டத்தை அமைப்பதற்காக இந்த பாடசாலைக்கு வந்துள்ளீர்கள். நீங்கள் நிராகார தந்தையிடம் படித்து இராஜக்களுக்கெல்லாம் இராஜாவாக வேண்டும்.

கேள்வி:
பல குழந்தைகள் பாக்கியசாலியாக இருக்கிறார்கள். ஆனால் துர்பாக்கிய சாலிகளாகி ஆகி விடுகிறார்கள் எப்படி?

பதில்:
யாருக்கு எந்தவிதமான கர்மபந்தனமும் இல்லையோ, அதாவது கர்ம பந்தனங் களிலிருந்து விடுபட்டு இருக்கிறார்களோ, அந்த குழந்தைகள் பாக்கியசாலிகள் ஆவார்கள். ஆனால் பிறகு ஒரு வேளை படிப்பில் கவனம் கொடுப்பதில்லை, புத்தி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது, யாரிடமிருந்து இவ்வளவு உயர்ந்த ஆஸ்தி கிடைக்கிறதோ, அந்த தந்தையை நினைவு செய்வதில்லை என்றால், பின் பாக்கியசாலியாக இருந்தும் கூட துர்பாக்கியசாலி என்றே கூறுவார்கள்.

கேள்வி:
ஸ்ரீமத்தில் எந்தெந்த சுவை நிரம்பி உள்ளது?

பதில்:
ஸ்ரீமத்தில் தான் தாய், தந்தை, ஆசிரியர், குரு அனைவரின் வழிகள் ஒன்று சேர்ந்துள்ளது. இந்த அனைத்து சுவைகளும் நிரம்பிய இனிப்பாக ஸ்ரீமத் இருக்கிறது.

பாடல்:
அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன்..

ஓம் சாந்தி.
சிவபாபா கூறுகிறார் - மனிதர்கள் கீதையைக் கூறும் பொழுது கிருஷ்ணரின் பெயர் கூறி சொல்கிறார்கள். இங்கு யார் கூறுகிறாரோ அவருக்கு சிவபகவானுவாச் - சிவ பகவான் கூறுகிறார் என்று கூறுகிறோம். சுயம் தானும் கூட சிவபகவானுவாச் என்று கூற முடியும். ஏனெனில், சிவபாபா சுயம் தானே பேசுகிறார். இருவரும் சேர்ந்தாற்போல கூட பேச முடியும். குழந்தைகளோ இருவருக்கும் ஆவார்கள். ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் அமர்ந்துள்ளார்கள். எனவே குழந்தைகளே! யார் படிப்பிக்கிறார் என்று புரிந்துள்ளீர் களா? என்று கேட்கின்றார். பாப்தாதா கற்பிக்கிறார் என்று கூறுவார்கள். தந்தை பாபா என்று பெரியவருக்கும் தாதா என்று சிறியவருக்கும் அதாவது மூத்த சகோதரனுக்கும் கூறப்படுகிறது. எனவே பாப்தாதா என்று சேர்த்து கூறப்படுகிறது. இப்பொழுது நாம் மாணவர் கள் ஆவோம் என்பதை குழந்தைகளும் அறிந்துள்ளார்கள். பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் அமர்ந்திருப்பதே நாம் படித்து குறிப்பிட்ட இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்ற அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக. அந்த உலகாயத தேர்வுகளோ நிறைய நடக்கிறது. இங்கு நமக்கு எல்லை யில்லாத தந்தை பரமபிதா பரமாத்மா கற்பிக்கிறார் என்பது குழந்தை களாகிய உங்கள் உள்ளத்தில் உள்ளது. தந்தை என்று இவருக்கு (பிரம்மா) நீங்கள் கூறுவ தில்லை. நிராகார தந்தை புரிய வைக்கிறார். நாம் தந்தையிடம் இராஜயோகம் கற்றுக் கொண்டு இராஜக்களுக் கெல்லாம் இராஜா ஆகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இராஜாக்களும் இருக்கிறார் கள். மேலும் பின் இராஜக்களுக்கும் இராஜாக்கள் இருக்கிறார்கள். யார் இராஜாக்களுக் கெல்லாம் இராஜாக்களாக இருக்கிறார்களோ அவர்களை இராஜாக்களும் பூஜிக்கிறார்கள். இந்த வழக்கம் பாரத கண்டத்தில் தான் உள்ளது. பதீத இராஜாக்கள் பாவன இராஜாக்களைப் பூஜிக்கிறார்கள். பெரிய சொத்து உடையவர்களுக்கு மகாராஜா என்று கூறப்படுகிறது என்று தந்தை புரிய வைத்துள்ளார். இராஜாக்கள் சிறியவர்களாக இருப்பார்கள். தற்காலத்திலோ ஒரு சில இராஜாக்களிடம் சொத்து, மகாராஜாக்களை விடவும் அதிகமாக இருக்கிறது. ஒரு சில செல்வந்தர்களிடம் இராஜாக்களை விடவும் அதிகமான சொத்து இருக்கும். அங்கு இது போல நடைமுறை நீதிக்குப் புறம்பாக இருக்காது. அங்கோ எல்லாமே நியமப்படி இருக்கும். பெரிய மகாராஜாவிடம் அதிக சொத்து இருக்கும். எனவே நமக்கு எல்லையில்லாத தந்தை வந்து கற்பிக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். பரமாத்மா இன்றி இராஜாக் களுக்கெல்லாம் இராஜாவாக சொர்க்கத்தின் அதிபதியாக யாருமே ஆக்க முடியாது. சொர்க்கத் தின் படைப்புகர்த்தாவாக இருப்பவரே நிராகார தந்தை ஆவார். அவருடைய பெயரைக் கூட ஹெவென்லி காட்ஃபாதர் என்று பாடுகின்றனர். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் சுயராஜ்யத்தைக் கொடுத்து ராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்கு கிறேன் என்று தந்தை தெளிவாகப் புரிய வைக்கிறார். நாம் எல்லையில்லாத தந்தையிடமிருந்து இராஜாக்களுக்கு இராஜா ஆகக் கூடிய அதிர்ஷ்டத்தை அமைத்து வந்துள்ளோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். எவ்வளவு மகிழ்ச்சிக்கான விசயமாகும். மிக பெரியத் தேர்வு ஆகும். ஸ்ரீமத்படி நடங்கள் என்று பாபா கூறுகிறார். இதில் தாய் தந்தை ஆசிரியர் குரு ஆகிய அனைவரின் வழிகள் ஒன்று சேர்ந்துள்ளது. அனைத்தினுடைய இனிப்பும் சேர்ந்துள்ளது. எல்லா வற்றினுடைய சுவையும் ஒன்றில் நிரம்பி உள்ளது. அனைவரின் மணமகன் ஒருவர் ஆவார். பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்குபவர் அந்த தந்தை ஆகிறார். குருநானக் கூட அவருக்கு மகிமை செய்துள்ளார். எனவே அவசியம் அவரை நினைவு செய்ய வேண்டி உள்ளது. முதலில் அவர் தன்னிடம் கூட்டி செல்வார். பிறகு பாவன உலகத்திற்கு அனுப்பி விடுவார். இது காட்லி காலேஜ் - இறை கல்லூரி ஆகும் என்பதை யார் வந்தாலும் அவர் களுக்குப் புரிய வைக்க வேண்டும். பகவானுவாச் - பகவான் கூறுகிறார். வேறு பள்ளிக் கூடங்களிலோ ஒரு பொழுதும் பகவானுவாச் என்று கூற மாட்டார்கள். பகவான் நிராகார ஞானக் கடலாக இருக்கின்றார். மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஆவார். குழந்தைகளாகிய உங்களுக்கு வந்து கற்பிக்கிறேன். இது காட்லி நாலேஜ் - இறை ஞானம் ஆகும். சரஸ்வதிக்கு காட்டெஸ் ஆஃப் நாலேஜ் - கல்வி தேவதை என்று கூறுகிறார்கள். எனவே அவசியம் இறை ஞானத்தின் மூலமாக தேவி தேவதைகளாகத் தான் ஆகி இருக்கக் கூடும். சட்டவியல் ஞானத்தின் மூலம் சட்ட நிபுணர்களாகத் தான் ஆவார்கள். இது இறை ஞானம் ஆகும். சரஸ்வதிக்கு இறைவன் ஞானத்தை அளித்துள்ளார். எனவே எப்படி சரஸ்வதி ஞானத்தின் தேவதையோ அதே போல குழந்தைகளாகிய நீங்களும் ஆவீர்கள். சரஸ்வதிக்கு நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா? ஆனால் ஒவ்வொருவரும் ஞானத்தின் தேவதை என்று அழைக்கப்படுவது - இது ஆக முடியாது. இச்சமயம் தங்களை தேவதை என்று கூற முடியாது. அங்கு கூட தேவி தேவதைகள் என்றே கூறுவார்கள். இறைவன் மிகச் சரியாக ஞானம் வழங்கு கிறார். பாடங்களை இது போல தாரணை செய்விக் கிறார். இந்த பெரிய பதவியை வழங்கு கிறார். மற்றபடி தேவதைகள் காட், காடெஸ் என்றோ ஆக முடியாது. இந்த தாய் தந்தையோ காட், காடெஸ் போல ஆகி விடுகிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை அல்லவா? நிராகார தந்தையை காட்ஃபாதர் என்று கூறுவார்கள். இவரை (சாகார பாபா) காட் என்று கூறுவார்களா என்ன? இது மிகவும் ஆழமான விசயம் ஆகும். ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ரூபம் மற்றும் பின்னர் சம்பந்தம் - எவ்வளவு ஆழமான விசயங்கள் ஆகும். அந்த சரீர சம்பந்தம் பெரியப்பா, சித்தப்பா, மாமா ஆகியோர் சாதாரணம் ஆகும். இதுவோ ஆன்மீக சம்பந்தம் ஆகும். புரிய வைப்பதற்கு மிகுந்த யுக்தி வேண்டும். தாய் தந்தை என்ற வார்த்தைகளில் பாடுகிறார்கள் என்றால், அவசியம் ஏதோ அர்த்தம் இருக்கிறது அல்லவா? அந்த வார்த்தை அவினாஷியாக ஆகி விடுகிறது. பக்தி மார்க்கத்தில் கூட நடந்து வருகிறது. நாம் பள்ளிக் கூடத்தில் அமர்ந்துள் ளோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். கற்பிப்பவர் ஞானக்கடல் ஆவார். இவருடைய ஆத்மா கூட படிக் கிறது. இந்த ஆத்மாவின் தந்தை அந்த பரமாத்மா ஆவார். அவர் அனைவரின் தந்தை ஆவார். அவர் கற்பிக்கிறார். அவர் கர்ப்பத்தில் வருவது இல்லை. ஆக ஞானத்தை எப்படி கற்பிப்பது? அவர் பிரம்மாவின் உடலில் வருகிறார். அவர்கள் பிறகு பிரம்மாவிற்குப் பதிலாக கிருஷ்ணர் பெயரை போட்டு விட்டுள்ளார்கள். இது கூட நாடகத்தில் உள்ளது. ஏதாவது தவறு ஆக வேண்டுமே அப்பொழுது தானே தந்தை வந்து இந்த தவறைத் திருத்தி தவறற்றவராக ஆக்குவார். நிராகாரமானவரை தெரியாத காரணத்தினால் குழம்பி விட்டுள்ளார்கள். நான் உங்களுடைய எல்லையில்லாத தந்தை எல்லையில்லாத ஆஸ்தி வழங்குபவன் ஆவேன் என்று தந்தை புரிய வைக்கிறார். இலட்சுமி நாராயணர் எப்படி சொர்க்கத் திற்கு அதிபதி ஆனார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அவசியம் யாராவது அந்த மாதிரி கர்மங்களை கற்பித்திருக்கக் கூடும் அல்லவா? மேலும் இவ்வளவு உயர்ந்த பதவியை பிராப்தி செய்வித்த அவர் கூட அவசியம் பெரியவராக இருக்கக் கூடும். மனிதர்களுக்கு எதுவும் தெரியாது. தந்தை எவ்வளவு அன்புடன் புரிய வைக்கிறார். எவ்வளவு பெரிய அதிகாரம் உடையவர் ஆவார். முழு உலகத்தை பதீத நிலையிலிருந்து (தூய்மையற்ற நிலை) பாவனமாக ஆக்கும் எஜமானர் ஆவார். இது அமைந்த, அமைக்கப்பட்ட நாடகமாகும் என்று புரிய வைக் கிறார். நீங்கள் சக்கரம் சுற்ற வேண்டி உள்ளது. இந்த அமைப்பு பற்றி யாருக்குமே தெரியாது. நாடகத்தில் எப்படி நாம் நடிகர்கள் ஆவோம். இந்த சக்கரம் எப்படி சுற்றுகிறது, துக்கதாமத் திலிருந்து சுகதாமமாக யார் ஆக்குகிறார், இதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சுகதாமத்திற்காக உங்களுக்கு கற்பிக்கிறேன். நீங்கள் தான் 21 பிறவிகளுக்கு சதா சுகமுடையவர்களாக ஆகிறீர்கள். வேறு யாரும் அங்கே போக முடியாது. சுகதாமத்தில் நிச்சயம் குறைவான மனிதர் களே இருப்பார்கள். புரிய வைப்பதற்கு மிகவும் நல்ல குறிப்புக்கள் (பாயிண்ட்ஸ்) தேவை. பாபா நாங்கள் உங்களுடையவர் ஆவோம் என்றோ கூறுகிறார்கள் தான். ஆனால் முழுமையாக ஆவதில் நேரம் பிடிக்கிறது. ஒரு சிலருடைய கர்ம பந்தனம் சட்டென்று விடுபட்டு விடுகிறது. ஒரு சிலருக்கு நேரம் பிடிக்கிறது. ஒரு சிலர் எப்பேர்ப்பட்ட பாக்கியசாலியாக இருக்கிறார்கள் என்றால் அவர்களது கர்மபந்தனம் அறுபட்டு விட்டதாக இருக்கிறது. ஆனால் படிப்பில் கவனம் கொடுப்பதில்லை என்றால், அவர்கள் துர்பாக்கியசாலிகள் என்று கூறப்படுகிறார்கள். மகன்கள், பேரன்கள், கொள்ளு பேரன்கள் ஆகியோர் மீது புத்தி சென்று விடுகிறது. இங்கோ ஒருவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். மிகப் பெரிய ஆஸ்தி கிடைக்கிறது. நாம் இராஜாக் களுக்கெல்லாம் இராஜா ஆகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பதீதமான (தூய்மை யற்ற) இராஜாக்கள் எப்படி ஆகிறார்கள்? மேலும் பாவன இராஜாக்களுக்கெல்லாம் இராஜா எப்படி ஆகிறோம் என்பது கூட தந்தை உங்களுக்குப் புரிய வைக்கிறார். நான் சுயம் வந்து இந்த இராஜயோகத்தினால் இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்குகிறேன். அந்த பதீத இராஜாக்கள் தானம் செய்வதால் ஆகிறார்கள். அவர்களை நான் ஆக்குகிறேனா என்ன? அவர்கள் மிகவும் தானம் செய்பவர்களாக இருப்பார் கள். தானம் செய்வதால் இராஜ்ய குலத்தில் ஜென்மம் எடுக்கிறார்கள். நானோ 21 பிறவிகளுக்கு உங்களுக்கு சுகம் கொடுக்கிறேன். அவர்களோ ஒரு பிறவிக்காக ஆகிறார்கள். அதுவும் கூட பதீதமாக துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். நானோ வந்து குழந்தைகளை பாவனமாக ஆக்குகிறேன். கங்கா ஸ்நானம் செய்வதாலேயே பாவனம் ஆகிறோம் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். எவ்வளவு அடி வாங்குகிறார்கள். கங்கை, யமுனை ஆகியவைகளை எவ்வளவு மகிமை செய்கிறார்கள். இப்பொழுது இதில் மகிமை பற்றிய விசயமே கிடையாது. தண்ணீர் கடலிலிருந்து வருகிறது. இது போலவே நிறைய நதிகள் உள்ளன. வெளிநாட்டில் கூட பெரிய பெரிய நதிகளை உருவாக்குகின்றார்கள். இதில் என்ன பெரிய விசயம் உள்ளது. ஞானக்கடல் மற்றும் ஞான கங்கைகள் யார் என்பதையே அறியாமலே இருக்கிறார்கள். சக்திகள் என்ன செய்தார்கள் என்பது எதுவுமே தெரியாது. உண்மையில் ஞான கங்கை அல்லது ஞான சரஸ்வதி இந்த ஜகதம்பா ஆவார். மனிதர்களோ அறியாமலே இருக்கிறார்கள். காட்டுவாசிகளைப் போல - முற்றிலுமே முட்டாள்களாக, அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். தந்தை வந்து அறிவற்றவர்களை எவ்வளவு அறிவாளியாக ஆக்குகிறார். இவர்களை இராஜாக் களுக்கெல்லாம் இராஜாவாக யார் ஆக்கினார் என்பதை உங்களால் கூற முடியும். நான் இராஜாக்களுக்கு இராஜாவாக ஆக்குகிறேன் என்று கீதையில் கூட உள்ளது. மனிதர்களோ அறியாமல் இருக்கிறார்கள். சுயம் நாமும் அறியாமல் இருந்தோம். இவர் தான் சுயம் ஆகி இருந்தார். இப்பொழுது இல்லை. அவரே அறியாமல் இருக்கிறார் என்றால் மற்றவர்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும். சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) என்ற ஞானத்தில் ஒன்றுமே இல்லை. யாருடன் யோகம் கொள்வது? யாரை அழைப்பது? சுயம் (குத்) அவரே (குதா) - இறைவன் என்றால், பிறகு யாரை பிரார்த்தனை செய்வார்கள்? பெரிய அதிசயம் ஆகும். யார் நிறைய பக்தி செய்கிறார்களோ அவர்களுக்கு மதிப்பு இருக்கும். பக்தர்களினுடைய மாலை கூட உள்ளது அல்லவா? ஞான மாலை என்பது ருத்ரமாலை ஆகும். இது பிறகு பக்தர்களின் மாலை ஆகும். அது நிராகாரி மாலை ஆகும். அனைத்து ஆத்மாக்களும் அங்கே இருக்கிறார் கள். அவர்களில் கூட முதல் நம்பர் ஆத்மா யாருடையது? யார் முதல் நம்பரில் செல்கிறார் களோ, சரஸ்வதியின் ஆத்மா அல்லது பிரம்மாவின் ஆத்மா முதல் நம்பரில் படிக்கிறார்கள். இது ஆத்மாவின் விசயம் ஆகும். பக்திமார்க்கத்திலோ எல்லாமே தேகத் தினுடைய விசயங்கள் ஆகும் - குறிப்பிட்ட இந்த பக்தர் இப்படி இருந்தார் - அவரது சரீரத்தின் பெயரைக் கூறுவார்கள். நீங்கள் மனிதர்களுக்குக் கூற மாட்டீர்கள். பிரம்மாவின் ஆத்மா என்ன ஆகப் போகிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் போய் உடல் தரித்து இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆகிறார். ஆத்மா சரீரத்தில் பிரவேசம் செய்து ஆட்சி புரிகிறது. இப்பொழுதோ இராஜா இல்லை. ஆட்சி புரிவதோ ஆத்மாவாகும் அல்லவா? நான் இராஜா ஆவேன், நான் ஆத்மா ஆவேன், இந்த தேகத்திற்கு எஜமானன் ஆவேன். நான் ஆத்மா சரீரத்திற்கு ஸ்ரீநாராயணர் என்ற பெயரைத் தரித்து பிறகு ஆட்சி புரிவேன். ஆத்மா தான் கேட்கிறது. மேலும் தாரணை செய்கிறது. ஆத்மாவில் சமஸ்காரம் இருக்கும். நாம் ஸ்ரீமத்படி நடப்பதன் மூலமாக தந்தையிட மிருந்து இராஜ்யத்தைப் பெறுகிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாப்தாதா இருவரும் சேர்ந்து குழந்தைகளே என்று கூறுகிறார்கள். இருவருக்குமே குழந்தைகள் என்று கூறுவதற்கான உரிமை உள்ளது. நிராகாரி குழந்தைகளே தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று ஆத்மாவிற்குக் கூறுகிறார். வேறு யாருமே ஹே நிராகாரி குழந்தைகளே, ஹே ஆத்மாக்களே, தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று கூற முடியாது. தந்தை தான் ஆத்மாக்களிடம் உரையாடுகிறார். ஹே பரமாத்மா, பரமாத்மாவாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்றோ கூறுவதில்லை. ஹே ஆத்மாக்களே, தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள் என்றால் இந்த யோக அக்னி மூலமாக உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகும் என்று கூறுகிறார். மற்றபடி கங்கா ஸ்நானத்தினால் ஒரு பொழுதும் யாருமே பாவ ஆத்மா விலிருந்து புண்ணிய ஆத்மா ஆக முடியாது. கங்கா ஸ்நானம் செய்து பிறகு வீட்டில் வந்து பாவம் செய்கிறார்கள். இந்த விகாரங் களின் காரணமாகத் தான் பாவ ஆத்மா ஆகிறார்கள். இதை யாரும் புரிந்து கொள்வது இல்லை. இப்பொழுது உங்களுக்கு இராகுவின் கடுமையான கிரகணம் பிடித்துள்ளது என்று தந்தை புரிய வைக்கிறார். முதலில் லேசான கிரகணம் ஆகிறது. இப்பொழுது தானம் கொடுத்தீர்கள் என்றால் கிரகணம் விட்டு போகும். மிக உயர்ந்த பிராப்தி உள்ளது. எனவே முயற்சி கூட அவ்வாறு செய்ய வேண்டும் அல்லவா? நான் உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார். எனவே என்னை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். தங்களது 84 பிறவிகளை நினைவு செய்யுங்கள். எனவே பாபா பெயரே சுயதரிசன சக்கரதாரி. குழந்தைகளே என்று வைத்துள்ளார். எனவே சுயதரிசனத் தினுடைய ஞானம் கூட வேண்டும் அல்லவா?

இந்த பழைய உலகம் முடியப் போகிறது என்று தந்தை புரிய வைக்கிறார். உங்களை நான் புது உலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். சந்நியாசிகள் வீடு வாசலை மட்டும் மறக் கிறார்கள். நீங்கள் முழு உலகத்தை மறக்கிறீர்கள். இந்த தந்தை தான் அசரீரி ஆகுங்கள் என்று கூறுகிறார். நான் உங்களை புது உலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். எனவே பழைய உலகம், பழைய சரீரம் மீதுள்ள பற்றைத் துண்டியுங்கள். பின்பு புது உலகத்தில் உங்களுக்குப் புதிய உடல் கிடைக்கும். பாருங்கள் கிருஷ்ணரை ஷியாம் சுந்தர் என்று கூறுகிறார்கள். சத்யுகத்தில் அவர் வெண்மையாக (தூய்மையாக) இருந்தார். இப்பொழுது கடைசிப் பிறவியில் கருப்பாக ஆகி விட்டுள்ளார். எனவே ஷ்யாம் தான் சுந்தர் ஆகிறார். பின் சுந்தர் அழகானவர் ஷ்யாம் கருமையாக ஆகிறார் என்று கூறுவார்கள் அல்லவா? எனவே பெயர் ஷியாம் சுந்தர் என்று வைத்து விட்டுள்ளார்கள். 5 விகாரங்கள் என்ற இராவணன் கருமையாக ஆக்குகிறான். பிறகு வெண்மையாக ஆக்குபவர் பரமபிதா பரமாத்மா ஆவார். நான் பழைய உலகத்தை எட்டி உதைத்து வெண்மையாக (தூய்மையாக) ஆக்கி கொண்டிருக்கிறேன் என்று படத்தில் கூட காண்பித்துள்ளார்கள். வெண்மையான (தூய்மையான) ஆத்மா சொர்க்கத்தின் அதிபதி ஆகிறார். கருப்பான ஆத்மா நரகத்தின் அதிபதி ஆகிறார். ஆத்மா தான் வெண்மையாகவும் கருப்பாகவும் ஆகிறது. நீங்கள் தூய்மையாக ஆக வேண்டும் என்று தந்தை கூறுகிறார். அந்த ஹடயோகிகள் தூய்மையாக ஆவதற்காக நிறைய வலுக்கட்டாயமான சாதனை செய்கிறார்கள். ஆனால் யோகம் இல்லை என்றால் தூய்மையாகவே ஆக முடியாது அல்லது தண்டனைகள் வாங்கி, தூய்மையாக ஆக வேண்டி வரும். எனவே தந்தையை ஏன் நினைவு செய்யக் கூடாது. மேலும் 5 விகாரங்களையும் வெல்ல வேண்டும். இந்த காமவிகாரம் தான் முதல் இடை கடை துக்கம் கொடுக்கக் கூடியது என்று தந்தை கூறுகிறார். யாரால் விகாரங் களை வெல்ல முடிய வில்லையோ அவர்கள் வைகுண்டத்தின் இராஜா ஆக முடியுமா என்ன! எனவே தந்தை, ஆசிரியர், சத்குரு ரூபத்தில் பாருங்கள் நான் உங்களுக்கு எவ்வளவு நல்ல கர்மங்களைக் கற்பிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். யோக பலத்தினாலே விகர்மங்களை விநாசம் செய்வித்து விகர்மங்களை வென்ற இராஜாவாக ஆக்குகிறேன். உண்மையில் சத்யுகத் தின் தேவி தேவதைகளுக்குத் தான் விகர்மாஜீத் (விகர்மங்களை வென்றவர்கள்) என்று கூறப்படு கிறது. அங்கு விகர்மங்களே ஆவது இல்லை. விகர்மங்களை வென்ற காலம் மற்றும் விக்கிரம சகாப்தம் தனித் தனி ஆகும். விக்கிரமன் என்ற ஒரு இராஜா கூட வாழ்ந்து சென்றுள்ளார். மேலும் விகர்மாஜீத் இராஜா கூட வாழ்ந்து சென்றுள்ளார். நாம் இப்பொழுது விகர்மங்கள் மீது வெற்றி அடைந்து கொண்டிருக்கிறோம். பிறகு துவாபரத்திலிருந்து புதியதாக விகர்மங்கள் ஆரம்பமாகிறது. எனவே விக்கிரம இராஜா என்று பெயர் வைத்து விட்டுள்ளார்கள். தேவதைகள் விகர்மாஜீத் ஆவார்கள். இப்பொழுது நாம் அது போல ஆகிறோம். பிறகு வாம மார்க்கத்தில் வரும் பொழுது விகர்மங்களின் கணக்கு ஆரம்பமாகி விடுகிறது. இங்கு விகர்மங்களின் கணக்கை முடித்து விட்டு பிறகு நாம் விகர்மாஜீத் ஆகிறோம். அங்கு எந்தவொரு விகர்மமும் ஆவதில்லை. எனவே நாம் இங்கு உயர்ந்த அதிர்ஷ்டத்தை அமைக்கிறோம் என்ற இந்த போதை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். இது பெரியதிலும் பெரிய அதிர்ஷ்டத்தை அமைப்பதற் கான பாடசாலை ஆகும். சத்சங்கத்தில் அதிர்ஷ்டத்தை அமைப்பதற்கான வியம் இருப்ப தில்லை. பாடசாலையில் எப்பொழுதும் அதிர்ஷ்டம் அமைகிறது. நாம் நரனிலிருந்து நாராயணர் அல்லது இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆகிடுவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். உண்மையில் பதீத இராஜாக்கள் பாவன இராஜாக்களைப் பூஜிக்கிறார்கள். நான் உங்களை பாவனமாக ஆக்குகிறேன். பதீத உலகத்திலோ ஆட்சி புரிய மாட்டீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. புத்தியில் சுயதரிசன சக்கரத்தின் ஞானத்தை இருத்தி இராகுவின் கிரகணத்திலிருந்து விடுபடவேண்டும் சிறந்த செயல்கள் மற்றும் யோக பலத்தினால் விகர்மங்களின் கணக்கை முடித்து விகர்மங்களை வென்றவர் ஆக வேண்டும்.

2. தங்களது உயர்ந்த அதிர்ஷ்டத்தை அமைப்பதற்காக படிப்பின் மீது முழுமையாக கவனம் வைக்க வேண்டும்.

வரதானம்:
வெளிமுகத் தன்மையின் சுவைகளின் கவர்ச்சியின் பந்தனத்திலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய ஜீவன் முக்தர் ஆவீர்களாக.

வெளிமுகத் தன்மை என்றால் மனிதர்களின் பாவனை, சுபாவம் மேலும் வெளியில் தென்படும் பாவனையின் (வைப்ரேன்) அதிர்வலைகள், எண்ணம், சொல் மற்றும் சம்பந்தம், தொடர்பு மூலமாக ஒருவர் மற்றவரை வீணானவற்றின் பக்கம் தூண்டி விடுபவர்கள், எப்பொழுதும் ஏதாவதொரு வகையில் வீண் சிந்தனையில் இருப்பவர்கள், உள்ளூர சுகம், சாந்தி மற்றும் சக்தி யிலிருந்து தூர இருப்பவர்கள். இந்த வெளிமுகத் தன்மையின் சுவை கூட வெளியில் மிகவுமே கவருகிறது. எனவே முதலில் இவற்றை துண்டித்து விடுங்கள். இந்த சுவை தான் சூட்சும பந்தனமாக ஆகி வெற்றியின் குறிக்கோளிலிருந்து தொலைவை ஏற்படுத்திவிடுகிறது. இந்த பந்தனங்களிலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள். அப்பொழுது தான் ஜீவன் முக்தர் என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகன்:
யார் நல்லது அல்லது தீய செயல்கள் செய்பவர்களின் தாக்கத்தினுடைய பந்தனத்திலிருந்து விடுபட்டு (சாட்சி) பார்வையாளர்களாகவும், கருணையுள்ளம் உடையவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களே தபஸ்வி ஆவார்கள்.