17.05.2020 காலை முரளி ஓம்சாந்தி அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ் 13.01.1986 மதுபன்


  

பிராமண வாழ்க்கை - சதா எல்லையற்ற மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை

 

இன்று பாப்தாதா தனது தூய்மை (ஹோலி) மற்றும் மகிழ்ச்சி நிறைந்த அன்னப்பறவைகளின் சபையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அனைவரும் தூய்மையின் கூடவே மகிழ்ச்சியாகவும் சதா இருக்கிறீர்களா? ஹோலி என்றால் தூய்மை, இதன் அடையாளம் மகிழ்ச்சி (ஹேப்பி) சதா வெளிப்படையான முறையில் தென்படும். ஒருவேளை மகிழ்ச்சி இல்லையெனில் அவசியம் ஏதாவது அசுத்தம் அதாவது எண்ணம் அல்லது செயலில் யதார்த்தம் இல்லை, அதனால் தான் மகிழ்ச்சியில்லை. அசுத்தம் என்பது 5 விகாரங்களை மட்டுமே கூறப்படுவது கிடையாது. சம்பூர்ண ஆத்மாக்களுக்கு, தேவதைகளாக ஆகக் கூடியவர்களுக்கு யதார்த்தமற்ற, வீணான, சாதாரண எண்ணம், சொல் அல்லது செயலும் முழு தூய்மை என்று கூற முடியாது. சம்பூர்ண நிலையின் அருகாமையில் நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள், ஆகையால் நிகழ்கால நேரத்தின் படி வீணான மற்றும் சாதாரண செயல்கள் இருக்கக் கூடாது. இதிலும் பரிசேதானை (செக்கிங்) மற்றும் மாற்றம் (சேஞ்ச்) தேவை. எந்த அளவிற்கு எண்ணம், சொல் மற்றும் செயல்கள் சக்திசாலியாக மற்றும் உயர்ந்ததாக இருக்குமோ அந்த அளவிற்கு சதா மகிழ்ச்சியின் ஒளி, அதிஷ்டசாலியின் ஜொலிப்பு அனுபவம் ஆகும், மேலும் பிறருக்கு அனுபவம் செய்விப்பீர்கள். இந்த இரண்டு விசயங்களையும் பாப்தாதா அனைத்து குழந்தைகளிடத்திலும் பரிசோதித்துக் கொண்டிருந்தார் - எந்த அளவிற்கு தூய்மையை தாரணை செய்திருக்கிறீர்கள்? வீணானவைகள் மற்றும் சாதாரண நிலை இன்று வரை எவ்வளவு இருக்கிறது? மேலும் ஆன்மீகக் குஷி, அழிவற்ற குஷி, உள்ளார்ந்த குஷி எந்த அளவிற்கு இருக்கிறது? அனைத்து பிராமண குழந்தையும் பிராமண வாழ்க்கை தாரணை செய்வதன் இலட்சியமே சதா குஷியாக இருக்க வேண்டும் என்பதாகும். குஷியான வாழ்க்கை வாழ்வதற்காகவே பிராமணனாக ஆகியிருக்கிறீர்களே தவிர கடின உழைப்பிற்கான முயற்சி அல்லது ஏதாவது குழப்பத்தில் இருப்பதற்காக பிராமணன் ஆகிவில்லை.

 

முழு கல்பத்திலும் அடைய முடியாத ஆன்மீக உள்ளார்ந்த குஷி அல்லது அதீந்திரிய சுகத்தை பிராப்தியாக அடைவதற்கு பிராமணனாக ஆகியிருக்கிறீர்கள். ஆனால் அந்த குஷியானது ஏதாவது சாதனங்களின் ஆதாரத்தில், ஏதாவது எல்லைக்குட்பட்ட பலனின் ஆதாரத்தில் அல்லது சிறிது காலத்திற்கான வெற்றியின் ஆதாரத்தில், மதிப்பு அல்லது மரியாதையின் ஆதாரத்தில், மனதின் எல்லைக்குட்பட்ட ஆசைகளின் ஆதாரத்தில் அல்லது இது தான் எனக்கு பிடிக்கிறது - அது மனிதனாக இருக்கலாம், இடங்களாக அல்லது பொருட்களாக இருக்கலாம் - இவ்வாறு மனதிற்கு பிடித்தமானவைகளின் ஆதாரத்தில் குஷி இருப்பதில்லை தானே? இவைகளின் ஆதாரத்தில் குஷி அடைவது என்பது உண்மையான குஷி அல்ல. அழிவற்ற குஷி கிடையாது. ஆதாரம் அசைந்து விட்டால் குஷியும் அசைந்து விடும். இப்படிப்பட்ட குஷியடைவதற்காக பிராமணனாக ஆகவில்லை. அல்பகால பலன்களினால் குஷியடைவது உலகத்தினரிடமும் இருக்கிறது. சாப்பிடுங்கள், குடியுங்கள், மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள் என்பது அவர்களது சுலோகன் ஆகும். ஆனால் அந்த அல்ப கால ஆதாரம் அழிந்து விட்டால் குஷியும் அழிந்து விடும். அதே போன்று பிராமண வாழ்க்கையிலும் இவைகளின் ஆதாரத்தில் குஷி ஏற்பட்டால் என்ன வேறுபாடு இருக்கிறது? குஷிக்கடலின் குழந்தைகளாக ஆகியிருக்கிறீர்கள் எனில் ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு விநாடியும் குஷியின் அலைகளில் விளையாடக் கூடியவர்கள். குஷியியின் களஞ்சியமாக சதா இருக்கிறீர்கள். இதைத் தான் ஹோலி (தூய்மை) மற்றும் குஷியின் (ஹேப்பி) அன்னப்பறவை என்று கூறப் படுகிறது. எந்த எல்லைக்குட்பட்ட ஆதாரமின்றி சதா உள்ளார்ந்த குஷியில் இருப்பதற்கான இலட்சியம் வைத்திருக் கிறீர்கள், ஆனால் அந்த இலட்சியத்திலிருந்து விலகி எல்லைக்குட்பட்ட பிராப்திகளின் சிறிய சிறிய தெருக்களில் மாட்டிக் கொள்கின்ற காரணத்தினால் சில குழந்தைகள் இலட்சியத்திலிருந்து தூர விலகி விடுவதை பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கின்றார். நெடுஞ்சாலையை விட்டு விட்டு தெருக்களில் மாட்டிக் கொள்கின்றனர். தனது இலட்சியம், குஷியை விட்டு விட்டு எல்லைக்குட்பட்ட பிராப்திகளின் பின்னால் சென்று விடுகின்றனர். இன்று பெயர் கிடைத்தது அல்லது காரியம் நடந்து முடிந்தது, ஆசை நிறைவேறியது எனில், குஷி ஏற்படுகிறது. மனதிற்கு பிடித்தமானது நடந்தது, எண்ணங்கள் நிறைவேறியது எனில் மிகுந்த குஷி ஏற்படுகிறது. சிறிது குறை ஏற்பட்டால் இலட்சியத்தை அங்கேயே விட்டு விடுகின்றனர். இலட்சியம் எல்லைக்குட்பட்டதாக ஆகிவிடுகிறது. ஆகையால் எல்லையற்ற அழிவற்ற குஷியிலிருந்து விலகி விடுகின்றனர். எனவே பாப்தாதா குழந்தைகளிடம் கேட்கின்றார் - இதற்காகத் தான் பிராமணர்களாக ஆனீர்களா? இதற்காகத் தான் இந்த ஆன்மீக வாழ்க்கை தாரணை செய்தீர்களா? இது சாதாரண வாழ்க்கையாகும். இதை உயர்ந்த வாழ்க்கை என்று கூற முடியாது.

 

எந்த ஒரு காரியமும் செய்யுங்கள், அது மிகப் பெரிய சேவைக்கான காரியமாக இருக்கலாம், ஆனால் எந்த சேவை உள்ளார்ந்த குஷி, ஆன்மீக மகிழ்ச்சி, எல்லையற்ற பிராப்தியிலிருந்து கீழான நிலைக்கு கொண்டு செல்கிறதோ அதாவது எல்லைக்குட்பட்டு அழைத்து வருகிறதோ, இன்று மகிழ்ச்சி நாளை குழப்பம், இன்று குஷி நாளை வீண் குழப்பங்களில் கொண்டு செல்கிறதோ, குஷியிலிருந்து வஞ்சித்து விடுகிறதோ அப்படிப்பட்ட சேவையை விட்டு விடுங்கள், ஆனால் குஷியை விட்டு விடாதீர்கள். உண்மையான சேவை சதா எல்லையற்ற ஸ்திதி, எல்லையற்ற குஷியின் அனுபவத்தை ஏற்படுத்தும். ஒருவேளை அப்படிப்பட்ட அனுபவம் இல்லையெனில், அது கலப்பட சேவையாகும். உண்மையான சேவை அல்ல. இந்த இலட்சியம் சதா வையுங்கள் சேவையின் மூலம் சுய முன்னேற்றம், சுய பிராப்தி, திருப்தி மற்றும் மகான் நிலை அனுபவம் ஏற்பட்டதா? எங்கு திருப்தி என்ற உயர்ந்த நிலையிருக்குமோ அங்கு அழிவற்ற பிராப்தியின் அனுபவம் இருக்கும். சேவை என்றால் பூக்கள் நிறைந்த தோட்டத்தை செழிப்பாக்குவதாகும். சேவை என்றால் பூந்தோட்டத்தின் அனுபவம் செய்ய வேண்டுமே தவிர முட்கள் நிறைந்த காட்டில் மாட்டிக் கொள்ளக் கூடாது. சிக்கல், பிராப்தியற்ற நிலை, மனக் குழப்பம், சிறிது நேரம் மகிழ்ச்சி, அடுத்த சிறிது நேரம் குழப்பம் - இது முள்ளாகும். இந்த முட்களிலிருந்து விலகியிருப்பது என்றால், எல்லையற்ற குஷியின் அனுபவம் செய்வதாகும். என்ன நடந்தாலும் எல்லைக்குட்பட்ட பிராப்திகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கலாம், சில விசயங்களை விட வேண்டியிருக்கலாம், விசயங்களை விட்டு விடுங்கள், ஆனால் குஷியை விட்டு விடாதீர்கள். எதற்காக வந்தீர்களோ, அந்த இலட்சியத்திலிருந்து விலகி விடாதீர்கள். இந்த சூட்சும பரிசோதனை செய்யுங்கள். குஷியிருக்கிறது, ஆனால் அல்பகால பிராப்தியின் ஆதாரத்தில் குஷியுடன் இருப்பது - இதைத் தான் குஷி என்று புரிந்து கொள்ளவில்லை அல்லவா? சாலையோரக் காட்சிகளையே (சைட் சீன்) இலட்சியம் என்று புரிந்து கொள்வதில்லை தானே? ஏனெனில் சாலையோரக் காட்சிகளும் கவர்ச்சிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் இலட்சியத்தை அடைவது என்றால் எல்லையற்ற இராஜ்ய அதிகாரி ஆவதாகும். இலட்சியத்திலிருந்து விலகுபவர்கள் இராஜ்ய அதிகாரியாக ஆக முடியாது. இராயல் குடும்பத்திலும் வர முடியாது. ஆகையால் இலட்சியத்தை சதா நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாட்கள் செல்ல செல்ல எந்த எல்லைக்குட்பட்ட தெருக்களுக்கு சென்று விடவில்லை தானே? என்று தனக்குள் கேளுங்கள். அல்ப கால பிராப்தியின் குஷியானது சதா கால குஷியிலிருந்து விலக்கி விடவில்லை தானே? சிறிதளவிலேயே குஷி அடையக் கூடியவன் கிடையாது தானே? தன்னைத் தானே குஷிபடுத்திக் கொள்ளவில்லை தானே? அப்படியிருக்கிறேன், இப்படியிருக்கிறேன், நன்றாக இருக்கிறேன், குஷியாக இருக்கிறேன். அழிவற்ற குஷியின் அடையாளம் - அவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் சதா குஷிக்கான ஆசீர்வாதம் அவசியம் பிராப்தியாக கிடைக்கும். பாப்தாதா மற்றும் நிமித்தமாக இருக்கும் பெரியவர்களின் அன்பு என்ற ஆசீர்வாதம் உள்ளுக்குள் அலௌகீக, ஆன்மீகக் குஷிக் கடலில் நீந்தும் அனுபவம் செய்விக்கும். சோம்பலில் வந்து நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் என்னை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்காதீர்கள். சூரியனின் ஒளி மறையுமா என்ன? சத்தியத்தின் நறுமணம் ஒருபோதும் அழிக்க முடியாது, மறைக்க முடியாது. ஆகையால் ஒருபோதும் ஏமாற்றம் அடைந்து விடாதீர்கள். இதே பாடத்தை பக்கா செய்து கொள்ள வேண்டும். முதலில் தனது எல்லையற்ற, அழிவற்ற குஷி, பிறகு தான் மற்ற விசயங்கள். எல்லையற்ற குஷியானது சேவையின் அல்லது அனைவரின் அன்பு, அனைவரின் மூலம் அழிவற்ற மரியாதை பிராப்தியாக அடைவிக்கும் குஷி அதாவது உயர்ந்த பாக்கியத்தின் அனுபவத்தை தானாகவே ஏற்படுத்தும். யார் சதா குஷியாக இருக்கிறார்களோ அவர்கள் அதிஷ்டசாலிகள் ஆவர். உழைப்பின்றி, ஆசையின்றி அதாவது எதுவும் கூறாமலேயே அனைத்து பிராப்திகளும் எளிதாக ஏற்படும். இந்த பாடத்தை பக்கா செய்தீர்களா? பாப்தாதா பார்க்கின்றார் - எதற்காக வந்திருக்கிறீர்கள்? எங்கு செல்ல வேண்டும்? எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? எல்லையற்றதை விட்டு விட்டு பிறகு மீண்டும் எல்லைக்குட்பட்டதிலேயே செல்கிறீர்கள் எனில், பிறகு எல்லையற்றதன் அனுபவம் எப்பொழுது செய்வீர்கள்? பாப்தாதாவிற்கும் குழந்தைகளின் மீது அன்பு இருக்கிறது. கருணை காண்பிக்கமாட்டார். ஏனெனில் யாசிப்பவர்கள் அல்ல. வள்ளல் மற்றும் விதாதாவின் குழந்தைகளாக இருக்கிறீர்கள். துக்கமானவர்களின் மீது தான் கருணை காண்பிக்கப்படும். நீங்கள் சுக சொரூபமானவர்கள், சுகதாதாவின் குழந்தைகள். என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது புரிந்து கொண்டீர்களா? பாப்தாதா இந்த ஆண்டு வித விதமான விசயங்களில் அடிக்கடி கவனம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த ஆண்டு விசேஷமாக சுயத்தின் மீது கவனம் செலுத்துவதற்காக நேரம் கொடுக்கப்படுகிறது. உலகத்தினர்கள் சாப்பிடுங்கள், குடியுங்கள், மகிழ்ச்சி கொண்டாடுங்கள் என்று மட்டுமே கூறுகின்றனர். ஆனால் பாப்தாதா கூறுகின்றார் - சாப்பிடுங்கள் மற்றும் பகிருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் மகிழ்ச்சியை  ஏற்படுத்துங்கள். நல்லது. சதா அழிவற்ற, எல்லையற்ற குஷியில் இருக்கக் கூடியவர்களுக்கு, ஒவ்வொரு காரியத்திலும் அதிஷ்டத்தின் அனுபவம் செய்யக் கூடியவர்களுக்கு, சதா அனைவருக்கும் குஷியின் பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொடுக்கக் கூடியவர்களுக்கு, சதா குஷியின் நறுமணத்தை பரப்பக் கூடியவர்களுக்கு, சதா குஷியின் ஆர்வம், உற்சாகம் என்ற அலைகளில் நீந்தக் கூடியவர்களுக்கு, இவ்வாறு சதா குஷியின் ஒளி மற்றும் ஜொலிப்பில் இருக்கக் கூடியவர்களுக்கு, உயர்ந்த இலட்சியத்தை பிராப்தியாக அடையக் கூடிய உயர்ந்த ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் சதா ஹோலி மற்றும் ஹேப்பியாக இருப்பதற்கான அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு:

இல்லறத்தில் இருந்தாலும் சதா விடுபட்டவர்கள் மற்றும் தந்தைக்குப் பிரியமானவர்கள் அல்லவா! ஒருவேளை யாரிடமாவது பற்றுதல் இருந்தால் அவர்கள் சதா காலத்திற்ம் தனது வாழ்க்கையில் தடையானவர்களாக ஆகிவிடுவர். ஆகையால் சதா தடையற்றவர்களாகி முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். கல்பத்திற்கு முன்பு போன்று அங்கதனாகி, ஆடாது, அசையாதவர்களாக இருங்கள். அங்கதனின் சிறப்புக்களாக என்ன காண்பிக்கின்றனர்? அந்த அளவிற்கு நிச்சயயுத்தியுடையவர், அவரது பாதங்களைக் கூட யாரும் அசைக்கவே முடியாது. மாயை நிச்சயம் என்ற பாதங்களை அசைப்பதற்காக வித விதமான முறையில் வருகின்றன. ஆனால் மாயை அசைந்து விட வேண்டும், உங்களது நிச்சயம் என்ற கால்கள் அசையக் கூடாது. மாயை சுயம் சரண்டர் ஆகிவிடும். நீங்கள் சரண்டர் ஆகமாட்டீர்கள் அல்லவா! தந்தையிடத்தில் சரண்டர் அல்லவா! மாயையிடம் அல்ல. இப்படிப்பட்ட நிச்சயபுத்தியுடையவர்கள் சதா கவலையற்று இருப்பர். ஒருவேளை சிறிது ஏதாவது கவலையிருந்தால் நிச்சயத்தில் குறையிருக்கிறது. எப்பொழுதாவது, ஏதாவது ஒரு விசயத்தில் கவலை ஏற்பட்டு விடுகிறது - அதற்கான காரணம் என்னவாக இருக்கும்? கண்டிப்பாக ஏதாவது ஒரு விசயத்தில் நிச்சயம் குறைவு இருக்கிறது. அது நாடகத்தின் மீதிருக்கும் நிச்சயம் குறைவாக இருக்கலாம், தன் மீதிருக்கும் நிச்சயம் குறைவாக இருக்கலாம் அல்லது தந்தையின் மீதிருக்கும் நிச்சயம் குறைவாக இருக்கலாம். மூன்று வகையாக நிச்சயத்தில் சிறிது குறையிருந்தாலும் நிச்சயத்துடன் இருக்க முடியாது. அனைத்தையும் விட மிகப் பெரிய நோய் கவலையாகும். கவலை என்ற நோய்க்கு மருத்துவர்களிடம் மருந்து கிடையாது. தற்காலிகமாக தூங்கு வதற்கான மருந்து கொடுத்து விடுவார்கள். ஆனால் சதா காலத்திற்கும் கவலையைப் போக்கி விட முடியாது. கவலையுடையவர்கள் எந்த அளவிற்கு பிராப்திக்குப் பின்னால் செல்கிறார்களோ அந்த அளவிற்கு பிராப்தியும் முன்னால் ஓடிக் கொண்டே இருக்கும். ஆகையால் நிச்சயம் என்ற பாதங்கள் சதா உறுதியானதாக இருக்க வேண்டும். சதா ஒரே பலம், ஒரே நம்பிக்கை - இது தான் பாதம். நிச்சயம் என்று கூறினாலும், நம்பிக்கை என்று கூறினாலும் ஒரே விசயம் தான். இப்படிப்பட்ட நிச்சயபுத்தியுடைய குழந்தைகளுக்கு வெற்றி உறுதியாகும்.

 

சதா தந்தையிடத்தில் பலியாகக் கூடியவர்கள் தானே? பக்தியில் செய்த உறுதிமொழியைக் கடைப்பிடிக்கக் கூடியவர்கள் தானே? என்ன உறுதிமொழி செய்திருந்தீர்கள்? சதா உங்களிடம் பலியாகி விடுவோம். பலி என்றால் சதா சமர்பனமாகி, பலசாலி ஆகக் கூடியவர்கள். ஆக பலி ஆகிவிட்டீர்களா? அல்லது ஆகயிருக்கிறீர்களா? பலியாவது என்றால் எனது எதுவும் கிடையாது. எனது என்பது அழிந்து விட வேண்டும். சரீரமும் என்னுடையது அல்ல. ஆக எப்போதாவது தேக அபிமானத்தில் வருகிறீர்களா? எனது என்பதால் தான் தேக உணர்வு வருகிறது. இதிலிருந்தும் விலகியிருப்பார்கள், இதற்குப் பெயர் தான் பலி ஆவதாகும். எனவே எனது என்பதை சதா காலத்திற்கும் விலக்கிக் கொண்டே செல்லுங்கள். அனைத்தும் உங்களுடையது என்ற அனுபவம் செய்து கொண்டே செல்லுங்கள். எந்த அளவிற்கு அதிகம் அனுபவிகளாக ஆகிறீர்களோ, அந்த அளவிற்கு அதாரிட்டி சொரூபம். அவர்கள் ஒருபோதும் ஏமாற்றம் அடைய முடியாது. துக்க அலைகளில் வரவே முடியாது,. ஆக அனுபவத்தின் கதைகளை அனைவருக்கும் சதா கூறிக் கொண்டே இருங்கள். அனுபவி ஆத்மாக்கள் குறுகிய காலத்தில் அதிக வெற்றியை பிராப்தியாக அடைவார்கள். நல்லது.

 

விடைபெறும் நேரத்தில் - 14 ஜனவரி, மகர சங்கிராந்தியின் அன்பு நினைவுகள்!

 

இன்றைய நாளின் மகத்துவம் சதா சாப்பிடுவது மற்றும் பகிர்வது என்பதாக ஆக்கி விட்டனர். சிறிது சாப்பிடுகின்றனர், சிறிது பகிர்கின்றனர். அவர்கள் எள்ளை தானம் செய்கின்றனர் அல்லது சாப்பிடுகின்றனர். எள் என்றால் மிகச் சிறிய பிந்து. எந்த விசயமாக இருந்தாலும் - சிறியதாக இருந்தால் இது எள்ளுக்குச் சமமானது, பெரியதாக இருந்தால் இது மலைக்கு சமமானது என்று கூறுகின்றனர் அல்லவா? ஆக மலை மற்றும் எள் இரண்டிற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது அல்லவா?! எள்ளின் மகத்துவம் இதனால் தான் இருக்கிறது. ஏனெனில் மிக சூட்சம பிந்துவாக ஆகின்றனர். எப்போது பிந்து ரூபமாக ஆகிறீர்களோ அப்போது பறக்கும் கலையின் லிப்டாக ஆகிறீர்கள். எனவே எள்ளிற்கும் மகத்துவம் இருக்கிறது. மேலும் எள் சதா குழு ரூபத்தில் இனிப்பை உருவாக்குகிறது. எள்ளை அப்படியே சாப்பிடமாட்டார்கள். இனிமை அதாவது அன்பினால் குழுவாக உருவாக்குவதன் அடையாளமாகும். எள்ளில் இனிப்பு சேர்க்கின்ற போது நன்றாக இருக்கிறது. எள் மட்டும் சாப்பிட்டால் கசக்கும், ஆனால் இனிப்பு சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஆக ஆத்மாக்களாகிய நீங்களும் இனிமையாக இருந்து சம்பந்தங்களில் வருகின்ற போது, அன்பில் வருகின்ற போது சிரேஷ்டமாகி ஆகிவிடுகிறீர்கள். ஆக இது குழு ரூபத்தில் இனிமையாக இருப்பதன் நினைவார்த்தமாகும். இதற்கும் அடையாளம் இருக்கிறது. எனவே தன்னை சதா இனிமையின் ஆதாரத்தில் குழுவின் சக்தியில் கொண்டு வர வேண்டும், பிந்து ரூபம் ஆக வேண்டும் மற்றும் லிப்ட் ஆகி பறக்கும் கலையில் பறப்பதாகும். இது இன்றைய நாளின் மகத்துவமாகும். ஆக கொண்டாடுவது என்றால் அவ்வாறு ஆவதாகும். நீங்கள் ஆகிறீர்கள், அவர்கள் சிறிது காலத்திற்குக் கொண்டாடுகிறார்கள். இதில் தானம் கொடுப்பது என்றால் தனக்குள் இருக்கக் கூடிய பலவீனங்களை தானமாகக் கொடுத்து விடுங்கள். சிறிய விசயம் என்று புரிந்து கொண்டு கொடுத்து விடுங்கள். எள் போன்றது என்று புரிந்து கொண்டு கொடுத்து விடுங்கள். பெரிய விசயம் என்று நினைக்காதீர்கள் - விட வேண்டியிருக்கிறது, கொடுக்க வேண்டியிருக்கிறது என்று நினைக்காதீர்கள். எள் போன்று சிறிய விசயத்தை தானம் கொடுக்க வேண்டும். சிறிய விசயம் என்று புரிந்து கொண்டு குஷி குஷியாக கொடுத்து விடுங்கள். இது தானத்தின் மகத்துவமாகும். புரிந்ததா!

 

சதா அன்பானவர்களாக ஆவது, சதா குழுவுடன் இணைக்கமாக இருப்பது மற்றும் சதா பெரிய விசயத்தை சிறியதாக நினைத்து சமாப்தி செய்ய வேண்டும். நெருப்பில் எரித்து விட வேண்டும் - இது தான் மகத்துவமாகும். ஆக கொண்டாடி விட்டீர்கள் தானே! திட சங்கல்பம் என்ற நெருப்பை உருவாக்கி விட்டீர்கள். இன்றைய நாளில் நெருப்பு எரிய வைப்பார்கள் அல்லவா! ஆக சன்ஸ்காரங்களை மாற்றக் கூடிய நாள், அவர்கள் சங்கிராந்தி என்று கூறுகின்றனர், நீங்கள் சன்ஸ்கார மாற்றம் என்று கூறுவீர்கள். நல்லது, அனைவருக்கும் அன்பு மற்றும் குழுவின் சக்தியில் சதா வெற்றியுடன் இருப்பதற்கான அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்

.

வரதானம்:

சதா பகவான் மற்றும் பாக்கியத்தின் நினைவில் இருக்கக் கூடிய சர்வ சிரேஷ்ட பாக்கியவான் ஆகுக.

 

சங்கமயுகத்தில் சைத்தன்ய சொரூபத்தில் பகவான் குழந்தைகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார். பக்தி மார்க்கத்தில் அனைவரும் பகவானுக்கு சேவை செய்கின்றனர். ஆனால் இங்கு சைத்தன்ய விக்கிரகங்களுக்கு சுயம் பகவான் சேவை செய்கின்றார். அமிர்தவேளையில் எழுப்புகின்றார், போக் வைக்கின்றார், படுக்க வைக்கின்றார். பாட்டு கேட்டு தூங்குவது மற்றும் பாட்டு கேட்டு எழுந்திருப்பது - இவ்வாறு செல்லமாக அல்லது சர்வ சிரேஷ்ட பாக்கியவான்கள் நாம் பிராமணர்கள். இதே பாக்கியத்தின் குஷியில் சதா ஆடிக் கொண்டே இருங்கள். தந்தைக்குச் செல்லமானவர்களாக ஆகுங்கள், போதும், மாயைக்கு அல்ல. யார் மாயைக்குச் செல்லமானவர்களாக ஆகிறார்களோ அவர்கள் மிகவும் சேட்டை செய்வர்.

 

சுலோகன்:

தனது புன்முறுவலான முகத்தின் மூலம் அனைத்து பிராப்திகளின் அனுபவத்தை ஏற்படுத்துவது தான் உண்மையான சேவையாகும்.

 

ஓம்சாந்தி