17-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தை உங்களுக்கு எல்லையற்ற செய்தியைச் சொல்கின்றார். நீங்கள் இப்பொழுது சுயதரிசன சக்கரதாரி ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் 84 பிறவிகளுடைய நினைவில் இருக்க வேண்டும் மற்றும் அனைவருக்கும் இந்த நினைவை ஏற்படுத்த வேண்டும்.

கேள்வி:
சிவபாபாவின் முதல் குழந்தை என்று பிரம்மாவையே கூறமுடியும், விஷ்ணுவை அல்ல - ஏன்?

பதில்:
ஏனெனில், சிவபாபா பிரம்மா மூலம் பிராமண சம்பிரதாயத்தைப் (தார்மீக சமுதாயத்தை) படைக்கின்றார். ஒருவேளை, விஷ்ணுவை குழந்தை என்று கூறினால் அவர் மூலம் கூட சம்பிரதாயம் உருவாக வேண்டும். ஆனால், அவர் மூலம் எந்த சம்பிர தாயமும் உருவாகுவதில்லை. விஷ்ணுவை தாய், தந்தை என்று யாரும் கூற மாட்டார்கள். அவர்கள் இலட்சுமி, நாராயணர் என்ற ரூபத்தில் மகாராஜா, மகாராணியாக இருக்கும்பொழுது, அவர்களை அவர்களுடைய குழந்தைகள் மட்டும் அம்மா, அப்பா என்று அழைப்பார்கள். பிரம்மா மூலம் பிராமண சம்பிரதாயம் உருவாகிறது.

பாடல்:
தாயும் நீயே, தந்தையும் நீயே

ஓம் சாந்தி.
தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் என்று எந்த ஒரு குருவும் கூற முடியாது என்பதை தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். தந்தை குழந்தைகளுக்கு என்ன புரியவைப்பார்? அவர் எந்தத் தந்தை? இதை நீங்கள் மட்டும் தான் அறிந்திருக்கிறீர்கள். வேறு எந்த சத்சங்கத்திலும் இவ்வாறு கூற முடியாது. சாயி பாபா, மெஹர் (கருணை) பாபா என்று கூறுகின்றனர். ஆனால், அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதைப் பற்றி எதுவுமே புரிந்திருக்கவில்லை. இவர் எல்லையற்ற தந்தை ஆவார், எல்லையற்ற சமாச்சாரத்தை சொல்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஒன்று எல்லைக்குட்பட்ட செய்தி, மற்றொன்று எல்லையற்ற செய்தி (விசயம்). இந்த உலகத்தில் எவரும் அறியவேயில்லை. உங்களுக்கு எல்லையற்ற விசயத்தை சொல்வதனால், உங்களுக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் புத்தியில் வந்துவிடுகிறது என்று தந்தை கூறுகின்றார். தந்தை தன்னுடைய அறிமுகத்தைக் கொடுத்திருக்கின்றார் மற்றும் சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதைப் பற்றியும் சரியான முறையில் புரிய வைத்திருக்கின்றார்.இதை நீங்கள் அறிவீர்கள். அதைப் புரிந்து கொண்டு நாம் பிறருக்குப் புரிய வைக்கின்றோம். விதையை பரமபிதா பரமாத்மா அல்லது தந்தை என்று கூறுகின்றோம், நாம் ஆத்மாக்கள் அவருடைய குழந்தைகள் ஆவோம். நாம் ஆத்மாக்கள், பரமாத்மாவின் குழந்தைகள் என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. பரமபிதா பரமாத்மா பரந்தாமத்தில் வாசம் செய்பவர். அவர் மூலவதனத்தைப் பற்றிய விசயத்தைப் (இரகசியத்தை) புரிய வைத்திருக்கின்றார். எவ்வாறு இந்த முழு மாலை உருவாகின்றது? முதன்முதலில் தந்தை புரியவைக்கின்றார் - நான் உங்களுடைய தந்தை, மற்றும் நான் பரந்தாமத்தில் இருக்கின்றேன். என்னையே ஞானக்கடல், ஆனந்தக்கடல் என்று கூறுகின்றார்கள். நான் வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு தூய்மை, சுகம், சாந்தியின் ஆஸ்தியைக் கொடுக் கின்றேன். குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இந்த விசயம் சுழன்று கொண்டே இருக்கின்றது. நாம் உண்மையில் எங்கே வசிக்கக்கூடிய வர்கள்? ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் கூட பாகம் ஏற்று நடிக்க வேண்டும். ஏற்ற பாகத்தின் இரகசியத்தை எவரும் புரிந்துகொள்ள முடியாது, சொல்லிக்கொண்டு மட்டுமே இருக்கின்றார்கள். மறுபிறவி எடுப்பார்கள். ஆத்மா இத்தனை பிறவிகள் எடுக்கிறது. சிலர் 84 இலட்ச பிறவிகள் என்று கூறுகின்றனர். புரியவைத்த பிறகு 84 பிறவிகள் சரியானது என்று சிலர் புரிந்துகொள்கிறார்கள். 84 பிறவிகள் எவ்வாறு எடுக்கின்றோம்? என்பது புத்தியில் இருக்க வேண்டும். நாம் சதோபிரதானமாக இருந்தோம், பிறகு, சதோ, ரஜோ, தமோ நிலைக்கு வந்துவிட்டோம். இப்பொழுது மீண்டும் சங்கம யுகத்தில் நாம் சதோபிர தானம் ஆகிக்கொண்டு இருக்கின்றோம். அவசியமாக இது எப்போது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்குமோ அப்பொழுது தான் உங்களை சுயதரிசன சக்கரதாரி என்று கூறப்படுகிறது. நாம் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம், வேறு எந்த தர்மத்தைச் சேர்ந்த மனிதர்களும் எடுப்பதில்லை என்பதை ஒரு மூதாட்டி கூட புரியவைக்க முடியும், அந்த அளவிற்கு இந்த விசயங்கள் மிகவும் எளிமையானவை ஆகும். இப்பொழுது நாம் பிராமணர்களாக இருக்கிறோம், பிறகு, தேவதை, சத்திரியர், வைஷ்யர், சூத்திரர் ஆகிறோம் என்பதும் புரிய வைக்கப்படுகிறது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா ஆவார். இது இப்பொழுது உங்களுடைய புத்தியில் உள்ளது. இவ்வாறு நாம் மறுபிறவி எடுக்கிறோம். மறுபிறவியை அவசியம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். இப்பொழுது உங்களுக்கு தன்னுடைய 84 பிறவிகளின் பாகம் நினைவிற்கு வந்துவிட்டது. இதைப் புரியவைப்பது மூதாட்டியர்களுக்குக் கூட மிக எளிதாகும். நீங்கள் எந்த புத்தகம் போன்றவற்றைப் படிப் பதற்கான அவசியம் இல்லை. தந்தை புரியவைத் திருக்கின்றார் - நீங்கள் 84 பிறவிகள் எவ்வாறு எடுக்கிறீர்கள்? என்று நீங்கள் தான் தேவி தேவதை களாக இருந்தீர்கள். பிறகு, 8 பிறவிகள் சத்யுகத்தில், 12 பிறவிகள் திரேதாயுகத்தில், 63 பிறவிகள் துவாபர, கலியுகத்தில் எடுத்திருக்கிறீர்கள். மேலும், இந்த ஒரு பிறவி அனைத்தையும்விட உயர்ந்ததாகும். எனவே, எளிதாக புரிந்துகொள்கிறீர்கள் அல்லவா. குருக்ஷேத்திரத்தை வயதான தாய்மார்கள் கூட புரிந்திருக்கிறீர்கள் அல்லவா! குருஷேத்திரம் என்ற பெயர் புகழ்வாய்ந்ததாகும். உண்மையில் இது (உலகம்) முழுவதுமே குருக்ஷேத்திரம் ஆகும். அந்த குருக்ஷேத்திரமோ ஒரு கிராமம் ஆகும். இது முழுவதும் கர்மம் செய்வதற்கான க்ஷேத்திரம் (இடம்) ஆகும், இதில் இப்பொழுது யுத்தம் போன்றவை நடைபெறவில்லை. நீங்கள் இந்த முழு குரு க்ஷேத்திரத்தைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். அமரவேண்டியதோ ஒரு இடத்தில் தான்.

இந்த முழு கர்மஷேத்திரத்தின் மீதும் இராவணனுடைய இராஜ்யம் நடக்கிறது என்று பாபா கூறியிருக்கின்றார். இராவணனை எரிப்பது கூட இங்கே தான். இராவணன் கூட இங்கே தான் பிறவி எடுக்கிறான். சிவபாபாவும் இங்கே தான் பிறப்பு எடுக்கின்றார். இங்கே தான் தேவி தேவதைகளும் இருந்தனர். பிறகு. அவர்களே முதன்முதலில் வாம மார்க்கத்தில் (இல்லற மார்க்கத்தில்) வருகின்றனர். பாபா கூட இங்கே பாரதத்தில் தான் வருகின்றார். பாரதத்திற்கு மிகுந்த மகிமை உள்ளது. தந்தை கூட பாரதத்தில் தான் வந்து புரியவைக்கின்றார். குழந்தைகளே! நீங்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி சனாதன தேவி தேவதை தர்மத்தினராக இருந்தீர் கள், இராஜ்யம் செய்தீர்கள். அதில் முதல் எண்ணில் வரும் இலட்சுமி, நாராயணர் விஷ்வத்தின் மீது இராஜ்யம் செய்தார்கள். 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்களை விஷ்வ மகாராஜா, விஷ்வ மகாராணி என்று கூறப்பட்டது. அங்கே வேறு எந்த தர்மமும் கிடையாது. எனவே, யாரெல்லாம் இராஜாக்கள் இருப்பார்களோ, அவர்கள் விஷ்வத்தின் மகாராஜன் என்றே அழைக்கப்படு வார்கள், பிறகு, இவர் இந்த ஊரைச் சேர்ந்தவர், இவர் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. நாம் விஷ்வ இராஜ்யத்தைப் பெறுகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். நீங்கள் யமுனை நதிக்கரையில் இராஜ்யம் செய்கிறீர்கள் என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். எனவே, புத்தியில் 4 யுகங்கள் மற்றும் 4 குலங்களை நினைவு வைக்க வேண்டும். ஐந்தாவது இந்த சிறிய யுகமாகும், இதை எவருமே அறியவில்லை. முக்கியமானது பிராமண தர்மம் ஆகும். பிரம்மா வாய்வழி வம்ச பிராமணர்கள். பிரம்மா எப்பொழுது வந்தார்? எப்பொழுது தந்தை சிருஷ்டியைப் படைப்பாரோ, அப்பொழுது முதலில் பிராமணர்கள் தான் தேவை. இவர்கள் பிரம்மாவின் நேரடியான வாய்வழி வம்சத்தினர். பிரம்மா சிவபாபா வின் முதல் குழந்தை ஆவார். விஷ்ணுவையும் கூட குழந்தை என்று கூற முடியுமா என்ன? இல்லை. ஒருவேளை, குழந்தை என்றால் அவர் மூலம் கூட சம்பிரதாயம் உருவாக வேண்டும். ஆனால், அவர் மூலமோ சம்பிரதாயம் உருவாகுவதே இல்லை. அவர்களை தாய், தந்தை என்றும் அழைக்க முடியாது. மகாராஜா, மகாராணிக்கு அவர்களுடைய ஒரு குழந்தை இருக்கும். இது கர்மபூமி ஆகும். பரமபிதா பரமாத்மாவும் கூட வந்து கர்மம் (செயல்) செய்ய வேண்டியதாக இருக்கிறது. இல்லையென்றால், இவ்வளவு மகிமை கிடைக்கும் அளவிற்கு அவர் வந்து என்ன செய்தார்?

சிவஜெயந்தி கூட மகிமை செய்யப்படுகிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். சிவபுராணம் கூட எழுதப் பட்டிருக்கிறது. ஆனால், அதில் எந்த விசயமும் புரிந்து கொள்ள முடியாது. முக்கியமானது கீதையே ஆகும். எவ்வாறு சிவபாபா வருகின்றார் என்பதை நீங்கள் நல்ல முறையில் புரிந்துகொண்டீர்கள். பிரம்மாவும் அவசியம் தேவை. இப்பொழுது பிரம்மா எங்கிருந்து வந்தார்? சூட்சுமவதனத்திலோ சம்பூரண பிரம்மா இருக்கின்றார். இந்த விசயத்தில் தான் மக்கள் குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். பிரம்மாவின் கடமை என்ன? சூட்சுமவதனத்தில் இருந்துகொண்டு என்ன செய்து கொண்டிருப்பார்? எப்பொழுது இவர் (வியக்த உருவில்) சரீரத்தில் இருக்கின்றாரோ, அப்பொழுது இவர் மூலம் ஞானம் அளிக் கின்றேன், பிறகு, இந்த ஞானத்தைக் கேட்டு, கேட்டு ஃபரிஸ்தா ஆகிவிடுகின்றார் என்று தந்தை புரியவைக்கின்றார். அது அவருடைய சம்பூரண ரூபமாகும். அவ்வாறே மம்மாவிற்கும் உள்ளது, அத்தகைய சம்பூரண ரூபம் உங்களுக்கும் உருவாகிறது. நாம் 84 பிறவிகள் எவ்வாறு எடுக்கிறோம்? என்பதை மட்டும் வயதான தாய்மார்கள் தாரணை செய்ய வேண்டும். இதுவும் புரிய வைக்கப்படுகிறது - பாபா கர்மக்ஷேத்திரத்தில் பாகம் ஏற்று நடிப்பதற்காக அனுப்பி வைத்துவிடுகின்றார். வாயினால் எதுவும் சொல்வதில்லை. இது கூட நாடகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் அனுசாரமாக ஒவ்வொரு வரும் அவரவர் நேரத்தில் வர வேண்டும். எனவே, தந்தை புரியவைக்கின்றார் - சிருஷ்டியின் ஆதியில் முதன் முதலில் யார் இருந்தார்கள் பிறகு, இறுதியில் யார் இருந்தார்கள்? இறுதியில் அனைத்து சம்பிரதாயங்களும் இற்றுப்போன நிலையை அடைந்துவிட்டன. மற்றபடி பிரளயம் ஏற்படுகிறது, பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் பெருவிரலை சப்பிக்கொண்டு வருகின்றார் என்பதெல்லாம் கிடையாது. தந்தை பிரம்மா மூலம் புதிய சம்பிரதாயத்தை ஸ்தாபனை செய்கின்றார். பரமபிதா பரமாத்மா இந்த தெய்வீக சிருஷ்டியை எவ்வாறு படைக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்களோ, கிருஷ்ணர் என்று புரிந்துகொண்டு இருக்கின்றனர். தந்தை தான் பதீத பாவனர் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தூய்மை ஆக்குவதற்காக இறுதியில் தான் வருவார். யார் கல்பத்திற்கு முன்பு தூய்மையாகியிருந்தார் களோ, அவர்களே வருவார்கள். வந்து பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர் ஆவார்கள் மற்றும் முயற்சி செய்து சிவபாபாவிடம் இருந்து தன்னுடைய ஆஸ்தியைப் பெறுவார்கள். படைப்பாளர், ஞானக் கடல் அவர் அல்லவா! ஆஸ்தி தந்தையிடம் இருந்து தான் கிடைக்க முடியும். தாதாவிற்கும் கூட அவரிடமிருந்து கிடைக்கிறது. அவருடைய மகிமை தான் பாடப்படுகிறது. தாயும் நீயே..... தந்தையும் நீயே.... உண்மையான சுகம் கொடுக்கக் கூடியவர் அவர் தான். இதையும் நீங்களே அறிந்திருக்கிறீர்கள். உலகம் அறியவில்லை. எப்பொழுது இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறதோ, அப்பொழுதே துக்கம் ஆரம்பமாகிறது. இராவணன் புத்தியற்றவர்களாக ஆக்கிவிடுகிறான். குழந்தைகளிடம் எதுவரை விகாரங்கள் பிரவேசம் ஆக வில்லையோ, அதுவரை அவர்களை மகாத்மாவிற்கு சமமானவர்கள் என்று கூறு கின்றனர். எப்பொழுது இளமைப்பருவம் வருகிறதோ, அப்பொழுது லௌகீக உறவினர்கள் அவர்களுக்கு துக்கத்திற்கான வழியைக் கூறுகின்றனர். நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று முதல் வழியைக் கூறுகிறார்கள். இலட்சுமி, நாராயணர் மற்றும் இராமர், சீதை திருமணம் செய்ய வில்லையா என்ன? ஆனால், அவர்களுடையது தூய்மையான இல்லற மார்க்கமாக இருந்தது என்பது அவர்களுக்குத் (உலகத்தினருக்கு) தெரியவே தெரியாது. இது தூய்மையற்ற இல்லற மார்க்கமாகும். அவர்களோ தூய்மையான சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தார்கள். நாமோ தூய்மையற்ற நரகத்தின் எஜமானர்களாக இருக் கிறோம். இந்த சிந்தனை புத்தியில் வருவதில்லை. பாரதத்தின் மகிமையாக நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதை மறந்துவிட்டீர்களா என்ன? பாரதம் சொர்க்கமாக இருந்தது, ஆதி சனாதன தேவி தேவதை தர்மம் இருந்தது, தூய்மையாக இருந்தார்கள். ஆகையினாலேயே, தூய்மையற்றவர்கள் அவர்கள் முன் தலை வணங்குகிறார்கள். பதீத பாவனர் தந்தை தான் தூய்மையான உலகத்தை ஸ்தாபனை செய்கின்றார். தூய்மையான பாரதம் இருந்தது, இப்பொழுதோ, நாம் தூய்மை இல்லாமல் இருக்கின்றோம் என்று வாயினால் கூறுகின்றார்கள். ஏதாவது யுத்தம் ஏற்பட்டால் சாந்திக்காக யக்ஞத்தை (யாகம்) வளர்ப்பார்கள். மந்திரத்தையும் ஜெபிப்பார்கள். ஆனால், சாந்தியின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், இது மிகவும் எளியதாகும். இறைத்தந்தை என்று கூறுகின்றார்கள் என்றால் அவர்கள் குழந்தைகள் ஆவார்கள் அல்லவா. அவர் நம் அனைவருடைய தந்தை ஆவார், எனில், நாம் சகோதரர்கள் ஆவோம் அல்லவா. நாம் பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர் சகோதரி, சகோதரர் ஆவோம். சத்யுகத்தில் வாய்வழி வம்சத்தினர் கிடையாது. சங்கமயுகத்தில் மட்டும் வாய்வழி வம்சத்தினர் இருப்பதால் சகோதரி, சகோதரன் என்று அழைக்கிறீர்கள்.

தந்தை கூறுகின்றார் - நான் கல்ப கல்பமாக, கல்பத்தின் சங்கமயுகத்தில் சாதாரண வயோதிக உடலில் பிரவேசம் செய்கின்றேன். அவருக்கு பிரம்மா என்று பெயர் வைக் கின்றேன். அவரே பிறகு ஞானத்தை தாரணை செய்து அவ்யக்த சம்பூரண பிரம்மா ஆகின்றார். இவரும் அவரும் ஒருவரே, வேறு விசயம் கிடையாது. பிராமணர்களே பிறகு தேவதை ஆகின்றார்கள், சக்கரத்தில் சுற்றி வந்து இறுதியில் சூத்திரர்கள் ஆகின்றார்கள். பிறகு, பிரம்மா மூலம் பிராமணர்களைப் படைக்கின்றார். வயதான தாய்மார்கள் மீது கூட பிராமணிகள் (நிமித்த சகோதரிகள்) அதிக முயற்சி செய்ய வேண்டும். நாம் 84 பிறவிகள் எடுத்து முடித்துவிட்டோம், இதைப் புரிந்து கொள்ள முடியும் அல்லவா. என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த யோக அக்னி மூலம் தான் விகர்மங்கள் வினாசம் ஆகும். என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று அனைத்து ஆத்மாக் களுக்கும் கூறுகின்றார். அதிர்ஷ்ட நட்சத்திரங்களே! ஹே சாலிகிராமங்களே! என்று சிவபாபா கூறுகின்றார். ஆத்மாக்களாகிய உங்களுடைய புத்தியில் இந்த ஞானத்தைப் பதிய வைக்கின்றார். ஆத்மா கேட்கிறது, பிரம்மா வாய் மூலம் தந்தை பரமாத்மா கூறுகின்றார். பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்யப்படுகிறது எனில், அவசியம் மனிதராகத் தான் இருப்பார் மற்றும் வயோதிகராக இருப்பார். பிரம்மாவை எப்பொழுதும் வயோதிகராகக் காண்பிக்கின்றனர். கிருஷ்ணரை குழந்தை எனப் புரிந்திருக்கின்றனர், பிரம்மாவை ஒருபொழுதும் சிறிய குழந்தை என்று கூறமாட்டார்கள். அவருடைய சிறிய ரூபத்தை உருவாக்குவதே இல்லை. எவ்வாறு இலட்சுமி, நாராயணருடைய குழந்தை ரூபத்தைக் காண்பிப்பதில்லையோ, அவ்வாறே பிரம்மாவினுடைய குழந்தை ரூபத்தைக் காண்பிப்பதில்லை. நான் வயோதிக உடலில் வருகின்றேன் என்று சுயம் தந்தை கூறுகின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் கூட இதே மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் என்று சிவபாபா கூறுகின்றார். சிவனை, பிரம்மாவை பாபா என்று கூறுகின்றனர், சங்கரரை ஒருபொழுதும் பாபா என்று கூறுவதில்லை. அவர்கள் சிவன் மற்றும் சங்கரரை ஒருவர் என்று கூறிவிட்டார்கள். எனவே, இதைக் கூட புத்தியில் பதிய வைக்க வேண்டும். இப்பொழுது ஆத்மாக்களின் தந்தை பரமபிதா பரமாத்மா வந்திருக் கின்றார். இத்தகைய எளிய விசயங்களை வயதான தாய்மார்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

முன்னர் என்னவாக ஆக்கியிருந்தேன் என்று பாபா கேள்வி கேட்கின்றார். சுயதரிசன சக்கரதாரி ஆகியிருந்தோம் என்றாவது கூற வேண்டும். தந்தை மற்றும் சக்கரத்தை நினைவு செய்வதன் மூலம் ஆன்மிக அயல்நாட்டிற்குச் சென்றுவிடுவீர்கள். அந்த அயல்நாடோ தூரதேசமாக உள்ளதல்லவா. ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் தூரதேசத்தில் இருக்கக் கூடியவர்கள். நம்முடைய வீட்டைப் பாருங்கள், எங்கே இருக்கிறது! சூரிய, சந்திரனுக்கு அப்பால் இருக்கிறது. அங்கே எந்த துக்கமும் கிடையாது. இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்களுக்கு வீட்டின் நினைவு வந்திருக்கிறது. நாம் அங்கே அசரீரியாக இருந்தோம், சரீரம் இல்லாமல் இருந்தோம். இந்தக் குஷி இருக்க வேண்டும். இப்பொழுது நாம் நம்முடைய வீட்டிற்குச் செல்கிறோம். தந்தையின் வீடே நம்முடைய வீடு. என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் தன்னுடைய முக்திதாமத்தை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறியிருக்கின்றார். அறிவியல் அகந்தை உள்ளவர்கள் பரமாத்மாவை முற்றிலும் அறியவில்லை. சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும் என்பது அவர்கள் காதுகளிலும் கொஞ்சம் விழவேண்டுமே என்று தந்தைக்கு இரக்கம் ஏற்படுகின்றது. தேக அபிமானம் விடுபட்டு போகவேண்டும். நரனிலிருந்து நாராயணர் ஆகுவதற்கான சத்திய கதை இது. சத்தியமான தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் சத்திய கண்டத்தின் எஜமானர் ஆகிவிடுவீர்கள். சத்தியமான பாபா தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். மற்ற தொடர் பிலிருந்து புத்தியோகத்தைத் துண்டித்துவிடுங்கள் என்று கூறுகின்றார். அரசாங்க வேலை 8 மணி நேரம் செய்கின்றீர்கள், அதை விட இது மிக உயர்ந்த வருமானம் ஆகும். எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், புத்தியினால் இதை நினைவு செய்துகொண்டே இருக்க வேண்டும். நீங்கள் கர்மயோகி ஆவீர்கள். எவ்வளவு எளிமையாகப் புரிய வைக்கின்றார்.

வயதான தாய்மார்களைப் பார்த்து நான் மிகுந்த குஷி அடைகின்றேன். ஏனெனில், அவர்களும் நம்முடைய வம்சத்தினர் ஆவார்கள். நான் எஜமானர் ஆவேன், என்னுடைய வம்சத்தினர் ஆகவில்லை என்றால் இது கூட சரி அல்ல. தந்தை அழிவற்ற ஞான சர்ஜன் (அறுவை சிகிச்சை நிபுணர்) ஆவார். ஞான ஊசி சத்குரு போட்டார், அஞ்ஞான இருள் அழிந்துவிட்டது. உங்களுடைய அஞ்ஞானம் விலகிவிட்டது. புத்தியில் ஞானம் வந்து விட்டது. அனைத்தையும் அறிந்து கொண்டீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவினுடைய அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உயர்ந்த வருமானத்தை அடைவதற்காக புத்தியின் தொடர்பை மற்ற அனைத்திலிருந்தும் துண்டித்து ஒரு தந்தையிடம் இணைக்க வேண்டும். சத்தியமான தந்தையை நினைவு செய்து சத்தியமான கண்டத்தின் எஜமானர் ஆக வேண்டும்.

2. எவ்வாறு பிரம்மா பாபா ஞானத்தை தாரணை செய்து சம்பூரணம் ஆகியிருக்கின்றாரோ, அவ்வாறே பாப்சமான் சம்பூரணம் ஆக வேண்டும்.

வரதானம்:
துண்டிக்கப்படாத நிச்சயத்தின் ஆதாரத்தில் வெற்றியை அனுபவம் செய்யக்கூடிய சதா மகிழ்ச்சியானவர் மற்றும் கவலையற்றவர் ஆகுக.

சுலோகன்:
நிச்சயத்தின் அடையாளம் - மனம்-சொல்-செயல், சம்பந்தம்-தொடர்பு மூலம் ஒவ்வொரு விஷயத் திலும் சகஜ வெற்றியாளர். எங்கே உடையாத நிச்சயம் உள்ளதோ, அங்கே வெற்றிக்காக விதிக்கப் பட்டது விலகிப் போய் விடாது. அத்தகைய நிச்சய புத்தி உள்ளவர் தாம் மகிழ்ச்சியாகவும் கவலையற்றவராகவும் இருப்பார். எந்த ஒரு விஷயத்திலும் இது என்ன, ஏன், எப்படி என்று கேட்பதும் கூட கவலையின் அடையாளம் ஆகும். நிச்சய புத்தி உள்ள, கவலையற்ற ஆத்மாவின் ஸ்லோகன் - எது நடந்ததோ, நல்லதாகவே நடந்தது. நல்லதாக உள்ளது, இனியும் நல்லதாகவே இருக்கும். அவர்கள் தீயதிலும் கூட நல்லதை அனுபவம் செய்வார்கள். கவலை என்ற வார்த்தையையே அறியாதவராக இருப்பார்கள்.

சுலோகன்:
சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் புத்தி என்ற கம்ப்யூட்டரில் முற்றுப்புள்ளி இடுங்கள்.