17-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தையின் கழுத்தின் மாலை ஆக வேண்டும் என்றால் ஞான யோகத்தின் பந்தயத்தில் போட்டி போடுங்கள். முழு உலகத்திற்கும் தந்தையின் அறிமுகம் அளிப்பது உங்களுடைய கடமை ஆகும்.

கேள்வி:
எந்த போதையில் சதா இருந்தீர்கள் என்றால் வியாதி கூட குணமாகிக் கொண்டே போகும்?

பதில்:
ஞானம் மற்றும் யோகத்தின் போதையில் இருங்கள். இந்த பழைய சரீரத்தைப் பற்றி சிந்தனை செய்யாதீர்கள். எந்த அளவு சரீரத்தில் புத்தி போகுமோ, பேராசை கொள்வீர்களோ அந்த அளவு அதிக வியாதிகள் வந்து கொண்டே இருக்கும். இந்த சரீரத்தை அலங்கரிப்பது, பவுடர், க்ரீம் ஆகியவை போடுவது - இவை எல்லாம் வீணான அலங்காரம் ஆகும். நீங்கள் உங்களை ஞான யோகத்தினால் அலங்கரிக்க வேண்டும். இது தான் உங்களுடைய உண்மையிலும் உண்மையான அலங்காரம் ஆகும்.

பாடல்:
யார் தலைவனுடன் இருக்கிறாரோ.. .. ..

ஓம் சாந்தி.
யார் தந்தையுடன் இருக்கிறார்களோ..... இப்பொழுது உலகத்தில் தந்தைகளோ நிறைய இருக்கிறார்கள். ஆனால் அந்த எல்லோருடைய தந்தைகளைப் படைப்பவர் ஒருவர் ஆவார். அவரே ஞானக்கடல் ஆவார். பரமபிதா பரமாத்மா ஞானக்கடல் ஆவார், ஞானத்தினால் தான் சத்கதி ஆகிறது என்பதை அவசியம் புரிய வைக்க வேண்டும். சத்யுகத்தின் ஸ்தாபனை ஆகும் போதுதான் மனிதனுக்கு சத்கதி ஆகிறது. தந்தைக்குத் தான் சத்கதி அளிக்கும் வள்ளல் என்று கூறப்படுகிறது. சங்கமத்தின் நேரம் வரும் பொழுது தான் ஞானக் கடல் வந்து துர்க்கதியிலிருந்து சத்கதியில் அழைத்துச் செல்ல முடியும். பாரதம் எல்லாவற்றையும் விட பழமையானது. பாரதவாசிகளின் பெயரில் தான் 84 பிறவிகள் பாடப்பட்டுள்ளது. அவசியம் எந்த மனிதர்கள் முதன் முதலில் இருந்திருப்பார்களோ அவர்களே 84 பிறவிகள் எடுத்திருக்கக் கூடும். தேவதைகளுக்கு 84 பிறவிகள் என்று கூறுவார்கள். பிறகு பிராமணர்களுக்கும் 84 பிறவிகள் ஆகும். முக்கியமானவற்றையே கூறப்படுகிறது. இந்த விஷயங்கள் பற்றி யாருக்கும் தெரியாது. அவசியம் பிரம்மா மூலமாகத் தான் சிருஷ்டி படைக்கப்படுகிறது. முதன் முதலில் சூட்சும லோகம் படைக்க வேண்டி உள்ளது. பிறகு இது ஸ்தூல உலகம் ஆகும். சூட்சும லோகம் எங்குள்ளது, மூல (வதனம்) உலகம் எங்குள்ளது என்பதைக் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். மூலவதனம், சூட்சும வதனம், ஸ்தூல வதனம்- இதற்குத் தான் திரிலோகம் என்று கூறப்படுகிறது. திரிலோகி நாத் என்று கூறுகிறார்கள் என்றால் அதன் பொருள் கூட வேண்டும் அல்லவா? திரிலோகம் என்று ஏதோ இருக்க வேண்டும் அல்லவா? உண்மையில் ஒரு தந்தைக்குத் தான் திரிலோகி நாதன் என்று கூற முடியும் மற்றும் அவருடைய குழந்தை களுக்குக் கூற முடியும். இங்கோ அநேக மனிதர்களுக்கு திரிலோகி நாதன், சிவன், பிரம்மா, விஷ்ணு, சங்கரன்... ஆகிய பெயர்கள் உள்ளன. இராதை கிருஷ்ணர், லட்சுமி நாராயணர் என்று இரட்டை பெயர் கூட வைத்துக் கொள்கிறார்கள். இப்பொழுது இராதை மற்றும் கிருஷ்ணர் தனித் தனியாக இருந்தார்கள் என்பதோ யாருக்கும் தெரியாது. அவர் ஒரு இராஜ்யத்தில் இளவரசராக இருந்தார். இவர் மற்றொரு இராஜ்யத்தில் இளவரசியாக இருந்தார். இதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். யார் நல்ல நல்ல குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்களுடைய புத்தியில் நல்ல நல்ல பாயிண்ட்ஸ் தாரணை ஆகிறது. எப்படி நல்ல புத்திசாலியான மருத்துவராக இருந்தார் என்றால் அவரிடம் நிறைய மருந்துகளின் பெயர்கள் இருக்கும். இங்கு கூட இந்த புது புது பாயிண்ட்ஸ் (குறிப்புக்கள்) நிறைய வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. நாளுக்கு நாள் கண்டுபிடிப்புகள் ஆகிக் கொண்டே இருக்கின்றன. யாருக்கு நல்ல பயிற்சி இருக்குமோ அவர்கள் புது புது பாயிண்ட்ஸ்களை தாரணை செய்து கொண்டே இருப்பார்கள். தாரணை செய்யவில்லை என்றால் மகாரதிகளின் வரிசையில் கொண்டு வர முடியாது. எல்லாமே புத்தியை பொறுத்தது, மேலும் பாக்கியத்தினுடைய விஷயம் ஆகும். இதுவும் நாடகத்தில் உள்ளது அல்லவா? நாடகம் பற்றி யாருக்கும் தெரியாது. கர்ம க்ஷேத்திரத்தில் நாம் பாகத்தை நடிக்கிறோம் என்பதையும் புரிந்துள்ளார்கள். ஆனால் நாடகத்தின் முதல் இடை பற்றி தெரியவில்லை என்றால் ஒன்றுமே அறியவில்லை என்றே பொருள். நீங்களோ எல்லாமே அறிந்து இருக்க வேண்டும்.

தந்தை வந்துள்ளார் என்பது குழந்தைகளுக்குத் தெரிய வந்துள்ளது. எனவே மற்றவர்களுக்கும் அறிமுகம் கொடுப்பது குழந்தைகளின் கடமை ஆகும். முழு உலகிற்கும் கூற வேண்டிய கடமை உள்ளது. ஏனெனில் எங்களுக்குத் தெரியாமல் போயிற்றே என்று பின்னால் யாரும் கூறக் கூடாது. உங்களிடம் நிறைய பேர் வருவார்கள். (லிட்ரேச்சர்) - புத்தகங்கள் ஆகியவை நிறைய வாங்குவார்கள். குழந்தைகள் ஆரம்பத்தில் சாட்சாத்காரம் கூட நிறைய செய்துள்ளார்கள். இந்த கிறிஸ்து, இப்ராஹிம் பாரதத்தில் வருகிறார்கள். உண்மையில் பாரதம் அனைவரையும் ஈர்த்துக் கொண்டு இருக்கிறது. உண்மையிலோ பாரதம் தான் எல்லையில்லாத தந்தையின் ஜன்ம பூமி ஆகும் அல்லவா? ஆனால் இந்த பாரதம் பகவானின் ஜன்ம பூமி என்பதை அவர்கள் அந்த அளவு ஒன்றும் தெரியாமல் உள்ளார்கள். சிவ பரமாத்மா என்று கூறவும் செய்கிறார்கள். ஆனால் பிறகு எல்லோரையும் பரமாத்மா என்று கூறி விட்டதால் எல்லையில்லாத தந்தையின் மகத்துவத்தை காணாமல் செய்து விட்டுள்ளார்கள். பாரத கண்டம் எல்லாவற்றையும் விட பெரியதிலும் பெரிய தீர்த்த ஸ்தானம் ஆகும் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்கிறீர்கள். மற்றபடி யாரெல்லாம் வேறு தேவ தூதர்கள் வருகிறார்களோ அவர்கள் வருவதே அவரவர் தர்ம ஸ்தாபனை செய்வதற்காக, அவர்களுக்கு பின்னால் மற்ற எல்லா தர்மத்தினரும் வந்து கொண்டே செல்கிறார்கள். இப்பொழுது கடைசி ஆகும். திரும்பிச் செல்லலாம் என்று முயற்சி செய்கிறார்கள். ஆனால் உங்களை இங்கு அழைத்து வந்தது யார்? கிறிஸ்து வந்து கிறித்துவ தர்மத்தை ஸ்தாபனை செய்தார். அவர் உங்களை இழுத்துக் கொண்டு வந்தார்.இப்பொழுது எல்லோருமே திரும்பிச் செல்வதற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். இதை நீங்கள் புரிய வைக்க வேண்டும். எல்லோரும் அவரவர் பாகத்தை நடிப்பதற்காக வருகிறார்கள். பாகத்தை நடித்து நடித்து துக்கத்தில் வரவே வேண்டி உள்ளது. பிறகு அந்த துக்கத்திலிருந்து விடுவித்து சுகத்தில் அழைத்துச் செல்வது தந்தையினுடைய காரியமே ஆகும். இந்த பாரதம் தந்தையினுடைய ஜன்ம பூமி ஆகும். இவ்வளவு மகத்துவம் உள்ளது என்பதை குழந்தைகளாகிய உங்களிலும் கூட எல்லோரும் அறியாமல் உள்ளார்கள். மிகக் குறைவானவர்களே அதை புரிந்துள்ளார்கள் மற்றும் அவர்களுக்கு போதை ஏறி உள்ளது. கல்ப கல்பமாக தந்தை பாரதத்தில் தான் வருகிறார் என்பதை அனைவருக்கும் கூற வேண்டும். அழைப்பு கொடுக்க வேண்டும். முதலிலோ இந்த சேவை செய்ய வேண்டி உள்ளது. (லிட்டரேச்சர்) புத்தகங்கள் தயார் செய்ய வேண்டி உள்ளது. எல்லோருக்குமே அழைப்போ கொடுக்க வேண்டும் அல்லவா? படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் யாருக்குமே தெரியாது. சேவை செய்பவராக ஆகி தங்கள் பெயரை புகழடைய செய்ய வேண்டும். யார் கூர்மையான (புத்திசா-) குழந்தைகளாக இருக்கிறார்களோ, யாருடைய புத்தியில் நிறைய பாயிண்ட்ஸ் (குறிப்புக்கள்) இருக்கிறதோ அவர்களுடைய உதவியை எல்லோரும் நாடுகிறார்கள். அவர்களுடைய பெயர்களைத் தான் ஜபித்துக் கொண்டே இருப்பார்கள். ஒன்றோ சிவபாபாவை ஜெபிப்பார்கள். பிறகு பிரம்மா பாபாவை. பிறகு வரிசைக்கிரமமாக குழந்தைகளை ஜெபிப்பார்கள். பக்தி மார்க்கத்தில் கையால் மாலை உருட்டுகிறார்கள். இப்பொழுது வாயால் நாமத்தை ஜெபிக்கிறார்கள். இன்னார் மிகவும் நல்ல சேவை செய்பவராவார். அகங்காரமற்றவர். மிகவும் இனிமையானவர். அவருக்கு தேக அபிமானம் இல்லை. கூறுகிறார்கள் அல்லவா - இனிமையானவர் ஆனீர்கள் என்றால் எல்லோரும் இனிமையாகப் பழகுவார்கள். நீங்கள் துக்கமுடையவர் ஆகி உள்ளீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நானும் உதவி செய்வேன் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் வெறுத்தீர்கள் என்றால் நான் என்ன செய்வேன். இதுவோ உங்கள் மீது நீங்கள் வெறுப்பு செய்கிறீர்கள் என்பதாகும். பதவி கிடைக்காது. செல்வம் எவ்வளவு ஏராளமாகக் கிடைக்கிறது. யாருக்காவது லாட்டரி கிடைக்கிறது என்றால் எவ்வளவு குஷி அடைகிறார்கள். அதில் கூட எவ்வளவு பரிசுகள் வருகின்றன. முதல் பரிசு பிறகு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு இருக்கும். அதே போல இதுவும் ஈசுவரிய பந்தயம் ஆகும். ஞானம் மற்றும் யோக பலத்தின் பந்தயம் ஆகும். யார் இதில் வேகமாகச் செல்கிறார்களோ அவர்களே கழுத்தின் மாலை ஆவார்கள் மற்றும் சிம்மாசனத்தில் நெருக்கத்தில் அமருவார்கள். மிகவுமே சுலபமாகப் புரிய வைக்கப்படுகிறது. உங்களது இல்லத்தையும் பராமரியுங்கள். ஏனெனில் நீங்கள் கர்மயோகி ஆவீர்கள். வகுப்பில் ஒரு மணி நேரம் படிக்க வேண்டும். பிறகு வீட்டிற்குச் சென்று அதன் மீது சிந்தனை செய்ய வேண்டும். பள்ளிக் கூடத்தில் கூட அவ்வாறு செய்கிறார்கள் அல்லவா? படித்து விட்டு பிறகு வீட்டிற்குச் சென்று (ஹோம் ஒர்க்) வீட்டுப் பாடம் செய்கிறார்கள். தந்தை கூறுகிறார் - ஒரு மணி அரை மணி .. பகலில் 8 மணி நேரம் இருக்கும். அதில் கூட தந்தை கூறுகிறார். ஒரு மணி நல்லது. 1/2 மணி 15-20 நிமிடங்கள் கூட வகுப்பில் ஆஜராகி தாரணை செய்து பிறகு அவரவர் தொழிலில் சென்று ஈடுபடுங்கள். முன்பெல்லாம் பாபா உங்களை நினைவில் அமருங்கள், சுய தரிசன சக்கரம் சுற்றுங்கள் என்று கூறி அமருமாறும் செய்து கொண்டிருந்தார். நினைவின் பெயரோ இருந்தது அல்லவா? தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து செய்து சுயதரிசன சக்கரத்தைச் சுற்றியபடியே தூக்கம் வருகிறது என்றால் உறங்கி விடுங்கள். பிறகு "அந்த் மதி சோ கதி" (கடைசியில் புத்தி எவ்வாறோ அவ்வாறே கதி) ஆகி விடும். பிறகு அதிகாலை எழுந்தீர்கள் என்றால் அதே பாயிண்ட்ஸ் (குறிப்புக்கள்) நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அப்பியாசம் செய்து செய்து நீங்கள் உறக்கத்தை வென்றவர் ஆகி விடுவீர்கள். அப்பியாசம் செய்பவர்கள் அடைவார்கள். செய்பவர்கள் தெரிய வருகிறார்கள். அவர்களுடைய நடத்தையே வெளியில் காணச் செய்கிறது. செய்யாதவர்களின் நடத்தையே வேறானதாக இருக்கும். இந்த குழந்தை சிந்தனைக் கடலை கடைகிறார், தாரணை செய்கிறார் என்று பார்க்கப்படுகிறது. எந்த ஒரு பேராசை போன்றவை எதுவும் இல்லை. இதுவோ பழைய சரீரம் ஆகும். ஞானம் மற்றும் யோகத்தின் தாரணை இருந்தால் தான் சரீரம் கூட சரியாக இருக்கும். தாரணை இல்லை என்றால் சரீரம் மேலும் கெட்டுக் கொண்டே போகும். புதிய சரீரம் மீண்டும் வருங்காலத்தில் கிடைக்க வேண்டி உள்ளது. ஆத்மாவைத் தூய்மையாக ஆக்க வேண்டும். இதுவோ பழைய சரீரம் ஆகும். இதற்கு எவ்வளவு தான் பவுடர், லிப்ஸ்டிக் ஆகியவை போடுங்கள், அலங்காரம் செய்யுங்கள். அப்பொழுது கூட ஒரு காசுக்கும் உதவாதது ஆகும். இந்த அலங்காரம் எல்லாமே வீணானது ஆகும்.

இப்பொழுது உங்கள் அனைவரின் நிச்சயதார்த்தம் சிவபாபாவுடன் ஆகி உள்ளது. திருமணம் ஆகும் பொழுது அந்த நாளில் பழைய உடைகள் அணிவார்கள். இப்பொழுது இந்த சரீரத்தை அலங்கரிக்க உடை களை அணிகிறார்கள். இப்பொழுது இந்த சரீரத்தை அலங்கரிக்க வேண்டியதில்லை. ஞானம் மற்றும் யோகத்தினால் தங்களை அலங்கரித்தீர்கள் என்றால் வருங்காலத்தில் இளவரசர் இளவரசி ஆவீர்கள். இது ஞான மானசரோவர் ஆகும். இதில் ஞானத்தின் முழுக்கு போட்டுக் கொண்டே இருந்தீர்கள் என்றால் சொர்க்கத்தின் தேவதைகள் (பரிகள்) ஆகி விடுவீர்கள். பிரஜைகளை பரிகள் என்றோ கூற மாட்டார்கள். கிருஷ்ணர் கோபியர்களோடு விளையாடிக் கொண்டிருந்து, பிறகு மகாராணி பட்டத்து ராணி ஆக்கினார் என்று கூட கூறுகிறார்கள். அப்படி இன்றி விரட்டி பிறகு பிரஜையில் சண்டாளன் ஆகியோரை ஆக்கினார் என்று கூறுவதில்லை. அவர்கள் பின்னால் இருந்ததே மகாராஜா மகாராணியாக ஆக்குவதற்காக. நீங்கள் கூட இந்த புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். அப்படி இன்றி எந்த பதவி கிடைக்கிறதோ அதுவே சரி என்பதல்ல. இங்கு படிப்பு முக்கியமானது. இது பாடசாலை ஆகும் அல்லவா? கீதா பாடசாலை நிறைய திறக்கிறார்கள். அவர்கள் அமர்ந்து கீதையை மட்டும் கூறுகிறார்கள். மனப்பாடம் செய்விக்கிறார்கள். ஏதாவது ஒரு சுலோகத்தை எடுத்துக் கொண்டு பிறகு 1/2 மணி நேரம் முக்கால் மணி நேரம் அதன் மீது உரை யாற்றுகிறார்கள். இதனால் நன்மையோ எதுவும் கிடையாது. இங்கோ தந்தை வந்து கற்பிக்கிறார். இலட்சியம் நோக்கம் தெளிவாக உள்ளது. அங்கு எந்த ஒரு லட்சியம் கூட கிடையாது. முயற்சி (புருஷார்த்தம்) செய்து கொண்டே இருங்கள், அவ்வளவே. ஆனால் என்ன கிடைக்கும்? நிறைய பக்தி செய்யும் பொழுது பகவான் கிடைக்கிறார். அதுவும் கூட இரவுக்குப் பின் பகல் அவசியம் வர வேண்டி உள்ளது போல. குறித்த நேரத்தில் ஆகும் அல்லவா? கல்பத்தின் ஆயுள் ஒருவர் ஒன்று கூறுகிறார். மற்றவர் இன்னொன்று கூறுகிறார். புரிய வைத்தீர்கள் என்றால் சாஸ்திரங்கள் எவ்வாறு பொய்யாகும் என்பார்கள். பகவான் எங்காவது பொய் கூறுவாரா என்ன. புரிய வைப்பதற்கு சக்தி வேண்டும் அவ்வளவே!

குழந்தைகளாகிய உங்களிடம் யோக பலம் வேண்டும். யோக பலத்தினால் எல்லா காரியங்களும் சுலபமாக ஆகி விடும். ஒருவரால் காரியம் செய்ய முடியவில்லை என்றால் ஆற்றல் இல்லை, யோகம் இல்லை என்று பொருள். சில நேரங்களில் பாபா கூட உதவி செய்கிறார். நாடகத்தில் என்ன பொருந்தி உள்ளதோ அதுவே திரும்ப நடைபெறுகிறது. இதுவும் நாம் புரிந்துள்ளோம். வேறு யாரும் நாடகத்தைப் புரிந்து கொள்வதே இல்லை. விநாடிக்கு விநாடி என்ன கடந்து கொண்டிருக்கிறதோ - டிக்-டிக் என்று ஆகிக் கொண்டே போகிறது. நாம் ஸ்ரீமத் படி செயலில் வருகிறோம். ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் எவ்வாறு சிரேஷ்டமானவராக ஆக முடியும்? எல்லோரும் ஒன்று போல ஆவதில்லை. இப்போது மக்கள் நாம் எல்லோரும் ஒன்றாகி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஒன்று என்பதன் பொருளைப் புரியாமல் உள்ளார்கள். ஒன்றாக என்ன ஆக வேண்டும். எல்லோரும் ஒரு தந்தை ஆகி விட வேண்டுமா இல்லை ஒரு சகோதரர் ஆகி விட வேண்டுமா? சகோதரர்கள் என்று கூறினாலும் கூட சரியானதே. ஸ்ரீமத்படி உண்மையில் நாம் ஒன்றாக ஆகி விட முடியும். நீங்கள் அனைவரும் ஒரு வழிப்படி நடக்கிறீர்கள். உங்களது தந்தை ஆசிரியர் குரு ஒரே ஒருவர் ஆவார். யார் முழுமையாக ஸ்ரீமத்படி நடப்ப தில்லையோ அவர்கள் முதன்மையானவர்களாகவும் ஆவதில்லை. முற்றிலுமே நடக்கவில்லை என்றால் அழிந்து போய் விடுகிறார்கள். யார் தகுதி உடையவார்களாக ஆகிறார்களோ அவர்களைத் தான் பந்தயத்தில் தேர்ந்தெடுக்கிறார்கள். பெரிய பந்தயம் நடத்தும் பொழுது குதிரைகளை கூட மிகவும் நல்லவையாக முதல் தரமானதாக தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில் பெரிய லாட்டரி (பரிசுத் தொகை) வைக்கிறார்கள். இதுவும் குதிரை பந்தயம் ஆகும். "ஹுசைனின்" குதிரை என்று கூறுகிறீர்கள் அல்லவா? அவர்கள் ஹுசைனை குதிரை மீது சண்டை யிடுவதாகக் காண்பிக் கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்களோ டபுள் அஹிம்சகர் ஆவீர்கள். காமத்தின் ஹிம்சை முதல் நம்பரிலுள்ளதாகும். இந்த ஹிம்சையை யாருமே அறியாமல் உள்ளார்கள். சந்நியாசிகள் கூட இவ்வாறு நினைப்பதில்லை. இது விகாரம் ஆகும் என்று மட்டுமே கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார் - காமம் மகா எதிரி ஆகும். இதுவே உங்களுக்கு முதல் இடை கடை துக்கம் கொடுக்கிறது. நம்முடையது இல்லற மார்க்கத்தின் இராஜயோகம் ஆகும் என்பதை நீங்கள் நிரூபித்துக் கூற வேண்டும். அவர்களிடம் உங்களுடையது ஹடயோகம் ஆகும். நீங்கள் சங்கராசாரியரிடம் ஹடயோகம் கற்கிறீர்கள். நாங்கள் சிவாச்சாரியாரிடமிருந்து இராஜயோகம் கற்கிறோம். இது போன்ற விஷயங்களை தக்க சமயத்தில் கூற வேண்டும்.

தேவதைகளுக்கு 84 பிறவிகள் என்றால் பிறகு கிறித்துவர்கள் ஆகியோருக்கு எத்தனை பிறவிகள் என்று யாராவது உங்களிடம் கேட்டால் ""இதை நீங்களே கணக்கிடுங்களேன்" என்று கூறுங்கள். ஐந்தாயிரம் வருடங்களில் 84 பிறவிகள் ஆகியது. கிறித்துவிற்கு 2 ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டது. சராசரி எத்தனை பிறவிகள் ஆகியது என்று கணக்கிடுங்கள். 30-32 பிறவிகள் இருக்கக் கூடும். இதுவோ தெளிவாக உள்ளது. யார் நிறைய சுகம் பார்க்கிறார்களோ அவர்கள் துக்கமும் நிறைய பார்க்கிறார்கள். அவர்களுக்கு சுகமும் குறைவாக துக்கமும் குறைவாக கிடைக்கிறது. சராசரி கணக்கு எடுக்க வேண்டும். பின்னால் வருபவர்கள் குறைவான பிறவி எடுக்கிறார்கள். புத்தரினுடையது, இப்ராஹிமினுடையது கூட கணக்கு எடுக்கலாம். வேண்டுமானால் ஓரிரு பிறவிகளின் வித்தியாசம் இருக்கலாம். எனவே இந்த எல்லா விஷயங்கள் பற்றி ஞான மனனம் செய்ய வேண்டும். யாராவது கேட்டார்கள் என்றால் என்ன புரிய வைக்கலாம்? பிறகும் கூறுங்கள்-முதலிலோ தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும் அல்லவா? நீங்கள் தந்தையையோ நினைவு செய்யுங்கள். பிறவிகள் எவ்வளவு எடுக்க வேண்டி இருக்குமோ அவ்வளவு எடுப்பார்கள். தந்தையிடமிருந்து ஆஸ்தியோ எடுத்து கொள்ளுங்கள். நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். உழைப்பினுடைய வேலை ஆகும். உழைப்பினால் தான் வெற்றி அடைபவர் ஆவீர்கள். இதில் மிகவும் விசால புத்தி வேண்டும். பாபா மீதும் பாபாவின் செல்வத்தின் மீதும் மிகுந்த அன்பு வேண்டும். ஒரு சிலரோ செல்வமே எடுப்பதில்லை. அட! ஞான இரத்தினங்களை தாரணை செய்யுங்கள். பிறகு கூறுகிறார்கள், நாங்கள் என்ன செய்வது? எங்களுக்குப் புரிவதே இல்லை!! புரிய வில்லை என்றால் அது உங்களுடைய விதி! நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. யாரையும் வெறுக்கக் கூடாது. எல்லோரிடமும் இனிமையாகப் பழக வேண்டும். ஞான யோகத்தில் முன்னேறிச் சென்று தந்தையின் கழுத்தில் மாலை ஆகி விட வேண்டும்

2. உறக்கத்தை வென்றவராக ஆகி அதிகாலை எழுந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். சுய தரிசன சக்கரத்தைச் சுற்ற வேண்டும். என்ன கேட்கிறீர்களோ அதன் மீது ஞான மனனம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

வரதானம்:
புத்தியை கட்டளைப்படி சிரேஷ்ட ஸ்திதியில் நிலைத்திருக்கச் செய்யக் கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

சில குழந்தைகள் யோகாவில் அமரும் பொழுது ஆத்ம அபிமானி ஆவதற்குப் பதிலாக சேவையின் நினைவு வருகிறது. ஆனால் அவ்வாறும் இருக்கக் கூடாது. ஏனெனில் கடைசி நேரத்தில் அசரீரி ஆவதற்குப் பதிலாக சேவைக்கான சங்கல்பம் வந்தாலும் விநாடிக்கான தேர்வில் தோல்வி யடைந்து விடுவீர்கள். அந்த நேரத்தில் தந்தையைத் தவிர, நிராகாரி, நிர்விகாரி, நிர்அகங்காரி வேறு எந்த நினைவும் வரக் கூடாது. சேவையில் சாகாரத்தில் வந்து விடுவீர்கள். ஆகையால் எந்த நேரத்தில் எந்த ஸ்திதியில் நிலைத்திருக்க விரும்புகிறீர்களோ, நிலைத்து விடும் பயிற்சி செய்யுங்கள். அப்போது தான் மாஸ்டர் சர்வசக்திவான், கட்டுப்படுத்தும் மற்றும் ஆளுமை சக்தியுடையவர்கள் என்று கூற முடியும்.

சுலோகன்:
எந்த ஒரு பிரச்சனையையும் எளிதாக கடந்து செல்வதற்கான சாதனம் - ஒரே பலம் ஒரே நம்பிக்கை.