17.09.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இந்த புருஷோத்தம சங்கமயுகத்திலேயே உத்தமத்திலும் உத்தம புருஷர்களாக ஆக வேண்டும், அனைவரையும் விட மிக உத்தம புருஷர்கள் இந்த லெட்சுமி, நாராயணன் ஆவர்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் கூடவே எந்த ஒரு குப்தமான காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

 

பதில்:

ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் மற்றும் தெய்வீக இராஜ்ய ஸ்தாபனைக்கான காரியத்தை நீங்கள் தந்தையின் கூடவே குப்தமான முறையில் செய்து கொண்டிருக்கிறீர்கள். தந்தை தோட்டக்காரனாக இருக்கின்றார், அவர் வந்து முட்கள் நிறைந்த காட்டை மலர்கள் நிறைந்த பூந்தோட்டமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார். அந்த தோட்டத்தில் துக்கம் கொடுக்கும் எந்த பயங்கரமான (அச்ச முறுத்தும்) பொருட்களும் இருக்காது.

 

பாட்டு:

கடைசியில் அந்த நாள் இன்று வந்தது ...

 

ஓம்சாந்தி.

ஆன்மீக தந்தை வந்து ஆன்மீக குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். அவசியம் சரீரத்தின் மூலம் தான் புரிய வைப்பார். ஆத்மா சரீரமின்றி எந்த காரியமும் செய்ய முடியாது. ஆன்மீக தந்தையும் ஒரே ஒருமுறை புருஷோத்தம சங்கமயுகத்தில் சரீரம் எடுக்க வேண்டியிருக்கிறது. இது சங்கமயுகமாகும், கூடவே இதை புருஷோத்தம யுகம் என்றும் கூறுகின்றோம், ஏனெனில் இந்த சங்கமயுகத்திற்குப் பிறகு மீண்டும் சத்யுகம் வரும். சத்யுகத்தையும் புருஷோத்தம யுகம் என்று கூறுகின்றோம். தந்தை வந்து புருஷோத்தம யுகத்தை ஸ்தாபனை செய்கின்றார். சங்கமயுகத்தில் வருகின்றார் எனில் அவசியம் அதுவும் புருஷோத்தம யுகமாக ஆகிவிடுகிறது. இங்கேயே குழந்தைகளை புருஷோத்தமர்களாக ஆக்குகின்றார். பிறகு நீங்கள் புருஷோத்தம புது யுகத்தில் இருப்பீர்கள். புருஷோத்தம் என்றால் உத்தமத்திலும் உத்தமமான புருஷர்கள், இந்த இராதை, கிருஷ்ணர் அல்லது லெட்சுமி, நாராயணன் ஆவர். இந்த ஞானமும் உங்களிடம் இருக்கிறது. மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்களும் ஏற்றுக் கொள்வார்கள், உண்மையில் இவர்கள் சொர்கத்திற்கு எஜமானர்கள் ஆவர். பாரதத்திற்கு மிக உயர்ந்த மரியாதை இருக்கிறது. ஆனால் சுயம் பாரதவாசிகள் அறியாமல் இருக்கின்றனர். இன்னார் சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று கூறுகின்றனர் அல்லவா! ஆனால் சொர்க்கம் என்றால் என்ன? என்பதை புரிந்துக் கொள்வது கிடையாது. சொர்க்கத்திற்கு சென்று விட்டதாக கூறுகின்றனர் எனில் இவ்வளவு காலம் நரகத்தில் இருந்திருக்கிறார் அல்லவா! தந்தை தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய முடியும். புது உலகம் தான் அவ்வாறு கூறப்படுகிறது. சொர்க்கம் மற்றும் நரகம் என்று இரண்டு இருக்கிறது அல்லவா! சொர்க்கம் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக மனிதர்கள் கூறிவிட்டனர். ஆனால் நேற்று சொர்க்கம் இருந்தது, இவர்களது இராஜ்யம் இருந்தது, மீண்டும் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டீர்கள்.

 

தந்தை கூறுகின்றார் - இனிய செல்லமான குழந்தைகளே! உங்களது ஆத்மா பதீதமாக இருக்கிறது, அதனால் நரகத்திலேயே இருக்கிறது. இன்னும் நரகம் 40 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்றும் கூறுகின்றனர் எனில் அவசியம் கலியுகவாசி என்று தான் கூறலாம் அல்லவா! பழைய உலகம் அல்லவா! பாவம் மனிதர்கள் காரிருளில் இருக்கின்றனர். கடைசியில் எப்பொழுது நெருப்பு பற்றிக் கொள்ளுமோ அப்பொழுது இவை அனைத்தும் அழிந்து போய் விடும். நீங்கள் வரிசைக்கிரமமாக அன்பான புத்தியுடையவர்களாக இருக்கிறீர்கள். எந்த அளவிற்கு அன்பான புத்தியுடையவர்களாக இருப்பீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். அதிகாலையில் எழுந்து மிக அன்பாக தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆனந்தக் கண்ணீரும் வரலாம், ஏனெனில் பல காலம் கழித்து தந்தையை வந்து சந்திக்கிறீர்கள். பாபா, நீங்கள் வந்து எம்மை துக்கத்திலிருந்து விடுவிக்கிறீர்கள். நாங்கள் விஷக்கடலில் மூழ்கி எவ்வளவு துக்கம் அடைந்து வந்தோம் இப்பொழுது இது கொடூரமான நரகமாகும். இப்பொழுது பாபா உங்களுக்கு முழு சக்கரத்தின் ரகசியத்தைப் புரிய வைத்திருக்கின்றார். மூலவதனம் என்றால் என்ன? என்பதையும் வந்து கூறியிருக்கின்றார். முதலில் நீங்கள் அறியாமல் இருந்தீர்கள். இது முட்கள் நிறைந்த காடு என்று கூறப்படுகிறது. சொர்க்கம் தான் அல்லாவின் பூந்தோட்டம், மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் என்று கூறப்படுகிறது. தந்தையை தோட்டக்காரன் என்றும் கூறுகிறோம் அல்லவா! பிறகு உங்களை மலரிலிருந்து முட்களாக ஆக்குவது யார்? இராவணன். பாரதம் பூக்கள் நிறைந்த தோட்டமாக இருந்தது, இப்பொழுது முட்கள் நிறைந்த காடாக இருக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்திருக்கிறீர்கள். காட்டில் மிருகங்கள், தேள் போன்றவைகள் இருக்கும். சத்யுகத்தில் பயங்கரமான எந்த மிருகங்களும் இருக்காது. சாஸ்திரங்களில் பல விசயங்களை எழுதி வைத்து விட்டனர். கிருஷ்ணரை பாம்பு தீண்டியது, இது நடந்தது ... பிறகு கிருஷ்ணரை துவாபர யுகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். பக்தி முற்றிலும் தனிப்பட்டது, ஞானக் கடல் ஒரே ஒரு தந்தை தான் என்பதை தந்தை புரிய வைத்திருக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கர் ஞானக் கடலானவர்கள் என்றும் கூற முடியாது. பதீத பாவன் என்று ஒரே ஒரு ஞானக் கடலை தான் கூற முடியும். ஞானத்தின் மூலம் தான் மனிதர்களுக்கு சத்கதி ஏற்படுகிறது. சத்கதிக்கான இடங்கள் இரண்டு - முக்திதாமம் மற்றும் ஜீவன் முக்திதாமம் ஆகும். இப்பொழுது இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, ஆனால் குப்தமாக என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை வந்து தான் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார். அனைவரும் அவரவர்களது மனித சரீரம் என்ற ஆடையில் வருகின்றனர், தந்தைக்கு தனக்கென்று எந்த ஆடையும் (சரீரமும்) கிடையாது. அதனால் தான் இவர் நிராகார இறை தந்தை என்று கூறப்படுகின்றார். மற்ற அனைவரும் சாகாரமானவர்கள். இவர் நிரகார சரீரமுள்ள ஆத்மாக்களுக்களின் நிராகாரமான (சரீரமற்ற) இறை தந்தை என்று கூறப்படுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்களும் மூலவதனத்தில் இருந்தீர்கள். தந்தையும் அங்கு தான் இருக்கின்றார். ஆனால் குப்தமாக இருக்கின்றார். தந்தை வந்து தான் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார். மூலவதனத்தில் எந்த துக்கமும் கிடையாது. தந்தை கூறுகின்றார் - உங்களுக்கு ஒரே ஒரு விசயத்தில் தான் நன்மை கிடைக்கும் - தந்தையை நினைவு செய்யுங்கள், மன்மனாபவ. அவ்வளவு தான். தந்தையின் குழந்தையாக ஆகிவிட்டீர்கள், குழந்தை என்றால் ஆஸ்தி கிடைக்கும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டிய விசயமாகும். அல்லாவை நினைவு செய்தால் அவசியம் சத்யுக புது உலகின் ஆஸ்தி கிடைக்கும். இந்த பதீத உலகின் விநாசமும் அவசியம் ஏற்பட்டே ஆக வேண்டும். அமரபுரிக்குச் சென்றே ஆக வேண்டும். அமர்நாத் பார்வதிகளாகிய உங்களுக்கு அமரக்கதை கூறிக் கொண்டிருக்கின்றார். தீர்த்த யாத்திரைக்கு எவ்வளவு மனிதர்கள் செல்கின்றனர்! அமர்நாத்திற்கு எவ்வளவு பேர் செல்கின்றனர்! அங்கு இருப்பது ஒன்றும் கிடையாது. அனைத்தும் ஏமாற்று வேலையாகும். உண்மை ஒரு துளியும் கிடையாது. பொய்யான உடல், பொய்யான மாயை என்றும் பாடப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தமும் இருக்க வேண்டும். இங்கு இருப்பதோ பொய். இதுவும் ஞான விசயங்களாகும். கண்ணாடியை கண்ணாடி என்று கூறுவது பொய்யாகாது. மற்றபடி தந்தையைப் பற்றி என்னவெல்லாம் கூறுகிறார்களோ அனைத்தும் பொய் தான் கூறுகின்றனர். உண்மையை கூறக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். இப்பொழுது பாபா வந்து உண்மையிலும் உண்மையான சத்திய நாராயணன் கதையைக் கூறுகின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். பொய்யான (செயற்கையான) வைரம், முத்து இருக்கிறது அல்லவா! இன்றைய நாட்களில் பொய் மிகவும் பகட்டாக இருக்கிறது. அதன் ஜொலிப்பு உண்மையைக் காட்டிலும் நன்றாக பிராகாசிக்கிறது. முன்பு இந்த பொய்யான கற்கள் கிடையாது. பின் நாட்களில் அயல்நாடுகளிலிருந்து வந்திருக்கிறது. பொய்யானதை உண்மையானதுடன் கலந்து விடுகின்றனர், தெரியாமல் போய் விடுகிறது. பிறகு அதை கண்டுபிடிப்பதற்கான பொருளையும் உருவாக்குகின்றனர். பொய்யான முத்துக்களும் இருக்கின்றன, சிறிதும் அறிந்துக் கொள்ள முடிவது கிடையாது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களிடத்தில் எந்த சந்தேகமும் கிடையாது. சந்தேகமுடையவர்கள் வரவேமாட்டார்கள். கண்காட்சிகளில் எத்தனை பேர் வருகின்றனர்! தந்தை கூறுகின்றார் - இப்பொழுது பெரிய பெரிய கடைகளை திறங்கள். உங்களது இந்த ஒரே ஒரு கடை தான் உண்மையான கடையாகும். நீங்கள் உண்மையான கடையை திறக்கிறீர்கள். பெரிய பெரிய சந்நியாசிகளின் பெரிய பெரிய கடைகள் இருக்கின்றன. அங்கு பெரிய பெரிய மனிதர்கள் செல்கின்றனர். நீங்களும் பெரிய பெரிய சென்டர் திறங்கள். பக்தி மார்க்கத்தின் சடங்குகள் முற்றிலும் தனிப்பட்டதாகும். பக்தி ஆரம்பத்திலிருந்தே நடைபெற்று வந்தது என்று கூற முடியாது. ஞானத்தின் மூலம் சத்கதி அதாவது பகல் ஏற்படுகிறது. அங்கு சம்பூர்ண நிர்விகாரி, உலகிற்கு எஜமானர்களாக இருந்தீர்கள். இந்த லெட்சுமி நாராயணன் உலகிற்கு எஜமானர்களாக இருந்தனர் என்பதும் மனிதர்களுக்குத் தெரியாது. சூரியவம்சி மற்றும் சந்திரவம்சி, வேறு எந்த தர்மமும் கிடையாது. குழந்தைகள் பாட்டும் கேட்டீர்கள். கடைசியில் சங்கமத்தின் அந்த நாள் இன்று வந்து விட்டது என்பதை நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இந்த நேரத்தில் நாம் வந்து நமது எல்லையற்ற தந்தையை சந்திக்கின்றோம். தானியங்கள் அதிகம் இருக்கும், இது இருக்கும் என்று அவர்கள் நினைக்கின்றனர். சொர்க்கத்தின் ஸ்தாபனை நாம் செய்கிறோம் என்று நினைக்கின்றனர். மாணவர்களிடம் புது இரத்தம் இருக்கிறது, இது அதிகம் உதவி செய்யும் என்று நினைக்கின்றனர். அதனால் அரசாங்கம் அவர்கள் மீது மிகுந்த முயற்சி செய்கிறது. பிறகு அவர்களே கல் எரிந்து போராட்டமும் நடத்துகின்றனர். போராட்டம் நடத்துவதில் முதன் முதலில் மாணவர்கள் தான் வருகின்றனர். அவர்களும் மிகவும் புத்திசாலிகளாக இருக்கின்றனர். அவர்களை புது இரத்தம் என்று கூறுகின்றனர். இப்பொழுது புது ரத்தத்திற்கான விசயமே கிடையாது. அவர்களுடையது ரத்த சம்மந்தம், உங்களுடையது ஆன்மீக சம்மந்தம் ஆகும். பாபா, நான் உங்களது இரண்டு மாத குழந்தை என்று கூறுகிறீர்கள் அல்லவா! சில குழந்தைகள் ஆன்மீக பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். ஈஸ்வரிய பிறந்த நாள் தான் கொண்டாட வேண்டும். அந்த உலகாய பிறந்த நாள் கொண்டாடக் கூடாது. பிராமணர்களாகிய நமக்குத் தான் உணவு படைப்பார்கள். இது தான் கொண்டாட வேண்டும் அல்லவா! அது அசுர பிறப்பு, இது ஈஸ்வரிய பிறப்பு. இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் நம்பிக்கை ஏற்பட வேண்டும். ஈஸ்வரிய பிறப்பு கொண்டாடிய பின்பு அசுர பிறப்பிற்குச் சென்று விடக் கூடாது. இவ்வாறும் நடக்கிறது. ஈஸ்வரிய பிறப்பு கொண்டாடி கொண்டாடி பிறகு மறைந்து ஒடி விடுகின்றனர். இன்றைய நாட்களில் திருமண நாளும் கொண்டாடுகின்றனர், திருமணத்தை சுப காரியம் என்று நினைக்கின்றனர். நரகத்திற்கு சென்ற நாளை கொண்டாடுகின்றனர். ஆச்சரியம் அல்லவா! தந்தை அமர்ந்து இந்த அனைத்து விசயங்களையும் புரிய வைக்கின்றார். இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய பிறந்த நாளை பிராமணர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும். நாம் சிவபாபாவின் குழந்தைகள், நாம் பிறந்த நாள் கொண்டாடுகின்றோம் எனில் சிவபாபாவின் நினைவு தான் இருக்கும். யார் நிச்சயபுத்தியுடைய குழந்தைகளோ அவர்களது பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அந்த அசுர பிறப்பை மறந்து விட வேண்டும். இவ்வாறும் பாபா அறிவுரை கூறுகின்றார். உறுதியான நம்பிக்கை புத்தியுடையவர்களாக இருந்தால்! நான் பாபாவின் குழந்தையாக ஆகிவிட்டேன், எனக்கு வேறு யாருமில்லை, பிறகு கடைசி நிலை நல்ல நிலையாக ஆகிவிடும். தந்தையின் நினைவில் இறந்து விட்டால் அடுத்த பிறவியும் அவ்வாறே கிடைக்கும். இல்லையெனில் கடைசியில் யார் மனைவியை நினைப்பாரோ ... இதுவும் கிரந்தத்தில் இருக்கிறது. கடைசியில் கங்கை நீர் வாயில் இருக்க வேண்டும் என்று இங்கு கூறுகின்றனர். இவையனைத்தும் பக்தி மார்கத்தின் விசயங்களாகும். சரீரம் விட்டாலும் சுயதரிசன சக்கரதாரியாக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தந்தை கூறுகின்றார். புத்தியில் தந்தை மற்றும் சக்கரத்தின் நினைவு இருக்க வேண்டும். முயற்சி செய்து கொண்டே இருக்கும் பொழுது தான் கடைசியில் நினைவிற்கு வரும். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் மற்றும் தந்தையை நினைவு செய்யுங்கள். ஏனெனில் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அசரீரியாகி திரும்பிச் செல்ல வேண்டும். இங்கு நடிப்பு நடித்து நடித்து சதோ பிரதானத்திலிருந்து தமோ பிரதானமாக ஆகிவிட்டீர்கள். இப்பொழுது மீண்டும் சதோ பிரதானமாக ஆக வேண்டும். இந்த நேரத்தில் ஆத்மா அசுத்தமாக இருக்கின்ற பொழுது பிறகு தூய்மையான சரீரத்தை எவ்வாறு அடைய முடியும்? பாபா பல உதாரணங்களை புரிய வைத்திருக்கின்றார், நகை வியாபாரி அல்லவா! அசுத்தம்(கறை கலப்படம்) நகையில் கிடையாது தங்கத்தில் இருக்கிறது. 24 கேரட்டிலிருந்து 22 கேரட்டாக ஆக்க வேண்டுமெனில் வெள்ளி கலக்குவர். இப்பொழுது தங்கமே கிடையாது. அனைவரிடமிருந்தும் வாங்கிக் கொண்டே இருக்கின்றனர். இன்றைய நாட்களில் ரூபாய் நோட்டையும் எப்படியெல்லாம் உருவாக்குகின்றனர் என்பதைப் பாருங்கள்! காகிதமும் கிடையாது. கல்ப கல்பத்திற்கும் இவ்வாறு நடைபெற்று வந்தது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். முழு பாதுகாப்பு கொடுக்கின்றனர். லாக்கர்ஸ் (வங்கி பாதுகாப்பு பெட்டகம்) போன்றவைகளைப் பயன்படுத்துகின்றனர். லாக்கர்களை திறந்து சோதனைக்கு எடுத்துச் செல்கின்றனர் அல்லவா! யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ ... என்றும் பாடப்பட்டிருக்கிறது. மிக வேகமாக நெருப்பும் பரவும். இவையனைத்தும் நடைபெறும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அதனால் தான் எதிர்காலத்திற்காக பெட்டி, படுக்கைகளை நீங்கள் தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள். வேறு யாருக்கும் தெரியயே தெரியாது, உங்களுக்குத் தான் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கிடைக்கிறது. உங்களது பணத்தின் மூலம் தான் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார், அதில் நீங்கள் தான் வசிப்பீர்கள்.

 

குழந்தைகளாகிய நீங்கள் தனது சுய முயற்சியின் மூலம் தனக்குத் தானே இராஜ்ய திலகம் இட்டுக் கொள்கிறீர்கள். ஏழைப் பங்காளன் பாபா சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக வந்திருக்கின்றார், ஆனால் தனது படிப்பின் மூலம் தான் ஆக முடியும். கருணை அல்லது ஆசிர்வாதத்தின் மூலம் அல்ல. படிப்பு கற்பிப்பது தான் ஆசிரியரின் தர்மம் ஆகும். கருணைக்கான விசயம் கிடையாது. ஆசிரியருக்கு அரசாங்கத்திடமிருந்து சம்பளம் கிடைக்கிறது. ஆக அவசியம் கற்பிப்பார். எவ்வளவு பெரிய வளர்ச்சி ஏற்படுகிறது! பத்மாபதம்பதி ஆகின்றனர். கிருஷ்ணரின் பாதங்களில் இதன் அடையாளமாக தாமரை காண்பிக்கின்றனர். நீங்கள் எதிர்காலத்தில் பலமடங்கு செல்வந்தர்களாக ஆவதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் சுகமானவர்களாக, செல்வந்தர்களாக, அமரர்களாக ஆகிறீர்கள். காலன் மீது வெற்றியடைகிறீர்கள். இந்த விசயங்களை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் முழு ஆயுளுடன் இருப்பீர்கள், அமரர்களாக ஆகிவிடுவீர்கள். இதையே அவர்கள் பாண்டவர்களின் சித்திரத்தை மிகப் பெரிதாக, உயரமாக காண்பித்து விட்டனர். பாண்டவர்கள் மிக உயரமாக இருந்ததாக அவர்கள் நினைக்கின்றனர். இப்பொழுது நீங்கள் தான் பாண்டவர்களாக இருக்கிறீர்கள். எவ்வளவு இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது! மனிதர்கள் மிகவும் உயரமாக இருக்கமாட்டார்கள். 6 அடியாகத் தான் இருப்பார்கள். பக்திமார்க்கத்தில் முதன் முதலில் சிவபாபாவின் பக்தி தான் நடைபெற்றது. அதை பெரியதாக ஆக்கமாட்டார்கள். முதலில் சிவபாபாவின் கலப்படமில்லாத பக்தி நடைபெற்றது. பிறகு தேவதைகளின் மூர்த்தியை உருவாக்கினர். அதை பெரிது பெரிதாக உருவாக்கினர். பிறகு பாண்டவர்களின் சித்திரத்தை பெரிது பெரிதாக உருவாக்கினர். இந்த சித்திரங்கள் அனைத்தும் பூஜைக்காக உருவாக்கினர். லெட்சுமியின் பூஜை 12 மாதங்களில் ஒரே ஒருமுறை தான் செய்கின்றனர். ஜெகதம்பாவிற்கு தினமும் பூஜை செய்து கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு இரண்டு விதத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதையும் பாபா புரிய வைத்திருக்கின்றார். எனக்கு ஆத்மா அதாவது -ங்க ரூபத்தில் மட்டுமே பூஜை நடைபெறுகிறது. உங்களுக்கு சாலிகிராம் ரூபத்திலும் பூஜை நடைபெறுகிறது. பிறகு தேவதைகளின் ரூபத்திலும் பூஜை நடைபெறுகிறது. ருத்ர யக்ஞம் படைக்கின்றனர் எனில் எவ்வளவு சாலிகிராம் உருவாக்குகின்றனர்! ஆக உயர்ந்தவர் யார்? அதனால் தான் பாபா குழந்தைகளுக்கு நமஸ்தே செய்கின்றார். எவ்வளவு உயர்ந்த பதவியை பிராப்தியாக ஆக்குகின்றார்!

 

பாபா எவ்வளவு ஆழமான விசயங்களைக் கூறுகின்றார்! ஆக குழந்தைகள் எவ்வளவு குஷியாக இருக்க வேண்டும்! பகவான் பகவதிகளாக ஆக்குவதற்காக பகவான் நமக்கு கல்வி கற்பிக்கின்றார். எவ்வளவு நன்றி கூற வேண்டும்! தந்தையின் நினைவில் இருப்பதன் மூலம் கனவும் நல்லதாக வரும். சாட்சாத்காரமும் ஏற்படும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தனது ஈஸ்வரிய ஆன்மீக பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும், ஆன்மீகத் தொடர்பு (சம்மந்தம்) வைத்துக் கொள்ள வேண்டும், இரத்த தொடர்பு அல்ல. அசுர, உலகாய பிறந்த நாள் கொண்டாடக் கூடாது. அது நினைவிற்கு வரவே கூடாது.

 

2) எதிர்காலத்திற்காக தனது பெட்டி, படுக்கைகளை தயார் செய்ய வேண்டும். தனது பணத்தை பாரதத்தை சொர்க்கமாக்கும் சேவையில் ஈடுபடுத்தி பயனுள்ளதாக்க வேண்டும். தனது முயற்சியின் மூலம் தனக்குத் தானே இராஜ்ய திலகம் இட்டுக் கொள்ள வேண்டும்.

 

வரதானம்:

நினைவு என்ற பொத்தானை (சுவிட்ச்) அழுத்தி ஒரு வினாடியில் அசரீரி நிலையின் அனுபவம் செய்யக் கூடிய அன்பான புத்தியுடைவர் ஆகுக.

 

 எங்கே பிரபுவின் மீது அன்பு இருக்குமோ அங்கே அசரீரி ஆவது என்பது ஒரு வினாடியின் விளையாட்டாகும். சுவிட்சை போட்ட உடனே இருள் நீங்கி விடுவது போல. நினைவின் சுவிட்சை போட்டீர்கள் என்றால் தேகம் மற்றும் தேகத்தின் உலகத்தினுடைய நினைவின் சுவிட்ச் அணைந்து விடும். இது ஒரு வினாடியின் விளையாட்டாகும். வாயால் பாபா என சொல்வதற்கும் கூட நேரம் எடுக்கும், ஆனால் நினைவில் கொண்டு வருவதற்கு நேரம் ஆகாது. இந்த பாபா எனும் வார்த்தை கூட பழைய உலகத்தை மறக்கடிக்கக் கூடிய ஆன்மீக அணுகுண்டு ஆகும்.

 

சுலோகன்:

தேக உணர்வு என்ற மண்ணின் சுமையிலிருந்து விடுபட்டு இருந்தீர்கள் என்றால் டபுள் லைட் (பிரகாசமாக மற்றும் லேசாக) பரிஸ்தா ஆகி விடுவீர்கள்.

 

ஓம்சாந்தி