17-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

உண்மையான பிராமணர்களின் முக்கிய அடையாளங்கள் என்னவாக இருக்கும்?

பதில்:

உண்மையான பிராமணர்களுக்கு இந்தப் பழைய உலகத்தில் இருந்து நங்கூரம் எடுக்கப் பட்டிருக்கும். அவர்கள் இந்த உலகத்தின் கரையை விட்டுவிட்டதாகவே ஆகும். 2. கையினால் காரியம் செய்து கொண்டே புத்தி சதா தந்தையின் நினைவில் இருக்கும், அதாவது கர்மயோகியாக இருப்பவர்களே உண்மையான பிராமணர்கள். 3. பிராமணர் என்றால் தாமரை மலருக்குச் சமமானவர்கள். 4. பிராமணர் என்றால் சதா ஆத்ம அபிமானியாக இருப்பதற்கான புருஷார்த்தம் செய்பவர்கள். 5. பிராமணர் என்றால் காமம் என்ற மகா விரோதி மீது வெற்றி பெறுபவர்கள்.

ஓம் சாந்தி. ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். எந்தக் குழந்தைகள்? இந்த பிராமணக் குழந்தைகள். நாம் பிராமணன், தேவதை ஆகப் போகிறவர்கள் என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள். வர்ணங்களையும் கூட நினைவு செய்ய வேண்டியுள்ளது. இங்கே நீங்கள் உங்களுக்குள் பிராமணர்கள் என்பது மட்டுமே தான். பிராமணர்களுக்கு எல்லையற்ற தந்தை கற்பிக்கிறார். இந்த பிரம்மா கற்பிக்கவில்லை. சிவபாபா பிரம்மா மூலமாகக் கற்பிக்கிறார். பிராமணர்களுக்குத் தான் கற்பிக்கிறார். சூத்திரரில் இருந்து பிராமணர் ஆகாமல் தேவி-தேவதா ஆக முடியாது. ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து கிடைக்கின்றது. அந்த சிவபாபாவோ அனைவரின் தந்தை. இந்த பிரம்மா கிரேட்-கிரேட் கிராண்ட் ஃபாதர் எனச் சொல்லப் படுகிறார். லௌகிக் தந்தையோ அனைவருக்கும் இருக்கிறார். பரலௌகிக் தந்தையை பக்தி மார்க்கத்தில் நினைவு செய்கின்றனர். இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள், இவர் (பிரம்மா) அலௌகிகத் தந்தை. இவரைப் பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை. பிரம்மாவுக்குக் கோவில் இருக்கிறது என்ற போதிலும், இங்கேயும் கூட (மவுண்ட் அபு) பிரஜாபிதா ஆதி தேவருக்குக் கோவில் உள்ளது. அவரைச் சிலர் மகாவீர் எனச் சொல்கின்றனர். தில்வாலா என்றும் சொல்கின்றனர். ஆனால் மனதை எடுத்துக் கொள்பவர் (கொள்ளை கொள்பவர்) சிவபாபா தான். பிரஜாபிதா ஆதி தேவ் பிரம்மா அல்ல. ஆத்மாக்கள் அனைவரையும் சதா சுகமானவர்களாக ஆக்குபவர், குஷிப் படுத்து கிறவர் ஒரே ஒரு பாபா தான். இதையும் நீங்கள் மட்டுமே அறிவீர்கள். உலகத்திலோ மனிதர்கள் எதையும் அறிந்து கொள்ளவில்லை. கீழான புத்தி உள்ளவர்கள். பிராமணர் களாகிய நீங்கள் தான் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் கூட இதை அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். நினைவு செய்வது மிகவும் சுலபமானது. யோகம் என்ற சொல்லை சந்நியாசி கள் வைத்துள்ளனர். நீங்களோ தந்தையை நினைவு செய்கிறீர்கள். யோகம் பொதுவான சொல்லாகும். இதை யோக ஆசிரமம் என்று கூடச் சொல்ல மாட்டார்கள். குழந்தைகள் மற்றும் தந்தை அமர்ந்துள்ளனர். குழந்தைகளின் கடமை - எல்லையற்ற தந்தையை நினைவு செய்வது. நாம் பிராமணர்கள், தாத்தாவிடமிருந்து பிரம்மா மூலம் ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம். அதனால் சிவபாபா சொல்கிறார், எவ்வளவு முடியுமோ, நினைவு செய்து கொண்டே இருங்கள். சித்திரங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், அப்போது நினைவு இருக்கும். நாம் பிராமணர்கள், தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுகிறோம். பிராமணர்கள் எப்போதாவது தங்களின் குலத்தை மறக்கிறார்களா என்ன? நீங்கள் சூத்திரர்களின் சங்கத்தில் வந்ததால் பிராமணத் தன்மையை மறந்து விடுகிறீர்கள். பிராமணர்களோ, தேவதைகளை விட உயர்ந்தவர்கள். ஏனென்றால் பிராமணர் களாகிய நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள். பகவானை அனைத்தையும் அறிபவர் எனச் சொல் கின்றனர் இல்லையா? அதனுடைய அர்த்தத்தையும் அவர்கள் அறிந்து கொள்ள வில்லை. அனைவரின் மனதிலும் என்ன உள்ளது என்று அவர் உட்கார்ந்து பார்க்கிறார் என்பதல்ல. அவருக்கு சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானம் உள்ளது. அவர் விதை வடிவமானவர். மரத்தின் முதல்-இடை-கடை பற்றி அவருக்குத் தெரியும். ஆக, அப்படிப்பட்ட தந்தையை அதிகம் நினைவு செய்ய வேண்டும். இவருடைய (பிரம்மா) ஆத்மாவும் கூட அந்தத் தந்தையை நினைவு செய் கின்றது. அந்தத் தந்தை சொல்கிறார், இந்த பிரம்மாவும் என்னை நினைவு செய்வாரானால் இந்தப் பதவியைப் பெறுவார். நீங்களும் நினைவு செய்வீர்களானால் அப்போது பதவி பெறுவீர்கள். முதல்-முதலில் நீங்கள் அசரீரியாக வந்தீர்கள். மீண்டும் அசரீரி ஆகித் திரும்பிச் செல்ல வேண்டும். மற்ற அனைவரும் உங்களுக்கு துக்கம் கொடுப்பவர்கள். அவர்களை ஏன் நினைவு செய்ய வேண்டும்? நான் உங்களுக்குக் கிடைத்துள்ளேன் என்று சொல்லும் போது நான் உங்களைப் புது உலகிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். அங்கே எந்த ஒரு துக்கமும் இருக்காது. இது தெய்விக சம்மந்தம். இங்கே முதல்-முதலில் ஆண்-பெண் சம்மந்தத்தினால் துக்கம் வருகிறது, ஏனென்றால் விகாரி ஆகின்றனர். உங்களை இப்போது அந்த உலகிற்குத் தகுதியுள்ளவர் களாக ஆக்குகிறேன். அங்கே விகாரத்தின் விஷயம் இருக்காது. இந்தக் காமம் மிகப்பெரிய விரோதி எனப் கூறப்பட்டுள்ளது. அது முதலிலிருந்து கடைசி வரை துக்கம் தருவதாகும். கோபத்தைப் பற்றி அதுபோல் சொல்ல மாட்டார்கள் - இது முதல்-இடை-கடை முழுவதும் துக்கம் தரும் என்று. காமத்தை வெல்ல வேண்டும். அது தான் முதல்-இடை-கடை முழுவதும் துக்கம் கொடுக்கும். தூய்மையற்றவராக்கி விடும். தூய்மையற்ற என்ற சொல் விகாரத்தைப் பற்றியதாகும். இந்த விரோதி மீது வெற்றி பெற வேண்டும். நீங்கள் அறிவீர்கள், நாம் சொர்க்கத்தின் தேவி-தேவதா ஆகிக் கொண்டிருக்கிறோம். எது வரை இந்த நிச்சயம் இல்லையோ, அது வரை எதையும் அடைய முடியாது.

பாபா புரிய வைக்கிறார் குழந்தைகள் மனம்-சொல்-செயலில் மிகச் சரியாக நடந்து கொள்பவர் களாக இருக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கு கிறீர்கள் என்பது உலகில் யாருக்கும் தெரியாது. இன்னும் சில காலம் சென்றால் புரிந்து கொள்வார் கள். ஒரே உலகம், ஒரே இராஜ்யம், ஒரே தர்மம், ஒரே மொழி வேண்டும் என விரும்பவும் செய் கின்றனர். நீங்கள் புரிய வைக்க முடியும் - சத்யுகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் ஒரே ராஜ்யம், ஒரே தர்மம் இருந்தது. அது சொர்க்கம் எனச் சொல்லப் படுகிறது. இராமராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம் பற்றியும் யாருக்கும் தெரியாது. நூறு சதவிகிதம் கீழான புத்தியிலிருந்து இப்போது நீங்கள் நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம். தூய புத்தியுள்ளவர்களாக ஆகிறீர்கள், பாபா அமர்ந்து உங்களுக்குக் கற்றுத் தருகிறார். பாபாவின் வழிமுறைப்படி மட்டும் நடந்து செல்லுங்கள். பாபா சொல்கிறார், பழைய உலகத்தில் இருந்து கொண்டு தாமரை மலருக்கு சமமாகப் பவித்திரமாக இருங்கள். என்னை நினைவு செய்து கொண்டே இருங்கள். பாபா ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். நான் இந்த உடல் உறுப்புகள் மூலமாக ஆத்மாக்களுக்குத் தான் கற்பிக்க வந்துள்ளேன், ஆத்மாக்களாகிய நீங்களும் கூட உடல் உறுப்புகள் மூலமாகக் கேட்கிறீர்கள். குழந்தைகள் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். இதுவோ பழைய அசுத்தமான சரீரம். பிராமணர்கள் நீங்கள் பூஜைக்குத் தகுதியானவர்கள் அல்ல. நீங்கள் மகிமை பாடப்படுவதற்குத் தகுதியுள்ளவர் கள். தேவதைகள் பூஜைக்குத் தகுதியானவர்கள். நீங்கள் ஸ்ரீமத் படி உலகத்தைப் தூய்மை யான சொர்க்கமாக ஆக்குகிறீர்கள். அதனால் உங்களுக்கு மகிமை பாடப் பட்டுள்ளது. உங்களுக்குப் பூஜை நடைபெற முடியாது. பாடல் பிராமணர்காளகிய உங்களுக்கு மட்டும் தான். தேவதை களுக்கல்ல. பாபா உங்களைத் தான் சூத்திரரில் இருந்து பிராமணர்களாக ஆக்குகிறார். ஜெகதம்பா, பிரம்மா முதலானவர்களுக்குக் கோவில் கட்டு கின்றனர். ஆனால் அவர்களுக்குத் தெரியாது, இவர்கள் யார் என்று. ஜெகத்பிதாவோ பிரம்மா தான் இல்லையா? அவரை தேவதை எனச் சொல்ல மாட்டார்கள். தேவதைகளுக்கு ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மையானவை. இப்போது உங்களுடைய ஆத்மா தூய்மையாகிக் கொண்டே செல்கிறது. தூய்மையான சரீரம் இப்போது கிடையாது. இப்போது நீங்கள் ஈஸ்வரனின் வழிப்படி பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் சொர்க்கத்திற்குத் தகுதி யானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சதோபிரதானமாக அவசியம் ஆக வேண்டும். பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் பாபா அமர்ந்து படிப்பு சொல்லித் தருகிறார். பிராமணர்களின் மரம் விருத்தி அடைந்து (விரிவடைந்து) கொண்டே இருக்கும். பிராமணர் களில் யார் பக்கா ஆகி விடுகிறார்களோ, அவர்கள் பிறகு போய் தேவதை ஆவார்கள். இது புதிய மரமாகும். மாயாவின் புயல்களும் வருகின்றன. சத்யுகத்தில் எந்த ஒரு புயலும் வருவதில்லை. இங்கே மாயா பாபாவின் நினைவில் இருக்க விடுவதில்லை. பாபாவின் நினைவிலேயே இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். தமோவிலிருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும். எல்லாமே நினைவின் ஆதாரத்தில் தான் உள்ளது. பாரதத்தின் புராதன யோகம் புகழ் பெற்றதாகும். புராதன யோகத்தை யாராவது வந்து கற்றுத் தர வேண்டும் என்று வெளிநாட்டினர் கூட விரும்புகின்றனர். இப்போது யோகம் கூட இரண்டு வகை உள்ளது. ஒன்று ஹடயோகம். மற்றது இராஜயோகம். பாரதத்தின் இந்தப் புராதன இராஜயோகத்தை பாபா தான் கற்றுத் தருகிறார். கீதையில் எனது பெயருக்கு பதில் கிருஷ்ணர் பெயரைப் போட்டு விட்டார்கள், அவ்வளவு தான். எவ்வளவு வித்தியாசம் ஆகி விட்டது! சிவஜெயந்தி நடைபெறுகிறது என்றால் உங்கள் வைகுண்டத் திற்கும் ஜெயந்தி நடைபெறுகின்றது. அதில் ஸ்ரீகிருஷ்ணரின் இராஜ்யம் நடைபெற்றது. நீங்கள் அறிவீர்கள், சிவபாபாவின் ஜெயந்தி உள்ளது என்றால் கீதைக்கும் ஜெயந்தி உள்ளது. வைகுண்டத்திற்கும் ஜெயந்தி நடைபெறுகின்றது. அங்கு நீங்கள் தூய்மையாகி சென்று விடுவீர்கள். கல்பத்திற்கு முன் போலவே சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். இப்போது பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள். நினைவு செய்யாமல் இருப்பதால் மாயா ஏதேனும் (விகர்மம்) தீயகாரியங்களை செய்ய வைத்து விடுகின்றது. நினைவு செய்யவில்லை, அதனால் அடி விழுந்து விட்டது. நினைவில் இருந்தால் அடி விழாது. இந்தக் குத்துச் சண்டை நடை பெறுகின்றது. நீங்கள் அறிவீர்கள் - நம்முடைய விரோதி எந்த ஒரு மனிதரும் கிடையாது.. இராவணன் தான் நம்முடைய விரோதி.

பாபா சொல்கிறார், இச்சமயத்தின் திருமணங்கள் வீணானவை. ஒருவர் மற்றவருக்கு அழிவை ஏற்படுத்துகின்றனர். தூய்மை இழக்க வைத்துவிடுகின்றனர். இப்போது பரலௌகிகத் தந்தை அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளார், குழந்தைகளே, இந்தக் காமம் மகா விரோதியாகும். இதன் மீது வெற்றி கொள்ளுங்கள், மற்றும் பவித்திரதாவின் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். யாரும் தூய்மையை இழக்கக் கூடாது. ஜென்ம-ஜென்மாந்தரமாக நீங்கள் இந்த விகாரத்தினால் தூய்மை யற்றவராகியிருக்கிறீர்கள். அதனால் காமம் மகா சத்ரு எனச் சொல்லப் படுகின்றது. சாது-சந்நியாசிகள் அனைவரும் அழைக்கின்றனர், பதீத- பாவனா வாருங்கள் என்று. சத்யுகத்தில் தூய்மையற்றவர் யாரும் இருப்பதில்லை. பாபா வந்து ஞானத்தினால் அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். இப்போது அனைவரும் துர்கதியில் உள்ளனர். ஞானம் தருபவர் இங்கே யாரும் கிடையாது. ஞானம் கொடுப்பவர் ஒரே ஒரு ஞானக்கடல் மட்டுமே! ஞானத்தினால் பகல் ஆகிறது. பகல் இராமருடையது. இரவு இராவணனுடையது. இந்த சொற்களின் யதார்த்த அர்த்தமும் கூட குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். புருஷார்த்தத்தில் மட்டும் பலவீனமாக இருக்கிறீர்கள். பாபாவோ மிக நல்ல முறையில் புரிய வைக்கிறார். நீங்கள் 84 பிறவிகளை முடித்து விட்டிருக்கிறீர்கள். இப்போது தூய்மையாகித் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களுக்கோ சுத்த அகங்காரம் இருக்க வேண்டும். நாம் ஆத்மாக்கள் பாபாவின் மத் படி இந்த பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த சொர்க்கத்தில் பிறகு இராஜ்யம் செய்வோம். எவ்வளவு முயற்சி செய்கிறோமோ, அதற்கேற்ற பதவி பெறுவோம். இராஜா-ராணி ஆகலாம், பிரஜையாகவும் ஆகலாம். இராஜா-ராணி எப்படிஆகிறார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தந்தையைப் பின்பற்றுங்கள் எனப் பாடப்பட்டுள்ளது. அது இப்போதைய விஷயம் தான். லௌகிக சம்மந்தத்திற்காக அது சொல்லப் படவில்லை. பாபா இந்த அறிவுரை தருகிறார் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அப்போது உங்கள் பாவ கர்மங்கள் விநாசமாகி விடும். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் இப்போது ஸ்ரீமத் படி நடந்து செல்கிறோம். அநேகருக்கு சேவை செய்கிறோம். குழந்தைகள் தந்தையிடம் வருகின்றனர் என்றால் சிவபாபாவும் ஞானத்தினால் மகிழ்விக்கிறார். இவரும் கூட (பிரம்மா) கற்றுக் கொள்கிறார் இல்லையா? சிவபாபா சொல்கிறார், நான் வருவது காலையில். நல்லது, பிறகு யாராவது சந்திப்பதற்காக வருகின்றனர் என்றால் இதைப் புரிய வைக்க மாட்டார்களா என்ன? இது போல் சொல்வார்களா என்ன - பாபா, நீங்கள் வந்து சொல்லிப் புரிய வையுங்கள், நான் புரிய வைக்க மாட்டேன். இவை மிகவும் ஆழத்திலும் ஆழமான விஷயங்கள் இல்லையா? நானோ அனைவரைக் காட்டிலும் மிக நன்றாகப் புரிய வைக்க முடியும். நீங்கள் அது போல் ஏன் புரிந்து கொள்கிறீர்கள் - சிவபாபா தான் புரிய வைக்கிறார், இவர் (பிரம்மா) புரிய வைக்கவில்லை என்று? இதையும் அறிவீர்கள், கல்பத்திற்கு முன் இவர் புரிய வைத்துள்ளார். அதனால் தான் இந்தப் பதவி பெற்றுள்ளார். மம்மாவும் புரிய வைத்தார் இல்லையா? அவரும் கூட உயர்ந்த பதவி பெறுகிறார். மம்மா- பாபாவை சூட்சும வதனத்தில் பார்க் கின்றனர் என்றால் குழந்தைகள் தந்தையைப் பின்பற்ற வேண்டும். சமர்ப்பணமாகியும் ஏழை, பணக்காரராக இருக்க முடியாது. ஏழைகள் தான் சொல்கின்றனர் - பாபா, இவை அனைத்தும் உங்களுடையவை. சிவபாபாவோ கொடுக்கின்ற வள்ளல் ஆவார். அவர் ஒரு போதும் பெற்றுக் கொள்வதில்லை. குழந்தைகளுக்குச் சொல்கிறார் - இவை அனைத்தும் உங்களுடையவை. நான் எனக்காக மாளிகையை இங்கோ அங்கோ கட்டிக் கொள்வதில்லை. உங்களை சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குகிறேன். இப்போது இந்த ஞான இரத்தினங்களால் பையை நிரப்பிக் கொள்ள வேண்டும். கோவில்களில் சென்று வேண்டுகின்றனர் - எனது பையை நிரப்புங்கள் என்று. ஆனால் எந்த விதமாக, எந்தப் பொருளால் பையை நிரப்ப வேண்டும்? பையை நிரப்புகிறவரோ இலட்சுமி. அவர் பைசா கொடுக்கிறார். சிவனிடமோ அவர்கள் செல்வதில்லை. சங்கரிடம் சென்று சொல்கின்றனர். சிவனும் சங்கரும் ஒன்று என நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.

பாபா வந்து சத்தியமான விஷயத்தைச் சொல்கிறார். தந்தை தான் துக்கத்தைப் போக்கி சுகம் தருபவர். குழந்தைகள் நீங்கள் இல்லற விவகாரங்களிலும் இருக்க வேண்டும். தொழிலையும் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தனக்காக அறிவுரை கேட்கின்றனர் - பாபா, நான் இந்த விஷயத்தில் பொய் பேச வேண்டி உள்ளது. பாபா ஒவ்வொருவரின் நாடி பார்த்து அறிவுரை தருகிறார். ஏனென்றால் பாபா புரிந்து கொண்டிருக்கிறார், நான் சொல்வதைச் செய்ய முடியாது என்றால் அப்படிப் பட்ட அறிவுரையை நான் ஏன் கொடுக்க வேண்டும்? நாடி பார்த்து அப்படிப் பட்ட அறிவுரை கொடுக்கப்படுகிறது, அது செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும். சொல்கிறேன், அதைச் செய்ய முடியவில்லை என்றால் கீழ்ப்படியாதவர்களின் வரிசையில் வந்து விடுவார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் கணக்கு-வழக்கு உள்ளது. சர்ஜனோ ஒருவர் தான். அவரிடம் வர வேண்டும். அவர் முழுமையான அறிவுரை தருவார். அனைவரும் கேட்க வேண்டும் - பாபா, இந்த நிலைமையில் நான் எப்படி நடக்க வேண்டும்? இப்போது என்ன செய்வது? பாபா சொர்க்கத்திற்கோ அழைத்துச் செல்கிறார். நீங்கள் அறிவீர்கள், நாம் சொர்க்கவாசியாகவோ ஆகப்போகிறவர்கள் தான். இப்போது நாம் சங்கமயுக வாசியாக இருக்கிறோம். நீங்கள் இப்போது நரகத்திலும் இல்லை, சொர்க்கத்திலும் இல்லை. யாரெல்லாம் பிராமணர் ஆகிறார்களோ, அவர்களுடைய நங்கூரம் இந்த மோசமான உலகத்தில் இருந்து விடுபட்டு விட்டது. நீங்கள் கலியுக உலகத்தின் கரையை விட்டு விட்டீர்கள். சில பிராமணர்கள் நினைவு யாத்திரையில் தீவிரமாகச் சென்று கொண்டுள்ளனர். சிலர் குறைவான வேகத்தில் உள்ளனர். சிலர் கையை விட்டு விடுகின்றனர். அதாவது கலியுகத்திற்குச் சென்று விடு கின்றனர். நீங்கள் அறிவீர்கள், படகோட்டி இப்போது நம்மை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். அந்த யாத்திரையோ அநேக விதமாக உள்ளது. உங்களுடையது ஒரே ஒரு யாத்திரை. இது முற்றிலும் தனிப்பட்ட யாத்திரையாகும். ஆம், மாயாவின் புயல்கள் வருகின்றன. அவை நினைவைத் துண்டித்து விடுகின்றன. இந்த நினைவு யாத்திரையை நல்ல படியாகப் பக்கா ஆக்குங்கள். முயற்சி செய்யுங்கள். நீங்கள் கர்மயோகிகள். எவ்வளவு முடியுமோ, கைகள் வேலை செய்து கொண்டிருந்தாலும் மனதில் பாபா நினைவு இருந்து கொண்டே இருக்கட்டும். அரைக் கல்பமாக நாயகிகளாகிய நீங்கள் நாயகனை நினைவு செய்தே வந்திருக்கிறீர்கள். பாபா, இங்கே அதிக துக்கம் உள்ளது. இப்போது எங்களை சுகதாமத்தின் எஜமானர்களாக ஆக்குங்கள். நினைவு யாத்திரையில் இருப்பீர்களானால் உங்கள் பாவங்கள் அழிந்து விடும். நீங்கள் தாம் சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைந்திருந்தீர்கள். இப்போது இழந்து விட்டிருக்கிறீர்கள். பாரதம் சொர்க்கமாக இருந்தது, அதனால் புராதன பாரதம் எனச் சொல்கின்றனர். பாரதத்திற்குத் தான் அதிக மதிப்பளிக் கின்றனர். அனைத்திலும் பெரியதாகவும் உள்ளது, அனைத்திலும் பழையதாகவும் உள்ளது. இப்போதோ பாரதம் எவ்வளவு ஏழையாக உள்ளது! அதனால் அனைவரும் அதற்கு உதவி செய்கின்றனர். அந்த மனிதர்கள் புரிந்து கொண்டுள்ளனர், நம்மிடம் அதிக தானியங்கள் ஆகி விடும். எங்கும் கேட்டுப் பெற வேண்டியிருக்காது. ஆனால் இதையோ நீங்கள் அறிவீர்கள், விநாசம் முன்னால் நின்று கொண்டுள்ளது. யார் இதை நல்லபடியாகப் புரிந்து கொண்டுள்ளனரோ, அவர்களுக்கு உள்ளுக்குள் குஷி உள்ளது. கண்காட்சியில் எவ்வளவு பேர் வருகின்றனர்! அவர்கள் சொல்கின்றனர், நீங்கள் உண்மை சொல்கிறீர்கள் என்று. ஆனால் நாம் பாபாவிடம் ஆஸ்தி பெற வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது புத்தியில் பதிவதில்லை. இங்கிருந்து வெளியே சென்றால் முடிந்தது. நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கே கர்ப்ப சிறையிலோ, மற்ற சிறையிலோ வர மாட்டீர்கள். இப்போது சிறையின் யாத்திரை கூட எவ்வளவு சுலபமாக ஆகி விட்டது! பிறகு சத்யுகத்தில் ஒரு போதும் சிறையின் வாசலைப் பார்க்க முடியாது. இரண்டு சிறைகளுமே இருக்காது. இங்கே அனைத்தும் மாயாவின் பகட்டாக உள்ளது. பெரிய-பெரியவர்களை யெல்லாம் முடித்து விடுகின்றனர். இன்று அதிக மரியாதை தந்து கொண்டிருக்கின்றனர். நாளை அந்த மரியாதையே இல்லாமல் போகிறது. தற்போது ஒவ்வொரு விஷயமும் விரைவாக நடைபெறுகின்றது. மரணம் கூட விரைவாக வந்து கொண்டிருக்கும். சத்யுகத்தில் இதுபோல் எந்த ஒரு உபத்திரவமும் நடைபெறுவதில்லை. இன்னும் போகப்போக என்ன நடக்கிறது எனப் பார்க்க வேண்டும். மிக பயங்கரமான காட்சியாக இருக்கும். குழந்தைகள் நீங்கள் சாட்சாத்காரமாகவும் பாôத்திருக்கிறீர்கள். குழந்தைகளுக்கு முக்கியமானது நினைவு யாத்திரை. நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) மனம்-சொல்-செயலில் மிக-மிகச் சரியானவர்களாக ஆக வேண்டும். பிராமணர் ஆகி எந்த ஒரு சூத்திரர்களின் கர்மத்தையும் செய்யக் கூடாது.

2) பாபாவிடமிருந்து கிடைக்கும் அறிவுரையின் படி முழுமையாக நடந்து கட்டளைப்படி நடப்பவராக ஆக வேண்டும். கர்மயோகி ஆகி ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டும். அனைவரின் புத்தி என்ற பையை ஞான இரத்தினங்களால் நிரப்ப வேண்டும்.

வரதானம்:

அமிர்தவேளையின் மகத்துவத்தைப் புரிந்து, யதார்த்த ரீதியில் பயன்படுத்தக் கூடிய சதா சக்தி நிறைந்தவர் ஆகுக.

தன்னை சக்தி நிறைந்தவராக ஆக்குவதற்கு தினம் அமிர்தவேளையில் உடலாலும் மனதாலும் சுற்றி வாருங்கள். எப்படி அமிர்தவேளை சமயத்தின் சகயோகமும் உள்ளது என்றால் வரதானி சமயத்தில் மனதின் ஸ்திதியும் கூட அனைத்திலும் சக்திசாலி ஸ்டேஜினுடையதாக இருக்க வேண்டும். சக்திசாலி ஸ்டேஜ் என்றால் பாபாவுக்கு சமமான விதைவடிவ ஸ்திதி. சாதாரண ஸ்திதியிலோ, கர்மம் செய்யும் போதும் கூட இருக்க முடியும். ஆனால் வரதானத்தின் சமயத்தை யதார்த்த ரீதியில் பயன்படுத்துவீர்களானால் பலவீனம் முடிந்து போகும்.

சுலோகன்:

ஸ்லோகன் : தன்னுடைய சக்திகளின் கஜானா மூலம் சக்தியற்ற, வேறு (மாயா) வசமான ஆத்மாவையும் சக்திசாலி ஆக்குங்கள்.